Jump to content

மறுமணம் என்பது பெண்களிற்கு ஏன் கானல் நீர்.....?

Recommended Posts

அன்னை தெராசா ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக இருந்த போதும் அவர் கிறிஸ்தவ மதத் துறவியாக அன்றி சமூக சேவகியாகத்தான் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய சேவை மதத்துக்கு அப்பால் சமூகம் சார்ந்தது என்பதுதான் யதார்த்தம். அதற்காகத்தான் அவருக்கு நோபல் பரிசும் அளிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். :)

தங்கள் குறிப்புக்கு நன்றி குட்டி. :)

நீங்கள் சொல்வது உண்மை தான் நெடுக்ஸ், அவவின் சமூக சேவைக்கு நோபல் பரிசு கிடைத்தது. துறவறத்தில் இருந்த போது அன்னையின் மனம் ஒருமுகப்பட்டு சமூக சேவையை நோக்கி அவர் சிந்தனை போய் இருக்கலாம். அதற்காக எல்லாத் துறவிகளும் சமூகத் தொண்டு ஆற்றுகிறார்கள் என்று உயிர் போனாலும் சொல்லமாட்டேன்... :D பொது நிலையில் உள்ளவர்கள் (திருமணமானவர்கள்/ துறவிகள் அல்லாதவர்கள்) சமூக சேவைக்கு என்று மட்டும் நோபல் பரிசு எடுத்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. (இலக்கியம், அறிவியல், மருத்துவ வளர்ச்சிக்கும் சேவை ஆற்றி நோபல் பரிசு பெற்றவர்களைக் குறிப்பிடவில்லை)

----

...

ஊரில உங்கட சித்தியை சுற்றி சித்தியின்ட சொந்தக்காரர்கள் இருந்திருப்பார்கள் அதை விட சித்திக்கு 2 பிள்ளைகள் இருந்தும் ஒருத்தன் அவ மேல கை வைத்தான் என்டால் அதற்கு என்ன காரணம்?[ஆண்துணை இல்லாமல் இருக்கிறாள் கூப்பிட்டால் படுக்கைக்கு வந்து விடுவாள் என்பது தான் காரணம்.]...

....

இதைத்தான் நான் எனது கருத்தில் '... தமது தேவையை தீர்பதற்கு பெண்களை குறிவைத்து அணுகுபவர்களும் உள்ளார்கள் (இவர்களில் சிலர் திருமணமாகி குடும்பத்துடன் இருப்பவர்களும் அடங்குவார்கள்) அப்படியானவர்களின் பார்வை தான் அதிகம் பாதிக்கப் பட்ட பெண்களின் மேல் குறியாக இருக்கிறது' என்று குறிப்பிட்டு இருந்தேன்.

கணவனுடன் வாழும் சில பெண்களையே அவர்களின் நடை உடை பாவனைகளுக்கே உயிர் & மெய் எழுத்துக்களை வைத்து சமூதாயத்தில் உள்ளவர்கள் வர்ணிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தனிமையில் வாழ்பவர்களை எப்படி எல்லாம் வர்ணிப்பார்கள் என்று நான் சொல்லத் தேவை இல்லை... :rolleyes:

...

ஒரு ஆண் துணை இல்லாமல் இந்த புலம் பெயர் நாட்டில் குழந்தைகள் வளர்ப்பது இலகு எனக் கருதுகிறீர்களா?...ஒழுங்காய் தம்பதியினராய் இருக்கும் குடும்பத்திலேயே குழந்தைகளை ஒழுங்காய் வளர்க்க முடியவில்லை அப்படி இருக்கும் போது தனித்து ஒரு பெண்ணால் எப்படி தன் குழந்தைகளை ஒழுங்காய் வளர்க்க முடியும்?

கஷ்டம் தான் இருப்பினும் புலம் பெயர் நாடுகளில் இது சாத்தியப்பட வாய்ப்புகள் உள்ளது. (அவர்களுக்கென சலுகைகள் பல உள்ளன... ) ஒரு தாயோ அல்லது தந்தையோ தனிமையில் இருந்து வளர்க்கும் பிள்ளைகள் அவர்களில் மிகுந்த பாசமாகவும், அக்கறையாகவும் நிச்சயம் இருப்பார்கள். அந்த பெற்றோரின் தனிமையை, இந்த சமுதாயம் அவர்களை எந்த இடத்தில் முத்திரை குத்தி வைத்திருக்கிறது என்று அறியும் வயது வரும் போது அவர்களுக்கு தம்மை வளர்த்து ஆளாக்கியவர்களில் மிகுந்த மரியாதை கொள்வார்கள் என்று நினைக்கிறன்.

