Archived

This topic is now archived and is closed to further replies.

SUNDHAL

"செல்' பேசும் வார்த்தைகள்!

Recommended Posts

(எல்லாத்துக்கும் மனசுன்னு ஒண்ணு உண்டு. அப்படிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன..ஒரு இளைஞன்.. காதலன் அவனது செல்போன் மனம் விட்டுப் பேசினால் எப்படி இருக்கும்! அதான் கண்ணு இது! "செல்' பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.)

ய்ங் கீய்ங்..கீய்ங் கீய்ங்..(மெúஸஜ் ஒன்று வந்தடைகிறது.)

செல்: நிம்மதியா தூங்க உடுறாங்களா..சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல... இந்த நேரத்துல என்னடா மெúஸஜ் வேண்டி கிடக்கு. இப்ப இவன் எந்திரிச்சு என்னன்னு பார்ப்பான். அப்புறம் விடிய விடிய "சாட்'தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிச்சிட்டான்யா..என்னைக் கையில எடுத்துட்டானே..ஆஹா பொண்டாட்டிதான் மெúஸஜ் அனுப்பியிருக்கா! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பரை "பொண்டாட்டி'ன்னு ஸ்டோர் பண்ணி வைச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..

""செல்லம் தூங்கிட்டியாடா?''

அடிப்பாவி நடுராத்திரி ரெண்டு மணிக்கு தூங்காம தூர்தர்ஷன்ல ஹிந்தி மெகா சீரியலாடி பாத்துக்கிட்டிருப்பாங்க! ஆஹா பதில் அனுப்பத் தொடங்கிட்டான்டா!

""ஆமா செல்லம்! இப்பத்தான் தூங்கினேன். கனவுல நீதான் வந்த! ரெண்டு பேரும் சுவிஸ்ல டூயட் பாடிக்கிட்டிருந்தோம்''

டேய் சத்தியமா சொல்லு. உன் கனவுல அவளாடா வந்தா! கடலை முட்டாயில இருந்து காம்ப்ளான் வரை கடன் சொல்லி வாங்குன கடைக்காரர் + கடன்காரர் கந்தசாமிதான் வந்தாரு! ஏன்டா என்னையும் பொய் சொல்ல வைக்கு

கீய்ங் கீய்ங்..கீய்ங் கீய்ங்..

பதில் வந்துடுச்சுடா. அவ இவனுக்கு ஒருபடி மேல படுத்துவாளே. என்ன சொல்லியிருக்கா!

""உன் கனவுல நான் என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தேன்?''

ஆமாடி, ரொம்ப முக்கியம்! என்ன டிரெஸ் போட்டிருந்த, லிப்ஸ்டிக் சரியா இருந்துச்சா, மல்லிப்பூ வைச்சிருந்தியா, ஹீல்ஸ் எத்தனை அடி உயரத்துல போட்டிருந்த எல்லாம் வரிசையாக் கேளு!

""டார்லிங், நீயும் நானும் ஒயிட் டிரெஸ் போட்டிருந்தோம். நீ தேவதை மாதிரி இருந்த!''

டேய் நீ தேவதைய முன்னப் பின்ன பாத்திருக்கியாடா! ஒயிட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா! ""டேய் புருஷா.. எனக்கு தூக்கம் வர மாட்டீங்கு! நான் என்ன பண்ண?''

ஆங்..நல்லா வாயில வருது. ஏதாவது சொல்லிப்புடுவேன். உடம்பு, கீ-பேடுல்லாம் வலிக்குதுடா சாமி! பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னாடா ரொமான்ஸ் வேண்டி கிடக்கு. அடங்குங்கடா!

""என் பேரை மந்திரம் மாதிரி சொல்லிக்கிட்டே கண்ணை மூடி தியானம் பண்ணு. அப்படியே தூங்கிடுவ! அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்மா!''

ச்சீ..தூ..எச்சி எச்சி! உம்மான்னு அடிச்சா போதாதா..அந்த இலவை எனக்கு வேற கொடுக்கணுமா, கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா, உனக்கே இது ஓவராத் தெரியல. அதெல்லாம் சொன்னாத் தூக்கம் வராதுடா, உன்னால தான் தூக்கம் கெட்டுடுச்சின்னு வெறுப்புத்தான் வரும். லூசுப்பய! இதுக்கு அந்த மடச்சி என்ன அனுப்புறான்னு பார்ப்போம்.

