Jump to content

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் பதவிகளை இழந்தனர் சபை குழப்பிகள்!!!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

fighting0025.gif

உள்ளுக்க பிரிஞ்சி சண்டை போடதீங்கப்பூ..

Link to comment
Share on other sites

  • Replies 87
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான உறுதியுரை எடுக்காதவர்கள் அனைவரும் தமது உறுப்பினர் பதவிகளை இழந்துள்ளதாக தெரியவருகிறது.

சனநாயக அணி என்ற பெயரில் நாடு கடந்த தமிழீழ அரசில் பிரிவினையை உருவாக்க முனைந்த கும்பலைச் சேர்ந்தவர்களே உறுப்புரிமையை இழந்துள்ளதாக அவர்களிற்கு துதிபாடும் தமிழ்நெட் தெரிவித்துள்ளது.

இவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான உறுதியுரை எடுக்கமறுத்ததைக் கேள்விபபட்டதுமே மிகுந்த ஆத்திரம் வெளிப்பட்டது, அதன்பின் இவர்களுக்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டதை கேள்வியுற்றதும் ஆத்திரம் இன்னமும் அதிகரித்தது காரணம் காட்டிக்கொடுப்புக்கள், துரோகம், பிரிவினை போன்ற காரணங்களாலேயே எமது போராட்டம் நசுக்கப்பட்டு ஒருலட்சம் 70000 மக்களுக்குமேல் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு ஒரு இருண்டவெளியில் தமிழினம் நின்றபொழுது மக்களுக்கு சிறு ஒளிதரும் நட்சத்திரமாக தோன்றிய நா.த. அரசுடன் சேர்ந்து ஒத்துளைக்காமல் மறுக்கும் இவர்களை கால அவகாசம் கொடுத்து சத்தியப்பிரமாணம் செய்யுமிடத்து இவர்களை சேர்த்து வைப்பது எவ்வளவு ஆபத்தாக அமையக்கூடும் என்றேல்லாம் சிந்திக்கத் தூண்டியது, இவர்கள் உறுப்புரிமையை இழந்தது நிச்சயம் நல்ல செய்திதான்.....

அந்தந்த நாடுகளில் உள்ளவர்கள் இவர்களைக் கண்டு நிச்சயம் இவர்கள் இப்படிச் செயல்பட்டக் காரணம் என்ன என்பதை கேட்கவேண்டும்.....

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு மக்களுக்கெதிராக செயல்படும் பெரும்பாலான சக்திகளை மக்கள் இனங்கண்டு கொண்டார்கள் / கொள்கிறார்கள், ஏன் இனியும் இனங்கண்டுகொள்வார்கள் என்பது என் கருத்து.....

Link to comment
Share on other sites

வியாழக்கிழமைதான் நாடுகடந்தஅரசின் பிரதமரால் வந்து சேருங்கள் ஒன்றாக உழைப்போம் என்று அறிக்கைவந்தது. ஆனால் ஞாயிறே அதாவது 3 நாளில் அவர்களின் பதவிகள் பறிக்கப்படுகிறது. அப்படியாயின் விடுக்கப்பட்டது வரவேற்கவா? அல்லது அவர்கள் மாறுவதற்க அவகாசம் கொடுக்கக்கூடாது என்று முன்பே முடிவு எடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டதா?

பார்த்தால் சந்தேகமாத்தான் கிடக்கு?

உள்ளுக்கால் ஜனநாயக பண்புகளுக்கு அமைய பல கருத்து பரிமாற்றங்கள் நீண்ட காலமாகவே இடம்பெற்றன.

அறிக்கை விடப்பட்டது அந்த நகர்வுகளை பகிரங்கப்படுத்தும் நோக்கத்திலேயே வெளிடிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நீண்ட கால போதிய அவகாசம் தரப்படுள்ளதாகவே தெரிகின்றது.

Link to comment
Share on other sites

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. கடைசி நேரத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்து உள்ளே திரும்பவும் போய்விடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தேன்.

இவர்களுக்கு வாக்களித்தவர்கள், இனியாவது இவர்களைக் கேள்வி கேட்கவேண்டும் என்பது எனது விருப்பம். இவர்களைப் பார்க்குமிடங்களிலெல்லாம் கேள்விகளால் துளைத்தெடுக்கவேண்டும். செய்வர்களா எமது மக்கள்??????????????

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளில் நீக்குவதற்க வாய்ப்புகள் அதிகம் இருந்தன.

ஆனால் இந்தக் கும்பலை இயக்கும் சிங்கள நெட் கனவானும் நந்கோபன் கூட்டமும் கோத்தபாயவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு விடுதலைப்புலிகளை தடைசெய்விப்பதற்கான அனைத்து வேலைத் திட்டங்களையும் தேசியம் பேசிக் கொண்டே செய்தது.

விடுதலைப்புலிகளின் தடையை இறுக்குவதன் மூலம் அல்லது மீளக் கொண்டுவரும்படி செய்துவிட்டு தாங்கள் தான் விடுதலைப் புலிகளின் உண்மையான செயற்பாட்டாளர்கள் என்று காட்டிக் கொண்டு நாடுகடந்த அரசுக்குள் வந்து தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களே நாடுகடந்த அரசுக்குள்ளும் இருக்கிறாhர்கள் எனவே நாடுகடந்த அரசும் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அதை தடை செய்விப்பது தான் கோத்தபாயவின் சதித்திட்டமாகும்.

40 ஆயிரம் மாவிரர்கள் செய்த தியாகத்தின் அத்மபலம் இந்த நாசகார கும்பலை தோற்கடித்துவிட்டது

இனியாவது இவர்களின் பின்னால் நின்றவர்கள் நிற்பவர் இவர்களின் உண்மையான நோக்கத்தையும் உணாந்து இவர்களை ஓரங்கட்டிவிட்டு நாடுகடந்த அரசை பலப்படுத்த முன்வரவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமைதான் நாடுகடந்தஅரசின் பிரதமரால் வந்து சேருங்கள் ஒன்றாக உழைப்போம் என்று அறிக்கைவந்தது. ஆனால் ஞாயிறே அதாவது 3 நாளில் அவர்களின் பதவிகள் பறிக்கப்படுகிறது. அப்படியாயின் விடுக்கப்பட்டது வரவேற்கவா? அல்லது அவர்கள் மாறுவதற்க அவகாசம் கொடுக்கக்கூடாது என்று முன்பே முடிவு எடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டதா?

பார்த்தால் சந்தேகமாத்தான் கிடக்கு?

365 நாள் அவகாசம் இருந்தும் சத்தியப்பிரமாணம் எடுக்க யோசித்தவர்கள், கடைசி 3 நாளுக்குள் எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது....

முட்டையில் மயிர் புடுங்க நினைப்பது, போன்றது.

Link to comment
Share on other sites

சிறுவர் வேளாண்மை வீடு வந்து சேராது........ நீங்களும் உங்கட கோமாளிக்கூத்துக்களும்........

Link to comment
Share on other sites

ஈழம்

திரைக்கதை, வசனம், டிரக்க்ஷன்........ இந்தியா.

நடிப்பு.. .... தமிழ்நெட், கஸ்பர் அடிகளார், கஸ்ரோ அன்ட் கோ, கே.பி, கருணா, கூட்டமைப்பு, கருநாநிதி, அன்டன் பாலசிங்கம், பிரபாகரன்.. மற்றும் பல நரிகளும்.. ஏமாந்த சோனாக்கிரிகளும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தோழர்கள் வெளிநாடுகள் யாரையும் நம்பாது சொந்த காலில் தங்களது போராட்டத்தினை முன்னெடுத்து செல்லவேண்டும்.

டிஸ்கி

அருவா யார் வீசினாலும் வெட்டும்.. இதில் மனிதபிமானம் மற்றும் இதர கச்சடாவுக்கு வேலை இல்லை..

Link to comment
Share on other sites

அவசியம் எங்களுக்கு ஒரு பலமான அமைப்பு அதைக்குழப்ப எத்தனிக்கிறவர்கள் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளுங்கள்.

