Jump to content

நாய்களுக்காக தனி பேக்கரி


Recommended Posts

நாய்களுக்காக தனி பேக்கரி

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாய்களுக்காக தனி பேக்கரி ஒன்று திறக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவை சேர்ந்த ஹரியத் ஸ்டெர்ன்ஸ்டீன் இந்த பேக்கரியை தொடங்கி இருக்கிறார்.

அங்கு நாய்களுக்காக வெவ்வேறு நறுமணத்துடன் கூடிய பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.சிலர் தங்கள் செல்ல நாயை கடைக்கே அழைத்து வந்து அது விரும்பும் வாசனை உள்ள பிஸ்கெட்டை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.சில வகை பிஸ்கெட்டுகள் பூனை மற்றும் நாய்களுக்கு பிடித்த 'எலும்பு' வடிவங்களில் தயாரிக்கப்பட்டு உள்ளன.

முதலில் அனைவரும் வேடிக்கையாக பார்த்துச் சென்றதாகவும், இப்போது சகஜமாக தங்கள் செல்லப்பிராணிகளை அங்கு அழைத்துச் சென்று 'ஷாப்பிங்' செய்வது வாடிக்கையாகி விட்டதாகவும் அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

Dailythanthi

Link to comment
Share on other sites

டண் அறிஞ்சால் மிகவும் சந்தோசப்படுவார். எதற்கும் வானம்பாடி விபரங்களை டண்ணுக்கு தனிமடலில் போட்டு விடும்.

Link to comment
Share on other sites

ஏன் வசம்பு தனிமடலில் பகிரங்கமாகவே தெரியப்படுத்தினால் தெரியாமல் மறைவில் இருக்கும் பல நாய்களுக்கும் இது பிரயோசனப்படும் அல்லவா

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி வானம்பாடி,,, :wink: :P

டண் அறிஞ்சால் மிகவும் சந்தோசப்படுவார். எதற்கும் வானம்பாடி விபரங்களை டண்ணுக்கு தனிமடலில் போட்டு விடும்.

பார்த்தியளா,, வ**ம்பருக்கு இருக்கிற அக்கறை களத்தில வேற ஒருத்தருக்கும் இல்லை,,, பின்ன களத்தில உள்ளவங்களைப்பற்றி என்னமாதிரி புலனாய் தகவல்களை சொல்லுறது,, ஒருத்தரும் அதைப்பற்றி டன்னுக்கு சொல்லல,,, :evil: :evil: :evil:

ஆனால் வ*ம்பரே ஊமை சொன்னதை சில சனங்கள் (சந்தில சிந்து பாடுறவையள்) பரிசிலனை செய்தால் நன்னா இருக்கும்,,, :wink: :P :P

Link to comment
Share on other sites

இப்போது சகஜமாக தங்கள் செல்லப்பிராணிகளை அங்கு அழைத்துச் சென்று 'ஷாப்பிங்' செய்வது வாடிக்கையாகி விட்டதாகவும் அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

என்ன இது புதுசா..........இவ்வளவு நாளும் புடவைக்கடைகள் எண்டு கூட்டிக்கிட்டு திரிஞ்சம் இனி பேக்கறிக்கும் கூட்டிட்டுப் போறதுதானே...............

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முகத்தார் நீங்கள் நாய் வளர்க்கிறீர்களா?

யாழில் வீட்டு நாய் என்ன சாப்பாடு கொடுத்தாலும் காலி செய்துவிடும். ஆனால் இங்குள்ள நாயோ ரொம்ப பிகு பண்ணி செலக்ட் பண்ணி தான் சாப்பிடுகின்றது. ஹும் நாம் இங்கு வந்த பின்பு கப்பச்சீனோ தான் குடிப்பன் என்று சொல்லும் போது இங்குள்ள நாய் அந்த பிளேவர் போட்ட இறைச்சி தான் சாப்பிடுவன் என்று சொல்வதில் ஆச்சரியமில்லை தான்

Link to comment
Share on other sites

என்ன மதன் சொல்லவேயில்லை. இவ்வளவு நாளும் தனியாக இருந்த நீங்கள் எப்போது முதல் நண்பியுடன் சேர்ந்திருக்கின்றீர்கள். :roll: :wink: :roll: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தகவலுக்கு வானம்பாடி அண்ணா

Link to comment
Share on other sites

என்ன மதன் சொல்லவேயில்லை. இவ்வளவு நாளும் தனியாக இருந்த நீங்கள் எப்போது முதல் நண்பியுடன் சேர்ந்திருக்கின்றீர்கள். :roll: :wink: :roll: :lol:

புரியலைவில்லை வசம்பு

Link to comment
Share on other sites

நாய்க்கு பேக்கரியா.... அதிசயமாகத் தான் இருக்கிறது... இது போல எல்லா நாட்டிலும் உருவாக்க வேண்டும்....

Link to comment
Share on other sites

என்ன மதன் புரியவில்லையா?? சரி முகத்தாரிடம் ஒரு மணி நேரம் வகுப்பு எடுங்கள். பட்டென்று புரிந்துவிடும். :roll: :roll: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலை வேண்டாம் மதன்.

யாருக்குத் தான் புரிந்திருக்கின்றது! :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய் பிஸ்கட் :!:

பார்வையற்ற ஒருவர் நாயுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த நாய் அவரது பேண்ட் மீது காலைத் தூக்கி சிறுநீர் கழித்தது. அவர் தனது பாக்கெட்டில் இருந்து நாய் பிஸ்கட்டைப் போடப் போனார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த வழிப்போக்கர் ஒருவர் பார்வையற்றவரை நெருங்கி

என்னதான் நாம் வளர்த்த நாயா இருந்தாலும் இந்த மாதிரி சேட்டைகளையெல்லாம் என்கரேஜ் பண்ணக்கூடாது என்றார்.

அதற்கு அவர் நான் அதைப் பாராட்டவில்லை. பிஸ்கட்டைக் கவ்வ பக்கத்துல வரும்போது அதை உதைப்பதற்காகத்தான் பிஸ்கட் போடுகிறேன் என்றார்.

எச்சரிக்கை!

:idea:

கவனம் டண் யாரோ பொறிவைக்கிறாங்க பாத்து பிஸ்கட் வேண்டப்போங்க :wink:

Link to comment
Share on other sites

புரியலைவில்லை வசம்பு

இதுக்கெல்லாம் வகுப்பெடுக்கத் தேவையில்லை சட்டுபுட்டெண்டு கலியாணத்தைக் கட்டுங்கோ எல்லாம் தன்ரை பாட்டிலை விளங்கும்.........சா வசம்பு விளங்கினது கூட மதனுக்கு தெரியலையே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.