Jump to content

ஜெயமோகனின் திடீர் ஈழ அனுதாபம்

Recommended Posts

April 23rd, 2011

நேற்று என்னுடைய பிறந்தநாள். அரைநூற்றாண்டை நெருங்குகிறேன், [22-4-1962] , கருவிவிலே திரு என்று சொல்லி அரைநூற்றாண்டு இலக்கியவாழ்க்கை என்று உரிமைகோரரலாம்தான். ஒருசில நண்பர்கள் வாழ்த்து சொல்லியிருந்தார்கள். அருண்மொழி காலையிலேயே கூப்பிட்டு வாழ்த்துச்சொன்னாள். இங்கே எலமஞ்சிலி லங்காவில் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து வெறுமே பனிவெளியில் வரையப்பட்டதுபோல வெளியே விரிந்துகிடக்கும் கோதாவரியின் பெருந்தோற்றத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படிகத்தின் மென்மையான உள்ளொளி போன்று ஒரு வெளிச்சம். பின்பு காலைச்சூரியனின் கதிர்களில் நீர்ப்பரப்பு உருகிய வெள்ளியாக ஒளிவிட ஆரம்பித்தது. நீரில் படகுகள் மெல்ல நகர்ந்துசெல்லும்போது நதி மௌனமாக உதடுவிரியப் புன்னகைத்து அடங்குவதுபோல் இருந்தது.

பிறந்தநாட்களில் எனக்கு எப்போதுமே ஆர்வமிருந்ததில்லை. என் அம்மா இருந்தவரைக்கும் பிடிவாதமாக இந்த நாளைக் கொண்டாடுவார்கள். தேவிகோயிலுக்கு ஒரு வழிபாடு. அனேகமாகச் சர்க்கரைப்பொங்கல். குளத்தில் குளித்து கோயிலில் கும்பிட்டுவிட்டு வந்தால் வீட்டிலும் ஏதாவது பாயசம் செய்திருப்பாள். அந்த பாயசத்தையும் பொங்கலையும் சின்ன சருவங்களில் எடுத்துக்கொண்டு வீடுவீடாகச் செல்வேன். நாலைந்து பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று மீள்வேன். அம்மா நான் சரஸ்வதிகடாட்சம் உள்ள அனைவரின் ஆசியையும் பெற்றாகவேண்டும் என்பதில் குறியாக இருப்பாள்.

அதன்பின் நீண்ட அலைச்சலில் எப்போதும் பிறந்தநாளை நினைவுகூர்ந்ததில்லை. திருமணத்திற்குப் பின் கொஞ்சநாள் அருண்மொழி நினைவுகூர்ந்து சிறிய கொண்டாட்டங்கள் செய்வதுண்டு. பாயசம் வைப்பது, புத்தாடை எடுப்பது. பிள்ளைகள் பிறந்தபோது அந்த முக்கியத்துவம் இல்லாமலாயிற்று. இப்போதெல்லாம் பிறந்தநாள் சிலநாட்கள் கழித்து நினைவுக்கு வந்தால்தான் உண்டு.

2009க்குப்பின் பிறந்தநாளின் அர்த்தமே மாறிப்போய்விட்டிருக்கிறது. மொத்த ஏப்ரல்- மே மாதங்களும் நிழல்போல வந்து நிறையும் நினைவுகளின் மாதங்கள். பிரியத்திற்குரிய பலர், முகம்கூட அறியாமல் அகம்நிறைந்த நட்புகளாக இருந்தவர்கள், கொல்லப்பட்ட நாட்கள் இவை. அவர்களில் சிலர் தமிழின் சிறந்த இலக்கியவாதிகளாக வந்திருக்கக் கூடியவர்கள். சிலர் இன்னும் என்னென்னவோ ஆகியிருந்திருக்கக் கூடியவர்கள்.

அரசியல் பிழைகள், மூர்க்கத்தனமான பிடிவாதங்கள், ஆழமான பரஸ்பர ஐயங்கள் என திரிந்து திரிந்து சிதைந்து ஒரு வரலாறு கண்முன் அபத்தநாடகமாக நிகழ்ந்து துக்கமான நினைவாக எஞ்சியிருக்கிறது. அந்த கடைசி அழிவின் கணங்களில் அதிலிருந்த அர்த்தமின்மை மட்டுமே பெரிய மலைபோல முன்னால் நின்றது. பின்னர் அமெரிக்காவில் யோசிமிட்டியில் பலகிலோமிட்டர் உயரத்திற்கு செங்குத்தாக மேலே எழுந்து நின்ற ஒற்றைக் கரும்பாறை மலையைக் கண்டபோது சட்டென்று இந்த நாட்கள்தான் நினைவில் எழுந்தன.

அன்று இதன் முடிவு மார்ச்சிலேயே நன்றாக தெரிந்துவிட்டிருந்தமையால் ஒட்டுமொத்தமாக இந்த வரலாற்றையே கண்ணைமூடிக்கொண்டு தாண்டிவிடலாமென்ற எண்ணம் இருந்தது. எரிந்துகொண்டே இருந்த மனக்கசப்பையும் வெறுமையையும் சொற்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. அரசியல்கொந்தளிப்புகள். உணர்ச்சிக் கொந்தளிப்புகள். மௌன்ம ஒரு பெரிய திரையாக உதவியது. நீண்டகாலமாக இந்த அலையுடன் தொடர்புடையவர்களாக நானறிந்த அனைவருமே மௌனத்தில்தான் மூழ்கிக்கிடந்தார்கள்

