Sign in to follow this  
நிலாமதி

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம்

Recommended Posts

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. அவரது இறு‌தி அ‌ஞ்ச‌லி இ‌ன்று (‌தி‌ங்க‌ட்‌கிழமை) நடைபெறு‌கிறது.

அனுராதா ரமண‌னு‌க்கு கட‌ந்த 10 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு இருதய‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌பிர‌ச்‌சினை‌க்காக இருதய அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

அறுவை ‌சி‌கி‌ச்சையை‌த் தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அ‌வ்வ‌ப்போது உட‌ல் பரிசோதனை செய்து கொ‌ள்வது வழக்கம். அதுபோல கடந்த 5-ந் தேதி வழக்கமான பரிசோதனைக்காக அனுராதா ரமண‌ன் மரு‌த்துவமனை‌க்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்‌திரு‌‌ப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரத்த சுத்திகரிப்பு (பிளட் டயலிசிஸ்) செய்யப்பட்டது.

இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. தொட‌ர்‌ந்து அவ‌ர் மரு‌‌த்துவமனை‌யி‌ல் த‌ங்‌கி ‌சி‌‌கி‌ச்சை பெ‌ற்று வ‌ந்தா‌‌ர். எ‌னினு‌ம் ‌சி‌கி‌ச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 4.30 மணிக்கு அனுராதா ரமணனு‌க்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருடைய உடல் பொதும‌க்க‌ள் அ‌ஞ்ச‌லி‌க்காக அவரது வீடான திருவான்மியூர் வால்மீகி நகர், ராஜ கோபாலன் முதல் தெருவில் வைக்கப்பட்டுள்ளது.

அனுராதா ரமணனு‌க்கு சுதா, சுபா என 2 மகள்கள் உ‌ள்ளன‌ர். இருவரு‌க்கு‌ம் ‌திருமணமா‌கி அமெ‌ரி‌க்கா‌வி‌ல் வ‌சி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். பேரன், பேத்திகளு‌ம் உள்ளனர். அனுராதா ரமண‌னி‌ன் மறைவு கு‌றி‌த்த தகவ‌ல் அ‌றி‌ந்தது‌ம் மக‌ள், த‌ங்களது குடு‌ம்ப‌த்துட‌ன் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து சேர்ந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு அனுராதா ரமண‌னி‌ன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு பெசன்ட்நகர் சென்று அங்கு உள்ள மின்சார சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

எழு‌த்தாள‌ர் வ‌ரிசை‌யி‌ல், பெ‌ண் எழு‌த்தாளராக ‌மிகவு‌ம் ‌பிரபலமானவரு‌ம், நாவ‌ல்க‌ள் எழு‌துவ‌தி‌ல் புக‌ழ்பெ‌ற்றவருமான எழுத்தாளர் அனுராதா ரமணன் நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், குறுநாவல்களையு‌ம், சிறுகதைகளையு‌ம் எழுதி உள்ளார். இவர் எழுதிய சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டன. அதுபோல பாசம், புன்னகை, அர்ச்சனை பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் உள்பட படைப்புகள் டி.வி. நாடகங்களாக்கப்பட்டன.

1978-ம் ஆண்டு சிறுகதைகளுக்கான போட்டியில் எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கழக‌ம் சார்பில் சிறந்த தேசிய சமூக நல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது பெற்றவ‌ர் அனுராதா ரமண‌ன்.

தகவல்.வெப்துனியா

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

அனுராதா ரமணன் அவர்கள் இறந்தது இன்றல்ல; போன வருடம் மே மாதம் 16 ஆம் திகதி அன்று

Share this post


Link to post
Share on other sites

ஊப்ஸ்.... நிலாமதியக்கா காலாவதியான செய்தியா?

