Jump to content

ராகவன் பரஞ்சோதி: ஓர் கனேடிய தமிழ் ஊடகத்துறை கலைஞர் பற்றிய எனது சில எண்ணக்கருக்கள்


Recommended Posts

இனிய வணக்கங்கள், நீண்ட நாட்களின் பின் உங்களுடன் மீண்டும் உறவாடுவதில் மகிழ்ச்சி.

ragavantv.jpg

இன்று ‘வேரும் விழுதும்’ பகுதியில் - கனடா நாட்டில், ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்களவு பங்காற்றியுள்ள கலைஞர் ராகவன் அவர்கள் பற்றி சில எண்ணவோட்டங்களை உங்களுடன் சுருக்கமாக பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

+++

சில வருடங்களின் முன்னர் யாழ் இணையத்தின் ஊடாக நமது கலைஞர்கள், நம்மவர் படைப்புக்கள் சம்பந்தமாக பல்வேறு தகவல்களை உங்களுடன் பரிமாறினேன். அச்சமயத்தில் யாழ் இணையம் சார்பாக ராகவனையும் பேட்டிகண்டு வலைத்தளத்தில் பிரசுரம் செய்ய விரும்பினேன். இதுபற்றி ராகவனுடன் முகநூலினூடாக தொடர்புகொண்டேன். ஏனோ தெரியவில்லை, எதுவித பதிலும் அவரிடம் இருந்து அப்போது கிடைக்கவில்லை.

ஆனாலும்.. இன்று அண்மைக்காலமாக ராகவனின் அரசியல் பிரவேசம் சம்பந்தமாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் அடிபடுவதால் ராகவன் பற்றிய எனது சில எண்ணக்கருக்களை பரிமாறுவது உங்களிற்கு உதவியாக அமையும் என நினைக்கின்றேன்.

முதல் அறிமுகம்:

ராகவனை முதன் முதலாக 2001ம் ஆண்டு என நினைக்கின்றேன், தமிழ் விசன் தொலைக்காட்சியில் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் நகைச்சுவை நிகழ்ச்சியூடாக அறிந்துகொண்டேன். யாழ் இணையத்தில் தமிழ்விசன் தொலைக்காட்சி சம்பந்தமாக முன்பு நான் எழுதிய ஓர் எண்ணப்பகிர்வில் ராகவன் பற்றி இவ்வாறு குறிப்பிட்டேன்:

பிறகு அண்மையில குரஸ் ரோட்ஸ் (CROSS ROADS) எண்டுற நிகழ்ச்சிய பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைச்சிது. மிக நன்றாக இருக்கிது. கனடாவில இருக்கிற இளைய தலைமுறை பற்றி, அவர்கள் பிரச்சனை பற்றி ஆங்கிலத்திலேயே உரையாடல் நடக்கிது. நிறைய விசயங்கள அறியக்கூடியதாக இருக்கிது. இதுல கேள்விகள் கேட்கிறவர எனக்கு மிகவும் பிடிக்கும். விசர் வைத்திலிங்கம் நிகழ்ச்சியிலும் இவர் மேளம் ஏதோ அடிச்சுக்கொண்டு இருப்பார். நல்ல ஆங்கில அறிவு இருக்கிது இவருக்கு. நிறைய ஆங்கில நேர்முகங்களை செய்து இருக்கிறார். இப்படியான கலைஞர்களை ரீவியை பெற்று இருப்பது அதன் அதிஸ்டம்.

மேலே நான் கூறியவாறே நானும் ராகவனின் ஓர் அபிமானி என்று கூறவேண்டும்; காரணம்: ஆங்கில மொழியிலான ராகவனின் பேட்டிகள், அவரது நகைச்சுவைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரம்பத்தில் ராகவன் கே.எஸ்.பாலச்சந்திரனின் 'வைத்திலிங்கம்' நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பற்றி மட்டுமே நான் அறிந்தேன். ஆயினும்… விரைவிலேயே தமிழ் விசன் தொலைக்காட்சி ஊடான ராகவனின் பல்வேறு ஆங்கில நிகழ்ச்சிகள், உரையாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. கனேடிய தமிழ் ஊடகங்களை பொறுத்த அளவில் ராகவனின் அளவிற்கு நம்மவர்கள் யாராவது தரமான ஆங்கில உரையாடல்களில், பேட்டிகளில் பங்குபற்றி இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இன்னமும் சுருக்கமாக கூறினால் ராகவனை கனேடிய தமிழர்களின் Steve Paikin என்று கூறினால் மிகையாகாது.

முகநூல் தொடர்பு:

சிறிது காலம் நான் முகநூல் பயன்படுத்தியபோது ராகவனும் எனது நண்பர் பட்டியலில் இருந்தார். அப்போது ராகவன் பற்றிய சில மேலதிக தகவல்களை அறிய முடிந்தது. குறிப்பாக ஊடகவியலில் அவருக்கு காணப்பட்ட நாட்டம், கலைத்துறையில் அவரின் ஈடுபாடுகள், மற்றும் அவரது நகைச்சுவைத் தன்மையினையும் உணரமுடிந்தது. அவரது ‘விகடன்’ எனும் பயணர் நாமம் பொது வாழ்க்கையில் கடுமையான தொனியில் அல்லாது - இயல்பான ஈடுபாட்டை ராகவன் கொண்டிருப்பதையும் காண்பித்தது.

தமிழ்விசனில் பணியாற்றிய இன்னோர் ஊடக நண்பர் மூலம் முன்பு ராகவன் பற்றி கேட்டு அறிந்து அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்குமாறும் கூறினேன். எமது இல்லத்தில் தொலைகாட்சியை நான் அதிகளவு பார்ப்பது இல்லையாயினும், முன்பு ராகவன் தொலைக்காட்சியில் போகும்போது நான் வேறு அலுவல்களில் இருப்பினும் சில வினாடிகளாவது எனது கவனத்தை தொலைக்காட்சியின் பக்கம் குவித்து குறிப்பிட்ட நிகழ்ச்சி பற்றி மேலோட்டமாகவேனும் பார்ப்பதற்கு தவறுவது இல்லை. தவிர, தென் இந்திய கலைஞர்களின் நிகழ்ச்சிகளையும் ராகவன் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.

எதிர்பாராத சந்திப்புக்கள்:

பொதுவாழ்வில் நான் நம்மவருடன் எனது வலைத்தள முகத்துடன் உறவாடுவது மிகவும் அரிது. இதனால் பல சந்தர்ப்பங்களில் நம்மவரை பொதுவாழ்வில் சந்திக்கும்போது வலைத்தள முகத்துடன் நான் தொடர்பாடல் மேற்கொள்வது இல்லை. எனவே, ராகவனை இரண்டு தடவைகள் நான் எதிர்பாராதவகையில் சந்தித்தபோதும் என்னால் அவருடன் அறிமுகம் செய்ய முடியவில்லை.

1864825065186316184131n.jpg

அரசியல் பிரவேசம்:

ராகவனின் அரசியல் தொடர்புகள் பற்றி நான் விரிவாக எதுவும் அறிந்திருக்கவில்லையாயினும் அண்மையில் கனேடிய ஊடகங்கள் வாயிலாக ராகவன் பற்றி சில செய்திகளை அறிந்தபோது ஆச்சரியமாக விளங்கியது.

