Jump to content

பிரபல த‌மி‌ழ் நடிகை சுஜாதா செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று காலமானா‌ர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உட‌ல்நல‌க் குறைவா‌ல் பிரபல த‌மி‌ழ் நடிகை சுஜாதா செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று காலமானா‌ர்.

அவ‌‌ள் ஒரு தொட‌ர் கதை எ‌ன்ற பட‌த்‌தி‌ல் அ‌றிமுக‌ம் ஆனவ‌ர் சுஜாதா. ‌சிவா‌ஜி, ர‌ஜி‌னி, கம‌ல் உ‌ள்பட ப‌ல்வேறு நடிக‌ர்க‌ளி‌ன் சுஜாதா நடி‌த்து‌ள்ளா‌ர்.

ர‌ஜி‌னிகா‌ந்‌த் அ‌ம்மாவாக உழை‌ப்பா‌ளி எ‌ன்ற பட‌த்‌தி‌ல் நடி‌த்த சுஜாதா, க‌ட‌ல் ‌மீ‌ன்க‌ள் எ‌ன்ற பட‌த்‌தி‌ல் கம‌ல்ஹாசனுட‌ன் ஜோடியாக நடி‌த்தவ‌ர்.

அ‌ன்ன‌க்‌கி‌‌ளி, அவ‌ர்க‌ள், அ‌ந்தமா‌ன் காத‌லி, ‌வி‌தி போ‌ன்ற ப‌ட‌ங்க‌ள் சுஜாதாவு‌க்கு ‌பிரபலமான ப‌ட‌ங்க‌ள் ஆகு‌ம்.

தகவல்........வெப் துனியா

Link to comment
Share on other sites

மயங்குகிறாள் ஒரு மாது,அவர்கள்,ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகின்றது இப்படி எத்தனையோ படங்களில் அழகாக நடித்தவர்.

அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அழகிய கண் உள்ள, நல்ல குணசித்திர நடிகை. கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=cxcOewfBJ3s&feature=player_embedded

இவாவை சினிமாவில அம்மாவாக பார்த்துத்தான் எனக்கு தெரியும். நல்ல சாந்தமான அம்மா. அஞ்சலிகள். :(

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உண்மையான தாயாக செந்தமிழ்பாட்டு படத்தில் நடித்திருப்பார்... கண்ணீர் அஞ்சலிகள் :(

Link to comment
Share on other sites

.

மலையாள பிண்ணனியைக் கொண்டவர்; இலங்கையில் வளர்ந்தவர்.

மிகச்சிறந்த நடிகை. அவள் ஒரு தொடர்கதை மனதை விட்டகலாப் பாத்திரம்.

அஞ்சலிகள்.

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது

மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது

நான் வானிலே மேகமாய்ப் பாடுவேன் பாடல் ஒன்று

நான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று

கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு

காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு

(காற்றுக்கென்ன)

தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்

சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன்

பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசிப் பேசி கிள்ளை ஆனேன்

கோவில் விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக் கொள்வேன்

(காற்றுக்கென்ன)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்.

பாலச்சந்தரின் பழைய படங்களில் சிறப்பாக நடித்தவர். அவள் ஒரு தொடர்கதையில் இவரது நடிப்பு பிடித்திருந்தது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர் இவர்...எனக்கு இவரது நடிப்பு பிடிக்கும்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்தமான நடிகைகளில் இவரும் ஒருவர்

பாலச்சந்தரின் படங்களின் மூலம் இவரின் நடிப்பாற்றல் அற்புதமாக வெளிப்பட்டது.

இவரின் இழப்பு மனதின் எங்கோ ஓர் ஓரத்தில் சோகத்தைத் திணிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

இலக்கியம்,விளையாட்டு,சினிமா,அரசியல் அனைத்தையும் கை நுனியில் வைத்திருந்த எனக்கு 83 கலவரம் அரசியல் மட்டும் என்றாகிவிட்டது.அதனால் தான் யாழின் பல இணைப்புகளில் பங்கேற்க விருப்பமில்லை.

இன்று சுஜாதாவின் மறைவு பல பழைய நினைவுகளை மீட்டிருக்கின்றது.

ஒன்று எனது முதல் காதலியின் பெயர்.இப்போ லண்டனில் இருக்கின்றார் 80 க்கு பின் காணவில்லை,தொடர்புமில்லை,விரும்பவுமில்லை.

