Jump to content

- புலத்தில் இருந்து ஓர் புலம்பல் VIII - எங்களால் முடிந்தது


Recommended Posts

வணக்கம்,

நலமாக இருக்கிறீர்களா? வாழ்க்கை எப்படி போகின்றது? "அட என்னத்த இங்க வந்து கண்டோம்" என அலுத்துக்கொள்கிறீர்கள் போல?

இருங்கோ தேத்தண்ணி போட்டு கொண்டு வாறன்.

சரி இப்ப நாங்கள், என்னை போல, உங்களை போல, நம்மை போல சில மனிதர்களை பார்ப்போமா?

இஞ்ச பாருங்கோ இப்பவே சொல்லி போட்டன். இது முற்றிலும் ஒரு கற்பனை கதை என்ன. இடங்களின் பெயர்கள் மட்டும் நிஜ வாழ்வில் உள்ள இடங்கள். சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனை. பிறகு அங்க அவுஸ்திரேலியாவில இருக்கிறவ கோவ பட கூடாது. சரியோ??

சரி இனி உங்களுக்காக புலத்தில் இருந்து ஓர் புலம்பல்...

images6dl.jpg

புலத்தில் இருந்து ஓர் புலம்பல்

ஈழத்தில் வடமராட்சியில் காலம் காலமாக வாழ்ந்த ஓர் குடும்பம், நாட்டு நிலமையால் அவுஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சீவியம் நடத்தி கொண்டு இருக்கிறது.

குடும்ப உறுப்பினர்கள் தாய் புவனேஸ்வரி, மகன் ராஜன், ராஜனின் மனைவி ராதிகா.

2006 புத்தாண்டு பிறந்துவிட்டது. ராஜன் குடும்பம் வொலொங்கொங் என்னும் இடத்தில் அமைந்த்திருக்கும் "சிவா+விஸ்ணு" ஆலயத்திற்கு செல்ல ஆயுத்தமாகின்றனர்.

ராஜன்: ராதி...ராதி..என்னப்ப நீர் இன்னும் இந்த மேக்கப்பை பூசிமுடிக்கலையே?

ராதிகா: ( கண்ணாடியின் முன் அமர்ந்து கொண்டே), "இஞ்ச பாருங்கோ ராஜன் நான் சமைச்சு போட்டு அவசரம் அவசரமாய் வெளிக்கிடுறன். எனக்கு கோவத்தை கிளப்பாதிங்கோ சொல்லி போட்டன்"

ராஜன்: ம்ம்ம் காலமடா காலையில எழும்பி சமைச்சது நான். கடைசியில சலட் ஒன்றை போட்டுவிட்டு பெரிதா சொல்லிக்க வேண்டியது. அப்பவே என்ட அம்மா சொன்னவ "டேய் ராஜன் உனக்கு நான் பார்த்திருக்கிற அமலாவை கட்டடா" என்று..

அறையில் இருந்து புயலென வெளியேறிய ராதிகா, தனது புடவையை சரி செய்தவாறு, "என்னப்பா சொன்னனிங்கள்?

ராஜன்: ஒண்டும்மில்லையே!!

ராதிகா: அது தானே பார்த்தேன். பாருங்கோ அப்ப ஊரில நீங்கள் சுமாரா இருந்தியள், அதுவும் சின்னனில. நான் உங்கள ஓ/எல் படிக்கிற நேரத்தில எல்லோ இந்த கண்றாவி காதலை பண்ணி தொலைச்சனான். எனக்கு அப்ப 7 1/2 சனி போல. உங்கள என்னை விட்ட எவள் திரும்பி பார்ப்பால்?

ராஜன்: சரி சரி பழைய கதை எல்லாம் இப்ப எதுக்கு? அம்மா எங்க?

ராதிகா: மேல் விட்டு சறோ அன்றியோட அலட்டி கொண்டு இருப்பா. நான் காலமை எழும்பினதில இருந்து வேலை செய்து போட்டு வெளிக்கிடுறன். என்னை குறை சொல்லுங்கோ. உங்கட அம்மா காலையில "செல்வி" கதை கதைக்க போனவ தான். என்னையே குற்றம் சொல்லுங்கோ..

ராதிகா மறுபடி அறைக்குள் இருக்கும் கண்ணாடி முன் ஐக்குயமாகிவிட, மேல் வீட்டு சறோ வீடிலிருந்து திரும்புகிறார் புவனேஸ்வரி.

