Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

''சோமஹ ப்ரதமோ"


Recommended Posts

இந்த இணைப்பில் (http://eenpaarvaiyil.blogspot.com/2006/01/.../blog-post.html) முத்துக்குமரன் என்பவர் இந்துத் திருமணத்தின் போது சொல்லப்படும் ஒரு மந்திரத்தை பற்றி எழுதியிருந்தார் அதற்கு சுந்தர் என்பவர் எழுதிய விளக்கம் நான் இதுவரை கேள்விப்படாத ஒன்றாக இருந்தது.அதை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

''சோமஹ ப்ரதமோ

விவேத கந்தர்வ

விவிதே உத்ரஹ

த்ருதியோ அக்னிஸடே

பதிஸ துரியஸதே

மனுஷ்ய ஜாஹ''''

"இந்த வேத வாக்கியங்களுக்கு என்ன அர்த்தம் என்றால் முதலில் ஸோமன் உன்னை அடைந்தான், இரண்டாவதாக கந்தர்வன் அடைந்தான், மோன்றாவதாக அக்னி உனக்கு அதிபதி ஆனான். மனுஷ்ய வர்க்கத்தைச் சேர்ந்த நான் நான்காமவனாக உன்னை ஆளுவதற்கு வந்திருக்கிறேன்"

சுந்தர் எழுதியது:

காஞ்சிப் பெரியவர் குறிப்பிட்டதாகச் சொல்லியிருக்கிறீர்கள். திருமண சடங்குகளைப் பற்றி அவர் சொல்லியிருப்பதில் இன்னும் சில குறிப்புகள்:

"நம் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு தெய்வத் தன்மையை உருவகித்திருக்கிறோம். கண்களுக்குச் சூரிய பகவான்; கைகளுக்கு இந்திரன் - இது போன்று. இதே போல குழந்தை ஜனித்ததிலிருந்து அது வளர்ந்து பெரியவனா(ளா)கும் வரை ஒவ்வொரு பருவத்திலும் உடல் பல மாற்றங்களைச் சந்திக்கிறது. ஓவ்வொரு பருவத்தையும் ஒரு தெய்வத்திற்கு - தெய்வத் தன்மைக்குப் ஒப்புமைப் படுத்தியிருக்கிறோம்.

இதன்படி ஒரு பெண் குழந்தை பிறந்ததிலிருந்து, ஆடை அணியும் வயது வரையான பருவம் வரை "ஸோமனின் (Moon God)ஆதிக்கத்தில்" இருக்கிறாள். அப்பருவத்தில் குழந்தை நிலவைப் போலவே "குளிர்ச்சியாக" இருக்கிறாள். (ஆண்கள் அணியும் வேஷ்டியின் பெயரும் சோமன்).

பிறகு இந்தச் "சோம பருவத்திலிருந்து" "பூப்பெய்தும் பருவம் வரை" விளையாட்டுத் தனமும் அழகும் நிரம்பியிருக்கும் பெண் குழந்தை. இப்பருவத்தில் அவள் "கந்தர்வனின் ஆதிக்கத்தில்" இருக்கிறாள் அவள். அதாவது விளையாட்டுத்தனமும் அழகும் நிரம்பிய கந்தர்வ பருவம்!

பூப்பெய்திய பருவத்திலிருந்து மூன்று ஆண்டுகள் வரை அவள் "அக்னியின் ஆதிக்கத்தில்" - அதாவது அக்னி போன்று எழுந்து தகிக்கும் காம உணர்வுகளுடன் - இருக்கிறாள்.

இப்பொழுதிருக்கும் எவ்வித வசதிகளுமற்ற, எந்தவித நவீனத் தாக்கங்களும், தேவைகளுமற்ற எளிய வாழ்க்கை வாழக்கூடிய காலகட்டத்தை மனதில் கொண்டால், பெண் வீட்டைப் பார்த்துக்கொள்ள, ஆண் வெளியில் வேலை செய்து பொருளீட்டி ஜீவனத்தை நடத்தும் குடும்ப அமைப்பை மனதில் கொண்டால், பருவமடைந்து அக்னியின் பிடியில் இருக்கும் - காம உணர்வுகளில் உந்தப்பட்டுக்கொண்டிருக்கும

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.