""யேய் புஜ்ஜூ, எனக்கு உன் பேரைச் சொன்னாத் தூக்கம் வரல, வெட்கம் வெட்கமா வருது!''

எனக்கு வேதனை வேதனையா வருது. எப்படா தூங்குவீங்க! தினமும் இதே தலை வேதனையாப் போச்சு! "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவனை விட, செல்லைப் படைத்து ப்ரீ எஸ்.எம்.எஸ்ûஸப் படைத்த மனுசன் தான் கொடியவன்'. போன ஜென்மத்துல ஆந்தையா இருந்துருப்பாங்க போல!

""செல்லம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?''

""உலக வங்கியில் இந்தியா வைச்சிருக்கிற கடன் தொகையைவிட அதிகமாப் பிடிக்கும். என்னை உனக்கு எவ்வளவுடா பிடிக்கும்?''

கடன்காரி. உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா. நம்மாளு என்ன சொல்லுறான்னு பார்ப்போம்.

""முதல் டீச்சர். முதல் சம்பளம். முதல் கவிதை. முதல் காதல்...இதையெல்லாம் யாராவது எவ்வளவு பிடிக்கும்னு அளந்து சொல்ல முடியுமாடி! நீதான் என் முதல் காதல்''

டேய் அளக்காதடா! ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு நம்பருக்கும் இதே மெúஸஜைத் தான நீ அனுப்புன. நடத்து. நடத்து! எனக்கு மட்டும் உண்மையை அனுப்புற சக்தி இருந்தா மவனே செத்தடா நீ!

(அரை மணி நேரம் கழித்து, அந்த இளைஞன் ஒன்பதாவது முறையாக குட்நைட் சொல்லிவிட்டு "சாட்'டை முடிக்கிறான்.)

முடிச்சிட்டாங்களா! என்னது இவன் திருப்பி ஏதோ நோண்டுறான். ஓ...என்னை எழுப்பச் சொல்லி அலாரம் வைக்கப் போறானா. எத்தனை மணிக்கு? அடப்பாவி உலகத்துலேயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதான்டா! அதுவரைக்கும் "பொண்டாட்டி' திருப்பி "சாட்'டுக்கு வராம இருந்தா சரிதான்.

(காலை பதினொரு மணி..)

அட என்னமோ குறுகுறுங்குதே...ஓ ஏதோ ரிமைண்டர் செட் பண்ணி வைச்சிருக்கான். அதான் என்னது...

""இன்று திங்கள்கிழமை பல் தேய்க்க வேண்டும்''

அட நாத்தம் புடிச்சவனே! ரிமைண்டர் சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா "ஏன்டா இப்படி ஒரு சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சோம்'னு தன்னைத் தானே அடிச்சுக்குவான். விட்டா "பல் தேய்ச்சதுக்கப்புறம் வாய் கொப்பளிக்க வேண்டும்'னு கூட ரிமைண்டர் வைப்படா நீ! டேய் எவ்வளவு நேரம் தான்டா கத்துறது. தொண்டை வலிக்குது. எழுந்தரிச்சுத் தொலைடா. அடப்பாவி ரிமைண்டரை ஆஃப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே! அப்ப இன்னிக்கும் பல்லைத் தேய்க்க மாட்டான்போல! டேய் நீ பல்லைத் தேய்க்க வேண்டாம்டா! எனக்கு சாப்பாடு போடு. பேட்டரில சார்ஜ் தீர்ந்துடுச்சு! சார்ஜர்ல போடுறா! இவன் காதுல எங்க விழப்போகுது, சோம்பேறி!

(அரை மணி நேரம் கழித்து, இன்கம்மிங் கால் வருகிறது.)

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி...'(ரிங்டோன் ஒலிக்கிறது.)

அவனவன் என்னன்னமோ லேட்டஸ்ட டோன் வைச்சு அசத்திக்கிட்டிருக்கான். கஞ்சப் பய! ரிங்டோனைப் பாரு. நந்தவனத்தில ஆண்டியாம். டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க! அப்பாடா எழுந்திரிச்சிட்டான்.