... நாம் பட்டதில் இருந்து பாடம் படிக்க வேண்டும் ... இலக்குடைய/நேர்மையுடைய பலமான ஓர் அமைப்பு இருந்தது, அதுவும் மக்களின் பின்பலத்துடன் இருந்த அமைப்பு .... அதன் அழிவிற்கு பின் இன்றுவரை வெற்றிடம் ... !!! ... இனியும் ஓர் அமைப்பு என்று வேண்டாம்!!!!!!!!! .... ஓர் இலக்கை கொண்டு செயற்படும் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் வரவேண்டும்!!!! ... அப்போதான் ஓர் ஜனநாயக ரீதியான (சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய) செயற்படவும் முடியும்!!! ... பிழைகளும் சுட்டிக்காட்ட்டப்படவும் முடியும் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... நாம் பட்டதில் இருந்து பாடம் படிக்க வேண்டும் ... இலக்குடைய/நேர்மையுடைய பலமான ஓர் அமைப்பு இருந்தது, அதுவும் மக்களின் பின்பலத்துடன் இருந்த அமைப்பு .... அதன் அழிவிற்கு பின் இன்றுவரை வெற்றிடம் ... !!! ... இனியும் ஓர் அமைப்பு என்று வேண்டாம்!!!!!!!!! .... ஓர் இலக்கை கொண்டு செயற்படும் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் வரவேண்டும்!!!! ... அப்போதான் ஓர் ஜனநாயக ரீதியான (சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய) செயற்படவும் முடியும்!!! ... பிழைகளும் சுட்டிக்காட்ட்டப்படவும் முடியும் .....

ஏற்றுக் கொள்கிறேன். சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசு செயல்பாடுடையதாகவும் அதற்கு உறுதுணையாக மற்றைய அமைப்புகள் பிரமிட்டைப்போன்ற உறுதியான வலுவைக் கொடுப்பனவையாகவும் அமையவேண்டும். முனையை உடைத்தாலும் அடித்தளம்வரை பரவாத வடிவத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும். கடந்தகாலத்தில் பிரமிட்டை தலைகீழாக கவிழ்த்து வைத்ததைப்போன்ற செயற்பாடுகளையே கொண்டிருந்தோம். நேற்றையநாட்களில் நாம் எதிர்பார்க்காத முனையிலிருந்து தகர்க்கப்பட்டபோது ஆரம்பகட்ட பலவீனத்தை எங்களால் அடையாளங்காணமுடியவில்லை ஆனால் இப்போது அப்படியல்ல தகர்க்கமுடியாதபடி தளத்தைச் சமைப்பதே முதல்வேலை. உரமாக இருப்பதும் உறுதியாக இருப்பதும் ஒவ்வொரு தமிழரின் கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரமிட் உதாரணம் கூறியது தாயகத்தை மீட்கும் நோக்கம் கொண்ட மற்றைய அமைப்புகளின் சிதறாத ஒருங்கிணைப்பை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாவற்றிற்கும் மேலாக.....

நாடு கடந்த அரசு என்று ஒன்று இருந்தால் அது பலமானதாக ஒரு அணியாக ஒருமித்த குரலில் பேசுவதாக மட்டுமே இருக்கவேண்டும். கட்சி சார்பற்று தனமனித சார்பற்று தமிழ் மக்களின் விடுதலை பற்றி மட்டுமே அது பேசவேண்டும்.

இதில் இரண்டாவது அணி என்று ஒருவர் சிந்திக்கின்றார் என்றால்....?

அவர் முதலாவதையும் தமிழரது இலட்சியப்பயணத்தையும் கேள்விக்குறி ஆக்குகின்றார் என்றே அர்த்தம். அதன் விளைவுகளை அவர் அறிந்தே செய்கின்றார்.

இங்கு நாடுகடந்த அரசை ஆதரித்து எழுதும் அனைவரும் தமிழீழத்தையும் தலைவரையும் மாவீரர்களையும் நேசித்தவர்கள் நேசிப்பவர்கள்.

எனவே இந்த குழிபறிப்புக்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தமிழீழத்தையும் தலைவரையும் மாவீரர்களையும் உதாசீனப்படுத்துகிறார்கள் அவர்களது தியாகங்களை கொச்சைப்படுத்துகிறார்கள் என்றே அர்த்தம்.

அதன் விளைவுகளை அவர்களுக்கு நாம் எடுத்துச்சொல்லவேண்டும். விலகியிருக்க, உபத்திரவம் தராமலிருக்க, தடைகளைப்போடாதிருக்க,...................... எச்சரிக்கவேண்டுகின்றேன்.

இவர்கள்தான் இது வரை மாவீரர்தினத்தை கொண்டாடியவர்கள், இனியும் கொண்டாடுபவர்கள்.

வியாழக்கிழமைதான் நாடுகடந்தஅரசின் பிரதமரால் வந்து சேருங்கள் ஒன்றாக உழைப்போம் என்று அறிக்கைவந்தது. ஆனால் ஞாயிறே அதாவது 3 நாளில் அவர்களின் பதவிகள் பறிக்கப்படுகிறது. அப்படியாயின் விடுக்கப்பட்டது வரவேற்கவா? அல்லது அவர்கள் மாறுவதற்க அவகாசம் கொடுக்கக்கூடாது என்று முன்பே முடிவு எடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டதா?

பார்த்தால் சந்தேகமாத்தான் கிடக்கு?

"ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதோர் யார் கண்ணா"

உருத்திரகுமாரை ஆட்டுவிக்கும் அந்த மாயாவிகள் யார் கண்ணா?

... நாம் பட்டதில் இருந்து பாடம் படிக்க வேண்டும் ... இலக்குடைய/நேர்மையுடைய பலமான ஓர் அமைப்பு இருந்தது, அதுவும் மக்களின் பின்பலத்துடன் இருந்த அமைப்பு .... அதன் அழிவிற்கு பின் இன்றுவரை வெற்றிடம் ... !!! ... இனியும் ஓர் அமைப்பு என்று வேண்டாம்!!!!!!!!! .... ஓர் இலக்கை கொண்டு செயற்படும் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் வரவேண்டும்!!!! ... அப்போதான் ஓர் ஜனநாயக ரீதியான (சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய) செயற்படவும் முடியும்!!! ... பிழைகளும் சுட்டிக்காட்ட்டப்படவும் முடியும் .....

யார் இங்கு பாடம் படிக்கிறார்கள், எல்லோரும் பாடம் படிபிக்கதான் நினைக்கிறார்கள். படிக்க தான் ஆக்கள் இல்லை. மீண்டும் மீண்டும் ஒருவரிடம் பொறுப்பை கொடுத்து விட்டு ஒதுங்கத்தான் ஆள் தேடுகிறார்கள். சேர்ந்து செயற்பட அல்ல.

இவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான உறுதியுரை எடுக்கமறுத்ததைக் கேள்விபபட்டதுமே மிகுந்த ஆத்திரம் வெளிப்பட்டது, அதன்பின் இவர்களுக்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டதை கேள்வியுற்றதும் ஆத்திரம் இன்னமும் அதிகரித்தது காரணம் காட்டிக்கொடுப்புக்கள், துரோகம், பிரிவினை போன்ற காரணங்களாலேயே எமது போராட்டம் நசுக்கப்பட்டு ஒருலட்சம் 70000 மக்களுக்குமேல் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு ஒரு இருண்டவெளியில் தமிழினம் நின்றபொழுது மக்களுக்கு சிறு ஒளிதரும் நட்சத்திரமாக தோன்றிய நா.த. அரசுடன் சேர்ந்து ஒத்துளைக்காமல் மறுக்கும் இவர்களை கால அவகாசம் கொடுத்து சத்தியப்பிரமாணம் செய்யுமிடத்து இவர்களை சேர்த்து வைப்பது எவ்வளவு ஆபத்தாக அமையக்கூடும் என்றேல்லாம் சிந்திக்கத் தூண்டியது, இவர்கள் உறுப்புரிமையை இழந்தது நிச்சயம் நல்ல செய்திதான்.....