பல்வேறு விதமான துவேசங்களை சிலாகிக்கும் வகையில் கனேடிய ஊடகங்களில் நூதனமான முறையில் ராகவன் மீது சேறு அள்ளி வீசப்பட்டது. குறிப்பிட்ட இந்த விசமத்தனமான பொறிவலையில் கட்டுண்டு நம்மவர்கள் சிலரும் ராகவனை வீழ்த்தவேண்டும் என வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது.

CROSS ROADS:

நம்மவர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற, ராகவன் அவர்கள் நடாத்திய CROSS ROADS நிகழ்ச்சி ஒன்றின் சில காணொளிகளை இங்கு இணைக்கின்றேன். இதில் 1999 திரைப்படம் சம்பந்தமான தகவல்கள் இடம்பெறுகின்றன:

வாழ்த்துகள்:

நல்லதோர் வீணை செய்தே அதை நலம்கெட புழுதியில் எறிவதுண்டோ?

ராகவன் ஊடகத்துறையாயினும் சரி, அரசியலாயினும் சரி.. அதில் நன்கு பிரகாசித்து நம்மவர்களிற்கும், கனேடிய மக்களிற்கும் நற்சேவைகள் செய்து வாழ்வில் மென்மேலும் உயர்ந்துகொள்ள உளங்கனிந்த வாழ்த்துகள்!

ராகவன் அவர்கள் பற்றி Conservative கட்சி வலைத்தளத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

Gavan Paranchothy emigrated to Canada from India with his family at age 19. His undergraduate studies were at Seneca College at York University.

A prominent and well respected journalist, Gavan is Director of Public Relations and Community Development with Canadian Multicultural Radio (101.3 FM.) His responsibilities also include producing/hosting radio and television programs, including “Face to Face” and “Crossroads”

Family life and community are very important to Gavan. Married with 2 small children, he is very involved in their activities. His community involvement includes serving on the Boards of the Council of Agencies Serving South Asians (CASSA), and the Sruthi Music Academy. Gavan has worked as an advisor to the Canadian Humans Rights Voice.

Gavan is currently an online MBA candidate at the Robert Kennedy College in Zurich.

http://www.conservative.ca/team/meet_our_candidates/?linkTo=true&districtId=1613

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:Gavan Paranchothy emigrated to Canada from India with his family at age 19.

மீண்டும் தரிசனம் தந்தமைக்கு நன்றிகள்....அது உவர் இந்தியாவோ அல்லது நம்ம ஆளோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் யாழுக்கு வந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி...ராகவன் இவ்வளவு நாளும் புலி ஆதரவாளராய் இருந்து விட்டு திடிரென தான் தேர்தலில் நிற்பதற்காக புலிகளை விட்டுக் கொடுத்தது தப்பில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் சொன்ன மாதிரி....

இவரை "வைத்திலிங்கம்" நிகழ்ச்சியில், பார்த்து தெரியும். இவருடன், இன்னுமொரு கூட்டாளி மோதக சொக்கையுடன் மேளம் அடிப்பார்.

நிகழ்ச்சியின் இடையிடையே.... இவர்கள் விடும் பகிடிகள் மிகவும் பிடிக்கும். :)

Link to comment
Share on other sites

இவரை ரிவிஐ நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்..! நன்றாக நிகழ்ச்சிகளை நடத்துவார். :rolleyes:

Link to comment
Share on other sites

கலைஞன் ,

கட்சியைத்தேர்ந்தெடுப்பதும் தேர்தலில் நிற்பதும் அவரவர் விருப்பம்.டீ.வீ.ஜை தொடங்கும்போது அதன் விண்ணப்பதிற்கு கையெழுத்துவாங்கி அலைந்தவர்களில் நானும் ஒருவன்.பலத்த போட்டிகளுக்கிடையிலேயும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தான் இப்போ இருக்கும் நிர்வாகத்தவர்களுக்கு லைசன்ஸ் கிடைத்தது.எனது மருமகன் பெரிய பொறுப்பில் அதில் இருந்தார்.நானும்,எனது மனைவியும் கூட ஆரம்பத்தில் நிகழ்சிகள் செய்தோம் வொலன்டியராகத்தான்.பின்னர் அவர்களின் முகம்,பின்னணி வெளிவரத்தொடங்கியது.திரை மறைவில் பொறுப்பாக இருந்தவர் கூட எனக்கு தெரிந்தவர்.என்னிடம் பங்குதாரராக ஆகும் படியும் ஒருமுறை கேட்டிருந்தார்.வன்னிக்கு போய் வந்து தலைவரின் சொன்னதாக புது புறெஜெக்ட் ஒன்று தொடங்கி பின்னர் அப்படி ஒன்றும் இல்லை என உண்மை வெளிவர பெரும் பணத்துடன் ஒதுங்கிவிட்டார்.அவருக்கும் தலைவரின் பெயர்தான் மனைவி ஒரு டொக்டர்.

பின்னர் நேரடியாகவே ஊதுகுழலாகிவிட்டத்து.ஆப்படி அடிக்கும் இப்படிஅடிக்கும் என்பவர்கள் எல்லாம் உள்புகுந்துவிட்டார்கள்.அதில் ஒருவர்தான் இந்த ராகவனும்.எமது தமிழர்கள் இந்த விடயத்தில் மிக கெட்டிக்காரர்கள்.தமது சொந்தகாரியயத்திற்காக எதையும் பயன்படுத்துவார்கள்.பல வருடங்களாக என்னிடம் டீ.வீ.ஜை ஏ இல்லை.பின் 2008 ஆண்டு போர் தொடங்க மீண்டும் இணைப்பை எடுத்தேன்.என்ன சொல்லுகின்றார்கள் என்று பார்க்க.அதே பல்லவி.தமிழ்பிரியன் நேரே வேறு சொன்னார்,தேவை கருதி பல உண்மைகளை மறைக்க வேண்டியுள்ளது என்று.அப்போது தான் ராகவனது நிகழ்சியும் பார்த்தேன்.அப்போது ஒரு நாள் பாட்டி ஒன்றில் அவரை சந்திக்க நேர்ந்ததில் நேரே அவரிடமே கேட்டேன்,

புலி அழிந்து போக, இவ்வளவு பொய்களை மக்களுக்கு சொல்லும் நீங்கள் எல்லாம் எங்கு போய் ஒழிக்கப்போகின்றீர்கள் என்று,அவர் என்னை ஒரு மாதிரி வியேட் ஆக பார்த்துவிட்டு மற்ற டீ.வீ ஜை நண்பர்களிடம் போய் விட்டார்கள்.அவர்களுக்கு என்னைத்தெரியும் என்னைப்பற்றியும் தெரியும்.

இப்பொது புலியால் தான் இவர் இந்த இடத்தில் வந்தார் இப்போ புலியா? அவர்கள் சகவாசமே கூடாது என்கின்றார்,இவர் மட்டுமல்ல புலம் பெயர்ந்த பலரது நிலை அதுதான்.தமது தேவைக்கு எதையும் விற்க அவர்கள் தயார். விற்க தொடங்கியும் விட்டார்கள்.அதுவும் இப்போது இந்த போர்குற்ற அறிக்கை வந்தவுடன் பலர்தம்மீதும் ஏது நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ எனப்பயப்பிடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

புத்தன், அதே கேள்வி எனக்குள்ளும் முன்பு வந்தது. ஓர் தடவை தனது மாமியாரிற்கு சிறந்த ஆசிரியைக்கான இந்திய தேசிய விருது கிடைத்துள்ளதாக கூறி அவர் இந்திய குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கும் புகைப்படம் ஒன்றையும் முகநூல் செய்தியோடையில் ராகவன் இணைத்தார். நான் அப்போது உங்கள் மாமி இலங்கையில் இருந்து குடிபெயர்ந்தவரா என கேட்டு பின்னூட்டல் இட்டேன்.