""ஹலோ..ஆங்..குட் மார்னிங் சார்..கண்டிப்பா..இன்னிக்கு கண்டிப்பா முடிச்சிரலாம் சார்..இல்ல சார்...ஆமா கொஞ்சம் பிஸிதான்..ஒரு மீட்டிங்ல இருக்கேன்... ப்ளீஸ் அப்புறமா பேசலாம் சார். ஓ.கே.''

தலையெழுத்து இவன் பண்ணுற கூத்துக்கெல்லாம் நாமளும் உடந்தையா இருக்க வேண்டியதிருக்கே! மணி பன்னிரெண்டு ஆக இன்னும் 5 செகண்டுதான் இருக்கு. அலாரமா அலறக்கூட என் உடம்புல சக்தியே இல்ல! நீ தூங்கிக்கிட்டே இரு. நானும் தூங்...

(செல் ஸ்விட்ச் ஆஃப் ஆகிறது.)

கற்பனை: முகில்

Share this post


Link to post
Share on other sites

ம்ம்ம்ம் இப்படி தினமும் எத்தன பேர்ரோட செல்போண் feel பண்ணும்... :oops: :oops: :oops: :lol:

Share this post


Link to post
Share on other sites

ஓம் சுண்டல்..உங்கட செல்லை கேட்டுப்பார்த்தனீங்களா? :roll: :wink:

Share this post


Link to post
Share on other sites

ஓம் சுண்டல்..உங்கட செல்லை கேட்டுப்பார்த்தனீங்களா? :roll: :wink:

அது கூட அப்பிடி தான் புலம்பிச்சு..... :oops: :oops: :cry: :lol:

Share this post


Link to post
Share on other sites

அது கூட அப்பிடி தான் புலம்பிச்சு..... :oops: :oops: :cry: :lol:

இல்ல சுண்டல் இதைவிட மோசமா அல்லவா உங்க சொல் புலம்பிச்சு ஏன் பொய் சொல்லுகிறீங்க

Share this post


Link to post
Share on other sites

'டேய் நீ தேவதைய முன்னப் பின்ன பாத்திருக்கியாடா! ஒயிட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா!"

சிரிச்சி சிரிச்சி

வயிறு நோகுதப்பா :D:lol:

Share this post


Link to post
Share on other sites

'டேய் நீ தேவதைய முன்னப் பின்ன பாத்திருக்கியாடா! ஒயிட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா!"

சிரிச்சி சிரிச்சி

வயிறு நோகுதப்பா :D:lol:

என்ன பன்ன பசங்க மேல தப்பில்லப்பா...

தேவதை அழகி அது இதுனு build up கொடுத்தால் தான்ப்பா காதலிக்கிறாங்க... :oops: :oops: :D

Share this post


Link to post
Share on other sites

இல்ல சுண்டல் இதைவிட மோசமா அல்லவா உங்க சொல் புலம்பிச்சு ஏன் பொய் சொல்லுகிறீங்க

:oops: :oops: :oops: :oops:

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? முதல்ல என் செல்போண்ன மாத்தனும்.. :D

Share this post


Link to post
Share on other sites

என்ன பன்ன பசங்க மேல தப்பில்லப்பா...

தேவதை அழகி அது இதுனு build up கொடுத்தால் தான்ப்பா காதலிக்கிறாங்க... :oops: :oops: :D

ஆகா அப்படியும் சொல்லிப் பாத்தீங்களா? :wink: :D:D

Share this post


Link to post
Share on other sites

அது மட்டுமா உண்ண விட நல்லவள் வல்லவள் அழகானவள் இந்த உலகத்தல இல்லனு வேற சொல்லிட்டன்...

Share this post


Link to post
Share on other sites

சோ இன்னும் அன்னியை நீங்கள் பிக்கப்ப பண்ண முடியவில்லையோ அண்ணா? உப்படி சொல்லியும் கூடவா ஆகா அண்ணா :lol::D :oops: :D :roll: :D:D

Share this post


Link to post
Share on other sites

என்ன பன்ன பசங்க மேல தப்பில்லப்பா...

தேவதை அழகி அது இதுனு build up கொடுத்தால் தான்ப்பா காதலிக்கிறாங்க... :oops: :oops: :lol:

ஆகா

அனுபவம் பேசுதப்பா :wink: :wink:

Share this post


Link to post
Share on other sites

அது மட்டுமா உண்ண விட நல்லவள் வல்லவள் அழகானவள் இந்த உலகத்தல இல்லனு வேற சொல்லிட்டன்...

