-
Tell a friend
-
Topics
-
0
By உடையார்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By உடையார் · பதியப்பட்டது
யாழ் – கொழும்பு ரயில் சேவைகள் வழமைக்கு – முன்பதிவுகளையும் மேற்கொள்ள முடியும் 5 Views நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நீண்ட தூர ரயில் சேவைகள், நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு ரயில்கள் நேற்று புறப்பட்டன. காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் உத்தரதேவி கடுகதி ரயிலும் காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 மணிக்கு புறப்படும் யாழ்.தேவி ரயில் சேவையும் நேற்று ஆரம்பமாகின. அவ்வாறே கல்கிசையில் இருந்து காலை 5.55 மணிக்கும் கொழும்பிலிருந்து 6.35 மணிக்கும் புறப்படும் யாழ்.தேவி ரயிலும் முற்பகல் 11.50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி ரயிலும் நேற்று சேவையை ஆரம்பித்தன. ஏனைய ரயில் சேவைகள் எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும். கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட ரயில் மற்றும் இரவு தபால் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன. பொதுமக்கள் வழமைபோன்று ஆசனங்களை யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும். அத்தோடு உங்களுக்கு தேவையான ஏதாவது விவரங்களுக்கு 021- 222 2271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும். பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, ரயிலில் பயணத்தை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். https://www.ilakku.org/?p=39705 -
நீதியின் தோல்வி – சர்வதேச மன்னிப்புச்சபை 29 Views தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உட்பட நால்வரும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை கைவிடுவதாக தெரிவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பது நீதியின் தோல்வி என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்காக நீதியை வழங்குவதற்கு இலங்கை அதிகாரிகள் தவறியுள்ள இன்னுமொரு கவலை தரும் மைல்கல் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்த கொலை வழக்கு குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிப்பது குறித்தஆர்வம் எதனையும் சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/?p=39697
-
By உடையார் · பதியப்பட்டது
இணைத்தலைமை குழுவில் இணையப்பேவதில்லை – சிறீலங்கா 17 Views எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை முன்வைப்பதற்கு பிரித்தானியா, மொன்ரோநீக்குரோ, வடமசடோனியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் இணைந்து கொள்ளப் போவதில்லை என சிறீலங்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தாம் அதனை நிராகரித்து விட்டதாகவும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. நாம் எதிர்க்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக நாம் இணைந்து கொள்வது அரசியலில் சவாலானது என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/?p=39691 அரசுக்கு இம்முறை ஜெனிவா பெரும் சவாலாகவே இருக்கும் – ரோஹித போகொல்லாகம 6 Views ஜெனிவா பெரும் சவாலாக இருக்கப்போகிறது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- “விடுதலைப் புலிகளுடனான தங்கள் தொடர்புகள் காரணமாக களங்கப்பட்ட பலர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை பெற முயல்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையி அமர்விற்கு முன்னதாக ஒருங்கிணைந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன. நான்கு தமிழ்க் கட்சிக் கூட்டணி சிவில் சமூகத்தவர்களின் ஆதரவுடன் இலங்கை தொடர்பான சர்வதேச பொறுப்புக் கூறும் பொறிமுறைக்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது. இதனை உரிய முறையில் எதிர்கொள்ள வேண்டும். பயங்கரவாத மரபு சார்ந்த இராணுவ வழிமுறைகள் மூலம் ஈழத்தை பெறுவதற்கான தங்களின் முயற்சியில் தோல்வியடைந்தவர்கள், நாட்டை இன அடிப்படையில் பிரிப்பதில் இன்னமும் நம்பிக்கொண்டுள்ளவர்கள் சர்வதேச தலையீட்டை கோருகின்றனர். சர்வதேச தலையீடுகள் குறித்து தீவிரமாக உள்ளவர்கள் பொறுப்புக் கூறும் விடயத்தை பயன்படுத்தி அரசியல்செய்யவேண்டாம். இலங்கை 2009 இல் யுத்தத்தை வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டு வந்துள்ளது. வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளும் படி தமிழ்தேசிய கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் கட்டாயப்படுத்தியமையை அந்த கட்சி மறந்துவிட்டது. நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள். புதிய தீர்மானம் கொண்டுவரப்படுவது நிச்சயம் என்பதால் இலங்கை மேலும் தாமதிக்காமல் நிலைமை குறித்து ஆராய்வது முக்கியமானது. இங்கிலாந்தின் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ள விடயங்களையும் விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள விடயங்களையும் இலங்கை தனக்கு சார்பாக வாதிடுவதற்காக பயன்படுத்தவேண்டும். வன்னி போர்முனையில் யுத்தத்தை நடத்துவதற்கு பிரிட்டனும் பிரான்ஸ_ம் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் அவர்கள் இந்த விடயத்தில் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தின. 2013 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக அரசியலுக்கு வந்த விக்னேஸ்வரன் அந்த கட்சியி லிருந்துவிலகியுள்ளபோதிலும் அவர் ஜெனிவா குறித்த பொது நிகழ்ச்சிநிரலின் அடிப் படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் இணைந்து செயற்படுகின்றார். ஜெனிவா பெரும் சவாலாகக் காணப்படப்போகின்றது. இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறலை விட மேற்குலக நாடுகளின் உண்மையான நலன்களும் நோக்கங்களும் பரந்துபட்டவை” என்றார். https://www.ilakku.org/?p=39700 -