ரதி, அர்சுன், நீங்கள் கூறுவதுபோல் ராகவனின் பின்புலங்கள், எந்தக்கதவினால் வந்துபோனார் எனும் விடயங்கள் எனக்கு தெரியாது. ஆனால்.. எமது வீட்டில் ரீவிஐ தொலைக்காட்சி நிலைத்தமைக்கு ராகவன் அவர்களின் நிகழ்ச்சிகள் முக்கிய பங்கை வகித்தன என்று கூறுவேன்.

த.வி.பு சம்பந்தமாக ராகவன் குத்துக்கரணம் அடித்துள்ளார், எனவே இவர் கூடாதவர் எனும் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், த.வி.பு சம்பந்தமாக இன்றுவரை குத்துக்கரணம் அடிக்காதவர்கள் யார், யார் என்பதற்கான பதில் எவரிடம் உள்ளது என தெரியவில்லை.

த.சி, இ.க, தற்போது ராகவன் ரீவிஐயில் வேலை செய்வது இல்லையென நினைக்கின்றேன். ரிவிஐ தொலைக்காட்சியின் ஆரம்ப காலத்து கலகலப்பு பின்நாட்களில் இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

த.வி.பு சம்பந்தமாக ராகவன் குத்துக்கரணம் அடித்துள்ளார், எனவே இவர் கூடாதவர் எனும் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், த.வி.பு சம்பந்தமாக இன்றுவரை குத்துக்கரணம் அடிக்காதவர்கள் யார், யார் என்பதற்கான பதில் எவரிடம் உள்ளது என தெரியவில்லை.

அப்போ கேபியும் புலிகளின் அழிவுக்கு பின் தானே இலங்கை அரசுடன் இனைந்து செய்யற்படுகிறார் ? அதுவும் தப்பில்லை தானே?

கலைஞன் ஒரு லிஸ்ட் போட்டு யாழில் இஅனைப்பீர்களா?

யார் யார் குத்துக்கரணம் அடிக்கலாம் யார் யார் அடிக்க கூடாது என்று!

Link to comment
Share on other sites

வினித், கே.பி கனடாவில் இருந்து கனடாவில் உள்ள ம.ராவின் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுகின்றாரா? ராகவன் கனடாவின் த.வி.பு ஆதரவு ஊடகங்களிற்கு ஊதியத்தின் அடிப்படையில் பணியாற்றினார் என்பது தவிர ராகவனிற்கும் த.வி.புவிற்கும் இதர கொடுக்கல் வாங்கல்களோ அல்லது ராகவன் த.வி.பு உறுப்பினரோ இல்லையே? இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களும் கனடாவின் த.வி.பு ஆதரவு ஊடகங்களில் பணியாற்றுகின்றார்கள். இவர்களை எவ்வாறு கே.பியிற்கு நிகராக முடிச்சுப்போட முடியும்?

Link to comment
Share on other sites

வினித், கே.பி கனடாவில் இருந்து கனடாவில் உள்ள ம.ராவின் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுகின்றாரா? ராகவன் கனடாவின் த.வி.பு ஆதரவு ஊடகங்களிற்கு ஊதியத்தின் அடிப்படையில் பணியாற்றினார் என்பது தவிர ராகவனிற்கும் த.வி.புவிற்கும் இதர கொடுக்கல் வாங்கல்களோ அல்லது ராகவன் த.வி.பு உறுப்பினரோ இல்லையே? இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களும் கனடாவின் த.வி.பு ஆதரவு ஊடகங்களில் பணியாற்றுகின்றார்கள். இவர்களை எவ்வாறு கே.பியிற்கு நிகராக முடிச்சுப்போட முடியும்?

கலைஞன்..

த.வி.பு சம்பந்தமாக ராகவன் குத்துக்கரணம் அடித்துள்ளார், எனவே இவர் கூடாதவர் எனும் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், த.வி.பு சம்பந்தமாக இன்றுவரை குத்துக்கரணம் அடிக்காதவர்கள் யார், யார் என்பதற்கான பதில் எவரிடம் உள்ளது என தெரியவில்லை
.

நீங்கள் மேலே கூறியதின் அடிப்படையில் தான் கேபியையும் ராகவன் என்பவரையும் ஒப்பிட்டு பேசினேன்.

நீங்கள் கூறியதில் இருந்து நான் புரிந்தது இது தான்.

பலர் புலிகள் விடையத்தில் குத்துக்கரணம் அடித்துள்ளார்கள் ஆகவே ராகவன் செய்வதில் குற்றம் கண்டுபிடிப்பதில் உடன் பாடுஇல்லை என்று?

நாங்கள் யாரை துரோகி என்று கூறுகிறோம்?

Link to comment
Share on other sites

நாங்கள் யாரை துரோகி என்று கூறுகின்றோம்..? நல்லதோர் வினா.. இதுபற்றி முன்பு ஓர் திரியில் இவ்வாறு எழுதினேன்:

நான் துரோகி! நீயும் துரோகி!

என்னையும் உன்னையும் பெற்ற பெற்றோர் துரோகி!

பெற்றவரைப் பெற்ற பேரன்,பூட்டன் முப்பாட்டனாரும் துரோகி!

அவன் துரோகி! இவன் துரோகி!

அவனைத் தெரிந்த அவள் துரோகி!

அவளுக்கு தெரியாமல் தெரிந்த அதுவும் துரோகி!

கடல் துரோகி! காற்று துரோகி!

கடலையும் காற்றையும் இணைக்கின்ற கதிரவன் துரோகி!

கதிரவனை சுற்றிவருகின்ற பூமியும் துரோகி!

கடவுள் துரோகி! கடவுளுக்கு கோயில்கட்டிய பக்தன் துரோகி!

பக்தனுக்கு சோறுபோட்ட பக்தை துரோகி! பக்தையுக்கு

பின்னால் அலைந்த பித்தனும் துரோகி! புத்தனும் துரோகி!

பறவைகள் பல்லி பாம்பு பூச்சி புழுக்கள் அனைத்தும் துரோகி!

நினைத்துப்பார்க்க நினைவில் வருகின்ற நினைப்பும் துரோகி!

நினைப்பைத் தூண்டுகின்ற நரம்பு துரோகி! மூளை துரோகி!

மூச்சு துரோகி! பேச்சு துரோகி! முழுவதும் துரோகி!

எழுதுகின்ற நாங்கள் துரோகி! வாசிக்கின்ற நீங்கள் துரோகி!

இதையெல்லாம் பிரசுரித்த யாழ் இணையமும் துரோகி!

Link to comment
Share on other sites

ராகவனை ஊடகவியலாளனாக எனக்கு பிடிக்கும். ஆங்கிலத்தில் செவ்விகள் எடுக்கும் விதம் என்னைக் கவர்ந்தது.

அரசியல் சாக்கடைக்குள் விழுந்து விட்டாரோ என எண்ணத்தோன்றுகிறது.இந்தியாவிற்கு அண்மையில் கனடிய பிரதமருடன் கனடிய வானொலி சார்பாக ஊடகவியலாளராக சென்றவர்.