மறுமணம் என்பது பெண்களுக்கு கானல் நீர் அல்ல. கானல் நீர் என்றால் இதுவரையில் ஒரு பெண்ணுமே ஈ லோகத்தில் மறுமணம் செய்யவில்லை என்று அர்த்தம். :wub: கானல் நீர் என்றால் இல்லாத ஒன்றுதானே..! :rolleyes: ஆகவே தலைப்பே சரியில்லை யுவர் ஆனர்..! :lol:

உண்மையில் மறுமணம் என்பது பெண்களுக்கு காணும் நீர். அந்த நீரை அடைய விடாமல் தடுப்பது பெருமளவில் பெண்கள்தான். ஆண்கள் அல்லர். விவாகரத்து ஆகிய பெண்களைப் பற்றி ஏறுக்குமாறாகப் பேசுபவர்கள் பெண்களாத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்களோ அப்பெண்களின் அழகைச் சிலாகிப்பதுடன் நின்றுவிடுகிறார்கள்..! :D

...

இசை, மறுமணம் என்பது பல பெண்களுக்கும் கானல் நீராக இல்லாவிட்டாலும் சில பெண்களுக்கு கானல் நீராகவே இருக்கிறது என்பதை உங்களால் முற்றிலும் மறுக்க முடியுமா?

---

இங்கு பல உறவுகள் கூறியது போல் மறுமணம் முடிக்க நினைப்பவர்கள் முடிப்பது அவரவர் தனிப்பட்ட விடையம். தனித்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தன்னம்பிக்கையுடன், எதையும் தாங்கும் மன வலிமையுடன் வாழப் பழகிக் கொண்டால் அவர்களும் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் தான்! :)

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

மறுமணம் என்பது பெண்களுக்கு கானல் நீர் அல்ல. கானல் நீர் என்றால் இதுவரையில் ஒரு பெண்ணுமே ஈ லோகத்தில் மறுமணம் செய்யவில்லை என்று அர்த்தம். :wub: கானல் நீர் என்றால் இல்லாத ஒன்றுதானே..! :rolleyes: ஆகவே தலைப்பே சரியில்லை யுவர் ஆனர்..! :lol:

உண்மையில் மறுமணம் என்பது பெண்களுக்கு காணும் நீர். அந்த நீரை அடைய விடாமல் தடுப்பது பெருமளவில் பெண்கள்தான். ஆண்கள் அல்லர். விவாகரத்து ஆகிய பெண்களைப் பற்றி ஏறுக்குமாறாகப் பேசுபவர்கள் பெண்களாத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்களோ அப்பெண்களின் அழகைச் சிலாகிப்பதுடன் நின்றுவிடுகிறார்கள்..!

ஈழத்தில் இன்னும் தமிழ்பெண்களுக்கு மறுமணம் என்பது கானல் நீர் தான்.

புலத்தில் அப்படி இல்லை. பொதுவாக புலத்து பெண்கள் சுயநலமாக சிந்திபார்கள்.

கூடுதலாக நான் பார்த்து இருக்கேன் இங்கை மறுமணம் விரும்பாது ஆனால் சேர்ந்து வாழ்வே பெண்கள் விரும்புகிறார்கள்.

வெள்ளைக்காரிகளை போல.

அதாவது சுத்த தமிழில் சொல்வது என்றால் புலத்தில் பெண்கள் ஆணை கீப்பாக வைத்து இருக்க விரும்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

இசை, மறுமணம் என்பது பல பெண்களுக்கும் கானல் நீராக இல்லாவிட்டாலும் சில பெண்களுக்கு கானல் நீராகவே இருக்கிறது என்பதை உங்களால் முற்றிலும் மறுக்க முடியுமா?

குட்டி ஈழத்த்தில் இன்னும் கானல் நீர் தான் ஆனால் புலத்தில் என்பது பொய்.

Link to comment
Share on other sites

சுய மரியாதையோடும் (சுடு நீரோடும்) வளர்க்கப் படும் பெண் குழந்தைகள் ஒரு நாளும் சபையில் என்னை முன்னிறுத்தவில்லயே எனக் கவலைப்படப் போவதுமில்லை, அதற்காகப் போராடப் போவதுமில்லை! அவர்களின் கவனம் தன் குடும்பத்திற்கும் நாட்டுக்கும் உலகத்திற்கும் என்ன பயனுள்ள வகையில் செய்யலாம் என்பதில் இருக்குமேயல்லாமல், "தாலி பூட்டுதல்", "பாலப்பம் உடைத்தல்" போன்ற உப்புச் சப்பற்ற சடங்குகளில் பெருமை கொள்வதில் இருக்காது.

