• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

ஈசன்

மண்ணானாலும்...

Recommended Posts

.

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்,

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்.

கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்,

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..

நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்.

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்.

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்,

பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்,

தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்,

மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்.

நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்.

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்.

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்.

பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்,

அருள் உண்டானாலும் வீடும் பெய‌ரும் உண்டாவேன்,

தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்.

நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்.

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்.

முருகா.....

முருகா.....

முருகா.....

Share this post


Link to post
Share on other sites

அரோகரா

Share this post


Link to post
Share on other sites

மண்ணானாலும் வசந்தியின் (காலத்துக்கு ஏற்ப வசந்தி.. வசதியா மாறிக் கொண்டு வந்ததையும் கண்டிருக்கிறேன்) முத்தத்தில் மண்ணாவேன்.. என்றொரு உல்டா பாட்டையும் எங்கையோ கேட்ட ஞாபகமா இருக்குது. :lol::D

Share this post


Link to post
Share on other sites

.

அது ஒரு வயசு. பக்தி பாடல்களுக்கு உல்டா விடுவது, கிருபானந்த வாரியார் பிரசங்கத்தை உல்டா விடுவது...

இப்ப படு சீரியஸ்.

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • மக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள்   மக்கள் நீதி மய்யம் கரோனா நிவாரணப் பணிக்காக தொடங்கியுள்ள "நாமே தீர்வு" என்கிற இயக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வலைதளத்தை ஜிவி பிரகாஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கரோனா நிவாரணப் பணிக்காக திமுக, 'ஒன்றிணைவோம் வா' எனும் திட்டத்தைத் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதேபோன்று மக்கள் நீதிமய்யம் சார்பில் நாமே தீர்வு என்கிற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாமே தீர்வு இயக்கத்தின் மூலம் சேவைப் பணியை ஒருங்கிணைக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் கமல்ஹாசனால், மக்களே மக்களின் பிரச்சினைகளுக்கு உதவிடும் "நாமே தீர்வு" என்கின்ற புதிய இயக்கத்தில் இணைந்து மக்களுக்கு உதவிட இதுவரை 5700-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். 54,000-க்கும் அதிகமான அழைப்புகள் உதவி கேட்டு வந்துள்ளன. இவர்கள் அனைவருக்கும் உதவிகளை கொண்டு சேர்த்திடும் பணியில் அடுத்த கட்டமாக "நாமே தீர்வு" க்கான பிரத்யேக வலைத்தளம் ஒன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வலைத்தளத்தை நடிகர், இசையமைப்பாளர் G.V. பிரகாஷ் குமார் அறிமுகப்படுத்தியுள்ளார். கரோனாவின் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் எனும் நிலையில் உதவும் எண்ணம் கொண்டவர்கள், உதவிட எளிதான வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உதவி கேட்டிருப்பவர்கள் அஞ்சல் குறியீட்டு எண் (Pincode) வாரியாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். தன்னார்வலர்கள் தாங்கள் இருக்கும் இடத்தைந் சுற்றி உதவி தேவைப்படும் நபர்களை அறிந்து, நேரில் சென்றோ, அல்லது அதற்கான தன்னார்வலர்கள் மூலமோ உதவிட முடியும். இத்துடன் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 14 நாட்கள் தேவைப்படக்கூடிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும், அவர்கள் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கத் தேவைப்படும் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் மக்கள் உதவலாம். களத்தில் இறங்கிப் பணிபுரிய முடியும் என்பவர்களும் இத்தளத்தின் மூலம் இந்த இயக்கத்தில் இணையலாம். பணமாக அளிக்க விரும்புபவர்கள் வழங்கும் தொகை, உதவி கேட்டிருப்பவர்களின் தேவையை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும். இந்த வலைத்தளத்தில் தன்னார்வலர்களின் எண்ணிக்கை, எத்தனை பேர் இதுவரை பயனடைந்துள்ளனர் போன்ற விவரங்கள் நேரடியாகப் பகிரப்படும். இதனால் உதவியவர்கள் தங்கள் உதவி எத்தனை மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது என்பதையும், இன்னும் எத்தனை மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதையும் நேரடியாக அறியலாம். அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை. ஒருவரை ஒருவர் காத்திட முடிவு செய்யும் போது எவரும் விடுபட்டுப் போவதில்லை என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட நாமே தீர்வு இயக்கத்தின் மூலம், இன்னும் அதிக மக்களுக்கு உதவிட http://www.naametheervu.org அறிமுகப்படுத்தியுள்ளோம். இணைந்து மீட்போம் சென்னையை”. இவ்வாறு மகேந்திரன் தெரிவித்துள்ளார்.   https://www.hindutamil.in/news/tamilnadu/562671-why-we-settle-solution-movement-website-launches-gv-prakash-people-s-justice-2.html  
    • வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் – காரணம் என்ன? வவுனியா – இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்று (05) இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், நகரின் முக்கிய பகுதிகள், சனநடமாட்டம் உள்ள இடங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மோப்பநாய்கள் சகிதம் விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியான போதிலும், வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகே பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருக்கிறார். மன்னார் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு இனந்தெரியாத நபர் அண்மையில் வருகைதந்ததாக கூறப்படும் விடயம் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்விடயத்தினை கருத்திற்கொண்டும் ஞாயிறு ஆராதனையை முன்னிட்டு அதிகமான பொதுமக்கள் ஆலயங்களிற்கு வருகைதரும் நிலையில், அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே குறித்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு தரப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. https://newuthayan.com/வவுனியாவில்-பாதுகாப்பு-ப/
    • இணைப்பிற்கு நன்றி ...நான் இந்த படம் பார்த்தேன் ...கட்டுரை சொல்வது உண்மை 
    • பூநகரி விபத்தில் இளைஞன் பலி! கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதிலேயே மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாெரட்டுவ பல்கலைக்கழக மாணவனான மோகன் ஆகாஸ் (23-வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.   https://newuthayan.com/பூநகரி-விபத்தில்-இளைஞன்/