Jump to content

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டார்

Recommended Posts

இஸ்லாம் முறை படி சடலத்தை தண்ணியில் போடுறது வழமையா? எனக்கு என்னமோ இது உலகத்துக்கு ஆபத்தான விடயாமாகவே தெரிகிறது, இது முஸ்லீம்களின் மனதை புண்படுத்தும் செயலாகவே கருதப்படும். கடும் முஸ்லீம் போக்கு உடையவர்களை இது இன்னமும் கடுமைபடுத்தும்.

இஸ்லாம் மார்கத்தில் மூன்று சந்தர்ப்பங்களில் மட்டும் நீரில் போடுவது அல்லது நீரிலேயே விடுவது சரியாக இருக்குமாம் என என அரபு நாட்டு நண்பர் கூறினார்

1. கடல் பயணத்தின் போது இறக்க நேரிட்டால், கரைக்கு கொண்டு வர 24 மணித்தியாலங்களுக்கு மேலே செல்லுமாயின் கடலில் / நீரில் போடலாம்

2. கடலில் / ஆற்றில் நீந்த முற்படும் போதோ அல்லது விபத்தினாலோ மரிக்க நேரிட்டால் உடனடியாக எடுக்க முடியாவிடின் தண்ணிக்குள்ளேயே விட முடியுமாம்

3. அடக்கம் செய்ய வேறு எந்த வழியும் இல்லாமல் , உடல் அழுக தொடங்குமாயின் வேறு வழி இன்றி நீர்ப் பரப்பு ஒன்றில், காலில் ஒரு நிறை கூடிய பொருளை கட்டி கடல் வாழ் உயிரினங்கள் உடனடியா உண்ணா வண்ணம் போடுவது

இவை தவிர வேறு காரணங்களுக்காக நீரில் போடுவது மார்க்கத்துக்கு எதிரானதாம். அமெரிக்க எந்தவித காரணமும் இன்றி கடலில் வீசி முஸ்லிம் மக்களை வேண்டும் என்றே அவமதித்து விட்டதாகவே கூறுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply

சுகன்,

தமிழர்கள் எவரையும் ஒசாமா கொல்லவில்லை என்று நினைக்கிறேன். அவரால் கொல்லப்பட்டவர்கள் 3000 அமெரிக்கர்களும், இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களும், ஈராக்கியர்களும் முன்னால் சோவியத் ஒன்றிய மக்களும்தான். ஆனால் அமெரிக்கா மீதான தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பதில் இன்னும் பெரும் வாதங்களும் பிரதிவாதங்களும் இருப்பதை மறுக்க முடியாது. சிலவேளை அமெரிக்கர்கள் என்பதற்குப் பதிலாக தவறுதலாக தமிழர்கள் என்ப்று எழுதியிருப்பீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

நாம் ஒசாமாதான் அமெரிக்கக் கொலைகளுக்குக் காரணம் என்றே செயற்பட வேண்டியிருக்கிறது. அமெரிக்கர்களுக்கு நீதிகேட்டு ஒசாமவைக் குறிவைத்ததுபோல் மகிந்தவின் போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்டுப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்.. திருத்தியுள்ளேன்.

ஓசாமா ஏற்கனவே கிட்ணி பழுதாகி இறந்துவிட்டதாக ஒரு சந்தேகம் இருக்கிறது. இப்போது மறுபடி உரியமுறையில் கொல்லப்படுகின்றாரோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி? பின்னணித் தகவல்கள்!

Posted by admin On May 3rd, 2011 at 9:52 am

அல் கெய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடன் மறைந் திருந்த கட்டிடத்தை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒசாமா பின் லேடனைத் தேடி ஐம்பதிற்கும் மேற்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் தாராபோரா மலைத் தொடரில் தேடிவந்த போதிலும் அவரின் மறைவிடத்தை அமெரிக்காவால் கண்டு பிடிக்க முடியவில்லை.

அத்துடன் செய்ம்மதித் தொலைபேசியில் ஒசாமா பின் லேடன் உரையாடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது எனக் கருதிய அமெரிக் காவின் செயற்கை கோள்கள் மென்பொருட் களின் உதவியோடு செய்ம்மதி தொலைபேசி உரையாடல்களையும் கண்காணித்து வந்த போதிலும் பயன் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் தான் மறைந்திருக்க வேண்டும் என்ற முடிபுக்கு வந்த அமெரிக்கா, அவரைத் தேடி பாகிஸ்தானில் தனது தேடுதல் பணியை தீவிரப்படுத்தியது. ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானின் உளவுப் பிரிவே மறைத்து வைத்திருக்கின்றது என அமெரிக்கா சுட்டிக்காட்டியிருந்த போது பாகிஸ்தான் அதை முற்றாக மறுத்திருந்தது.

இந்நிலையில் லிபியாவின் ஜனாதிபதி கேணல் கடாபியை இலக்கு வைக்க ஆரம்பித் துள்ள அமெரிக்கா இத்தகையதொரு நிலைமை பாகிஸ்தானுக்கு ஏற்படும் என எச்சரித்திருந்த நிலையில் ஒசாமா பின்லேடன் குறித்த சில தகவல்களை பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒசாமா பின் லேடன் மறைந்திருந்த பிரதேசத்தில் ஊடுரு விய அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை யின் உளவாளிகள், சிலரைக் கண்காணிக்க ஆரம்பித்தனர்.

இதனூடாக ஒசாமா பின் லேடனுக்கான கடிதப் பரிமாற்றங்களைச் செய்யும் நபரை அடையாளம் கண்ட அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை இந் நபர் வசித்து வந்த வீட்டை கடந்த ஜனவரி மாதம் அடையாளம் கண்டிருந்தது. ஆனால் இவரை உடனடியாக கைது செய்து விசாரணை செய்யாத அமெரிக்க மத் திய புலனாய்வுத் துறை தொடர்ந்து தவல்களைச் சேகரிப்பதில் தீவிரமான முயற்சிகளை மேற் கொண்டது. இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோ மீற்றர் தூரத் தில் 18அடி உயரத்தையும் மிக உயர்ந்த சுற்றுச் சுவர்களையும் கொண்ட மூன்று மாடிகள் கொண்ட 2005ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந் நபர் வாழ்ந்து வந்த வீட்டுக்கு தொலைபேசி மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் கூட இல்லாமல் இருப்பதை அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை கண்டுபிடித்தது. அத்துடன் இவ் வீட்டின் குப்பைகளைக் கூட வெளியில் கொட்டாமல் தங்களது வீட்டுப் பிரதேசத்திற்குள்ளேயே அவர்கள் எரித்து வந்ததையும் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை அவதானித்தது.

இவ் வீட்டில் ஒசாமா பின் லேடனுக்கான கடிதங்களைப் பரிமாறும் நபரும் அவரது சகோதரரின் குடும்பங்களையும் தவிர இன் னொரு குடும்பமும் இருப்பதைக் கண்டு பிடித்த அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை அக் குடும்பம் ஒசாமா பின் லேடனின் குடும்பமாக இருக்கலாம் என்ற முடிபுக்கு வந்தது. இந்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை யிடுவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவின் தலைமையில் நடை பெற்ற ஐந்து உயர்மட்டக் கூட்டங்களில் பாகிஸ்தானுக்கு தெரியாமல் இப்படை நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து முடிபெடுக்கப்பட்டது.

ஆனால் இது குறித்த தகவல்கள் பாகிஸ் தானின் ஆட்சியாளர்களுக்கு தெரியவந் தால் அவர்கள் ஓசாமா பின் லேடனைக் காப் பாற்ற முயற்சிப்பாளர்கள் என்பதால் அமெரிக்கா அது குறித்த எந்தத் தகவல்களையும் பாகிஸ் தானுக்கு வழங்காது மிக இரகசியமாக தமது காய்களை நகர்த்தியது. இந்நிலையில் இவ் வீட்டில் ஒசாமா பின் லேடன் தனது இளைய மனைவியோடு இருப்பதை அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையின் உளவாளிகள் திட்டவட்டமாக கடந்த வாரம் உறுதிப்படுத்தவே இவ் வீட்டின் மீது தாக்குதல் நடத்த கடந்த வெள்ளிக் கிழமை ஜனாதிபதி பராக் ஒபாமா அனுமதி வழங்கியுள்ளார்.

இதையடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்திலிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சில உலங்கு வானுர்திகளில் கிளம்பிய அமெரிக்கப் படை யினரும் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரி க்கத் தூதரகத்திலிருந்து புறப்பட்ட ஒரு படைத் தரப்பும் இந்த வீட்டை முற்றுகையிட்டு தமது தாக்குதல் நடவடிக்கைளை மேற் கொண் டுள்ளனர்.இதன் போது அமெரிக்கப் படையி னரின் தாக்குதல்களை எதிர்த்து ஒசாமா பின் லேடனும் அவரது பாதுகாவலர்களும் தாக்கு தல்களை மேற்கொண்டிருந்தனர். இந்த மோதலில் ஒசாமா பின் லேடனும் அவரது மகன் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.சுமார் 40நிமிடங்கள் இடம்பெற்ற இப் படை நடவடிக் கையை முடித்துக் கொண்டு ஒசாமா பின் லேடனின் உடலையும் கைப்பற்றிக் கொண்டு அமெரிக்க உலங்குவானுர்திகள் கிளம்பின.

இதன் போது ஒரு உலங்குவானுர்தியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிடவே அந்த உலங்குவானுர்தியை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு ஏனைய உலங்கு வானுர்திகள் கிளம்பிச் சென்றதுடன் பழுதடைந்த உலங்கு வானூர்தியை குண்டு வீசித் தகர்த்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் ஒசாமா பின் லேடனின் உடலைக் கைப்பற் றிய அமெரிக்கா உடற்கூற்றுப் பரிசோதனை களுக்குப் பின்னர் கடலில் வீசியுள்ளதாக அறிவித்துள்ளது.

saritham.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'நண்பன்' ஒசாமாவை உருவாக்கி, 'எதிரி' ஒசாமாவை அழித்த அமெரிக்கா!

