Jump to content

என்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும்


Recommended Posts

by Thaiveedu on Thursday, 09 June 2011 at 07:15

ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு சந்திப்பு

-கருணா-

அந்தச் சிறுமி அப்போதுதான் யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவுக்கு வந்திருந்தாள். மிசசாகாவில் உள்ள பாடசாலையொன்றில் அவள் சேர்ந்து ஓரிரு நாட்களே ஆகியிருந்தன. புதிய நாடு, புதிய கலாசாரம், புதிய மொழி. புதிய கல்விமுறை, பதிய மனிதர்கள் என்று எல்லாமே புதியனவாக இருந்தன. ஆனால் சொர்க்கத்துக்கே செல்வதைப்போன்ற ஆனந்தத்துடன் அவள் அங்கு வந்திருந்தாள். பாடசாலையில் வெள்ளையின மாணவர்களே நிறைந்திருந்தனர். அவர்களுக்கு அவளும் அவளுடைய தோல் நிறமும் புதுமையாகத் தெரிந்தன. பாடசாலை விளையாட்டு மைதானத்துக்குச் சென்றவளுக்கு அதிர்ச்சியான அனுபவம் காத்திருந்தது.

அருகில் வந்த சக மாணவர்கள் அவள் தோலை உரசிப் பார்த்தனர். அவர்களுக்கு அவளது தோலில் அழுக்கேறியதாலேயே அந்த ‘மண்ணிறம்’ வந்திருக்கலாம் என்ற எண்ணம். அவர்கள் அதற்கு முன்னர் மண்ணிறமான மனிதர்களைப் பார்த்திருக்கவில்லைப் போலும். இதுவென்றும் அறுபதுகளில் நடந்த சம்பவமல்ல, எண்பதுகளின் பிற்பகுதியில் மிசசாகாவில் நடந்தது. அந்தச் சிறுமிக்கு அப்போது எதுவுமே புரிந்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வேன் என்பதும் அப்போது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆமாம், ராதிகா சிற்சபைஈசனின் கதை இவ்வாறுதான் கனடாவில் ஆரம்பித்தது.

மேவிஸ், எக்லின்ரன் பகுதியிலிருந்து மூன்று பேரூந்துகளில் பயணித்துத் தமிழ்ப்பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ராதிகாவுக்கு தமது பகுதியில் தமிழ்ப்பாடசாலையொன்றை ஆரம்பித்தால் என்ன என்ற எண்ணம் வந்திருக்கிறது. தனது தந்தையாருடன் பீல் பொதுக்கல்விச்சபைக்குச் சென்று கேட்டிருக்கிறார். அவர்கள் மறுத்துவிட்டார்கள். கத்தோலிக்க கல்விச்சபைக்கு சென்றுகேட்டபோது முப்பது மாணவர்கள் வருவதாயிருந்தால் பாடசாலையொன்றை ஆரம்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். ராதிகா வீட்டிலிருந்தே தமிழ்ப்பாடசாலை ஒன்றை ஆரமப்பிப்பதன் தேவை பற்றிய பிரசுரங்களை தந்தையாருடன் சேர்ந்து தயாரித்திருக்கிறார். தமிழர்களின் வீடுகளை ஒவ்வொன்றாகத் தேடிச்சென்று ஆதரவு தேடியிருக்கிறார். இவர்களின் முயற்சியால் அந்தப்பகுதியில் தமிழ்ப்பாடசாலையொன்று ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. மிக இளைய வயதிலேயே சமூகப்பணிகளுக்காண அடித்தளம் ராதிகாவின் மனதில் வந்திருக்க வேண்டும்.

கடந்த மே மாதம் இரண்டாம் திகதி நடைபெற்ற கனடிய பாராளுமன்றத் தோதலில் ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதியில் போட்டியிட்ட ஈழத்தமிழரான ராதிகா சிற்சபைஈசன் பதினெண்ணாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். கடந்த தடவை ராதிகா போட்டியிட்ட புதிய ஜனநாயகக்கட்சி இத்தொகுதியில் வெறும் ஆறாயிரத்துக்கு அண்மித்த வாக்குகளே பெற்றிருந்தது. ராதிகாவின் வரவு புதிய ஜனநாயகக் கட்சிக்கும், ஈழத்தமிழருக்கும் பெருத்த உற்சாகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். ஸ்காபரோ பகுதியில் புதிய ஜனநாயகக்கட்சியின் இந்த வெற்றி புதியதோர் மைல்கல்லாகப் பேசப்படுகிறது.