நல்ல கருத்து ஜஸ்டின். இது ஆண்பிள்ளைகுக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

, சுய மரியாதையோடும் (சுடு நீரோடும்) வளர்க்கப் படும் பெண் குழந்தைகள் ஒரு நாளும் சபையில் என்னை முன்னிறுத்தவில்லயே எனக் கவலைப்படப் போவதுமில்லை, அதற்காகப் போராடப் போவதுமில்லை! அவர்களின் கவனம் தன் குடும்பத்திற்கும் நாட்டுக்கும் உலகத்திற்கும் என்ன பயனுள்ள வகையில் செய்யலாம் என்பதில் இருக்குமேயல்லாமல், " தாலி பூட்டுதல்", "பாலப்பம் உடைத்தல்" போன்ற உப்புச் சப்பற்ற சடங்குகளில் பெருமை கொள்வதில் இருக்காது. இதை நீங்கள் நம்பலாம்!

இது எமது ஆசை விருப்பம்

ஆனால் நடைமுறையில் தற்போதைய இளவட்டம்

தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கிறது. தன்னலத்திற்கு மட்டுமே அது போராடுகிறது.

Link to comment
Share on other sites

ஈழத்தில் இன்னும் தமிழ்பெண்களுக்கு மறுமணம் என்பது கானல் நீர் தான்.

புலத்தில் அப்படி இல்லை. பொதுவாக புலத்து பெண்கள் சுயநலமாக சிந்திபார்கள்.

என் அம்மாவின் கடைசித் தங்கை (என் சித்தி) கணவர் 1983 இல் கார் விபத்தில் கொல்லப்பட்டார். சித்தி 1986 இல் கல்யாணம் முடித்து இப்ப 2 பிள்ளைகள் பிறந்து இப்ப அதுகள் எப்படி கனடாவுக்கு வாராது என்று கேட்டுக் கொண்டு இருக்குதுகள். எனக்குத் தெரிந்து ஊரில் 40 வயசுக்கு பிறகு விதவையானவர்கள் தான் கலியாணம் கட்ட விரும்புவதில்லை / முடிவதில்லை. அதன் காரணத்தின் பெரும் பங்கு பிள்ளைகள் இருப்பதனால் ஆகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத் தம்பி ஒரு விடயத்தை எடுத்துப் பேசும் தன்மையில் இருக்கிறது. அக்கருத்தை மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் விதம் அந்தவகையில் உங்கள் மேல் சீற்றம் ஏற்பட்டது உண்மைதான். காலையில் உங்களுக்குப் பதில் எழுதும் போது இருந்த கோபம் இப்போது இல்லை. எவ்வளவு ஏமாற்றங்கள், சொல்லடிகள், உதாசீனங்கள், முதுகுக்குப் பின்னான ஏளனங்கள் இப்படி எத்தனையோ விடயங்களை வடமராட்சியில் இடம்பெற்ற ஒபரேசன் லிபரேசன் காலத்திலிருந்து தாங்கிவிட்டேன் உங்களுடைய பொதுக்கருத்து என்னை வலிக்கச் செய்ய முடியாது. ஆனால் உங்கள் கருத்து மறுபரிசீலனைக்கு உரியது என்று முழுமையாக நம்புகின்றேன்.

அடுத்து யஸ்ரின் உண்மையிலேயே உங்கள் கருத்தை எடுத்துவந்த விதத்தையும் உங்கள் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கும் நெடுக்காலபோவானுக்கும் இடையில்தான் ஒரு விடயத்தைக் கையாள்வதில் எத்தனை மாற்றம்! ஒரு கருத்துக்களத்திலேயே இப்படி இருக்கும்போது ஒவ்வொருவர் வாழ்விலும் எப்படி மாற்றங்கள் இருக்கும்? ஒருவரைப்போல இன்னொருவருக்கு சூழ்நிலை, வாழ்க்கை என்பன இணைவதில்லை ஒருவரை வைத்து இன்னொருவரை ஏளனப்படுத்துவதும் அத்தகையதுதான்.