அந்தந்த நாடுகளில் உள்ளவர்கள் இவர்களைக் கண்டு நிச்சயம் இவர்கள் இப்படிச் செயல்பட்டக் காரணம் என்ன என்பதை கேட்கவேண்டும்.....

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு மக்களுக்கெதிராக செயல்படும் பெரும்பாலான சக்திகளை மக்கள் இனங்கண்டு கொண்டார்கள் / கொள்கிறார்கள், ஏன் இனியும் இனங்கண்டுகொள்வார்கள் என்பது என் கருத்து.....

அவர்களூக்கு இருக்கும் ஜனநாயக உரிமைகளை கண்டு ஆத்திரப்படும் நீங்கள் எப்படி நேர்மையாக ஒரு ஜனநாயக போரட்டத்தை நடத்த போகிறீகள்?

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. கடைசி நேரத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்து உள்ளே திரும்பவும் போய்விடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தேன்.

இவர்களுக்கு வாக்களித்தவர்கள், இனியாவது இவர்களைக் கேள்வி கேட்கவேண்டும் என்பது எனது விருப்பம். இவர்களைப் பார்க்குமிடங்களிலெல்லாம் கேள்விகளால் துளைத்தெடுக்கவேண்டும். செய்வர்களா எமது மக்கள்??????????????

செய்ய மாட்டார்கள், இவர்கள் அனைவருமே அதிகளவு விருப்பு வாக்குகள் பெற்று தெரிவானவர்கள். இவர்களை வெளியேற்றுவதன் மூலம் பெருமளவு மக்களை நாடுகடந்த அரசு, நாடுகடந்த அரசில் இருந்து வெளியேற்றுகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும்.... இவர்கள் இன்னும் சத்தியப் பிரமாணம் எடுக்கவில்லை என்றால்.... இவர்கள் அதில் ஏன் போட்டியிட்டவர்கள். நாடுகடந்த அரசின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட வந்தவர்கள் போல் இவர்களின் செய்கை உள்ளது. இதனையே.... அவர்கள் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப் பட்டிருந்தால்.... சத்தியப் பிரமாணம் எடுக்காமல்... ஒரு வருடம் இழுத்தடித்து இருந்திருந்ருப்பார்களா.....? தமிழன் எதைச் செய்தாலும் குழப்ப என்று ஒரு கூட்டமே அலையுது.

தேர்தல் முடிஞ்ச இடங்களில் இன்னமும் வாக்கே எண்ணி முடிக்க வில்லை, வாக்கு எண்ணபட்ட இடங்களில் இன்னும் வெறியாளர்களையே அறிவிக்க இல்லை,

போதிய அளவு கால அவகாசம் கொடுத்திருந்தார்கள்.பிரதமரே நல்லெண்ண அழைப்பையும் விடுத்திருந்தார்.எதனையும் மதிக்காமல் இருந்தவர்களுக்கு இது தேவை.ஒரு குறிப்பிட்ட உறுப்பினர்களின் மனமாற்றத்திற்காக ஒரு அரசு காத்திருக்காது.இவர்கள் குழப்பியடித்த காரணத்தினாலேதான் நா.க.அரச உருவாகி 1 வருடமாகியும் உருப்படியாக எதனையும் செய்ய முடியவில்லை.இப்படிக் குழப்பியடிப்பதற்காக மக்கள் இவர்களைத் தெரிவு செய்யவில்லை.உங்களுக்கு உருத்திரகுமாரனின் தலைமைத்துவம் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி இருக்கவேண்டும்.இதை விட்டு மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்புக்குள் திட்டமிட்டு புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தும் குழப்ப வாதிகளை அமைப்புக்கள்(நா.க.அ) தொடர்ந்து வைத்திருப்பது.அமைப்பின் வளர்ச்சிக்கு குந்தகமாகும்.இதுவே ஒரு ஆயதப் போராட்ட அமைப்பாக இருக்குமாயின் தலைமைக்கு கட்டுப் படாதவர்களை இவ்வளவு காலத்திற்கு இழுத்தடிக்க மாட்டார்கள்.சுயமாகச் சிந்திக்கத் தெரியாமல் எடுப்பார் கைப்பிள்ளையாக யாரோ ஒருவரின் தாளத்திற்கு ஆடுபவர்களை மக்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்வதை மக்கள் விரும்பமாட்டார்கள்.தயவு செய்து ஒற்றுமையாகப் போராடுங்கள் அல்லது ஒதுங்கி இருங்கள்.நா.க.அரசின் தலைவர் உருத்திரகுமார்.ஜனநாயக அணியின் தலைவர் யார்??????????????????????????????????

அதுதான் இப்ப கேள்வி நாடுகடந்த அரசு ஒரு ஜனநாயக, அரசா? அல்லது ஒருரகசிய ஆயுத போராட்ட அமைப்பா?

ஜனநாயக ரீதியில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்த மக்கள பிரதிநிதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழி சபை குழப்பிகள்! சபாஷ்!! மகாத்மா காந்திகூட ஒத்துழையாமை மூலமே தமது போராட்டத்தை வலுப்படுத்தியிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பிரதிநிதிகள் செய்வதும் கிட்டத்தட்ட அதைத்தான் என்பதைப் புரிந்துகொண்டால் இதில் முரண்பாடுகள் ஏதும் தோன்றாது. இந்த ஜனநாயக அணியில் மக்களால் விரும்பப்படும் அவர்களால் வாக்களிக்கப்பட்டு உறுப்பினர்களான பலர் இருப்பதை மறந்துவிடக்கூடாது. இந்த அணி பலப்படுகின்றது என்ற உண்மையைக் கண்டு அஞ்சி எடுக்கப்பட்ட அவசர முடிவு இது என்பதையே தேசிய ஊடகம் தமிழ் நெட்டின் கருத்து சுட்டிக்காட்டுகின்றது.

நாங்கள் சொல்லுறதுதான் ஜனநாயகம், எம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது, கேட்டால் சபை குழப்பிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியப் பிரமாணம் எடுக்காதவரையில் இவர்கள் நாடுகடந்த அரசவைக்குள் அங்கமே அல்லர்.. கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவைக்குள் நுழைந்து ஜனநாயக வழியில் காரியமாற்றியிருக்க வேண்டும். உள்ளிருந்து மாற்றமுடியாது போனால் தங்கள் பதவிகளைத் துறந்து ஏன் எதற்காக என்பதை மக்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். அதைவிடுத்து வெளியே நின்றுகொண்டு இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுவது குழப்பியடிக்கும் வேலையே. :unsure:

இவர்களை வெளியேற்றிய செயல் நல்ல நடவடிக்கைதான். :rolleyes:

யாப்பு நிறைவேற்ற கூட்ட பட்ட அவையில், இவர்களை பார்த்து தற்போது நாடுகடந்த அரசில் அங்கதவராக இருந்த ஒருவரால் கூற்பட்ட வசனம், " இவர்கள் புலிகளின் ஆக்கள், புலிகளை விச ஊசி போட்டு கொல்ல வேண்டும்" என்று,அப்போ அவர்கள் யாரின் ஆட்கள், அந்த மாயாவிகள் யாருக்காக நாடுகடந்த அரசை அமைத்து போராடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<_< இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த ஒரு வருட காலமாக நாடுகடந்த தமிழீழ அரசை இயங்கவிடாமல் முடக்குவதற்காகவே யாரோ சொல் கேட்டு சத்தியப்பிரமாணம் செய்யாமல் முரண்டு பிடித்த இந்த "சனநாயக" அணியினர், " ஏன் இதுவரையில் நாடுகடந்த அரசு எந்தவிதமான நடவடிக்கையயையும் எடுக்கவில்லை?" என்று கேள்வி கேட்டுக்கொண்டு திரிந்ததுதான்.