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

போன வருடம் யாழில் இவருக்கு அஞ்சலி செய்த ஞாபகம் இருக்குது :D

Share this post


Link to post
Share on other sites

திகதியைக் கவனிக்க இல்லைப் போலும் விடுங்கோ..16.05.2010ல் அனுராதா ரமணன் காலமாகி விட்டார்.ரதி நீங்கள் சிரிச்ச படியால் நானும் சிரிக்கிறன் யாழில் மட்டுமார் நாங்கள் சிரிக்கிறதுக்கு திட்டினால் இரண்டு பேருக்கும் பாதி,பாதி சரியோ.. :):)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அதற்கு பச்சையும் யாரோ குத்தி இருக்காங்கள் என்ன கொடுமைடா? இது :lol:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்க வேண்டுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

ரதிக்கு ஒரு பச்சை :D

Share this post


Link to post
Share on other sites

யாயினிக்கும் ஒரு பச்சை. (ரதியும் , யாயினியும் பாதி பாதி). :)

Share this post


Link to post
Share on other sites

அதற்கு பச்சையும் யாரோ குத்தி இருக்காங்கள் என்ன கொடுமைடா? இது :lol:

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

நல்ல வேளை சிவப்பு குத்தும் முறை இல்லை இப்ப...அல்லாட்டி, சரியான தகவல் தந்ததுக்காக எனக்கு சிவப்பு குத்தி இருப்பார்கள் :lol:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

முருகா,முருகா இதை எங்க போய் சொல்கிறது ...பக்கதில் சுவரும் இல்லை முட்டிக் கொள்வதற்கு.ஏன் கூ.சா அண்ணா ஊக்குவிப்பு புள்ளி போட்டனீங்கள்...அனுராதா ரமணனின் ஓராண்டு திவசத்தை நினைவுபடுத்தியதற்கா...? :)

ஒரு புள்ளி தந்துட்டு பாதி ஆக்கி விட்ட சுவி அண்ணாவுக்கு மிக்க நன்றிகள். :lol:

Share this post


Link to post
Share on other sites

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

முடியல கு.சா அண்ணா உங்களை மாதிரி இன்னும் எத்தனை பேர் யாழில் இருக்காங்களோ :lol:

Share this post


Link to post
Share on other sites

வேறை ஆர்? நான் தான் நிலாமதிக்கும் வல்வைக்கும் பச்சைகுத்தினனான். :D

அவைக்கு பச்சைகுத்தி ஊக்குவிச்சனான் :lol:

பச்சை குத்தி ஊக்குவிக்கும் குமாரசாமியார் என்னைச் சிரிக்கப் பண்ணியதால் ஒரு பச்சை :wub:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பச்சை குத்தி ஊக்குவிக்கும் குமாரசாமியார் என்னைச் சிரிக்கப் பண்ணியதால் ஒரு பச்சை :wub:

பச்சை குத்தி சிரிக்கப் பண்ணிய குமாரசாமியாருக்கு பச்சை குத்தி என்னை சிரிக்க வைத்ததால், கிருபனுக்கு ஒரு பச்சை

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இப்பிடி ஒரு திரியை நான் இது வரைக்கும் பார்க்கல...தொடரட்டும் உங்கள் பணி :D

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்க வேண்டுகிறேன்.

தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதற்காக நிலாமதியிற்கு ஒரு பச்சை.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கைய்யா இறப்பு செய்தியை சிரிப்பு செய்தி ஆக்கிய பெருமைக்கு உரியவர்கள் என்றால் நாங்களே தான்...நல்லவேளை கு.சா அண்ணா விருது கொடுக்காமல் பச்சை புள்ளியைப் போட்டு ஊக்குவித்து இருக்கிறார்.. :lol:gold.gif:)

Edited by யாயினி
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

கு.சா அண்ணா எப்ப இருந்து கூசாவாக மாறினீங்கள்?

