Jump to content

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கெட்ச் போடுதல்- போட்டு தள்ளுவதற்கான பிளானிங்

போட்டு தள்ளுதல் - கொலை செய்தல்

போட்டு தாக்குதல்- தொடர்ச்சியான ஒரே செய்கையை மற்றவர் ரசிக்கும் வண்ணம் வெளியிடுதல்.,.

மாறுகால் மாறுகை- வலது கால் இடது கை அல்லது இடது கால் வலது கை காம்பினேசனில் உடைத்தல்..

டிஸ்கி:

தொழர் விசுகு அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என கோரிக்கை வைக்கபடுகிறது :D

Link to comment
Share on other sites

  • Replies 210
  • Created
  • Last Reply

நானறிந்தவரையில்

நான் தாயகத்தில் இருந்தவரையில் இச்சொல் பாவிக்கப்படவில்லை. இச்சொல் எப்போது பாவிக்கப்பட தொடங்கியிருக்கலாம் என்றால்(எனக்கு தெரிந்தவரை) இயக்கங்களால் ஒருவருக்கு தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டபின் அதுவும் தங்களால் செய்து முடிக்கமுடியும் என்று நிச்சயமாக தெரிந்த காரியங்களுக்கே போடு அல்லது போடுதல் என்பது பாவிக்கப்பட தொடங்கியிருக்கலாம். ஆரம்பத்தில்இது ஒரு ரகசியச்சொல்லாக அல்லது இயக்கங்கள் மட்டுமே பாவித்த ஒரு சொல்லாக இருந்திருக்கலாம். யோசித்து பாருங்கள் சாத்திரி.

மற்றும் ரதி நன்றி தங்களது ஆலோசனைக்கு.

ஆனால் இதை எழுத தொடங்குமுன்பே பலமுறை யோசித்துத்தான் எழுதத்தொடங்கினேன். எனக்கு கொஞ்சம்பேசணும். அது முடிந்ததும் நிறுத்திவிடுவேன் எல்லாவற்றையும்.

இந்த சொல்லுக்கு இந்திய இராணுவத்தின் காலத்தில் தான் வேலை அதிகமாக இருந்தது ஆனால் எப்ப தொடங்கப் பட்டது என்று தெரியவில்லை.

ஆனால் எனது வயதுக்கு இந்திய இராணுவகாலத்தில் அவரை மண்டையிஅல் போட்டாச்சாம் இவரை மண்டையில போட்டாச்சாம் என்று சொல்வார்கள்.

ஆனாலும் இந்திய இராணுவம் ஓட்டுக் குழுக்களோடு தொடர்பு வைத்து இருந்த எந்த பெண்ணையும் *மண்டயில் போடாமல் விட்டது இல்லை ஆனால் இன்று யாழ்ப்பானத்தில் போட வெளிக்கிட்டால் 25 % தம் தான் போடாமல் விட வேண்டும்.

Link to comment
Share on other sites

நானறிந்தவரையில்

நான் தாயகத்தில் இருந்தவரையில் இச்சொல் பாவிக்கப்படவில்லை. இச்சொல் எப்போது பாவிக்கப்பட தொடங்கியிருக்கலாம் என்றால்(எனக்கு தெரிந்தவரை) இயக்கங்களால் ஒருவருக்கு தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டபின் அதுவும் தங்களால் செய்து முடிக்கமுடியும் என்று நிச்சயமாக தெரிந்த காரியங்களுக்கே போடு அல்லது போடுதல் என்பது பாவிக்கப்பட தொடங்கியிருக்கலாம். ஆரம்பத்தில்இது ஒரு ரகசியச்சொல்லாக அல்லது இயக்கங்கள் மட்டுமே பாவித்த ஒரு சொல்லாக இருந்திருக்கலாம். யோசித்து பாருங்கள் சாத்திரி.

மற்றும் ரதி நன்றி தங்களது ஆலோசனைக்கு.

ஆனால் இதை எழுத தொடங்குமுன்பே பலமுறை யோசித்துத்தான் எழுதத்தொடங்கினேன். எனக்கு கொஞ்சம்பேசணும். அது முடிந்ததும் நிறுத்திவிடுவேன் எல்லாவற்றையும்.