என்ன சுண்டல் இங்க வந்து கடல போடுறீங்க போல கிடக்கு...... :P :P :P

Share this post


Link to post
Share on other sites

நானும் ஏதோ Howitzer குடுக்கிற அடியைப்போலை அண்ணன் தம்பி உதவான் என்று ஏதோ வார்த்தைகளில சொல்லுறாங்கள் எண்டு வந்தன் :oops:

Share this post


Link to post
Share on other sites

நானும் ஏதோ Howitzer குடுக்கிற அடியைப்போலை அண்ணன் தம்பி உதவான் என்று ஏதோ வார்த்தைகளில சொல்லுறாங்கள் எண்டு வந்தன் :oops:

ஆ..... என்ன சைட்டால யாற்றையோ காலைவாருற மாதிரி இருக்கு.... :roll: :roll: :twisted:

Share this post


Link to post
Share on other sites

ஆ..... என்ன சைட்டால யாற்றையோ காலைவாருற மாதிரி இருக்கு.... :roll: :roll: :twisted:

:lol::D:D :oops:

Share this post


Link to post
Share on other sites

ஆகா சுண்டல் நல்லாய் இருக்கு உங்கள் தகவல்.

சுண்டல் உங்களுடைய செல்போன் உங்களின் லொள்ளு தாங்க இயலாமால் தற்கொலை செய்தாதக எல்லோ அறிந்தேன்.

Share this post


Link to post
Share on other sites

ஆஹா என்ர செல் புலம்பினதை யாரப்பா இங்க போட்டது?? :shock:

:lol::(:(:lol:

Share this post


Link to post
Share on other sites

ஆஹா என்ர செல் புலம்பினதை யாரப்பா இங்க போட்டது?? :shock:

:lol::lol::lol::lol:

அடடா என்ன செல் எல்லோருக்கும் புலம்பி இருக்கு :shock: :shock:

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • ஹாங் கொங் ஐ கிந்தியா (காஷ்மீர், கோவா சிக்கிம்) , சொறி சிங்கள லங்கா (வடக்கு கிழக்கு) ஈழத்து தமிழர்களை  ஆக்கிரமித்து, அழித்து, இனச்சுத்திகரிப்பு செய்து போல ஒன்றையும் செய்யாமல், One Country, Two System என்பதை மிகவும் மதித்து. சீனா ஹாங் கொங் ஐ இப்படி நடத்திய போதும், ஹாங் கொங் சீனாவின் இறையாண்மை உள்ள இடம், பிரித்தானியருக்கு 1852 இல் குத்தகைகு கொடுத்த போதும், ஓபியம் யுத்தத்தில் ஹாங் காங் ஐ பிரித்தானியா ஆக்கிரமித்த  பின். அதனால், சீன மக்களின் மனதில், தமது 100 வருட காலனித்துவ அரசுகளால் சுமத்தப்பட்ட அவமானத்தை,  ஹாங் காங் சீனாவிடம் மீள்வது அவர்களின் சுயமரியாதை தூக்கி நிறுத்தும் வரலாற்று கடமை. ஹாங் காங் சீனாவிடம் மீண்ட போதும், சீனா முன்பு பிரித்தானியரிடம் இருந்ததாகவே வைத்து இருந்தது. காங் காங் இல் இப்போதைய நிலையில் பிரித்தானிய, அமெரிக்கா, ஆஸ்திரெய்லியை  உளளவு துறையும், முகமில்லாதத ராஜதந்திரிகளுகம் செய்த நரி வேலை, சீனாவின் சுயமரியாதையை 100 வருட அவமானம் தாக்கியது போலவே இருந்தது. இவ்வளவுக்கும் சீன பொறுமையுடன் இருந்தது. தந்து வளர்ச்சியை குலைக்க காங் காங் பகடையாக ஆக்கப்படுகிறது என்பது அறிந்தும். சீனாவிடம் இந்த நடவடிக்கைக்கு, மேற்கிடம் சீனாவுக்கு வலி ஏற்படுத்தும் வழிகள் ஒன்றுமில்லை. அதனாலேயே, இந்த சத்தமெல்லாம்.   
    • Sri Lanka’s fight against LTTE terrorism: In retrospect Nathasha FernandoMay 29, 2020 Authors: Ms. Nathasha Fernando and Ms. Ayodhya Krishani Amarajeewa On the 19th of May 2020 Sri Lanka celebrated the National War Heroes Day and there was a surprise: Tamil Ealam Cyber Force attacking and defacing several government websites. The Sri Lankan civil war between the Liberation Tigers of Tamil Ealam (LTTE) and Sri Lankan state ended in May 2009. The LTTE was known to the world as a ‘terrorist group’, ‘insurgents’, and alternatively as ‘guerilla fighters’. A number of countries in the world has proscribed the LTTE as a terrorist organization especially following the 9/11 attacks in 2001 during which a global pledge was made to rid the world of terrorism. The Council of European Union pursuant toUNSC Resolution 1373/2001 formulated the European Union Terrorist List proscribing the LTTE as a terrorist organization up to date. In 2009, the LTTE was brutally annihilated by a resolute military assault by the Sri Lankan state armed forces. Although the LTTE were militarily annihilated, their ideology is promulgated in other ways through an extensive international diaspora and especially warfare in the cyber domain. How Sri Lanka won the war The failure of the peace-talks in 1990, 1995, and 2002 pointed out there was no way to fight against terrorism other than by military means. There were international commentators whom opined war could not be won militarily such as General A.S Kalkat and opposition leader Ranil Wikremasinghe who downplayed and mocked Sri Lanka’s military victories against the LTTE. In 2007, Sri Lankan military victory at Thoppigala was belittled by Wikremasinghe as “nothing to crow about”. Therefore with the election of Mahinda Rajapaksa as the president of Sri Lanka in 2005, appointment of Gotabhaya Rajapaksa as secretary of defense, and several notable military men to head Sri Lanka’s tri-forces, the war was won to the dismay of the skeptics working against Sri Lanka’s national interests. Sri Lanka’s military victory was the result of courageous leadership and a solid grand-strategy. Although 4 percent allocation of the GDP to defense strained fiscal resources, financial assistance was sought from Iran, Libya, Russia and Pakistan. European Union, US and Canada assisted diplomatically by proscribing LTTE as terrorists aiding the government to limit LTTE foreign financing. Sri Lanka’s navy played a key role to cut of LTTE logistical lines and cripple the LTTE Sea Tigers. The intelligence wing of the military was also able to manipulate a defection from within LTTE internal ranks. The defector Karuna Amman was key to obtaining vital information on LTTE command structure and operations. Tamil Ealam Cyber force The LTTE political wing had been active even though the war ended in 2009. Sri Lankan government has been weak in countering the legitimacy of the LTTE claim of the Ealam, ‘Tamil Homeland’ in the cyberspace. The global Tamil community is one of the largest Diasporas in the world. The LTTE cyber strategy is to conduct “cyber-attacks”, use cyberspace for amassing funds, and support ideological propaganda. The LTTE has attempted to deface and hack the government of Sri Lanka’s websites several times. According to cyber security analysts, the virtual Elam that had been created by the post-war new generation of Tamils in exile are formulating new narratives of Ceylonese history portraying a government in exile; a different approach to reclaiming Ealam. Through websites such as www.tamilnation.org, www.eelam.com,www.tamilcanadian.com,www.tamileelamnews.com,www.tamileditors.com,www.eelamweb.com, and www.tamilnet.com  content  is aimed at redefining the notion of state and nation in a technocratic era. Some notable issues that are continuously represented in these website contents are government’s continued militarization of North, accusations of war crimes, government denial of war crimes and issues that denigrate the image of Sri Lanka internationally. A raucous Tamil diaspora According to a study by The International Crisis Group, the interplay between diaspora Tamils and the LTTE is complex and misunderstood. As SharikaThiranagamapoints out “all tigers are Tamil, but not all Tamils are tigers”. It was both state and LTTE violence that forced Tamils to seek political asylum abroad. These Tamils have a strong sense of victimization and injustice with guilt and shame for leaving Sri Lanka when their brethren fell in