ஆனால் நாட்கள் செல்லச்செல்ல முகங்கள் இன்னும் தெளிவாக ஆகின்றன. மறைந்தவர்கள் இன்னும் துலங்குகிறார்கள். அவர்களின் அருகாமை இன்னமும் கனக்கிறது. அதற்கடுத்த வருடம் கவனித்தேன். முந்தைய வருடத்தின் ஒட்டுமொத்த உணர்ச்சிக்கொந்தளிப்புகளும் பொய்யாய் பழங்கதையாய் மாற அன்று கண்ணீரையும் சொற்களையும் குழைத்துக்கொண்டிருந்தவர்கள் உலகத்தமிழ் மாநாட்டின் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்தார்கள். இணையத்தில்கூட நினைவுகூரல்கள் மிகச்சிலவே

அதற்கடுத்த வருடம் அவையெல்லாமே பழைய வரலாறாக ஆகிவிட்டிருந்தன. அப்போது வந்த என்னுடைய கவிதை ஒன்றை வாசித்துவிட்டு ஈழநண்பர் எழுதியிருந்தார், நினைவுகூர்வது சிலரே என்று. இங்கே வந்த கல்பற்றா நாராயணனிடம் இரவெல்லாம் இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். நாம் மட்டும் ஏன் நினைவுகளைக் கரைக்கமுடியாத கற்சிலைகள் போல ஆழத்தில் நிறைத்து வைத்திருக்கிறோம் என்று கேட்டேன்

‘எனென்றால் சமூகம் மறதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. புனைகதை என்பது அந்த மறதிக்கு எதிரான கலகம்’ என்றார். ‘நினைவுகளை மறக்கமுடியாதவையாக ஆக்குவதே இலக்கியத்தின் வேலை’ என்றார். ஆம் , இருக்கலாம். நான் எழுதுவதெல்லாமே நினைவுகளைத்தானோ?

இந்த பிறந்தநாளின் ஒரே இனிய விஷயம் காலையில் கோதாவரியை நிறைத்து மூடிப்பெய்து குளிர்காற்றாக மாறிய முதல் மழைதான்.

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

தமிழின் முக்கியமான எழுத்தாளரரான ஜெயமோகனுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நெடுங்காலமாகவே ஈழ மக்களது எழுச்சி தொடர்பாக ஆர்வம் காட்டி வந்த கலைஞர்களுள் ஜெயமோகனும் ஒருவர். இந்த சேதியின் தைப்பில் உள்ள “திடீர் ஈழ அனுதாபம்” என்கிற வார்த்தை மிகவும் அபத்தமானதும் எதிர்காலத்துக்கு பிழையாக வழிகாட்டுவதுமாகும். இது தப்பான அணுகுமுறை. இது மீண்டும் எம்மை தனிமைப் பட்டுத் தோற்றுப்போகும் பாதையில் தள்ளுவதாகும். தம்முள் முரண்பட்ட நம் தமிழக ஆதரவாளர்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளை நமது முரண்பாடாக மாற்றும் தப்பை இனியும் தொடர வேண்டாம்.

ஈழ எழுச்சி பற்றிய சேதியை மலையாளக் கலைஞர்கள் மத்தியில் கொண்டு சென்றதில் அவருக்கு முக்கிய பங்குள்ளது. அவர் எதையும் தன்னுடைய நிலைபாட்டில் விமர்சிப்பவர். அவர் விமர்சனங்களுடன் தீவிரமாக ஆதரித்த விடயங்களில் ஈழ பிரச்சினையும் ஒன்று. விமர்சன ரீதியான ஆதரவாளர்களை எதிரிகளாகப் பார்த்த எதிரிகளாக் கண்ட இருட்டு இனியும் தொடரவேண்டுமா வீணா? இதைச் சொல்ல எனக்கு கடமை உள்ளது. கலைஞன் என்பதால் மட்டுமல்ல ஜெயமோகனின் நண்பன் என்பதால் மட்டுமல்ல ஜெயமோகனுடன் பல தடவைகள் முரண்பட்டு விவாதித்தவன்ன் என்பதாலும் எனக்கு இந்த மங்கல் புலம் gray area பற்றிய தெளிவு உள்ளது. நண்பர் ஜெயமோகனுக்கு என்னுடைய அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

கடந்த சனி டொரொன்டோவில் குறும்திரைப்படவிழாவிற்கு போயிருந்தேன்.சில படங்கள் முடிய லைட்டைப் போட்டர்கள் எனக்கு அடுத்த இருக்கையில் ஜெயமோகன்.கலோ சொன்னதுடன் அடுத்த படம் தொடங்கிவிட்டது.

பின்னர் சினிமா பற்றி சிறு உரைஆற்றினார்.கேள்விகளுக்கு வேறுபதில் அளித்தார்.அவரின் பல கருத்துகள் ஏற்கமுடியாமல் இருந்தது.எதையும் வாசிக்காமல் சும்மா எதுவித இலக்கிய அறிவுமில்லாமல் வெறும் டெக்னோலஜியை நம்பி படம் எடுக்கவருபவர்களை சாடினார்.

நானும் எனது பங்கிற்கு ஏதோ தீண்டாததுறை மாதிரி சினிமாவை முன்பு விமர்சித்துவிட்டு இப்போ நீங்களும் அதற்குள் போய் தானே விழுந்துள்ளீர்கள் என்று கேட்டேன்.

நண்பன் லோகிதாஸின் வற்புறுத்தால போகவேண்டிவந்தது என சளாப்பினார். நண்பேன்டா?

பின்னர் வெளியில் புத்தக கண்காட்சியும் நடந்தது.உலோகம்,காடு வாங்கினேன்.