என்னுடைய சந்தேகத்தின்படி கிருமி, வெட்டுக்கிளி, வினாகிரி, விட்டில்ப்பூச்சி, பல்லிக்குட்டி என்று யாராவது பச்சை குத்தியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன் இப்பிடி எதிர்பார்க்க முடியாத குட்டிச்சாத்தான் {கு.சா} :lol: குத்திவிட்டதைத்தான் நம்ப முடியவில்லை. :D

 • Like 6

Share this post


Link to post
Share on other sites

அனுராதா ரமணன் அவர்கள் இறந்தது இன்றல்ல; போன வருடம் மே மாதம் 16 ஆம் திகதி அன்று

நிழலி, உமக்கு வேற வேலையில்லையோ??? ... பேசாமல் இந்தப்பக்கம் வராது விட்டிருந்தால் ... நாம் ஓர் ஒப்பாரியே பாடி முடித்திருப்போம்! :lol:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நிழலி, உமக்கு வேற வேலையில்லையோ??? ... பேசாமல் இந்தப்பக்கம் வராது விட்டிருந்தால் ... நாம் ஓர் ஒப்பாரியே பாடி முடித்திருப்போம்! :lol:

மற்றவர்களுக்கு ஒப்பாரி பாடுவதில் அப்படி என்ன திருப்தியைக் காணப் போறீங்கள்......??? :wub::(

யாருக்கும் ஒப்பாரி பாடும் குழுவில் நான் எப்போதும் இருக்கப் போவது இல்லை...

இந்தத்திரியில் எனது கடசி பதிவு.நன்றி.

நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மற்றவர்களுக்கு ஒப்பாரி பாடுவதில் அப்படி என்ன திருப்தியைக் காணப் போறீங்கள்......??? :wub::(

யாருக்கும் ஒப்பாரி பாடும் குழுவில் நான் எப்போதும் இருக்கப் போவது இல்லை...

இந்தத்திரியில் எனது கடசி பதிவு.நன்றி.

நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

இதில சீரியஸ் ஆக சீறிப் பாய்வதற்கு என்ன இருக்கு....

செத்த வீட்டில் ஒப்பாரி வைச்ச பிறகு, "அடியே ராசு, சுப்பர்ட மகள் சுமதி ஓடிப் போயிட்டாள் தெரியுமா" என்று ஆரம்பித்து உள்ள நாட்டு பகிடி விடுவதை காணவில்லையா

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

இதில சீரியஸ் ஆக சீறிப் பாய்வதற்கு என்ன இருக்கு....

செத்த வீட்டில் ஒப்பாரி வைச்ச பிறகு, "அடியே ராசு, சுப்பர்ட மகள் சுமதி ஓடிப் போயிட்டாள் தெரியுமா" என்று ஆரம்பித்து உள்ள நாட்டு பகிடி விடுவதை காணவில்லையா

நான் சீறிப் பாய இல்லை நிழலி அண்ணா.. :)

எழுதிறதுக்கு வேறு ஒன்றும் இல்லையா அதற்காகவே அப்படி எழுதினேன்..நீங்களே அனுமதிக்கும் போது ..இனி நான் ஒன்றுமே சொல்ல இல்லை.. :)

நெல்லையன் மன்னித்துக் கொள்ளுங்கள். :)

Edited by யாயினி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கு.சா அண்ணா எப்ப இருந்து கூசாவாக மாறினீங்கள்?

என்னுடைய சந்தேகத்தின்படி கிருமி, வெட்டுக்கிளி, வினாகிரி, விட்டில்ப்பூச்சி, பல்லிக்குட்டி என்று யாராவது பச்சை குத்தியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன் இப்பிடி எதிர்பார்க்க முடியாத குட்டிச்சாத்தான் {கு.சா} :lol: குத்திவிட்டதைத்தான் நம்ப முடியவில்லை. :D

இதுக்கு வேற 4 பச்சையா? முடியல.......