நாடுகடந்த தமிழீழ அரசு எந்தவிதமான காத்திரமான நடவடிக்கையையும் எடுத்துவிடக்கூடாது என்றுதானே நீங்கள் இவ்வளவு காலமும் முரண்டு பிடித்தீர்கள்? அப்படியிருக்க நீங்களே அவர்களை ஏன் இன்னும் வேலை செய்யத் தொடங்கவில்லை என்று எப்படிக் கேட்க முடிகிறது ??

நெல்லைய்யன், எங்களுக்குள் இதுவரை இருந்த கோஷ்ட்டிகளும் அதனால் ஏற்பட்ட காட்டிக்கொடுப்புகளும், துரோகத்தனங்களும் போதும். இனியாவது ஒரு தனிப் பலமான அமைப்பு வேண்டும். ஜனநாயகப் பாதை என்று சொல்லி நடக்கவிருக்கும் நல்ல விடயங்களையும் கோஷ்ட்டி போட்டுக் குழப்ப வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பலம் வாய்ந்த எதிரியை, அவனது பலனை எடை போட்டு அதற்கு ஏற்றபடி தாக்குதல் திட்டங்களை வகுக்கலாம் அல்லது விலகிப் போகலாம்.ஆனால் உள்ளிருந்தே குழி பறிப்பவர்களை எதிர் கொள்வது கடினம்.அவர்களை அடையாளம் கண்டு களை எடுப்பதே எமக்குள்ள ஒரே வழி.இதைத்தானே நெல் வயல்களிலும் நாம் செய்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்லவாறீங்க சித்தன்.. மக்கள் வாக்குப் போட்டது இவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக நின்று எங்கள் பலவீனத்தை பலமாக்குவார்கள் என்றுதான். வாக்குப் போட்டவன் என்ற வகையில் இதை நான் குறிப்பிட முடியும். ஆனால் இவர்கள் இப்போது மக்களின் எதிர்பார்ப்பை மிஞ்சி நடக்கிறார்கள். மக்களின் கோரிக்கை என்னவென்றால் இந்த குழப்பவாதிகள் உள்ள இடங்களில் மீள மக்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்ய சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். ஒருவேளை மக்கள் இவர்களையே மீண்டும் தெரிவு செய்தால் அதன் பிறகு பேசலாம்.. மக்கள் இவர்களின் பின்னால் என்று. எதையோ காட்டி எதையோ சொல்லி மக்களிடம் வாக்குப் பெற்றுவிட்டு அதை நிறைவேற்றாமல்.. நிறைவேற்ற ஒத்துழைக்காமல்.. மக்கள் பெருமளவு வாக்குப் போட்டு ஜெயிக்க வைச்சது என்று சொல்வதில் பயனில்லை. இது டக்கிளஸ் தேவானந்தா.. வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலை புறக்கணித்த போது ஊர்காவற்றுறையில் கள்ளவாக்குப் போட்டு மக்களின் பெரு விருப்போடு அமைச்சரான கதையா எல்லோ இருக்குது.

யாப்பு.. யாப்பு என்று அழுகிறார்கள். முதலில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஒரு அங்கீகாரத் தேடலின் பின் தான் யாப்பின் அவசியமே எழும். இருந்தும்.. நாடு கடந்த தமிழீழ அரசுக்கென்று ஒரு இடைக்கால யாப்பை வரைந்து அதற்கு ஒரு செயல்வடிவத்தை கொடுக்கிறார்கள். குழந்தை பிறந்து வயது ஒன்றும் ஆகவில்லை.. நான் தான் பூப்புனித நீராட்டுக்கு தாய் மாமன் முறையில் கடமை செய்வேன் என்று சிலர் எடுபடுறதுதான் புரியவில்லை.

மக்களைப் பொறுத்தவரை.. இந்த உறுப்பினர்களை யாரென்றே தெரியாது. ஆனால் உருத்திரகுமாரன் தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் பணியாற்றி ஒருவர். அனைத்துப் பேச்சுக்களிலும் பாலாண்ணாவோடு பங்கேற்றவர். அவரிடம் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமைப் பொறுப்பு இருப்பது இன்றைய காலக்கட்டத்தில் அவசியம். அதுமட்டுமன்றி அவரருக்கு தாயகத்தில் இருந்த தமிழீழ அரசு பற்றிய தேசிய தலைவரின் நேரடி அனுபவத்தை உணரும் நிலை இருந்துள்ளது. ஜெயானந்த மூர்த்தியை விட தலைவரின் செயற்பாடுகள் குறித்து அவரின் நோக்கங்கள் குறித்து உருத்திரகுமாரன் கூடிய அளவு அறிந்திருக்க வாய்ப்புண்டு.

தமிழ்நெட் அணிப் பிரிப்பு வேலை செய்வது ஏன் என்று புரியவில்லை. தமிழ்நெட் சமீப காலமாக நாடு கடந்த தமிழீழ அரசின் செய்திகளை பிரசுரிப்பதை தவிர்த்து வந்தது. இப்போது அது அணி பிரிப்பு பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஒரு ஜனநாயக ஊடகம் என்ற வகையில் இதனை கருதி கொண்டாலும்.. செய்திகளில் சம வாய்ப்பளிக்க வேண்டும். உருத்திரகுமாரனை தொடர்பு கொண்டு இது குறித்து தமிழ்நெட் ஒரு செவ்வியை தானும் இதுவரை கண்டதில்லை. ஏன்...????! தமிழ்நெட்டின் இந்தச் செயற்பாடு அதன் ஜனநாயகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது..???!

தமிழ்நெட்டின் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு. இருந்தாலும் அதன் அண்மைக்கால சில செயற்பாடுகள் அவ்வளவு நடுநிலையோடு இல்லை. அதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

ஈண முதல்.. பங்கிற்கு அடிபடும் நிலை இருப்பின்.. நாடு கடந்த தமிழீழ அரசு தோல்வியில் முடிவடைவதை கண்கூடாக காண நேரிடும். அப்போது.. இந்த அணிகள்.. திக்கு திசை தெரியாமல் போவதோடு.. எதிரிக்கு அடிவருடி பிழைக்கும் நிலைக்கும் செல்வார்கள். இதனை நோக்கியதாகவே சிலரின் செயற்பாடுகள் இருக்கின்றன. அந்த வகையில் இவர்களை குழப்பவாதிகள் என்று அடையாளம் காண்பதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.