ஞாயிறே உலோகம் வாசித்து முடித்துவிட்டேன்.நன்றாக இருந்தது ஆனால் ஏனோ மனதில் ஒட்டவில்லை.எமது போராட்டத்தை பற்றி மூன்றாமவர் எழுதும் போது இந்த நிலை வருகின்றது

அதைவிட இன்னொரு எழுத்தாளர் தங்களை பற்றி எழுதுவதை பற்றி குறைப்பட்டார்.இனி தண்ணியடி கதை இல்லை.

Link to comment
Share on other sites

:lol: :lol: smiley-laughing025.gif

happy0071.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mad0076.gif

mad0076.gif

mad0076.gif

மீண்டும் புது வேகத்துடன் பயிற்சியை முடித்துவிட்டு........................???

:D:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன் ரொரோன்ரோவில்தான் நிற்கின்றார் என்பதைத் தெரியாமல் சிரிக்கக்கூடாது.

உலோகம் படித்தேன். ஃபன்ராஸி என்று சொல்லலாம்.

http://www.jeyamohan.in/?p=16004

குறும்பட விழாவைப் பற்றி ஜெயமோகன்.

http://www.jeyamohan.in/?p=16024

திரைப்பட விழா

June 12th, 2011 நேற்று டொரொண்டோ நகரில் ஸ்கார்பரோ பகுதியில் சர்வதேச குறும்பட விழா. காலையிலேயே கிளம்பிக் குளித்து உடைமாற்றி மனைவி சகிதம் கிளம்பிச்சென்றேன். காலம் செல்வம் நடத்திய வாழும்தமிழ் நூல்விற்பனை அரங்கும் அருகே இருந்தது. பல நண்பர்களை அங்கே சந்தித்தேன். அவர்களில் பலர்,என்னுடைய நூல்களை விரிவாக வாசித்தவர்களாக இருந்தார்கள். ஒட்டுமொத்தமாகப் ’பின் தொடரும் நிழ’லின் குரல்தான் அவர்களிடம் அதிக தாக்கம் ஏற்படுத்தியதாக இருந்தது என்று தோன்றியது. நூல்கள் நடுவே அமர்ந்து இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டோம். நூல்களில் கையெழுத்துப் போட்டுக்கொடுத்தேன்.

நல்ல வாசகர்கள் பொதுவாக ‘ஏன் இப்படி எழுதினீர்கள்?’ ‘இது உண்மையிலேயே நடந்ததா’ என்ற இரு கேள்விகளைக் கேட்கமாட்டார்கள். இலக்கியம் என்பது ஒரு தனிஉண்மையின் தளம், ஒரு மெய்நிகர் உலகம் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள். அங்கே சந்தித்த வாசகர்களில் எவராவது அதைக் கேட்பார்களா என்று கவனித்துக்கொண்டே இருதேன். இல்லை. பெரும்பாலும் நூல்களை முன்வைத்து அறச்சங்கடங்களைப்பற்றிய ஆழமான வினாக்களே இருந்தன. என்னுடைய மிகச்சிறந்த வாசகர்கள் சிலரைச் சந்திக்க நேர்ந்தது உவகை அளித்தது

புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளில் முன்பு இருந்தவரும் வசந்தகுமாரின் பழைய நண்பருமான முரளியைச் சந்தித்தேன். பெரும்பாலும் கூடவே இருந்தார். டேனியல் ஜீவா, ஸ்ரீரஞ்சினி, ரவிச்சந்திரிகா, சுரேஷ் என பல நண்பர்களைச் சந்தித்தேன். ஆனால் எவரிடமும் அதிகம் பேசமுடியவில்லை. குறும்பட விழா.

இடைவேளைக்குப்பின் சுமதி ரூபன் [கறுப்பி] யைச் சந்தித்தேன். புஷ்பராசன் [கவிஞர்] தேவகாந்தன்[கனவுச்சிறை நாவல்] எனப் பல நண்பர்களைச் சந்திக்க முடிந்தது.

குறும்படங்கள்,பெரும்பாலானவை தமிழ். ஒரே ஒரு ஜெர்மானியப் படமான பெர்லின் சுவர் சிறப்பாக இருந்தது. மற்ற படங்களை முயற்சிகள் என்றே சொல்லவேண்டும். மாலைவரை குறும்படங்கள்.

மாலை நான் உரையாற்றினேன். உரையில் சொன்ன நான்கு மையக்கருத்துக்கள்.

1. தமிழ் வணிகசினிமா பற்றிய ஒரு இளக்காரமான பார்வை பொதுவாக அறிவுஜீவிகளிடம் உள்ளது. என்னிடமும் இருந்தது. ஆனால் உலகமெங்கும் உள்ள வட்டாரசினிமாக்களை ஹாலிவுட் சினிமா முற்றாக அழித்து அம்மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வெகுஜன ஊடகமாக சினிமா அமையாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. அந்த அபாயத்தை சமாளித்து இங்கே தமிழ் வணிகச்சினிமா வெற்றிகரமாக இருப்பதே ஒரு பண்பாட்டுச்சாதனை. அது,தொடர்ச்சியான ஃபீட் பேக் மெக்கானிசம் மூலம் உருவாக்கப்பட்டது. ஆகவே தமிழ்ச்சமூகத்தின் சராசரியால் உருவாக்கப்பட்டது அதன் தரம்.

2 இக்காரணத்தால் தமிழில் சராசரிக்கு மேலான ஒரு தளத்தில் படங்கள் வரமுடியவில்லை. அப்படி ஒரு படத்தை உருவாக்கும் முயற்சிகள் பல நடக்கின்றன. அதன்விளைவாக உருவான ஒன்றே குறும்பட இயக்கம். அதற்குப் பொருளியல் சுமை இல்லை என்பதனால் அது சுதந்திரமாக இயங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் நடைமுறையில் அது வெற்றியா என்ற தயக்கம் இருக்கிறது. ஆரம்பத்தில் குறும்படங்கள் மீது இருந்த எதிர்பார்ப்பு இல்லை இப்போது.