செவ்வாய்க்கிழமை, மே 3, 2011, 12:28[iST]A A A

Free Newsletter Sign up

Ads by Google

Designer Furniture www.fashion4home.co.uk

Exquisite designs made affordable. Order top designs today and save!

வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் வீழ்த்தப்பட்டு விட்டார். ஒரு பயங்கர தீவிரவாதியை அமெரிக்கா வீழ்த்தி விட்டது. ஆனால் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால், ஒரு காலத்தில் இதே பின்லேடன் எந்த அளவுக்கு அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்பது தெரிய வரும், கூடவே ஆச்சரியமும் சேர்ந்து வரும்.

உலகிலேயே பெரும் விலை வைக்கப்பட்ட தீவிரவாதி பின்லேடன்தான். அவரது தலைக்கு 25 மில்லியன் டாலர் விலை வைத்திருந்தது அமெரிக்கா. அப்படிப்பட்ட லேடனை, அப்போத்தாபாத்தில் வைத்து வீழ்த்தி விட்டது அமெரிக்கா.

சரி இப்போது கடந்த காலத்தை 'ரீவைண்ட்' செய்வோம்...

1979ம் ஆண்டு தனது கல்லூரிப் படிப்பை முடித்தார் செளதி அரேபியாவின் பெரும் செல்வந்தரான பின்லேடன். படிப்பை முடித்த சூட்டோடு, ஆப்கானிஸ்தானில் எழுந்த சோவியத் ஊடுறுவலுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டத்தில் சேர்ந்தார் பின்லேடன். அந்தப் போராட்டத்திற்கு பின்புலமாக இருந்து முழு ஆதரவையும் அப்போது கொடுத்தது அமெரிக்காவின் சிஐஏ.

1979 முதல் 1989ம் ஆண்டு வரை அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க அதிபர்களாக இருந்த ஜிம்மி கார்ட்டர், ரொனால்ட் ரீகன் ஆகியோரின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவின் கீழ் நடந்து வந்த அந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆயுதம், நிதியுதவி உள்ளிட்டவற்றைக் கொடுத்து ஆதரித்து தூண்டி விட்டு வந்தது அமெரிக்கா.

அந்தப் போராட்டத்தின்போது, பின்லேடன் தனது தலைமையில் ஆப்கானிஸ்தானிலிருந்தபடி இஸ்லாமிய ஜிஹாத் முஜாஹிதின் என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த அமைப்புக்குத் தேவையான பயிற்சிகளையும், ஆயுத உதவிகளையும் அமெரிக்காதான் முழுமையாக அளித்தது.

அதாவது பின்லேடனை ஆயுதப் போராட்டத்தில் திறம்பட செயல்பட பயிற்சி கொடு்ததது அமெரிக்கா. எப்படி நவீன ஆயுதங்களைக் கையாள்வது, எதிரிகளை எப்படி அழிப்பது உள்ளிட்ட பால பாடங்களை சொல்லிக் கொடுத்தது அமெரிக்கா.

ஆபரேஷன் சைக்ளோன், ரீகன் டாக்ட்ரைன் என்ற பெயர்களில் இந்த உதவிகளை அள்ளிக் கொடுத்தது அமெரிக்கா- பின்லேடன் குழுவுக்கு. அதாவது பின்லேடனை ஒரு முழுமையான போராளியாக, தீவிரவாதியாக வளர்த்து, வார்த்தெடுத்து, உருவாககியதே அமெரிக்காவின் சிஐஏ தான்.

அதை விட ஒரு படி மேலே போய், பின்லேடன் தலைமையிலான போராட்டக் குழுவினரை, ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று ரீகன் வானளாவ புகழ்ந்தார். வரலாற்றின் பக்கங்களில் இன்றளவும் அழிக்க முடியாத அளவுக்கு அது அழுத்தமாகவே பதியப்பட்டுள்ளது.

இவையெல்லாம் சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்கா- ரஷ்யா இடையிலான பனிப் போர் முடியும் வரையில்தான். அதன் பிறகு அமெரிக்கா பல்டி அடித்தது. ரஷ்யாவுடன் நட்பை உருவாக்கிக் கொண்டது அமெரிக்கா. ரஷ்யாவும் 1989ல் ஆப்கானிஸ்தானை விட்டு விலகியது.

இதனால் பின்லேடன் தலைமையிலான குழுவினரை ஆயுததாரிகளாகப் பார்க்க ஆரம்பித்தது அமெரிக்கா. அவர்களைக் கைவிட்டது. அதாவது தனது வேலை முடிந்ததும் அப்படியே திராட்டில் விட்டுவிட்டது அமெரிக்கா. ஆனால், அதுவரை சோவியத் யூனியனுக்கு எதிராக ஆயுத போராட்டங்கள் நடத்தி வந்த பின்லேடனும் அவரது சகாக்களும், ஓயவில்லை.

தங்களை உருவாக்கிய அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பினர். அதற்கு முக்கிய காரணங்கள் 3. சோவியத் யூனியனை எதிர்க்க ஆப்கானிஸ்தானை ஒரு போர்க் களமாக பயன்படுத்திக் கொண்டு வேலை முடிந்தவுடன் அந்த நாட்டுக்கு எந்த உதவியும் செய்யாமல் போனது, ஈராக் மீது அமெரிக்கா நடத்திய படையெடுப்பு, ஈராக் மக்களை குறிப்பாக குழந்தைதகளை மருந்து கூட கிடைக்காமல் கொடூரமாக உயிரிழ்க்கச் செய்த பொருளாதாரத் தடைகள் ஆகியவை 2 காரணங்கள்.

ஆனால், மிக முக்கியமான காரணம் பாலஸ்தீனப் பிரச்சனை. பாலஸ்தீனத்தை கைப்பற்றி, அந்த நாட்டிலேயே இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி, பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் அடிமையாக்கியதை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்கள் தான் இஸ்லாமிய தீவிரவாதத்தின் கரு.

இஸ்ரேல் என்ன செய்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல், இஸ்ரேலை தொடர்ந்து தட்டிக் கொடுத்த அமெரிக்காவுக்கு எதிராக தனது சக்தி முழுவதையும் திருப்பினார் பின்லேடன். பாலஸ்தீன மக்களை அடிமையாக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுக்க அல்கொய்தா தீவிரவாத அமைப்பை உருவாக்கினார் பின்லேடன். இப்படித்தான் பின்லேடன் அமெரிக்காவின் எதிரியாக மாறினார்.

ஆனால், இந்த இடத்தில் தான் சிஐஏ உளவு விஷயத்தில் தனது பெரும் தோல்வியைத் தழுவியது. தங்களால் கைவிடப்பட்ட பின்லேடன் என்ன செய்கிறார் என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டது.

இந் நிலையில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக விளங்கிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்பியது. இதற்காக ஆப்கானில்தானின் மாணவர்களை முல்லா ஒமர் தலைமையில் ஒன்று திரட்டியது ஐஎஸ்ஐ. இந்த மாணவர்களுக்கு ஆயுத பயிற்சியும் பணமும் ஆயுதங்களும் தரப்பட்டன.

இந்த மாணவர் படை தான் தலிபான் ஆக உருவெடுத்தது. சோவியத் யூனியன் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த அதிபர் முகம்மத் நஜீபுல்லாவை இந்தப் படை எதிர்க்க ஆரம்பித்தது.

இவர் கம்யூனிஸ ஆதரவாளர் என்பதால், அவரை ஆட்சியை விட்டு விரட்ட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும் தலிபான்களுக்கும் அமெரிக்காவும் ஆதரவு தந்தது. 1992ம் ஆண்டு தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றி நஜீபுல்லாவை அடித்துக் கொலை செய்து, ஜீப்பில் உடலை கட்டி இழுத்து வந்து, காபூலில் ஒரு தெருவில் மின் கம்பத்தில் தொங்கவிட்டபோது, இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமா என்று தலிபான்களைப் பார்த்து உலகம் அதிர்ந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் நஜீபுல்லா காலி என்று அமெரிக்கா மட்டும் மகிழ்ச்சியில் திளைத்தது.

இந்த காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கையில் நாடு சிக்கி சின்னாபின்னாமானது. ஆனால், தலிபான்களின் மனித உரிமை மீறல் கொடுமைகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை (லிபியாவில் கடாபியின் அடக்குமுறையை மட்டும் எதிர்ப்பார்களாம்!). ஆண்கள் கட்டாயம் தாடி வைக்க வேண்டும், தாடியை ட்ரிம் செய்தால் அடி-உதை, பெண்கள் தனியே வெளியே வந்தால் அடி, எந்தப் பெண் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் கல்லால் அடித்துக் கொல்வது என்று தலிபான்கள் வெறியாட்டம் போட்டபோதும் அமெரிக்காவிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை.

இப்படி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கே மிக மிக அமைதியாக தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் பின்லேடன். ஆட்சி நடத்த பணமில்லாமல் ஓட்டாண்டிகளான தலிபான்களுக்கு பணத்தைக் கொட்டிய பின்லேடன், அதற்குப் பிரதிபலனாக தனது அல்கொய்தா அமைப்பின் தீவிரவாதப் பயிற்சிகளை கண்டுகொள்ளக் கூடாது என்று நிபந்தனை போட்டார். இதை தலிபான்கள் ஏற்றனர்.

அல்கொய்தா மாபெரும் தீவிரவாதப் படையாக உருவெடுத்தது. உலகெங்கும் இந்தப் படைக்கு ஆள் திரட்டினார் பின்லேடன். குறிப்பாக தீவிர அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மை கொண்ட பாலஸ்தீன இளைஞர்களை தன் பக்கம் கொண்டு வந்தார். அவர்களை வைத்து நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தை பின்லேடன் தாக்கும் வரை அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் என்ற ஒரு நாடு இருந்ததே மறந்து போயிருந்தது தான் உண்மை.

முதல் முறையாக சூடானில் தனது அமெரிக்க எதிர்ப்புப் போரை தொடங்கினார் பின்லேடன். வெகு விரைவிலையே உலகின் மிகப் பெரிய தீவிரவாதியாக மாறிப் போனார்.

