Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

அவளின் பிரச்சினை (சிறுகதை)

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு :- இக்கதையை எழுதியவள் ஒரு முன்னாள் பெண்போராளி. இந்தக்கதை அவள் தனது வாழ்வைப் பற்றி மேலோட்டமாக எழுதியிருக்கிறாள். எதிர்வரும் காலங்களில் ஆழமாகத் தனது வாழ்வை எழுதும் நிலமைக்கும் வருவாள். இவளுக்காக நானும் ஒரு துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவளது வயதின் முதிர்வு தடையாய் நிற்கிறது. பேசுகிற தருணங்களில் அவளது வேதனைகைளைச் சொல்லுவாள். ஆனால் வெறுங்கையால் எதையும் செய்ய முடியாதுள்ளது.

அவளின் பிரச்சினை (சிறுகதை)

-ஆனதி-

தேவாநந்தியை இப்போதெல்லாம் மனதின் வெறுமை மட்டுமே கோலோச்சுகிறது. ஏன்தான் தான் இன்னமும் வாழ்கிறேனோ என்று தன்னில்தானே பச்சாதாபப் பட்டுக்கொள்கிறாள். பதினெட்டு வயதுமுதல் முப்பத்தாறு வயதுவரை போராளியாக வாழ்ந்த காலங்களில் இருந்த நம்பிக்கையும் வாழ்க்கை மீதான பிடிப்பும் பிறர் மீதான பாசமும் நேசமும் துடிதுடிப்பும் இப்போதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன.

அவளுக்கென கொடுக்கப்படும் கடமைகளை தேவாநந்தி உற்சாகத்தோடு செய்துமுடிப்பாள். அதனால் அவளுக்கு கடமைகளும் அதிகம் இருந்தன. அதனால் அவளின் மேலாளர்களிடம் அவளுக்கு நல்லபெயர் இருந்தது.

அவளின் இருபத்தியெட்டாவது வயதிலேயே அவளின் பெற்றவர்கள் அவளை வற்புறுத்திக் கேட்டார்கள்தான்,

“தேவாம்மா, நாங்களே உன்ர பொறுப்பாளரிட்ட வந்து கதைக்கிறம். முதல்ல நீ கலியாணத்துக்கு ஓமெண்டு சொல்லு”

“என்ன? கலியாணமா, எனக்கா?” என்று வாய் பிளந்தவள் திறந்த வாயை புறங்கையால் பொத்திக்கொண்டு அரக்கப்பரக்க விழித்தாள்.

“என்னம்மா உனக்கென்ன இன்னும் பதினெட்டு வயசுதான் எண்ட நினைப்பா? நீ இருபத்தெட்டு ஆச்சிது.” என்று அக்கறையோடு சொன்னார் தந்தை.

“ஐயோ அப்பா, இந்த வயசிலயே கலியாணமா? என்னப்பற்றி என்னப்பா நினைப்பினம்?”

“என்னம்மா நினைக்கிறது? நீ தாராளமாய் வேலை செய்திருக்கிறாய். கலியாணம் செய்த பிறகும் தொடர்ந்து நீ வேலை செய்ய அனுமதிக்கிற பெடியனாய் பாத்து கட்டினால் சரிதானேம்மா”

“ஐயோப்பா இப்ப என்னால ஏலாது. எத்தின சீனியஸ் அக்காமார் இருக்கிறாங்க. நீங்க எனக்குப்போய்... வேண்டாமப்பா.”

“வேண்டாமெண்டெல்லாம் சொல்லக்கூடாதம்மா. அதது காலா காலத்துக்கு நடக்கணும்.”

“சரி நான் வேணவே வேணாம் எண்டு சொல்லேல்ல. இப்ப வேணாம்.”

“அப்ப?”

“கொஞ்சநாள் போகட்டுமப்பா. இன்னும் நான் செய்யவேண்டிய சேவை எவ்வளவு இருக்கு.”

என்று அவள் அப்போது மறுத்தது இப்போது எவ்வளவு தப்பாகிப் போய்விட்டது.

அன்றிருந்த நிலை அப்படித்தான் அவளை பேச வைத்தது. அப்போது போராட்டத்தில் அவளைவிட மூத்தவர்களாய் இருந்தவர்களுக்கே அரிதாகத்தான் திருமணங்கள் நடந்தன. முப்பது வயதுக்குள் திருமணம் செய்பவர்கள் பொதுவாக விமர்சனத்துக்கு ஆளாகுவதுண்டு. பெற்றோரே முன்னின்று பேசி செய்து வைத்தாலும்கூட அது அவர்களது பேர்களையும் மாசுபடுத்திவிடலாம். சிறிய சொல்லும் தேவாநந்தியை இலகுவாகக் காயப்படுத்திவிடும். அதன் காரணங்களாகத்தான் அவள் மறுத்தாள். அதுமட்டுமல்ல அவளுக்கே கல்யாண வாழ்க்கை பற்றிய எந்த எண்ணமும் அப்போது இருக்கவுமில்லை. இந்த வயதில்தானே ஓடியாடி வேலைகளையும் தாராளமாகச் செய்யமுடியும்.

தேவாநந்தி பல இல்லங்களுக்கான வேலைகளைச் செய்யவேண்டி இருந்தது. ஆதரவற்றவர்களுக்கான சேவையில் தன்னை ஈடுபடுத்தியதால் அவர்களுக்காகவே வாழப்பிறந்தவளாக தன்னை எண்ணிக்கொண்டாள். ஆண்டுக்கணக்காய் போராளியாக இருந்ததனால் போராட்டத்திலும் சமூக நலனிலும் ஏற்பட்ட ஈடுபாடு ஓய்வொழிச்சலின்றி அவளை கடமையாற்ற வைத்தது. உண்மையான உள்ளன்போடு வாழ்ந்த அவளுக்கு சக போராளிகளின் ஈடிணையற்ற தியாகங்களின் பொருட்டு விடுதலை கிடைக்கும் என்று அபரிமிதமான நம்பிக்கை இருந்தது. அதனால்தானே தன்னை மறந்து தன் எதிர்காலத்தை மறந்து கடமையாற்றினாள்.