3 . காரணங்கள் இரண்டு. இந்தப் படங்களிலேயே அவை தெரிகின்றன. ஒன்று இலக்கியவாசிப்போ, அறிமுகமோ இல்லாதவர்களால் இப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆகவே கதைக்கருவிலும் வாழ்க்கை அவதானிப்புகளிலும் ஒரு முதிர்ச்சி இல்லை மிகச் சாதாரணமான கதைகளைச் சாதாரணமாக எடுக்கிறாகள். இந்தக்குறும்படங்களின் கதைகளைக் குமுதம் கூட வெளியிடுமா என்பது சந்தேகமே. பெரும் சிறுகதைச்சாதனைகள் நிகழ்ந்த ஒரு மொழியில் இத்தகைய படங்கள் வருவதை நாம் ஒரு சரிவு என்றே நினைக்கவேண்டும். இரண்டாவதாக இப்படங்கள் குறைந்த நேர அளவுள்ள, சிறிய சட்டகம் கொண்ட படங்கள். இதற்கான ஒரு திரைமொழி , திரைக்கதை வடிவம் உருவாக்கப்படவேண்டும். ஆனால் பெரிய படங்களின் அதே திரைமொழி, அதே திரைக்கதை உத்தியில் இவை எடுக்கப்படும்போது பார்வையனுபவம் சிறப்பாக அமைவதில்லை.

4 ஆனால் தமிழ் வணிகசினிமாவுக்குள் சிறப்பான சில முயற்சிகள், சராசரியை மீறி எழும் எத்தனங்கள் நிகழ்கின்றன. அவை முக்கியமானவை.

என்னுடைய உரைக்குப்பின் கேள்விநேரம். கேள்விகள் பொதுவாக மிகமிக ஏமாற்றமானவை. பலர் முன்னரே உருவாக்கிக்கொண்டு வந்த கேள்விகளைக் கேட்டார்கள். ‘நீங்கள் தமிழ் சினிமா குப்பை என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் ஏன் அதில் பணியாற்றுகிறீர்கள்?’ என்று ஒரு கேள்வி. அருண்மொழி வர்மன் என்பவர் கேட்டது. ‘அய்யா நான் சொன்னது நேர் மாறு’ என்று சொன்னவற்றை அப்படியே திருப்பிச் சொன்னேன். உடனே அடுத்த கேள்வி ‘சரி, ஆனால் தமிழ் சினிமாவில் தரம் இல்லை என்று சொல்கிறீர்களே ஏன்?’ கன்யாகுமரி மொழியில் மனசுக்குள் ‘வெளங்கிரும்’ என்று சொல்லிக்கொண்டேன்.

சற்றும் அசராமல் ஒருவர் கேட்டார். ‘நல்ல கதை என்பது குமுதத்தால் வெளியிடப்படவேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள்?’ நான் ‘டேய் கைப்பிள்ளை அடக்க்கிக்கோடா’ என்று சொல்லிக்கொண்டு ‘அய்யா நான் குமுதம்கூட என்றுதான் சொன்னேன்’ என்றேன். ’இரண்டும் ஒன்றுதான்’ என்று அவர் எனக்கு விரிவாக விளக்கினார்.

கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுமே அப்படித்தான் இருந்தன. நான் பேசியவற்றுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமே இல்லை. ‘ நான் அப்டிச் சொல்லல்லீங்க’ என்பதே என் பொதுவான பதில்.அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஏற்கனவே சந்தித்த தரமான வாசகர்கள் எவரும் வாயே திறக்கவில்லை.

வெளியே வந்தபோது பலரும் கேள்விநேரத்தில் இப்படி நிகழ்ந்தது பற்றி வருத்தம் தெரிவித்தார்கள். கேள்வி கேட்ட பெரும்பாலானவர்கள்,நான் எழுதுவது எதையும் வாசிக்காதவர்கள். நான் இன்னவகைக் கருத்துக்கள் கொண்டவன் என்று ’யாரோ’ சொன்னதை நம்பி அதை ஒட்டி நான் சொல்வது இதுவாகவே இருக்கும் என ஊகித்துக்கொண்டு கேள்வி கேட்டார்கள் என்றார்கள். அப்படி ஒரு குழுவாக அவர்கள் கேட்கும்போது பிறர் அமைதியாகிவிடுகிறார்கள்.

நான் ஒரு வேடிக்கையாகவே அதை எடுத்துக்கொண்டேன் என்று சொன்னேன். நான் அதிகம் சந்திப்பவர்கள் அதைப்போன்றவர்களே. ‘சார் இந்தியாவில் உயர்சாதிகள் மட்டும்தான் வாழவேண்டும் என்று சொல்கிறீர்களே ஏன் சார்?’ என்றெல்லாம் கன்ணீருடன் என்னிடம் கேள்விகேட்பவர்கள் உண்டு. என்ன செய்ய? இயற்கையில் எல்லாவகையான மனிதர்களும் தேவையாக இருக்கிறார்கள். சுற்றுச்சூழல் சமநிலை பேணப்படவேண்டுமே.