இரண்டு எனது பாடசாலை நாட்கள்.மயங்குகிறாள் ஒரு மாது ராஜா திஜேட்டரில் கெமிஸ்றி பிறக்டிக்கல் முழுக்க கட் பண்ணி 5,6 தரம் பார்த்தது.

அவள் ஒரு தொடர் கதை செகன்ட்சோவ் பார்த்து பஸ்ஸை மிஸ் பண்ணி வீட்டிற்கு நடந்து போனது.

சினிமா விரல் நுனியில் இருந்ததற்கு சாட்சி இதில் இணைத்த அவர்கள் படத்தில் வரும் "காற்றுக்கென்ன வேலி" பாட்டில் சுஜாதாவுடன் வருபவர் சுமனில்லை ரவிகுமார்.சுமித்திராவின் கணவர் உமாவின் அப்பா.

அவர்கள் படம் வீடியோவில் எனதுவீட்டில் பெரும்மழைக்கு மத்தியில் காண்பித்தேன்.அயல் வீட்டுபெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள் ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை.இன்று யாழில் எனது கருத்துக்களை பிடிக்காததுபோல்,அவர்களுக்குஅந்தநேரம் பிடித்தது பகலில் ஒரு இரவு.சிறீ தேவியின் படம்."இளமையெனும் பூங்காற்று"

ஒட்டுமொத்த மொக்கை கூட்டம் இதில் நான் பிறந்ததே தப்பு.

pakalil oru wilavu

Link to comment
Share on other sites

எனக்கும் பிடித்தமான நடிகைகளில் இவரும் ஒருவர்

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலக்கியம்,விளையாட்டு,சினிமா,அரசியல் அனைத்தையும் கை நுனியில் வைத்திருந்த எனக்கு 83 கலவரம் அரசியல் மட்டும் என்றாகிவிட்டது.அதனால் தான் யாழின் பல இணைப்புகளில் பங்கேற்க விருப்பமில்லை.

இன்று சுஜாதாவின் மறைவு பல பழைய நினைவுகளை மீட்டிருக்கின்றது.

ஒன்று எனது முதல் காதலியின் பெயர்.இப்போ லண்டனில் இருக்கின்றார் 80 க்கு பின் காணவில்லை,தொடர்புமில்லை,விரும்பவுமில்லை.

இரண்டு எனது பாடசாலை நாட்கள்.மயங்குகிறாள் ஒரு மாது ராஜா திஜேட்டரில் கெமிஸ்றி பிறக்டிக்கல் முழுக்க கட் பண்ணி 5,6 தரம் பார்த்தது.

அவள் ஒரு தொடர் கதை செகன்ட்சோவ் பார்த்து பஸ்ஸை மிஸ் பண்ணி வீட்டிற்கு நடந்து போனது.

சினிமா விரல் நுனியில் இருந்ததற்கு சாட்சி இதில் இணைத்த அவர்கள் படத்தில் வரும் "காற்றுக்கென்ன வேலி" பாட்டில் சுஜாதாவுடன் வருபவர் சுமனில்லை ரவிகுமார்.சுமித்திராவின் கணவர் உமாவின் அப்பா.

அவர்கள் படம் வீடியோவில் எனதுவீட்டில் பெரும்மழைக்கு மத்தியில் காண்பித்தேன்.அயல் வீட்டுபெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள் ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை.இன்று யாழில் எனது கருத்துக்களை பிடிக்காததுபோல்,அவர்களுக்குஅந்தநேரம் பிடித்தது பகலில் ஒரு இரவு.சிறீ தேவியின் படம்."இளமையெனும் பூங்காற்று"

ஒட்டுமொத்த மொக்கை கூட்டம் இதில் நான் பிறந்ததே தப்பு. pakalil oru wilavu

திரியை திசை மாற்றுவதாக யாரும்குறைநினைக்கவேண்டாம்

இவர் எந்த திரியில் வந்து என்ன எழுதுகின்றார்

யாரும் தட்டிக்கேட்க மாட்டீர்களா....? :(:(:(

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பொறியியல் கல்லூரி நேர்முக தேர்வில் கலந்துவிட்டு, அந்த மகிழ்ச்சியில் மதுரை தமிழ்ச் சங்கம் சாலையிலுள்ள 'தேவி' திரையரங்கில் இவர் நடித்த 'அன்னக்கிளி' படத்தை மிகவும் ரசித்துப் பார்த்த படம். இளைய ராஜாவின் முதல் இசையுடன் இவரின் மெருகூட்டிய நடிப்பு..!