புவனேஸ்வரி: தம்பி ராஜன், என்னப்பு வெளிக்கிடுவமே?

ராஜன்: உங்கட மருமகள் மேக்-அப் போட்டு முடியவில்லை அம்மா.

புவனேஸ்வரி: அதை சொல்லு, நான் இந்த விடிய காலமையில எழும்பி வேலை எல்லாம் செய்து போட்டு, ஒரு புடவையை சுத்தி பொட்டு நிற்குறன். உன்ட மனிசிக்கு என்ன?

ராஜன் மனதிற்குள் : (கேளுங்கோவன் கதையை காலையில எழுந்து வேலை எல்லாம் செய்தது நான். இவை ரென்Dஉ போரின்ட கதையும்.கடவுளே)

ராஜன் தாயின் பார்வையை தவிர்க்க எண்ணி, தொலைக்காட்சி பெட்டியை தட்டிவிடுகிறான். தொலைக்காட்சியில காலநிலை போய் கொண்டிருக்கிறது.

ராஜன்: அடக்கடவுளே இண்டைக்கு பார்த்து நாங்கள் கோயிலுக்கு வெளிக்கிடுறம், வெயில் சரியா இருக்கும் போல, 45 போகும் என்று சொல்லுறாங்கள்.

புவனேஸ்வரி: இதை விடு தம்பி. உன்ட மனிசி அவான்ட அப்பா , அம்மாவோட டெலிபோனில எப்ப பார்த்தாலும் கதைக்கிறா. பிறகு நான் தான் என்னமோ டெலிபோன் பில்லை கூட்டுற போல உனக்கு கதை சொல்லுறது என்ன..

ராஜன்: அம்மா அப்படி ஒன்றுமே ராதிகா சொன்னதில்லை

புவனேஸ்வரி: அது சரி கட்டினவள் தானே இப்ப கண்ணுக்கு முன்னால தெரியிறாள். பெத்தவளை பற்றி என்ன கவலை. நான் உன்னை கொப்பர் போன பிறகு எவ்வளவு கஸ்டபட்டு வளர்த்தனான் தெரியுமோ??

ராஜன்: அம்மா ஆரம்பிக்காதிங்க.

ஒருவாறு தனது அலங்காரத்தை முடித்து அறையை விட்டு வெளியே வந்த ராதிகா

"அப்பா மாமி செல்வி பார்க்கிற நேரத்தில உங்களுக்கு என்ன தொலைக்காட்சி பார்ப்பு. மாமி கதை எப்பிடி மாமி போகுது. செல்வியை பார்த்தா பாவமா கிடக்குது என்ன"

ராஜன்: (மனதிற்குள்) அடிபாவிகளா, என்னை பார்த்தா பாவமா தெரியலையா?)

புவனேஸ்வரி: ஓமடி பிள்ளை. காரில போகக்கில்லை கதையை சொல்லுறன். நீ இந்த பச்சை புடவைக்கு எண்ட பச்சை முத்து மாலையை போடேன் பிள்ளை. வடிவ இருக்கும் எல்லோ?!!

ராதிகா: மாமி உங்கள பழைய காலம் எண்டு இவர் ஏன் சொல்லுறவரோ தெரியாது. உங்களுக்கு நல்ல டேஸ்ட் மாமி.

ராஜன்:(மனதிற்குள்)"அடிப்பாவி நேற்றும் இரவு "அப்பா உங்கட அம்மா சரியான கர்நாடகம்" என்று சொல்லி போட்டு..

புவனேஸ்வரி: தம்பி இருட என்ட மருமகளுக்கு இந்த மாலையை போட்டு கூட்டி கொண்டு வாறன்.

ராஜன்: ஓம் ஓம், மெதுவா வாங்கோ. கோவில் இண்டைக்கு இரவு வரைக்கும் திறந்து இருக்குமாம். (ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லி போட்டு, இப்ப மாலை எல்லோ போடினமாம். என்ட நல்லூர் கந்தனே)

தலையில் கை வைத்து ராஜன் புலம்ப, புலத்தில் இருந்து ஓர் புலம்பலுக்கு சின்னதா ஒரு இடைவெளி...

புலம்பல் தொடரும்..........

Link to comment
Share on other sites

 • Replies 244
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

என்ட நல்லூர் கந்தனேனேனேனே

Link to comment
Share on other sites

ஆஹா என்ன தூயா உங்க வீட்டு சமாச்சாரமோ?? :wink: :wink:

நல்லா இருக்கு உங்கள் புலம்பல்.