டி.செ தமிழனை சந்தித்தேன். உற்சாகமான இளைஞராக இருந்தார். அவரிடம் பேசமுடிந்தது,எனக்கு மிக மனநிறைவை அளித்தது. என்னிடம் கடுமையான மாற்றுக்கருத்துக்கள் கொண்டிருந்தார். அப்படி அவர் என்னைப்பற்றிக் கொண்டிருக்கும் பல கருத்துக்கள் அவரது மனப்பிரமைகள் என்பதே என் எண்ணம். நான் அப்படி எதைப்பற்றியும் மிக உறுதியான கருத்துக் கொண்டவன் அல்ல. பல கோணங்களில் யோசித்துப்பார்ப்பவன். அது யதார்த்தமாகவும், வழக்கமான வரிகளை மீறிச்செல்வதாகவும் இருக்கவேண்டும் என விரும்புபவன் அவ்வளவுதான்

ஆனால் நம் தலைமுறையில் அதிகம் வாசிக்கக்கூடிய ஒருவராக இருக்கிறார். இலக்கியத்தை தீவிரமான அர்ப்பணிப்புடன் அணுகுகிறார் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவே இருந்தது. எந்த மாற்றுக்கருத்தையும் தனிப்பட்ட ஐயங்கள் இல்லாமல் விவாதிக்கலாமென்றும், அதிலும் அவருக்கும் எனக்குமான கருத்துவேறுபாடுகள் தமிழில் முக்கால் நூற்றாண்டு பழக்கமுள்ளவை, நானும் அவரும் மட்டும் பேசித் தீர்த்துவிட முடியாதவை என்றும் சொன்னேன். இதில் எந்தத் தரப்பும் சரியாக இருக்கலாம். எதை எழுதிக்காட்டுகிறோம் என்பதே கடைசியில் முக்கியம். அவரது இளமையின் வேகம் எனக்குப் பிடித்திருந்தது. அது இருபது வருடம் முன்புள்ள நான். ஆகவே என்னைப்பொறுத்தவரை மகிழ்ச்சியான சந்திப்புதான்.

மாலையில் நண்பர்களுடன் டாம் சிவதாசனின் அலுவலகத்தில் ஒரு சந்திப்பு. நள்ளிரவு வரை பேசிக்கொண்டிருந்தோம். அரசியல் சினிமா இலக்கியம். இரவு பன்னிரண்டு மணிக்கு செல்வம் என்னைக் காரில் கொண்டுவந்து விட வந்தார். வரும் வழியில் போலீஸ் போதையுடன் கார் ஓட்டுபவர்களைப் பிடிக்க விளக்குடன் நின்றிருந்தது. ஆகவே அப்படியே தேர்ந்த போராளிக்குரிய லாவகத்துடன் பம்மிப் பின்னால் வந்து சுற்றிச்சுழன்று ஒருமணிக்குத் திரும்பிவந்து சேர்ந்தோம். பாவம் செல்வம், கஷ்டப்பட்டுக் குடித்த உயர்தர மதுவின் போதையெல்லாம் அந்தப் பதற்றத்தில் அநியாயமாக இறங்கி வீணாகிப்போயிற்று

இன்று மாலை மீண்டும் நண்பர்களுடன் சந்திப்பு. ["kalam@tamilbook.com" <kalam@tamilbook.com>,] இம்முறை இலக்கியம் பற்றி மட்டுமே பேசலாமென செல்வம் அன்புடன் ஆணையிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன வேடிக்கையென்றால் புலம்பெயர்ந்து வந்து கனடாவை தனது வாழ்விடமாக்கி, ஆகக் குறைந்தது அந்நாட்டினது போக்குவரத்துச் சட்டதிட்டங்களை சரிவரக் கடைப்பிடிக்காதவர்கள் எல்லாம் ஜெயமோகனது இலக்கிய ரசிகர்கள். அதுக்கு பெரிய கதாநாயகத்தனமாக இடுகை வேற.

இது நீங்களா அர்ஜீன் அண்ணா :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் என்ன வேடிக்கையென்றால் புலம்பெயர்ந்து வந்து கனடாவை தனது வாழ்விடமாக்கி, ஆகக் குறைந்தது அந்நாட்டினது போக்குவரத்துச் சட்டதிட்டங்களை சரிவரக் கடைப்பிடிக்காதவர்கள் எல்லாம் ஜெயமோகனது இலக்கிய ரசிகர்கள். அதுக்கு பெரிய கதாநாயகத்தனமாக இடுகை வேற.

:(

Link to comment
Share on other sites

கடந்த சனி டொரொன்டோவில் குறும்திரைப்படவிழாவிற்கு போயிருந்தேன்.சில படங்கள் முடிய லைட்டைப் போட்டர்கள் எனக்கு அடுத்த இருக்கையில் ஜெயமோகன்.கலோ சொன்னதுடன் அடுத்த படம் தொடங்கிவிட்டது.

பின்னர் சினிமா பற்றி சிறு உரைஆற்றினார்.கேள்விகளுக்கு வேறுபதில் அளித்தார்.அவரின் பல கருத்துகள் ஏற்கமுடியாமல் இருந்தது.எதையும் வாசிக்காமல் சும்மா எதுவித இலக்கிய அறிவுமில்லாமல் வெறும் டெக்னோலஜியை நம்பி படம் எடுக்கவருபவர்களை சாடினார்.

நானும் எனது பங்கிற்கு ஏதோ தீண்டாததுறை மாதிரி சினிமாவை முன்பு விமர்சித்துவிட்டு இப்போ நீங்களும் அதற்குள் போய் தானே விழுந்துள்ளீர்கள் என்று கேட்டேன்.

நண்பன் லோகிதாஸின் வற்புறுத்தால போகவேண்டிவந்தது என சளாப்பினார். நண்பேன்டா?

பின்னர் வெளியில் புத்தக கண்காட்சியும் நடந்தது.உலோகம்,காடு வாங்கினேன்.

