Jump to content

புனித வாரத்திற்கு தயாராவோம்....


Recommended Posts

இறைமகன் ஜேசுவின் பாடுகளும், மரணமும், உயிர்ப்பும் Trafalgar சதுக்கத்தில் 100 க்கும் மேற்பட்ட நடிகர்களால் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் இன்றைய பெரிய வெள்ளி தினத்தன்று சிறப்பாக நடைபெற்றது.

article_964c72a1feab2cfc_1333724717_9j-4aaqsk.jpeg

article_f1d7a8f3dce747da_1333724767_9j-4aaqsk.jpeg

article_cb007c09e9d852bf_1333724926_9j-4aaqsk.jpeg

article_d858fda01bffe9e4_1333725096_9j-4aaqsk.jpeg

http://www.itv.com/n...afalgar-square/

Link to comment
Share on other sites

  • 5 years later...

 

 

அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள். அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள்.

 

இன்று புனித வியாழன். இயேசு பணிக்குருத்துவத்தையும், நற்கருணையையும் ஏற்படுத்திய நாள். பிறர் வாழத் தன்னையே இழப்பதுதான் தெய்வீகம் என்பதை மகத்துவமான திருவருட் சாதனங்கள் வழியாக இயேசு நமக்கு உணர்த்துகிறார். தனது உடலும், இரத்தமும் உலக மக்களின் மீட்புக்காகக் கையளக்கப்படும் என்று சொன்னபடியே நிறைவேற்றினார். இதனால் இன்றும் தேவநற்கருணையில் தன்னையே நமக்கெல்லாம் அருள் உயிரூட்டும் உணவாக வழங்கி வருகின்றார். தமது மீட்பின் செயல்களை இன்றும் தம் குருக்கள் வழியாக இயேசு நிறைவேற்றி வருகின்றார். குருத்துவம் இறைவன் நமக்குத் தந்த மகத்துவம். இந்த மாபெரும் கொடைக்காக நன்றி பொங்கும் இதயங்களுடன் இறைவனுக்கு திருப்பலி செலுத்திட இணைவோம்

 

இன்றைய இராப்போசன நிகழ்விலே யேசு தம் சீடரின் பாதங்களை கழுவிக் கொள்கின்றார். தன்னையே தாழ்த்தி தன் சீடர்களுக்கு பணிவிடை செய்கின்றார் மனுமகன். நம்மவர்களில் எத்தனை பேர் இந்தத் தாழ்மையை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் வாழ்கின்றோம். நவநாகரீகமான உலகிலே நம்மை, நமது ஆளுமையை, பணத்தை, செல்வாக்கை காட்டி உலகில் பகட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவற்றை எல்லாம் நாம் விட்டு விடக்கூடிய மனவலிமையையும், தேவையுள்ளோருக்கு பணிவிடை செய்யக்கூடிய மனத்தாழ்ச்சியையும் இறைமகன் யேசுவிடம் வேண்டி நிற்போம். தொடரும் இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

 

''பின்னர் இயேசு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்'' (யோவான் 13:5)

இயேசு தம் சீடர்களோடு பந்தியமர்ந்திருக்கிறார். விருந்து அன்பின் அடையாளம். இயேசு தம்மை முழுவதும் மக்களின் நல்வாழ்வுக்குக் கையளிப்பதற்காக வந்தவர். அவர் தம்மையே உணவாக நமக்கு அளிப்பதன் அடையாளம் அவர் தம் சீடர்களோடு அருந்திய விருந்து. அந்நேரத்தில் இயேசு எதிர்பாராத ஒரு செயலைச் செய்கிறார். இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுகிறார். விருந்தினரைத் தம் வீட்டுக்கு அழைப்பவர் அவர்களை நன்கு உபசரித்து அனுப்புவர். விருந்து என்பது அவர்களிடையே நட்பினை ஆழப்படுத்துகின்ற ஒரு தருணம். நம் நடுவே வருகின்ற விருந்தினருக்குக் கைகால் முகம் கழுவுவதற்கு நாம் தண்ணீர் கொடுப்பதுபோல, யூதரிடையே விருந்தினரின் காலடிகளைக் கழுவும் வழக்கம் இருந்தது. அச்செயலைப் பொதுவாக வேலையாட்கள் செய்வார்கள். இயேசுவோ சீடர் நடுவே ''ஆண்டவர்'', ''போதகர்'' என்னும் நிலையில் இருந்தவர் (யோவான் 13:13). ஆனால் அவர் தம்மை ஒரு வேலையாளுக்கு நிகராக மாற்றிக்கொண்டு, தம் சீடருடைய காலடிகளைக் கழுவித் துடைக்கின்றார். இது சீடர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. வழக்கம்போல பேதுரு இயேசுவிடம் அச்செயலுக்கு விளக்கம் கேட்கிறார். இயேசு தரும் பதில் என்ன?

சீடரின் காலடிகளைக் கழுவுகின்ற இயேசு அவர்களை ''இறுதிவரை அன்புசெய்கின்ற'' ஆண்டவர்; அன்பின் முழுமையை அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். அந்த அன்புப் பலி கல்வாரியில் போய் முடியும். அதே நேரத்தில் இயேசு தம் சீடரின் காலடிகளைக் கழுவுவதன் வழியாகத் தம் சீடர் எவ்வாறு தம்மைப் பின்பற்றி அவ்வாறு ஒருவர் ஒருவருக்கு ஊழியராக மாற வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார். பிறருக்குப் பணி செய்வது இயேசுவின் வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்ததுபோல, அவருடைய சீடர்களும் பணி மனப்பான்மை கொண்டவர்களாக விளங்கவேண்டும். சீடர் குழுவாகிய திருச்சபை தன் ஆண்டவராகிய இயேசுவைப் பின்சென்று உலக மக்களுக்குப் பணிபுரிவதில் ஈடுபடவேண்டும். இயேசுவின் பணி அதிகாரம் செலுத்துகின்ற பாணி அல்ல, மாறாக, பிறருடைய நலனை முதன்மைப்படுத்தி அவர்களுக்காகத் தன்னையே பலியாக்குகின்ற பணி. இதுவே திருச்சபையின் பணியாகவும் இருக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.