• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

விசுகு

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது

Recommended Posts

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது

1984 ஒரு காலைப்பொழுது. எவரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. அத்துடன் மோட்டார் சைக்கிள் சத்தமும். வெளியில் வந்து பார்த்தால் புதிதாக திருமணமான எனது மச்சாளும் அவரது கணவரும் வந்திருந்தனர். வரவேற்று உபசரித்து இன்று மத்தியானம் இங்குதான் சாப்பாடு என்று முடிவெடுத்தபின் நிற்கும் சேவலில் எதுவேண்டும் என்று கேட்டு மச்சாள் புருசன் பூவோடு நிற்கும் சிவப்பு சேவலைக்கைகாட்ட அதை முறித்து உரிக்கும்படி தம்பியிடம் கொடுத்துவிட்டு வந்த எனக்கு ஒரே மன உளைச்சல். மச்சாள் நமக்கு கிடைக்காது வேறு ஒருவரை கட்டிவிட்டாவே என்ற ஆதங்கம் உள்ளிருந்தாலும ஒரு வயது கூடியவர் என்பதால் நாம்தானே பார்க்காது விட்டோம் என்பது புரிந்தது. எனது மன உளைச்சலுக்கு காரணம் அவர்கள் வந்திருந்த சுசுக்கி 200 மோட்டச்சைக்கிள்தான். அது என்னை ஓட்டு ஓட்டு என்று சிவப்புக்கலரில் நின்று கண்ணடித்தபடியே இருந்தது. மத்தியானம் சாப்பாடு முடிய வீட்டுக்காரர் எல்லோரும் ஒன்று கூடி கதைத்தபடி வளவுக்குள் உலாவத்தொடங்க மச்சாள் புருசனிடம் திறப்பைத்தாருங்கள் என்று கேட்டு பெற்றுக்கொண்டு வெளியில் வந்தேன். அதை எப்படி வர்ணிப்பது. சொகுசு பவனி என்றா அல்லது பறந்தேன் என்றா?

ஊரை ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தபோது அவர்கள் போவதற்கு தயாராக இருந்தனர். அவர்களை வழி அனுப்பிவிட்டு மீண்டும் ஒரு பிடிபிடித்துவிட்டு அடுத்தநாள் பாஸ்போட் அலுவலாக கொழும்பு செல்லணும் நேரத்துக்கு எழுப்பிவிடுங்கோ என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு நித்திரைக்கு சென்றுவிட்டேன். இன்று ஊரே உறையப்போகிறது என்பது தெரியாமல்....?

அன்று இரவு 11 மணியளவில் நான் ஊர்சுற்றிய அதே மோட்டார் சைக்கிளில் 2 பேர் எனது வீட்டிலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஒரு வீட்டின் கதைவைத்தட்டுகின்றனர். அந்தவீட்டின் நடுவயதுள்ள பணக்கார இரு பிள்ளைகளுக்கு தாய் கதவைத்திறக்கின்றார். வீட்டுக்குள் நுளைந்த இருவரும் தம்மை இயக்கம் என அறிமுகப்படுத்துகின்றனர். நாங்கள் இனி இந்தநேரத்தில் யாழ்ப்பாணம்போகமுடியாது. அதனால் இன்றிரவு இங்கு தங்கமுடியுமா என்று கேட்கின்றனர். அந்த தாயும் சந்தோசமாக அதற்கென்ன இது உங்கள் வீடுபோல். தங்கிச்செல்லலாம். ஏதாவது சாப்பிட்டீர்களா என்று கேட்கின்றார். இல்லையக்கா பசிக்குது என்கின்றனர். உடனேயே புட்டு அவித்து மீன்கறியுடன் முட்டையும்பொரித்து பரிமாறுகிறார். சாப்பிட்டு ஏப்பம் விட்டவர்கள் பிள்ளைகள் தூங்கிவிட்டனர் என்பதையும்மோப்பமிட்டு அந்த தாயின்கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த தாலிக்கொடி தொடக்கம் வீட்டிலிருந்த அத்தனை நகைகளுடனும் வெளியேறிவிடுகின்றனர். விடியல் காலை பிள்ளைகளின் கூக்குரலுடன் விடிகிறது.