 • Like 3

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஒருவருக்கு மட்டும் அடையாளமிடுபவர்கள் x அல்லது 1 என குறிப்பிட்டு வாக்களிக்கலாம். இரண்டு அல்லது மூன்று பேருக்கு அடையாளமிடுபவர்கள் x பயன்படுத்த கூடாது. இலக்கங்களையே பயன்படுத்த வேண்டும்.
  • உண்மை தான் பெருமாள். அதைத் தான்  நானும் குறிப்பிட்டேன். அடுத்தவன் முன்னால் கூனி குறுகி எமது உரிமைகளை கூட விட்டுக்கொடுக்கும் நாம் எமக்குள் அப்படி அல்ல. தொழில் கொள்வோர் முன்னால்  தமிழர்கள் பயந்த சுபாவம் உள்ளவர்கள் அடக்க ஒடுக்கமாக கீழ்ப்படிந்து வேலை செய்பவர்கள் என்ற பெயரை எடுத்த நாம் ஒரு சமூகமாக அடுத்தவர் முன் நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு எமது  சொந்த “சமூக வர்ததக பொருளாதார கட்டமைப்புக்களை” புலத்தில் கட்டி எழுப்பவில்லை என்பதையே சுருக்கமாக நகைச்சுவையாக குறிப்பிட்டேன். 
  • உந்த கட்டுக்கதைகளை நம்புமளவுக்கு முட்டாள்கள் புலத்தில் குறைவு. உந்த கட்டுக்கதைகளை நம்புமளவுக்கு முட்டாள்கள் புலத்தில் குறைவு.
  • முதல் வாக்கு x இரெண்டாவது வாக்கு 2 என்று போட்டால் வாக்கு செல்லாது. முதல் வாக்கு x இரெண்டாவது வாக்கு 2x என்று போட்டால் வாக்கு செல்லாது. முதல் வாக்கு x இரெண்டாவது வாக்கு xx என்று போட்டால் வாக்கு செல்லாது. முதல் வாக்கு x இரெண்டாவது வாக்கு x என்று போட்டால் வாக்கு செல்லாது. முதல் வாக்கு x இரெண்டாவது வாக்கு 1 என்று போட்டால் வாக்கு செல்லாது. மேலே உள்ள அவ்வளவும் கொத்தவுக்கு சிவாஜிலிங்கம் வழங்கும் நன்கொடை. இந்திய கூலிப்படை டெலோவை வளர்த்து கொலைகள் செய்தவர் இவர் என்பதை நினைவு கொள்ள வேண்டிய காலம் இது. இன்னமும் இந்த கூலிப்படை வேலை முடியவில்லை.   ஒரே வாக்கு x சரியானது. முதல் வாக்கு x இரெண்டாவது வாக்கு 2 என்று போட்டால் வாக்கு சரியானது. இதை சரியாக செய்யப் போவர்கள் குறைவு.
  • ஜனாதிபதி வேட்பாளர் திரு. M.K. சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் : சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் இத்தேர்தல் விஞ்ஞாபனம், Nov 09இல் திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் வைத்து வெளியிடப்பட்டது. 1. புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறையை நிராகரித்து, தமிழ்த் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஸ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். 2. இறுதி போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு முழுமையான சர்வதேச பொறிமுறை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். 3. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும். 4. வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் அரச படைகள், போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையில் இருந்த தனியார் மற்றும் அரச காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்க படுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும். 5. வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசு ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 6. வடக்கிற்கு மகாவலியின் நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால், மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். 7. தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் நில வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். 8. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும், இளைஞர்களின் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இளைஞர்களிடம் இருந்து நேரடி முதலீடுகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக, இங்கு காணிகளையும் மற்றும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். 9. வடக்கு கிழக்கிற்கான அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். 10. வடக்கு கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினை கையாள்வதற்கு வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குதல் வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து, புதிய ஜனாதிபதி பதவியேற்ற மூன்று மாத காலப் பகுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் எனும் விடயங்கள் குறித்த தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.