ராதிகா கலைத்துறையில் மிகவும் ஆர்வமுள்ளவர். பல நாடகங்களில் நடித்திருக்கிறார். தொண்ணூறுகளில் கே.எஸ். பாலச்சந்திரனின் இயக்கிய ‘குரங்கு கை தலையணைப் பஞ்சுகளாய்’ நாடகத்தில் அவருடைய நடிப்பு மிகவும் பேசப்பட்டது. தொண்ணூற்று எட்டாமாண்டு வானவில் நிகழ்ச்சியில் மேடையேறிய ‘இது ஏமாற்றமா’ நாடகத்தில் மூன்று வேறுபட்ட பாத்திரங்களில் அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். ’மென்மையான வைரங்கள்’, ‘எங்கோ தொலைவில்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கே.எஸ். பாலச்சந்திரன் இயக்கிய ‘நெஞ்சங்கள்’ திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

ராதிகா ஒரு திறமையான நடனக் கலைஞரும் கூட. நிரோதினி பரராஜசிங்கத்தின் உருவாகத்தில் ராதிகா பங்கேற்ற ‘வீரவேள்வி’ நாட்டியநடகம் அவருடைய நடனத்திறமையை பறைசாற்றியது. இன்னும்பல நடன நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றிருக்கிறார்.

ராதிகா கால்ரன் பல்கலைக்கழகத்தில் வர்த்தகத்துறையில் தனது இளமானிப்பட்டத்தையும், குவீன்ஸ் பல்கலைக் கழகத்தில் Industrial Relations துறையில் முதுமானிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பின் உப தலைவராகவும், பின்னர் கால்ரன் பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் உப தலைவராகவும் இருந்திருக்கிறார். ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பின் உப தலைவராக இந்தபோது ‘சுவடுகள்’ என்ற வருடாந்த நிகழ்வையும், சஞ்சிகையையும் ஆரம்பித்தவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். குவீன்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது துப்பரவுத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்துடன் ஒரு ஆய்வாளராகப் பணியாற்றி “Justice 4 Janitors” என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் உழைத்திருக்கிறார். இவை பொதுச்சேவைகான உந்துதலை அவருக்கு வழங்கியிருக்கவேண்டும். 2004ம் ஆண்டு Ed Broadbent இனுடைய வெற்றிக்காக உழைத்ததன் மூலம் புதிய ஜனநாயகக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

ராதிகா ‘நான் ஒரு தமிழிச்சி’ என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவர். எமது பத்திரிகையின் எழுத்தாளர்களில் ஒருவர். அண்மையில் எதிர்க்கட்சித்தலைவரால் பட்டப்படிப்புத்துறைக்கான துறைநோக்கராக(Critic)நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் வெற்றிக்குப்பின் பணிநிமித்தம் ஒட்டாவாவிற்கு சென்று வந்திருந்தவரை அதே புன்முறுவலுடன் சந்தித்தோம்.

மையநீரோட்ட அரசியலில் தமிழ் இளையோரின் ஈடுபாடு மற்றும் பங்களிப்பு போதுமானதாக உள்ளதா என்ற கேள்விக்கு போதாது என்று கூறுகிறார். “தமிழ் இளையோர் என்றில்லை பொதுவாகவே இளையோரின் பங்களிப்புப் போதாது. நான் இளையோருக்கு குடியில்துறைசார் பங்களிப்பு பட்டறைகளையும் (Civil engagement workshops) தலைமைத்துவப் பட்டறைகளையும் நடத்திவருகிறேன். பாடசாலைகள் குடியில்துறைசார் பங்களிப்புத் தொடர்பாக கற்பிப்பது போதாது. அரசு எவ்வாறு இயங்குகிறது என்று பெரும்பாலோருக்குத் தெரியவில்லை. அரசியல் கட்சிகளும், பாடசாலைகளும், அமைப்புகளும் இந்த விடயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். வெறுமனே இவற்றை வார்த்தைகளில் சொல்லாது செயலில் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். விரைவில் ஸ்பாபரோவில் புதிய ஜனநாயகக் கட்சியின் இளையோர் அமைப்பொன்றை நான் ஆரம்பிக்கவிருக்கிறேன்.” என்று கூறுகிறார்.

ராதிகா தமிழராக இருப்பதன் முக்கியத்துவம் பற்றிக்கூறுகிறார். எந்த இனக்குழுமமாயினும் தமது அடையாளத்துடனும், காலாசார, பண்பாட்டுப்பின்னணியுடனுமிருப்பது முக்கியம். எமது பாரம்பரியத்தைத் தளமாகக் கொண்டு இயங்குவது அவசியம். உங்கள் தனித்துவத்துடன் சமூகத்தில் இணைவது முக்கியம். சில இளையோருக்கு தமது அடையாளம் தொடர்பான சிக்கல் இருக்கிறது. அதி~;டவசமாக எனது இளைய வயதிலேயே எமது அடையாளத்தின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்துகொண்டுவிட்டேன். எனக்கு சிறந்த பெற்றோர் வாய்த்தார்கள். அதனால் அது சாத்தியமாயிற்று என்கிறார்.