அவளது துடினத்தால் ஈர்க்கப்பட்ட, அவளது பண்புகளால் கவரப்பட்ட சிலர் அவளை மணம்முடிக்க விரும்பிய போதும் தேவாநந்தி மறுத்துவிட்டாள்.

இப்போது போய்விட்ட பேருந்துகளுக்கெல்லாம் கைகாட்டியவளாக தனியே நிற்கிறாள்.

முடிந்துவிட்டதாய் சொல்லப்படுகிற போர், தேவாநந்தியின் அப்பாவையும் சகோதரர்கள் சிலரையும் கூட்டிக்கொண்டு போய்விட்டது. அவளும் தங்கையும் அம்மாவும் மட்டுமே நட்டாற்றில் விடப்பட்ட தோணியாய் தத்தளித்துக்கொண்டு கிடக்கிறார்கள். அவளும் தங்கையும்தான் உழைக்கவேண்டும்.

அம்மா முன்னரைப்போல இல்லை. நிறையவே மாறிவிட்டார் அல்லது இழப்புகள் அவரை மாற்றிவிட்டன. முன்பெல்லாம் தேவாநந்தி வீட்டுக்கு வரும்போது தலை தடவி உணவளித்த பாங்கு, அப்பாவின் மறைவோடு காணாமல் போய்விட்டது. இப்போதெல்லாம் அம்மாவின் தொண தொணப்பும் முணுமுணுப்பும் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகின்றன.

அவள் எங்கு புறப்பட்டாலும் புலனாய்வு அதிகாரியைப்போல விசாரிக்கும் அம்மாவை அவளுக்கும் பிடிக்குதில்லை. வெளியே போய் வந்த களைப்புக்கு தேநீர் தரமுன்னர் அவள் விளக்கவுரை நிகழ்த்த வேண்டி இருக்கிறது. வாய்ச் சொல்லை அளந்து பேசி செயலால் வளர்ந்த அவளுக்கு இந்த விசாரணைகளும் விளக்கவுரைகளும் எரிச்சலை மூட்டாமல் என்ன செய்யும்?

தங்கைக்கும் அவளுக்கும்கூட அடிக்கடி கருத்து மோதல் ஏற்படும். தேவாநந்தியின் சமூகப் பார்வைக்கும் அவளது தங்கையின் பார்வைக்கும் இடையிலான ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் கருத்து மோதல்கள் இருவர் மனதையும் உடைத்துப் போட்டுவிடும். என்னதான் இருந்தாலும் அத்தனை காலங்களும் அம்மாவுக்கு அருகிலேயே இருந்து அவரை பார்த்துக்கொண்டவள் தங்கைதானே என்ற பற்று தங்கையை மதிக்கவும் நேசிக்கவும் வைக்கிறது. தேவாநந்தி ஒருவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்காக என்னைத் தருகிறேன் என்று குடும்பத்தைவிட்டு ஓடிப்போனவள்தானே.

இப்போது ஊராரின் விசாரிப்புகளும் உறவுகளின் பாராமுகமும் அவளை கொல்லாமல் கொல்கின்றன. நாளைக்கே அவளுக்கென்று ஒரு வரன் அமைந்தால் உடனே கழுத்தை நீட்டிவிடுவாள்தான். ஆனால் எதுவுமே அமைந்து வருவதாய் இல்லையே. கைக்கெட்டுவதுகூட வாய்க்கெட்டாமல் போய்விடுகிறது. கேட்டுவரும் அத்தனை வரன்களும் சீதனப் பிரச்சினையால் தட்டிவிடும். பவுண் பவுணாய் அள்ளிக்கொடுப்பதற்கு அவர்களிடம் எதுவுமே இல்லையே. அதற்கு மேலாக அவள் போராளியாக இருந்தாள் என்ற காரணத்தால் தட்டிக்கழிக்கப்படும். லட்சக்கணக்கில் வீட்டில் கொட்டிக் கிடந்தாலாவது போராளியாய் இருந்தாள் என்ற காரணம் மறக்கப்பட்டுவிட வாய்ப்புண்டு.

சில வேளைகளில் அவளே நினைப்பாள், தான் இந்த வயதுக்குப்பிறகு ஒரு திருமணம் செய்து என்ன வாழ்ந்துவிடப் போகிறேன் என்று. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தாயாகும் தகுதியையும் தான் இழந்துவிடப் போகிறவள் தானே. அவளுடைய ஆழ்மன எண்ணங்கள் அப்படியெல்லாம் இருந்தாலும் இப்படியா, இந்தத் தனிமையிலா? என்று நினைக்கும்போது எதிர்காலம் சூனியமாகி பயமுறுத்தும்.

அவள் கல்யாணம் கட்டத்தான் வேண்டும். இல்லாவிட்டால் இந்த வாழ்க்கை இனிமேல் வெறும் நரகம்தான்.

அவளின் பெரியப்பா வந்து அம்மாவிடம் ஏதோ குசுகுசுத்தது புரிந்து, தேவாநந்தி வெளியே வந்து நின்றுவிட்டாள். அம்மா என்ன பதில் சொல்லியிருந்தாரோ தெரியாது. பெரியப்பா வெளித் திண்ணையில் குந்திக் கொண்டிருந்த அவளிடம் வந்து செருமினார்.

அவர் தேவாநந்தியின் திருமணம் பற்றித்தான் உள்ளே தாயாரிடம் பேசினார் என்பதை யாரும் சொல்லாமலேயே அவள் புரிந்துகொண்டாள்.

“தேவா, உனக்கொரு கலியாணம் கேட்டிருக்கு. நீ ஓமெண்டால்....” என்று தயங்கி நிறுத்தினார்.

“கிளிநொச்சி மாமாட மகன். மூத்தவன் சின்ராசுதான்.” என்று பட்டென்று சொன்னார் பெரியப்பா.

“என்ன?” என்று அருண்டுபோன தேவாநந்தியின் நா உலர்ந்துவிட்டது.

அந்த குடிகார மொட்டையனையா? மூன்று பிள்ளைகளோடு நிற்கும் அவனை இவள் கட்டணுமா? என்று அவளுக்குள் பொங்கிய கோபம் பெரியப்பாவை மனம் நோக ஏதும் ஏசிவிடவில்லை.