இந்த திரிக்கு எழுத தங்களுக்குத்தான் அதிக கடைப்பாடும் வலிமையும் உண்டு. நானும் எனது வாழ்க்கைப்பாடங்களை இங்கு பதிவது வழக்கம். அது சிலதுகளால் எனக்கு எதிராக ஏவப்பட்டதும் உண்டு. அதேநிலை தங்களுக்கும் வரக்கூடாது என்று நெஞ்சாற வேண்டுகின்றேன். அதேநேரம் எம் அத்தானை ஒரு படி உயர்த்தியுள்ளது என் மனதில் தங்கள் எழுத்து. நன்றி.

நன்றி விசுகு அண்ணா இந்தக் கருத்துக்களம் ஒரு புவராங் ஆயுதம் மாதிரி( எதிரியை நோக்கி நாங்கள் வீசும் ஆயுதம் தன் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் நம் கையை வந்து சேரும் நாம் அவதானமாய் இல்லை என்றால் எங்கள் கதையையே முடித்துவிடும்)..... என்னை நோக்கி இனி யாரும் எந்த வலியான சொல்லையும் எறியலாம்... என்னைப் பிடிக்காதவர்களுக்கு அது ஆயுதம்...ஆனால் என்னைக் காயப்படுத்துவதற்கு இனி இந்த ஆயுதத்திற்கு வலிமையில்லை. ஒன்று சொல்லட்டுமா நான் எழுத்துத்துறைக்கு வருவதை என் தாயார் கடைசிவரையும் விரும்பவில்லை. காரணம் என்னுடைய சொந்த வாழ்க்கையை கதையாக எழுதிவிடுவேனோ என்ற பயம். இனி இவளை மாற்ற முடியாது என்று தெரிந்தபின்னர் நீ கதை, கவிதை எழுதலாம் ஆனால் உன்னைப்பற்றி எழுதக்கூடாது என்று பிடிவாதமாக இருந்தார். இன்று அவர் உயிருடன் இல்லை ஆனால் என்னை எழுதினேன். என் நண்பனுக்காக......, காலம் வரும்போது எந்த நண்பனுக்காக எழுதினேன் என்று சொல்கின்றேன் இப்போது என் நண்பனுக்கு எழுதிய கவிதையை இங்கு பதிவிடுகிறேன்

நட்புக்குள் திரை எதற்கு?

முகடு ......மறுபடியும் எழுந்தது வாழ்வு :)

காலம் வரும்போது அந்த நண்பன் யார் என்று என் எழுத்துகள் சொல்லும் விசுகு அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் அன்புத்தாய் இளமையிலேயே விதவையானவள். :(

அதன் வேதனையும் விரக்தியும் எனக்கு நன்றாகவே தெரியும். :(

எனக்கு இரண்டு அண்ணர்கள்.ஒரு அக்கா.

நான் வந்து குடும்பத்தில் கடைக்குட்டி.வீட்டைப்பொறுத்தவரைக்கும் இன்றும் நான் செல்லப்பிள்ளைதான்.

ஆனால் என்னை ஊரில் பெரிதாக மதிப்பதில்லை.

காரணம் நான் இரண்டாம் தாரத்திற்கு பிறந்தவன் என்பதால் :( :( :(

என்னதான் காணிநிலபுலங்கள் இருந்தாலும் வசதிகள் இருந்தாலும் ......துணை என்பது எந்தவொரு உயிருக்கும் அத்தியவசியமானது.

Link to comment
Share on other sites

ஈழத்தில் இன்னும் தமிழ்பெண்களுக்கு மறுமணம் என்பது கானல் நீர் தான்.

புலத்தில் அப்படி இல்லை. பொதுவாக புலத்து பெண்கள் சுயநலமாக சிந்திபார்கள்.

கூடுதலாக நான் பார்த்து இருக்கேன் இங்கை மறுமணம் விரும்பாது ஆனால் சேர்ந்து வாழ்வே பெண்கள் விரும்புகிறார்கள்.

வெள்ளைக்காரிகளை போல.

அதாவது சுத்த தமிழில் சொல்வது என்றால் புலத்தில் பெண்கள் ஆணை கீப்பாக வைத்து இருக்க விரும்புகிறார்கள்.

குட்டி ஈழத்த்தில் இன்னும் கானல் நீர் தான் ஆனால் புலத்தில் என்பது பொய்.

கேட்கிறேன் என குறை நினைக்கக் கூடாது, நீங்கள் புலத்தில் வீடு, வீடாகப் போய் பார்த்தனீங்களே?

ஒரு சிலரின் வாழ்க்கை நடைமுறைகளை வைத்து தனிமையில் வாழும் எல்லோரையும் ஒரே மாதிரி எடை போடுவது தவறாகும். நீங்கள் சொல்வது போல் புலத்தில் பலர் இருந்தாலும் ஒரு சிலர் தனிமையிலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்கிறார்கள்.