புலம்பல் தொடர வாழ்த்துக்கள் :P

Link to comment
Share on other sites

அட முகத்தான் வீட்டிலை தான் இப்பிடி எண்டு பாத்தா ஊர் ஊரா அதுதான் நடக்குது போல கிடக்கு உண்மையை சொல்லுங்கோ தூயா இது உங்கடை வீட்டுக் கதைதானே................

Link to comment
Share on other sites

பாவி மக்கா......

இப்பிடி எல்லாம் எழுதுவீங்களா?

ஒரு இடத்தில ரசிகை அசத்துறா மற்ற இடத்தில சினேகிதி -- இங்க பார்த்தால் தூயா--- எங்க பர்த்தாலும் முகத்தார் ஐயா.. நடத்துங்க.

சின்ன நெருடல்

ஏதாவது ஜோக் ஆ எழுதனும் எண்டால் .. பெண்களை கொஞ்சம் முரட்டுதனமானவங்களா காட்டினாதான் மற்றவங்க ரசிப்பாங்க எண்டு யார் உங்களூக்கு சொல்லி தந்தாங்க?

குசும்பு திலகமா? :wink: :wink:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வர்ணன் நீங்க ஓரு பக்கத்தில அசத்த வேண்டியதுதானே.

Link to comment
Share on other sites

வர்ணன் நீங்க ஓரு பக்கத்தில அசத்த வேண்டியதுதானே.

அதுக்கு ஒரு திறமையும் இல்லையே .. என்ன செய்வேன் சினேகிதி அவர்களே :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சும்மா கதை விடாதயும்..என்ன திறமையில்ல??இதுவரைக்கும் என்ன எங்க எழுதியிருக்கிறீர்..அதாவர் ஒரு பதிவு...மற்றவையோட சண்டை பிடிக்கிறது இல்ல.என்னப்போல அலட்டாம உருப்படியா ஏதாவது எழுதும் சரியா.

Link to comment
Share on other sites

தலையாட்டிகள் பற்றி ஒரு கதை முதல் முதலா சொந்தமா ஒரு பதிவு செய்ய போறன் சினேகிதி. பாப்பம் (எழுதி கொண்டு இருக்கன்)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சரி சரி நல்ல விசயம் நல்லா எழுதும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிப்பாவிகளா.. ஒராள் இல்லாத நேரம் ஒராளைப்போட்டு வாங்கிறது பிறகு ஒற்றுமையா.. எங்க புலத்தில் இருந்து ஓர் புலம்பல் வரட்டும் பாப்பம்.. :P நாடகங்கள் பகுதியில் போட்டால் விருந்தினரும் பார்ப்பினமே ஏன் களஉறுப்பினர்களுக்கு மட்டும் பகுதியில்..? :roll: :roll:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னத்திரை வந்ததிலிருந்து அப்படித்தான் பாருங்ஙோ..ஹி ஹி :lol::lol::lol::D:D:D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாருக்கு தூயா :P

தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பாக்கிறேன் :lol:

Link to comment
Share on other sites

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோதரங்களே.

அங்கிருந்து இங்கு நகர்த்தியதற்கும் சகோதரனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

அட முகத்தான் வீட்டிலை தான் இப்பிடி எண்டு பாத்தா ஊர் ஊரா அதுதான் நடக்குது போல கிடக்கு உண்மையை சொல்லுங்கோ தூயா இது உங்கடை வீட்டுக் கதைதானே................

சரியாச் சொன்னீங்கள் முகத்தார்..! என்றாலும் சொந்தக் கதையைச் சொல்ல வந்த துணிச்சலுக்கு தூயா பாப்ஸைப் பாராட்டலாம்..! :wink: :P

Link to comment
Share on other sites

ஆகா எல்லாரும் சேர்ந்து என்ட கதை என்று முடிவு செய்திட்டிங்கள் போல ;)

Link to comment
Share on other sites

படைப்பு நல்லாயிருக்கு தூயா...வாழ்த்துக்கள் :lol:

அது சரி எப்ப வடமராட்சியிலிருந்து அவுஸ்திரேலியாக்கு போனனியள் ? சொல்லவேயில்லை?

Link to comment
Share on other sites

பாவி மக்கா......