சிறீலங்காவின் பாராளுமன்றுக்கு கூட ஒரு குறிப்பிட்ட காலத்துள் சத்தியபிரமாணம் எடுக்க வேண்டும். பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். அப்படி கலந்து கொள்ளாது விட்டு அங்கத்துவத்தை இழந்தவர் ஈழவேந்தன். நாடு கடந்த தமிழீழ அரசு அதிக விட்டுக்கொடுப்போடு நடப்பது சரியல்ல. ஒரு கால எல்லைக்குள் திடமான முடிவுகளை எடுத்து அந்த அமைப்பின் உறுதித் தன்மையை உலகிற்கு உணர்த்த வேண்டியது அவசியம். இவர்கள் சத்திய பிரமாணம் எடுத்து.. உள்ளிருந்து கொண்டு எதிரணி நின்று தமது கோரிக்கைகளை முன் வைத்து மக்களின் ஆதரவை அதற்கு திரட்டி இருக்கலாம். ஆனால் அதைவிடுத்து மலர்ந்துள்ள ஒரு அத்திப்பூவை ஜனநாயக உச்சரிப்பின் பெயரால் கசக்கி எறிவதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். இன்றைய நிலையில் இவர்கள் மீண்டும் மக்கள் முன் வந்தால் அடிதான் வாங்குவார்கள். இவர்களின் வாக்குறுதிகளை மதித்து மக்கள் வாக்குப் போட்டதற்கு மாறாகவே இவர்கள் செயற்படுகிறார்கள். அதில் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று விலகியவர்கள், தாங்கள் ஏன் விலத்தப்பட்டோம் என்று அறிந்து அதற்கேற்ற வகையில் தங்கள் செயற்பாடுகளை இனிவரும் காலத்தில் செய்யவேண்டும். அதே போல் அவர்களை விலத்தியவர்களும் மற்றவர்களுடைய கருத்துக்களை, விருப்பங்களை உள்வாங்கி செய்யப்பட வேண்டும். ஒன்றை மாத்திரம் சொல்லலாம், யாருக்கும் தொண்டராக இருக்க விருப்பம் இல்லை, எல்லோருக்கும் தானைத்தலைவராக இருக்கவே விருப்பமாயிருக்கு. முக்கியமாக பிரிந்து சென்றவர்களுக்கு/ விலத்தி வைக்கப்பட்டவர்களுக்கு சொல்லக்கூடியது, நீங்கள்/ உங்களை விலத்தியபடியால் அது "உருத்திரகுமாரனின் பிரிவு" அல்லது "உருத்திரகுமரனின் குழு" அல்ல. நாங்கள் தொடர்சியாக ஆட்களை குழுநிலையில் பிரித்து வைத்து பழகியாதால் அது இன்று எங்களையும் பதம் பார்க்கிறது. தீட்டிய மரத்தில் கூர் பார்த்தது போல. வேறு பெயர்களா இல்லை தொடர்ந்து செயற்பட.. ஆனால் நீங்கள் என்ன பெயர் வைத்தாலும் சரி, எப்படி இயங்கினாலும் சரி, ஆகக்குறைந்து ந க அரசகத்துடனாவது நேரடியான குழுநிலை மோதலை வளர்க்காதீர்கள். எங்களுக்கு இது ஒரு புதுக்காலம், புலிகள் பலமாக இருந்த போது அண்ணை தம்பி என்று இருந்து போட்டு, இப்ப பாகப்பிரிவினையில் சிதறுண்டு போகும் குடும்பம் போல் உள்ளோம். நாடுகடந்த அரசாங்கமும், இந்தகைய "ஒழுக்காற்று"/ "சட்ட " நடவடிக்கையகளை தாண்டி, அந்த பேருக்கு ஏற்றமாதிரி ஒரு அரசாங்கமாக, இன்னும் இன்னும் வேகமாக செய்யப்பட வேண்டும். பிரபாகரன் வருடத்திர்ற்கு ஒருநாள் மாவீரர் உரை ஆற்றினது போல இல்லாமல், அரசியல் வாதிபோல், அறிக்கைகள், சந்திப்புகள் நிகழ வேண்டும். இந்த மாதம் இந்தனை பேரோடு கதைக்க வேண்டும்..அடுத்த மாதம் இந்தனை பேரோடு ககைக்க வேண்டும்..கனடாவில் சந்திப்பு, UK சந்திப்பு, .............இந்த TV அந்த ரேடியோ ..அவரோட இவரோட என்று செய்தி வரவேண்டும்...தனியே உருத்திரகுமார் மாத்திரமல்ல மற்றவர்களும் தான்...உதுகள் நடக்கத்தான் நாங்கள் வாக்கு போட்டனங்கள், இல்லை உங்களுக்கு, ஊர் வாசிகசாலை தலைவர் செயலாளர் போலத்தான் இதுவும்பட்டால் இன்னும் 5 / 10 வருடத்தில் மணிவிழா, பொன் விழா நடத்திப்போட்டு சிவனே என்று இருக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப என்ன சொல்லவாறீங்க சித்தன்.. மக்கள் வாக்குப் போட்டது இவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக நின்று எங்கள் பலவீனத்தை பலமாக்குவார்கள் என்றுதான். வாக்குப் போட்டவன் என்ற வகையில் இதை நான் குறிப்பிட முடியும். ஆனால் இவர்கள் இப்போது மக்களின் எதிர்பார்ப்பை மிஞ்சி நடக்கிறார்கள். மக்களின் கோரிக்கை என்னவென்றால் இந்த குழப்பவாதிகள் உள்ள இடங்களில் மீள மக்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்ய சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். ஒருவேளை மக்கள் இவர்களையே மீண்டும் தெரிவு செய்தால் அதன் பிறகு பேசலாம்.. மக்கள் இவர்களின் பின்னால் என்று. எதையோ காட்டி எதையோ சொல்லி மக்களிடம் வாக்குப் பெற்றுவிட்டு அதை நிறைவேற்றாமல்.. நிறைவேற்ற ஒத்துழைக்காமல்.. மக்கள் பெருமளவு வாக்குப் போட்டு ஜெயிக்க வைச்சது என்று சொல்வதில் பயனில்லை. இது டக்கிளஸ் தேவானந்தா.. வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலை புறக்கணித்த போது ஊர்காவற்றுறையில் கள்ளவாக்குப் போட்டு மக்களின் பெரு விருப்போடு அமைச்சரான கதையா எல்லோ இருக்குது.

யாப்பு.. யாப்பு என்று அழுகிறார்கள். முதலில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஒரு அங்கீகாரத் தேடலின் பின் தான் யாப்பின் அவசியமே எழும். இருந்தும்.. நாடு கடந்த தமிழீழ அரசுக்கென்று ஒரு இடைக்கால யாப்பை வரைந்து அதற்கு ஒரு செயல்வடிவத்தை கொடுக்கிறார்கள். குழந்தை பிறந்து வயது ஒன்றும் ஆகவில்லை.. நான் தான் பூப்புனித நீராட்டுக்கு தாய் மாமன் முறையில் கடமை செய்வேன் என்று சிலர் எடுபடுறதுதான் புரியவில்லை.

மக்களைப் பொறுத்தவரை.. இந்த உறுப்பினர்களை யாரென்றே தெரியாது. ஆனால் உருத்திரகுமாரன் தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் பணியாற்றி ஒருவர். அனைத்துப் பேச்சுக்களிலும் பாலாண்ணாவோடு பங்கேற்றவர். அவரிடம் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமைப் பொறுப்பு இருப்பது இன்றைய காலக்கட்டத்தில் அவசியம். அதுமட்டுமன்றி அவரருக்கு தாயகத்தில் இருந்த தமிழீழ அரசு பற்றிய தேசிய தலைவரின் நேரடி அனுபவத்தை உணரும் நிலை இருந்துள்ளது. ஜெயானந்த மூர்த்தியை விட தலைவரின் செயற்பாடுகள் குறித்து அவரின் நோக்கங்கள் குறித்து உருத்திரகுமாரன் கூடிய அளவு அறிந்திருக்க வாய்ப்புண்டு.

தமிழ்நெட் அணிப் பிரிப்பு வேலை செய்வது ஏன் என்று புரியவில்லை. தமிழ்நெட் சமீப காலமாக நாடு கடந்த தமிழீழ அரசின் செய்திகளை பிரசுரிப்பதை தவிர்த்து வந்தது. இப்போது அது அணி பிரிப்பு பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஒரு ஜனநாயக ஊடகம் என்ற வகையில் இதனை கருதி கொண்டாலும்.. செய்திகளில் சம வாய்ப்பளிக்க வேண்டும். உருத்திரகுமாரனை தொடர்பு கொண்டு இது குறித்து தமிழ்நெட் ஒரு செவ்வியை தானும் இதுவரை கண்டதில்லை. ஏன்...????! தமிழ்நெட்டின் இந்தச் செயற்பாடு அதன் ஜனநாயகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது..???!

தமிழ்நெட்டின் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு. இருந்தாலும் அதன் அண்மைக்கால சில செயற்பாடுகள் அவ்வளவு நடுநிலையோடு இல்லை. அதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

ஈண முதல்.. பங்கிற்கு அடிபடும் நிலை இருப்பின்.. நாடு கடந்த தமிழீழ அரசு தோல்வியில் முடிவடைவதை கண்கூடாக காண நேரிடும். அப்போது.. இந்த அணிகள்.. திக்கு திசை தெரியாமல் போவதோடு.. எதிரிக்கு அடிவருடி பிழைக்கும் நிலைக்கும் செல்வார்கள். இதனை நோக்கியதாகவே சிலரின் செயற்பாடுகள் இருக்கின்றன. அந்த வகையில் இவர்களை குழப்பவாதிகள் என்று அடையாளம் காண்பதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.