வாழ்க்கையில் முக்கிய கட்டத்தில் வெற்றிகரமாக படியேறிய மனதின் உற்சாகத்துடன் பார்த்த இப்படம் இன்றும் பசுமையான நினைவுகள்.. இன்றும் 'தேவி' திரையரங்க "சிம்மக்கல்-மதுரை கோட்ஸ்" பகுதியை கடக்கும் போது இவரின் நினைவுகள் மீட்டிச் செல்லும் அக்கால சுகந்தம்...மிகவும் ரம்யமானவை.

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்...!

.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

....'அவர்கள்' படம் வீடியோவில் எனதுவீட்டில் பெரும்மழைக்கு மத்தியில் காண்பித்தேன்.அயல் வீட்டுபெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள் ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை.இன்று யாழில் எனது கருத்துக்களை பிடிக்காததுபோல்,அவர்களுக்குஅந்தநேரம் பிடித்தது பகலில் ஒரு இரவு.சிறீ தேவியின் படம்."இளமையெனும் பூங்காற்று"

ஒட்டுமொத்த மொக்கை கூட்டம் இதில் நான் பிறந்ததே தப்பு.

pakalil oru wilavu

சிறு திருத்தம் - அத்திரைப்படம் "பகலில் ஓர் நிலவு"

அடுததது : இது பெரும்பான்மை மக்களின் ரசனைக்கு உங்களின் ஒவ்வாமை. உங்களின் இந்த வரிகள், வினோத குணத்தின் பிரதிபலிப்பு ( too much lateral thinking..?).

கழிவிரக்கம் கொள்வதைத் தவிர வேறொன்றுமில்லை.

.

Link to comment
Share on other sites

..

விசுகு

Posted Yesterday, 03:19 PM

View Postarjun, on 07 April 2011 - 11:08 PM, said:

இலக்கியம்,விளையாட்டு,சினிமா,அரசியல் அனைத்தையும் கை நுனியில் வைத்திருந்த எனக்கு 83 கலவரம் அரசியல் மட்டும் என்றாகிவிட்டது.அதனால் தான் யாழின் பல இணைப்புகளில் பங்கேற்க விருப்பமில்லை.

இன்று சுஜாதாவின் மறைவு பல பழைய நினைவுகளை மீட்டிருக்கின்றது.

ஒன்று எனது முதல் காதலியின் பெயர்.இப்போ லண்டனில் இருக்கின்றார் 80 க்கு பின் காணவில்லை,தொடர்புமில்லை,விரும்பவுமில்லை.

இரண்டு எனது பாடசாலை நாட்கள்.மயங்குகிறாள் ஒரு மாது ராஜா திஜேட்டரில் கெமிஸ்றி பிறக்டிக்கல் முழுக்க கட் பண்ணி 5,6 தரம் பார்த்தது.

அவள் ஒரு தொடர் கதை செகன்ட்சோவ் பார்த்து பஸ்ஸை மிஸ் பண்ணி வீட்டிற்கு நடந்து போனது.

சினிமா விரல் நுனியில் இருந்ததற்கு சாட்சி இதில் இணைத்த அவர்கள் படத்தில் வரும் "காற்றுக்கென்ன வேலி" பாட்டில் சுஜாதாவுடன் வருபவர் சுமனில்லை ரவிகுமார்.சுமித்திராவின் கணவர் உமாவின் அப்பா.

அவர்கள் படம் வீடியோவில் எனதுவீட்டில் பெரும்மழைக்கு மத்தியில் காண்பித்தேன்.அயல் வீட்டுபெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள் ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை.இன்று யாழில் எனது கருத்துக்களை பிடிக்காததுபோல்,அவர்களுக்குஅந்தநேரம் பிடித்தது பகலில் ஒரு இரவு.சிறீ தேவியின் படம்."இளமையெனும் பூங்காற்று"

ஒட்டுமொத்த மொக்கை கூட்டம் இதில் நான் பிறந்ததே தப்பு. pakalil oru wilavu

திரியை திசை மாற்றுவதாக யாரும்குறைநினைக்கவேண்டாம்

இவர் எந்த திரியில் வந்து என்ன எழுதுகின்றார்

யாரும் தட்டிக்கேட்க மாட்டீர்களா....? :( :( :(

கலியாண வீட்டிவயே அழுகிறவன் செத்தவீட்டில என்ன செய்வான் என நினைக்கிறியள் விசுகு?