இப்பிடி எல்லாம் எழுதுவீங்களா?

ஒரு இடத்தில ரசிகை அசத்துறா மற்ற இடத்தில சினேகிதி -- இங்க பார்த்தால் தூயா--- எங்க பர்த்தாலும் முகத்தார் ஐயா.. நடத்துங்க.

சின்ன நெருடல்

ஏதாவது ஜோக் ஆ எழுதனும் எண்டால் .. பெண்களை கொஞ்சம் முரட்டுதனமானவங்களா காட்டினாதான் மற்றவங்க ரசிப்பாங்க எண்டு யார் உங்களூக்கு சொல்லி தந்தாங்க?

குசும்பு திலகமா? :wink: :wink:

ஒன்றில் பெண்களைப் பழிக்கனும்...இல்ல உயர்திறதா காட்டிட்டே திட்டனும்.. இரண்டில ஒன்று நடந்தாகனும்..! இல்லைன்னா இந்த ஆண்களுக்கு பொழுதே போகாதே.. பெண்களை "ரச்" பண்ணாம ஆண்கள் ஏதாச்சும் உருப்படியா எழுதி இருக்காங்களா எங்கை என்றாலும்..! சோ..இதுகளைக் கண்டுங்காதேங்கோ..! :wink: :lol::lol:

பாருங்கோ..பெண்களும் தான் ஆண்டாண்டா வீட்டு வேலை செய்யுறாங்க... எந்தப் பெண்ணாவது தான் வீட்டு வேலை செய்யுறதை சொல்லிப் புலம்பிறாங்களோ...இல்லை..! ஆனா ஆண்கள் இருக்கினமே சின்னனா ஒன்று வித்தியாசத்துக்கு செய்யட்டும்.. புலம்பலோ புலம்பல் தான்..! இவையா தங்கட வீக் பொயிண்டைக் காட்டிட்டு..புலம்பிட்டு இருக்க வேண்டியான்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

நன்றி நன்றி

நீங்களும் ஆரம்பிச்சிட்டிங்களா? ;) :oops:

Link to comment
Share on other sites

ஆகா எல்லாரும் சேர்ந்து என்ட கதை என்று முடிவு செய்திட்டிங்கள் போல ;)

அட இதே ஒரு புலம்பல் போல இருக்கு அப்ப தலைப்பை மாத்திவிடுங்கோ "புலத்திலிருந்து தூயாவின் புலம்பல்"

Link to comment
Share on other sites

முகம்ஸ்,நல்ல யோசனை, அடுத்த தொடருக்கு இந்த பெயரை வைப்பம் என்ன ;)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தூயா பபா இப்பதான் வாசிச்சன் புலம்பல் நல்லாத்தான் இருக்கு. தொடர்ந்து எழுதுங்க :P

அது சரி ஏன் எல்லாரும் துயா பபாவின்ர சொந்த அனுபவம் எண்டுறீங்க எல்லா இடத்திலும் நடக்கிறது தானே :evil: :roll: :roll:

இதே ஆண்களும் இப்படித்தான் மனைவி தனது தந்தையையோ சகோதரனை பற்றியோ உயர்வா கதைச்சா காணும் அவர்களை மட்டம் தட்டுவார்கள் அதே போல மாமனாரும் செய்வார் (இது எனது சொந்த அனுபவம் இல்லை :wink: )

ஆனா மாமியார் மருமகள் மட்டும் தான் சண்டை பிடிக்கிற மாதிரி உருவகப்படுத்துறதுதான் ஏனெண்டு தெரியேல்லை :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தூயா பபா இப்பதான் வாசிச்சன் புலம்பல் நல்லாத்தான் இருக்கு. தொடர்ந்து எழுதுங்க

நல்ல இருக்குறதல தான் போட்டு இருக்க பிறக்கு என்ன

நல்லதான் எண்டு புலம்பின :P :P

Link to comment
Share on other sites

தூயாவின் புலம்பல் கற்பனையாக இருந்தாலும் அது புலத்தில் நடக்கும் ஒன்றுதான். இதில் வரும் செல்வி தொடர்நாடகம் குறித்தபேச்சு புலம்பெயர்ந்த தமிழர்களில் வாழ்வில் இந்த தொடர் நாடங்கங்கள் எவ்வளவு தூரம் ஊருடுவிட்டது என்பதை காட்டுகின்றது.

தூயாவின் புலம்பல் தொடரட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.