Link to comment
Share on other sites

இசை, மறுமணம் என்பது பல பெண்களுக்கும் கானல் நீராக இல்லாவிட்டாலும் சில பெண்களுக்கு கானல் நீராகவே இருக்கிறது என்பதை உங்களால் முற்றிலும் மறுக்க முடியுமா?

குட்டி.. சில பெண்களுக்கு இது பிரச்சினையாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக சுய வருமானமற்ற தாயகப் பெண்களுக்கு.. :unsure:

ஆனால் சிலரின் இந்த நிலையைக் கூறி முழுப்பெண்களும் ஆறுதல் தேடுவது சந்தில் சிந்து பாடுதல் எனப்படும்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கை மறுமணம் விரும்பாது ஆனால் சேர்ந்து வாழ்வே பெண்கள் விரும்புகிறார்கள்.வெள்ளைக்காரிகளை போல.அதாவது சுத்த தமிழில் சொல்வது என்றால் புலத்தில் பெண்கள் ஆணை கீப்பாக வைத்து இருக்க விரும்புகிறார்கள்.

நான் இரண்டாம் தாரத்திற்கு பிறந்தவன் என்பதால் :( :( :( என்னதான் காணிநிலபுலங்கள் இருந்தாலும் வசதிகள் இருந்தாலும் ......துணை என்பது எந்தவொரு உயிருக்கும் அத்தியவசியமானது.

ஒன்றை/ ஒரு துறையை அறிந்தவனுக்கும் அறியாதவனுக்க்குமான இடையிலான இருதுருவங்களாக இந்த இருகருத்தையும் நான் கருதுகிறேன்..மேலைநாட்டு வாழ்க்கை முறையை விரும்பினபடி விமர்சிப்பது சரியல்ல...சேர்ந்து வாழ்வது என்பது ஒரு உறவுமுறை...அதையும் எங்களது கலியாணத்தையும் சேர்த்து பார்ப்பது மயிலையும் வான்கோழியையும் ஒப்பிடுவது போல ஆகும். நான் இருக்கிற இடத்தில் நிறைய வான்கோழி உண்டு. காலமை போகும் போது ஒரு 20 - 30 வான்கோழி ரோட்டில் நிற்கும்..காரை ஸ்லொவ் பண்ணித்தான் ஓட வேண்டும்..அப்படி நெடுகலும் போய் அவற்றை இப்போது ரசிக்கவும் பழகி விட்டேன்..நெடுகவும் யோசிப்பது இந்த பறவைகள் என்ன பாவம் செய்ததுகள்..அவற்றை மயிலோடு ஒப்பிட்டு பாடல் எழுதுவதர்ற்கு...மயில் ஒரு பறவை, வான்கோழி ஒரு பறவை...நாங்கள்தான் அதை கற்றவனுக்கும் கல்லதவனுக்கும் ஒப்பிட பாவிக்கிறோம்..

மற்றது மறுமணம் என்பதை சமுக மாற்றத்தின் அளவுகோலாகத்தான் நான் பார்கிறேன்... நாங்கள் அதற்கு கிட்டவும் இல்லை..இங்கே சொல்லபட்ட பாட்டி, சித்தி, அப்பம்மா( எனது அப்பம்மா) ஒரு பரம்பலில் உள்ள சாதாரண பரம்பலுக்கு வெளியான பரம்பலாகவே நான் பார்கிறேன் ( out of 2SD - தமிழில் வடிவாக சொல்லத்தெரியவில்லை)