வளர்த்த கடா மார்பில் பாயந்த கதையாக, நியூயார்க் இரட்டை கோபுரங்களை அமெரிக்காவின் விமானங்களைக் கொண்டே தாக்கி அழித்தார் பின்லேடன். இதுதான் அமெரிக்காவை கடும் கோபம் கொள்ளச் செய்து, கடைசியில் அப்போத்தாபாத் வரை விரட்டி வந்து பின்லேடனை வீழ்த்தி ஓய்ந்துள்ளது.

அதேபோல அமெரிக்காவின் இன்னொரு முக்கிய 'நண்பர்' சதாம் உசேன். இரக்கமற்ற சர்வாதிகாரியாக அமெரிக்காவில் வர்ணிக்கப்பட்ட சதாம், ஆரம்பத்தில் அமெரிக்காவின் நெருங்கிய நண்பர். ஈரான்- ஈராக் இடையே 1980 முதல் 88 வரை நடந்த எட்டு ஆண்டு காலப் போரின்போது ஈராக்குக்கு முழுத் துணையாக இருந்தது அமெரிக்கா.

1979ல் ஈரானில் நடந்த புரட்சியைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளராக திகழ்ந்து வந்த மன்னர் ஷா முகம்மது ரெஸா பஹல்வி தூக்கி எறியப்பட்டார். அயத்துல்லா கொமேனி தலைமையின் கீழ் ஈரான் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈராக்கைத் தூண்டி விட்டு போரில் குதிக்க வைத்தது.

சதாம் உசேனும், அமெரிக்கா தந்த தெம்புடன்- அதன் உள்நோக்கத்தை அறியாமல்- படு உற்சாகத்துடன் ஈரானுடன் மோதினார். இதனால் சதாமுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. ஈரானும் சரி, ஈராக்கும் சரி பொருளாதார சீர்குலைவுக்குள்ளாகி, நாசமாகப் போனதுதான் மிச்சம். இத்தனைக்கும் காரணம் அமெரிக்காவின் குள்ளநரித்தனம்.

இதே சதாம் பின்னர் அமெரிக்காவின் பரம விரோதியானார். ஈரானுடன் நடந்த போரின்போது கிடைத்த புதிய தெம்பால் நாடு பிடிக்கும் ஆசைக்குத் தள்ளப்பட்ட சதாம், 1990ல் குவைத்துக்குள் ஊடுறுவினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா, சதாமைக் கண்டித்தது. ஆனால் கேட்கும் மன நிலையில் அவர் இல்லை.

இதன் விளைவு இரண்டு முறை ஈராக்குடன் போரில் ஈடுபட்டது அமெரிக்கா. முதல் போரில் படு துணிச்சலாக அமெரிக்காவை எதிர்த்தார் சதாம். அவரது ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறியதே உண்மை. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அமெரிக்கப் படையின் தாக்குதலில் சிக்கிப் பலியானார்கள். இந்த முறை சதாமுக்கு பக்கபலமாக இருந்தது ரஷ்யா. ரஷ்யாவின் ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவை துணிச்சலுடன் சந்தித்தார் சதாம்.

இரண்டாவது முறையாக நடந்த அமெரிக்க- ஈராக் போரின்போது சதாமின் ஆட்சி அகற்றப்பட்டது. 2003ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பதுங்கு குழியில் சதாம் பிடிபட்டார். 2006ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அவரை தூக்கிலிட்டது அமெரிக்க ஆதரவு ஈராக் கோர்ட்.

இப்படி எத்தனையோ விஷயங்களில் அமெரிக்காவின் இரட்டை வேடம், சுயநலத்தை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

பின்லேடன் மிகப் பயங்கரமான தீவிரவாதி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் வீழ்த்தப்பட வேண்டியவர்கள் இன்னும் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களில் பலரால் அமெரிக்காவுக்கு ஆபத்து இல்லை என்பதால் அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது அமெரிக்கா.

இப்படித்தான் 1990களில் பின்லேடனை கண்டு கொள்ளாமல் இருந்தது!

thanks-thatstamil.com

Link to comment
Share on other sites

முள்ளிவாய்காளில் இறுதி யுத்தம் நடை பெற்ற 2 மணி நேரத்துக்கு முன் கூட தலைவரை கண்டவர்கள் தற்போது கப்பலில் கனடாவில் வந்து இருக்கிறார்கள்.

அவர்களின் கூற்றுப்படி தலைவர் தப்பி ஓடுவதுக்கு முயற்சியும் செய்யவில்லை அந்த என்னத்திலும் இல்லை ஆனால் நாம் அதையே பறக்கும் தட்டில் வந்து தலைவரை ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள் என்று கற்பனையில் இருக்கோம்.

பின் லாடனையா நம்ப்ப போறம்?

***

அது இது என்று வெளிநாட்டில் சுக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு அவர்களுக்கு எதிராகவும் அமெரிக்காவுக்கும் எதிராகவும் ஊளையிட்டுக் கொண்டு இருப்பார்கள்.

அமெரிக்கா என்பது பெரிய ஆலமரம் அவர்களுக்கு ஜரோப்பாவில் இருந்து அவுஸ்ரேலியா என்று நீண்ட விழுதுகள் இருக்கு.

அவர்கள் ராஜதந்திரத்தால் முடியாததை வெருட்டி அடிப்பார்கள் 2 லும் முடியாவிட்டால் . எதிரியை நண்பன் ஆக்கி வைத்து இருப்பார்கள் ஆனால் எப்போவாது ஒரு நாள் அவர்களை அழித்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாடன் கொல்லப்பட்டாரா?

அல்லது சிறை பிடிக்கப்பட்டாரா?

அல்லது முன்னரே கொலை செய்யப்பட்டு தற்போது தங்களது பொருளாதார நோக்கங்களுக்கான ஆக்கிரமிப்புக்கள் அவற்றின் இலக்கையடைந்தபின் செய்தியை அறிவித்திருக்கலாம்.

ஆனால் எமக்கு மறக்க முடியாத மிருகம் இவர். எமது அழிவுக்கு பெரும் காரணி இவரே. எமது போராட்டத்திற்கான ஆதரவை முற்றிலும் மாத்தி சிங்களத்தின் கபடநாடகத்துக்கு உலகம் இரையானது இவராலேயே தான்.

அதேநேரம் இஸ்லாமியர்களின் குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலம் இவரால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த கொலையையும் அதன் அறிவிப்பு வடிவத்தையும் சடலத்தை கண் காணாத இடத்தில்போட்டதையும் பார்த்தால்......

முள்ளிவாய்க்காலில் நடந்தவைக்கும் இதற்கும் ஒரு ஒழுங்கு இருப்பதைக்காணலாம். எனவே எம்மவர் மீதான கொலைகளுக்கும் இவர்களது ஆலோசனைகள் எந்தளவில் இருந்தன என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். :(:(:(

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு 1991 இல் இந்தியாவாலும்.. 1996 அமெரிக்காவாலும்.. 1998 இல் பிரிட்டனாலும் பயங்கரவாதப் பட்டியலில் இடப்பட்டது.

அமெரிக்கா குற்றம் சாட்டுவது போல 2001 ம் ஆண்டு நியூயோர்க் அல்குவைடா தாக்குதலின் பின் தான் எம்மீதான இராணுவ அழுத்தங்களை மேற்குலகம் மேற்கொள்ளவில்லை.

எமது போராட்ட ஆரம்ப காலத்திலேயே அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன்.. இந்தியா ஈழத்தில் போராளிகளுக்கு ஆயுத உதவி செய்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த போது ஜே ஆர் அரசிற்கு ஈழப் போராளிகளை பயங்கரவாதிகளாகக் காட்டி ஆயுத உதவி உட்பட பல உதவிகளை செய்து கொடுத்ததுடன் அமெரிக்க படைகளின் மொசாட்டின் பாகிஸ்தான் படைகளின் ஆதரவோடு அதிரடி தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.

எந்த ஒரு அமெரிக்க ஆட்சியாளர்களும் எமது போராட்டத்திற்கு உதவி நிற்கவில்லை. மாறாக சிறீலங்கா சிங்கள ஆட்சியாளர்களுக்கே எப்போதும் உதவி நின்றுள்ளனர்.

சிறீலங்காவின் சிறப்பு அதிரடிப் படையினர்.. தாவடி கொக்குவில் பகுதியில் 1986 இல் புலிகளின் முகாம் ஒன்றை அமெரிக்கா அளித்த பெல் ரக உலங்கு வானூர்திகளில் வந்து தரையிறங்கி சுற்றி வளைத்து தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

நாங்கள் வரலாற்றை இவ்வளவு இலகுவாக மறந்துவிட்டு.. ஒசாமாவை திட்டுவதால் எதனையும் சாதிக்கப் போறதில்லை.

ஒசாமா எமக்கு எதிரியும் கிடையாது. நண்பனும் கிடையாது. அவரை எதிரியாக காண்பவர்களுக்கு அவர் எதிரி. நண்பர்களாக காண்பவர்களுக்கு நண்பர். அமெரிக்காவே வளர்ந்து எடுத்து.. தனது நலன்களுக்காக பாவித்து.. அதில் ஏமாற்றமடைந்து.. அந்த அமெரிக்காவையே தண்டிக்க போய் ஒசாமா பயங்கரவாதியானார். அதற்கும் எமக்கும் என்ன சம்பந்தம்...?!

எம் மீதான சர்வதேச நடவடிக்கைக்கு ஒசாமா காரணம் அல்ல. எமது பலவீனங்களே காரணம்..! எமது இராஜதந்திர திட்டங்களில் இருந்த தவறுகளே காரணம்..! ஜே ஆர் காலத்தில் இருந்து சிங்களம் எம்மை எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதிகள்/பயங்கரவாதம் என்று தான் காட்டி வந்துள்ளதே அன்றி செப் 2001 க்குப் பின்னர் தான் அப்படி என்றல்ல..! எமது போராட்டத்தை விடுதலைப் போராட்டமாக இந்த உலகிற்கு நாம் இனங்காட்டத் தவறியதே எமது பின்னடைவுகளுக்கு முக்கிய காரணம்.