சில நாள் கழித்து ஊருக்கு வந்தபோது நண்பர்கள் தனியாக அழைத்து இவ்வளவையும் சொன்னார்கள். அத்துடன் என்னை இயக்கம் தேடியதாகவும் சொன்னார்கள். பெரும் சிக்கலில்மாட்டுப்பட்டது தெரிந்தது. ஆனாலும் பயமில்லை. காரணம் எனக்கு மோட்டார் சைக்கிள்காரர்கள் பற்றிய விபரங்கள்தெரியும். எனவே சாட்சி சொல்ல புறப்பட்டேன். அதற்கு முதலில் எனது பாடசாலை நண்பர் ஒருவர்தான்புலிகள் இயக்கத்துக்கு உளவு வேலைகள் பார்த்துவந்தார் அவரைச்சந்திக்கலாம் என்று சென்றேன். என்னைக்கண்டதும் அவரே ஓடி வந்து உன்னைத்தான் தேடிவரவேண்டும் என்றிருந்தேன் நீயே வந்துவிட்டாய்என்று என்னை ஏதோ நன்மை செய்தவன் போல் சொல்லத்தொடங்கினார். நான் இடைமறித்து என்னை விசாரிக்க வந்தார்களாமே என்றேன். முதலில் உன்னைத்தான் சந்தேகித்து என்னிடம் வந்தார்கள். ஆனால் உன்னைப்பற்றி நான் சொன்னதை வைத்துக்கொண்டு வேறு வழிகளில் விசாரணைணைத்தொடங்கி ஆளை வன்னியிலும் மோட்டார் சைக்கிளை மன்னாரிலும் வைத்து பிடித்துவிட்டார்கள் என்றார்.

இதில் நீ உன்னையறியாமல்செய்த நன்மை அன்று அந்த மோட்டார் சைக்கிளை அதேவீட்டுக்கு முன் கொண்டு போனது. கள்ளர்களது கெட்டகாலம் அவர்களுக்கு நீ அதை அவ்விடத்துக்கு கொண்டு போனது தெரிந்திருக்கவில்லை. உண்மையிலேயே எனக்கு புல்லரித்தது. எவ்வளவு துல்லியமான புலனாய்வு.

அன்றிலிருந்தே நான் புலிகளை ஆதரிக்க தொடங்கினேன்.

தொடரும்......

Share this post


Link to post
Share on other sites

அருமை. தெழிவான நடை. மோட்டச்சைக்களை 0 ல் இருந்து தொடங்குகின்றீர்கள். என்ஜின் சூடாகத்தான் போகுது :D:D:D:D:D

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள். மச்சாள் புருஷனின் மோட்டார் சைக்கிள் எப்படி கைமாறியது என்பதை அறிய ஆவல்!

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள். மச்சாள் புருஷனின் மோட்டார் சைக்கிள் எப்படி கைமாறியது என்பதை அறிய ஆவல்!

எனக்கும் அது கொஞ்சம் குளப்பமாய் உள்ளது...தொடர்ந்து விரிவாக எழுதுங்கள் விசுகு அண்ணா

Share this post


Link to post
Share on other sites

நன்றாக உள்ளது.. தொடருங்கள் விசுகு அண்ணா..! :D

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள். மச்சாள் புருஷனின் மோட்டார் சைக்கிள் எப்படி கைமாறியது என்பதை அறிய ஆவல்!

மோட்டார் சைக்கிள் மட்டும் தானே கை நழுவிபோனது இதில் அறிய என்ன ஆவல் :lol:

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள். மச்சாள் புருஷனின் மோட்டார் சைக்கிள் எப்படி கைமாறியது என்பதை அறிய ஆவல்!

கிருபன் இப்பிடியெல்லாம் கேக்கக்கூடாது முதல் கதையை எழுத விடுங்கோ.