நீங்கள் வெகு காலத்திற்கு முதலேயே ஊரை விட்டு வெளிக்கிட்டு விட்டபடியால் பின்னைய இயக்கங்கங்கள் பற்றிய விபரங்கள் தெரிந்திருக்காது. கொலை செயவதற்கு பாவிக்கப்பட்ட சொல்லாடல்கள் புளொட் இயக்கம் என்றால் டம்பண்ணுதல்.ரெலோ தட்டுதல்.புலிகள் போடுதல். இதில் ஈ.பி. விதி விலக்காக இருந்தது அவர்களும்இந்திய இராணுவத்தின் வருகையுடன் சீவுதல் அதாவது தலையை மட்டும் வெட்டி மதில்களில் அல்லது பொது இடத்தில் வைத்தல் மண்டையன்குழு. ராசீக் தலைமையிலானது. மானிப்பாயில் அவர்களது முகாம் இருந்தது. ஆனால் போடுதல் மட்டும் பிரபல்யமானது புலிகளால்தான் அதுவும் இந்தியபடை காலத்தில்;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சசி புரட்சி மற்றும் சாத்திரி

1983 கடைசிப்பகுதி அல்லது 1984 முதற்காலப்பகுதியாக இருக்கலாம்

விஸ்வமடுவில் எனது மைத்துணருடன் மாமனாரின் 10 ஏக்கர் திட்ட கமத்தில் 2 நாள் தங்கவேண்டிவந்தது. அதிகாலை 4அரை அல்லது 5 மணிக்கெல்லாம் கம்புகள் சுற்றும் சத்தம் வேகமாகக்கேட்கும். அதன் வேகம் போகப்போக அதிகரத்துச்செல்லும். அத்துடன் கரரத்தே சத்தமும் கேட்கும். நான் விடிந்து மைத்துணரிடம் கேட்டபோது யானைகள் வருவதால் பக்கத்து கமக்காறர்கள் எல்லோரும் சேர்ந்து இப்படி பயிற்சி எடுப்பதாக சொன்னார். அத்துடன் அதை விட்டுவிட்டேன். அண்மையில்(1996) எனது மாமனார் இறந்தபோது அவரை நாட்டுப்பற்றாளராக அறிவித்தார்கள். அந்த அறிவித்தலில் அவரது காணிக்குள்தான் பொட்டு, கிட்டு, காக்கா, பொன்னம்மான், செல்லக்கிளி.............????????????????????? என்று பலரும் யாழ்ப்பாணத்தில் தேடப்படும்போது மறைந்து வாழ்ந்ததாக எழுதியிருந்தார்கள். அந்த இடத்தில் செல்லக்கிளி தவிர்த்து அனைவரையும் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்ததையிட்டு மிகவும் வருத்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1984

நான் பிரான்ஸ் வந்தேன்.

வந்தவழி கிழக்கு ஜேர்மனி ஊடாக. அங்கு சில நாட்கள் காம்பில் தங்கவேண்டி வந்தது. அந்தநேரத்திலும் தாயக நிலையையும் அதனுடைய செய்திகளையும் அறியும் ஆர்வம். அந்த காம்புக்கு எல்லா இயக்கத்தினரும் வருவார்கள். துண்டுப்பிரசுரமும் தருவார்கள். அதில் புலிகளும், கழகமும், ரொலோவும், தோழர்களும் இருந்தார்கள். அவர்கள் எல்லோருடனும் பழகும் வாய்ப்புக்கிடைத்தது. சிலர் பல நாட்களாக வருடங்களாக என்னுடன் சகோதரர்களாக பழகினார்கள். அவர்களின் அந்த நேர உழைப்பை நான் மிகவும் நேசித்தேன்.

சிலநாட்களின் பின் பிரான்ஸ் வந்துவிட்டேன்.

(அப்படியே எனது படிப்பைத்தொடர லண்டன் போகவந்த எனக்கு வந்த அடுத்தநாளே வேலை கிடைத்தது. அதற்குள் காலைவிட்ட நான் இன்றுவரை வெளியில் வரமுடியவில்லை.

