Jump to content

கண் பாதுகாப்பு....


Recommended Posts

pg9t0vm.jpg

நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள, பார்க்க, தெரிந்துகொள்ள நமது இருவிழிகள் தான் முக்கிய காரணமாகின்றன. இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது? 10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் தாய் _தந்தையரே முதற்காரணம். அடுத்து சத்துக் குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத்துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு நோய் முற்றிய உடன் கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண்சம்பந்தமாக பல வகையான நோய்கள் வருகின்றன.

முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்

கிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல், கண்ணில் நீர்வடிதல், மாலைக்கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால், அதன் மூலமாக வரும் தலைவலி, தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கண்ணில் நோய் வரக் காரணமென்ன?

முதலில் கூறியது போல ஆரோக்கியம் இல்லாமல் குழந்தைகளைப் பெறும் பெற்றோர் ஒரு காரணம். சத்துக் குறைவான உணவுகளை சாப்பிடுவதாலும் வரலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டாலும் கண்நோய்கள் வரும். பார்வை நரம்பில் ஏற்படும் இரத்தக்குறைவு, இரத்த ஓட்டம் தடைபடுதல், இரத்த அழுத்தம் குறைவு காரணமாகவும் கண்கோளாறுகள் வரலாம். பரம்பரைக் காரணமாகவும் கண் கோளாறுகள் வரலாம். தொற்று நோய்க் கிருமிகள், காற்றில் வருகின்ற கிருமிகள், தூசி, தீ போன்றவற்றாலும் கண் நோய்கள் வரலாம்.

உணவு வகைகளில் கண்களைப் பாதுகாக்க...

வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுகளுக்கு கேரட், பீட்ரூட், வெண் பூசணி, முள்ளங்கி, வெண்டைக்காய், நாட்டுத் தக்காளி, பசும்பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, இவைகளில் ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பிடலாம்.பழ வகைகளில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, மாதுளை, ஆப்பிள், பேரீச்சம் பழம், நெல்லிக்காய் சாப்பிடலாம்.அசைவ உணவில் மீன் எண்ணெய் மட்டும் சாப்பிடலாம்.

சத்துக் குறைவால் கண் நோய்கள் நீங்க...

சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட் சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இருவேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண்டும்)

பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு பனங்கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.

புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம்.

கண்பார்வை தெளிவடைய...

பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.

அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.

பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.

குமுதம்

Link to comment
Share on other sites

கண்ணனியில் கவனமா????தேவை கண் கவனம்!!

ஒரு நாளைக்கு தொடர்ந்து எட்டுமணி நேரம் கணினியைப் பார்க்கும் வகையில் நம் கண்கள், பரிணாம வளர்ச்சியில், படைக்கப்பட்டிருக்கவில்லை.

சிலருக்கு தூரத்தில் இருக்கும் எழுத்துக்கள் தெளிவாக தெரியும். ஆனால், புத்தகத்தை எடுத்தால் அவற்றில் உள்ள எழுத்துக்கள் மங்கலாக தெரியும். வேறு சிலரோ புத்தகங்களை, மூக்குக்கண்ணாடியின் உதவியின்றி அநாயாசமாகப் படிப்பார்கள். ஆனால், தூரத்தில் பேருந்து வரும்போது "அது என்ன பஸ்? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க" என்று பக்கத்தில் நிற்பவரிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டிய கட்டாயம்.

இப்படித்தான் கணினி தொடர்பான கண்கள் குறைபாடுகளும். ஆனால் அவை கொஞ்சம் வேறுபட்டவை.

பொதுவாக கணினித் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் கண்பார்வை பாதிக்கப்படுவதில்லை. ஆனால் கண்களுக்குக் களைப்பு ஏற்படுகிறது.

சிலருக்கு கணினியைத் தொடர்ந்து பார்ப்பதால் கண்கள் ஈரத்தன்மையை இழந்து உலர்ந்து விடுகின்றன. இதற்கும் நேரடியான காரணம் கணினி அல்ல. தொடர்ந்து கணினித் திரையை பார்க்கும்போது, நாம் வழக்கமான வேகத்தில் கண்களை சிமிட்ட மறந்துவிடுகிறோம். இதன் காரணமாகத்தான் ஏற்கெனவே கொஞ்சம் உலர்ந்த கண்கள் கொண்டவர்களுக்கு அந்த சிக்கல் பெரிதாகிறது.

இதற்காக சில சொட்டு மருந்துகள் விற்கின்றன. மருத்துவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொண்டு இவற்றை பயன்படுத்தலாம்.

சிலர் மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பார்கள். இவர்களால் புத்தகத்தையும் எளிதில் படிக்க முடியும். தூரத்தில் உள்ள எழுத்துக்களையும் நன்கு வாசிக்க முடியும். ஆனால் கணினித் திரையில் மின்னும் எழுத்துக்கள் மட்டும் இவர்களுக்குத் தெளிவாகத் தெரியாது. இதற்கென்றே (இந்த அளவு தூரத்தைத் துல்லியமாக பார்ப்பதற்கென்றே) தனி பவர் கொண்ட கண்ணாடிகளை கண் மருத்துவர் பரிந்துரைப்பார். அதை வாங்கி அணிந்து கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்.