நாம் சரியாக செயற்படவில்லை. எம்மீது உள்ள தவறுகளை மறைக்க ஒசாமா.. சர்வதேசம் என்று பழிபோட்டுக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. நாம் ஒற்றுமையாக உறுதியாக இருக்கவில்லை. ஆளுக்கொரு கட்சி.. ஆளுக்கொரு கொள்கை.. ஆளுக்கொரு காட்டிக் கொடுப்பு. ஆளுக்கொரு பழிவாங்கல். இப்படி எமக்குள் எத்தனையோ பலவீனங்கள். அவற்றை களைய எம்மால் முடியவில்லை.. இப்போ ஒசாமாவால் தான் எல்லாம் என்பது எமது பலவீனங்களை தவறுகளை நாம் மூடி மறைக்க முயலும் இழிவான செயலாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒசாமாவால் தான் எல்லாம் என்பது எமது பலவீனங்களை தவறுகளை நாம் மூடி மறைக்க முயலும் இழிவான செயலாகும்.

எப்படி பார்த்தாலும் ஒமாபாவின் தாக்குதல்தான் எம் கையைக்கட்டி போட்டது. அது தான் சிங்களத்துக்கு வெற்றியைக்கொடுதத்து என்பது உண்மை. அத்துடன் சமாதான ஒப்பந்தத்துக்கு போகவேண்டிய நிர்ப்பந்தத்தை கொடுத்ததும் தாக்குதல் எதையும் செய்யமுடியாத சூழ்நிலையை உருவாக்கியதும் இதனால்தான் என்பது எனது கருத்து.

தங்களது வாதங்களிலும் குற்றம் பிடிப்பதற்கு ஏதுமில்லை.

Link to comment
Share on other sites

.

9/11 இன் பின் அமெரிக்கா உலகத்தில் உள்ள பிரச்சனைகளையெல்லம் ஒரே விதமாகத்தான் பார்த்தது என்பது சரியல்ல. எம்முடைய பிரச்சனையை ஆராய்ந்து ஆலோசனை சொல்வதற்கென்றே அமெரிக்க கொள்கைவகுப்பாளர்களால் ஆட்கள் அமர்த்தப்பட்டிருக்கும் போது 9/11 எங்களைப் பாதித்தது என்பது தவறு.

அந்தந்தப் பிரச்சனைகளிற்குரிய தீர்வை தனித்துவமாக எடுக்கின்றார்கள்.

*******

இந்தியா உடைய வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் அல்கைடா பலம்பெற வேண்டும் என்று விரும்புவார்கள்.

*******

ஹெலிகள் பதிவதற்கு முன் பலமான தாக்குதல் ஹெலிகளின் மீது நடத்தப்பட்டுள்ளது. இதனாலேயே ஒரு ஹெலி வீழ்ந்தது என்று நேரில் கண்ட அயலவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். இவ்வளவு வெடிச்சத்தங்களின் மத்தியிலும் பின்லாடன் அறையில் குறட்டைவிட்டுத் தூங்கிவிட்டு, தன் அறைக்கு அவர்கள் வரும்போது மனைவிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டான் என்பது நம்புவதற்குச் சற்று கஸ்டமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

ஆயுதம் எதுவுமின்றி இருந்த பின் லாடனையே தாம் கொன்றதாக அமெரிக்கா இப்பொழுது அதன் பேச்சாளர் ஊடாக ஒத்துக்கொண்டு உள்ளது. முன்னர் அவர் சண்டையிலே கொல்லப்பட்டதாயும் தனது மனைவி பின்னால் ஒளிந்த்ததாகவும் கூறி இருந்தது.

Bin Laden unarmed during U.S. attack: White House

http://www.thestar.com/news/world/article/984927--bin-laden-unarmed-during-u-s-attack-white-house?bn=1

ஆயுதம் இல்லாத ஒருவரை கொன்றது போர்க்குற்றம். ஆனால், எமக்கு இதை பிழை என்று சொல்லுவது இராசதந்திரம் ஆகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சிக்கு இவனை கலியாணம் செய்து வைப்பமெண்டு பேச்சுக்கால் தொடங்க முதலே இவனை போட்டுத்தள்ளீட்டாங்கள்......நல்லகாலமடி தங்கச்சி :lol:

ஏன் அண்ணை என்னோடு என்ன கோபம் <_< எதுக்காக என்ட வாழ்க்கையை நாசமாக்க பார்க்கிறீங்கள் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக் கொடியுடன் வந்திருந்தால் ஒசாமா கைது செய்யப்பட்டிருப்பார் - அமெரிக்கா

[ Wed, May 204, 2011, 10:20 am ]

அல் ​கைதா அமைப்பின் தலைவர் பின் லேடன் தனது இறுதி நேரத்தில் வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய முற்படவில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

சரணடைய முயற்சி செய்திருந்தால் பின் லேடனை அமெரிக்கத் துருப்பினர் உயிருடன் கைது செய்திருப்பார்கள் என அமெரிக்க தேசியப் பாதுகாப்புப் பேரவையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் சர்வதேச ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

எனினும், பின் லேடனை கொலை செய்யும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய முயற்சி செய்திருந்தால் பின் லேடனை உயிருடன் கைது செய்திருக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகாமையில் அமெரிக்க தளபதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் பின் லேடன் பங்குபற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின் லேடன் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுக் கூறவில்லை என்ற போதிலும் 40 நிமிட மோதல்களின் பின்னர் பின் லேடனின் தலையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின் லேடன் கைது செய்யப்படுவதனை விடவும் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியம் அதிகமாகக் காணப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சரணடைய முயற்சி செய்யும் நபர்களை கொலை செய்வதற்கு அமெரிக்க துருப்பினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க வான்படை துருப்பினர்களே ஒசாமா மீது தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஒசாமா உயிரிழந்ததனை உறுதிப்படுத்தும் நோக்கில் இரசாயன பகுப்பாய்வு அதிகாரியொருவரையும் அழைத்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

thaalamnews.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முந்தி எங்கேயோ ஒரு பத்திரிகையில் வாசிச்சன் செப்டெம்பர் 11 தாக்குதலுக்கும் பின்லாடனுக்கும் சம்மந்தமே இல்லை என்றும் அமெரிக்கா தனது சரிந்திருந்த பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இப்படி ஒரு தாக்குதலை நடத்தினது என்றும் எழுதி இருந்தது...ஆனால் இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியாது :unsure:

Link to comment
Share on other sites

இங்கு சனம் குழம்பி தான் இருக்கிறார்கள். பின்லாடனை கொன்றால் கொன்ற படங்களையாவது காட்டுங்கள் என்று. இங்கும் "இருக்கிறாரா அல்லது இல்லையா" குழப்பம் உள்ளது. :):)

Link to comment
Share on other sites

பின் லாடனை பிடிக்கும் பொழுது ஒரு அமெரிக்க உலங்குவானூர்தி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இது ராடார்களில் பிடிபடாத புதியரக விமானம் என நம்பப்படுகின்றது. இது இப்பொழுது பாகிஸ்தானின் கைவசம்.

இதன் படம் : http://www.google.ca/imgres?imgurl=http://www.wired.com/images_blogs/dangerroom/2011/05/RTR2LZQ11.jpg&imgrefurl=http://www.wired.com/dangerroom/2011/05/aviation-geeks-scramble-to-i-d-osama-raids-mystery-copter/&usg=__Xm5K3Orkx2nXGWcP6G_wj5CnQ5M=&h=1186&w=1734&sz=408&hl=en&start=0&zoom=1&tbnid=UyDnSGQugOtRrM:&tbnh=158&tbnw=205&ei=swjCTZjpJ5PfgQfqhNjRDg&prev=/search%3Fq%3DHelicopter%2Bloss%2Bin%2Bbin%2BLaden%2Braid%26um%3D1%26hl%3Den%26sa%3DN%26biw%3D1276%26bih%3D629%26tbm%3Disch&um=1&itbs=1&iact=rc&dur=547&page=1&ndsp=18&ved=1t:429,r:6,s:0&tx=172&ty=62

Link to comment
Share on other sites

வாஷிங்டன்: பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் பார்க்க மிகவும் கோரமாக இருப்பதால் அவற்றை வெளியிட்டால் பிரச்சினை வரும் என கருதுகிறோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

பாகிஸ்தானில் நடந்த தாக்குதலின்போது பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். இதையடுத்து உலகெங்கும் பரபரப்பு ஏற்பட்டது. கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே பின்லேடன் உடலில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு உடலையும் கடலில் வீசி விட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. உண்மையிலேயே பின்லேடன் கொல்லப்பட்டு விட்டானா அல்லது ஒபாமாவின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக அவரது நிர்வாகம் டிராமா போடுகிறதா என்ற கேள்விகள் அமெரிக்காவிலேயே எழுந்துள்ளன.

இதையடுத்து புகைப்படங்களை வெளியிடுவது குறித்து யோசித்து வருவதாக அமெரிக்கா கூறியது. இந்த நிலையில் புகைப்படத்தை வெளியிட வாய்ப்பில்லை என்பதை அமெரிக்கா தற்போது மறைமுகமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தியபோது அவனிடம் கையில் ஆயுதம் எதுவம் இல்லை. ஆயுதம் இல்லாத நிலையிலும் அமெரிக்க வீரர்களை எதிர்த்து லேசான எதிர்ப்பைக் காட்டினான் பின்லேடன். அதேசமயம், அவன் அவனது மனைவியின் பின்னால் ஒளிந்து கொண்டதாக கூறப்படுவதில்லை உண்மை இல்லை. அப்படி அவன் செய்யவில்லை.

மேலும் அமெரிக்க வீரர்கள் தன்னை சுட முயன்றபோது அவர்களை நோக்கி ஓடி வந்தான் பின்லேடன். இதையடுத்து அவனது காலில் வீரர்கள் சுட்டனர். இதனால் அவனால் ஓட முடியவில்லை. இதையடுத்து அவனை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

அமெரிக்க வீரர்கள் பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்தபோது எதிரில் தென்பட்டவர்களை துப்பாக்கி முனையில் பிடித்து கைவிலங்கிட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தங்களது குறி பின்லேடன் மட்டும்தான் என்பதில் அவர்கள் தீவிரமாக இருந்தனர். எதிர்ப்பட்டவர்களை எல்லாம் சுடும் நோக்கத்தில் அவர்கள் இல்லை. அமெரிக்க வீரர்கள் வந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதுபட்டு விட்டது.

பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டுத் திரும்பிய அமெரிக்க வீரர்கள் பழுதடைந்திருந்த ஹெலிகாப்டரை தகர்த்து எரித்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

பின்லேடன் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் கோரமாக உள்ளது. அவற்ற வெளியிட்டால் பிரச்சினை வரலாம் என கருதுகிறோம். எனவே அவற்றை வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்த பிறகே முடிவெடுக்கப்படும். பின்லேடன் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிடுவது குறித்து தீவிரப் பரிசீலனை நடந்து வருகிறது என்றார்.

thatstamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Eine Tochter von Al-Kaida-Chef Osama bin Laden hat nach pakistanischen Medienberichten die Erschießung ihres Vaters durch US-Spezialkräfte miterlebt. Nach der Aussage des zwölfjährigen Mädchens sei Bin Laden bei der Kommandoaktion in der Stadt Abbottabad zunächst lebend gefasst und wenig später vor den Augen seiner Familie erschossen worden. Die Leiche sei von den Amerikanern abtransportiert worden.

ஒசாமா பின்லாடனை, அமெரிக்க அதிரடிப் படைகள் உயிருடன் பிடித்து, சில நிமிடங்களில் சுட்டுக் கொன்று, அவரது சடலத்தை எடுத்துச் சென்றதை........ பின்லாடனது 12 வயது மகள் நேரில் பார்த்ததாக பாகிஸ்தானிய பத்திரிகைகள் தெரிவித்துள்ளதாக ஒரு இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் மீது நடத்தப்பட்ட ஆபரேசனுக்கு அமேரிக்கா வைத்திருந்த பெயர் இப்போது வெளியாகியுள்ளது. 'ஜெரோனிமோ எகியா' ('Geronimo EKIA') என்ற பெயரில் அமெரிக்கக் கடற்படை சீல்கள்-6 பிரிவு நடத்திய தாக்குதல் தான் பின்லேடனை காலி செய்துள்ளது.

பாகிஸ்தானின் அபோடாபாத் நகருக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெலிகாப்டர்களில் அமெரிக்க வீரர்கள் கிளம்பியது முதல், ஒசாமா சுட்டுக் கொல்லப்படுவது வரை அங்கு நடந்த அனைத்தையும், அமெரிக்க கமாண்டோக்களின் ஹெல்மட்களில் இருந்த கேமராக்கள், அப்படியே செயற்கைக் கோள் மூலம் லைவ் ஆக ஒளிபரப்பின.

வெள்ளை மாளிகையின் நெருக்கடி கால அறையில் அமர்ந்தபடி இந்த வீடியோக் காட்சிகளை அதிபர் பராக் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடேன், வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி மற்றும் ராணுவ, சிஐஏ தலைவர்கள் நேரில் கண்காணித்தனர்.

இந்த முழு ஆபரேசன் முடியும் வரை ஒபாமா ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்கிறார்கள்.

கமாண்டோக்கள் ஒசாமா தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்த 38வது நிமிடம், ஒரு வீரர் பின்லேடனை இடது கண்ணி்ல் சுட்டார். குண்டு ஒசாமாவின் தலையை சிதைத்த பின், அவருக்கு உயிர் இருக்கிறதா என்பதை சோதனையிட்டுவிட்டு, அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்த பின் சொன்னார்... 'Geronimo EKIA'. இதற்கு வந்த வேலை முடிந்துவிட்டது என்று பொருள்.

முன்னதாக கமாண்டோக்களில் 25 பேர் அந்த வீட்டுக்கள், இரவிலும் தெளிவாக பார்க்க உதவும் night-vision goggles உதவியோடு நுழைய, அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஹெலிகாப்டர்களிலும், தரையிலும் சுமார் 100 வீரர்கள் வெளியில் இருந்தனர்.

இந்தத் தாக்குதலில் பின்லேடனின் மகன் காலித், லேடனின் இளைய மனைவி அமால் அல் சதா ஆகியோரும் பலியாயினர்.

லேடனைத் தேடி ஒவ்வொரு அறையாகச் சென்ற கமாண்டோக்கள், 3வது மாடியில் ஒரு அறையில் இருந்த பின்லேடனை சுற்றி வளைத்து சுட்டனர். அப்போது அவர் நிராயுதபாணியாகவே இருந்துள்ளார். அவரும் துப்பாக்கி ஏந்தி சண்டை போட்டதாக வந்த தகவல்கள் தவறு.

பின்லேடனை சுட்ட பின் வீட்டிலிருந்த கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க், டிவிடிக்கள் மற்றும் சில ஆவணங்களையும லேடனின் உடலையும் எடுத்துக் கொண்டு ஆப்கானி்ஸ்தான் வான் பகுதிக்குள் நுழைந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் வட அரபிக் கடலில் நின்றிருந்த யுஎஸ்எஸ் கார்ல் விஷன் விமானம் தாங்கிக் கப்பலை அடைந்துள்ளனர்.

இந் நிலையில் அத்துமீறிய அமெரிக்க ஹெலிகாப்டர்களை சுற்றி வளைக்க பாகிஸ்தானின் போர் விமானங்கள் வானில் பாய்ந்ததாகவும், அப்போது ஒபாமா பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை தொலைபேசியில் அழைத்து, 'சும்மா இருக்குமாறு' உத்தரவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் வான் பகுதியை விட்டு வெளியேறவுடன், சர்தாரியை மீண்டும் தொடர்பு கொண்ட ஒபாமா, பின்லேடன் கொல்லப்பட்ட விவரத்தை சொன்னார் என்கிறார்கள்.

அது என்ன 'ஜெரோனிமோ எகியா'?:

அமெரிக்காவின் 'ரெட் இன்டியன்ஸ்' இனத்தின் (Native Americans) மிக முக்கியமான போராளித் தலைவர் தான் ஜெரோனிமோ. அரிசோனாவில் தங்களது பழங்குடி இனப் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்த மெக்சிகோ மற்றும் அப்போதைய வெள்ளையின அமெரிக்கர்களுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்தியவர் தான் ஜெரோனிமோ.

அமெரிக்கப் படையினர் இவரது பெயரைச் சொல்லிவிட்டே பெரும் தாக்குதல்களை நடத்துவது வழக்கம். அமெரிக்க பாராசூட் வீரர்கள், விமானத்திலிருந்து குதிக்கும்போது சொல்லும் பெயரும் ஜெரோனிமோ தான்.

இதில் EKIA என்பது 'Enemy Killed In Action'!

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் வருடத்திற்கு பத்து பில்லியன்களை அமெரிக்காவிடம் இருந்து பெற்று வந்தது. அதைகாப்பற்ற அது பல திருகுதளங்களை போடும்.

நிச்சயம் பாகிஸ்தானுக்கு எல்லாம் தெரியும். பெரிய இராணுவ அக்கடமி 750 மீட்டர் தொலைவில் இருந்துள்ளது. ஐந்து வருடமாக அங்கு இருந்திருக்கலாம்.

- பாகிஸ்தான் தனக்கு தெரியாது என்றால், ஏன் தெரியாது என அமேரிக்கா கேட்கிறது.

- பாகிஸ்தான் தனக்கு தெரியும் என்றால், ஏன் சொல்லவில்லை என அமேரிக்கா கேட்கிறது

ஆனால் அமேரிக்கா உடனடியாக பணத்தை நிற்பாட்ட மாட்டாது. இது நீண்ட கால உறவை பாதிக்கும். பாகிஸ்தானிடம் அணுக்குண்டு இருப்பதே பெரிய தலையிடி அமெரிக்காவுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 5, மே 2011 (9:57 IST)

ஆயுதம் இல்லாமல் இருந்த பின்லேடன்!

பின்லேடன் கொல்லப்பட்டபோது கையில் ஆயுதம் இல்லாமல் இருந்தார் என்று அமெரிக்க புலனாய்வுத்துறையின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாத் அருகே அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி அமெரிக்க புலனாய்வுத்துறையின் தலைமை அதிகாரி லியோன் பனேட்டா, வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலாளர் ஜே கார்னே ஆகியோர் கூறியுள்ளனர்.

’’பின்லேடன் மீதான தாக்குதலுக்காக இரண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள், ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் ராடார் கண்காணிப்பில் சிக்காத வழியை தேர்ந்தெடுத்து அவர்கள் சென்றனர்.

nakkheeran

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒசாமாவை உயிருடன் பிடித்த பிறகே கொன்றனர்: 12 வயது மகள் தகவல்

வியாழக்கிழமை, மே 5, 2011, 13:20 [iST]

இஸ்லாமாபாத்: ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் உயிருடன் பிடித்ததாகவும், அவரை ராணுவ ஹெலிகாப்டருக்கு கொண்டு செல்லும் முன் குடும்பத்தார் முன்னிலையில் சுட்டுக் கொன்றதாகவும் லேடனின் 12 வயது மகள் தெரிவித்துள்ளார்.

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுட்டுக் கொன்றன. இந்நிலையில் ஒசாமாவின் மகள் சாபியா கூறிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீட்டுக்குள் புகுந்து அறை, அறையாக சோதனையிட்ட அமெரிக்கப் படைகள் 3வது மாடியில் ஒரு அறையில் இருந்த பின்லேடனை உயிருடன் பிடித்து கூட்டி வந்ததாகவும், அவரை ஹெலிகாப்டரில் ஏற்றும் முன் சுட்டுக் கொன்றதாகவும் அந்தச் சிறுமி கூறியுள்ளார்.

அதே போல ஒசாமாவின் 20 மகன் அம்சாவையும் சுட்டுக் கொன்ற அமெரிக்கப் படைகள் அவர்களது இரு உடல்களை மட்டும் ஹெலிகாப்டரில் கொண்டு சென்றதாகவும், அங்கு இறந்த கிடந்த மற்ற 4 பேரின் உடல்களை அங்கேயே போட்டுவிட்டுப் போய்விட்டதாகவு்ம் கூறியுள்ளார் சிறுமி.