“எனக்கு கலியாணமெல்லாம் வேணாம் பெரியப்பா.” என்று மெதுவாக முணுமுணுத்த தேவாநந்தி தன் கண்களில் தெரியும் ஆற்றாமையை பெரியப்பாவுக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்ள எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.

- ஆனதி-

நன்றி -http://mullai.org/tamil-ilakiyam/49-kathai/1074-sirukathai.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு :- இக்கதையை எழுதியவள் ஒரு முன்னாள் பெண்போராளி. இந்தக்கதை அவள் தனது வாழ்வைப் பற்றி மேலோட்டமாக எழுதியிருக்கிறாள். எதிர்வரும் காலங்களில் ஆழமாகத் தனது வாழ்வை எழுதும் நிலமைக்கும் வருவாள். இவளுக்காக நானும் ஒரு துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவளது வயதின் முதிர்வு தடையாய் நிற்கிறது. பேசுகிற தருணங்களில் அவளது வேதனைகைளைச் சொல்லுவாள். ஆனால் வெறுங்கையால் எதையும் செய்ய முடியாதுள்ளது.

அந்த குடிகார மொட்டையனையா? மூன்று பிள்ளைகளோடு நிற்கும் அவனை இவள் கட்டணுமா? என்று அவளுக்குள் பொங்கிய கோபம் பெரியப்பாவை மனம் நோக ஏதும் ஏசிவிடவில்லை.

“எனக்கு கலியாணமெல்லாம் வேணாம் பெரியப்பா.” என்று மெதுவாக முணுமுணுத்த தேவாநந்தி தன் கண்களில் தெரியும் ஆற்றாமையை பெரியப்பாவுக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்ள எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.

- ஆனதி-

நன்றி -http://mullai.org/tamil-ilakiyam/49-kathai/1074-sirukathai.html

இது எமது சமூகத்தில் உள்ள பாரிய பிரச்சனை ஒன்று. இதற்கு எதிராக பெண்களே போராடவேண்டும்.............

இது ஒன்றும் இப்போது புதிதாய் நடக்கும் பிரச்சனை இல்லை தொன்றுதொட்டே நடக்கின்ற ஒரு பெண்களுக்கெதிரான செயலாகும். வெளிநாட்டு மாப்பிளை என்ற பெயரில் 40வயது ஆணுக்கு 20வயது பெண்களை மணமுடித்து வைத்திருக்கிறது எமது சமூதாயம். 20வருடங்கள் கழித்து அவருக்கு 60வயது தன்னுடைய வேலைகளை பார்பப்தற்கே அந்தவயதில் சிலருக்கு ஒரு உதவி தேவயாய் இருக்கும்போது அந்த பெண்ணுடைய எதிர்பார்பபுகளை அவரால் எப்படி நிவர்த்தி செய்ய முடியும்? திருமணம் என்பது இருமனம் இணைவது என்பதை புறந்தள்ளிவிட்டு யாராவது ஒரு ஆணின் கையில் இவளை பிடித்துகொடுத்துவிட்டால் தமது கடமை முடிந்ததாக சில பெற்றோர்களே எண்ணுவது கொடூரமானது.

பேசி திருமணம் செய்யும் முறைமை இனிமேற்பட்டகாலத்திற்கு தகுமா என்பதை பெண்கள் சார்ந்த அமைப்புகள் சரியான ஒரு விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டும். காரணம் இப்போது கடந்தகால 25வயது வாழ்வையும் ஒரு ஆண் ஒரு ஊரிலேயே வாழ்வது என்பது மிக குறைந்தவீதம்தான்............... ஆக ஒருவரை பற்றிய உண்மையான வாழ்வை எத்தனைபேரால் புரியமுடியும் அறியமுடியும் என்பது கேள்வியாக இருக்கும்போது. இந்த திருமணம் நிலைக்குமா இல்லiயா என்ற கேள்வியோடுதான் ஒரு திருமணத்தையும் செய்யமுடியும். இது பற்றிய தெளிவான ஒரு முடிவிற்கு பெண்கள் வரவேண்டும்.

பிறிதொரு தலபை;பில் பெண்களுக்கு (மது)குடிக்கும் உரிமையை கொடுக்க முடியாது என்று ஒரு ஆண் எழுதியிருந்தார். பெண்களுக்கு உரிமைகளை கொடுப்பதற்கு ஆண்கள் யார் என்ற கேள்விகள் பெண்களுக்குள் எழவேண்டும். (மது விடயம் தவறானதாக இருக்கலாம்) ஆனால் எந்தவிடயத்திலும் ஆண்களிடம் உரிமையை பெறுவது என்பது ஒரு போலிதனம் ஆண்களிடம் அப்படி எந்த பலமும் இல்லை என்பதே உண்மையானது. ஆண்களுக்க வன்மையும் பெண்களுக்கு மென்மையும் சிறப்பானது அவையிரண்டும் சேர்ந்தாலே ஒரு தாக்கத்தை உண்டுபண்ணமுடியும். ஆதாவது இல்தியரனியலில் மைனசும் பிளசும் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணுவதுபோல். அதற்காக பெண்களின் எண்ணங்களும் வாழ்வும் பென்மையாக இருக்க வேண்டியதில்லை வாழ்க்கை மென்மையானால்??? முன்னேற்றம் என்பது இல்லாது போய்விடும். இன்றைய உலகில் பல பில்லியன் டாலர்கள் பற்றிய முடிவுகளை எடுக்க கூடியவர்களாவே பெண்கள் இருக்கிறார்கள். அதையெல்லாம் தேடவேண்டிய வில்லங்கம் ஈழதமிழராகிய எமக்கு இல்லை தாய்நாட்டுவிடுதலை என்று வந்தபோது உயிருக்காக இலட்சாதி இலட்சம் ஆண்கள் (நான் உட்பட) ஒடியபோது எத்தனை பெண்கள் தமது உயிரை துட்சமாக எண்ணி எதிரியை தேடி குண்டுடன் போனார்கள்????

இப்போது இந்த ஓடிய ஆண்கள்தான் பெண்களுக்கு உரிமைய கொடுப்பது பற்றி பட்டிமன்றம் செய்வது பரிகசிக்க வேண்டிய ஒரு விடயம். ஆனால் அதை பகலிலேயே செய்கிறார்களே???

