Jump to content

காலிரண்டையும் இழந்த பெண்போராளியின் சொந்தக்கதை


Recommended Posts

naval.png

காலிரண்டையும் இழந்த பெண்போராளியின் சொந்தக்கதை.

“காதல் களம் கணவன் கடைசிக்கனவு“ இதுவொரு குறுநாவலுக்கான தலைப்பு. இக்கதையானது ஒரு முன்னாள் பெண் போராளியின் வாழ்வு. அவள் போராளியானது முதல் 2009மே 17சரணடையும் வரை வாழ்வில் அனுபவித்த துயரங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். தனது வாழ்வைப் பதிவுசெய்யும் உரிமையைத் தந்து தனது வாழ்வை என்னூடாகப் பதிய வைத்துள்ளாள்.

2006 செஞ்சோலை வளாகத்தில் நிகழ்ந்த விமானக்குண்டு வீச்சில் காயமடைந்து இரு கால்களையும் இழந்து போய் முகத்திலும் காயங்களோடு வாழும் அன்பினியை அவளது குடும்பமே விலக்கி வைத்திருக்கிறது. அன்பினி தனித்து வாழ்கிறாள். அவளுக்கான நம்பிக்கை நிறைந்த வாழ்வை ஒளியேற்றி வைப்பதாகப் பலர் அவளது வாழ்வில் புகுந்தனர். ஒருவன் காதலனாக இன்னொருவன் கட்டாயக்கணவனாக இன்னும் சிலர் அவளது ஊனத்தைக் காரணம் காட்டி இரகசிய மனைவியாக்கவும் இம்சித்தார்கள்.

இத்தகைய எல்லா வகையான சுமைகளையும் தாங்கிக் கொண்டு செயற்கைக்காலின் நம்பிக்கையோடு ஆறாத மனக்காயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். 25வயது நிரம்பிய இவளின் வாழ்வு போல் ஊரில் பல்லாயிரம் பெண் போராளிகளின் சாதாரண பெண்களின் வாழ்வு சிதைந்து கொண்டிருக்கிறது. தனது கதையினூடாகப் பலரது வாழ்வைப் புரிவிக்க முயன்றுள்ளாள்.

இக்கதையின் கதைசொல்லியாகவே நான் இருக்கிறேன். ஆனால் கதையோடு உலவும் அன்பினியின் வாழ்வு அவளது சொந்த வாழ்வு. அவளது காதல் முதல் களம் , கணவன் கடைசிக் கனவு வரையிலும் அவளது வாழ்வும் துயரமும் நிரம்பி வழிகிறது.

2009மே17 சரணடைந்தவள் 2011மே17இல் தனது வாழ்வை மையப்படுத்திய இக்கதையை வெளியில் கொண்டு வருமாறு வேண்டியிருக்கிறாள். அவளது ஆசைப்படி 2011மே17அன்று அன்பினியென்ற பெயரில் உலவும் இக்கதைக்குரியவளின் அனுபவங்களை வெளியிடவிருக்கிறேன். ஆனால் கடதாசியில் அச்சிட்டு நூல்வடிவமில்லாமல் இணைய நூலாக உங்கள் முன் கொண்டு வருகிறேன்.

நாங்கள் வெளியில் இருந்து இலக்கியம் படைத்த போராட்டம் களம் களமாடிய மனிதர்களின் குணங்கள் அட இப்படியுமா என வெறுப்புத் தருகின்றனவான பல சம்பவங்கள் அன்பினியோடு பிணைந்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து நாங்கள் இன்னும் கனவுகாணும் உலகத்தை முற்றாக வெறுக்கிறவளாக அன்பினியும் அன்பினி போன்ற ஆயிரமாயிரம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கிற உண்மையை இவளோடும் இவள் போன்றவர்களோடும் பேசுகிற அவர்கள் பகிர்கிற விடயங்களிலிருந்து புரிய முடிகிறது.

தனது கதைக்குத் தானே முன்னுரையும் தந்து தனது கதையை உலகத்தமிழர்களிடம் சேர்ப்பிக்கும் உரிமையைத் தந்திருக்கும் இவள் மீது கனவுகளில் வாழும் மனிதர்களே கல்லெறியாதீர்கள். அவளது மனதில் ஆறாது எரியும் காயங்களுக்கு உதவ முடிந்தால் உங்கள் நேசக்கரத்தை நீட்டுங்கள்.

2011மே17 வரை காத்திருங்கள்…….

Link to comment
Share on other sites

தொடருங்கள் ..

வெளிநாடுகளிலிருந்து நாங்கள் இன்னும் கனவுகாணும் உலகத்தை முற்றாக வெறுக்கிறவளாக

அது சரி நாங்கள் காணும் கனவு என்ன?எங்கள் மீது நீங்கள்(அன்பினி அல்ல) வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

Link to comment
Share on other sites

தொடருங்கள் ..

