விசுகு

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது

Recommended Posts

நாங்கள் ஒரே ஆளைப்பற்றித்தான் பேசுகின்றோமோ தெரியிவில்லை. ஆனால் 2005 இல் எனது மாமனார் யாழ்ப்பாணத்தில் காலமானபோது அது மிகவும் கடினமான காலகட்டம் என்பதால் புலிகளுக்கு அவரது இறப்பு பற்றி அவரது குடும்பத்தினர் அறிவிக்கவில்லை. சில நாட்களின் பின்னர் காக்கா அண்ணரே தேடிவந்து இவர்களைக்கடிந்து கொண்டதோடு தலைவர்வரை சென்று பேசி அவரது 31வது நாளில் வைத்தே நாட்டுப்பற்றாளர் அறிவித்து அதற்கான சான்றிதழையும் கொடுத்திருந்தார். எனவே அவர் 2005 கடைசிவரை நலமாக இருந்தார் என்பதுடன் இயக்கத்திலும் அவர் மதிப்போடு இருந்தார் என்பது தெரிகிறது.

Share this post

Link to post
Share on other sites

பசீர் காக்கா அவர்கள்பற்றி விசாரித்ததிலிருந்து..................

முள்ளிவாய்காலிலிருந்து காம்ப் வந்து அங்கு இருந்தபோது அமைச்சர் முரளிதரன் நேரடியாக வந்தும் இவரை அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை?????????. அவரை அங்கிருந்து எடுக்க கனடாவிலுள்ள அவரது மகளாலும் ஏனையோராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சில மாதங்களின் பின் அவர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன்பின் எதுவும் தெரியவில்லை.

(மட்டக்களப்புக்கு இவர் பொறுப்பாக இருந்தபோதே இவரால் முரளிதரன் இயக்கத்தில் சேர்ந்துக்கொள்ளப்பட்டார்.)

Edited by விசுகு

Share this post

Link to post
Share on other sites

நாங்கள் ஒரே ஆளைப்பற்றித்தான் பேசுகின்றோமோ தெரியிவில்லை. ].

அப்படித்தான் இருக்க வேண்டும்.

பசீர் காக்கா அவர்கள்பற்றி விசாரித்ததிலிருந்து..................

முள்ளிவாய்காலிலிருந்து காம்ப் வந்து அங்கு இருந்தபோது அமைச்சர் முரளிதரன் நேரடியாக வந்தும் இவரை அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை?????????. அவரை அங்கிருந்து எடுக்க கனடாவிலுள்ள அவரது மகளாலும் ஏனையோராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சில மாதங்களின் பின் அவர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன்பின் எதுவும் தெரியவில்லை.

(மட்டக்களப்புக்கு இவர் பொறுப்பாக இருந்தபோதே இவரால் முரளிதரன் இயக்கத்தில் சேர்ந்துக்கொள்ளப்பட்டார்.)

பரமதேவாவின் மரணத்தின்(1984 ) பின்பே பஷீர் காக்கா மட்டக்களப்புக்கு பொறுப்பாளராக சுமார் ஒரு வருடம் இருந்தார்.

முரளிதரன் சேர்ந்தது 83 என நினைக்கிறேன்.

(உயிருடன் வாழும் போராளிகளைப் பற்றி பொதுவில் கதைப்பது, அவர்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாய் அமையலாம் என்பதால் .. இவரை பற்றிக் எழுதுவதை இத்துடன் நிறுத்துகிறேன். )

Edited by thappili

Share this post

Link to post
Share on other sites

விசுகு நான் இயக்கத்தின் அலுவலகத்திற்கு வந்து போனதாக உங்களிற்கு கிடைத்த தகவல் தவறு நான் எந்தக் காலத்திலும் இயக்க அலுவலகங்களிற்கு சென்றது கிடையாது. அதே நேரம் நான் எங்கு என்ன செய்கிறேன் என்பதும் அவர்களிற்கும் தெரியாது. :lol: :lol:

Share this post

Link to post
Share on other sites

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சாத்திரி

ஆனால் சம்பவம் உண்மை. பிள்ளை வெள்ளை என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு காரணம் அதனாலேயே அது தாங்களாக இருக்கலாம் என்ற முடிவுக்கு நான் வந்தேன். தவறுக்கு வருந்துகின்றேன்

அத்துடன் மறைந்துவாழும் அவரது நன்மை கருதி இதை இத்துடன் நிறுத்துகின்றேன்.

