Jump to content

-வாழ்ந்து பார்க்கலாம்-


Recommended Posts

நாற்றோடு காற்றுவந்து மோதும் - -

கரைகழுவிபோகும் அலைகள் ஏதோ ராகம் பாடும்- -

பூ ஒன்றின் இதழெடுத்து பொட்டிடு தோழி- -

பொன்மாலையதன் வண்ணம் அள்ளிவந்து

வாயிலை அலங்கரி!

இராவென்ன பகல் என்ன சொல்லு?

நீ இரவுக்குள் பகலாகி நில்லு!

மழையென்ன வெய்யில் என்ன -சீ போ!

வாழ்வென்ன பலமுறை வருமா?

உந்தன் வாழ்வு முடிந்து போனால் -பூமி

அதை உனக்கு திருப்பி தருமா?

வானத்தை பாரடி தோழி- நீல நிறத்தை கரைத்தூத்தியங்கே

நிலவுக்குள் பின்னால் சென்று ஒழிந்து கொண்டதாரடி?

வானம் குடைபிடிக்கிறது பார்-பார்!

அதன்கீழ் எனக்காய் நானொருமுறை - உனக்காய் நீ ஒருமுறை- -

வாழ்ந்து பார்ப்போமே?- வா வா!

வரைமுறையென்ற தாலிகட்ட பிறர்யார்?

உந்தன் வாழ்வதற்க்கு வேலி போட அவர் யார்?

புன்னகைக்கும் நேரமதில் வந்து தோழணைப்பார்-அறி

பொங்கியழும் நேரமதில் போயே போவார்-

அவர் உறவை நீ முறி!

உயிர்-அது என்னவென்று நினைத்தாய்?

ஊசலாடும் ஒரு பயிர் நீ அறிவாய்!

அறிவு கிண்ணத்தில் நீர் எடுத்தற்க்கு ஊற்று

அகிலமெங்கும் சென்று உன் கொடி நாட்டு!

திரும்பி வா- உன் தெருவெங்கும் ஆனந்த கூத்தாடு!

பசியென்று வருபவன் எவனோ- உனக்கில்லையென்றானாலும்

ஒருபிடி அன்னம் அவன் வாயிலூட்டு- -

அன்பென்ற ஊஞ்சல் கட்டி அதில் அவனை இருத்தி ஆட்டு!

காதல் தவறென்று சொல்வார் பாரு- -

காதலில்லாமல் பூமியென்பது இங்கேது?

காதலிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவரே - காதல் அசிங்கமென்று சொல்வது அதிகம் நீ பாரு!

* * * *

மதம் என்ன குலம் என்ன போடா- -

மலையென்ன மடுவென்ன போடா- -

சதி பின்ன சிலரெதுவோ சொல்வார்

அடா சாகபோகும் மனிதனுக்கு சாதி சமயம் ஒரு கேடா?

நீ பெற்ற அறிவதனை பிறர்க்கு சொல்லு- -

பிறர் கொண்ட அறிவதனை கேட்டு வாங்கு!

அழகென்பதெது என்று சொல்லு?

ஐஸ்வர்யா- சந்தியா- அஜித்?

அமெரிக்கா - சுவிஸ்- அவுஸ்ரேலியா?

உலகமெல்லாம் சுற்றிவந்து ஒவ்வொன்று சொல்வாய் சீ..சீ

உன் வீட்டுக்குள்ளேயே விடை இருக்கு பார் பார்!

ஐயிரண்டு மாதம் சுமந்து பெற்றாளே எம் அன்னை

அவளே உலகத்தில் பேரழகு போ போ!

-வர்ணன் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை.. நல்ல நடை.. அசத்திவிட்டீர்கள் பல விடையங்களை தொட்டுச்சென்றிருக்கிறீர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வர்ணன். இன்னும் புதுப்புது ஆக்கங்களைத் தாருங்கள்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி தமிழினி..தூயவன்.. களத்தில் பதிவு செய்த எனது முதல் ஆக்கத்துக்கு நீங்கள் இருவரும் சொன்ன வாழ்த்துக்களை எனக்களித்த ஊக்கமாகவே நன்றியோடு பார்க்கிறேன்! 8)

Link to comment
Share on other sites

உலகமெல்லாம் சுற்றிவந்து ஒவ்வொன்று சொல்வாய் சீ..சீ

உன் வீட்டுக்குள்ளேயே விடை இருக்கு பார் பார்!

ஐயிரண்டு மாதம் சுமந்து பெற்றாளே எம் அன்னை

அவளே உலகத்தில் பேரழகு போ போ!

இருக்கிறதை கண்டு கொள்வதிலும் பார்க்க இல்லாதற்கு கொட்டாவி விடுவது தானே பலரின் ஏக்கம்... வர்ணன் நல்லாய் எழுதியிருக்கறீர்கள்... வாழ்த்துக்கள்....தொடர்ந்து எழுதுங்கள்....

Link to comment
Share on other sites

வாழ்ந்து பார்க்கலாம் கவிதை நன்றாக உள்ளது. மேலும் எழுத எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.