ஞாயிறே உலோகம் வாசித்து முடித்துவிட்டேன்.நன்றாக இருந்தது ஆனால் ஏனோ மனதில் ஒட்டவில்லை.எமது போராட்டத்தை பற்றி மூன்றாமவர் எழுதும் போது இந்த நிலை வருகின்றது

அதைவிட இன்னொரு எழுத்தாளர் தங்களை பற்றி எழுதுவதை பற்றி குறைப்பட்டார்.இனி தண்ணியடி கதை இல்லை.

அர்ஜுன்,

டொரோண்டோ வில் நடந்த ஆங்கில / வேறு மொழி குறும் திரைப்பட விழா தானே நடந்தது? தமிழ் குறும் திரைப்பட விழாவும் ஒவ்வொரு வருடமும் நடக்கும், இந்த முறை எப்ப என்று தெரியவில்லை

ஜெயமோகன் டொரோண்டோ வில் வந்து நிற்கப் போவதாக முருகன் புத்தக சாலை உரிமையாளரும் சொன்னார். அவர் வருவதால் அவரது புத்தகங்களை இறக்குமதி செய்யப் போவதாக சொல்லி இறுதியில் "அனல் காற்றை" மட்டும் தருவித்து இருந்தார். ஜெயமோகனின் blog இலும் டொரோண்டோ வில் வந்திறங்கிய அனுபவம் பற்றி சுவையாக குறிப்பிட்டு இருந்தார்

சரி, காடு வாசித்து விட்டீர்களா? தமிழில் எனக்கு மிகப் பிடித்த நாவலில் அது தான் முதலாவது. உலோகம் எங்கு வாங்கலாம் என அலைந்து திரிகின்றேன்

Link to comment
Share on other sites

மாலையில் நண்பர்களுடன் டாம் சிவதாசனின் அலுவலகத்தில் ஒரு சந்திப்பு. நள்ளிரவு வரை பேசிக்கொண்டிருந்தோம். அரசியல் சினிமா இலக்கியம். இரவு பன்னிரண்டு மணிக்கு செல்வம் என்னைக் காரில் கொண்டுவந்து விட வந்தார். வரும் வழியில் போலீஸ் போதையுடன் கார் ஓட்டுபவர்களைப் பிடிக்க விளக்குடன் நின்றிருந்தது. ஆகவே அப்படியே தேர்ந்த போராளிக்குரிய லாவகத்துடன் பம்மிப் பின்னால் வந்து சுற்றிச்சுழன்று ஒருமணிக்குத் திரும்பிவந்து சேர்ந்தோம். பாவம் செல்வம், கஷ்டப்பட்டுக் குடித்த உயர்தர மதுவின் போதையெல்லாம் அந்தப் பதற்றத்தில் அநியாயமாக இறங்கி வீணாகிப்போயிற்று

இன்று மாலை மீண்டும் நண்பர்களுடன் சந்திப்பு. ["kalam@tamilbook.com" <kalam@tamilbook.com>,] இம்முறை இலக்கியம் பற்றி மட்டுமே பேசலாமென செல்வம் அன்புடன் ஆணையிட்டார்.

கேவலம் மதுவுக்கு அடிமையான ஒருவரை(தான் வாகனம் ஓட்டப்போவது தெரிந்தும் குடிப்பவர் அடிமை தான்) போராளியுடன் ஒப்பிடுவது முறையாகாது.

Link to comment
Share on other sites

காலம் செல்வத்திடம் உலோகம் வாங்கலாம் நிழலி.

முரளி என்பது சுவிஸ் முரளி அவர் இப்போ ஒரே இலக்கியம் தான்.அவருடன் தான் ஜெயமோகனும் மனைவியும் புறப்பட்டுசென்றார்கள்.

என்னை தண்ணியடி கதை எழுதவேண்டாமென்றவர்கள் ஜெயமோகனிடமும் சொல்லியிருக்க வேண்டுமல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருண்மொழி வர்மன்

யாரு இந்த பொன்னியின் செல்வன் ஹீரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் நிச்சயம் ஜெயமோகன் தனது படைப்புகளை வித்து டாலராக்கவோ அன்றேல் யூரோக்களாக்கவோ யாழ்களத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளார். மற்றப்படி ஜெயமோகனைப்பற்றிய அறிவு கடந்தகாலங்களில் தமிழ் இலக்கியவட்டத்தில்(?) ஆழமான அறிவுடையோருக்குத்தான் இருந்தது. கோடம்பாக்கம் தமிழ்சினிமா ஒற்றை இரவினில் அவரைப் புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற சாமானியனுக்கும் அறிமுகப்படுத்திவிட்டது. இப்படித்தான் ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் எனும் ஆக்கம் பாலச்சந்தரது அவளோரு தொடர்கதை மூலம் பிரபல்யமாகி அப்போதைய யாழ்ப்பாணத்து விடலைப் பையன்களை (நான் உட்பட) யாழ் பொது நூலகத்துக்கு முன்னால் அணிவகுக்க வைத்தது. (இதில் என்ன வேடிக்கையெனில் புத்தகம் வாசிச்சது நானும் ஒருவன் அப்போதைய வயதும் அறிவுப் பக்குவமும் எனக்கு அப்படைப்பில் என்னத்தை வாசித்தேன் என்பதை இதுவரை ஞாபகத்தில் கொண்டுவர முடியவில்லை. அன்று வாசித்த கல்கியின,; பொன்னியின் செல்வனில் வரும் சிவகாமி இப்போதும் கனவில் வந்து நாகநந்தியுடன் மிரட்டுகிறாள்) மற்றப்படி தண்ணியடிச்சிட்டு கார் ஓட்டுபவர்களது போலிக் கொளரவத்துக்கு ஒரு வேளை ஊறுகாயாக ஜெயமோகன் உதவலாம்.