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் விசுகு!

எளிமையான சம்பவங்களின் கோவை! அடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது என எதிர் பார்க்க வைக்கின்றது உங்கள் படைப்பு!

இந்த மோட்டார் சைக்கிள் தான் குழப்புகின்றது! அடுத்த தொடரில் விளக்குங்கள்!

Share this post


Link to post
Share on other sites

ம்

Share this post


Link to post
Share on other sites

ம்.... தொடருங்கள் விசுகு அண்ணா.

Share this post


Link to post
Share on other sites

தொடரும்......

நீங்களும் நல்ல பார்பீங்களோ

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் விசுகு அண்ணா.

சாப்பிட்டு ஏப்பம் விட்டவர்கள் பிள்ளைகள் தூங்கிவிட்டனர் என்பதையும்மோப்பமிட்டு அந்த தாயின்கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த தாலிக்கொடி தொடக்கம் வீட்டிலிருந்த அத்தனை நகைகளுடனும் வெளியேறிவிடுகின்றனர். விடியல் காலை பிள்ளைகளின் கூக்குரலுடன் விடிகிறது.

கள்ள நாய்கள்.

Share this post


Link to post
Share on other sites

மோட்டார் சைக்கிள் மட்டும் தானே கை நழுவிபோனது இதில் அறிய என்ன ஆவல் :lol:

சாத்திரி உங்கள் புலனாய்வு மூளையைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

விசுகு தொடருங்கோ.....

Share this post


Link to post
Share on other sites

சாத்திரி உங்கள் புலனாய்வு மூளையைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

இப்படி ரெம்ப புகழக்கூடாது :wub: விசுகு அடுத்த பகுதிக்கு ஆவலாய் இருக்கிறேன். :)

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள். மச்சாள் புருஷனின் மோட்டார் சைக்கிள் எப்படி கைமாறியது என்பதை அறிய ஆவல்!

நன்றி கருத்துக்கு உறவுகளே

இந்த மோட்டார் சைக்கிளுக்கு பின்னர் வருவோம்

அதற்கு முன் எனக்கு ஒரு விடயம் தெரிந்தாகவேண்டும்

1. கொலை

2. பல கொள்ளைகள் (அவரிடம் விசாரித்ததில்)

3. நம்பிக்கைத்துரோகம்

3. மக்களிடையே மெதுவாக இயக்கங்கள் ஆதரவு பெற்றுவரும் வேளையில் அவர்களின் பெயரைப்பாவித்து கொலை கொள்ளையில் ஈடுபட்டது.

என்பனவுக்காக இவருக்கான தங்களது தீர்ப்பு என்ன.........???

Share this post


Link to post
Share on other sites

அந்தப் பிள்ளைகளுக்குத் தாயால் செய்யப் பட வேண்டிய, அவ்வளவு கடமைகளையும் செய்து அவர்களைக் கரையேற்றும் வரை, முழு உதவிகளையும் செய்ய வேண்டும்!

சுருக்கமாகச் சொல்லப் போனால், அந்தக் குழந்தைகளைத் தனது குழந்தைகள் போல வளர்த்தெடுக்க வேண்டும்!

மரண தண்டனையை நான் வலிறுத்த மாட்டேன்! அது ஒருவர் திருந்துவதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதில்லை!

மரணம் என்பது தண்டனையே அல்ல! அது குற்றவாளிக்கு ஒரு விடுதலையே என்பது எனது தனிப்பட்ட கருத்து!!!

Share this post


Link to post
Share on other sites

தொடரும்...... :)

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் வாழ்த்துகள் விசுகு!

Share this post


Link to post
Share on other sites

அந்தப் பிள்ளைகளுக்குத் தாயால் செய்யப் பட வேண்டிய, அவ்வளவு கடமைகளையும் செய்து அவர்களைக் கரையேற்றும் வரை, முழு உதவிகளையும் செய்ய வேண்டும்!