By உடையார் · பதியப்பட்டது
ஸ்கொட்லாந்து அரசின் ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழன் – டாக்டர் வரதராஜா 194 Views ஸ்கொட்லாந்தின் தேசியக் கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்படும் மனிதநேய விருதுக்கு ஈழத்து டாக்டர் வரதராஜா துரைராஜா உட்பட மூன்று பேர் 2021ஆம் ஆண்டிற்கான விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது மூன்றரை இலட்சம் மக்கள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்ட போது, எந்தவித உதவிகளும் இல்லாத போது டாக்டர் வரதராஜா பணியாற்றி பலரின் உயிரைக் காப்பாற்றினார். அந்தத் தாக்குதல் பற்றி இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும், கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கிக் கூறி, எத்தகைய அவலம் அங்கு நடைபெற்றது என்பதை உலகத்திற்கு அவர் எடுத்துரைத்தார். இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பலகாமம் என்ற சிறிய கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட புகழ்பெற்ற மருத்துவ கலாநிதி, வரதராஜா துரைராஜா அவர்களும் இந்த விருதிற்கு தெரிவாகி இருப்பது என்பது தமிழ் பேசும் ஒவ்வொருவருக்கும் மேலும் மனிதாபிமானத்தைப் போற்றும், அநீதிக்கு எதிராக போராடும் அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். யுத்த வலயத்தில் பொது மக்களுடன் இரவும், பகலும் தங்கியிருந்து உழைத்து, அவசரகால முதலுதவி மற்றும் உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்ட சில மருத்துவர்களில் இவரும் ஒருவர். மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் குறைந்த மருத்துவப் பொருட்கள் மூலம் மருத்துவ கலாநிதி வரதராஜா மற்றும் அவரது ஊழியர்கள் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினர். யுத்தம் தீவிரமடைந்த போது, ஆரம்பத்தில் தனி ஒரு வைத்தியராக வாகரையில் மிகுந்த உயிர் அச்சுறுத்தலிலும் இரவும், பகலும் கடமையாற்றிய அவர், வாகரைப் பகுதியை இலங்கை அரச படைகள் கைப்பற்றிய பின்பு வன்னிக்குச் சென்று மீண்டும் சேவை புரிந்தார். இடம்பெயர்ந்த மக்களோடு மக்களாக சென்ற அவர், தொடர்ந்து தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்தி தன்னுயிரையும் துச்சமென எண்ணி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு தன்னிகரற்ற சேவை புரிந்தார். யுத்தம் முடியும் வரை அவர் பொது மக்களுடன் இருந்தார். இறுதியில் அவரே காயமடைந்து அரசாங்கப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டார். உயிராபத்தை ஏற்படுத்திய காயங்களுடன் பல நாட்கள் சிகிச்சை அளிக்கப்படாது, விசாரணை என்ற பெயரில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார். சர்வதேச அழுத்தம் காரணமாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், இலங்கை அரசின் தொடர்ச்சியான உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தார். அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்காய் குரல் கொடுத்து வருகின்றார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கொரி ஜெனீவா, கனடா, ஜேர்மனி, லண்டன், தென்னாபிரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் சென்று குரல் கொடுத்து வருகின்றார். 2017ஆம் ஆண்டில் ஒட்டவாவில் மருத்துவ கலாநிதி திரு வரதராஜா துரைராஜா சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து மறைந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் கண்காணிப்பளருமான பால் தேவர் அவர்கள் டாக்டர் வரதனை “ஒரு செல்வாக்கு மிக்க மனித உரிமைப் பாதுகாவலராக, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழும் போது பல உயிர்களை காப்பாற்றியது மட்டுமல்லாமல், தனக்கு உயிராபத்து ஏற்பட்ட பொழுதும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மருத்துவத்தைக் கடைப்பிடித்தார்” என்று பாராட்டினார். ‘பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு குறிப்பு’ (‘Note From The No Fire Zone’) என்ற தலைப்பில் அவரது நினைவுக் குறிப்புகள் 2019 மே மாதம் வெளியிடப்பட்டது. அத்துடன் முள்ளிவாய்க்கால் அவலங்களை பிரதிபலிக்கும் வகையில் ‘பொய்யா விளக்கு’ என்ற ஆவணப்படமும் அவரது நடிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மீண்டும் தனது மருத்துவ பயிற்சியைத் தொடர முயற்சித்துக் கொண்டிருக்கும் அவர், மோதல் பகுதிகளில் பொது மக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உள்நாட்டுப் போரில் பாதிக்கப்ட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு வருவதற்கும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றார். இவ்விருது குறித்து மருத்துவ கலாநிதி திரு வரதராஜா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அற்புதமான விருதுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எனது மருத்துவ அனுபவங்களால் நான் ஒரு மனித உரிமை ஆர்வலர் ஆனேன். நான் ஒரு மருத்துவரான போது அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்த யுத்த வலயப் பகுதிகளில் பணியாற்ற விரும்பினேன். சமூகத்திற்கு நான் செய்த சேவைகளை அங்கீகரித்து எனக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் மது அடிமைகளை மீட்கும் நாடகக் குழுவை நடத்தி வரும் மார்க் வில்லியம்ஸன், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் புற்றுநோய் சிகிச்சை அளிப்பதோடு நிக்கரகுவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் உள்ள டாக்டர் அலெக்ஸான்டர் பற்றர்சன் ஆகியோரும் இந்த விருதிற்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் உள்ளனர். இம்மாதக் கடைசியில் விருது அறிவிக்கப்பட உள்ளது. https://www.ilakku.org/?p=39679
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.