ஒப்பாரி வைச்சு தீர்க்கமாடடான் அப்படித்தான் இதுவும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சரி, சரி ஆளாளுக்கு நன்றி, வணக்கம் சொல்லி நேரத்த தின்னாமல், ஆளுக்கு ஒரு திரியா பிரிச்சு குத்து பாட்டில் இறங்குங்கோ🤣
  • ஜேர்மனியில் கத்திக்குத்துக்கு பள்ளி மாணவி பலி! மற்றொருவர் படுகாயம்! தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 13 வயதுடைய மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை காலை  இல்லர்கிர்ச்பெர்க் (Illerkirchberg) கிராமத்தில் உள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து மாணவர்களைத் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கத்திக்குத்து இலக்காகிய 14 வயதுச் சிறுதி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அவர் அங்கு உயிரிழந்தார். இச்சிறுதி துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த ஜெர்மன் குடியுரிமை பெற்றவர். சந்தேகத்தின் பெயரில்  எரித்திரியாவைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் எனக்கூறிய 27 வயது இளைஞரை ஜேர்மன் காவல்துறையினர் கைது செய்தனர். 13 வயது சிறுமிக்கு கத்தியால் பலத்த காயங்கள் ஏற்பட்டாலும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர் தாக்குதலில் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று அகதிகள் தங்குமிடத்திற்கு சென்றுள்ளார். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கத்தியுடன் அவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சந்தேக நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயம் அவரின் கத்தியால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பின்னர் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சந்தேக நபருக்கு மனநல பிரச்சினைகள் உள்ளதா என்பதையும், தாக்குதலுக்கு முன்னர் இரண்டு சிறுமிகளையும் அவர் அறிந்திருந்தாரா என்பதையும் உறுதி செய்ய வழக்கறிஞர்கள் முயன்றனர். வெளிநாட்டினர் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவத்தை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறையினர் ஒரு அறிக்கையில் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர் இது தொடர்பான அனைத்தும் இதுவரை முற்றிலும் தெளிவாக இல்லை என்று காவலதுறைச் செய்தித் தொடர்பாளர்  வொல்ப்காங் ஜூர்கன்ஸ் (Wolfgang Jürgens) செய்தியாளர்களிடம் கூறினார்.  இருப்பினும், ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஜேர்மனியின் குடியேற்றக் கொள்கையை தீவிர வலதுசாரி AfD உடனடியாகக் குற்றம் சாட்டியது. இல்லர்கிர்ச்பெர்க் என்பது 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,000க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட கிராமமாகும். துருக்கிய தூதர் அஹ்மத் பாசார் சென் செவ்வாயன்று பேடன்-வூர்ட்டம்பேர்க் மாநிலத்தின் துணைத் தலைவருடன் கிராமத்திற்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேயர் Markus Häußler, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறினார்.  அதே நேரத்தில் ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் „பயங்கரமான செய்தி“ தன்னை உலுக்கியது என்றார். கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்த சிறுமி குணமடைவாள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். அனைத்து பின்னணிகளையும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என்று அமைச்சர் ட்விட்டரில் (ஜெர்மன் மொழியில்) எழுதினார். https://eelattamilan.stsstudio.com/2022/12/07/ஜேர்மனியில்-கத்திக்குத்/?
  • ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் மாணவிபலி - புகலிடக்கோரிக்கையாளர் மீது குற்றச்சாட்டு By RAJEEBAN 06 DEC, 2022 | 12:29 PM ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பாடசாலை மாணவியொருவர் கொல்லப்பட்டுள்ளார். ஜேர்மனியின் தென்பகுதியில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 14 மற்றும் 13 வயது மாணவிகள் மீது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இல்லர்கிர்ச்பேர்க் என்ற கிராமத்தில் உள்ள அகதிகளிற்கான நிலையமொன்றிலிருந்து  வெளியே வந்த நபர் ஒருவர் இந்தகத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதன்போது 14 வயது மாணவி உயிரிழந்துள்ளார். எரித்திரியாவை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே இந்த கத்திக்குத்தில் ஈடுபட்டார் என பொலிஸார்தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள கட்டிடமொன்றை சோதனையிட்டவேளை கத்தியுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார் இந்த