Link to comment
Share on other sites

விரும்பியோ அல்லது விரும்பாமலோ கனேடிய அரசியலில் நம்மவர்கள் ஆணித்தரமாக கால்பதிக்கவேண்டிய தேவை உள்ளது. கனேடிய தமிழ் மக்களின் வளமான எதிர்காலத்திற்கு நம்மவர்களின் அரசியல் வரவு என்றென்றும் முக்கியமானது.

கனடாவில் தமிழர் அல்லாத வேற்று இன ஊடகவியலாளர்கள் அரசியலில் நுழைந்து உயர் அரச பதவிகளையும் வகித்துள்ளார்கள். அதைப்பார்த்து நாம் வியந்துள்ளோம். ஆனால் தமிழன் ஒருவன் – நம்மவர் அரசியலில் ஈடுபடுவதை ஏன் நாம் ஆதரிப்பது இல்லை? இது எமது தாழ்வு மனப்பான்மையா? அல்லது எங்களைவிட பெயரும், புகழும் பெற்று அவர் நன்றாக உயர்ந்துவிடுவார் என்கின்ற பொறாமையா?

என் டீ பி கட்சியாக அமையட்டும், லிபரலாக அமையட்டும், அல்லது Conservative ஆக அமையட்டும்… இந்த ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து கனடாவில் தேசிய அளவில் தேர்தலில் நிற்கும் ஒருவர் த.வி.பு ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொண்டால் கனேடிய அரசியலில் தலைநிமிர முடியாது என்பதே தற்போதைய யதார்த்தம். இப்படியான நிலையில் ராகவன் அவர்கள் தன்னை த.வி.புவிற்கு வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கவில்லை எனவே அவர் துரோகி, அவருக்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என நம்மவர் சிலர் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது மட்டும் அல்ல.. எதிர்பார்த்தவாறே கனேடிய ஊடகங்கள் சிலவற்றின் பொறிவலையில் அவர்கள் வீழ்ந்துவிட்டார்கள் என்பதையும் காட்டுகின்றது.

ஓர் காலத்தில் லிபரல் கட்சியினர் த.வி.புவிற்கு அறிந்தோ, அறியாமலோ ஆதரவு கொடுத்தார்கள். ஆனால்.. தற்போது எல்லோரும் குத்துக்கரணம் அடித்துள்ளார்கள். த.வி.பு இற்கு ஆதரவு கொடுப்பது தமது அரசியல் எதிர்காலத்திற்கு தாமே வைக்கின்ற ஆப்பு என்பதை அவர்கள் நன்றாக அறிந்துள்ளார்கள். ஆனால்.. ராகவன் மட்டும் இவ்விடயத்தில் சிலுவை சுமக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

Link to comment
Share on other sites

விரும்பியோ அல்லது விரும்பாமலோ கனேடிய அரசியலில் நம்மவர்கள் ஆணித்தரமாக கால்பதிக்கவேண்டிய தேவை உள்ளது. கனேடிய தமிழ் மக்களின் வளமான எதிர்காலத்திற்கு நம்மவர்களின் அரசியல் வரவு என்றென்றும் முக்கியமானது.

கனடாவில் தமிழர் அல்லாத வேற்று இன ஊடகவியலாளர்கள் அரசியலில் நுழைந்து உயர் அரச பதவிகளையும் வகித்துள்ளார்கள். அதைப்பார்த்து நாம் வியந்துள்ளோம். ஆனால் தமிழன் ஒருவன் – நம்மவர் அரசியலில் ஈடுபடுவதை ஏன் நாம் ஆதரிப்பது இல்லை? இது எமது தாழ்வு மனப்பான்மையா? அல்லது எங்களைவிட பெயரும், புகழும் பெற்று அவர் நன்றாக உயர்ந்துவிடுவார் என்கின்ற பொறாமையா?

என் டீ பி கட்சியாக அமையட்டும், லிபரலாக அமையட்டும், அல்லது Conservative ஆக அமையட்டும்… இந்த ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து கனடாவில் தேசிய அளவில் தேர்தலில் நிற்கும் ஒருவர் த.வி.பு ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொண்டால் கனேடிய அரசியலில் தலைநிமிர முடியாது என்பதே தற்போதைய யதார்த்தம். இப்படியான நிலையில் ராகவன் அவர்கள் தன்னை த.வி.புவிற்கு வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கவில்லை எனவே அவர் துரோகி, அவருக்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என நம்மவர் சிலர் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது மட்டும் அல்ல.. எதிர்பார்த்தவாறே கனேடிய ஊடகங்கள் சிலவற்றின் பொறிவலையில் அவர்கள் வீழ்ந்துவிட்டார்கள் என்பதையும் காட்டுகின்றது.

ஓர் காலத்தில் லிபரல் கட்சியினர் த.வி.புவிற்கு அறிந்தோ, அறியாமலோ ஆதரவு கொடுத்தார்கள். ஆனால்.. தற்போது எல்லோரும் குத்துக்கரணம் அடித்துள்ளார்கள். த.வி.பு இற்கு ஆதரவு கொடுப்பது தமது அரசியல் எதிர்காலத்திற்கு தாமே வைக்கின்ற ஆப்பு என்பதை அவர்கள் நன்றாக அறிந்துள்ளார்கள். ஆனால்.. ராகவன் மட்டும் இவ்விடயத்தில் சிலுவை சுமக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

கலைஞனின் கருத்தே எனது கருத்தும்

இன்று கனடாவில் தாம் புலிகளுக்கு ஆதரவு சொல்லி எவரும் அரசியல் செய்ய முடியாது. அப்படி செய்வது முட்டாள்தனம் மட்டுமன்றி தமக்கே தாம் கொள்ளி வைப்பதுக்கு சமனானது

யாழில் வந்து புனைப் பெயர்களில் புலிகளை ஆதரித்து எழுதும் எங்களுக்கே தனிப்பட்ட ரீதியில் எம் உண்மை பெயர் சொல்லி நாம் புலிகளை ஆதரிக்கின்றோம் என்று சொல்லி வெளிப்படையாக இயங்க முடியாத நிலைதான் இன்று இருக்கின்றது. அப்படி இருக்கும் போது அரசியல் அரங்கில் ஒரு வேட்பாளரிடம் மட்டும் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியாக இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

புலிகளுக்கான ஆதரவை மையமாக வைத்து கனடா அரசியலில் தமிழர்களின் வாக்குகளை ஆயுதமாக பயன்படுத்த முனைந்தால் அதில் எந்த பிரயோசனமும் மிஞ்சாது. முதலில் தமிழர் ஒருவரை வெற்றிபெற வைப்பதில் கவனத்தை செலுத்துவதே முக்கியம். அது எந்தக் கட்சியாகவேனும் இருக்கட்டும்.

எங்களாலும் ஒரு தொகுதியில் வெல்ல முடியும். எங்களிடமும் வாக்குகள் இருக்கின்றது என்ற சில அடிப்படைகளை உருவாக்குவோம். அந்த அடிப்படை நாம் எமது தேசியத்தை கனடாவில் பேசுவதற்கு ஒரு சிறு பிடிமானத்தையேனும் தரும்.