Share this post

Link to post
Share on other sites

சிறி சபாரத்தினம்

எனக்கு பிடித்த ஒரு தலைவர். சிரித்தமுகம். உயரமான கம்பீரமான அழகான எல்லோரையும் கவரும் தோற்றம். குட்டிமணி தங்கத்துரையின் வழிமூலம் என்ற பல சாதகமான அம்சங்களைக்கொண்ட தலைவர். இவர் ஆயுதத்துடன் வந்ததால் கொலை செய்யப்பட்டார் என்றும் இல்லை நிராயுதபாணியாக வந்தும் கொலை செய்யப்பட்டார் என்றும் இன்றுவரை அதற்கு தெளிவு இல்லை. இவருடைய அழிப்பு எம்மையெல்லாம் கவலை கொள்ள வைத்தது. எனது தம்பி ரெலோவிலிருந்துதான் இங்கு வந்திருந்தான். அவனும் இதை மிக காட்டமாக எதிர்த்தான்.

அதேநேரம் இங்கு புலிகளுக்குள்ளும் இது பற்றிய கருத்து மோதல்கள் இருந்தன. சிலர் ஒதுங்கி பின்னர் மீண்டும் இணைந்தனர். ஆனாலும் புலிகள்தொடர்ந்து தமது பிரச்சாரங்களையும் உதவி கோரலையும் செய்தே வந்தனர். எனக்கும் எம்போன்ற பலருக்கும் பல கூட்டங்கள் நடாத்தப்பட்டு விளக்கங்களும் ஆதாரங்களும் முன் வைக்கப்பட்டன.

இந்த நேரத்தில் தான் இந்த பிரச்சினையிலிருந்து தப்பிய ரெலோவைச்சேர்ந்த எனதுமைத்துணர் ஒருவர் ஊரிலிருந்து வந்து சேர்ந்தார்.

அவரைச்சந்தித்து பேச முயன்றேன். அவர் மதுவுக்கு அடிமையாகியிருந்தார். மிகவும் ஆத்திரத்துடனிருந்தார். அவர் என்னிடம் சொல்லிய ஒரு கருத்து என்னை மிகவும் சிந்திக்கத்தூண்டியது. அது

"புலிகள் ஒருத்தர் கூட இல்லாமல் அழிப்போம். இனி எமக்கு வேறு எந்த இலட்சியமுமில்லை." பல நாள் இழுபறிகளுக்குப்பின்

நான் ஒரு முடிவுக்கு வரவேண்டி ஏற்பட்டது.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது எதற்காக?

அதன் இலட்சியம் என்ன?

அதை யார் கொண்டு செல்லப்போகின்றனர்...?

எமது இலட்சியக்கனவை கொண்டு செல்ல தகுதியானவர்கள் யார்???

இதில் முக்கியமான ஒன்றை இங்கு சொல்லவேண்டும்

நாங்கள் எமது போராட்டத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வால் தடுமாறிநிற்க......

இன்னொரு கூட்டம் இதையே காரணமாக வைத்து புலிகளை வசைபாட ஆரம்பித்தனர். புலிகளை வசைபாடுவதை மட்டுமே செய்தனர். இன்றுவரை அதையே செய்கின்றனர். மேலே ஒரு திரியில் சோபா சக்தியின் உரையைப்பார்த்தேன். அதில் அவர் சொல்கின்றார் ரெலோ அழிப்புடன் எமது போராட்டம் முடிந்துவிட்டதாக. உண்மைதான் இவர்கள் அன்றுடன் எமது போராட்டத்துக்கு முடிவுரை எழுதிவிட்டார்கள். அதில் சோபா சக்தியிலிருந்து இங்கு வாந்தி யெடுக்கும் ARJUNம் அடக்கம். ஆனால் பெரும் பான்மை தமிழ் மக்கள் தமிழரது போராட்டம் தனது இலக்கை நோக்கி பயணிக்க என்ன செய்யவேண்டும்என்றே அன்று சிந்தித்தார்கள்.