அது சரி நாங்கள் காணும் கனவு என்ன?எங்கள் மீது நீங்கள்(அன்பினி அல்ல) வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

Jil நான் எந்தக் குற்றச்சாட்டையும் உங்கள் மீது வைக்கவில்லை. இன்னும் ஒரு மாதம் பொறுத்திருங்கள் அன்பினியின் கதையில் அவள் என்னத்தைச் சொல்லியிருக்கிறாள் என்பதன் பின்னர் குற்றங்களைக் கண்டுபிடிக்கலாம். :lol:

இக்கதையின் கதைசொல்லியாகவே நான் இருக்கிறேன். :blink: ஆனால் கதையோடு உலவும் அன்பினியின் வாழ்வு அவளது சொந்த வாழ்வு. அவளது காதல் முதல் களம் , கணவன் கடைசிக் கனவு வரையிலும் அவளது வாழ்வும் துயரமும் நிரம்பி வழிகிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய எல்லா வகையான சுமைகளையும் தாங்கிக் கொண்டு செயற்கைக்காலின் நம்பிக்கையோடு ஆறாத மனக்காயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். 25வயது நிரம்பிய இவளின் வாழ்வு போல் ஊரில் பல்லாயிரம் பெண் போராளிகளின் சாதாரண பெண்களின் வாழ்வு சிதைந்து கொண்டிருக்கிறது. தனது கதையினூடாகப் பலரது வாழ்வைப் புரிவிக்க முயன்றுள்ளாள்.

முல்லைமண்! இதனால் அன்பினி அடையப் போவது என்ன? சமுதாயத்தில் புரையோடிப் போன புண்களை ஏன் மீண்டும் கிளருகின்றாள்? அனுதாபம் தேடவா? அல்லது இந்தச் செயலைச் செய்தவர்களைப் பழிவாங்கவா?

நதிமூலமும் ரிஷிமூலமும் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள்.ஏனெனில் அதைப் பார்த்தால் நதியையும் ரிஷியையும் மதிக்க மாட்டீர்கள்.யாரோ தறிகெட்ட சில பேர் அவளின் இயலாமையைப் துஷ்பிரயோகம் செய்ததற்காக முழு இனத்தையும் நோக்கி உங்கள் சுட்டி விரலை நீட்டும் காரியங்களைச் செய்யாதீர்கள்.எங்கள் வீட்டுக் குப்பைகளை வீதிக்குக் கொண்டு வருவது,எங்களை மேலும் பலவீனப் படுத்தும்.

Link to comment
Share on other sites

முல்லைமண்! இதனால் அன்பினி அடையப் போவது என்ன? சமுதாயத்தில் புரையோடிப் போன புண்களை ஏன் மீண்டும் கிளருகின்றாள்? அனுதாபம் தேடவா? அல்லது இந்தச் செயலைச் செய்தவர்களைப் பழிவாங்கவா?

நதிமூலமும் ரிஷிமூலமும் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள்.ஏனெனில் அதைப் பார்த்தால் நதியையும் ரிஷியையும் மதிக்க மாட்டீர்கள்.யாரோ தறிகெட்ட சில பேர் அவளின் இயலாமையைப் துஷ்பிரயோகம் செய்ததற்காக முழு இனத்தையும் நோக்கி உங்கள் சுட்டி விரலை நீட்டும் காரியங்களைச் செய்யாதீர்கள்.எங்கள் வீட்டுக் குப்பைகளை வீதிக்குக் கொண்டு வருவது,எங்களை மேலும் பலவீனப் படுத்தும்.

ஷாந்தியோ அன்பினியோ எல்லாரையும் குற்றம் சாட்டுவதாக தெரியவில்லை.

எங்கள் குப்பைகளை வெளியே கொண்டுவந்தால் மேலும் பல அன்பினிகள் தொல்லைப்படாமல் இருக்கமுடியும்.

Link to comment
Share on other sites

புங்கையுhரான் உங்கள் கருத்தோடு ஒத்துப் போக என் மனச்சாட்சி இடம் தர மறுக்கிறது...........

காரணம் நாங்கள் எத்தனையோ பேசப்பட வேண்டிய கலந்துரையாட வேண்டிய நிகழ்வுகளை

எல்லோர் முன்னிலையிலும் சமர்ப்பிக்காமல் ஒரு குறிப்பிட்ட நபர்களை உள்ளடக்கிய

வட்டத்திற்குள் சுற்ற விட்டதால் தான் இன்று இந்த துயர நிலை.................

