Jump to content

'யுத்த கால இரவொன்றில்...'


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

'யுத்த கால இரவொன்றில்...'

கவின் மலர்

'உங்களின் வரையறைகளின்

சாளரத்துக்குப் பின்னால்

நீங்கள் என்னைத் தள்ள முடியாது.

இதுவரை காலமும்

நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள்கிடந்து

வெளியே எடுத்து வரப்பட்ட

ஒரு சிறிய கல்லைப்போன்று,

நான் என்னைக் கண்டெடுத்துள்ளேன்!’

இந்தப் பளீர் கவிதை வரிகள் ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணிக்குச் சொந்தம்! 20 வயதுக்குள்ளாகவே ஈழத் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம் பிடித்த தீர்க்கமான கவிஞர்.

இலங்கையில் இருந்த பெண்ணிய இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த சிவரமணியின் எழுத்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குழந்தைகளின் மனதில் போர் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அவரது அக்கறை 'யுத்த கால இரவொன்றில் நெருக்குதல்’ கவிதையில் வெளிப்படுகிறது.

'ஒரு சிறிய குருவியினுடையதைப்போன்ற

அவர்களின் அழகிய காலையின்

பாதைகளின் குறுக்காய்

வீசப்படும் ஒவ்வொரு குருதி தோய்ந்த

முகமற்ற மனித உடலும்

உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பின் மீதாய்

உடைந்து விழும் மதிற்சுவர்களும் காரணமாய்

எங்களுடைய சிறுவர்கள்

சிறுவர்களாயில்லாது போயினர்!’

1983-ம் ஆண்டே சிவரமணி எழுதிய இந்தக் கவிதை, இன்றைக்கு குழந்தைமையைப் பறிகொடுத்து, முள் வேலி முகாம்களுக்குள் சிறைபட்டுக்கிடக்கும் குழந்தைகள் இழந்த சிரிப்பையும் விளையாட்டுத்தனத்தையும் எத்தனை எளிய வார்த்தைகளில் உரைக்கிறது!

வாழ்வின் நிதர்சனத்தையும் போரின் விளைவுகளையும் அற்புதமாகப் பிரதிபலித்தன சிவரமணியின் கவிதைகள்.

'நேற்றுபோல் மீண்டும் ஒரு நண்பன்

தொலைந்து போகக்கூடிய இந்த இருட்டு

எனக்கு மிகவும் பெறுமதியானது’

என சிவரமணி அன்றே எழுதிவைத்தது, இன்றைய வெள்ளை வேன் கடத்தல்களைப் பிரதிபலிப்பது!

போராட்டத்தோடு தன்னை உணர்வு பூர்வமாக இணைத்துக்கொண்ட அவருக்கு நீண்ட நெடிய போரும், தனிப்பட்ட வாழ்வின் நெருக்குதல்களும் சோர்வடையச் செய்திருக்கக்கூடும்.

சட்டென்று, ''எல்லாவற்றையும் சகஜமாக்கிக்கொள்ளும் அசாதாரண முயற்சியில் தூங்கிக்கொண்டும், இறந்து கொண்டும் இருப்பவர்களிடையே,நான் எனது நம்பிக்கைகளில் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!'' என்றார். கவித் திறனாலும், அன்பாலும் அனைவரையும் கட்டிப்போட்ட சிவரமணி குறித்தான பதிவுகள் மிகவும் குறைவு. மே மாதம் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் மறக்கவியலாத கொடும் நினைவு களைத் தந்த மாதம். அதே போன்றதொரு 1991-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதியன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் 23 வயது மட்டுமே நிரம்பிய சிவரமணி தற்கொலை செய்துகொண்டார்.மரணிப் பதற்கு முன், தான் எழுதிய அத்தனை கவிதைகளையும் தீயின் நாக்குகளுக்குத் தின்னக் கொடுத்து சாம்பலாக்கிவிட்டு, 'எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்!’ என்று ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். தன் கவிதைகள் சில வற்றை வைத்திருக்கும் நண்பர்களையும் அவற்றை யாரும் பார்க்க முடியாத படிக்குத் தீயில் இட்டு அழிக்கும்படியும் அதுவே தனக்குச் செய்யும் பேருதவியாய் இருக்கும் என்று கோரிக்கையும் வைத்துஇருந்தார்.

ஆனால், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு, எஞ்சிய 22 கவிதைகளையும் பதிப்பித்து 'சிவரமணி கவிதைகள்’ என்ற தலைப்பில் நூலாக்கினார். அதன் முன்னுரையில், 'ஆண்கள் தங்கள் கவிதைகளைத் தங்களின் வெற்றியாகப் பார்க்கிறார்கள். பெண்களோ, தங்களின் வடிகாலாகப் பார்க்கிறார்கள்!’ என்கிறார் சித்ரலேகா. எரிந்த கற்றைக் கற்றையான காகிதங்களில் இருந்த கவிதைகள் அனைத் தும், ரத்தமும் சதையுமாக, உணர்வும் உயிருமாக சிவரமணி படைத்த அக்னிப் பிழம்புகள். நெருப்பே நெருப்பைத் தின்ற விநோதம் அது!