சமூக மாற்றம் என்பது மஜிக் போல ஒரே இரவில் நிகழ்வதில்லை வோல்கனோ. அது ஏற்கனவே ஆரம்பித்து விட்ட ஒன்று. நீங்கள் நினைப்பது போல மறுமணம் தமிழ் சமூகத்தில் அரிதான ஒன்றல்ல. மறுமணம், மீண்டும் மீண்டும் மணம், சேர்ந்து வாழ்தல் இவையெல்லாம் அமைதியாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதையெல்லாம் ஒரு எண்ணிக்கையாக என்னாலோ உங்களாலோ சொல்ல இயலாது, அதனால் 2 SD இன் உள்ளா வெளியிலா என்று நான் வரையறுக்கப் போவதில்லை. ஆனால் இவையெல்லாம் மறைவாக இருக்கின்றன, இப்போது எதிர்ப்பு இருக்கிறது, இனி வரும் காலங்களில் எதிர்ப்பு மறைய வெளிப்படைத் தன்மை கூடும்-இதை மட்டும் சொல்ல முடியும் என்னால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்த வரையில் மறுமணம் வரவேற்கத்தக்கது என்று தான் சொல்வேன். ஆனால் இரு மனங்களும், எந்த வித நிர்பந்தங்களும் இல்லாது இருவரும் ஒருவரை ஒருவர் உண்மையாக விரும்பியிருக்க வேண்டும். ஆண்மகன் தான் ஒரு பெண்ணுக்கு உதவுவதற்காகவோ அல்லது ஒரு கடமைக்காகவோ திருமணம் செய்யக்கூடாது.அவ்வாறு இருந்தாலும் அதை ஒரு நாளும் சொல்லிக் காட்டக்கூடாது. மற்றும்படி சம்பிரதாயங்கள் எமக்காகவேயன்றி, சம்பிரதாயங்களுக்காக நாங்கள் வாழக்கூடாது.

Link to comment
Share on other sites

குட்டி.. சில பெண்களுக்கு இது பிரச்சினையாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக சுய வருமானமற்ற தாயகப் பெண்களுக்கு.. :unsure:

ஆனால் சிலரின் இந்த நிலையைக் கூறி முழுப்பெண்களும் ஆறுதல் தேடுவது சந்தில் சிந்து பாடுதல் எனப்படும்..! :D

மிகச் சரியானதொரு கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு அண்ணா இந்தக் கருத்துக்களம் ஒரு புவராங் ஆயுதம் மாதிரி

இப்போது என் நண்பனுக்கு எழுதிய கவிதையை இங்கு பதிவிடுகிறேன்

நட்புக்குள் திரை எதற்கு?

காலம் வரும்போது அந்த நண்பன் யார் என்று என் எழுத்துகள் சொல்லும் விசுகு அண்ணா.

நன்றியக்கா

விளக்கத்துக்கும் கவிதைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதிய பலரும் சமூகம் மற்றும் தனிநபர்களின் ஆதிக்கம் பற்றியும் அதனால் மறுமணத்திற்கு தடங்கல் வருவதாகவும் எழுதுவதைப்பார்க்கும்போது அது உண்மை என்பதை ஏற்றுக்கொண்டாலும் அதனை மாற்ற நாம் ஒவ்வொருவரும் என்ன செய்தோம் அல்லது செய்கின்றோம் என்பது பற்றியோ அல்லது அதற்கான மாற்றுவழிகளையோ முன் வைக்கவில்லை.

என்னைப்பொறுத்தவரை...

எந்த திருமணச்சடங்கோ அல்லது வைபவங்களோ நடந்தால் அதில் எவருக்கு முதல் மரியாதை என்பதுதான் கணிப்பே தவிர அவர் குடும்பமாக இருக்கிறாரா குழந்தைகளுடன் இருக்கிறாரா என்பதல்ல. பல பார்வைகளுக்கு மத்தியிலும் பல தாய்மார்களையும் சகோதரிகளையும் மணவறைக்கும் வாழ்த்துவதற்கும் கொண்டு வந்துவிடுவேன். எனவே நாம் இந்த சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினோமா ஏற்படுத்த முயற்சித்தோமா அதற்கான அடியை எடுத்துவைத்தோமா என்று பார்த்தால் நான் செய்துள்ளேன். செய்து கொண்டிருக்கின்றேன். செய்வேன்.

அடுத்து மறுமணம்

மறுமணத்தை ஏற்கின்றேன். எனது மனைவியிடமும் அதையே சொல்லியுள்ளேன். எனது மனைவியும் எங்கள் சொந்தங்களுடனும் பிள்ளைகளுடனும் இதையே சொல்வார். அவரால் தனியே வாழமுடியாது என்பார்.

அதேநேரம் நெடுக்ஸ் மற்றும் JUSTIN எழுதியதுபோல் அவர்களின் விருப்பத்தால் அமைந்ததாக அது இருக்கவேண்டும். இந்த வகையில் பெண்கள் மேல் அவர்களை விழுத்த வன்முறையும் வலுக்கட்டாயமும் பாவிக்கப்படும் என்பதையும் நாம் ஏற்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி.. சில பெண்களுக்கு இது பிரச்சினையாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக சுய வருமானமற்ற தாயகப் பெண்களுக்கு.. :unsure:

ஆனால் சிலரின் இந்த நிலையைக் கூறி முழுப்பெண்களும் ஆறுதல் தேடுவது சந்தில் சிந்து பாடுதல் எனப்படும்..! :D

மன்னிக்கவும் இ.கலைஞன் இது எனக்கு புரியவில்லை...விளக்கம் தரவும்

Link to comment
Share on other sites

கட்டுரையை வாசிக்க பழமைவாதம் போல் தெரிந்தாலும் நாம் இன்னமும் பூரணமாக இப்படியான பிற்போக்கு சிதனைகளில் இருந்து விடுபடவில்லை என்பதுதான் உண்மை.