சுருக்கமாகச் சொல்லப் போனால், அந்தக் குழந்தைகளைத் தனது குழந்தைகள் போல வளர்த்தெடுக்க வேண்டும்!

மரண தண்டனையை நான் வலிறுத்த மாட்டேன்! அது ஒருவர் திருந்துவதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதில்லை!

மரணம் என்பது தண்டனையே அல்ல! அது குற்றவாளிக்கு ஒரு விடுதலையே என்பது எனது தனிப்பட்ட கருத்து!!!

இது சரியான கருத்துத்தான். விரைவான் மரணதண்டனை என்பது உடனடி விடுதலை..! ஆனால் மரணத்துக்காகக் காத்திருப்பது கொடுஞ்சித்திரவதை. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இந்த நிலைமை உள்ளது.

மரணதண்டனை வேண்டாமென்றால் அந்தக் கொலை கொள்ளைக் காரர்களை என்ன செய்திருக்கலாம்?

விடுதலைப் போராட்டங்களைப் பொறுத்தவரையில் சிறைச்சாலைகளைக் கட்டி ஆயுள் தண்டனை விதிப்பதென்பது நடைமுறைச் சாத்தியம் இல்லாத ஒன்றாயிற்றே.. :unsure:

இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் உறவினர்களில் பலர் விடுதலைப் போராட்டத்துக்கு வாழ்நாள் எதிரிகளாக இருப்பதையும் கண்கொண்டு பார்க்கிறேன்..! :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

நன்றி கருத்துக்கு உறவுகளே

இந்த மோட்டார் சைக்கிளுக்கு பின்னர் வருவோம்

அதற்கு முன் எனக்கு ஒரு விடயம் தெரிந்தாகவேண்டும்

1. கொலை

2. பல கொள்ளைகள் (அவரிடம் விசாரித்ததில்)

3. நம்பிக்கைத்துரோகம்

3. மக்களிடையே மெதுவாக இயக்கங்கள் ஆதரவு பெற்றுவரும் வேளையில் அவர்களின் பெயரைப்பாவித்து கொலை கொள்ளையில் ஈடுபட்டது.

என்பனவுக்காக இவருக்கான தங்களது தீர்ப்பு என்ன.........???

செம்படை என்ற இயக்கத்தை நடாத்தியவர்கள் யாரென்று தெரியும்தானே

Share this post


Link to post
Share on other sites

பசியாறிய வீட்டிலேயே அதுவும் உணவு பரிமாறிய பெண்ணையே கொல்லும் அளவுக்கு இருப்பவர்களுக்கு மரண தண்டனை தான் சரி. இவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்த்து சிறையில் அடைப்பது வீண்.

தொடருங்கள் விசுகு. வாசிக்க ஆவலாயுள்ளேன்.

Share this post


Link to post
Share on other sites

இது சரியான கருத்துத்தான். விரைவான் மரணதண்டனை என்பது உடனடி விடுதலை..!

ஆனால் மரணத்துக்காகக் காத்திருப்பது கொடுஞ்சித்திரவதை. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இந்த நிலைமை உள்ளது.

மரணதண்டனை வேண்டாமென்றால் அந்தக் கொலை கொள்ளைக் காரர்களை என்ன செய்திருக்கலாம்?

விடுதலைப் போராட்டங்களைப் பொறுத்தவரையில் சிறைச்சாலைகளைக் கட்டி ஆயுள் தண்டனை விதிப்பதென்பது நடைமுறைச் சாத்தியம் இல்லாத ஒன்றாயிற்றே.. :unsure:

இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் உறவினர்களில் பலர் விடுதலைப் போராட்டத்துக்கு வாழ்நாள் எதிரிகளாக இருப்பதையும் கண்கொண்டு பார்க்கிறேன்..! :rolleyes:

நன்றி இசை அருமையான முன்னோட்டம் தங்களுடையது.

எனது பதிவும் நீங்கள் குறிப்பிடும் இந்த 3 விடயங்கள் சார்ந்துதான் பயணிக்கவிருக்கிறது.