Link to comment
Share on other sites

எத்தனைபேர் அண்மைக்காலத்தில் கனேடிய ஊடகங்களின் செய்திகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றீர்கள் என்று தெரியவில்லை. குறிப்பாக The Globe & Mail ஊடகம் சாணக்கியமான வகையில் கனேடிய தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதில் பாரிய வெற்றி கண்டுள்ளார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது. இதன் பின்னணியில் எந்தக்கட்சி உள்ளது என்பதையும், அதன் உள்நோக்கங்களையும் The Globe & Mail ஊடகத்தை உன்னிப்பாக அவதானிக்கும் போது புரிந்துகொள்ளக்கூடியதாக அமையும். தனது கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்காவிட்டால் எவ்வாறான கேவலமான தந்திரங்கள் கையாளப்படும் என்பதற்கு பல மாதிரிகளை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளார்கள். கனேடிய தமிழ் லிபரல் விசுவாசிகள் இந்தத்தேர்தலின் பின்னராவது திருந்துவார்கள் என எதிர்பார்ப்போம்.

Link to comment
Share on other sites

இவர் ரீ.வி.ஐ.யிலிருந்து எவ்வாறு அதிகாரம் செய்தார் என்பதைத் தெரிந்தவர்கள் நன்கு அறிவர். அர்ஜூன் கூறியதுபோல, ரீ.வி.ஐ.யைப் பெறுவதற்கு எவ்வாளவு கஸ்டப்பட்டார்கள் என்று கூட இருந்து வேலை செய்தவர்களுக்குத்தான் தெரியும். ரீ.வி.ஐயில் இவர்கள் பொறுப்பேற்றபின்னர், ரீ.வி.ஐயைத் தொடங்கியவர்கள் ஒரு ஸ்பொட் எடுப்பதற்கு இவர்களின் பின்னால் எப்படி அலைந்தார்கள் என்று எங்களுக்குத் தான் தெரியும். ரீ.வி.ஐ எந்த நோக்கத்திற்காக பெறப்பட்டதோ அதற்கு முற்றிலும் மாறாகவே இவர்கள் வேலை செய்தார்கள். ரீ.வி.ஐப் பொறுப்பை வைத்துக் கொண்டு இவர்கள் காட்டிய வேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. முக்கியமாக இவர்.

ராகவன் வெல்லமாட்டார் என்று நிச்சயமாகத் தெரிந்தே கன்சர்வேட்டிவ் கட்சி அவரை அந்தத் தொகுதியில் நிறுத்தியது. தமிழர்களைப் பிரிக்க வேண்டுமென்று திட்டமிட்டு வேலை செய்தது கன்சர்வேட்டிவ் கட்சிதான். அதன் ஒரு அங்கம்தான் இவரை அந்தத் தொகுதியில் வேட்பாளராக நியமித்தது. பலிக்காடாவாகியது அவர்தானே தவிர தமிழ் மக்களல்ல. தேர்தல் முடிந்தபின்னர், அவரின் நிலை எங்கு போகப்போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். அரசியலும் இல்லாமல் தமிழ் சமூகமும் இல்லாமல் போக்கிடமின்றி இருக்கப் போகிறார். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த முக்கிய மந்திரி ஒருவரே, இவருக்கு எதிராக குளோப் அண்ட் மெயிலில் பேட்டி கொடுத்திருந்தார். பின்னர், கட்சியின் மானத்தைக் காப்பாற்ற மறுப்பறிக்கை ஒன்றை விட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பங்கேற்கும் நிகழ்வொன்றைத் தமிழ் அமைப்பொன்று ஒழுங்கு செய்திருந்தது. அதற்கு அவர் கட்சியைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்போடுதான் அங்கு போயிருந்தார். அந்தப் பாதுகாப்பு வரும்வரை இவர் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தார். தனது உரையை முடித்துக் கொண்டு உடனே கிளம்பி விட்டார். கேள்வி, பதில் நிகழ்ச்சிக்கு இருக்கவில்லை. அப்படி இருக்கிறது இவரின் நிலைமை.

உலகத்தில் எல்லோரும் சுயநலவாதிகள்தான். ஆனால், இத்தனை பச்சைசுயநலவாதியாக இருக்காதீர்கள் என்றுதான் எதிர்பார்க்கிறோம். கனேடிய அரசியலுக்குள் தமிழர்கள் புகுவதில் எந்த எதிர்ப்பும் இங்கு இல்லை. இவ்வாறான சுயநலவாதிகள், குத்துக்கரணங்கள் அடிப்பவர்கள் வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். இதே தேர்தலில், ராதிகா சிற்சபேசனும் போட்டியிடுகிறார். ஆனால், அவரைப் பற்றி எந்த அவதூறும் வரவில்லையே. ஏன் இவரைப் பற்றி மட்டும் இத்தனை அவதூறுகள் செய்திகள் வருகின்றன என்று யோசித்துப் பார்த்தீர்களா?

ஒரு விடயத்தை எழுதுவதற்கு முன்னர், அதைப் பற்றி நன்றாகத் தெரிந்துவிட்டு எழுதவேண்டும். இவ்வாறு மேலோட்டமாக அறிந்து வைத்துக் கொண்டு எழுதாதீர்கள்.

Link to comment
Share on other sites

ராதிகா சிற்சபேசன் விடயத்தில் The Globe & Mail ஏன் புகுந்து விளையாடவில்லை என நீங்கள் அப்பாவித்தனமாக கேட்பது நகைப்பாக உள்ளது. யார் மேலோட்டமாக எழுதுகின்றார்கள் என்பதற்கு உங்கள் அப்பாவித்தனமான இந்தக்கேள்வியே போதும். சும்மா இருந்த Peter Kent அவர்களின் வாயை கிளறியும் தனது சாணக்கியத்தை காண்பித்தது குறிப்பிட்ட ஊடகம். இன்று ராகவன் விடயத்தில் கேபியையும் தான் பேட்டி கண்டு உறுதிப்படுத்தியுள்ளதாக இன்னோர் புதிய செய்தியையும் The Globe & Mail கூறியுள்ளது. அதாவது, ராகவன் த.வி.புவுடன் மிக நெருக்கமாக தொடர்புபட்டவர் இவர் ஓர் பயங்கரவாதி என்று நிரூபிப்பதற்கு குறிப்பிட்ட ஊடகம் மிகக் கடுமையாக முயற்சிக்கின்றது. மறுபுறத்தில் தான் த.வி.பு ஆதரவாளர் இல்லை என ராகவன் வாய் மூலம் கூறவைப்பதன் மூலம் உங்களைப்போன்ற விசயங்கள் மெத்த தெரிந்தவர்களின் (?) வெறுப்பை சம்பாதிக்க வைக்கின்றது. ஆக மொத்தத்தில் ஓர் கல்லில் பல மாங்காய்கள். நீங்களும் ராகவன் மீது உங்கள் தனிப்பட்ட வெறுப்புக்களை கொட்டுவதற்கு காத்திருந்ததுபோல் ஏதோ உள்வீட்டு அரசியல்பற்றி அலாதியாக விபரித்து பச்சை, சிவப்பு சுயநலம் பற்றி வேறு பேசுகின்றீர்கள். ஓர் விடயத்தை பற்றி எழுதுவதற்கு அடிப்படை Logic புரிந்தால் போதும். அது உங்களிற்கு இல்லை போல் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