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி உங்கள் கதைகள் வாசிக்க நன்றாக இருக்கின்றன!

ஆனால் இந்தத் தேவானந்தியின் கதை ஒன்றும் எமக்குப் புதிதல்லவே!

ஏழில் செவ்வாய், அட்டமத்துச்சனி, பத்தில வியாழன் என்று புரையோடிப் போன நம்பிக்கைகளால் எத்தனையோ இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தேவையில்லாமல் இழந்திருக்கின்றனர்!

போராளியாகியது தேவானந்தினியின் தெரிவு. அவரது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும்! அதில் எவரும் தலையிடவில்லை!

எதற்காக போராட்டத்தையும் இந்தக் கதைகளையும் ஒன்றாக இணைக்க முயற்சிக்கின்றீர்கள் என்று கூறுவீர்களா?

வாழ்க்கையில் வேறு தேவைகள் அல்லது சேவைகள் குறுக்கிடும் போது, திருமணம் செய்யாமல் விடுவதோ அல்லது திருமணத்தைத் தள்ளிப் போடுவதோ ஒன்றும் புதிதல்லவே!

உதாரணத்திற்குத் தங்கம்மா அப்பாக்குட்டியை எடுத்துக் கொள்ளுங்களேன்!!!

புலிகள் போராடியிருக்காது போனால் இப்போது எமது சமூகம் இங்கே இருக்கும் என்ற கற்பனை காரணமாக இருக்கலாம்......

உலகம் உருண்டையாக இருந்ததால்தான் என்னால் அவளுடன் கூடிவாழ முடியவில்லை விவாகரத்து பெற்றேன் தட்டையாக இருந்திருந்தால் அவளுடன் கூடிவாழ்ந்திருக்கலாம் என்று ஒருவன் சொல்ல முடியுமா??? என்றால் யாழ்களத்தில் கருத்தெழுதும் சிலர் உண்டு என்றுதான் சொல்லவில்லை எழுதி வைக்கிறார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி உங்கள் கதைகள் வாசிக்க நன்றாக இருக்கின்றன!

ஆனால் இந்தத் தேவானந்தியின் கதை ஒன்றும் எமக்குப் புதிதல்லவே!

ஏழில் செவ்வாய், அட்டமத்துச்சனி, பத்தில வியாழன் என்று புரையோடிப் போன நம்பிக்கைகளால் எத்தனையோ இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தேவையில்லாமல் இழந்திருக்கின்றனர்!

போராளியாகியது தேவானந்தினியின் தெரிவு. அவரது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும்! அதில் எவரும் தலையிடவில்லை!

எதற்காக போராட்டத்தையும் இந்தக் கதைகளையும் ஒன்றாக இணைக்க முயற்சிக்கின்றீர்கள் என்று கூறுவீர்களா?

வாழ்க்கையில் வேறு தேவைகள் அல்லது சேவைகள் குறுக்கிடும் போது, திருமணம் செய்யாமல் விடுவதோ அல்லது திருமணத்தைத் தள்ளிப் போடுவதோ ஒன்றும் புதிதல்லவே!

உதாரணத்திற்குத் தங்கம்மா அப்பாக்குட்டியை எடுத்துக் கொள்ளுங்களேன்!!!

புங்கையூரான்,

இது நான் எழுதிய கதையில்லை. ஆனதியென்ற ஒரு முன்னாள் பெண்போராளி எழுதியது. கதையை எழுதியவரையும் இணைத்தவரையும் இனங்காண முடியாத தடுமாற்றத்திலிருந்து வெளிவாருங்கள்.

தேவானந்தியின் கதை புதிதல்ல புதிதென்று ஆனதியும் எழுதவில்லை நானும் எழுதவில்லை. அவளது கதையை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

ஏழில் எட்டில் பத்தில் தோசங்கள் பற்றிய கருத்தாடலுக்கு வரவில்லை இதில். அதனை இன்னொரு திரியில் ஆரம்பியுங்கள் கருத்தாடுவோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

போராளியாகியது தேவானந்தினியின் தெரிவு. அவரது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும்! அதில் எவரும் தலையிடவில்லை!

போராளியானது தேவானந்தியின் தெரிவு அவளது வாழ்வை வாழ்வதும் அவளது முடிவாக வேண்டுமென்கிற நீங்கள் ....அதற்குள் ஏன் தலையை நீட்ட வேண்டும் ?

தேவானந்தியின் வாழ்வு அவள் தீர்மானம் ஆனால் அவள் தனது வாழ்வை தாயகவிடுதலைக்காக 16வருடங்கள் இழந்து இன்று வாழ்வுமின்றி மரணமுமின்றி சாகின்ற வதையை அவள் சொல்வது அபத்தமா ?

தேவானந்தி போராளியான போது சிந்திக்காதவற்றை இப்போ சிந்தித்து தன்னைத் தான் நோக முடியும். தனது வலிகள் தீர அவளால் இப்படிச் சில பதிவுகளைத்தான் எழுத முடியும்.

சைனா கெய்ரெற்ஸி போராளியாகி பின்னர் பாதிப்படைந்து மனநலம் பாதித்து டென்மார்க் வந்த அவதிப்பட்ட நேரம் அவளது மனநல மருத்துவர் அவளை எழுதச்சொன்னார். சைனா கெய்ரெற்ஸி தனது வாழ்வை எழுதிய ஒவ்வொரு வரிகளையும் அவளது கண்ணீர் ஈரமாக்கியது.

சைனா கெய்ரெற்ஸியை ஒருதரம் வாசியுங்கள். இது ஆலோசனையில்லை சிலவேளை ஏதாவது புரிந்து கொள்ளலாம்.

சைனா கெய்ரெற்ஸி, உகண்டாவில் 1976ல் துற்சி இனக்குழுவில் பிறந்தவர். அரச எதிர்ப்புக் கெரில்லாப் படையான NRAயில் தனது ஒன்பதாவது வயதில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சைனா கெய்ரெற்ஸி கைகளில் துப்பாக்கி திணிக்கப்பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப்பட்டு, போர்க்களங்களில் முன்தள்ளப்பட்டு உலகெங்கும் பலியாகிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான குழந்தைப் போராளிகளில் ஒருத்தியாகப் பத்துக் கொடிய ஆண்டுகள் தனது குழந்தைப் பருவத்தைத் தொலைத்தவர். அவர் தனது குழந்தைப் போராளி வாழ்க்கையின் அவலங்களைத் தன்வரலாறு நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

சைனா கெய்ரெற்ஸியின் வரலாற்றை யாராவது படித்துப் பாருங்கள். சைனா கெய்ரெற்ஸியும் ஒரு பெண் போராளி.