தற்கொலை செய்துகொள்ளாமல் இருந்துஇருந்தால் சிவரமணி இந்நேரம் தமிழ்க்கவிதை களில் மிகப் பெரிய ஆளுமையாகவிசுவரூபம் எடுத்து நின்றிருப்பாள். அவளுடைய பெரும்பாலான கவிதைகள் நம்மிடம் இல்லை. ஆனாலும், எஞ்சிய 22 கவிதைகளின் வழியே சிவரமணி நம்முடன் வாழ்ந்துகொண்டு இருக் கிறாள், அவளே சொன்னதுபோல...

'பேய்களால் சிதைக்கப்படும்

பிரேதத்தைப் போன்று

சிதைக்கப்பட்டேன்

ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்

இரத்தம் தீண்டிய கரங்களால்

அசுத்தப்படுத்தப்பட்டன.

என் வேதனை கண்டு

ரசித்தனர் அவர்கள்

என்றைக்குமாய் என் தலை

குனிந்து போனதாய்க்

கனவு கண்டனர்.

ஆனால்

நான் வாழ்ந்தேன்

வாழ்நாளெல்லாம் நானாக

இருள் நிறைந்த

பயங்கரங்களின் ஊடாக

நான் வாழ்ந்தேன்

இன்னும் வாழ்கிறேன்!’

thanks-vikatan

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு சிறந்த கவிஞர் என நானும் கேள்விப்பட்டேன்.எதற்காக இவ்வளவு சின்ன வயதில் தற்கொலை செய்து கொண்டார் என யாருக்காவது தெரியுமா?

Link to post
Share on other sites

சிவரமணியின் கவிதைகளை இங்கு நானும் இணைத்துள்ளேன். அவர் ஒரு ஈ.பி.ஆர்.எல்.எவ்.போராளியாக இருந்தவர். அவர் தற்கொலை செய்ததற்கான காரணத்தை இங்கு இணைத்தால் உண்மையை ஒத்துக்கொண்டாமல் துரத்தும் கூட்டம் தான்இங்குள்ளது.

Link to post
Share on other sites

சிவரமணியின் கவிதைகளை இங்கு நானும் இணைத்துள்ளேன். அவர் ஒரு ஈ.பி.ஆர்.எல்.எவ்.போராளியாக இருந்தவர். அவர் தற்கொலை செய்ததற்கான காரணத்தை இங்கு இணைத்தால் உண்மையை ஒத்துக்கொண்டாமல் துரத்தும் கூட்டம் தான்இங்குள்ளது.

நான் அவரை பற்றி அறிந்த வரை அவர் ஈ பி ஆர் எல் எவ் இன் 'போராளியாக' இருந்ததாக அறியவில்லை. அத்துடன் அவரது தற்கொலயின் காரணம் இங்க எழுதினால் உண்மையை ஒத்துக் கொள்ளாமல் ஆட்கள் துரத்தும் அளவுக்கான காரணமாகவும் இல்லை

இது பற்றி உங்களுக்கு எவருக்கும் தெரியாத விடயம் தெரிந்திருந்தால் எழுதலாம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவரமணியின் கவிதைகள் சிலவற்றை வாசித்துள்ளேன். தன்னம்பிக்கை நிறைந்த கவிதைகளை எழுதியவர் எப்படித் தற்கொலை செய்தார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அவருடைய எழுத்திற்கும் அவருடைய செயற்பாட்டுக்கும் நீண்ட இடைவெளி இருக்கும்போல் தோன்றுகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு துணிந்த கவிஞை எப்படித் தற்கொலை செய்து கொண்டாள் ? எழுத்திற்கும் வாழ்விற்கும் வித்தியாசமில்லாமல் இரண்டையும் ஒன்றாய் தாங்கி வாழ்ந்த பலர் தற்கொலை செய்த வரலாறுகள் இந்த உலகில் நிறையவே இருக்கிறது. அந்த வகையில் சிவரமணியும் தன்னையழித்துக் கொண்டுள்ளார் போல.

தற்கொலை என்பது ஒரு சில மணித்துளிகளில் ஏற்படுகிற துணிச்சலின் முடிவு. அது பெரிய வீரனுக்கும் வரலாம் சாதாரண பயந்தாங்கொள்ளிக்கும் வரலாம். ஆக தற்கொலைக்கான முடிவு திட்டமிட்டு வருவதல்ல.

அண்மையில் ஒரு மாணவி யாழில் தற்கொலை செய்து கொண்டாள். அவளது தாயாரின் தகாத பழக்கம் அதனால் அவளுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களால் ஏற்பட்ட தாக்கத்தால் தாயை மிரட்ட அலரிவிதையை அரைத்துச் சாப்பிட்டாள் அந்தப் 17வயதுச்சிறுமி. அலரிவிதையின் கசப்பைப் போக்க சர்க்கரையைச் சாப்பிட்டுவிட்டாள். ஆனால் சர்க்கரை நஞ்சின் வீரியத்தைக் கூட்டுமாம்(சொல்கிறார்கள்) உடலை வருத்திய வேதனையில் தனது தங்கைக்கு நிலமையைச் சொல்லி ஒரு அண்ணன் முறையானவனைத் தொலைபேசியில் அழைத்துத் தன்னைக் காப்பாற்றச் சொன்னவளைத் தேடி அந்த அண்ணன் வந்த நேரம் அவள் இறந்து போயிருந்தாள்.