அதனால் தயவு செய்து பேச விடுங்கள்

அந்த பெண் போராளியின் உடன் பிறப்புக்களும் அவள் யாருக்காக

ஆயுதம் ஏந்தினாளோ அந்த நன்றி கெட்ட இனமும் அவளையும் அவளைப்

போன்ற அத்தனை போராளிகளையும் ஒதுக்கி வைத்து வசை பாடும்

போது...................அவள் தன் சொந்த துயரை பகிர்ந்து கொள்வதில்

எங்கே தப்பு தெரிகிறது....................

ஒருவன் வெற்றியாளனாக இருக்கும் போது மட்டும்

அவனை புகழாதீர்கள்.............அவன் முடமான போதும்

அவனை புகழுங்கள்...............

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள். எழுதுங்கள் சாந்தி.

இன விடுதலைக்காக போராடி வாழ்க்கையை இழந்து நிற்பவர்களை யூத இனத்திற்கு ஒத்த இனம் எப்படி சீரும் சிறப்புமாக பராமரிக்கிறோம் என்பதை காண ஆவலாயுள்ளேன்.

இக்கதைக்கு எழப்போகும் எதிர்ப்புகளுக்காக, அட்வான்சாக இப்பொழுதே எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். :D

Link to comment
Share on other sites

கட்டாயம் எழுதுங்கள்.நல்லதோ கெட்டதோ நடந்தவை,நடப்பவை வெளிக்கொண்டுவரப்படவேண்டும்.

எங்கடை சூத்தைகளை மட்டும் மெல்ல அமத்திவிட நினைக்கும் மனப்பாங்கில் இருந்து முதலில் தமிழன் வெளிவரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் வாசிக்க ஆவலாய் உள்ளோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரண வீட்டில் அழுதாத்தான் மனம் சாந்தியடையும்.

மனதில் உள்ளதை வெளிக் கொண்டு வந்தால் மனம் ஆறுதலடையலாம்.

Link to comment
Share on other sites

முல்லைமண்! இதனால் அன்பினி அடையப் போவது என்ன? சமுதாயத்தில் புரையோடிப் போன புண்களை ஏன் மீண்டும் கிளருகின்றாள்? அனுதாபம் தேடவா? அல்லது இந்தச் செயலைச் செய்தவர்களைப் பழிவாங்கவா?

புங்கையூரான்,

அன்பினி எதையும் அடையப்போவதில்லை. அவளை ஏற்கனவே நமது மானம் மிக்க சமூகம் கொன்றுவிட்டது. ஆனால் அன்பினி போன்ற ஆயிரமாயிரம் பேரின் இன்றைய இதுவரையான வாழ்வைச் மீண்டும் எங்கள் ஞாபகம் கூடிய புத்தியில் ஞாபகமாய் வைக்கும் முயற்சியே இது.

அனுதாபம்..... :blink: உங்கள் எனது அனுதாபம் அன்பினிக்காக அவள் போன்ற ஆயிரம் பேருக்கு என்ன நன்மையைக் கொடுக்கும் ?

இங்கு அன்பினியோ நானோ யாரையும் பழிவாங்கவும் முயலவில்லை பலியெடுக்கவும் முயலவில்லை. ஆயிரமாயிரம் பேரின் வாழ்வை அனைவரும் அறிய வேண்டுமென்பதனை விரும்புகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையுhரான் உங்கள் கருத்தோடு ஒத்துப் போக என் மனச்சாட்சி இடம் தர மறுக்கிறது...........

காரணம் நாங்கள் எத்தனையோ பேசப்பட வேண்டிய கலந்துரையாட வேண்டிய நிகழ்வுகளை

எல்லோர் முன்னிலையிலும் சமர்ப்பிக்காமல் ஒரு குறிப்பிட்ட நபர்களை உள்ளடக்கிய

வட்டத்திற்குள் சுற்ற விட்டதால் தான் இன்று இந்த துயர நிலை.................

அதனால் தயவு செய்து பேச விடுங்கள்

அந்த பெண் போராளியின் உடன் பிறப்புக்களும் அவள் யாருக்காக

ஆயுதம் ஏந்தினாளோ அந்த நன்றி கெட்ட இனமும் அவளையும் அவளைப்

போன்ற அத்தனை போராளிகளையும் ஒதுக்கி வைத்து வசை பாடும்

போது...................அவள் தன் சொந்த துயரை பகிர்ந்து கொள்வதில்

எங்கே தப்பு தெரிகிறது....................

ஒருவன் வெற்றியாளனாக இருக்கும் போது மட்டும்

அவனை புகழாதீர்கள்.............அவன் முடமான போதும்

அவனை புகழுங்கள்...............