battle. These sentiments were manipulated by Prabhakaran in the 80s to establish links between LTTE cadres and Tamils in other countries who blended within Tamil communities in Malaysia, Thailand, Singapore, and India while bureaucracies’ in Canada, Norway, Switzerland and Australia were infiltrated. Most funding was stopped by the government in 2009 with the arrest of KP-Selverasa Pathmanathan. Post war, the diaspora is still active and the real danger lies in how diaspora groups alter the history of Sri Lanka which misleads second and third generation of Tamils growing up in foreign countries to mistrust the Sinhalese. Moving forward In retrospect, the battle with virtual Ealam is the biggest and the most difficult war to win. It requires a national, regional and international cybersecurity strategy with experts working together. There are several national agencies for cyber security in Sri Lanka such as Information and Communication Technology Agency of Sri Lanka, Sri Lanka Computer Emergency Readiness Team Coordinating Centre and Air Force Cyber Operations Centre. The government’s Cyber Security Strategy from 2019-2023 is aimed at countering cyber-attacks but much more needs to be done to create counter narratives to LTTE-driven ideology and narratives of virtual Eelam spread across the web and on social media. This article is written by Ms. Nathasha Fernando and Ms. Ayodhya Krishani Amarajeewa.
    • Trump signs order targeting social media giants AFP US President Donald Trump has signed an executive order aimed at removing some of the legal protections given to social media platforms. He said the firms had "unchecked power" to censure and edit the views of users. President Trump has regularly accused platforms such as Twitter and Facebook of stifling conservative voices. The order, which is expected to face legal challenges, comes after Twitter decided to append fact-check labels to two of his tweets this week. On Wednesday Mr Trump accused the company of election interference after it added a warning label to the tweets about claims of widespread fraud in mail-in voting - also known as postal votes. Twitter and other social media platforms strongly condemned the executive order. And early on Friday, Twitter hid one of President Trump's tweets from his profile, saying it violates rules about glorifying violence. What does the executive order say? Under a 1996 law, website operators, unlike traditional publishers, cannot generally be held responsible for content posted by users. The sites are also protected from lawsuits if they block posts deemed obscene, violent "or otherwise objectionable, whether or not such material is constitutionally protected". The executive order argues that this immunity should no longer apply if a social network edits posts, such as by adding a warning or a label.  It also says "deceptive" blocking, including removing a post for reasons other than those described in a website's terms of service, should not be protected. Republican Senator Marco Rubio is among those arguing that the platforms take on the role of a "publisher" when they add fact-check labels to posts. "The law still protects social media companies like Twitter because they are considered forums not publishers," Mr Rubio said. "But if they have now decided to exercise an editorial role like a publisher, then they should no longer be shielded from liability."  The executive order also calls for the Federal Communications Commission (FCC) to spell out what type of content blocking will be considered deceptive or inconsistent with a service provider's terms and conditions. What effect will the order have? Donald Trump promised "big action" in response to Twitter's decision to append a fact-check message to two of his posts. While his announcement of an executive order was heavy on rhetoric - accusing social media companies of being monopolies that threaten free speech - it will be a long process before the talk turns into real action, big or otherwise. Independent government agencies will have to review federal law, promulgate new regulations, vote on them and then - in all likelihood - defend them in court. By the time it's all over, the November presidential election could have come and gone. That explains why Trump is also pushing for new congressional legislation - a more straightforward way of changing US policy toward social media companies. The real purpose of the president's order, however, may be symbolic. At the very least, the move will cause Twitter to think twice about attempting to moderate or fact-check his posts on their service.  The president relies on Twitter to get his message out without filtering from the mainstream media. If Twitter itself start blunting one of his favourite communication tools, he is sending a message that he will push back - and make things, at a minimum, uncomfortable for the company. How have the social networks responded? Twitter called the order "a reactionary and politicized approach to a landmark law,"adding that Section 230 "protects American innovation and freedom of expression, and it's underpinned by democratic values". Google, which owns YouTube, said changing Section 230 would "hurt America's economy and its global leadership on internet freedom." "Our platforms have empowered a wide range of people and organizations from across the political spectrum, giving them a voice and new ways to reach their audiences," the firm said in a statement to the BBC. In an interview with Fox News on Wednesday, Facebook's chief executive, Mark Zuckerberg, said censoring a social media platform would not be the "right reflex" for a government concerned about