சிறீலங்காவின் பாராளுமன்றுக்கு கூட ஒரு குறிப்பிட்ட காலத்துள் சத்தியபிரமாணம் எடுக்க வேண்டும். பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். அப்படி கலந்து கொள்ளாது விட்டு அங்கத்துவத்தை இழந்தவர் ஈழவேந்தன். நாடு கடந்த தமிழீழ அரசு அதிக விட்டுக்கொடுப்போடு நடப்பது சரியல்ல. ஒரு கால எல்லைக்குள் திடமான முடிவுகளை எடுத்து அந்த அமைப்பின் உறுதித் தன்மையை உலகிற்கு உணர்த்த வேண்டியது அவசியம். இவர்கள் சத்திய பிரமாணம் எடுத்து.. உள்ளிருந்து கொண்டு எதிரணி நின்று தமது கோரிக்கைகளை முன் வைத்து மக்களின் ஆதரவை அதற்கு திரட்டி இருக்கலாம். ஆனால் அதைவிடுத்து மலர்ந்துள்ள ஒரு அத்திப்பூவை ஜனநாயக உச்சரிப்பின் பெயரால் கசக்கி எறிவதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். இன்றைய நிலையில் இவர்கள் மீண்டும் மக்கள் முன் வந்தால் அடிதான் வாங்குவார்கள். இவர்களின் வாக்குறுதிகளை மதித்து மக்கள் வாக்குப் போட்டதற்கு மாறாகவே இவர்கள் செயற்படுகிறார்கள். அதில் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை.

யாப்பே பிழை என்று சொல்லிதான் அவர்கள் சத்திய பிரமாணம் எடுக்க மறுக்கிறார்கள், பிறகு அந்த யாப்பின்மீதே சத்தியபிரமானம் எடு என்றால் எப்படி எடுப்பது, முதலில் இந்த யாப்பு உறுப்பினர்களினால் விவாதித்து ஏற்று கொள்ள பட்டதா? விவாதத்துக்காக உருவாக்க பட்ட அவைகளில் யாப்பை அங்கிகரிக்கும் அவையாக உருமுடித்தது எதற்காக? இதற்குள் சோல்பரி யாப்பு இருப்பது போல், இந்த யாப்பை எழுதியவர் அதற்கு தனது பெயர்தான் வைக்க வேண்டும் என அடம்பிடித்தது வேறு நடந்தது, நல்லவேளை அதுவும் ஏற்கபட்டிருந்தால், கந்தசாமியின் யாப்பு என்றுதான் வந்து இருக்கும்(உண்மைபெயர் மறைக்கபட்டு இருக்கிறது) பிரதமரை தெரிவு செய்வதற்கு, மூன்றில் ஒரு பங்கு போதுமாம், அகற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு வேண்டுமாம், இது என்ன விதமான ஜனநாயகம், ஒருவரிடம் அதிகாரம் குவிக்க பட கூடாது என மூண்று துணைபிரதமர்கள் தேர்தெடுக்க பட வேண்டும் என்றால், தேர்தெடுக்க பட்ட பிரதமரே துணை பிரதமர்களையும் தேர்தெடுப்பார்களாம். அவரே செய்வார் என்றால் எதுக்கு மூன்று வேண்டும். சரி ஜேர்மனி சுவிஸ்,பிரான்சில் அவர் நியமித்த தேர்தல் ஆனையாளர்கள் யார் என்று பார்த்தால் இயக்கத்தில் இருந்து ஒழுங்காற்றல் நடவடிக்கைகாக தலைவரால் விலத்தி வைக்க பட்டவர்கள், மக்களின் பணத்தை சுற்ரியவர்களை இதற்கு நியமிக்க வேண்டிய தேள்வை என்ன? சரி இயக்க சாயல் வர கூடாது என்பதற்காக அவர் தன்னுடன் படித்தவர்கள், தனக்கு தெரிந்தவர்ளை நியமித்தார் என்றால் அவர்களது பின்மூலம், அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும். கடைசியில் அவர்கள் கூட வந்து நின்றது அனைத்துலக செயகத்திடம்தான் தேர்தலை நடத்தி தரும்படி. மக்களது தொடர்பு இருந்தால்தானே மக்கள் தேர்தல் நடத்த முடியும். மக்களை ஏய்தவர்கள் என்ன முகத்துடன் மக்கள் முன் செல்வார்கள், அவர்களை பற்றி தெரிந்தவர்களுக்கு, நாடுகடந்த அரசின் நம்பத்தன்மை அங்கே அடிபட்டு போகும்,

வென்றவர்களை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் 20000வாக்கு எடுத்து இருப்பார் அவர்களுக்கு அடுத்ததாக இருப்பவர் வெறும் 100தான் எடுத்து இருப்பார், அவர்களை வெளியேற்றுவதான் மூலம் பெருமளவு மக்களை நாடுகடந்த அரசில் இருந்து வெளியேற்றுகிறார்கள் என்பதுதான் எனது கருத்து, சரி பிழைகளை பேசி ஒன்றினைப்பதுதான் புத்திசாலித்தனம் என்பதுதான் எனது கருத்து, நான் சொன்னால் என்ன கேட்கவாபோறாங்கள். :D ஏன் ஒண்றினைக்க வேண்டும் என்றால் அவர்களும் பெருமளவிலான மக்களால் தெரிவு செய்ய பட்டவர்கள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களூக்கு இருக்கும் ஜனநாயக உரிமைகளை கண்டு ஆத்திரப்படும் நீங்கள் எப்படி நேர்மையாக ஒரு ஜனநாயக போரட்டத்தை நடத்த போகிறீகள்?

சித்தன்

இன அழிப்பில் கொல்லப்பட்ட பல்லாயிரம் மக்களுக்கு நீதி வேண்டியும், இன அழிப்பின் பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட்டிருக்கும் எம் மக்களுடைய உரிமைகளைப் பெற்றெடுக்க உதித்த ஓர் அமைப்பான நாடு கடந்த தமிழீழ அரசின் நடவடிக்கைகளை குழப்பும் இவர்களைப் போன்றவர்களின் ஜனநாயக உரிமையைப் பற்றிப் பேசுகிறீர்கள், ஆனால் தாயகத்தில் இருக்கும் பல லட்சம் மக்களின் ஜனநாயக உரிமையைப் பற்றிச் சிந்தித்தீர்களா?

ராஜபக்க்ஷவின் லண்டன் வருகையறிந்து ஆத்திரமைடைந்த மக்களின் அகிம்சைப் போராட்டம் தான் இன்று அவனையும் அவனைச் சார்ந்த போர்க்குற்றவாளிகளையும் வெளிநாடுகளுக்கு சுதந்திரமாக வருவதைதடுத்துள்ளது....

மாவீரர் தினம் நடைபெற்றுவிடக்கூடாது என்று தடுக்க நினைத்தவர்களின் செயற்பாடுகளுக்கு எதிரான மக்களின் ஆத்திரம் தான் மாவீரர் தினம் என்றுமே இல்லாத அளவு மக்களை கூட்டத்தினைச் சேர்த்தது....

எனவே இதுபோன்ற பல உதாரணங்கள் நீங்களும் அறிவீர்கள். எனவே எனது மற்றும் என் போன்றவர்களின் ஆத்திரமோ / கோபமோ நாங்கள் செயல்படும் ஜனநாயகப் போராட்டத்துக்கு என்றுமே தடைக்கல்லாக அமைந்துவிடாது. எனவே ஒன்று சொல்ல விரும்புகிறேன் உரிமைக்காகப் போராடுபவர்களின் கோபம் உரிமையை வென்றேடுக்கும் திசையில் விரைவாகச் செயல்பட உதவுமே தவிர அதை தடுத்துவிடாது...நீங்கள் எவருக்கு சார்பாகக் கதைக்கின்றீர்களோ அவர்களுக்கெதிராகவும், அவர்களுக்கு சார்பாக எழுதும் உங்களுக்கெதிராகவும் தான் அதிக பதிவுகள் இங்கே வந்துகொண்டிருக்கின்றது.... அதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

மக்களுக்கெதிரான எந்த அமைப்பாக இருந்தாலும் மக்கள் தற்போது இலகுவாக இனம்கண்டு கொள்கிறார்கள் / கொள்வார்கள், ஏன் அது நாடு கடந்த தமிழீழ அரசாக இருந்தால் கூட...