தப்பு எங்கும் இல்லை தமிழ்மாறன்! ஏற்கனவே சொந்தக் குடும்பத்தால் கூட தூர வைக்கப்பட்டிருக்கும் அவள்,இந்தக் கருத்துக்கள் பகிரப் படும்போது மேலும் அன்னியப் படுத்தப்படுவாள்.அவள் துணிவு என்னை வியக்க வைக்கின்றது.அவள் முடமாகிப் போனதை, அவள் அடைந்த விழுப்ப்புண் ஆகவே நான் பார்க்கின்றேன். அவளே தன் கதையை வெளியிட அனுமதிக்கும் போது, எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான்,

அன்பினி எதையும் அடையப்போவதில்லை. அவளை ஏற்கனவே நமது மானம் மிக்க சமூகம் கொன்றுவிட்டது. ஆனால் அன்பினி போன்ற ஆயிரமாயிரம் பேரின் இன்றைய இதுவரையான வாழ்வைச் மீண்டும் எங்கள் ஞாபகம் கூடிய புத்தியில் ஞாபகமாய் வைக்கும் முயற்சியே இது.

அனுதாபம்..... :blink: உங்கள் எனது அனுதாபம் அன்பினிக்காக அவள் போன்ற ஆயிரம் பேருக்கு என்ன நன்மையைக் கொடுக்கும் ?

இங்கு அன்பினியோ நானோ யாரையும் பழிவாங்கவும் முயலவில்லை பலியெடுக்கவும் முயலவில்லை. ஆயிரமாயிரம் பேரின் வாழ்வை அனைவரும் அறிய வேண்டுமென்பதனை விரும்புகிறோம்.

எழுதுங்கள் சாந்தி.இதனால் நல்ல பயன் விளையுமாயின், என்னை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இல்லை.ஒரு தந்தை தன் மகளில் கொண்ட கரிசனத்தால் தான் மேற்கண்ட கருத்தை எழுதினேன்.எங்கள் சமூகம்,நாங்கள் நினைப்பது போல், சில விடயங்களை பரந்த மனப்பான்மையுடன் பார்க்கும் நிலைக்கு இன்னும் வளரவில்லை என்பதே ஆனது கருத்து!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் சாந்தி.இதனால் நல்ல பயன் விளையுமாயின், என்னை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இல்லை.ஒரு தந்தை தன் மகளில் கொண்ட கரிசனத்தால் தான் மேற்கண்ட கருத்தை எழுதினேன்.எங்கள் சமூகம்,நாங்கள் நினைப்பது போல், சில விடயங்களை பரந்த மனப்பான்மையுடன் பார்க்கும் நிலைக்கு இன்னும் வளரவில்லை என்பதே ஆனது கருத்து!!!

வளர மறுக்கிறார்கிறார்கள் அது தான் உண்மை..நாளுக்கு நாள் எத்தனையோ விதமான கண்டு பிடிப்புக்கள் அது,இது என்று வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்..ஆனால் எங்கள் சமுதாயம் மட்டும் ???ம்ம்ம்.......கூம். :(:(

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி, உங்கள் குறுநாவலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். பெருந்தோல்வியின் இருளுக்குள் புண்பட்டுக் கிடக்கிற ஒரு இனம் மீண்டும் நிமிர அவசியமான ஒளியைச் சேர்க்கும் பணியில் கலை இலக்கியங்களுக்கு முக்கியமான பங்குண்டு. எங்கள் இனம் மீண்டும் அரசியல் புதை மணலுக்குள் வழி தவறி விடக்கூடாது. நானும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறேன். உங்கள் குறு நாவலைத் தொடர்ந்து என் படப்புகளும் வரும்..

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

கருத்திட்ட Jil , புங்கையூரான் , கந்தப்பு , Eas ,தமிழ்மாறன் , தப்பிலி ,ரதி ,arjun, ஈழப்பிரியன் , யாயினி , poet அனைவருக்கும் நன்றிகள். இன்னும் 3நாட்களில் கதையினை நீங்கள் இக்களம் ஊடாக படிக்கலாம்.

ஒருவன் வெற்றியாளனாக இருக்கும் போது மட்டும்

அவனை புகழாதீர்கள்.............அவன் முடமான போதும்

அவனை புகழுங்கள்...............

சத்தியமான வரிகள் தமிழ்மாறன்.

இக்கதைக்கு எழப்போகும் எதிர்ப்புகளுக்காக, அட்வான்சாக இப்பொழுதே எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். :D

முற்கூட்டிய அனுதாபத்துக்கு நன்றிகள். :lol:

நிச்சயமாக இக்கதைக்கு எழப்போகும் விமர்சனங்கள் சொல்லடிகள் கல்லடிகள் அதிகமாகத்தானிருக்கும். ஆயினும் பேசப்பட வேண்டிய விடயங்களைப் பேசியாகவே வேண்டும். :blink:

எங்கள் இனம் மீண்டும் அரசியல் புதை மணலுக்குள் வழி தவறி விடக்கூடாது. நானும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறேன். உங்கள் குறு நாவலைத் தொடர்ந்து என் படப்புகளும் வரும்..