Link to comment
Share on other sites

ஒன்று மட்டும் நிச்சயம் ஜெயமோகன் தனது படைப்புகளை வித்து டாலராக்கவோ அன்றேல் யூரோக்களாக்கவோ யாழ்களத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளார். மற்றப்படி ஜெயமோகனைப்பற்றிய அறிவு கடந்தகாலங்களில் தமிழ் இலக்கியவட்டத்தில்(?) ஆழமான அறிவுடையோருக்குத்தான் இருந்தது.

முழுத் தவறு

எனக்கு இலக்கியத்தில் ஒன்றும் ஆழமான அறிவு கிடையாது, ஆனால் ஜெயமோகனின் 'ரப்பர்' வந்த காலத்தில் இருந்து அவரது தீவிர (அதென்ன தீவிரம்) வாசகன். யாழ் பல்கலைக்கழகத்திலும் அவரது படைப்புகள் பல கிடக்கு. கொழும்பில் பூபால சிங்கம் கடையில் அவரது புத்தகம் வந்தவுடன் முடிந்து விடும் நிலையில் தான் நான் கொழும்பில் இருக்கும் வரைக்கும் நிலைமை இருந்தது. கனடாவிலும் ஜெயமோகன் திரைப்படத்துக்கு எழுத முதலே பலர் வாசித்து உள்ளனர்

அத்துடன் ஜெயகாந்தனையும் ஜெயமோகனையும் ஒரே தட்டில் வைப்பதே ஒரு தவறான ஒரு ஒப்பீடு என்றே சொல்வேன்

நானும் சொல்லுறன் தவறான ஒப்பீடுதான்...ஆனால் பெரிய வித்தியாசம் இப்படி சொல்லுவது மூலம் நீங்கள் ஜெயமோகனை தங்கத்தட்டில் வைக்க பார்க்கீறீங்கள்.... நீங்கள் ஜெயமோகனின் தீவிர வாசகனாக இருக்கலாம் ஆனால்..ஜெயகாந்தனை முழுமையாக வாசிக்கவில்லை அல்லது அறியவில்லை என்று தான் நினைக்கிறன்
Link to comment
Share on other sites

வாசிப்பு என்பது ஒரு பெருங்கடல்.தமிழ்நாட்டவர்களுடன் ஒப்பிடும் போது நாம் ஒரு சிறுதுளி.

ஜெயகாந்தனோ,ஜெயமோகனோ சினிமாவிற்கு வந்தபின் எம்மவர் பலருக்கு தெரிந்திருக்கலாம்,தமிழ் நாட்டு தமிழர்களுக்கு அல்ல.அவர்களில் சும்மா சாதரணமானவர்களே எல்லாம் கரைத்து குடித்திருப்பார்கள்.(அரட்டை அரங்கம்,மக்கள் அரங்கம் பார்த்தால் விளங்கும்).

எம்மவரால் அவர்கள் பணம் பண்ணுவது என்பது பெரும் கொமெடி.

குண்டுசட்டிக்குள்குதிரை ஓடிக்கொண்டு எங்களைபற்றிய ஒரு பெரும் கனவில் இருக்கின்றோம்.

படவிழா முடிய ஜெயமோகனிடம் கதைத்தை விட ஜான் மாஸ்டரிடம் தான் கூட கதைத்தேன்.எப்போதும் என் மனதில் இருக்கும் ஒரே கேள்வி? ஏன் நாங்கள் தோற்றோம்?.

பதில் இங்கு எழுதினால் பலருக்கு பிடிக்காது.

Link to comment
Share on other sites

அன்று வாசித்த கல்கியின,; பொன்னியின் செல்வனில் வரும் சிவகாமி இப்போதும் கனவில் வந்து நாகநந்தியுடன் மிரட்டுகிறாள்)

சிவகாமியின் சபதம் எண்டு சொல்லுவதற்கு பொன்னியின் செல்வன் என்று மாறி சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறன்

நாங்களும் எதோ கொஞ்சமாவது வாசிச்சு இருக்கோம்ல :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணா தாங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். மேலும் என்னுடைய கருத்துக்கள் சிலவேளை சந்ததி இடைவேளி கருதி வேறுபடலாம். மற்றும்படி யார் இவர்கள் இவர்களது தளம் என்ன என்பதை அடையாளம் காண்பது உங்களது பொறுப்பு. எதற்கும் விட்டுக்கொடுக்காத தன்மை நமக்குள் நாமே பெருமைபேசிக் கொள்வது கூனிக்குறுகி கூழைக்கும்பிடு போடாதது யாருக்கும் அனுசரித்துப்போகாதது எமது பலம்மீது அதீத நம்பிக்கை வைத்தது (என்னைப்பொறுத்தவரை அது சரியானதே) வேண்டப்படாதவர்களை தீர்த்துக்கட்டியது இவையெலாம் தப்பு இவற்றினாலேயே நாம் தோற்றுப்போன சந்ததி என யாரோ சந்துக்குள் சிந்துபாட எத்தனிக்கிறார்கள். அவர்கள் ஒன்றைமட்டும் தெரிந்து கொள்ளட்டும் இவையே எப்போதும் தமிழீழத் தமிழனின் அடையாளங்கள் இவைற்றில் ஒன்று குறைந்தாலும் அவன் தனது அடையாளத்தை இழந்துவிடுவான். இவற்றைக் கைவிட்டால் அவன் அழிந்துவிடுவான். பாதுகாப்பான இடத்திலிருந்து இரவல் பன்ராசிக்களை வாசித்துவிட்டு இங்கு அவலை நினைத்து உரலை இடிக்கவேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் விட்டுக்கொடுக்காத தன்மை

நமக்குள் நாமே பெருமைபேசிக் கொள்வது கூனிக்குறுகி கூழைக்கும்பிடு போடாதது

யாருக்கும் அனுசரித்துப்போகாதது

எமது பலம்மீது அதீத நம்பிக்கை வைத்தது (என்னைப்பொறுத்தவரை அது சரியானதே)

வேண்டப்படாதவர்களை தீர்த்துக்கட்டியது இவையெலாம் தப்பு இவற்றினாலேயே நாம் தோற்றுப்போன சந்ததி என யாரோ சந்துக்குள் சிந்துபாட எத்தனிக்கிறார்கள்.