ஒசாமா மீது தாக்குதல் நடத்தியபோது அந்த வீட்டிலிருந்த 3 ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் பலியாகியுள்ளனர். இந்தப் பெண் ஒசாமாவின் ஏமன் நாட்டு மனைவியாக இருக்கலாம் என்று அமெரிக்கப் படைகள் கூறின.

ஆனால், அந்தப் பெண் மனைவியல்ல என்றும், அவர் ஒசாமாவின் டாக்டராக இருக்கலாம் என்றும் இப்போது தெரியவந்துள்ளது. இவரும் ஏமனைச் சேர்ந்தவர் ஆவார்.

அதே நேரத்தில் அந்த வீட்டிலிருந்த 8 குழந்தைகள், இரு பெண்களை அமெரிக்கப் படைகள் உயிரோடு விட்டுவிட்டுப் போய்விட்டன. அதில் ஒரு பெண் தான் ஒசாமாவின் மனைவியான 29 வயது அமல் அஹமத் அல் சதா. இவர் 11 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் ஒசாமாவை மணந்தவர். இவர் ஒசாமாவின் 5வது மனைவியாவார். இவரது காலில் குண்டு பாய்ந்துள்ளதில் காயமடைந்துள்ளார்.

இவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும், 8 குழந்தைகளில் சிலருக்கும் கையில் பிளாஸ்டிக் விலங்குகளைப் போட்டு ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு அமெரிக்கப் படைகள் சென்றுவிட்டன. தாக்குதலுக்குப் பின் அங்கு வந்த பாகிஸ்தானிய போலீசார் இவர்களை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து வருகின்றனர்.

அவர்களிடம் ஐஎஸ்ஐ விசாரணை நடத்தி வருகிறது. இவர்களை உரிய நாட்டிடம் ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால், செளதி அரேபிய அரச குடும்பத்தை எதிர்த்ததால் பின்லேடனின் குடியுரிமையை அந்த நாடு ரத்து செய்துவிட்டது. இதனால் அவரது குடும்பம் அந்த நாட்டுக்குள் செல்ல முடியாது. இவர்களை ஏமன் ஏற்குமா என்பதும் தெரியவில்லை.

பிடிபட்ட 8 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வயது 2 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 8 குழந்தைகளில் இரு சிறுவர்கள் பின்லேடனின் குழந்தைகள் என்று தெரிகிறது. மற்றவர்கள், அவருடன் அந்த வீட்டில் வசித்த இரு சகோதரர்களின் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. அந்த இரு சகோதரர்களும் ஒரு பாதுகாவலரும் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர்.

முதலில் இந்த வீட்டில் உயிரோடு பிடிபட்ட அனைவரையுமே அமெரிக்கப் படைகள் தங்களுடன் கொண்டு செல்ல முயன்றதாகவும், ஆனால் ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அந்த வீட்டின் காம்பவுண்டில் விழுந்துவிட்டதால், அதை அங்கேயே விட்டுவிட்டதால், இடப் பற்றாக்குறையால் 10 பேரை விட்டுவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது.

இதனால் ஒசாமா மற்றும் அவரது மகனின் உடல்களை மட்டும் கொண்டு சென்றுள்ளனர்.

கொல்லப்பட்ட மற்ற 4 பேரில் அபு அஹமத் அல்-குவைதி என்பவர் தான் பின்லேடனின் கடிதப் போக்குவரத்தைக் கையாண்டு வந்தவர். இவரை கண்காணித்ததன் மூலமாகத் தான் பின்லேடனின் இருப்பிடத்தை சிஐஏ அறிந்தது.

இந்த வீட்டுக்குள் நுழைந்தவுடன் அமெரிக்கப் படைகள் கிரணைட் குண்டுகளை வீசித் தாக்கியதில், அங்கிருந்த குழந்தைகள் உள்பட அனைவருமே காயமடைந்துள்ளனர்.

thatstamil

Link to comment
Share on other sites

'நண்பன்' ஒசாமாவை உருவாக்கி, 'எதிரி' ஒசாமாவை அழித்த அமெரிக்கா!

ஒசாமா பின் லேடன் வீழ்த்தப்பட்டு விட்டார். ஒரு பயங்கர தீவிரவாதியை அமெரிக்கா வீழ்த்தி விட்டது. ஆனால் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால், ஒரு காலத்தில் இதே பின்லேடன் எந்த அளவுக்கு அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்பது தெரிய வரும், கூடவே ஆச்சரியமும் சேர்ந்து வரும்.

உலகிலேயே பெரும் விலை வைக்கப்பட்ட தீவிரவாதி பின்லேடன்தான். அவரது தலைக்கு 25 மில்லியன் டாலர் விலை வைத்திருந்தது அமெரிக்கா. அப்படிப்பட்ட லேடனை, அப்போத்தாபாத்தில் வைத்து வீழ்த்தி விட்டது அமெரிக்கா.

சரி இப்போது கடந்த காலத்தை 'ரீவைண்ட்' செய்வோம்...

1979ம் ஆண்டு தனது கல்லூரிப் படிப்பை முடித்தார் செளதி அரேபியாவின் பெரும் செல்வந்தரான பின்லேடன். படிப்பை முடித்த சூட்டோடு, ஆப்கானிஸ்தானில் எழுந்த சோவியத் ஊடுறுவலுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டத்தில் சேர்ந்தார் பின்லேடன். அந்தப் போராட்டத்திற்கு பின்புலமாக இருந்து முழு ஆதரவையும் அப்போது கொடுத்தது அமெரிக்காவின் சிஐஏ.

1979 முதல் 1989ம் ஆண்டு வரை அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க அதிபர்களாக இருந்த ஜிம்மி கார்ட்டர், ரொனால்ட் ரீகன் ஆகியோரின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவின் கீழ் நடந்து வந்த அந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆயுதம், நிதியுதவி உள்ளிட்டவற்றைக் கொடுத்து ஆதரித்து தூண்டி விட்டு வந்தது அமெரிக்கா.

அந்தப் போராட்டத்தின்போது, பின்லேடன் தனது தலைமையில் ஆப்கானிஸ்தானிலிருந்தபடி இஸ்லாமிய ஜிஹாத் முஜாஹிதின் என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த அமைப்புக்குத் தேவையான பயிற்சிகளையும், ஆயுத உதவிகளையும் அமெரிக்காதான் முழுமையாக அளித்தது.

அதாவது பின்லேடனை ஆயுதப் போராட்டத்தில் திறம்பட செயல்பட பயிற்சி கொடு்ததது அமெரிக்கா. எப்படி நவீன ஆயுதங்களைக் கையாள்வது, எதிரிகளை எப்படி அழிப்பது உள்ளிட்ட பால பாடங்களை சொல்லிக் கொடுத்தது அமெரிக்கா.

ஆபரேஷன் சைக்ளோன், ரீகன் டாக்ட்ரைன் என்ற பெயர்களில் இந்த உதவிகளை அள்ளிக் கொடுத்தது அமெரிக்கா- பின்லேடன் குழுவுக்கு. அதாவது பின்லேடனை ஒரு முழுமையான போராளியாக, தீவிரவாதியாக வளர்த்து, வார்த்தெடுத்து, உருவாககியதே அமெரிக்காவின் சிஐஏ தான்.

அதை விட ஒரு படி மேலே போய், பின்லேடன் தலைமையிலான போராட்டக் குழுவினரை, ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று ரீகன் வானளாவ புகழ்ந்தார். வரலாற்றின் பக்கங்களில் இன்றளவும் அழிக்க முடியாத அளவுக்கு அது அழுத்தமாகவே பதியப்பட்டுள்ளது.

இவையெல்லாம் சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்கா- ரஷ்யா இடையிலான பனிப் போர் முடியும் வரையில்தான். அதன் பிறகு அமெரிக்கா பல்டி அடித்தது. ரஷ்யாவுடன் நட்பை உருவாக்கிக் கொண்டது அமெரிக்கா. ரஷ்யாவும் 1989ல் ஆப்கானிஸ்தானை விட்டு விலகியது.

இதனால் பின்லேடன் தலைமையிலான குழுவினரை ஆயுததாரிகளாகப் பார்க்க ஆரம்பித்தது அமெரிக்கா. அவர்களைக் கைவிட்டது. அதாவது தனது வேலை முடிந்ததும் அப்படியே திராட்டில் விட்டுவிட்டது அமெரிக்கா. ஆனால், அதுவரை சோவியத் யூனியனுக்கு எதிராக ஆயுத போராட்டங்கள் நடத்தி வந்த பின்லேடனும் அவரது சகாக்களும், ஓயவில்லை.

தங்களை உருவாக்கிய அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பினர். அதற்கு முக்கிய காரணங்கள் 3. சோவியத் யூனியனை எதிர்க்க ஆப்கானிஸ்தானை ஒரு போர்க் களமாக பயன்படுத்திக் கொண்டு வேலை முடிந்தவுடன் அந்த நாட்டுக்கு எந்த உதவியும் செய்யாமல் போனது, ஈராக் மீது அமெரிக்கா நடத்திய படையெடுப்பு, ஈராக் மக்களை குறிப்பாக குழந்தைதகளை மருந்து கூட கிடைக்காமல் கொடூரமாக உயிரிழ்க்கச் செய்த பொருளாதாரத் தடைகள் ஆகியவை 2 காரணங்கள்.

ஆனால், மிக முக்கியமான காரணம் பாலஸ்தீனப் பிரச்சனை. பாலஸ்தீனத்தை கைப்பற்றி, அந்த நாட்டிலேயே இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி, பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் அடிமையாக்கியதை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்கள் தான் இஸ்லாமிய தீவிரவாதத்தின் கரு.

இஸ்ரேல் என்ன செய்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல், இஸ்ரேலை தொடர்ந்து தட்டிக் கொடுத்த அமெரிக்காவுக்கு எதிராக தனது சக்தி முழுவதையும் திருப்பினார் பின்லேடன். பாலஸ்தீன மக்களை அடிமையாக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுக்க அல்கொய்தா தீவிரவாத அமைப்பை உருவாக்கினார் பின்லேடன். இப்படித்தான் பின்லேடன் அமெரிக்காவின் எதிரியாக மாறினார்.