ராதிகா சிற்சபேசன் விடயத்தில் The Globe & Mail ஏன் புகுந்து விளையாடவில்லை என நீங்கள் அப்பாவித்தனமாக கேட்பது நகைப்பாக உள்ளது. யார் மேலோட்டமாக எழுதுகின்றார்கள் என்பதற்கு உங்கள் அப்பாவித்தனமான இந்த்தக்கேள்வியே போதும். சும்மா இருந்த Peter Kent அவர்களின் வாயை கிளறியும் தனது சாணக்கியத்தை காண்பித்தது குறிப்பிட்ட ஊடகம். இன்று ராகவன் விடயத்தில் கேபியையும் தான் பேட்டி கண்டு உறுதிப்படுத்தியுள்ளதாக இன்னோர் புதிய செய்தியையும் The Globe & Mail கூறியுள்ளது. அதாவது, ராகவன் த.வி.புவுடன் மிக நெருக்கமாக தொடர்புபட்டவர் இவர் ஓர் பயங்கரவாதி என்று நிரூபிப்பதற்கு குறிப்பிட்ட ஊடகம் மிகக் கடுமையான முயற்சிக்கின்றது. மறுபுறத்தில் தான் த.வி.பு ஆதரவாளர் இல்லை என ராகவன் வாய் மூலம் கூறவைப்பதன் மூலம் உங்களைப்போன்ற விசயங்கள் மெத்த தெரிந்தவர்களின் (?) வெறுப்பை சம்பாதிக்க வைக்கின்றது. ஆக மொத்தத்தில் ஓர் கல்லில் பல மாங்காய்கள். நீங்களும் ராகவன் மீது உங்கள் தனிப்பட்ட வெறுப்புக்களை கொட்டுவதற்கு காத்திருந்ததுபோல் ஏதோ உள்வீட்டு அரசியல்பற்றி அலாதியாக விபரித்து பச்சை, சிவப்பு சுயநலம் பற்றி வேறு பேசுகின்றீர்கள். ஓர் விடயத்தை பற்றி எழுதுவதற்கு அடிப்படை Logic புரிந்தால் போதும். அது உங்களிற்கு இல்லை போல் தெரிகின்றது.

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ராதிகாவும் (Scarborough Rouge River ) ராகவனும் ( Scarborough South West) வேறு வேறு தொகுதிகளில் தானே போட்டியிடுகின்றனர். இன் நிலையில் இரண்டு தமிழர்களையும் நாம் ஆதரிக்கவேண்டும். எமக்குள் இருக்கும் பிரச்சனையை இத்தேர்தலில் கிளறிக்கொண்டிருப்பது எமக்கு பின்னடைவே.

இவர் ரீ.வி.ஐ.யிலிருந்து எவ்வாறு அதிகாரம் செய்தார் என்பதைத் தெரிந்தவர்கள் நன்கு அறிவர். அர்ஜூன் கூறியதுபோல, ரீ.வி.ஐ.யைப் பெறுவதற்கு எவ்வாளவு கஸ்டப்பட்டார்கள் என்று கூட இருந்து வேலை செய்தவர்களுக்குத்தான் தெரியும். ரீ.வி.ஐயில் இவர்கள் பொறுப்பேற்றபின்னர், ரீ.வி.ஐயைத் தொடங்கியவர்கள் ஒரு ஸ்பொட் எடுப்பதற்கு இவர்களின் பின்னால் எப்படி அலைந்தார்கள் என்று எங்களுக்குத் தான் தெரியும். ரீ.வி.ஐ எந்த நோக்கத்திற்காக பெறப்பட்டதோ அதற்கு முற்றிலும் மாறாகவே இவர்கள் வேலை செய்தார்கள். ரீ.வி.ஐப் பொறுப்பை வைத்துக் கொண்டு இவர்கள் காட்டிய வேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. முக்கியமாக இவர்.

இதற்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன சம்மந்தம்?

ராகவன் வெல்லமாட்டார் என்று நிச்சயமாகத் தெரிந்தே கன்சர்வேட்டிவ் கட்சி அவரை அந்தத் தொகுதியில் நிறுத்தியது. தமிழர்களைப் பிரிக்க வேண்டுமென்று திட்டமிட்டு வேலை செய்தது கன்சர்வேட்டிவ் கட்சிதான். அதன் ஒரு அங்கம்தான் இவரை அந்தத் தொகுதியில் வேட்பாளராக நியமித்தது.

இவ்வாறு ஒரு நோக்கம் இருப்பின் இவரை வெற்றிபெற வைக்கவேண்டிய அவசியம் அதிகளவில் இருக்கின்றது.

Will LTTE [NCCT] pave a way to destroy the Conservative government?

Subramaniam Vasanth – Ontario Canada

Ontario, 25 February (Asiantribune.com): It has come to the limelight of the penetration of the LTTE into the Conservative Government through a narrow path was exposed on January 15th, 2011 when Paul Calandra, MP for Markham Oakridges, participated in the official opening ceremony as the chief guest of the National Council of Canadian Tamils [NCCT] at 5310 Finch Avenue East, Toronto. None of the Liberal and NDP parliamentarians attended the event including the home riding MP Jim Karigiannis. Participation of Paul Calandra in this event brings a negative impact among the mainstream Canadians.

It has been proved by the media that NCCT is a proxy of two entities [LTTE/WTM] that are banned in Canada by the Conservative Government. The photo evidences and material evidences published in the media awakened the community of the contradiction that the Party has between anti-terrorism and also involved in encouraging terrorism. I hope at the best interest of national security, the Conservative government will contact the law enforcing body and concerned government departments.

One could question that whether Paul Calandra’s participation was intentional or unintentional? But in Paul’s own riding he has quite a large number of Tamils and he is well aware of the demarcation between the group of LTTE activists and the law abiding Tamils.

Therefore there is no room to justify that he participated without any pre-knowledge of the event. Conservative’s radars always very much watchful when it comes to Tamil Community, so their request to Paul to participate on this event is certainly a deliberate action. The ban on LTTE and WTM indicated that it is an offence to knowingly participate in, contribute to, or facilitate certain activities of a listed entity. Other related offences are set out in the Criminal Code. So when something goes wrong with NCCT it may be too late for Conservatives to distance from this association which has executives and members who’s past in controversial and sighting connection to the outlawed associations.

On Monday June 16, 2008, when the ban was imposed on World Tamil Movement, the then Minister of Public Safety Stockwell Day said “...The listing of the WTM is meant to support the Tamil Community of Canada, which consists of law-abiding and hard working people who have left their country of origin to build a better life for themselves and their families in Canada. The Government is taking this step to help ensure that Canadians, including the Tamil community are protected from the activities of this organization.”

What a contradiction within the party the Public Safety Minister banned this entity with above remarks, whereas Paul Calandra, a MP from the same government participated in the opening ceremony of NCCT the proxy association of the banned entity. Not only Conservatives banned LTTE and WTM indeed it was a promise in the election in 2005. In spite of the Conservative government banned these associations to support the Tamil Community from intimidation, extortion and threaten Mr. Paul Calendra, actively participated NCCT opening ceremony and encourage them to function legally?

Some Conservative Party politicians undermined and ignored their own government’s policy and trying to get a few votes in an inappropriate manner from the entities which are banned. It cannot be tolerated by anyone who supports the Party. I am very certain that the NCCT is a proxy of LTTE/WTM it will be pretty soon proved by the concerned departments. It would be too late if the government does not take the necessary action right away. We don’t want our nation be centre of growing and exporting terrorism.

To get a vote from LTTE supporters the Conservative might lose 1,000 of their traditional votes from strong Conservatives who are anti-terrorism supporters as this relationship with the LTTE is contrary to Conservatives policy and principle.