அவர்கள் ஒன்றைமட்டும் தெரிந்து கொள்ளட்டும் இவையே எப்போதும் தமிழீழத் தமிழனின் அடையாளங்கள் இவைற்றில் ஒன்று குறைந்தாலும் அவன் தனது அடையாளத்தை இழந்துவிடுவான். இவற்றைக் கைவிட்டால் அவன் அழிந்துவிடுவான்.

பாதுகாப்பான இடத்திலிருந்து இரவல் பன்ராசிக்களை வாசித்துவிட்டு இங்கு அவலை நினைத்து உரலை இடிக்கவேண்டாம்.

நன்றி ஐயா

இவனுடன்தான் நான்இருக்கவேண்டுமென்று, தமிழனை வெற்றி ஒருநாள்தேடிவந்து சரணடையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகம் வாசிச்சது நானும் ஒருவன் அப்போதைய வயதும் அறிவுப் பக்குவமும் எனக்கு அப்படைப்பில் என்னத்தை வாசித்தேன் என்பதை இதுவரை ஞாபகத்தில் கொண்டுவர முடியவில்லை. அன்று வாசித்த கல்கியின,; பொன்னியின் செல்வனில் வரும் சிவகாமி இப்போதும் கனவில் வந்து நாகநந்தியுடன் மிரட்டுகிறாள்)

தீவிர இலக்கியம் புரிய தொடர்ந்து நிறைய வாசிக்கவேண்டும். தற்போதும் நிறையப் பேர் நன்றாக எழுதுகின்றார்கள். வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சொல்லுறன் தவறான ஒப்பீடுதான்...ஆனால் பெரிய வித்தியாசம் இப்படி சொல்லுவது மூலம் நீங்கள் ஜெயமோகனை தங்கத்தட்டில் வைக்க பார்க்கீறீங்கள்.... நீங்கள் ஜெயமோகனின் தீவிர வாசகனாக இருக்கலாம் ஆனால்..ஜெயகாந்தனை முழுமையாக வாசிக்கவில்லை அல்லது அறியவில்லை என்று தான் நினைக்கிறன்

இரண்டு பேரினதும் நிறையப் புத்தகங்கள் இன்னமும் புத்தக அலுமாரியில் இருக்கின்றன (மூளையில் எவ்வளவு ஏறியது என்பது சொல்லமுடியாது). இருவரையும் ஒப்பிடமுடியாது என்பது உண்மை, அதற்காக ஜெயமோகனுக்குத் தங்கத்தட்டு, ஜெயகாந்தனுக்கு பித்தளைத்தட்டு என்று பிரித்து எவரது எழுத்து நல்லது என்று போட்டி தேவையில்லை. என்ன எழுதியிருக்கின்றார்கள், ஏன் எழுதியிருக்கின்றார்கள் என்பதுதான் வாசகனுக்கு முக்கியம்.

தற்போது ஜெயமோகனின் "இரவு" நாவல் வாசிக்கின்றேன்!

வீணா தாங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். மேலும் என்னுடைய கருத்துக்கள் சிலவேளை சந்ததி இடைவேளி கருதி வேறுபடலாம். மற்றும்படி யார் இவர்கள் இவர்களது தளம் என்ன என்பதை அடையாளம் காண்பது உங்களது பொறுப்பு. எதற்கும் விட்டுக்கொடுக்காத தன்மை நமக்குள் நாமே பெருமைபேசிக் கொள்வது கூனிக்குறுகி கூழைக்கும்பிடு போடாதது யாருக்கும் அனுசரித்துப்போகாதது எமது பலம்மீது அதீத நம்பிக்கை வைத்தது (என்னைப்பொறுத்தவரை அது சரியானதே) வேண்டப்படாதவர்களை தீர்த்துக்கட்டியது இவையெலாம் தப்பு இவற்றினாலேயே நாம் தோற்றுப்போன சந்ததி என யாரோ சந்துக்குள் சிந்துபாட எத்தனிக்கிறார்கள். அவர்கள் ஒன்றைமட்டும் தெரிந்து கொள்ளட்டும் இவையே எப்போதும் தமிழீழத் தமிழனின் அடையாளங்கள் இவைற்றில் ஒன்று குறைந்தாலும் அவன் தனது அடையாளத்தை இழந்துவிடுவான். இவற்றைக் கைவிட்டால் அவன் அழிந்துவிடுவான். பாதுகாப்பான இடத்திலிருந்து இரவல் பன்ராசிக்களை வாசித்துவிட்டு இங்கு அவலை நினைத்து உரலை இடிக்கவேண்டாம்.

:lol::lol: இதுதான் பன்ராஸியாக இருக்கு.

Link to comment
Share on other sites

:lol::lol: இதுதான் பன்ராஸியாக இருக்கு.

பன்ராஸி = ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி -  இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார்.
    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.