ஒன்றுடன் முடிக்கவிரும்புகிறேன்... பல லட்சம் மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் முயற்சியில் நீங்கள் சொன்ன சிலரின் ஜனநாயக உரிமைகளைச் சாகடிப்பதில் தப்பே இல்லை .....

Link to comment
Share on other sites

இன்றைய உலகில் உள்ள அரசியல் பொருளாதார அமைப்புக்களில் ஜனநாயக தெரிவுகளும் திறந்த பொருளாதார கொள்கைகளும் இருக்கின்றன. ஜனநாயக அரசியல் முறை நூறு வீதம் சரியான வழி என்று இல்லை ஆனால் அதை சரியான வழியில் பயன்படுத்துவதே ஒரே வழி.

இன்று லிபியா மீது தாக்குதல் நடாத்தும் எல்லா மேலை நாடுகளிலும் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் வாதங்கள், எதிர்ப்புக்கள் உள்ளன. அதையும் மீறி அந்த நாட்டு தலைவர்கள் எடுத்த முடிவே அது. இப்படி பல பிரச்சனைகளை அவர்கள் முகம் கொடுப்பது வழமை.

எமக்கு இது ஒரு வித புதுப்பயணம். இதில் மேடு பள்ளம் நிறையவே வரும். அதை சமாளித்து வெற்றிகரமாக ஓட்ட வேண்டிய பெரும் பொறுப்பு தன தலைவர்களுக்கு வேண்டும், இந்த விடயத்தில் அதன் பிரதமருக்கு, அவரின் செயற்பாடுகளுக்கு இன்னும் ஆதரவு உள்ளதாகவே தெரிகின்றது. அதை ஏற்று கருத்தில் முரண்பட்டவர்கள் நடப்பதே ஜனநாயக பண்பு.

Link to comment
Share on other sites

யாரும் குறை நினைக்க வேண்டாம்... நான் உண்மையிலேயே தெரியாமல்தான் கேட்கிறேன். இவர்களில் அநேகர் யார் என்பதும், அவர்கள் நெடியவன் குழுவினரால் திட்டமிட்டு இதற்குள் திணிக்கப்பட்டவர்கள் என்பதும், தேர்தல் தொடங்குவதற்கு முன்னரே பல இணையத்தளங்களில் வெளியாகியிருந்ததிலிருந்து இலங்கையிலுள்ள எங்களுக்கே இவர்கள் குழப்புவார்கள் என்று தெரியும். அப்படியிருந்தும் இவர்கள் புலம்பெயர் மக்களின் வாக்குக்களைப் பெற்று ஜெயித்திருக்கிறார்களே.

வேறு யாரும் போட்டியிடவில்லையா?

இவர்கள் திருந்தக்கூடும் என்று கருதியே வாக்களித்தோம் என்று குழந்தைப் பிள்ளைக் கதை கூறாதீர்கள். காரணம் இந்தக் குழு பற்றி மிகத் தெளிவாகவே தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இவர்களுக்காகப் பணம் கட்டியதே நெடியவன் குழு என்ற விபரமும் தேர்தலுக்கு முன்னரே வெளியாகியிருந்தது.

ஜனநாயகத்தில் இப்படியான யாரும் போட்டியிடுவதைத் தடுக்க முடியாது என்றும் ஒரு காரணம் சிலரால் கூறப்படலாம். தடுக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் மக்கள் வாக்களிக்காமல் விடுவதன்மூலம் இவர்கள் ஜெயிக்காது தடுத்திருக்கலாமே! புலம்பெயர் மக்கள் ஏன் அதைச் செய்யவில்லை.

குழப்பப்போகிறார்கள் என்ற விஷயத்தைத் தமது நெற்றியில் தெளிவாக எழுதி ஒட்டிக்கொண்டு வந்தவர்களுக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்துவிட்டு இப்போது புலம்புவது வேடிக்கையாக இல்லையா?

புலம்பெயர் மக்களுடன் ஒன்றாகவே வசிக்கும்... அவர்களால் நன்கு அறியப்பட்ட இப்படியானவர்களுக்கு வாக்களித்த புலம்பெயர் மக்கள், இதைவிட மிகக் குழப்பமான ராஜதந்திர விவகாரங்களில் மோதி வெற்றிகாண முயல்கிறார்கள் என்பதை நினைக்கும்போதுதான் கொஞ்சம் கவலையாக இருக்கிறது. இவர்கள் பதவிக்கு வரப் பயன்படுத்திய தந்திரம் மிகவும் சிம்பிள். அதிலேயே ஏமாந்து விட்டார்களா புலம்பெயர் மக்கள்? அப்படியானால் இனி எதிர்கொள்ளவுள்ள அதிகபட்ச தந்திரத்தை எதிர்கொள்வது.........?

எனக்குப் புரிந்தவரை மக்கள் மத்தியில் சரியாகப் பரப்புரை செய்யப்படவில்லை. இவர்களைப் பற்றிய தகவல்களைதேர்தலுக்கு முன்னரே வெளியிட்ட இணையத்தளங்கள் பல துரோகிப் பட்டம் வாங்கப்பட்டவை. அவற்றை மக்கள் நம்பவில்லை எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

மக்கள் மத்தியில் அறியப்பட்ட அல்லது தேசிய ஊடகங்கள் என அடையாளம் காட்டப்பட்ட ஊடகங்கள் நெடியவன் குழுவிடம் இருக்கும்வரை இதென்ன... இதற்கு மேலேயும் செய்து மிகச் சுலபமாகக் குழப்பிவிட்டுப் போகலாம். குட்லக்!

Link to comment
Share on other sites

இன்றைய உலகில் உள்ள அரசியல் பொருளாதார அமைப்புக்களில் ஜனநாயக தெரிவுகளும் திறந்த பொருளாதார கொள்கைகளும் இருக்கின்றன. ஜனநாயக அரசியல் முறை நூறு வீதம் சரியான வழி என்று இல்லை ஆனால் அதை சரியான வழியில் பயன்படுத்துவதே ஒரே வழி.

இன்று லிபியா மீது தாக்குதல் நடாத்தும் எல்லா மேலை நாடுகளிலும் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் வாதங்கள், எதிர்ப்புக்கள் உள்ளன. அதையும் மீறி அந்த நாட்டு தலைவர்கள் எடுத்த முடிவே அது. இப்படி பல பிரச்சனைகளை அவர்கள் முகம் கொடுப்பது வழமை.

எமக்கு இது ஒரு வித புதுப்பயணம். இதில் மேடு பள்ளம் நிறையவே வரும். அதை சமாளித்து வெற்றிகரமாக ஓட்ட வேண்டிய பெரும் பொறுப்பு தன தலைவர்களுக்கு வேண்டும், இந்த விடயத்தில் அதன் பிரதமருக்கு, அவரின் செயற்பாடுகளுக்கு இன்னும் ஆதரவு உள்ளதாகவே தெரிகின்றது. அதை ஏற்று கருத்தில் முரண்பட்டவர்கள் நடப்பதே ஜனநாயக பண்பு.