இந்த மரணத்திற்கு அவளது சக பாடசாலைப் பிள்ளைகளைக்கூட அவள் கற்ற பாடசாலை நிர்வாகம் அனுப்பவில்லை. காரணம் ஒரு கோளையின் மரணத்தக்கு போகக்கூடாதென்று. இதே இவள் ஒரு விபத்தில் அல்லது இயற்கையாய் இறந்திருந்தால் என்னமாதிரியான கண்ணீர் விடுகைகள் நிகழ்ந்திருக்கும் ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிஞர் என்று எழுத்தாளர் சுஜாதா ஒருபோது பாராட்டியிருந்தார்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஆளும் கட்சியான அதிமுகவிடம் பாமக தொடர்ந்து வலியுறுத்திவந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட மறுநாளே கூட்டணி உறுதியாகியுள்ளது. வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இருபது சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வந்தார். அதற்காக போராட்டங்களையும் நடத்தினார். அதோடு, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ராமதாஸ் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்னதாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இடஓதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு தனியார் விடுதியில், அதிமுக-பாமக கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றதை அடுத்து அதிமுக, பாமக தலைவர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், அதிமுக தரப்பில் முதல்வர் மற்றும் அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் மற்றும் அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கெடுத்தனர். 'குறைத்துத்தான் பெற்றிருக்கிறோம்'- அன்புமணி அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் பாமகவுக்கு அளிக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது, அந்த விவரங்கள் பின்னர்தான் வெளியிடப்படும் என பன்னீர்செல்வம் தெரிவித்தார். பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ், ''பாமக, அதிமுக கூட்டணியில் சேர்ந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் கூட்டணி மிகபெரிய வெற்றி பெறும். எங்களுடைய நோக்கம், எங்கள் கோரிக்கை வன்னியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வேண்டும் என்றோம்.'' ''அரசாங்கம் அதை நிறைவேற்றியுள்ளது. எங்களுடைய கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால், நாங்கள் போட்டியிடும் சட்டமன்ற தொகுதிகளில் கடுமையாக உழைத்து வெற்றி பெற்றுத் தருவோம். தொகுதி எண்ணிக்கையை நாங்கள் குறைத்துத்தான் பெற்றிருக்கிறோம். ஆனால் எங்கள் பலம் குறையாது. எங்கள் கூட்டணி பெரிய வெற்றி பெறும்,''என்றார். 20 ஆண்டுகளுக்கு பின் 20 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2001 தேர்தலில், அதிமுக பாமகவுக்கு 27 தொகுதிகளை ஒதுக்கியிருந்தது. அதில் 20 தொகுதிகளை பாமக வென்றது. அதன் பின்னர் 2006 மற்றும் 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இணைந்தது. 2006இல் 31 தொகுதியில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்றது பாமக. 2011ல் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்டாலும், வெறும் மூன்று தொகுதிகளில் மட்டும்தான் பாமக வெற்றி பெற்றது. அதனை அடுத்து, 2016ல் தனித்து நின்று பாமக சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. பாமக தலைவர் ராமதாஸின் மகன் மற்றும் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவரான அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது 2021 சட்டமன்ற தேர்தலில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை பாமக பெற்றுவிட்டதால், வடமாவட்டங்களில் பாமகவின் வாக்குவங்கி அதிமுகவுக்கு கிடைக்கும் என இந்தக் கூட்டணியினரால் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக - பாமக கூட்டணி உறுதி; பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - BBC News தமிழ்
  • அந்த பொடியனும் அவ்வளவு நல்லது கிடையாது போல இருக்கு சரியான குழப்பவாதியாம் சண்டையும் சேட்டையுமாம் , ஆனால் ரொக்கோட் பண்ணி அவன் நல்லவன் ஆகிட்டான்  பாடசாலையில் அவ்வளவு நல்ல பெயர் கிடையாது அது மட்டும் அல்ல ரீச்சரும்  மிகவும் அடக்கமானவராம் தன் பிள்ளைக்கு ஏற்பட்ட பிரசினைக்கு அவர் பேச எத்தனிக்கும் போது உணர்ச்சிவசப்பட்டுள்ளார் என்பது தெரியவருகிறது
  • கொரோனா வந்து சைவத்துக்கு உயிர் கொடுத்துள்ளது.
  • திரும்ப திரும்ப சொல்லுறன் சைவம் தான் புதிய உலக நியதி.  
  • சகல உடற்பயிற்சிகளிலும் நீச்சல் தான் சிறந்தது என்கிறார்கள். இதையே நிரந்தரமாக்கினால் நன்றாக இருக்கும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.