-
Tell a friend
-
Topics
-
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ஒரு மில்லியனுக்கும்.... அதிகமான, சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள்... தேங்கியுள்ளதாக தகவல்? மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்னர், அவுஸ்ரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ‘ஸ்மார்ட்’ அட்டைகளுக்கு 6 இலட்சம் யூரோக்கள் செலுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியிடம் பணம் இல்லாமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. எனினும் தற்பொழுது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2022/1283652 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
நிதி அமைச்சராக ரணில் பதவிப்பிரமாணம்? பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில், 20 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன், புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் நேற்று பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டன. இந்த நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் இதுவரை நிதி அமைச்சராக பதவி வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1283658 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
நாடளாவிய ரீதியில்... 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மூடப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு போராட்டங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். அந்த நிரப்பு நிலையங்களில் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் கையிருப்புகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 5 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்துவதற்கு மேலதிக ஆதரவு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பல்வேறு கலவர சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1283683 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ரணில் பதவி விலகாவிட்டால்... பொதுஜன பெரமுனவின், இசைக்கு ஏற்ப ஆட வேண்டும் – எதிர்க்கட்சி! தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து பதவியில் இருந்தால், பொதுஜன பெரமுனவின் இசைக்கு ஏற்ப ஆட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிக்க விரும்பினால், பொதுஜன பெரமுனவிற்கு பணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய அரசாங்கத்தை பல கட்சி அரசாங்கம் என்று அழைக்க முடியாது. ஏனெனில் அது பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ளது. புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இருவரைத் தவிர ஏனையவர்கள் பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட்டவர்கள். திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 21வது திருத்தம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதால் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பது சமநிலையில் உள்ளது. 21வது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் ஏற்பாடுகள் எதுவும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மறுபுறம், இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு வரவிடாமல் தடுப்பதும் சமநிலையில் உள்ளது” என்று அவர் மேலும் கூறினார். https://athavannews.com/2022/1283676 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
மே 9 சம்பவம் குறித்து... ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை, நியமிக்குமாறு கோரிக்கை! கொழும்பு – கொள்ளுப்பிட்டி மற்று காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சுதந்திரமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் அடக்குமுறை மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட களங்கம் மிகவும் வலுவானவை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறைக்கான அடிப்படைக் காரணம், அதற்குக் கட்டளையிட்டவர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் அதைச் செய்தவர்கள் யார் என்பதை நாட்டின் முன் அம்பலப்படுத்த வேண்டும் என அவர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர. இந்தக் கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அத்துரலியே இரத்தின தேரர், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம். அதாவுல்லா, வாசுதேவ நாணயக்கார மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர். https://athavannews.com/2022/1283662
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.