பொதுவாக கணினியைப் பயன்படுத்துபவர்கள் கீழே உள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடித்தால் கண்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கலாம்.

* கணினியின் முன் உட்கார்ந்திருக்கும்போது அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள்.

* கணினித் திரை உங்களிடமிருந்து சுமார் ஒன்றிலிருந்து ஒன்றரை அடிவரை தள்ளியே இருக்கட்டும்.

* திரையை (மானிட்டரை) உங்கள் பக்கமாக 15 டிகிரி கோணத்தில் சாய்த்துக் கொள்ளுங்கள். திரையின் மேல் பகுதி உங்கள் பார்வைமட்டத்துக்கு நேராக இருக்கட்டும்.

* தொடர்ந்து இருபது நிமிடங்களுக்குக் கணினியைப் பயன்படுத்தினால் நடுவே இரண்டு நிமிடங்களுக்காவது பார்வையை வேறு எங்காவது செலுத்துங்கள்.

கணினியின் பயன்களும், அவற்றை பயன்படுத்தும் நேரமும் அதிகமாகிக் கொண்டே போகும் காலம் இது. எனவே, மேற்கூறிய ஆலோசனைகளை மனதில் கொண்டு உங்கள் கண்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். :wink:

நன்றி குமுதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயனுள்ள தகவல்களைத் தந்தமைக்கு நன்றி ப்ரியசகி.

"எண்சாண் உடம்பிற்கும் சிரசே பிரதானம்" என்பது பழமொழி. அதிலே கண்களே பிரதானம் என்பது பொதுமொழி.

Link to comment
Share on other sites

பிரியா கண் பாதுகாப்பு பற்றிய தகவலை இங்கு இணைத்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயனுள்ள தகவல்களை

தொகுத்துத் தந்தமைக்கு நன்றி சகி :lol:

Link to comment
Share on other sites

மிக்க நன்றி ப்ரியசகி...

எம் போன்றோர்க்கு மிகவும் பயனுள்ள தகவல்கள். ஆனால் கண்ணின் இரத்தன்மைக்காக பாவிக்கப்படும் மருந்தினால் ஒரு வித பக்க விளைவுகள் வருகின்றது என்று கேள்விப்பட்டேன். உண்மையா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

கணினியின் முன் உட்கார்ந்திருக்கும்போது அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள்

ஏன்பிள்ளை நான் வீட்டிலை 3 தரமும் சாப்பிடுறது உங்களுக்கு கண்ணுக்கை குத்துதோ........... இப்பிடி சிமிட்டிப் பழகி றோட்டிலை போகேக்கையும் பழக்கத்திலை வந்திட்டா ...............நினைக்கவே பயமாக்கிடக்கு.......

Link to comment
Share on other sites

. ழூ தொடர்ந்து இருபது நிமிடங்களுக்குக் கணினியைப் பயன்படுத்தினால் நடுவே இரண்டு நிமிடங்களுக்காவது பார்வையை வேறு எங்காவது செலுத்துங்கள்

இது சரியான ஆலோசனைதான் .ஆனால்

இது என்ன?:* கணினியின் முன் உட்கார்ந்திருக்கும்போது அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள்.

நாங்கள் நினைக்காட்டிலும் கண் தானாய் சிமிட்டும் தானே.

அதை விட அடிக்கடி கண்ணை சிமிட்டிகொண்டு வாசிச்சால் யாழ் களம் எண்டது யாழ் குளம் எண்டுதான் தெரியும். அதாவது சிந்தனை கண்ணை சிமிட்டுவதிலேயே பெரும்பாலும் இருக்கும் நாங்கள் வாசித்து கொண்டு இருக்கும் விடையத்தை விட எண்டு சொல்ல வந்தன். 8)

தகவலுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

ஓம் அங்கிள்.. :D அதுசரி இன்னும் எவ்ளோ டிப்ஸ் இருக்கே..அதை தெரிவு செய்யுங்களன்..ஏன் வில்லங்கமானதையே எடுக்கிறீங்கள்..என்ன சரியா? பிறகு பிரியசகியால நீங்கள் பட்டினியாக இருந்ததாக ஆகக்கூடாது பாருங்கோ அதுக்கு சொல்றேன்.. :wink: :P

அத்தோடு வர்ணன்...நீங்கள் சொன்னது சரியே..நான் நினைக்கிறேன்..நோர்மலா கண் சிரிமிட்டுவதை விட்ட கூடத்தடவை சிமிட்டுவதை அவர்கள் குறிக்கிறார்கள் என்று..இப்போ கொஞ்ச நேரம் கண்ணனியை விட்டு வேறு பக்கம் பார்த்து சிமிட்ட வேண்டும் என்று..அப்போது கண்களின் நரம்புகளுக்கு ஒரு எக்செர்சைஸ் போல இருக்கும் போல.. :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயனுள்ள தகவல்களை