இரவு 12க்கு பின்தான் வேலை முடியும். மெத்றோ எடுத்து எனது இருப்பிடத்திற்கு பக்கத்தில் வந்துவிடுவேன். ஏனெனில் 1 மணிக்குப்பின் மெத்றோ இருக்காது. )

வந்திறங்கி செய்திகளுக்கான தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வேன். அந்தநேரம் இங்கு புலிகள், கழகம், ரெலோ, ஈழமக்கள் புரட்சிகர இயக்கம், ஈரோஸ் என்பன தொலைபேசி செய்திகளை ஒலிபரப்பிவந்தன. அத்தனை செய்திகளையும் கேட்பேன். சிலவேளை முக்கிய செய்திகள் இருக்கும் பட்சத்தில் இணைப்புக்கிடைப்பது அரிதாக இருக்கும். அந்தநேரங்களில் சிலவேளை நான் எல்லாவற்றையும் கேட்டுமுடிக்க 4 அல்லது 5 மணியும்ஆகிவிடும். ஆனாலும் கேட்பேன். இதையும் நான் இங்கு எழுதக்காரணம் நாங்கள் எல்லோரையும் ஆதரித்தோம். எல்லோர் சொல்வதையும் எழுதுவதையும் உள்வாங்கினோம். அதன்பின்பே தெரிவு செய்தோம்.

இந்தநிலையில் புலிகளும் மற்ற இயக்கங்களும் பணச்சேகரிப்பில் இறங்கினார்கள். எமது பங்களிப்பு எல்லோருக்கும் இருந்தது. வருபவர் எவராயினும் எமக்காகவே உழைக்கின்றனர். தமது நேரத்தை எமக்காகவே செலவளிக்கின்றனர் என்ற அடிப்படையில் நான்மட்டுமல்ல எனது நண்பர்களையும் அவர்களுக்கு அறிமுகம் செய்யும் அளவுக்கு நட்பும் இருந்தது. அதேநேரம் அந்தக் காலப்பகுதியில் புலிகளுக்கு வேறுவழிகளில் பணம் சேர்த்து அனுப்ப முயன்று பிடிபட்டு சிறைகளில் வாடியவர்களும் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் இன்று எம்மால் விமர்சிக்கப்படும் மனோ அண்ணன் அவர்கள். இந்த காரணங்களாலும் நாட்டில் செயற்பாட்டில் அதிகமிருந்த காரணத்தாலும் புலிகளுக்கே அதிகமானவர்கள் முக்கியம் கொடுத்தனர். இப்படியிருக்கும் நிலையில்தான் இயக்கங்களுக்கிடையிலான கருத்துமோதல் முற்றி ஆயுதமோதலாக வடிவெடுத்து அது ரெலோ அழிப்புடன் சிறி சபாரத்தினத்தின் கொலையுடன் வந்து நின்றது. அந்தநிலையில் இங்கு வழங்கப்பட்ட அத்தனை உதவிகளும் அத்தனை இயக்கங்களுக்கும் நிறுத்தப்பட்டன.

தொடரும்.......

Link to comment
Share on other sites

வேறு வழிகளில் பணம் சேர்பது என்றால் எப்படியண்ணா ? விளக்கமாகச் சொன்னால் தானே இளயவர்களுக்குப் புரியும். இதன் நோக்கம் உங்களை நோகச்செய்வது இல்லை . எல்லா விடுதலை அமைப்புகளுமே அதன் பங்காளிகளுக்கு உண்மையைச் சொன்னதில்லை அளவுக்கதிகமான மாயத்தோற்றங்களிலேயே வளர்ந்தார்கள்.

ஒரே அச்சு

Link to comment
Share on other sites

நன்றி சசி புரட்சி மற்றும் சாத்திரி

அந்த அறிவித்தலில் அவரது காணிக்குள்தான் பொட்டு, கிட்டு, காக்கா, பொன்னம்மான், செல்லக்கிளி.............????????????????????? என்று பலரும் யாழ்ப்பாணத்தில் தேடப்படும்போது மறைந்து வாழ்ந்ததாக எழுதியிருந்தார்கள்.

பஷீர் காக்கா!

சிலகாலம் பழக்கம்.

தோற்றத்தில் உருக் குலைந்திருந்தாலும், பின்னால் வந்த பல வெற்றிகளுக்கு அடித்தளமிட்டுச் சென்றவர்.

Link to comment
Share on other sites

வேறு வழிகளில் பணம் சேர்பது என்றால் எப்படியண்ணா ? விளக்கமாகச் சொன்னால் தானே இளயவர்களுக்குப் புரியும். இதன் நோக்கம் உங்களை நோகச்செய்வது இல்லை . எல்லா விடுதலை அமைப்புகளுமே அதன் பங்காளிகளுக்கு உண்மையைச் சொன்னதில்லை அளவுக்கதிகமான மாயத்தோற்றங்களிலேயே வளர்ந்தார்கள்.