உங்கள் படைப்பினையும் கொண்டு வாருங்கள். படிக்கக்காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் சாந்தி.இதனால் நல்ல பயன் விளையுமாயின், என்னை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இல்லை.ஒரு தந்தை தன் மகளில் கொண்ட கரிசனத்தால் தான் மேற்கண்ட கருத்தை எழுதினேன்.எங்கள் சமூகம்,நாங்கள் நினைப்பது போல், சில விடயங்களை பரந்த மனப்பான்மையுடன் பார்க்கும் நிலைக்கு இன்னும் வளரவில்லை என்பதே ஆனது கருத்து!!!

புங்கையூரான் இதை நீங்கள் எழுதிகாட்டியே சிலருக்கு புரியவைக்க வேண்டிய நிலை.................... இன்னும் அவர்கள் புரிந்தார்களா என்பதுதான் விடையற்ற வினா. சிலருக்கு புரிந்தாலும் புரியாது............. சிலருக்கு புரிந்ததும் புரியாது.

இவர்களுக்கு நடைமுறை சாத்தியங்களை பற்றி நாங்கள் எழுதினால்.............. எதார்த்தங்களை பற்றி அவர்கள் எழுதுவார். எதார்த்தங்களை நாங்கள் எழுதினால்............... நடைமுறை சாத்தியம் பற்றி இவர்கள் எழுதுவார் தவிர அந்த பெண்ணின் மீது உரிய அக்கறையிருப்பின் உங்களுடைய கேள்வியான "இதனால் அந்த பெண்ணுக்கு என்ன நன்மை?" என்ற வினாவிற்கு சிறு விளக்கத்தைகொடுக்க முயற்சித்திருப்பார்கள் அதை இதுவரையில் செய்யவில்லை.................... ஆனால் அந்த பெண்ணினுடைய நிலையை லைற்றடிச்சு ஊருக்குகாட்டினால் சில பெண்கள் பாதுகாக்கபடுவார்களாம்...............? எப்படி என்பது புரியாத புதிர்.

நீங்கள் எல்லோரும் கேள்விபட்ட விடயம்................. இன்னொரு பெண்ணின் கதை பாகிஸ்தானில் ஒரு கிராமம் அங்கே ஒருவன் ஒருத்தியுடன் உறவை வைக்கிறான் அந்த கிராம மரபின்படி அது தவறானது............. அகவே விடயம் பஞ்சாயத்திற்கு வருகிறது பஞ்சாய தலைவர் தீர்ப்பை வழங்குகிறார்................. அவனுக்கு ஒரு தங்கை பதினொருவயதில் இருக்கிறாள் அவளை பத்துபேர் சேர்ந்து வல்லுறவு கொள்வது. இந்த செய்தி அவளுடைய தயாரின் அர்பணிப்பால் வெளியூரை அடைகிறது பின்பு நாம் எல்லோரும் அறிந்ததுதான்................ சின்ன் பிபிசி உட்பட அனைத்து உலகதொலைகாட்சி செய்திகளிலும் செய்தி வருகிறது மனித உரிமை சங்கங்கள் மாதர் சங்கங்கள் எல்லாம் குடைபிடிக்க................ வழக்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் செல்கிறது. தீர்ப்பு பத்தில் 7 பேர் ஆயுள்தண்டனை பெற்று சிறை செல்கிறார்கள். இப்போது 6 வருடங்கள் ஒடிவிட்டது அவளது தாயர் கொலைசெய்யபட்டுவிட்டார். சிறை சென்றவர்கள் மனுதாக்கல் செய்கிறார்கள் மனு திரும்பமும் நீதிமன்னறம் வந்து அவர்கள் விடுதலை பெற்று அந்த கிராமம் செல்கிறார்கள்..................... இப்போது அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பி ஒட இடம் ஏதும் இல்லை........... இந்த செய்தி கூட ஏதாவது சிறு பத்திரிகையில் படித்தால்தான் உண்டு. உண்மை நிலை பாகிஸ்தானில் இதுவென்றால் இலங்கையில் என்ன நிலை என்பதை இங்கே யாருக்கு நானோ நீங்களோ எழுதவேண்டும்??????