The front runners of the NCCT are with full of lies. They don’t have any other choices than telling lies to the Conservatives about their activities and hidden agenda. Once they started with one lie then to cover it up they will come with more lies. They portrait themselves as the sole representative of the Canadian Tamils and it isn’t true. The majority of the Canadian Tamils are law abided citizens and only a handful of these people misguide and mislead the Conservative politicians. Unfortunately some of the parliamentarians are the victims of it. It is not a biased opinion and it can be proved with evidences when it is required.

Some may try to deny and give lame excuses that the exhibits and evidences are not proving their link with LTTE and WTM but the fact that cannot be challenged is the LTTE/WTM are the one who form the NCCT to carry out their agendas by misleading the government. The founding team led by Canadian LTTE leader Nehru Gunaratnam with the assistance of Conservative Party’s Community Relations Council representative Amaleethan Xavier.

Evidences are in possession and you could obtain it by Google the name. There is no doubt Conservative Party’s Community Relations Council’s representative actively participating in the activities of the Canadian LTTE and WTM activities. They are not at all concern of the Conservative Party and its government or the safety of Canada. Their only agenda is to do what they have been doing it in a protected way by forming a new organization but carrying out the same agenda – Old wine in a new bottle.

They may say to you that it is a process of transparency but it is a process of transferring World Tamil Movement’s activities to its proxy to carry it openly. They formed a group of delegates of NCCT and periodically meeting with Parliamentarians and Ministers as they are the representatives of Tamils. This team is led by Ragavan Paranchothy who portrait himself as a media person, who is interested in the wellbeing of the Canadian Tamils but his interest is to carry out the agenda of LTTE/WTM. He has been working at CMR 101.3FM a media that belongs to the WTM. This media was seized by LTTE/WTM in 2006 May from its genuine owner and Ragavan Paranchothy is acting on the direction of LTTE/WTM to carry out the given hidden task.

In the recent past there are individuals and entities that identify themselves as Conservatives but they are not genuine Conservative supporters or members who have hidden agendas of WTM/LTTE’s activities. Some of our MPs were taken for a ride by this individuals and entities and I would cite Mr. Patrick Brown is one of them.

Shan Thayaparan, who won the Conservative party ticket at Markham and Unionville riding, was the founder of boomicom telecommunication .which is funded by WTM. He was a Liberal executive member while maintaining his Conservative connection. Being a Liberal executive member, he requested the NDP federal nomination for Scarborough Rough river riding which was reject by NDP then. Shan Thayaparan is the blind follower of LTTE and its principal and carries out the task ordered by LTTE leadership. Other than that he does not have any political interest in Canada and Canadians, but an aggressive lieutenant of LTTE to fulfill the interest of his masters.

Shan Thayaparan being a lieutenant of LTTE, he has also brought most of his family members into the LTTE. His wife brother Suresh Ratnabalan is elected to Transnational Government of Tamil Eelam (TGTE) and an active member of its parliament which was established by LTTE nominating Uruthirakumaran as its Prime Minister, the right hand man of late LTTE leader Mr.V.Pirabaharan. Some of his other close relatives are also holding positions in LTTE run organizations in Canada and else where. Mostly LTTE appoints only their loyal and trustful people for any its official positions. By appointing Shan Thayaparan as the Election Commissioner of National Council of Canadian Tamils (NCCT), the LTTE has clearly indicated Shan Thayaparan as its very loyal and trustful lieutenant.

LTTE has selected one of its long time loyalists to seek federal nomination for Scarborough South west is none other than Ragavan Paramsothy, who is well and very closely connected with LTTE high command. His media connections brought him close to Conservatives and he was on the member of media team while Prime Minister Stephan Harper visited India.

LTTE has used Ragavan Paramsothy’s media image to infiltrate into Conservatives and trying to elect their loyal lieutenant to Canadian Parliament to raise its separatist voice to be heard to the world. But Conservatives who are trying to win the GTA seats with separatist minority votes for a majority government fail to understand that their image throughout Canada will have a bit hit including in the Conservative support base of North. May be LTTE nominated Ragavan Paramsothy will pump millions of dollars for election expenses for Conservatives, who has a vast LTTE wealth behind them, but ruin thousands of traditional Conservative votes and trust in the party they voted for decades, which will ultimately erode their support base.

I am pretty sure if the government would have known NCCT’s agenda it would not encouraged them in having discussion meeting with Ministers and MPs. NCCT’s meeting with the government’s representative will backfire the Conservatives. Whether we like it or not in a short period of time it may be exposed to the media that NCCT is infiltrating into the Conservative Party in a very systematic manner and if the party is not careful it will lead to a disaster.

- Asian Tribune

Link to comment
Share on other sites

இதற்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன சம்மந்தம்?

அது வேறொன்றும் இல்லை. பலர் தமது தனிப்பட்ட கோபதாபங்களை தீர்த்துக்கொள்வதற்கு இதை ஓர் வாய்ப்பாக பயன்படுத்துகின்றார்கள். சங்கதி.கொம் எனும் வலைத்தளத்திற்கு சென்று பாருங்கள்; The Globe & Mail கட்டுரைகளை மேற்கோள்காட்டி எவ்வாறு வரிந்துகட்டி சிலர்மீது தமது தனிப்பட்ட கோபதாபங்களை தீர்த்துக்கொள்வதற்கு வாய்க்குள் வந்துவிழுந்த அவல்போல் இந்த வாய்ப்பை பயன்படுத்துகின்றார்கள் என்று.

மறுபுறத்தில் வெட்டி ஒட்டுகின்ற திருட்டு தமிழ்வலைத்தளங்கள் சனத்திற்கு குசி ஏற்படுத்தும் வகையில் இவை சம்பந்தமான செய்திகளை பரபரப்பான முறையில் வெட்டி ஒட்டி தமது வலைத்தளங்களினை பிரபலப்படுத்த முயல்கின்றன. இந்தக் கேவலங்களை யாழ் இணையத்தில் ஊர்ப்புதினத்தில் கொண்டுவந்துகொட்டி அழகு பார்க்கும் கூட்டம் வேறு.

ஆனால்.. மறுபுறத்தில் The Globe & Mail, அதன் பின்னணியில் நின்று செயற்படுபவர்கள் தமது நோக்கத்தில் பூரண வெற்றி பெற்றுள்ளார்கள் என்றே சொல்லத் தோன்றுகின்றது. அண்மைய The Globe & Mail கட்டுரையின் பிரகாரம் கே.பி அவர்கள் ராகவன் தன்னுடன் ஊடகத்துறையிற்கு அப்பாலும் தொடர்புடையவர் எனும் தொனியில் The Globe & Mailஇற்கு நேரடியாக தெரிவித்து உள்ளது வலை எங்கு வீசப்படுகின்றது என்பதை காட்டுகின்றது.

தமிழ் லிபரல் விசுவாசிகள் லிபரல் கட்சியின் உண்மையான விசுவரூபத்தை உணரும்போது அது Conservative கட்சியைவிட எவ்வளவு காட்டமானது என்பதை அறிந்துகொள்வார்கள்.

Link to comment
Share on other sites

தமிழ் லிபரல் விசுவாசிகள் லிபரல் கட்சியின் உண்மையான விசுவரூபத்தை உணரும்போது அது Conservative கட்சியைவிட எவ்வளவு காட்டமானது என்பதை அறிந்துகொள்வார்கள்.

விசுவாசிகள் மட்டுமல்ல லிபரலால் 'பெரிய மனிதர்கள்' என்று ஊருக்கு பேய்க்காட்டிய சிலதுகளும் இதில் இருக்கு.