ஆனால், இந்த இடத்தில் தான் சிஐஏ உளவு விஷயத்தில் தனது பெரும் தோல்வியைத் தழுவியது. தங்களால் கைவிடப்பட்ட பின்லேடன் என்ன செய்கிறார் என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டது.

இந் நிலையில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக விளங்கிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்பியது. இதற்காக ஆப்கானில்தானின் மாணவர்களை முல்லா ஒமர் தலைமையில் ஒன்று திரட்டியது ஐஎஸ்ஐ. இந்த மாணவர்களுக்கு ஆயுத பயிற்சியும் பணமும் ஆயுதங்களும் தரப்பட்டன.

இந்த மாணவர் படை தான் தலிபான் ஆக உருவெடுத்தது. சோவியத் யூனியன் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த அதிபர் முகம்மத் நஜீபுல்லாவை இந்தப் படை எதிர்க்க ஆரம்பித்தது.

இவர் கம்யூனிஸ ஆதரவாளர் என்பதால், அவரை ஆட்சியை விட்டு விரட்ட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும் தலிபான்களுக்கும் அமெரிக்காவும் ஆதரவு தந்தது. 1992ம் ஆண்டு தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றி நஜீபுல்லாவை அடித்துக் கொலை செய்து, ஜீப்பில் உடலை கட்டி இழுத்து வந்து, காபூலில் ஒரு தெருவில் மின் கம்பத்தில் தொங்கவிட்டபோது, இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமா என்று தலிபான்களைப் பார்த்து உலகம் அதிர்ந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் நஜீபுல்லா காலி என்று அமெரிக்கா மட்டும் மகிழ்ச்சியில் திளைத்தது.

இந்த காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கையில் நாடு சிக்கி சின்னாபின்னாமானது. ஆனால், தலிபான்களின் மனித உரிமை மீறல் கொடுமைகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை (லிபியாவில் கடாபியின் அடக்குமுறையை மட்டும் எதிர்ப்பார்களாம்!). ஆண்கள் கட்டாயம் தாடி வைக்க வேண்டும், தாடியை ட்ரிம் செய்தால் அடி-உதை, பெண்கள் தனியே வெளியே வந்தால் அடி, எந்தப் பெண் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் கல்லால் அடித்துக் கொல்வது என்று தலிபான்கள் வெறியாட்டம் போட்டபோதும் அமெரிக்காவிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை.

இப்படி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கே மிக மிக அமைதியாக தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் பின்லேடன். ஆட்சி நடத்த பணமில்லாமல் ஓட்டாண்டிகளான தலிபான்களுக்கு பணத்தைக் கொட்டிய பின்லேடன், அதற்குப் பிரதிபலனாக தனது அல்கொய்தா அமைப்பின் தீவிரவாதப் பயிற்சிகளை கண்டுகொள்ளக் கூடாது என்று நிபந்தனை போட்டார். இதை தலிபான்கள் ஏற்றனர்.

அல்கொய்தா மாபெரும் தீவிரவாதப் படையாக உருவெடுத்தது. உலகெங்கும் இந்தப் படைக்கு ஆள் திரட்டினார் பின்லேடன். குறிப்பாக தீவிர அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மை கொண்ட பாலஸ்தீன இளைஞர்களை தன் பக்கம் கொண்டு வந்தார். அவர்களை வைத்து நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தை பின்லேடன் தாக்கும் வரை அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் என்ற ஒரு நாடு இருந்ததே மறந்து போயிருந்தது தான் உண்மை.

முதல் முறையாக சூடானில் தனது அமெரிக்க எதிர்ப்புப் போரை தொடங்கினார் பின்லேடன். வெகு விரைவிலையே உலகின் மிகப் பெரிய தீவிரவாதியாக மாறிப் போனார்.

வளர்த்த கடா மார்பில் பாயந்த கதையாக, நியூயார்க் இரட்டை கோபுரங்களை அமெரிக்காவின் விமானங்களைக் கொண்டே தாக்கி அழித்தார் பின்லேடன். இதுதான் அமெரிக்காவை கடும் கோபம் கொள்ளச் செய்து, கடைசியில் அப்போத்தாபாத் வரை விரட்டி வந்து பின்லேடனை வீழ்த்தி ஓய்ந்துள்ளது.

அதேபோல அமெரிக்காவின் இன்னொரு முக்கிய 'நண்பர்' சதாம் உசேன். இரக்கமற்ற சர்வாதிகாரியாக அமெரிக்காவில் வர்ணிக்கப்பட்ட சதாம், ஆரம்பத்தில் அமெரிக்காவின் நெருங்கிய நண்பர். ஈரான்- ஈராக் இடையே 1980 முதல் 88 வரை நடந்த எட்டு ஆண்டு காலப் போரின்போது ஈராக்குக்கு முழுத் துணையாக இருந்தது அமெரிக்கா.

1979ல் ஈரானில் நடந்த புரட்சியைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளராக திகழ்ந்து வந்த மன்னர் ஷா முகம்மது ரெஸா பஹல்வி தூக்கி எறியப்பட்டார். அயத்துல்லா கொமேனி தலைமையின் கீழ் ஈரான் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈராக்கைத் தூண்டி விட்டு போரில் குதிக்க வைத்தது.

சதாம் உசேனும், அமெரிக்கா தந்த தெம்புடன்- அதன் உள்நோக்கத்தை அறியாமல்- படு உற்சாகத்துடன் ஈரானுடன் மோதினார். இதனால் சதாமுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. ஈரானும் சரி, ஈராக்கும் சரி பொருளாதார சீர்குலைவுக்குள்ளாகி, நாசமாகப் போனதுதான் மிச்சம். இத்தனைக்கும் காரணம் அமெரிக்காவின் குள்ளநரித்தனம்.

இதே சதாம் பின்னர் அமெரிக்காவின் பரம விரோதியானார். ஈரானுடன் நடந்த போரின்போது கிடைத்த புதிய தெம்பால் நாடு பிடிக்கும் ஆசைக்குத் தள்ளப்பட்ட சதாம், 1990ல் குவைத்துக்குள் ஊடுறுவினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா, சதாமைக் கண்டித்தது. ஆனால் கேட்கும் மன நிலையில் அவர் இல்லை.

இதன் விளைவு இரண்டு முறை ஈராக்குடன் போரில் ஈடுபட்டது அமெரிக்கா. முதல் போரில் படு துணிச்சலாக அமெரிக்காவை எதிர்த்தார் சதாம். அவரது ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறியதே உண்மை. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அமெரிக்கப் படையின் தாக்குதலில் சிக்கிப் பலியானார்கள். இந்த முறை சதாமுக்கு பக்கபலமாக இருந்தது ரஷ்யா. ரஷ்யாவின் ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவை துணிச்சலுடன் சந்தித்தார் சதாம்.

இரண்டாவது முறையாக நடந்த அமெரிக்க- ஈராக் போரின்போது சதாமின் ஆட்சி அகற்றப்பட்டது. 2003ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பதுங்கு குழியில் சதாம் பிடிபட்டார். 2006ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அவரை தூக்கிலிட்டது அமெரிக்க ஆதரவு ஈராக் கோர்ட்.

இப்படி எத்தனையோ விஷயங்களில் அமெரிக்காவின் இரட்டை வேடம், சுயநலத்தை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

பின்லேடன் மிகப் பயங்கரமான தீவிரவாதி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் வீழ்த்தப்பட வேண்டியவர்கள் இன்னும் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களில் பலரால் அமெரிக்காவுக்கு ஆபத்து இல்லை என்பதால் அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது அமெரிக்கா.

இப்படித்தான் 1990களில் பின்லேடனை கண்டு கொள்ளாமல் இருந்தது!

http://thatstamil.oneindia.in/news/2011/05/03/after-osama-please-stop-feeding-beast-aid0090.html

Link to comment
Share on other sites

இஸ்லாமாபாத்: ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் உயிருடன் பிடித்ததாகவும், அவரை ராணுவ ஹெலிகாப்டருக்கு கொண்டு செல்லும் முன் குடும்பத்தார் முன்னிலையில் சுட்டுக் கொன்றதாகவும் லேடனின் 12 வயது மகள் தெரிவித்துள்ளார்.

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுட்டுக் கொன்றன. இந்நிலையில் ஒசாமாவின் மகள் சாபியா கூறிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீட்டுக்குள் புகுந்து அறை, அறையாக சோதனையிட்ட அமெரிக்கப் படைகள் 3வது மாடியில் ஒரு அறையில் இருந்த பின்லேடனை உயிருடன் பிடித்து கூட்டி வந்ததாகவும், அவரை ஹெலிகாப்டரில் ஏற்றும் முன் சுட்டுக் கொன்றதாகவும் அந்தச் சிறுமி கூறியுள்ளார்.

அதே போல ஒசாமாவின் 20 மகன் அம்சாவையும் சுட்டுக் கொன்ற அமெரிக்கப் படைகள் அவர்களது இரு உடல்களை மட்டும் ஹெலிகாப்டரில் கொண்டு சென்றதாகவும், அங்கு இறந்த கிடந்த மற்ற 4 பேரின் உடல்களை அங்கேயே போட்டுவிட்டுப் போய்விட்டதாகவு்ம் கூறியுள்ளார் சிறுமி.

ஒசாமா மீது தாக்குதல் நடத்தியபோது அந்த வீட்டிலிருந்த 3 ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் பலியாகியுள்ளனர். இந்தப் பெண் ஒசாமாவின் ஏமன் நாட்டு மனைவியாக இருக்கலாம் என்று அமெரிக்கப் படைகள் கூறின.

ஆனால், அந்தப் பெண் மனைவியல்ல என்றும், அவர் ஒசாமாவின் டாக்டராக இருக்கலாம் என்றும் இப்போது தெரியவந்துள்ளது. இவரும் ஏமனைச் சேர்ந்தவர் ஆவார்.