வேறு வழிகளில் பணம் சேர்த்தால் என்றால் விசுகு இரண்டு விதமான விளக்ககங்களை மட்டும்தான் எழுதலாம் ஏனெனில் அவரிற்கு அவை மட்டும்தான் தெரிந்திருக்கும் என்பது எனது கணிப்பு முதலாவது மனோ அவர்கள் புலிகளிற்கு பணம் அனுப்புவதற்காக போதைமருந்து கடத்தலை செய்தார். இரண்டாவது அன்றை காலத்தில் புலிகளிற்காக போதை மருந்து கடத்தியவர்களுடன் இணைந்து வேலை செய்திருந்தார் இவையிரண்டைத்தான் எழுதுவார். இவை இரண்டுமே தவறானவை :)

பஷீர் காக்கா!

சிலகாலம் பழக்கம்.

தோற்றத்தில் உருக் குலைந்திருந்தாலும், பின்னால் வந்த பல வெற்றிகளுக்கு அடித்தளமிட்டுச் சென்றவர்.

அவன் தோற்றமே அப்பிடித்தான் :lol:

Link to comment
Share on other sites

லண்டனுக்கு படிக்க போக நினைக்கையில் வேலை,பின் கலியாணம்,பின் குடும்பத்தை கூப்பிடறது,பிறகு பிள்ளைகள்,கார்,வீடு,பின் அவர்கள் படிப்பு அவர்களுக்காக உழைப்பு வருடம் வருடம் அவர்களுக்கு பாட்டிகள்வேறு,டுயூசன்,சங்கீதம்,டான்ஸ் இத்தியாதிகள்

சைற்றில அரசியல்.அங்கு பலாத்காராமாக பிடித்த குஞ்சுகுருமனை குண்டுகட்டி அனுப்புவது சரியென ஒரு அரசியல் விளக்கம் இதைத்தானே முழுத்தமிழனும் புலம் பெயர்ந்து செய்தான்.

பிடித்ததில் தப்பியதுகள் இன்று சாப்பிடவழியில்லாமல் விபச்சாரம்.களவு,கொள்ளை.

நாங்கள் அடுத்த ஸ்டெப் "நாடு கடந்த அரசு".அதே பாட்டிகள்,சாமத்திய சடங்குகள்,பிள்ளைகளுக்கு கலியாணம்.அதைவிட நட்சத்திர திருவிழா என இந்திய கலைஞர்கள் வருகை.ஒரே கொண்டாட்டம்.அதற்குள் நல்லபிள்ளை வேசங்கள்.

இந்த இனத்திற்கு விடுதலை ஒரு கேடு.

அர்ஜுன், உங்களுக்கு எதற்காக எங்கள் இனத்தின் மீது அப்படி ஒரு வெறுப்பு?

நீங்களும் அந்த இனத்தின் ஒரு அங்கம் தானே!

நமது இனத்தின் சிலரது நடவடிக்கைகள் வெறுப்பை, எரிச்சலை ஊட்டினாலும், நாங்கள் மனத்தைத் தளர விடக்கூடாது!

எங்கள் விமரிசனங்கள், விடிவை நோக்கி இருக்கட்டும்!

மற்றவர்களுக்கு சொல்லும் போது எப்படி அதனையே அவர் செய்வார்? அப்படி இருக்கும் போது அந்த கூட்டத்திற்குள் எப்படி அவரை அடக்க முடியும்? நானும் அந்த கூட்டத்தில் ஒருவன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.அதாவது படிப்பு ,திருமணம் இத்தியாதி இனத்தில் நானும் ஒருவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு விருப்பாக தொய்வின்றி தொடரை கொண்டு செல்கிறீர்கள் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

செய்திகளுக்கான தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வேன். அந்தநேரம் இங்கு புலிகள், கழகம், ரெலோ, ஈழமக்கள் புரட்சிகர இயக்கம், ஈரோஸ் என்பன தொலைபேசி செய்திகளை ஒலிபரப்பிவந்தன. அத்தனை செய்திகளையும் கேட்பேன். சிலவேளை முக்கிய செய்திகள் இருக்கும் பட்சத்தில் இணைப்புக்கிடைப்பது அரிதாக இருக்கும். அந்தநேரங்களில் சிலவேளை நான் எல்லாவற்றையும் கேட்டுமுடிக்க 4 அல்லது 5 மணியும்ஆகிவிடும். ஆனாலும் கேட்பேன். இதையும் நான் இங்கு எழுதக்காரணம் நாங்கள் எல்லோரையும் ஆதரித்தோம். எல்லோர் சொல்வதையும் எழுதுவதையும் உள்வாங்கினோம். அதன்பின்பே தெரிவு செய்தோம்.

