Jump to content

..இமைக்குள் நிற்கும் கேள்விகள்: கவிதை, நிழலி


Recommended Posts

நீண்ட இரவின் முடிவில்

காத்திருக்கின்றது

நேற்றைய வாழ்வில்

உதிர்ந்து போன ஒரு

பூவின் இதழ்

காட்டு வழிப் பயணத்தின்

இறுதியில் கிடைக்கின்றது

வற்றிப் போன நதியின்

சுவடு

தூரப் பயணம் ஒன்றின்

கடைசித் தரிப்பிடத்தில்

அழிந்து போனது

ஆரம்பித்த இடமும்

இறுதி புள்ளியும்

எங்கு சென்று தேடுவேன்

காணாமல் போன என்

உயிர் தொங்கிய

பெரு விருட்சத்தை

அடர்ந்து பெரிதாக நின்றிருந்த

பெரு விருட்சத்தின்

கிளையில்

தொங்கிய பறவைகள் அனைத்தையும்

பெரும் பூதம் தின்றுகொழுத்த

கதையையும்

அந்த

பூதத்தை என் தோழர்களே

வளர்த்து பறவைகளை தின்னக்

கொடுத்த கதையையும்

எப்படிச் சொல்வேன்

என் பிள்ளைக்கும்

அவன் பேரனுக்கும்

என் வரலாறு முழுதும்

பரவிக் கிடக்கும்

சந்துகள் எல்லாம்

என் தோழர்களின் கல்லறையை

என் மற்ற தோழர்களே தோண்டிய கதையை

எப்படிக் சொல்வேன்

என் மகளுக்கும்

அவள் பூட்டிக்கும்

இறுகிக் கிடக்கின்றது மனம்

ஐயோ

என்று நெஞ்சில் அடித்து

அழவும் முடியாமல்

என்று ஒப்பாரியும் இயலாமல்

சொற்கள் அனைத்தும்

வறண்டு போய்

செத்து கிடக்கின்றது

எங்கு விட்டோம் பிழை

எங்கும் விட்டோமா பிழை ?

நித்திரை வரா

இரவொன்றில்

மேலே வானில் கத்திக் கொண்டு

போகும் Goose இன்

குரலிலும்

தேடுகின்றேன்

இருண்டு கிடக்கும் என் தேசத்தில்

இருந்து ஒரு பதில்

வராதா என

நிழலி : ஏப்ரல் 03 /2011 மாலை

Link to comment
Share on other sites

நல்லதொரு கவிதை. விடையில்லாக் கேள்வி.

அடர்ந்து பெரிதாக நின்றிருந்த

பெரு விருட்சத்தின்

கிளையில்

தொங்கிய பறவைகள் அனைத்தையும்

பெரும் பூதம் தின்றுகொழுத்த

கதையையும்

அந்த

பூதத்தை என் தோழர்களே

வளர்த்து பறவைகளை தின்னக்

கொடுத்த கதையையும்

எப்படிச் சொல்வேன்

என் பிள்ளைக்கும்

அவன் பேரனுக்கும்

நிழலி : ஏப்ரல் 03 /2011 மாலை

இது ஒரு தொடர் கதை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூரப் பயணம் ஒன்றின்

கடைசித் தரிப்பிடத்தில்

அழிந்து போனது

ஆரம்பித்த இடமும்

இறுதி புள்ளியும்

புள்ளிகள் அழியலாம்!

புனிதப் பயணம் அழிவதில்லை

நாளைய தலைமுறை

நமது சிலுவையைத்

தோளில் சுமந்து செல்லும்!

அது வரை

அந்தத் தீபத்தை

அணையாது காப்போமாக!

நல்ல கவிதை நிழலி.

Link to comment
Share on other sites

பாராட்டிய தப்பிலிக்கும்ம், புங்கையூரானுக்கும் மனமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருண்டு கிடக்கும் ஓர் தேசம் ஒரு நாள் விடியும். வரலாறு மீண்டும் எழுதப் படும்

மகனும் மகனின் மகனாலும் எடுத்துச் செல்லப் படும் .உணர்வுகள் ஊட்டி வளர்க்கப்படும்வ்ரை

அது சுடர் விட்டு ஒருநாள் எரியும்.

Link to comment
Share on other sites

என் வரலாறு முழுதும்

பரவிக் கிடக்கும்

சந்துகள் எல்லாம்

என் தோழர்களின் கல்லறையை

என் மற்ற தோழர்களே தோண்டிய கதையை

எப்படிக் சொல்வேன்

என் மகளுக்கும்

அவள் பூட்டிக்கும்

அனைத்தும் அவர்கள் (பேரன் ,பூட்டி) அறிய வேண்டும்.அடுத்து எப்படி முன்னேறுவது என்பது அப்போ தான் அவர்களுக்கு தெரியும்.

கவிதைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

அடர்ந்து பெரிதாக நின்றிருந்த

பெரு விருட்சத்தின்

கிளையில்

தொங்கிய பறவைகள் அனைத்தையும்

பெரும் பூதம் தின்றுகொழுத்த

கதையையும்

அந்த

பூதத்தை என் தோழர்களே

வளர்த்து பறவைகளை தின்னக்

கொடுத்த கதையையும்

எப்படிச் சொல்வேன்

என் பிள்ளைக்கும்

அவன் பேரனுக்கும்

என் வரலாறு முழுதும்

பரவிக் கிடக்கும்

சந்துகள் எல்லாம்

என் தோழர்களின் கல்லறையை

என் மற்ற தோழர்களே தோண்டிய கதையை

எப்படிக் சொல்வேன்

என் மகளுக்கும்

அவள் பூட்டிக்கும்

விலங்குகள் கூட தன்னினத்துக்குள் இரைதேடுவதில்லை. தன்னினத்துக்குள் இரைதேடும் ஒரு கூட்டமாக தமிழினம் இருக்கின்றது. ஒருவனை ஒருவன் அடித்து தின்னும்போது ஒருநாள் இந்தக் கூட்டம் இல்லாமல் போகும் என்பது இயற்கையின் விதி. சில விதிகளை மாற்ற முடியாது என்றே தோன்றுகின்றது. பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

"இருண்டு கிடக்கும் என் தேசத்தில்

இருந்து ஒரு பதில்

வராதா என"

தேடவேண்டாம்.காரணம் அந்த இரண்டாம் வரி.

"எங்கு விட்டோம் பிழை

எங்கும் விட்டோமா பிழை ?"

Link to comment
Share on other sites

பின்னூட்டல்களுக்கு நன்றி

இந்தக் கவிதை எழுத காரணமாக இருந்தது ஒரு சம்பவத்தின் உடனடி உணர்வு. முள்ளிவாய்க்காலில் கிட்டத்தட்ட காணாமலே போய்விட்டார் அல்லது கொல்லப்பட்டு விட்டார் என நம்பப்பட்ட என் உறவு ஒன்று, தடுப்பு முகாம் ஒன்றில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் தொலைபேசியதில் இருந்து கிடைத்த சில தகவல்கள் மிகவும் மனதை பாதித்தது. அதன் விளைவு தான் இந்தக் கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன்

ஏதும் எழுதமுடியவில்லை

தங்களைப்போலவே என் மனமும்

எல்லாம் முடிந்ததென்று

மூட்டைகட்டிவைக்காமல்

ஏங்குது என் மனது

ஏதோ ஒரு கீற்றுக்காக.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை நிழலி. எம்மவர்கள் முன்னொரு காலத்தில் மனிதர்களாக இருக்க ஆசைப்பட்டார்கள். தற்போது இருக்கமட்டும் முயல்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

......

இறுகிக் கிடக்கின்றது மனம்

ஐயோ

என்று நெஞ்சில் அடித்து

அழவும் முடியாமல்

என்று ஒப்பாரியும் இயலாமல்

சொற்கள் அனைத்தும்

வறண்டு போய்

செத்து கிடக்கின்றது

எங்கு விட்டோம் பிழை

எங்கும் விட்டோமா பிழை ?

நித்திரை வரா

இரவொன்றில்

மேலே வானில் கத்திக் கொண்டு

போகும் Goose இன்

குரலிலும்

தேடுகின்றேன்

இருண்டு கிடக்கும் என் தேசத்தில்

இருந்து ஒரு பதில்

வராதா என

நிழலி : ஏப்ரல் 03 /2011 மாலை

... முள்ளிவாய்க்காலுக்கு முன் தொடங்கிய ... வார்த்தைகளால் சொல்ல முடியாதவைகளை ... சில வரிகளில் ... முடித்து விட்டீர், நிழலி!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அர்த்தமுள்ள வரிகள் என்னதான் இருந்தாலும் முள்ளிவாய்க்கால் அவலத்தினை வார்த்தையால் வர்ணிக்க முடியாது உறவுகளே..............

Link to comment
Share on other sites

இன்றுதான் இந்தக் கவிதைப் படித்தேன். சத்தியமான வரிகள் நிழலி. இது இன்னும் தொடர்கிறது என்பதுதான் இன்னும் வேதனை தரக்கூடிய விடயம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.