Link to comment
Share on other sites

From Daily Mirror.lk

The Conservative government's own expert on Tamil extremism is raising concerns about a Toronto Tory candidate, claming he has worked for two television stations that telecast "propaganda" for the Tamil Tigers.

Rohan Gunaratna told CBC News that Raghavan "Gavan" Paranchothy's work for two Tamil television stations in Toronto that "at times telecast information that was propaganda for the LTTE, the Tamil Tiger organization" does not work towards the reconciliation Sri Lankans of all beliefs need.

But in an interview with CBC News, Paranchothy denied that, saying: "If I can do anything to trigger [reconciliation] or be part of that process, I'd be happy to."

The government called upon Gunaratna when Tamil migrant boats appeared off the coast of British Columbia last August.

Paranchothy sparked controversy after a YouTube video of him emerged calling soldiers of the Tamil Tigers "freedom fighters" and "martyrs." The Canadian government has classified the Tamil Tigers as a terrorist organization.

Gunaratna, head the International Centre for Terrorism and political violence based in Singapore, said Paranchothy's characterization of the Tamil Tigers led him to believe Paranchothy "had sympathy and support for the Tamil Tigers."

Last week Conservative candidate Peter Kent questioned his party's vetting of the Scarborough Southwest candidate after watching the YouTube video of a "Heroes Day" special that was hosted on a Tamil station in late November

In the video, Paranchothy talks about "Tamil freedom fighters who sacrificed their lives for the freedom of the rest of the Tamils in Sri Lanka, either guidedly or misguidedly."

Paranchothy issued a statement saying: "I absolutely condemn terrorists and terrorism. I believe in the rule of law and the democratic process." He also said his actions as a journalist do not reflect his personal views.

Kent later clarified his remarks, saying at the time he made his comments he was not aware Paranchothy "had given firm and unequivocal assurances that he is not a supporter of the [Tigers]."

Kent also apologized to Conservative Leader Stephen Harper for embarrassing him during the campaign.

Paranchothy told CBC News that Kent's comments were "unfortunate," but said he continues to have a lot of respect for his fellow former broadcaster, whom he has not spoken to since the incident.

Paranchothy would not discuss the political slant of the stations where he worked, and suggested he had severed ties with them last summer.

Paranchothy's office later called CBC News to clarify that he continued to work for one of the stations right up until the election call.

CBC News has also learned that Paranchothy's first cousin, Thevathasan Kanagasabai, is under arrest in Sri Lanka as a suspected terrorist.

"He's a long lost cousin of mine," Paranchothy told the CBC. "I've got cousins all over the world, half of them I've never seen.

"But as far as this man is concerned, I think he's innocent. He worked for the Sri Lanka filming corporation or something, and he was at the wrong place at the wrong time from what I hear." (CBC news)

-----------------------------------------------------------------------------------------------------

www.dailymirror.lk/news/

Link to comment
Share on other sites

The Globe & Mail இல் இன்று பிரசுரம் செய்யப்பட்ட செய்தியை பாருங்கள்:

Former Tiger chief confirms he talked to man now running for Tories

குறிப்பிட்ட தலைப்புக்கான பின்னூட்டல்கள் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

+++

Comments have been disabled

Editor's Note: We have closed comments on this story for legal reasons. We appreciate your understanding.

+++

இங்கிருக்கும் The Globe & Mail அங்கு எங்கேயோ கோடிக்குள் உள்ள கே.பியுடன் நேரடி தொடர்பெடுத்து பேசியுள்ளதாம். சூழ்ச்சிகளின் அடிப்படையை புரிந்துகொள்வதற்கு இவையே போதும்.

Link to comment
Share on other sites

சுகன். இவரை வளர்த்துவிட்ட ஒரு அமைப்பிற்கே இவர் வளர்ந்தபின்பு காட்டிய வேலைகளைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் அதனைக் குறிப்பிட்டேன். நீங்கள் கூறுவதுபோல், இவரை வெற்றிபெற வைப்பதற்காகத்தான் அந்தத் தொகுதியில் நிறுத்தியது உண்மையெனில், தேர்தலுக்குப் பின்னர், இவரை அந்தக் கட்சி எந்த நிலையில் வைத்திருக்கப் போகிறது என்பதைப் பார்த்தபின்னர் புரிந்து கொள்ளுங்கள். இவரைத் தொடர்ந்தும் அந்தக் கட்சிக்குள் வைத்திருப்பதே கேள்விக்குறி. பொறுத்திருந்து பார்ப்போம்.

கலைஞன், இவருடன் எனக்கென்ன தனிப்பட்ட கோபம் இருக்கப்போகிறது? இவருடன் நான் கதைத்ததுகூடக் கிடையாது. ரீ.வி.யிலும் பொதுஇடங்களிலும் பார்த்ததைத் தவிர எனக்கும் இவருக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. ஆனால், நான் அமைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, தொண்டர்கள் வாயிலாகப் பலவற்றை அறிந்திருக்கிறேன். ஓவ்வொரு நிகழ்வும்போதும், ரி.வீ.ஐ.இல் ஸ்பொட் எடுப்பதற்கோ அல்லது விளம்பரங்கள் செய்வதற்கோ பல பிரயத்தனங்கள் செய்யவேண்டியிருந்தது. இந்த அமைப்பிற்குள் நான் 15 வருடங்களுக்கு மேலாக வேலை செய்திருக்கிறேன். அதனால் எனக்கு நிறைய விடயங்கள் தெரியும். அர்ஜீன் குறிப்பிட்டது சொற்ப விடயங்கள்தான். அதற்கும் மேலாக இதற்குள் நிறைய விடயங்கள் அடங்கியிருக்கிறது. அந்த அனுபவங்களால்தான் தேர்ந்தெடுக்கும் நபர் சரியானவராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். திரும்பவும் தவறானவர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்பதற்காகவே நான் இவ்வாறு எழுதி வருகிறேன். தேர்ந்தெடுக்கும் நபர் நன்மை செய்யாவிடினும் தீமை செய்யாமல் இருந்தாலே போதும். தேர்தலுக்கு முன்னரே இப்படிக் குட்டிக்கரணம் போடும் இவர், தேர்தலில் வென்றபின்னர், எம்மை விற்கமாட்டார் என்று என்ன நிச்சயம்? இதுவரைகாலமும் எத்தனை தமிழர்கள் தேர்தலில் போட்டியிட்டார்கள்.? அவர்கள் எல்லோரும் எமக்கு என்ன நன்மையைச் செய்தார்கள்? இப்போது எங்கிருக்கிறார்கள்? ஏன் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை?

எல்லா ஊடகமும் ஏதோவொரு கட்சியைச் சார்ந்துதான் இயங்குகிறது. அது, பி.பி.சி.க்கும் பொருந்தும் சி.என்.என்.இற்கும் பொருந்தும். அதேபோல், அவர்களது பத்திரிகையின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக அவர்கள் எந்த நிலைக்கும் செல்வார்கள். சுதந்திரமாகத் திரியும் கே.பி.யை தொடர்பு கொள்வது ஒன்றும் கடினமான விடயம் இல்லையே. தனிநபர் ஒருவர் தலைவரோடு நின்று எடுத்த ஒரு (இரகசியமாக வைக்கப்படவேண்டிய) போட்டோவையே அந்தப் பத்திரிகையால் பெறமுடிந்தபோது, இது ஒன்றும் கடினமான விடயமாக எனக்குத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.