-----

அப்போது..... இணையம் பிரபல்யமாகாததால் தொலைபேசி மூலமே... ஊர்ச் செய்திகளை பெற முடியும்.

அந்த தொலைபேசி இணைப்புக் கிடைப்பதற்கு மினக்கெடும் நேரம் மிக நீண்டது.

அப்படி இணைப்புக் கிடத்துவிட்டால்.... அந்தச் செய்தியை ஒலிப்பதிவு செய்து.... மற்றைய நண்பர்களுக்கு தொலைபேசியில் அந்தச் சாமத்திலும் போட்டுக் காட்டி விட்டுத்தான்... படுக்கப் போவது.

ஹ்ம்ம்..... எவ்வளவு எதிர் பார்ப்புடன் ஆரம்பித்த போராட்டம்....., இன்று பெரு மூச்சுத்தான் வருகின்றது.

Link to comment
Share on other sites

அவன் தோற்றமே அப்பிடித்தான் :lol:

சாத்திரி

பஸீர் காக்கா எப்படி இறந்தார்?

Link to comment
Share on other sites

சாத்திரி

பஸீர் காக்கா எப்படி இறந்தார்?

பசீர் காக்கா திருமணமுடித்து இயக்கத்தை விட்டு விலத்திருந்தான் . இயக்கத்தின் உதவியுடன் தொழில் செய்து கொண்டிருந்தான்.பின்னர் எல்லைப்படையினரிற்கு பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தாக அறிந்தேன். எப்படி இறந்தானென்கிற விடயம் சரியாக தெரியாது யாரையாவது கேட்டு சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் உள் நடவடிக்கைகள் பற்றி முழுதாக அறிந்தவர் எவருமில்லை.

அந்தவகையில் அதற்குள் போவது பயனளிக்காது.

ஆனால் புலிகளின் வலையமைப்புக்கள் பல சுற்றுவட்டங்களைக்கொண்டவை. அதில் நான் எங்கு நின்றேன் என்பது மட்டும் எனக்கு தெரியும். சாத்திரி எங்கு நின்றார் என்பது எனக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் அவர் தனது பெண் குழந்தையுடன்(வெள்ளை) ஒருமுறை ஒபிசுக்கு வந்து போனதை அறிந்தேன். அதன் மூலம் அவர் எனக்கு பலமடங்கு முன் வட்டத்துக்குள் இருந்தார் என்பது தெரியும். இதற்கு மேல் இதற்குள் போகவிரும்பவில்லை.