censorship. "I just believe strongly that Facebook shouldn't be the arbiter of truth of everything that people say online," said Mr Zuckerberg. What sparked the latest row? The long-running dispute between Mr Trump and social media companies flared up again on Tuesday, when two of his posts were given a fact-check label by Twitter for the first time. He had tweeted, without providing evidence: "There is no way (zero) that mail-in ballots will be anything less than substantially fraudulent." Twitter added a warning label to the post and linked to a page describing the claims as "unsubstantiated". Then on Wednesday, Mr Trump threatened to "strongly regulate" social-media platforms. He tweeted to his more than 80 million followers that Republicans felt the platforms "totally silence conservatives", and that he would not allow this to happen.  In an earlier tweet, he said Twitter was "completely stifling free speech". Twitter's chief executive, Jack Dorsey, responded to criticism of the platform's fact-checking policies in a series of posts, saying: "We'll continue to point out incorrect or disputed information about elections globally."   58.7K people are talking about this       Report Twitter has tightened its policies in recent years, as it faced criticism that its hands-off approach allowed fake accounts and misinformation to thrive.
    • What is the BNO and what does the UK move mean? Getty Images Around 300,000 in Hong Kong hold a British National (Overseas) passport The UK has said it is considering more rights for holders of a special passport issued to some people in Hong Kong. The territory, which used to be a British colony, was handed back to China in 1997. Anyone born before then is eligible to apply for a British National (Overseas) passport, known as a BNO. If China implements a controversial proposed security law, people holding the BNO, could get a "path to citizenship", the UK said. What is the BNO and who has one? The BNO passport is essentially a travel document that does not carry citizenship rights with it - although you are entitled to some consular assistance outside of Hong Kong and China with it.  It was issued to people in Hong Kong by the UK before Hong Kong was handed over to China. Around 300,000 people currently hold a BNO passport, allowing them to visit the UK visa-free for six months. An estimated 2.9 million people are eligible for a BNO passport, said the British Consulate General in Hong Kong.  Though it gives the passport holder the right to remain in the UK for up to six months, it doesn't automatically allow them to reside or work there. They also aren't allowed to access public funds, including things like government benefits. BNO holders cannot pass this status on to their children. What is the UK proposing - and why? China on Thursday formally approved a plan to impose controversial national security legislation in Hong Kong. It could go into effect as early as the end of June. Hong Kong was handed back to China, on a number of conditions. These include the region's high level of autonomy and maintaining certain rights like freedom of speech that do not exist in mainland China. China's new law: Why is Hong Kong worried? How is Hong Kong run? US and allies defend HK as 'bastion of freedom' But this new plan, if put into law, would make it a crime to undermine Beijing's authority in Hong Kong, and many are concerned it could end Hong Kong's unique status. The move triggered a wave of criticism around the world, with many - including Chris Patten, the last governor of Hong Kong - urging the UK to stand up for the territory.  Under current rules, BNO holders are allowed to stay for six months Later on Thursday, UK Foreign Secretary Dominic Raab said the country would move to scrap the six-month stay limit for BNO holders if China goes on to officially implement the law.  Mr Raab said that BNO passport holders would be allowed to "apply to work and study for extendable periods of 12 months and that will itself provide a pathway to future citizenship". What difference could it make? As a way to help people in Hong Kong who would rather not stay there if the new security laws are implemented, it might prove more symbolic. For starters only a small percentage of people in Hong Kong currently have a BNO. But also, the people who the security laws are aimed at - the young anti-mainland protesters who have been getting into violent confrontations with police for months - are not likely to be eligible for the BNO because of their age. Additionally, though the BNO gives the passport holder the right to visit the UK for up to a year potentially, it's not clear what other benefits the extension might bring, or if the UK would make it any easier administratively for those already in the country to apply for work or study.  On social media, some Hong Kongers dismissed it as a gesture that amounted to little more than a 12-month tourist visa.  Effectively, it means that those who come to stay in the UK for a year, and who have the funds to be able to extend this enough, could eventually be eligible to apply for citizenship.  It cuts out some of the administrative hoops BNO holders would have had to jump through before this move if they wanted this path. How has China reacted?  China has firmly opposed the move by the UK, saying it is a violation of the handover agreement that stipulates BNO passport holders do not enjoy UK residency. China has repeatedly warned Britain to stay out of its affairs in Hong Kong.  The Chinese ambassador to the UK Liu Xiaoming had previously accused some British politicians of viewing Hong Kong "as part of the British empire".