அவன் அவன் பிழைப்பிற்கு ஒவ்வொரு மூலாம் பூசுகிறார்கள் கேள்வி கேட்டால் எனது கருத்தும் உங்கள் கருத்தும் உடனடியாக துக்க படுகிறது. அவர்கள் மக்கள் நலன் காக்கிறார்களாம் நாங்கள் கேள்வி கேட்டு அவர்களுடைய பொன்னான நேரத்தை வீணடிக்கிறோம் என்று சில மட்டுறுத்தினர்கள் நினைக்கிறார்கள். கடந்த 60வருடமாக தமிழனை கொன்றுகுவித்த சிங்களவனும் அதன் உச்ச கட்டமாக முள்ளிவாய்காலில் கூட்டமாக நாலுபக்கமும் செல்லடித்து விரட்டி சிறு நிலப்பரப்பிற்குள் தள்ளி அங்கே வைத்து ஒட்டுமொத்தமாக குண்டுபோட்டு அழித்து எஞ்சியவர்களை பிடித்துசென்று முள்வேலிக்குள் அடைத்து வைத்துகொண்டு.............................. தமிழர்களின் விடிவுக்காக தான் போராடுவதாகவே சொல்கிறாhன். அதைதான் இன்றுவரை திரும்ப திரும்ப சொல்கிறான். புலிவாந்தி எடுப்பவனும் இதைதான் சொல்கிறான் அல்லது இதை சொன்னால்தான் அவனுக்கு ஊதியம். மக்கள் நலன் காக்க போகிறார்களாம்............. அதுக்கு புலிகள் விட்ட தவறுகளை திரும்ப திரும்ப எழுதவேண்டுமாம்.

சரி புலிகள் போராடிய முறை தவறானது............... இப்போ புலியும் இல்லை எலியும் இல்லை போய் சரியான முறையில் போராட வேண்டியதுதானே?? அதுக்கு தட்டச்சு மட்டும் தெரிந்து பலனில்லை தலையிலே ஒரு மசிரெனிலும் வேண்டும். அது முக்கியமில்லை புலிகள் விட்ட தவறுகளை பரப்பிகொண்டிருக்க வேண்டும்........... அப்போதுதானாம் அனுபவம் வரும். அப்படியென்றால் ஏன் புலிகள் விட்ட தவறு என்று குறுகிய காலத்திற்குள் இவர்களது பாரிய பரந்த அறிவை சிறுமை படுத்துகிறார்கள் என்பதுதான் எனக்கு இன்றுவரை புரியாதது. பண்டாரவன்னியன்.................. எல்லாளன் சோளமன்னன் என்று இவர்களது அறிவுக்கு எட்டிய தூரம் வரை செல்லலாமே? புலிகள் போராடிய காலமும் உலகமும் இனி ஒருபோதும் வரபோவதில்லை அதுவே தெளிந்த உண்மை அப்போதைய உலகிற்கும் தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப சோழன் போராடினான்................... பின்பு புலிகள் போராடினார்கள் என்பதே உண்மை. அந்த அனுபவம் என்பது இனி யாருக்கும் தேவையற்றதே.................. தற்போதைய உலகும் போரின் வடிவமும் புலிகளின் காலம்போலும் போரின் வடிவம் போலும் ஒருபோதும் அமையாது என்பது திண்ணமான பின்பு............... ஏன் புலிவாந்தி எடுக்க வேண்டும்???

எடுக்க வேண்டாம் என்று நான் செல்லவில்லை............. எடுங்கள் அது உங்கள் ஊதியத்தோடு சம்மந்தபட்டது. எங்களுக்கு வாழ கிடைக்கவில்லை எமை காட்டிகொடுத்த நீங்களாவது பிழைச்சு போங்கள். ஆனால் இந்த மக்கள் நலன்காப்பு வேதாந்தம்தான் எமக்கு விளங்கவில்லை. இதைதான் நான் திரும்ப திரும்ப விளங்கடுத்த நினைக்கிறேன்.

இலங்கையின் இன்றைய நிலையில் ஒரு பெண்ணை இராணுவம் பிடித்துசென்று வல்லுறவு கொண்டு வீதியில் வீசினால் யாரால் என்ன செய்ய முடியும்???? இது இதுவரையில் நடக்கவே இல்லையா??? உயிராபத்து என்று இலங்கையை விட்டு ஒடிகொண்டிருக்கும் சிங்களவர்களின் எண்ணிக்கையே சில ஆயிரமாக இருக்கிறது................. இதில் இந்த கட்டுரை எந்த விதத்தில் அந்த பெண்ணுக்கு உதவும் என்பது எனக்கு புரியவில்லை. அவளுடைய வேதனைகளை மூடிமறைக்க வேண்டியதில்லை................ ஆனால் இதனால் அவளுக்கு நன்மை என்பது மட்டும் அப்பட்மான பொய். இந்த பெண்ணின் விடயத்தில் தாம் ஏதோ தவறு செய்துவிட்டதாக உணர்ந்து இராணுவமும் சமூக விசமிகளும் மற்றைய பெண்களை தமது ஆசைக்ககு அடிபணியாவிட்டால் அடித்து கொல்லவே திட்டம் தீட்டுவார்கள்................... மற்றைய பெண்களுக்கு இதனால் இலாபம் என்பது அபத்தம்.