தொகுத்துத் தந்தமைக்கு நன்றி சகி அக்கா :P

Link to comment
Share on other sites

படிக்கும் போதும் வேலையிலும் வீட்டிலும் என்று பெரும்பாலான நேரத்தை கணணி திரைக்கு முன்னால் செலவிடுவதால் கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருக்கின்றேன். அதுவும் குறிப்பாக இரவில் வீடுகளில் வேறு வெளிச்சம் ஏதுமில்லாமல் கணணி திரையில் வெளிச்சத்தை மட்டுமே வைத்து கணணியை பாவிக்கும் போது பாதிப்பு மிக மிக அதிகமாக இருப்பதுடன் தலைவலியும் ஏற்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாவின் அன்பு தொல்லையால் லைட்டை ஓப் பண்ணிவிட்டு இருக்கவேண்டி இருக்கே.. :roll:

Link to comment
Share on other sites

அப்பாவின் அன்பு தொல்லையால் லைட்டை ஓப் பண்ணிவிட்டு இருக்கவேண்டி இருக்கே.. :roll:

:(:(:(:(:(

நமக்கும் அதுதான்பா

:(:(:(:(:(

Link to comment
Share on other sites

ஆகா பார்க்க போனா பலருக்கு இதே பிரச்சனை தான் போலிருக்கு. இப்படி லைட்டை ஓவ் பண்ணிட்டு கணனி பார்த்து கொஞ்ச நாள் கடும் தலைவலி வந்து கவனம்.

Link to comment
Share on other sites

இவ்வளவு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு.

ஒரு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டே கணணி பாவியுங்கள்! இரவிலும்!

போயே போச்சு ! கவலை!

இற்ஸ் கோன்..!! 8) :சழடட:

Link to comment
Share on other sites

இவ்வளவு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு.

ஒரு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டே கணணி பாவியுங்கள்!  இரவிலும்!

போயே போச்சு ! கவலை!

இற்ஸ் கோன்..!! 8)  :சழடட:

ஆகா...பாருங்கோ எவ்ளோ சூப்பர் ஐடியா தாறார் எண்டு...அருவி, விஷ்ணு அண்ணா, ..எல்லோரும் இதையே செஞ்சுடுங்கோ..பிச்சுக்கும் :roll: :roll: :wink:

Link to comment
Share on other sites

படிக்கும் போதும் வேலையிலும் வீட்டிலும் என்று பெரும்பாலான நேரத்தை கணணி திரைக்கு முன்னால் செலவிடுவதால் கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருக்கின்றேன். அதுவும் குறிப்பாக இரவில் வீடுகளில் வேறு வெளிச்சம் ஏதுமில்லாமல் கணணி திரையில் வெளிச்சத்தை மட்டுமே வைத்து கணணியை பாவிக்கும் போது பாதிப்பு மிக மிக அதிகமாக இருப்பதுடன் தலைவலியும் ஏற்படுகின்றது.

கண்கள் சோர்வடைவதற்கு...தோடம்பழச்சாற

Link to comment
Share on other sites

அத்தோடு தோடம் பழ தோலை கண்ணுக்கு கொஞ்ச நேரம் வைத்திருந்தால் நல்லதென்றும் வாசித்திருக்கிறேன்.

பிள்ளை சின்ன டவுட் ஒண்டு கண்ணாடியை கழட்டிப் போட்டு வைக்கவேணுமா??? அல்லது அப்பிடியே கண்ணாடிக்கு மேலையே வைச்சாக் காணுமா..............டென்சன் ஆகாம சொல்லுங்கோ

Link to comment
Share on other sites

- குறைந்தது 8 மணி நேரமாவது ஆழ்ந்த உறக்கம் வேண்டும். தூங்கும் போது எந்த மன உளைச்சல்கள் இல்லாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நல்ல தூக்கத்திற்கு படுக்கும் முன் பாலில் தேன் கலந்து குடிக்கலாம்.

- மனதையும் உடலையும் டென்சன் அல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

- வெள்ளரிக்கய்,(கும்கும்பரையும

Link to comment
Share on other sites

பிள்ளை சின்ன டவுட் ஒண்டு கண்ணாடியை கழட்டிப் போட்டு வைக்கவேணுமா??? அல்லது அப்பிடியே கண்ணாடிக்கு மேலையே வைச்சாக் காணுமா..............டென்சன் ஆகாம சொல்லுங்கோ

அங்கிள்..கடைசியா சொன்ன வார்த்தைக்காக பேசாமல் இருக்கேன்...:lol:

நீங்கள் கண்ணுக்கா இல்லை கண்ணாடிக்கா புத்துணர்ச்சி கொடுக்கப்போறீங்கள்..அதை யோசிச்சிட்டு எதுக்கு செய்யணுமோ அதுக்கு மேல வையுங்கோ..

கஷ்டம்னா சொல்லுங்கோ...ஆன்டிக்கிட்ட விளக்கமா சொல்ல் ஆனுப்புறேன் :wink: :P

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.