அதேநேரம் மனோ அண்ணர் என்ன நடவடிக்கையில் ஈடுபட்டார் (100வீதம்நிரூபிக்கமுடியாதது) என்பதை எழுதவிரும்பவில்லை. ஆனால் சட்டத்தால் தண்டிக்கப்பட்டார் இன்றும் அதன் பாதகங்களை எதிர் கொள்கின்றார் என்று தெரியும். இன்று நாடுகடந்த அரசின் முக்கிய நபர் அவர். அந்தவகையில் இதை எழுதி அவருக்கோ நாடுகடந்த அரசுக்கோ ஏன் மற்றவர்களுக்கோ எந்தவகை இடையூறுகளையும் செய்யவிரும்பவில்லை. அதேநேரம் அந்தநாள் முதல் தம்மை தமது இளமையை தமது வாழ்வை எமக்காக கொடுத்த இவர்களை நான் மதிக்கின்றேன். மதிப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அவர்களுக்குத் தொடருங்கள். வரலாற்றின் பதிவுகளில் பதியப்படாத, பகிரப்படாத விடயங்களும் அர்ப்பணிப்புகளும் நிறைந்த ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றுக் காலத்தே வாழ்ந்தோமென்பதே பெருமைதான். ஆனால் எமது அடுத்த தலைமுறையாவது தன்னைத் தனாண்டு வாழ வேண்டுமெனில் நிறைய எழுதப்பட்டாக வேண்டும். பேசியாக வேண்டும். புலிகளை எதிர்ப்போரின் வீச்சுக் கூடியுள்ள சூழலில் பொருத்தமான பதிவாக உள்ளது. நான் பல புலியெதிர்பாளர்களை அவதானித்துள்ளேன். அவர்களிடம் கொள்கை முரண் கிடையாது. கொள்கை முரணிருப்பின் அவர்கள் சரியான ஒரு போராட்டத்தைப் புலத்திலேயாவது முன்னெடுத்து ஒரு அரசியல் சக்தியாக உருவாகியிருப்பார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் புலிகளால் தேடப்பட்டோர், தண்டிக்கப்பட்டோர், தண்டனையில் இருந்த தப்பியோர் போன்ற தரப்பினரேயாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அவர்களுக்குத் தொடருங்கள். வரலாற்றின் பதிவுகளில் பதியப்படாத, பகிரப்படாத விடயங்களும் அர்ப்பணிப்புகளும் நிறைந்த ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றுக் காலத்தே வாழ்ந்தோமென்பதே பெருமைதான். ஆனால் எமது அடுத்த தலைமுறையாவது தன்னைத் தனாண்டு வாழ வேண்டுமெனில் நிறைய எழுதப்பட்டாக வேண்டும். பேசியாக வேண்டும் . புலிகளை எதிர்ப்போரின் வீச்சுக் கூடியுள்ள சூழலில் பொருத்தமான பதிவாக உள்ளது. நான் பல புலியெதிர்பாளர்களை அவதானித்துள்ளேன். அவர்களிடம் கொள்கை முரண் கிடையாது. கொள்கை முரணிருப்பின் அவர்கள் சரியான ஒரு போராட்டத்தைப் புலத்திலேயாவது முன்னெடுத்து ஒரு அரசியல் சக்தியாக உருவாகியிருப்பார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் புலிகளால் தேடப்பட்டோர், தண்டிக்கப்பட்டோர், தண்டனையில் இருந்த தப்பியோர் போன்ற தரப்பினரேயாகும்.

எதற்காக இதை ஆரம்பித்தேனோ

அவற்றை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்.

எமது நோக்கமெல்லாம் ஒன்றே.

அந்த இலட்சியத்துக்கு துணையாக இருப்பது.

தடைகளை இனம் காண்பது.

நன்றி ஐயா

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகளின் உள் நடவடிக்கைகள் பற்றி முழுதாக அறிந்தவர் எவருமில்லை.

அதேநேரம் மனோ அண்ணர் என்ன நடவடிக்கையில் ஈடுபட்டார் (100வீதம்நிரூபிக்கமுடியாதது) என்பதை எழுதவிரும்பவில்லை. ஆனால் சட்டத்தால் தண்டிக்கப்பட்டார் இன்றும் அதன் பாதகங்களை எதிர் கொள்கின்றார் என்று தெரியும். இன்று நாடுகடந்த அரசின் முக்கிய நபர் அவர். அந்தவகையில் இதை எழுதி அவருக்கோ நாடுகடந்த அரசுக்கோ ஏன் மற்றவர்களுக்கோ எந்தவகை இடையூறுகளையும் செய்யவிரும்பவில்லை. அதேநேரம் அந்தநாள் முதல் தம்மை தமது இளமையை தமது வாழ்வை எமக்காக கொடுத்த இவர்களை நான் மதிக்கின்றேன். மதிப்பேன்.

இந்த வட்டத்திற்கும் எனக்கும் வெகு தூரம். :D

அவர் ஒரு தடவை சொன்னவர், தான் இயக்கத்திற்காக வேலை செய்து பிடிபட்டுச் சிறை சென்றபோது அங்கு மாற்று இயக்கத்தவர் ஒருவர் தனது மனைவிக்காக நகை கடத்திப் பிடிபட்டு உள்ளே இருந்ததாக. :)

Link to comment
Share on other sites

பசீர் காக்கா திருமணமுடித்து இயக்கத்தை விட்டு விலத்திருந்தான் . இயக்கத்தின் உதவியுடன் தொழில் செய்து கொண்டிருந்தான்.பின்னர் எல்லைப்படையினரிற்கு பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தாக அறிந்தேன். எப்படி இறந்தானென்கிற விடயம் சரியாக தெரியாது யாரையாவது கேட்டு சொல்கிறேன்.

இந்திய ஆமியின் வருகைக்குப் பின் 89 / 90 களில் இறந்ததாக கேள்விப்பட்டேன்.