Edited by விசுகு

Share this post

Link to post
Share on other sites

உங்கள் தொடரை ஆளமாக உள்வாங்குகின்றேன் அதேவேளையில் உங்களிடமிருந்து நேரடியான பதில் எனக்கு வேண்டும். விடுதலைப்புலிகள் விமர்சனத்திற்கு அப்பால்பட்டவர்களா???? இல்லை என்றால் எதுவரை அவர்கள் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள்????????? மழுப்பல் இல்லாமல் சொல்லுங்கள் .

Share this post

Link to post
Share on other sites

விமர்சனம் நேர விரயம், மாற்றுக் கருத்தாளர்களின் திசை திருப்பும் முயற்சிகள்.

ரென்சிஸ் விளையாடும்போது போட்டியாளர்கள் கட்டத்திற்குள் மட்டும்தான் பார்க்கவேண்டும். பார்வையாளரின் கூச்சல்களைத் தவிர்த்து ஆட்டத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி நிச்சயம். இப்படித்தான் விடுதலைப் போராட்டமும்.

விடுதலைப் போராட்டம் இப்பவும் இருக்கின்றதா?!

Share this post

Link to post
Share on other sites

உங்கள் தொடரை ஆளமாக உள்வாங்குகின்றேன் அதேவேளையில் உங்களிடமிருந்து நேரடியான பதில் எனக்கு வேண்டும். விடுதலைப்புலிகள் விமர்சனத்திற்கு அப்பால்பட்டவர்களா???? இல்லை என்றால் எதுவரை அவர்கள் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள்????????? மழுப்பல் இல்லாமல் சொல்லுங்கள் .

எனது தனிப்பட்ட மழுப்பலற்ற பதில்

பொதுத்தொண்டுகளில் ஈடுபடும் எவரையும் விமர்சிக்கமுடியும். விமர்சிக்கவேண்டும். ஆனால் அந்த பொது திட்டத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் அல்லது அதனுடைய தேவையை உணர்ந்தவர்களது விமர்சனங்களே கவனத்திலெடுக்கப்படவேண்டும். அதற்கு அப்பால் பார்வையாளர்களாக இருப்போரின் விமர்சனத்தை கிருபன் சொன்னதுபோல் கவனத்திலெடுக்கத்தேவையில்லை. (அதனால் பொதுத்தொண்டாற்றுவோருக்கு இழப்புக்கள் வராதவரை).

அந்தவகையில் விடுதலைப்புலிகளும் பொதுத்தொண்டர்கள். விமர்சனமும் அதை ஏற்றதாக இருக்கவேண்டும். இல்லையென்றால் எவருக்கு என்ன பிரயோசனம்...............???

Share this post

Link to post
Share on other sites

சிறி சபாரத்தினம்

எனக்கு பிடித்த ஒரு தலைவர். சிரித்தமுகம். உயரமான கம்பீரமான அழகான எல்லோரையும் கவரும் தோற்றம். குட்டிமணி தங்கத்துரையின் வழிமூலம் என்ற பல சாதகமான அம்சங்களைக்கொண்ட தலைவர். இவர் ஆயுதத்துடன் வந்ததால் கொலை செய்யப்பட்டார் என்றும் இல்லை நிராயுதபாணியாக வந்தும் கொலை செய்யப்பட்டார் என்றும் இன்றுவரை அதற்கு தெளிவு இல்லை. இவருடைய அழிப்பு எம்மையெல்லாம் கவலை கொள்ள வைத்தது. எனது தம்பி ரெலோவிலிருந்துதான் இங்கு வந்திருந்தான். அவனும் இதை மிக காட்டமாக எதிர்த்தான்.

சிறீ சபாரட்ணத்தை முதல் சுட்டது டொச்சர் என்று அழைக்கப்பட்ட போராளி வடக்குபுன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்தவர். பின்னர் தான் கீரோ வந்து கதை முடிந்தது. டொச்சர் இரண்டாம் கட்ட ஈழப்போரில் வசாவிளான் பகுதியில் வீரச்சாவடைந்தார். (மேஜர் டொச்சர்)

குட்டிமணியினால் குட்டிச்சுவரான குடும்பத்தில் எனது குடும்பம் முக்கியமானது.