ஓம் தமிழ்ச்சமூகம் மீதான அதீதஅன்பும் அக்கறையும் கொண்டவர் நீங்கள் அல்லவா.

உதாரணத்திற்குத் தங்கம்மா அப்பாக்குட்டியை எடுத்துக் கொள்ளுங்களேன்!!!

தங்கம்மா அப்பாக்குட்டியும் தேவானந்தியும் ஒரே தராசில் நிறுக்க முடியாதவர்கள். மற்றும் தங்கம்மா அப்பாக்குட்டி ஆன்மீகவாதி அதீத கடவுள் நம்பிக்கையானவர். தேவானந்தி போராளி. தனது இனத்துக்காக 16வருடங்கள் வாழ்ந்து இன்று தனது வாழ்வைத் தொலைத்த துயரில் வாழும் ஒரு பெண் போராளி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தங்கம்மா அப்பாக்குட்டியும் தேவானந்தியும் ஒரே தராசில் நிறுக்க முடியாதவர்கள். மற்றும் தங்கம்மா அப்பாக்குட்டி ஆன்மீகவாதி அதீத கடவுள் நம்பிக்கையானவர். தேவானந்தி போராளி. தனது இனத்துக்காக 16வருடங்கள் வாழ்ந்து இன்று தனது வாழ்வைத் தொலைத்த துயரில் வாழும் ஒரு பெண் போராளி.

தங்கம்மா கறுப்பானவர் தேவனந்தி வெள்ளையானவர் என்று எழுதியிருந்தால் எல்லோருக்கும் இலகுவாக விளங்கியிருக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான்,

இது நான் எழுதிய கதையில்லை. ஆனதியென்ற ஒரு முன்னாள் பெண்போராளி எழுதியது. கதையை எழுதியவரையும் இணைத்தவரையும் இனங்காண முடியாத தடுமாற்றத்திலிருந்து வெளிவாருங்கள்.

தேவானந்தியின் கதை புதிதல்ல புதிதென்று ஆனதியும் எழுதவில்லை நானும் எழுதவில்லை. அவளது கதையை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

ஏழில் எட்டில் பத்தில் தோசங்கள் பற்றிய கருத்தாடலுக்கு வரவில்லை இதில். அதனை இன்னொரு திரியில் ஆரம்பியுங்கள் கருத்தாடுவோம்.

போராளியானது தேவானந்தியின் தெரிவு அவளது வாழ்வை வாழ்வதும் அவளது முடிவாக வேண்டுமென்கிற நீங்கள் ....அதற்குள் ஏன் தலையை நீட்ட வேண்டும் ?

சாந்தி,

எனக்கு நீங்கள் கூறுவது புரிகின்றது!

அதாவது ஆனதி என்ற போராளி, தேவானந்தி என்கிற போராளியாகத் தன்னை உருவகப் படுத்தி எழுதியிருக்கின்றார்.

இந்தக் கதையை களத்தில் எப்போது இணைத்தீர்களோ , உங்களை அறியாமலே அதற்குக் கருத்தெழுதும் உரிமையையும் எனக்குத் தந்து விட்டீர்கள்!

பிரச்சனை கருத்துப் பற்றியதேயன்றி, கருத்தெழுதும் உரிமை பற்றியதல்ல என்பது எனது கருத்தாகும்!

சைனா கெய்ரெற்ஸியை ஒருதரம் வாசியுங்கள். இது ஆலோசனையில்லை சிலவேளை ஏதாவது புரிந்து கொள்ளலாம்.

சைனா கெய்ரெற்ஸி, உகண்டாவில் 1976ல் துற்சி இனக்குழுவில் பிறந்தவர். அரச எதிர்ப்புக் கெரில்லாப் படையான NRAயில் தனது ஒன்பதாவது வயதில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சைனா கெய்ரெற்ஸி கைகளில் துப்பாக்கி திணிக்கப்பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப்பட்டு, போர்க்களங்களில் முன்தள்ளப்பட்டு உலகெங்கும் பலியாகிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான குழந்தைப் போராளிகளில் ஒருத்தியாகப் பத்துக் கொடிய ஆண்டுகள் தனது குழந்தைப் பருவத்தைத் தொலைத்தவர். அவர் தனது குழந்தைப் போராளி வாழ்க்கையின் அவலங்களைத் தன்வரலாறு நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

சைனா கெய்ரெற்ஸியின் வரலாற்றை யாராவது படித்துப் பாருங்கள். சைனா கெய்ரெற்ஸியும் ஒரு பெண் போராளி.

ஒன்பது வயதில் பலவந்தமாக இணைக்கப் பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப் பட்டு,போர்க்களங்களில் பலவந்தமாக முந்தள்ளப்ப் பட்ட சைனா கெய்ரெற்ஸியின் வரலாறும்,தேவானந்தியின் வரலாறும் எங்கே சந்திக்கின்றன என்பதை எனக்குத் தெளிவு படுத்துங்கள்!

அதாவது உங்கள் கருத்துப் படி தேவானந்தி பலவந்தமாகத் தனது குடும்பத்தில் இருந்து பிடுங்கப் பட்டு, பலவந்தமாகக் கைகளில் துப்பாக்கியும் குண்டுகளும் திணிக்கப் பட்டுப் போர்க்களத்திற்கு அனுப்பப் பட்டாள் என்று சொல்கின்றீர்கள்.

தேவானந்தியே எழுதியிருக்கும், பின் வரும் வசனத்தையும் வாசித்துப் பாருங்கள். அதன் பிறகு, உங்கள் கருத்தைக் கூறுங்கள். புத்தகத்தை நூலகத்தில் தேடுகின்றேன்!!!