கத்தியை அவர் தாக்குதலிற்கு பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிஸார் வேறு இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். இதேவேளை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸார் இந்த சம்பவத்தை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் அல்லது புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு எதிராக பதற்றத்தை அதிகரிக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல விடயங்கள் தெளிவற்றவையாக காணப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் மாணவிபலி - புகலிடக்கோரிக்கையாளர் மீது குற்றச்சாட்டு | Virakesari.lk
  • ஓர் இனம் வாழவேண்டுமாயின் அந்த இனத்தின் இருப்பையும் பரம்பலையும் உறுதிசெய்ய வேண்டும் - வைத்தியர் பாலகோபி By VISHNU 06 DEC, 2022 | 08:45 PM ( எம்.நியூட்டன் )   ஓர் இனம் வாழவேண்டுமாயின் அந்த இனத்தின் இருப்பையும் பரம்பலையும் உறுதிசெய்ய வேண்டும் என  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளரும் சிறுநீரக தொகுதி அறுவை சிகிச்சை நிபுணருமான பா.பாலகோபி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் நடைபெற்ற நூல் வெளியீட்டின் போது உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இன்று (6)குழந்தையின்மைப் பிரச்சினை தீவிரம் பெற்றுள்ளது. குழந்தையின்மைக்கான மருத்துவத் தேவைப்பாடுடையவர்களாக 50 வீதம் பெண்களும் 50 வீதம் ஆண்களும் காணப்படுகின்றனர். ஆனால், சமூகத்தில் பெண்களை மட்டுமே குறைகூறுகின்றோம். பெண்களை மட்டுமே மருத்துவத் தேவைப்பாடுடையவர்களாகப் பார்க்கின்றோம். இந்த நிலைமை மாற்றம் பெறவேண்டும்.    குழந்தையின்மைப் பிரச்சினைக்காக ஆண்கள் உண்மையில் சிறுநீரக சனனித் தொகுதி மருத்துவரைத்தான் நாட வேண்டும். ஆனால், இது தொடர்பான போதிய அறிவு விழிப்புணர்வு எவரிட மும் இல்லை. அத்துடன், இந்தத் துறை உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடை யாத துறையாகவே இருக்கின்றது. இந்ததுறையை விருத்தி செய்ய வேண்டியது காலத்தினுடைய கட்டாயமாகக் காணப்படுகின்றது.   ஆண்களினுடைய விந்து உருவாக்கத் திலிருந்து விந்து கடத்தப்படுகின்ற பாதையிலிருந்து கருத்தங்காமை பிரச்சினை ஏற்படுகின்றது. முட்டையைத் தேடி மில்லியன் கணக்கான விந்தணுக்கள் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. விந்தணுக்களின் எண்ணிக்கைகள் குறைகின்றபொழுது பிரச்சினை ஏற்படுகின்றது. வால்களற்ற விந்துக்களால் முன்னோக்கிச் செல்ல முடியாது. இவற்றாலும் கருக்கட்டலில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உடல் வெப்பநிலை கூடுகின்றபொழுது அல்லது சுற்றாடல் வெப்பநிலை கூடு கின்றபொழுது அல்லது எம்மிடம் இருக்கின்ற புகைத்தல், மது உள்ளிட்ட தீய பழக்கவழக்கங்களாலும் இந்த விந்தணுக்களின் பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இன்று எமது இளைஞர்கள் நீண்ட நேரம் வேலை செய்கின்றார்கள். பலர்  சாரதிகளாகப் பணிபுரிகின்றார்கள். பத்து மணித்தியாலங்கள் தொடர்ந்து அந்த இருக்கையில் இருக்கின்ற பொழுது விந்துகள் இறந்து விடுகின்றன. எனவே இது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தி போதிய மருத்துவ அறிவுறுத்தல்களை பின் பற்றவேண்டும். விந்துக்களையும் முட்டைகளையும் சேர்க்கின்ற பொறிமுறை தனியார் மருத்துவமனைகளில் மாத்திரமே காணப்படுகிறது. அரச மருத்துவமனைகளில் இல்லை. இதனால் ஏழைக்குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றன. ஆதலால், தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் அத்தனை வசதி வாய்ப்புக்களும் அரச மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்படவேண்டும். எமது சமுதாயத்துக்காக எம் இனத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக நாம் அர்ப்பணிப்பானதும் ஆக்கபூர்வமான துமான பல திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும் என்றார். இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, மருத்துவ பீட பீடாதிபதி ரா.சுரேந்திரகுமாரன், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், விரிவுரையாளர்கள், ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். வைத்தியர் பா. பாலகோபி வைத்தியர் சி.இரகுராமன் இருவரும் இணைந்து  "குழந்தையின்மை விளக்கங்களும் தீர்வுகளும்" என்ற நூலை எழுதி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. ஓர் இனம் வாழவேண்டுமாயின் அந்த இனத்தின் இருப்பையும் பரம்பலையும் உறுதிசெய்ய வேண்டும் - வைத்தியர் பாலகோபி | Virakesari.lk
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.