இது ஒரு மிகவும் அருமையான கருத்து. ஆனால் யுத்தம் நடைபெற்று முடிந்த மற்றய நாடுகளில் என்ன நடக்கிறது... அவர்கள் எப்படிச் செயற்படுகிறார்கள்... அங்கு அவர்கள் எதிர்நோக்கும் தடைகள் எவை ... இதுபோன்ற சர்வதேச விடயங்கள் எந்தவொரு தமிழ் ஊடகங்களிலும் விலாவாரியாக வெளியாவதில்லை. அதனால் அவை தமிழ் மக்கள் மத்தியில் சரியாக எடுத்துச் செல்லப்படுவதில்லை. தமிழ் ஊடகங்களில் சுற்றிச்சுற்றி யாழ்ப்பாணத்தில் கிணற்றுக்குள் அடித்துப் போடப்பட்ட ஆளைப் பற்றியும், கொலன்னாவ காட்டுக்குள் நடந்ததாகக் கூறப்படும் வதந்தி பற்றியுமே வருகின்றன.

இந்த நிலை தமிழ் ஊடகங்களில் மாற்றப்படும்வரை யாருக்கும் எந்தத் தெளிவும் இருக்கப்போவதில்லை.

இப்படியான சர்வதேச விஷயங்களைத் தாங்கிவரும் ஒரு ஊடகம்கூடவா எம்மிடம் இல்லை?

Link to comment
Share on other sites

நாடுகடந்த அரசு என்னும் நிறுவனமயப்பட்ட அமைப்பை கொண்டு நடத்தக்கூடிய ஆழுமை எமது சமூகத்திடம் இல்லை என்ற கருத்தை முன்பும் எழுதியிருக்கின்றேன். எமக்குள் இருக்கும் அடயாள அதிகாரப்போட்டி என்பது எமது இனத்தை சிதைத்து உருக்குலைத்து அடயாளமற்றதாக்கும். நாம் தோல்விகளில் இருந்து பண்படுவது குறித்து எந்தச் சிந்தனையையும் கொண்டிருக்கவில்லை.

இன்றய நிலையில்..

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த ஜனநாயகத் தமிழீழ அரசு

நாளை...

நாடுகடந்த தமிழீழ அரசு (கனடா)

நாடுகடந்த தமிழீழ அரசு (பிரித்தானியா)

நாடுகடந்த தமிழீழ அரசு (----------)

இவ்வாறு தான் எமது சமூகத்தளம் உள்ளது. சமூக உளவியல் உள்ளது. நேற்றுவரை தமிழினம் பல இயக்கங்களாக குத்துப்பட்டு பிரதேசவாதமாகக் குத்துப்பட்டு மதவாதமாகக் குத்துப்பட்டு கடசியில் ஒரு மண்ணும் இல்லாமல் பயித்தியக்காரத்தனமானதும் கேவலமானதுமான மேட்டுக்குடி சமூக உளவியலுக்கும் ஆழுமைக்கும் சிந்தனை முறைக்கும் ஆயிரக்கணக்கான ஏழை எழிய மக்கள் குழந்தைகள் பலியானார்கள். அந்த இரத்தம் இன்னும் காயவில்லை. என்னும் வலியில் அழுதுகொண்டிருக்கின்றார்கள். சிறைகளில் பரிதவித்துக்கொண்டிருக்கினறார்கள். ஆனால் தமிழர்களால் திருந்த முடியாது. எந்த ஒரு பாடத்தையும் கற்ற முடியாது. பண்பட முடியாது என்பதுதான் யதார்த்தமாக உள்ளது.

எந்த ஊடகத்தையும் நம்ப முடியாது. எந்த நபரையும் நம்ப முடியாது. ஏற்க முடியாது. ஒருவரையும் நம்பாதே! கே பி அரசாங்கத்தின் கைக்கூலி! அவரோடு சேர்ந்தவர்தான் உருத்திரகுமார் ! அடுத்த அணி ஜனநாயகஅணி அதுவும் சத்தியப்பிரமாணம் எடுக்கவில்லை அதில் ஏதோ மர்மம் இருக்கின்றது ! தமிழ் நெற்றை நம்பாதே ! இவ்வாறான ஆயிரமாயிரம் வாதங்கள் சொல்லும் செய்தி ஒன்றே ஒனறுதான் அதுவானது " ஒரு பயலையும் நம்பாதே" ஒரு செயலையும் நம்பாதே !

ஒவ்வொரு பொறுமையற்ற செயல்களும் கோமாளித்தனங்களும் அடிப்படையில் மக்களின் எஞ்சிய சிறு நம்பிக்கைகளை சம்மட்டியால் அடித்து நொருக்குகின்றது. நீங்கள் செய்வது சிங்களவன் செய்ததைவிட மோசமான இனச்சிதைப்பு. ஒரு நிறுவனமயப்பட்ட அமைப்பை உருவாக்குமுன் உளவியல் அடிப்படையில் திருத்தம் பெறுதல் அவசியமானது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக சமூகத்தை, இலக்கை பலியிடுவதற்குத் தயங்காத சிந்தனை முறையே தொடர்கின்றது. இதை மாற்றி அமைப்பதற்கான எந்த அடிப்படையும் எம்மிடம் இல்லை என்பதே ஒவ்வொரு நிகழ்வும் எமக்கு எடுத்துரைக்கின்றது.

போரின் முடிவு ஒரு மாபெரும் அவலம். அநியாயம். குற்றம். அதிலிருந்து தொடங்கவேண்டிய என்னுமொரு போராட்டக் கரு அதற்கான நியாயம் கேட்பது. அவலப்பட்ட மக்களின் வாழ்வை சரிசெய்ய முற்படுவது. தோல்விகளுக்கான காரணங்களை கண்டறிந்து திருந்திக்கொள்வது. இவற்றை எல்லாம் அடியோடு நிரகரித்து எந்தத் திருத்தத்திற்கும் இடமளிக்காது மக்களின் கவனத்தை மீண்டும் ஒரு தனி அரசு என்ற சிந்தனைப்போக்கினுள் தள்ளி அதன் மீது நம்பிக்கையை வளர்த்து பின்னர் அந்த நம்பிக்கைகளை உடைத்தெறிகின்றார்கள். உங்களால் எதையும் செய்ய முடியாது என்ற விதியை திரும்ப திரும்ப வலியுறுத்துகின்றார்கள். எவ்வளவோ காரியங்கள் செய்யக் கூடிய நிலையில் உள்ள புலம்பெயர் மக்களின் சக்தி வழமைபோல புடுங்குப்பாடுகளுக்குள் சிறைவைக்கப்படுகின்றது. இதிலிருந்து விடுபடுவது மிக அவசியமானது.

இதற்கு ஒரு சிறிய தீர்வுத் தொடக்கம் இருக்கிறது. அது- யார் சொல்வதையும் ஒருமுறை அது சரியா என்று யோசித்துப் பார்ப்பது.

தேசிய ஊடகம் என்று கருதப்படும் ஒன்றில் கூறப்படும் ஒரு விஷயம் நடக்கக்கூடாத ஒன்றாக இருக்கலாம்... ஆனந்த சங்கரி கூறும் ஏதோ ஒரு விஷயம் சரியாக இருக்கலாம். சரியானதை எடுக்கலாம், தவறானதை தள்ளிவிடலாம்.

ஆனால் இதெல்லாம் எமக்குச் சரிவராது என்பது வேறு விஷயம். காரணம் நாம் ஒரு லேபலில் கூறும் கதையை மாத்திரம் எடுத்துக் கொள்ளப் பயிற்றுவிக்கப்பட்ட ஆட்கள். மாற்றான் கதை சரியானாலும் அது மடைத்தனம் என்று சொல்லப் பலவருடமாகப் பழக்கப்பட்டு விட்டோம். அதையெல்லாம் மாற்ற முடியாது! இப்படியே கடைசிவரை ஓடுவதுதான் நம்மால் முடிந்தது. இடையிடையே அழுதழுது அவ்வப்போது எங்களை நாங்களே தேற்றிக்கொண்டு குதிரைக்குக் காட்டப்பட்ட ஆப்பிளை நோக்கி ஓடிக்கொண்டே இருப்போம் - இதில் எமக்கு ஆர்வம் குறையும்வரை. (புலம்பெயர் தமிழ் மக்களில் பெரிய சதவீதத்தினருக்கு இந்த இழுபறியில் எல்லாம் ஆர்வம் குறைந்துவிட்டதைக் கவனியுங்கள்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.