பதினெட்டு வயதுமுதல் முப்பத்தாறு வயதுவரை போராளியாக வாழ்ந்த காலங்களில் இருந்த நம்பிக்கையும் வாழ்க்கை மீதான பிடிப்பும் பிறர் மீதான பாசமும் நேசமும் துடிதுடிப்பும் இப்போதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இரு தார மணம் என்பது எமது சமூகத்தில் உண்டு தானே. கடவுள் முருகனே கட்டி இருக்கிறார். இப்படி கதை எழுதும் கதாசிரியர்கள்.. முற்போக்குவாதிகள்.. மொட்டை.. குடிகாரனுக்கு.. (டக்கிளஸ்) தேவானந்தியை கலியாணம் செய்து வைக்கிறதை இட்டு கரிசணை காட்டுபவர்கள்.. சமூகத்திற்கு கட்டளை இடுவதிலும்.. தங்கள் சொந்தக் கணவன்மாரை.. மனைவி மாரை.. இப்படியான போராளி அபலைப் பெண்களுக்கு/ஆண்களுக்கு கட்டி வைத்து அவர்களோடும் தங்கள் வாழ்வை பகிர்ந்து கொள்ள முன் வரலாமே. முன் மாதிரியாக இருக்கலாமே. தேவானந்திகளும் அன்பினிகளும்.. வாழ ஒரு வழி பிறந்ததும் ஆகும்.... எத்தனையோ பேர் வெளிநாட்டு வாழ்க்கை காண தாய் மண்ணில் நின்று மூளைச் சலவைக்கு அடி பணிந்து.. கட்டாயப்படுத்தல்கள் மத்தியில்.. போராடிய அவர்களுக்கும் ஒரு வெளிநாட்டு வாழ்வு கிடைக்குமே..! :unsure::o

தனக்கு தனக்கென்றால் சுளகு படக்கு படக்கு என்றுமாம்..! :):D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு :- இக்கதையை எழுதியவள் ஒரு முன்னாள் பெண்போராளி. இந்தக்கதை அவள் தனது வாழ்வைப் பற்றி மேலோட்டமாக எழுதியிருக்கிறாள். எதிர்வரும் காலங்களில் ஆழமாகத் தனது வாழ்வை எழுதும் நிலமைக்கும் வருவாள். இவளுக்காக நானும் ஒரு துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவளது வயதின் முதிர்வு தடையாய் நிற்கிறது. பேசுகிற தருணங்களில் அவளது வேதனைகைளைச் சொல்லுவாள். ஆனால் வெறுங்கையால் எதையும் செய்ய முடியாதுள்ளது.

....

நன்றி -http://mullai.org/tamil-ilakiyam/49-kathai/1074-sirukathai.html

'முன்னாள்' போராளி என்ற சொல்லை தயவு செய்து தவிர்க்கப் பாருங்கள்... அந்த வார்த்தைப் பிரயோகம் ஒரு போராளியை கொச்சைப் படுத்துவதாக ஒரு போராளியே கூறி இருந்த இணைப்பை தங்கள் முன்னைய பதிவிலும் இணைத்திருந்தேன், இங்கேயும் உங்கள் கவனத்திற்கு இணைகிறேன்.

ஒரு முன்னாள் போராளி என்ற வகையில உங்களின் இன்றைய மனநிலை?

முன்னாள் போராளி - இப்படிச் சொல்வது தவறு. போராளி என்றால் முன்னாள் பின்னாள் என்றெல்லாம் கிடையாது. போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை. அது வெவ்வேறு விடிவங்களை எடுக்கும். வெவ்வேறு சூழ்நிலைகளில் அது வேறான தொழில்பாடுகளைக் கொண்டிருக்கும். ஆகவே போராட்டத்துடன் என்றைக்கும் இணைந்திருக்கும் ஒரு போராளியை முன்னாள் போராளி பின்னாள் போராளி என்று சொல்ல முடியாது.

போராளி ஒரு அரச உத்தியோகத்தரைப்போல ஓய்வு பெறவும் முடியாது. ஓய்வாளராக அவரைக் கருதவும் முடியாது - இது அவர்களைக் கொச்சைப் படுத்தும் வார்த்தை அல்லது போராளி என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாதவர்களின் கதை எண்டுதான் அர்த்தம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி,

எனக்கு நீங்கள் கூறுவது புரிகின்றது!

அதாவது ஆனதி என்ற போராளி, தேவானந்தி என்கிற போராளியாகத் தன்னை உருவகப் படுத்தி எழுதியிருக்கின்றார்.

இந்தக் கதையை களத்தில் எப்போது இணைத்தீர்களோ , உங்களை அறியாமலே அதற்குக் கருத்தெழுதும் உரிமையையும் எனக்குத் தந்து விட்டீர்கள்!

பிரச்சனை கருத்துப் பற்றியதேயன்றி, கருத்தெழுதும் உரிமை பற்றியதல்ல என்பது எனது கருத்தாகும்!

உங்களுக்கான உரிமை மட்டுமல்ல கருத்தெழுதும் கருத்தாளர்கள் யாவரினதும் உரிமையை உங்களிடமிருந்த பறித்து என்னத்தை செய்யப்போகிறேன். களத்தில் ஒரு விடயத்தை இணைக்கின்றதன் நோக்கமே கருத்தாடல் செய்யவே. ஆக அறிந்தே களத்தில் கதையை இணைத்தேன்.

நீங்கள் எழுதியிருந்தீர்கள் தனிப்பட தேவானந்தியின் வாழ்வு அவளது முடிவுபற்றியெல்லாம் நீங்கள் எடுத்த முடிவை எழுதியிருந்தீர்கள். அதற்குத்தான் கேட்டேன் பதில் கேள்வியே தவிர உங்கள் உரிமை மறுப்பல்ல அது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒன்பது வயதில் பலவந்தமாக இணைக்கப் பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப் பட்டு,போர்க்களங்களில் பலவந்தமாக முந்தள்ளப்ப் பட்ட சைனா கெய்ரெற்ஸியின் வரலாறும்,தேவானந்தியின் வரலாறும் எங்கே சந்திக்கின்றன என்பதை எனக்குத் தெளிவு படுத்துங்கள்!

அதாவது உங்கள் கருத்துப் படி தேவானந்தி பலவந்தமாகத் தனது குடும்பத்தில் இருந்து பிடுங்கப் பட்டு, பலவந்தமாகக் கைகளில் துப்பாக்கியும் குண்டுகளும் திணிக்கப் பட்டுப் போர்க்களத்திற்கு அனுப்பப் பட்டாள் என்று சொல்கின்றீர்கள்.