எனது குடும்பத்திலேயே எனது சகோதரி(லண்டனில் கார் விபத்து),எனது மனைவியின் சகோதரி(தின்னவேலியில் ஆமிக்காரனின் செல் அடியில்) இருவருமே இளமையில் கணவரைஇழந்தவர்கள்.இருவரும் மறுமணம் புரியவில்லை அதைப்பற்றி யாரும் சிந்தித்தார்களோ தெரியவில்லை. அவர்களின் மனநிலைகூட எப்படி இருந்தது என எனக்கு தெரியாது.இருவருக்கும் இரு பிள்ளைகள் ஓரளவு வசதி இருந்ததால் பிள்ளைகள் ஒழுங்காக படிப்பித்து பெரியவர்களும் ஆகிவிட்டார்கள்.இதே இடத்தில் ஒரு ஆணிருந்திருந்தால் எப்படியும் மறுமணம் செய்திருப்பார்,எமது சமூக அமைப்பு அப்படி.ஆணுக்கு பிள்ளை வளர்க்க தெரியாது,சமைக்க தெரியாது,கடைசிகாலத்தில் கஸ்டப்பட்டுபோய்விடுவார் இப்படி எத்தனையோ காரணங்கள் சொல்லி எப்படியும் மறுமணம் செய்துவைத்துவிடுவார்கள்.

எனது மிக நெருங்கிய நண்பனின் அண்ணர் இலண்டனில் கார் விபத்தில் இறந்தார்.அப்போது நான் லண்டனில் இருந்தேன்.இரண்டு கிழமைகள் கூட ஆகவில்லை நண்பன் என்னிடம் கேட்டான் பலரும் தன்னை அண்ணியை மணம்புரியசொல்வதாகவும் தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றான்.அவர்களுக்கு ஒரு ஆறு மாதக்குழந்தை இருந்தது.நான் சொன்னேன் இது தனிய உனது முடிவாகமட்டுமே இருக்கவேண்டும் மற்றவர்களுக்காக கலியாணத்தை கட்டக்கூடாது என்று.அதே பெண்ணைக்கட்டி இப்போ அவர்களுக்கும் இரு குழந்தைகள் உள்ளார்கள்.

நெடுக்ஸ் தான் சந்தித்த நாலு பெண்களைவைத்து முழுப்பெண்களையும் எடைபோடுவது மகாபாவம்.ஜஸ்டின் நல்ல கருத்து எழுதியிருந்தார்,இருந்தும் சித்தி சுடுதண்ணீர் ஊற்றியது நாலுசுவருக்குள்நடந்ததாகவும் பின்னர் ஒருத்தரும் கிட்டநெருங்கவில்லை என்று,மற்றவர்களுக்கு அது தெரியவந்தால் தானே நெருங்காமல் இருந்திருப்பார்கள்.பெண்களிடம் கேட்டால்தான் தான் ஆண்களின் உண்மையான சுயரூபம் தெரியும்.நேற்றுக்கூட பேஸ்புக்கில் பார்த்தேன் அவுஸ்திரேலிய தமிழூடகத்தில் பணிபுரியும் ஒரு பெண்தனது நிலமை பற்றிஎழுதியிருந்தார்.வெளிஉலகில் மிககண்ணியமாக காட்சிதரும் பிரபலங்கள் தனக்கு தரும் பாலியல் தொல்லைகள் பற்றி.இதே போல் சுகாசினியும் ஒரு முறை எழுதியிருந்தார் இந்த பெரிய சினிமாகுடும்பத்திற்குள் இருக்கும் எனக்கே இவ்வளவு கஸ்டம் தருகின்றார்கள் என்றால் ஒரு சாதாரணபெண்ணின் நிலை எப்படி இருக்கும் என்று,அதுவும் கொஞ்சம் அழகாகவும்,விதவையாகவும் இருந்தால் கேட்கத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