உங்கள் கருத்துக்களின்படி பார்த்தால், அது பிழை போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன், உங்களுக்கு எதற்காக எங்கள் இனத்தின் மீது அப்படி ஒரு வெறுப்பு?

நீங்களும் அந்த இனத்தின் ஒரு அங்கம் தானே!

நமது இனத்தின் சிலரது நடவடிக்கைகள் வெறுப்பை, எரிச்சலை ஊட்டினாலும், நாங்கள் மனத்தைத் தளர விடக்கூடாது!

எங்கள் விமரிசனங்கள், விடிவை நோக்கி இருக்கட்டும்!

இயற்கையை இரசிக்கலாம் அதை பாதுகாப்பதற்கு நீங்கள் உழைக்கலாம்

மிருகங்கள் மீது உங்களுக்கு அனுதாபம் இருக்கலாம்.............. அவற்றுக்கான கானகங்களை அழித்தலை தடுத்து நிறுத்தலாம்.

பன்றிகளை குளிக்கவாக்கலாம் பவுடர் போடலாம்............. அது உங்களுடைய விருப்பு.

துரதிஸ்டவதமாக பன்றிகள் வெறுப்பதே அதைதான். இன்னொருவிதமாக பார்த்தால் குளிக்கவார்ப்பது என்பது பன்றிகளை பொறுத்தவரை ஒரு விதமான சித்திரவதைதான். அதை யாராவது செய்திருந்தால் அவர்கள் மேல் பன்றிகளுக்கு சாகுவரை அதற்கான கோபம் இருக்கதானே செய்யும்? ஆனால் குப்பையாக கிடந்த ஊரையே புலிகள் கூட்டி பெருக்கினால் எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசீர்காக்கா இந்திய இராணுவத்திடம் பிடிபட்டு யாழ் அசோகா விடுதியில இருந்ததா ஞாபகம் அதுக்குப்பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அதன்பின்பு இராணுத்திடம் சரணடையக்கூடாது எனும் உறுதிமொழியைக் காப்பாற்றவில்லையென தண்டனை அனுபவித்ததாக அறிந்தேன். மேலும் கிட்டண்ணருடன் ஆங்கிலம் பேசித்திரிந்த ரகீம் எனும் கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவன் தானாகவே இந்திய இராணுவத்திடம் பிடிபடுவதுபோல் சரணடைந்து. பின்பு உலங்கு வானூர்தி மூலம் கொழும்பு வந்து வெளிநாட்டுக்குத் தப்பியதாக அறிந்தேன். இவரது தந்தையாரும் றோயல் கல்லூரியின் பழைய மாணவன் அந்தவகையில் மகன் புலிகள் இயக்கத்தில் இருக்குமபோதே சிங்கள அரசியல்வாதிகளுடன் நல்லுறவைப் பேணியவர் அந்த வேளையில் ஓல்ட் றோயல்ஸ் எனும் நிகழ்சியில் அவர்களுடன் ரகீமது தந்தை பங்குகொண்டிருந்ததாக அறிந்தேன். எண்பதுகளில் யாழ் நகரில் இஸலாமிய நண்பர்களது பெயரில் இயக்கத்தில் இருந்தவர்கள் அனேகமாக பசீரும் ரகீமும்தான். (விபரம் தப்பாக இருந்தால் மன்னிக்கவும்) ஆனால் கிழங்கன் எனும் பெயர் கொண்ட இஸ்லாமியத் தமிழர் ஒருவர் யாழ் கோட்டை கொமினிகேசன் அடிபாட்டில வீரச்சாவடைந்தது நினைவிருக்கு. மற்றப்படி தொடரவும் நன்றாகவிருக்கின்றது.

ரகீம் பற்றி தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

ரகீம் கனடாவில் 15 வருடத்திற்கு மேலாக இருக்கின்றார்.கொஞ்சக்காலம் நண்டு இறக்கி வித்தார் இப்ப என்ன வியாபாரமோ?

அதைவிட கிட்டரின் காலத்தில் கோலோச்சிய பல புலிகள் இன்று மாற்று இயக்கத்தினருடன் தான் இரவுப்பொழுதை கழிக்கின்றார்கள்.இயக்கத்தில் இருக்காதவர்கள் தான் இன்னமும் முரண்பாட்டுடன், விட்டு விலகியவர்கள் தங்களுக்குள் ஒரு அண்டர்ஸ்ரான்டிங்.பல ஊத்தைப் பெயர்கள் எழுத விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.