Punkayooran,

நீங்களே எழுதியிருந்தீர்கள் இப்படி :-

போராளியாகியது தேவானந்தினியின் தெரிவு. அவரது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும்! அதில் எவரும் தலையிடவில்லை!

எதற்காக போராட்டத்தையும் இந்தக் கதைகளையும் ஒன்றாக இணைக்க முயற்சிக்கின்றீர்கள் என்று கூறுவீர்களா?

சைனா கெய்ரெற்ஸியின் வரலாற்றை படியுங்கள் என்றதன் பொருள் சைனா கெய்ரெற்ஸியும் தேவானந்தியும் ஒரே தளத்தில் நிற்பவர்கள் என்பதனை நிறுவவல்ல. சைனா கெய்ரெற்ஸி எப்படி போராளியானாள் என்பதல்ல பிரச்சனை சைனா கெய்ரெற்ஸியும் தேவானந்தியும் போராளிகள். ஆனால் இருவரும் போராளிகளான வடிவம் மட்டுமே மாற்றம் ஆனால் இருவரும் பெண்போராளிகள்.

உங்கள் கருத்துப்படி எமது முன்னைநாள் போராளிகள் எவரும் கடந்த காலத்தை சொல்வது ஏற்க முடியாதது. அதாவது தமிழர்களின் போராட்டகளத்தில் நடந்த அனுபவித்த எதையும் வெளியில் சொல்வது குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய உங்கள் எண்ணத்திற்கே எனது பதில் எழுதப்பட்டதே தவிர வேறெந்த எண்ணமுமில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

'முன்னாள்' போராளி என்ற சொல்லை தயவு செய்து தவிர்க்கப் பாருங்கள்... அந்த வார்த்தைப் பிரயோகம் ஒரு போராளியை கொச்சைப் படுத்துவதாக ஒரு போராளியே கூறி இருந்த இணைப்பை தங்கள் முன்னைய பதிவிலும் இணைத்திருந்தேன், இங்கேயும் உங்கள் கவனத்திற்கு இணைகிறேன்.

மன்னிக்கவும் குட்டி. முன்னாள் போராளிகள் என்று அழைப்பதில் எதுவித கருத்துப்பிழைகளும் இருப்பதாய் தெரியவில்லை. நீங்கள் ஒட்டிய செவ்வியை ஒரு இணையம் வெளியிட்டிருந்தது. ஒரு போராளி தனது நிலைப்பாட்டில் நின்று அதைச் சொன்னதாகவே எடுத்துக் கொள்வோம். ஆனால் அந்தச் சொல்லையே எல்லாரும் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் எங்கும் இல்லை. ஆக முன்னாள் போராளியென்ற சொல்லை தொடர்ந்து சொல்வதில் எவ்வித அசெளகரியங்களும் இல்லை.

நீங்கள் கொச்சைப்படுத்துதல் என்று புரிந்து கொண்டிருப்பதற்காக எதையும் என்னால் செய்ய முடியாது.

பூச்சியம் என்ற பாவனையில் இருந்த 0ஐ சுளியமாக்கி தமிழில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாய் புழகாங்கிதமடைந்த எங்கள் ஊடகங்களின் ஞாபகம் தான் வருகிறது உங்களது முன்னாள் போராளி போராளி என்பதற்கான விளக்கம்.

நன்றி வணக்கம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Punkayooran,

சைனா கெய்ரெற்ஸியின் வரலாற்றை படியுங்கள் என்றதன் பொருள் சைனா கெய்ரெற்ஸியும் தேவானந்தியும் ஒரே தளத்தில் நிற்பவர்கள் என்பதனை நிறுவவல்ல. சைனா கெய்ரெற்ஸி எப்படி போராளியானாள் என்பதல்ல பிரச்சனை சைனா கெய்ரெற்ஸியும் தேவானந்தியும் போராளிகள். ஆனால் இருவரும் போராளிகளான வடிவம் மட்டுமே மாற்றம் ஆனால் இருவரும் பெண்போராளிகள்.

தங்கம்மா அப்பாக்குட்டியும் தேவானந்தியும் ஒரே தராசில் நிறுக்க முடியாதவர்கள். மற்றும் தங்கம்மா அப்பாக்குட்டி ஆன்மீகவாதி அதீத கடவுள் நம்பிக்கையானவர். தேவானந்தி போராளி. தனது இனத்துக்காக 16வருடங்கள் வாழ்ந்து இன்று தனது வாழ்வைத் தொலைத்த துயரில் வாழும் ஒரு பெண் போராளி.

Link to post
Share on other sites

சாந்தி அக்கா நீங்கள் தானே புலிகள் இருக்கும் போதே வன்னியில் போய் இருந்து கொண்டு அங்குள்ளவர்களுக்கு உதவினீர்கள்...தலைவர் இருக்கும் போதே அவரோடு கதைத்து அல்லது சம்மந்தப்பட்ட பொறுப்பாளர்களுடன் கதைத்து அந்தப் போராளிப் பெண்களும் உரிய காலத்தில் தமக்கு விருப்பமானவர்களை திருமணம் செய்ய எதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாமே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Punkayooran,

நீங்களே எழுதியிருந்தீர்கள் இப்படி :-

சைனா கெய்ரெற்ஸியின் வரலாற்றை படியுங்கள் என்றதன் பொருள் சைனா கெய்ரெற்ஸியும் தேவானந்தியும் ஒரே தளத்தில் நிற்பவர்கள் என்பதனை நிறுவவல்ல. சைனா கெய்ரெற்ஸி எப்படி போராளியானாள் என்பதல்ல பிரச்சனை சைனா கெய்ரெற்ஸியும் தேவானந்தியும் போராளிகள். ஆனால் இருவரும் போராளிகளான வடிவம் மட்டுமே மாற்றம் ஆனால் இருவரும் பெண்போராளிகள்.