என் அம்மாவின் கடைசித் தங்கை (என் சித்தி) கணவர் 1983 இல் கார் விபத்தில் கொல்லப்பட்டார். சித்தி 1986 இல் கல்யாணம் முடித்து இப்ப 2 பிள்ளைகள் பிறந்து இப்ப அதுகள் எப்படி கனடாவுக்கு வாராது என்று கேட்டுக் கொண்டு இருக்குதுகள். எனக்குத் தெரிந்து ஊரில் 40 வயசுக்கு பிறகு விதவையானவர்கள் தான் கலியாணம் கட்ட விரும்புவதில்லை / முடிவதில்லை. அதன் காரணத்தின் பெரும் பங்கு பிள்ளைகள் இருப்பதனால் ஆகும்

மறுமணம் என்பது சூழ்நிலைக்கு ஏற்றது.

30 வயது கிழ் ஒரு பெண் விதவையானால் மறுமணத்தை அந்த பெண் நினைக்காவிட்டாலும் அண்ணன் தம்பி அல்லது யாரவது ஒரு நல்ல மனது நினைக்கும் அதே 40 வயது பெண் விதவையானால் அந்த பெண்ணே விரும்பினாலும் சூழ்நிலையும் உறவுகளும் விரும்ப்ப மாட்டார்கள்.

வெள்ளைக் காரன் 40 வயதில் 4வது திருமணம் செய்யும் போதும் முதலாவது திருமணத்தின் போது இருந்த கூட்டமும் வரும் ரொமண்ஸ் மூட்டும் இருக்கும், நமக்கு வருமா?

இந்த தலைப்பே தவறு என்று தான் நான் சொல்கிறேன்.

ஆனால் யாதார்த்தில் ஒரு உண்மை இருக்கு.

எந்த ஒரு பெண்ணும் 2 ம் தார்மாக தானக்கு ஒரு கனவன் வருவதை விரும்புவது இல்லை, வீட்டு சுழ்நிலை அல்லது ஏதோ ஒரு தேவைக்காகவே. ஆனால் ஒரு ஆண் ஒரு விதவைப் பெண்ணை விரும்பி மறுமணம் செய்வானாக இருந்தால் அவனிடம் தூய காதல் அன்பு இருக்கும் இது தான் உண்மை.

எனது மிக நெருங்கிய நண்பனின் அண்ணர் இலண்டனில் கார் விபத்தில் இறந்தார்.அப்போது நான் லண்டனில் இருந்தேன்.இரண்டு கிழமைகள் கூட ஆகவில்லை நண்பன் என்னிடம் கேட்டான் பலரும் தன்னை அண்ணியை மணம்புரியசொல்வதாகவும் தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றான்.அவர்களுக்கு ஒரு ஆறு மாதக்குழந்தை இருந்தது.நான் சொன்னேன் இது தனிய உனது முடிவாகமட்டுமே இருக்கவேண்டும் மற்றவர்களுக்காக கலியாணத்தை கட்டக்கூடாது என்று.அதே பெண்ணைக்கட்டி இப்போ அவர்களுக்கும் இரு குழந்தைகள் உள்ளார்கள்.

இப்படியான கதைகள் ப நிஜமாக நடந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத் தம்பி உங்களைச் சுற்றி இருக்கிற சனமே சரியில்லையோ? அல்லது நீங்கள் பழகும் பெண்கள் பிழையானவர்களோ? எப்ப பார்த்தாலும் லொடா லொடா என்று பெண்களுக்கு எதிராக கதைக்கிறது. கிழடு கட்டைகள்தான் பீத்தல் சீலை பிரியிறமாதிரி புறுபுறுத்துக் கொண்டு இருப்பார்கள். நான் கேள்விப்பட்டவரை நீங்கள் என்னைவிட இருவயது குறைந்தவர்தான். அப்படி என்னதான் இந்தப் பெண்கள் உங்களுக்குக் கொடுமை செய்துவிட்டார்கள்?

நெடுக்குத் தம்பி பெண்களில் மறுமணம் செய்தவர்களில் 5 வீத்த்திற்கு உட்பட்டவர்கள்தான் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பலர் தோல்விகண்டு மீள முடியாதபடுகுழிக்குள் வீழ்ந்து கிடக்கிறார்கள். நீங்கள் ஆண்கள் பெண்ணுலகம் உங்களுக்குப் புரியாதது.

நெடுக்குவைச் சுற்றி "சிரிக்கும் புத்தர்"களே இருக்கின்றனர். இது தெரியாமல் இவ்வளவு காலமும் யாழ் களத்தில் இருப்பது வியப்பாக இருக்கின்றது.

laughing-buddha.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.