இயக்கத்தின் வலு

மக்களின் பாதுகாப்பு

தண்டனைமூலம் வரும் பின் விளைவுகள்

Share this post


Link to post
Share on other sites

மோட்டார் சைக்கிள் கை மாறியது எப்படி...?

எனது மைத்துணியை முடித்தவர் வெளிநாடு ஒன்றிலிருந்து 2 மாத லீவில் திருமணம் முடிக்கவென்றே வந்திருந்தார். வந்ததிலிருந்து பெண் பார்த்தது, திருமணம் நடந்தது, ஊர்சுத்தியது..............எல்லாமே ஒவ்வொரு வாகனத்தில். அவற்றில் ஒரு 90 யும் ஒருவானுமே அவர்களுடையவை.

அவருக்கு யாழ்ப்பாணத்தில் முக்கிய இடத்தில் பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டில் அவரது தாயாருடன் 3 தம்பிகளும் யாழில் படித்தபடி இருந்தனர். இவர்களுக்கு வன்னியில் பெருவாரியான விவசாயமும் இருந்தது. தாயார் இவற்றைக்கவனிக்க வன்னிக்கு அடிக்கடி போய் விடுவார். எனது மைச்சாளின் கணவனுக்கு ஒரு அண்ணனும் வெளிநாட்டிலிருந்ததால் பணவரவு தாராளமாக இருந்தது.

அவரது இன்னொரு அண்ணரின் மனைவியின் தங்கையின் கணவர் இங்கு அடிக்கடி வந்துபோவார். மிகவும் வெள்ளையான அழகாக ஆண் அவர். மிகவும் வசதியாக வாழ்ந்து வந்தார். அவர் கொண்டுவரும் வாகனத்தை இவர்களும் இவர்களுடைய வாகனத்தை அவரும் மாறிமாறி பாவிப்பார்கள். அன்று அவர் விடியக்காலையில் வந்ததும் எனது மைச்சாளின் கணவர் அவருடையதை எடுத்துக்கொண்டு வந்து விட்டார். அதைத்தான் நான் பாவித்தேன். அதையே இரவு களவுக்கும் அவர்கள் பாவித்தார்கள்.

அந்த நேரம் இது போன்ற நடவடிக்கைகளில்ஈடுபட்டவர்களுக்கு மின் கம்ப மரணதண்டனை விதிக்கப்பட்டுவந்தது. அப்படித்தான் இதுவும் முடிந்திருக்கும் என்று பைலை மூடிவிட்டு சிலமாதங்களில் நான் வெளிநாட்டுக்கு வந்துவிட்டேன்.

சில மாதங்களின் பின் எனது அண்ணரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. ஒருவரை (எனது மச்சாளுடைய கணவரின் தமையனை) உன்னிடம் அனுப்பிவிடுகின்றேன். உன்னிடம் வந்தால் அவரது தம்பிகளிடம் சேர்த்துவிடு என்றார். நானும் சரி என்று இருந்துவிட்டேன். அவரும் இங்கு வரும் வழியில் வேறு ஒரு ஐரோப்பியநாட்டில் மாறவேண்டியநிலையில் அங்கேயே அகதியாகப்பதிந்து கொண்டார். இடைக்கிடை இங்கு வந்துபோவார். என்னுடன் பேசும்போது இயக்க கதைகளைத்தவிர்ப்பார். மௌனமாக இருப்பார். ஆனால் மற்றவேளைகளில் எல்லாம் இயக்கத்தை போட்டுத்தாக்குவார். கொலைகாரர் என்பார். அழிக்கணும் என்பார். ஒரு முழுத்துரோகியை முதன்முதலில்நான் பார்த்தேன். இவர் எப்படி துரோகியாக மாறினார்...........???

நேரமிருக்கும்போது தொடர்கின்றேன்....................

Share this post


Link to post
Share on other sites

யாருடைய வரலாறு என சொல்லிவிட்டு தொடருங்கோ?

Share this post


Link to post
Share on other sites