உங்கள் கருத்துப்படி எமது முன்னைநாள் போராளிகள் எவரும் கடந்த காலத்தை சொல்வது ஏற்க முடியாதது. அதாவது தமிழர்களின் போராட்டகளத்தில் நடந்த அனுபவித்த எதையும் வெளியில் சொல்வது குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய உங்கள் எண்ணத்திற்கே எனது பதில் எழுதப்பட்டதே தவிர வேறெந்த எண்ணமுமில்லை.

சாந்தி,

காயம்பட்ட, வாழ்வை இழந்து போன போராளிகளுக்கு நீங்கள் உதவும் பணி மிகவும் வரவேற்கத் தக்கதுடன் காலத்தின் தேவையும் கூட!

அவர்கள் தங்கள் கதைகளை, அனுபவங்களை எழுதுவதும் தவறல்ல!

ஆனால் அவர்கள் எழுதும் விதத்தில் மட்டும் எனக்கு உடன் பாடில்லை.அதையே எழுதினேன்!

உதாரணமாகத் திருமண பந்தமொன்றினுள் போய் விட்ட இருவர், அந்த உறவு அவர்கள் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ற வகையில் அமையாத போது, அந்தத் திருமணம் என்ற ஒப்பந்தத்தையே விமரிசிக்கக் கூடாது!

இங்கு தான் சைனா கெய்ரெற்ஸி, தேவானந்தியில் இருந்து வேறுபடுகின்றார்! சைனா கெய்ரெற்ஸி பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் இன்னும் உள்ளன! தன்னை ஒரு கிறிஸ்தவராக அடையாளப் படுத்தும் இவரது நூல்கள் இன்னும் அமெரிக்காவில் வெளிவரவில்லை.மந்தையில் இருந்து தப்பியோடிய ஆட்டுக்குட்டியாகத் தன்னை உருவகப் படுத்தும் இவர், தான் திரும்ப மந்தைக்குத் திரும்பி விட்டதாகக் கூறுகின்றார், இவரது கதைக்கும்,தேவானந்தியின் பின்னணிக்கும் எந்த வித ஒற்றுமைகளையும் நான் காணவில்லை! தவிர சைனா கெய்ரெற்ஸி ஒரு குழந்தைப் போராளி! தேவானந்தி ஒரு குழந்தைப் போராளியல்ல!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நேரிடையாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கும், அதை அவரிடமிருந்து செய்தியாகப் பெற்றுக்கொள்ளும் இன்னுமொருவருக்கும் அடிப்படைத் தகவலை புரிந்துகொள்வதில் வித்தியாசம் இருக்கும். எனவே நேரிடையாக தகவலைப் பெற்றவர், தான் புரிந்த அளவுக்கு மற்றவர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்காமல் தன்னால் இயன்றவரை செய்தியை/கதையை மற்றவர்களுக்குச் சொல்லும்போது, அதன் மீது வைக்கும் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதில்களை பொறுமையாக வழங்கவேண்டும். பதில் வைக்க நேரம் இல்லையாயின் பதில் எழுதாமல் விடுவது, உணர்ச்சிமயமான கருத்துக்களை வைப்பதை விடப் பரவாயில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதாரணத்திற்குத் தங்கம்மா அப்பாக்குட்டியை எடுத்துக் கொள்ளுங்களேன்!!!

தங்கம்மா அப்பாக்குட்டியைக் காதலித்தவர் வேறு திருமணம் செய்து கொண்டார். இதனால் தான் தங்கம்மா அப்பாக்குட்டி திருமணம் செய்யவில்லை. பிற்காலத்தில் காதலித்தவர் தங்கம்மா அப்பாக்குட்டியை யாராவது ஒருவரைக் கல்யாணம் செய்து கொண்டு சந்தோசமாக இருக்கும் படி கேட்க, இவர் மறுத்துவிட்டார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தங்கம்மா அப்பாக்குட்டியைக் காதலித்தவர் வேறு திருமணம் செய்து கொண்டார். இதனால் தான் தங்கம்மா அப்பாக்குட்டி திருமணம் செய்யவில்லை. பிற்காலத்தில் காதலித்தவர் தங்கம்மா அப்பாக்குட்டியை யாராவது ஒருவரைக் கல்யாணம் செய்து கொண்டு சந்தோசமாக இருக்கும் படி கேட்க, இவர் மறுத்துவிட்டார்.

தகவலிற்கு நன்றிகள் கந்தப்பு!!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாய்நாட்டுவிடுதலை என்று வந்தபோது உயிருக்காக இலட்சாதி இலட்சம் ஆண்கள் (நான் உட்பட) ஒடியபோது எத்தனை பெண்கள் தமது உயிரை துட்சமாக எண்ணி எதிரியை தேடி குண்டுடன் போனார்கள்????

இப்போது இந்த ஓடிய ஆண்கள்தான் பெண்களுக்கு உரிமைய கொடுப்பது பற்றி பட்டிமன்றம் செய்வது பரிகசிக்க வேண்டிய ஒரு விடயம். ஆனால் அதை பகலிலேயே செய்கிறார்களே???

சரியான கூற்று மருதங்கேணி.

பகலிலேயே ஒரு கூச்சமும் இல்லாமல் கணனியின் முன் இருந்து கொண்டு புனை பெயரில் ஒளிந்துகொண்டு பதிவுகள் செய்கிறேன். வெட்கம் தான்.

சாந்தி அக்கா நீங்கள் தானே புலிகள் இருக்கும் போதே வன்னியில் போய் இருந்து கொண்டு அங்குள்ளவர்களுக்கு உதவினீர்கள்...தலைவர் இருக்கும் போதே அவரோடு கதைத்து அல்லது சம்மந்தப்பட்ட பொறுப்பாளர்களுடன் கதைத்து அந்தப் போராளிப் பெண்களும் உரிய காலத்தில் தமக்கு விருப்பமானவர்களை திருமணம் செய்ய எதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாமே.

அந்த காலகட்டத்தில் இந்த துணிகரமான பெண்கள் தமது வாழ்கையை தனியாக பிரித்து பார்த்திருக்க மாட்டார்கள். தமது உடல் பொருள் எல்லாவற்றையும் போராட்டத்துடனேயே இணைத்திருந்திருப்பார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணமாகாத புலம் பெயர் தமிழர்கள் இப்படியான போராளிப் பெண்களைத் திருமணம் செய்ய முன்வரவேண்டும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.