சமூகத்தை சீராக கட்டியெழுப்ப வேண்டுமே தவிர................... சிந்தும் சீழ்களை அள்ளி சிதறடிப்பதால் சமூகம் சீர்படும் என்பது ஏதாவது தத்துவாந்த ரீதியாக சாத்தியமானதாக இருக்கலாம். ஆனால் தற்போதைய இலங்கையில் ஒரு துளி சாத்தியமுமில்லை!

Link to comment
Share on other sites

இங்கு சிலருக்கு தங்களைத்தவிர புலிகள் பற்றி எவ்வித அக்கறையோ அழிவுகள் பற்றிய சிந்தனையோ இல்லாத மாதிரியும் தாங்கள் தான் ஏகபோக பிரதிநிதிகள் போலவும் வாந்தியெடுப்பதே சுகமான தொழில். அதுகூட அவரவர் விருப்பம். இன்னொரு விடயம் இதுவொரு கருத்துக்களம் இதில் எல்லாருக்கும் கருத்தெழுதும் உரிமை உண்டென்பதைக்கூட மறந்து தங்கள் கீழ்த்தரமான வாந்திகளால் பாகிஸ்தான் பங்களாதேஸ் பெண் மண்ணென்று தங்கள் அகில உலக புலமையை வெளிக்கொண்டு வந்து சம்பந்தமில்லாத விடயத்தோடு சேர்த்து முடிச்சிடுகிறார்கள்.

ஆனால் " காதல் களம் கணவன் கடைசிக்கனவு" குறுநாவலானது யாருடனும் உடல் உறவு வைத்தது பற்றியோ அல்லது பாலியல்வல்லுறவு பற்றியே பேசவில்லை. ஒரு பெண் போராளியின் வாழ்வை பதிவு செய்திருக்கிறது. மற்றும் யூதர்களுக்கு நிகராக தமிழினத்தை உச்சத்தில் ஏற்றி வைத்து கனவு காண்பதைத்தவிர முன்னாள் போராளிகள் வாழ்வை எப்ப பலியெடுக்கிறது என்பது பற்றியே எழுதப்பட்டுள்ளது.

ஆயினும் இன்னும் கதையையே படிக்கவில்லை ஆனால் தங்கள் மேதாத்தனத்தை துப்புவதால் தமது புனிதம் காக்கப்படுவதாக எண்ணும் அதி புத்திசாலிக்கு சொல்வதற்கு எதுவுமில்லை.

பிற்குறிப்பு :- இக்கருத்தை உரியவர் மட்டும் புரிந்து கொள்வார். மற்றைய நண்பர்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பைப்பார்க்கும்போதே தெரிகிறது. பாதை மாறியதன் பயன் இது. எம் எல்லோருக்கும் இதில் பங்குண்டு. இனி இலட்சியமாவது கனவாவது........ கடைசி வரியை மட்டும் நீக்கிவிடுங்கள். எழுதுவதற்கு முன் ஏன் இத்தனை பீடிகை? உள் நோக்கம் நல்லது என்ற தெளிவிருந்தால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் சாந்தி.இதனால் நல்ல பயன் விளையுமாயின், என்னை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும்

புங்கையூரானின் கருத்தை மேற்கோள் காட்டி எனது நிலைபாட்டை மீண்டும் தெரிவிக்கிறேன்....................

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகருமென்கிறார்கள். அடித்துபார்கலாம் என்பதால். பாகிஸ்தானுக்கு பயணிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை நடைமுறைகளை சாடுபவர்க்கே உண்டு. இந்த கதையை ஊருக்கு லைற்றடித்து காட்டுவதால் அந்த பெண்ணுக்கு என்ன நன்மை என்பதை கொஞ்சம் விளங்கபடுத்தலாமே................?? அது விளங்கவில்லை என்பதுதானே எமது நிலைபாடே தவிர உங்களில் குறைகாண்பதல்ல.

பசியோடு இருப்பவனுக்கு மீனை பிடித்துகொடுப்பதிலும்விட அவனுக்கு அந்த மீனை பிடிக்க கற்றுகொடுக்கலாம் என்றுதான் நான் சொல்கிறேன். இதற்கு ஏன் புலிகளுக்கு ஏகபிரதிநிதியாக நான் மாறவேண்டும்?? புலிகள் தமிழர்களுடைய பிள்ளைகள் ஒவ்வொருதமிழனுக்கும் புலிக்கும் உறவுண்டு என்பதை நாம் எழுதினாலும் குற்றம் காண்கிறார்கள்............... புலி வேறு மக்கள் வேறு என்கிறார்கள். ஆக புலி இனிஇல்லை எம்மை ஏகபிரதிநியாக்கிவிட்டால் எமை நையபுடைவதில் கொஞ்ச காலம் கழிக்கலாம் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை.