அதே நேரத்தில் அந்த வீட்டிலிருந்த 8 குழந்தைகள், இரு பெண்களை அமெரிக்கப் படைகள் உயிரோடு விட்டுவிட்டுப் போய்விட்டன. அதில் ஒரு பெண் தான் ஒசாமாவின் மனைவியான 29 வயது அமல் அஹமத் அல் சதா. இவர் 11 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் ஒசாமாவை மணந்தவர். இவர் ஒசாமாவின் 5வது மனைவியாவார். இவரது காலில் குண்டு பாய்ந்துள்ளதில் காயமடைந்துள்ளார்.

இவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும், 8 குழந்தைகளில் சிலருக்கும் கையில் பிளாஸ்டிக் விலங்குகளைப் போட்டு ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு அமெரிக்கப் படைகள் சென்றுவிட்டன. தாக்குதலுக்குப் பின் அங்கு வந்த பாகிஸ்தானிய போலீசார் இவர்களை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து வருகின்றனர்.

அவர்களிடம் ஐஎஸ்ஐ விசாரணை நடத்தி வருகிறது. இவர்களை உரிய நாட்டிடம் ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால், செளதி அரேபிய அரச குடும்பத்தை எதிர்த்ததால் பின்லேடனின் குடியுரிமையை அந்த நாடு ரத்து செய்துவிட்டது. இதனால் அவரது குடும்பம் அந்த நாட்டுக்குள் செல்ல முடியாது. இவர்களை ஏமன் ஏற்குமா என்பதும் தெரியவில்லை.

பிடிபட்ட 8 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வயது 2 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 8 குழந்தைகளில் இரு சிறுவர்கள் பின்லேடனின் குழந்தைகள் என்று தெரிகிறது. மற்றவர்கள், அவருடன் அந்த வீட்டில் வசித்த இரு சகோதரர்களின் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. அந்த இரு சகோதரர்களும் ஒரு பாதுகாவலரும் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர்.

முதலில் இந்த வீட்டில் உயிரோடு பிடிபட்ட அனைவரையுமே அமெரிக்கப் படைகள் தங்களுடன் கொண்டு செல்ல முயன்றதாகவும், ஆனால் ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அந்த வீட்டின் காம்பவுண்டில் விழுந்துவிட்டதால், அதை அங்கேயே விட்டுவிட்டதால், இடப் பற்றாக்குறையால் 10 பேரை விட்டுவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது.

இதனால் ஒசாமா மற்றும் அவரது மகனின் உடல்களை மட்டும் கொண்டு சென்றுள்ளனர்.

கொல்லப்பட்ட மற்ற 4 பேரில் அபு அஹமத் அல்-குவைதி என்பவர் தான் பின்லேடனின் கடிதப் போக்குவரத்தைக் கையாண்டு வந்தவர். இவரை கண்காணித்ததன் மூலமாகத் தான் பின்லேடனின் இருப்பிடத்தை சிஐஏ அறிந்தது.

இந்த வீட்டுக்குள் நுழைந்தவுடன் அமெரிக்கப் படைகள் கிரணைட் குண்டுகளை வீசித் தாக்கியதில், அங்கிருந்த குழந்தைகள் உள்பட அனைவருமே காயமடைந்துள்ளனர்.

thatstamil

வாஷிங்டன்: எந்தவித ஆயுதமும் கையில் இல்லாத நிலையில், அமெரிக்க வீரர்களிடமிருந்து அதி வேகமாக பாய்ந்து வந்த குண்டுகள் நெற்றிப் பொட்டிலும், மார்பிலும் பாய்ந்ததால் சுருண்டு விழுந்து இறந்துள்ளார் அல்கொய்தா தலைவர் பின்லேடன். தலையில் பாய்ந்த குண்டு பின்லேடனின் தலையின் மேற் பகுதியை அப்படியே பிளந்து விட்டது என்று அமெரிக்க மீடியாக்கள் கூறுகின்றன.

தலையில் குண்டு பாய்ந்ததில், பின்லேடனின் மண்டை ஓடு பிளந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பார்க்கவே படு கோரமாக இருப்பதால்தான் இந்தப் படத்தை வெளியிட அமெரிக்கா தயங்குவதாக கூறப்படுகிறது. இப்படத்தை வெளியிட்டால், உலகம் முழுவதும் பின்லேடன் மீது பச்சாதாப உணர்வு வந்து விடுமோ என்று அமெரிக்கா பயப்படுகிறது.

பின்லேடன் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்க செனட் சபையின் புலனாய்வுப் பிரிவு தலைவரான டியான் பெய்ன்ஸ்டீன் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்,

கிட்டத்தட்ட 38 நிமிடங்களுக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. மேல் மாடி வழியாக உள்ளே புகுந்த அமெரிக்க சீல் படையினர், மேல் மாடியில் இருந்த பின்லேடனைப் பார்த்ததும் அவரை பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது பின்லேடனிடம் ஆயுதம் எதுவும் இல்லை. ஆனால் அவருக்குப் பக்கத்தில் ஆயுதங்கள் இருந்துள்ளன.

அதை அவர் எடுக்க எத்தனிப்பதற்குள் அமெரிக்கப் படையினர் அதி வேகமாக சுட்டுள்ளனர். ஒரு குண்டு அவரது நெற்றிப் பொட்டில் பட்டு தலையை துளைத்துச் சென்றது. இதில் கபாலம் பிளந்துவிட்டது. இன்னொரு குண்டு நெஞ்சில் பாய்ந்தது. அதி வேகமாக நடந்த இந்த தாக்குதலால் பின்லேடன் உடனடியாக மாண்டு போனார் என்றார்.

இன்னொரு அதிகாரி கூறுகையில், பின்லேடன் சரணடைய மறுப்பது போல நடந்து கொண்டதாலும், ஆயுதத்தை எடுக்க எத்தனிப்பது போல நகர்ந்ததாலும் அவரை அமெரிக்கப் படையினர் சுட்டு வீழ்த்தினர் என்றார்.

பின்லேடன் உடல் மற்றும் அவரது தலை ஆகியவை அடங்கிய புகைப்படங்களைப் பார்த்த ஒரு அமெரிக்க அதிகாரி கூறுகையில், பின்லேடனின் இடது கண்ணுக்கு மேலே குண்டு பாய்ந்துள்ளது. அதி வேகமாக பாய்ந்ததால் தலையின் மேற் பகுதி அப்படியே பிளந்து போய் விட்டது. இன்னொரு குண்டு நெஞ்சில் பாய்ந்துள்ளது என்றார்.

பையில் இருந்த யூரோ பணம்:

பின்லேடனைக் கொன்ற பின்னர் உடலைக் கைப்பற்றிக் கொண்டு ஆப்கானிஸ்தானுக்கு விரைந்த அமெரிக்கப் படையினர் பின்லேடன் வீட்டிலிருந்த பல பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

10 ஹார்ட் டிரைவ்ககள், ஐந்து கம்ப்யூட்டர்கள், 100க்கும் மேற்பட்ட சிடி, டிவிடிக்கள் ஆகியவை இதில் அடக்கம். மேலும் பின்லேடனின் சட்டைப் பையில் 500 யூரோ பணம் இருந்ததாகவும், சில தொலைபேசி எண்கள் இருந்ததாகவும் தெரிகிறது.

ஐந்து செல்போன்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள், ஏ.கே.47 உள்ளிட்ட ஐந்து துப்பாக்கிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏதாவது ஆபத்து நேரிட்டால் உடனடியாக தப்பிப் போகும் அளவுக்கு பல்வேறு முன்னேற்பாடுகளுடன் பின்லேடன் இருந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அமெரிக்கப் படையினரின் மின்னல் வேகத் தாக்குதலிலிருந்து அவனால் தப்ப முடியாமல் போய் விட்டது.

வாஷிங்டன்: ஒசாமா பின்லேடனைத் தாக்க அமெரிக்கா தனது அதிநவீன எப்-117 ஸ்டெல்த் தொழில்நுட்பத்தை ('stealth' technology) ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

ரேடார்களில் இருந்து தப்புவதற்காக விஷேச வடிவமும், சிறப்பு முலாமும் பூசப்பட்ட பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் வடிவத்தையே முழுவதுமாக மாற்றியுள்ளனர். இதுவரை இந்த மாற்றம் செய்யப்பட்ட ஹெலிகாப்டரை அமெரிக்கா வெளியுலகுக்குக் காட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்லேடனை தாக்க வந்தபோது ஒரு ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாரால் பாதிக்கப்படவே, அதை அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பிய படையினர், அதை குண்டு வீசி அழித்துள்ளனர். ஆனால், அந்த ஹெலிகாப்டர்கள் முழுமையாக சிதையவில்லை.

வால் பகுதி மட்டுமே சிதறியுள்ளது. இதனால் அந்த ஹெலிகாப்டர் முழு அளவிலேயே அப்படியே கிடந்தது. இதை பாகிஸ்தானிய படையினர் கைப்பற்றி கொண்டு சென்றனர். அதை அமெரிக்கா தன்னிடம் ஒப்படைக்கக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

ரேடார்களில் இருந்து தப்ப அந்த ஹெலிகாப்டரின் முனைகளை மேலும் கூர்மையாக்கியுள்ள அமெரிக்கா, அதன் சத்தத்தைக் குறைக்க இறக்கைகளை மேலும் சிறிதாக்கியுள்ளது.

முன்னதாக இந்தத் தாக்குதலுக்கு 4 பிளாக்ஹாக் (Blackhawk) ரக ஹெலிகாப்டர்களே பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது. ஆனால், அங்கே விட்டுச் சென்ற ஹெலிகாப்டரை பார்த்தபோது, அது பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர் போலவே இல்லை.

கிட்டத்தட்ட F-117 ரக விமானத்தைப் போல காணப்பட்டது.

இந்த ஹெலிகாப்டர்கள், பாகிஸ்தானின் ரேடார்களில் மண்ணைத் தூவிவிட்டு அந்த நாட்டுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளன.

இந்த ஹெலிகாப்டர்கள், அபோடாபாத்துக்கு வந்து தங்கள் தலைக்கு மேலே பறக்கும் வரை எங்களுக்கு சத்தமே கேட்கவில்லை என்று பின்லேடனின் வீட்டுக்கு அருகில் வசிப்போர் கூறியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் வெற்றியடைய முக்கிய காரணமே இந்த ஹெலிகாப்டர்கள் என்று அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

thatstamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.