பெற்றோருக்கு என்ன கூறவிரும்புகிறீர்கள் என்று கேட்டோம். “உங்களது பிள்ளைகள் அவர்களுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள், அவர்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள ஊக்குவியுங்கள். நான் ஐந்தாம் வகுப்பிலேயே முதியோர் இல்லத்தில் தொண்டராக வேலைசெய்ய விரும்பினேன். என்னுடைய தந்தை என்னை ஊக்குவித்தார். அதிகாலையில் கூடைப்பந்து பயிற்சிக்குச் செல்ல விரும்பியபோதும், பாடசாலைக் கலைவிழாக்களில் நான் பங்குபற்றிய போதும் என்னை ஊக்குவித்தார்கள். அதானால்தான் நான் விரும்பிய பலவற்றை என்னால் சாதிக்கமுடிந்தது.”

புலம்பெயர் தமிழர்களுக்கு என்ன கூறவிரும்புகிறீர்கள் என்ற கேட்டோம். “போரால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து வந்த ஒரு இளம்பெண் கடின உழைப்பாலும், இடைவிடா முயற்சியாலும், தொடர்ச்சியான பங்களிப்பாலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரமுடியுமென்றால், உங்களாலும் இது முடியும். எந்த நாடுகளில் சட்டம் அனுமதிக்கிறதோ அங்கெல்லாம் முடியும். நான் சிறுவயதிலிருந்தே சமூகவேலைகளோடு என்னை இணைத்துப் பணியாற்றினேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள். அரசியலில் ஈடுபடுவதன் மூலமே தேசிய அளவில் மாற்றங்களை உருவாக்க முடியும்” ராதிகாவின் குரல் நம்பிக்கையுடன் ஒலிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மீதுள்ள செயற்கையான தடைகள் நீக்கப்படுமிடத்து, வானமே எமது எல்லையாகும்!

இந்த எமது இனத்தின் குணாதிசயமே, சிங்களம் எம்மீது பயம் கொள்ளவும் காரணமாகியது!

இணைப்புக்கு நன்றிகள், நாரதரே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மக்களிடம் உள்ள ஒரு கெட்ட குணம்.. மட்டம் தட்டுதல். சிறிய சிறிய வெற்றிகளைக் கூட ஊக்குவிப்பதில்லை. தோல்விகளை தூக்கிப் பிடித்து.. புதிய முயற்சிகளுக்கான தேடலை இல்லாமல் செய்வது. இதனை கைவிட்டாலே போதும்.. எமது இனம் பல்வேறு வழிகளில் முன்னேறி விடும். எம்மில் பல துறைகளில் மிளிர்பவர்களை நோக்கினால் அவர்களில் பலர் எமது சமூகத்தின் நிரந்தர சமூக பழக்க வழக்கங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு வளர்ந்தவர்களாக இருப்பதை நோக்க முடியும்.

எம்மில் சிலருக்கு ஒரு மயக்கம் உண்டு. வேற்று நாட்டு கலாசாரத்தோடு வாழும் நாங்கள் எங்கள் அடையாளங்களை காக்கத்தான் வேண்டுமா என்று. எமது சந்ததிகளுக்கு அவசியமா என்று. நிச்சயம் அது அவசியம். காரணம்.. எமது பெளதீக தோற்றம்.. ஒரு போதும் எம்மை மற்றவர்களின் மனதோடு ஒரே கலாசாரப் பின்னணியை நோக்கி இணைக்க மாட்டாது. அந்த வகையில் எமக்கு தனித்துவமான இனத்துவத்துடன் கூடிய சமூக ஒருங்கிணைவு வாழ்வே அவசியம். சமூகங்களோடு ஒருங்கிணைந்து வாழுதல் என்பதும்.. சுய கலாசார பண்பாட்டியலை விழுமியங்களை தொலைத்து வாழுதல் என்பதும் வேறுபட்டவை. கலாசார மாற்றங்கள் வரவேற்கப்படக் கூடியவை. அதேவேளை அவை எமது சமூகத்தினை பலப்படுத்தக் கூடியவையாக எமது தனித்துவத்தை சொல்லக் கூடியவையாக அமைய வேண்டும்.

அந்த வகையில் ராதிகாவின் நிலைப்பாடுகள்.. நிச்சயம் வரவேற்படக் கூடியவையே..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.