அங்குள்ள சமூக கட்டமைப்பை நாம் சீரக கட்டவேண்டும்..................... காலில்லதவன் பிடித்து நடக்க நாம் ஓண்டுதடிகளை கொடுக்கலாம். ஆனால் அதை அடுத்தவன் புடுங்கும் நிலமைகளை முதலில் இல்லாது செய்ய வேண்டும். ஒரு உதவியை உரிய நேரத்தில் உரிய இடத்திற்கு கொண்டுசெல்ல வேண்டுமே தவிர.

சும்மா மக்கள் பா பாடி ஆவதற்கு ஒன்றுமில்லை. திரும்பி திரும்பி பூஜ்ஜியத்திலேயே நிற்போம்.

உதவி என்று நாம் செய்வது அடுத்தவனுக்கு உபத்திரபமாக ஆகிவிட கூடாது............. ஆகவேதான் நாம் செய்வது என்ன பயனை கொடுக்கும் என்பதை கொஞ்சம் சிந்தித்து செய்வோம் என்றே சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

புங்கையூரான் மற்றையவர்களது கருத்தை உள்வாங்கியுள்ளார். இங்கு ஒருவர் தனது முயலுக்கு 3கால் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அடம்பிடித்து நிற்பதற்கு பதில் எழுதுவதில் பயனில்லை. ஆக பதிலும் தேவையில்லை.

கேள்வியும் நானே பதிலும் நானேயான இப்படியே இருந்துவிடுங்கள் அறிஞர் பெருமகரே.......

ஒன்றைப்புரிய முடிகிறது இத்தகைய விசிலடிச்சான்களால் தான் தமிழன் இப்படித் தெருவில் இன்று நிற்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைப்புரிய முடிகிறது இத்தகைய விசிலடிச்சான்களால் தான் தமிழன் இப்படித் தெருவில் இன்று நிற்கிறான்.

பொறுப்புக்களிலிருந்து தப்பிக்க சொல்லும் சாதாரண பதில்.

இதை பொறுப்பாக வேலை செய்யும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. :(:(:(

Link to comment
Share on other sites

எந்த பொறுப்புகளில் இருந்தாலும் கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுக்காவிட்டால் சந்தர்ப்பம் கிடைக்காது.கொடுக்கப்படவும் வேண்டும்.

சுகன் பிறிதொரு திரியில் குறிப்பிட்டது போல் இது தமிழருக்கான போராட்டமே ஒழிய சில நபர்களுக்கான அடையாளப்படுத்தலல்ல.

Link to comment
Share on other sites

பொறுப்புக்களிலிருந்து தப்பிக்க சொல்லும் சாதாரண பதில்.

இதை பொறுப்பாக வேலை செய்யும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. :(:(:(

மன்னித்துக் கொள்ளுங்கள் விசுகு. நான் எழுதியதன் கருத்தை நீங்கள் தவறாக விளங்கியிருக்கிறீர்கள். விசிலடிச்சான்களாலேயே தமிழனுக்கு இந்த நிலையென்றே குறிப்பிட்டேன். தங்கள் கடமைகளைச் செய்கின்றவர்களை நோக்கியதல்ல எனது பதில்.

என்னால் இயன்றதை எனது சக்திக்கு அப்பாற்பட்டு எனது இனத்துக்கான கடமையைச் செய்து கொண்டிருக்கிறேன். (இதுகூட எங்களை லைற்றடிச்சு காட்டும் வேலையென்று அதிமேதாக்கருத்தும் வரும்)

ஏதோ தாங்களே தமிழினத் தூண்களாக எங்கும் மூக்கை நுளைத்து வெட்டிப்பேச்சு விமர்சனம் செய்வது போதாமல் எல்லோரும் விலைபோனோர் விபச்சாரம் செய்வோர் என தங்களது வக்கிரங்களை இந்தக்களத்தில் கொட்டும் கனவான்கள் சிலருக்கு மட்டும் உணர்வு மற்றவர்களுக்கெல்லாம்...???

தமிழனித்தின் விடுதலையென்பது எல்லோரையும் ஒதுக்கி தமக்கான சொத்தென எண்ணுகிறார்கள் இந்த அறிஞர்கள். அதைத் தம்மோடு வைக்கட்டுமே ஏன் எங்கும் புலிகளை இழுத்து தாம்தான் புலிகளின் ஏகபோகம் போன்ற எக்காளம் செய்வான்???

சுகன் பிறிதொரு திரியில் குறிப்பிட்டது போல் இது தமிழருக்கான போராட்டமே ஒழிய சில நபர்களுக்கான அடையாளப்படுத்தலல்ல.

arjun உங்களுக்கொரு பச்சை குத்தியுள்ளேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.