Share this post

Link to post
Share on other sites

ஆரம்ப கட்டங்களில் டெலோவில் திறமையாக போரட கூடிய போராளிகள் பலர் இருந்ததாக கூற கேள்விபட்டிருக்கிறன் ஆனால் உண்மை பொய் nதியாது 1970 மற்றும் 80 களில் நடை பெற்ற போரட்டங்களை தெளிவாக அறிந்தவர்கள் தான் இதை பற்றி கூறனும்....

விசுகு அண்ணா தொடருங்கள்....பழைய வரலாறுகளை அறிய ஆவல்.....

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

ரெலோவினது சாவகச்சேரி காவல்நிலையத்தாக்குதல் பிரசித்தமானது. இதில் தலைமையேற்றுப் பங்கெடுத்தவர் தாஸ் ஆவார். அதேவேளை பொபி எனும் இன்னுமொரு இரண்டாம் நிலைத்தலைவரும் ரெலோவில் இருந்தார். அவர் யாழ் ஆனைப்பந்தியடி திருநாவுக்கரசு கார்க்கராச் உரிமையாளது மகன். யாழ் வைத்தியசாலையில் பொபி தாஸைப் போட்டுத்தள்ளியதுடன் ரெலோ எனும் விடுதலை இயக்கம் தனது முடிவுரையை எழுதத் தொடங்கியது. சிறந்த தலைமைத்துவப் பண்புகளை தன்னகத்தே கொண்டவர் சிறி சபாரத்தினம் என்பதை புலிகளும் ஏற்பர் ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட விடுதலை இயக்கம் இரண்டாம் நிலைத்தலைவர்களால் தறிகெட்டு ஓடியதை அவரால் தடுக்கமுடியவில்லை. இவ்வியக்கம் இப்போதும் தொடர்ந்திருந்தால் தமிழீழப்போராட்டத்தின் செல்திசை வேறுமாதிரி அமைந்திருக்கும். ரெலோ அழிப்பு நடவடிக்கையில் மிஞ்சிய ஒருவர் ஒபராய் தேவனது தம்பியார் சுபாஸ்மட்டுமே காரணம் கிட்டருடன் பலவிடையங்களில் ஒத்துழைத்ததால எனக் கேள்விப்பட்டேன். சிறி அண்ணரது இறுதிக் கணங்கள்பற்றி பல தகவல்கள் கோண்டாவில் அன்னுங்கை ஒழுங்கைப் பிரதேசத்தில் மறைந்திருந்தாகவும் இறுதிவேளை கப்பிப் புகையிலைச் செடிகளுக்குள் மறைவிடம்தேடியதாகவும். கிட்டர் சம்பவ இடத்தில் நின்றாரெனவும் .இறதிக்கணங்களில் "கிட்டு உன்னோட ஒருக்காக் கதைக்கவேணுமென" அவ்வேளையில் வெடி விழுந்ததாகவும் கூறுபவர் உண்டு.

செத்த வீடு என்றால் அதில் பினமும் நான் தான் கலியான வீடு என்றால் அதில் மாப்பிள்ளையும் நான் தான் என்பது அமெரிக்காவுக்கு பொருந்தும் ஆனால் நமக்கு?

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

ரெலோவினது சாவகச்சேரி காவல்நிலையத்தாக்குதல் பிரசித்தமானது. இதில் தலைமையேற்றுப் பங்கெடுத்தவர் தாஸ் ஆவார். அதேவேளை பொபி எனும் இன்னுமொரு இரண்டாம் நிலைத்தலைவரும் ரெலோவில் இருந்தார். அவர் யாழ் ஆனைப்பந்தியடி திருநாவுக்கரசு கார்க்கராச் உரிமையாளது மகன். யாழ் வைத்தியசாலையில் பொபி தாஸைப் போட்டுத்தள்ளியதுடன் ரெலோ எனும் விடுதலை இயக்கம் தனது முடிவுரையை எழுதத் தொடங்கியது. சிறந்த தலைமைத்துவப் பண்புகளை தன்னகத்தே கொண்டவர் சிறி சபாரத்தினம் என்பதை புலிகளும் ஏற்பர் ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட விடுதலை இயக்கம் இரண்டாம் நிலைத்தலைவர்களால் தறிகெட்டு ஓடியதை அவரால் தடுக்கமுடியவில்லை. இவ்வியக்கம் இப்போதும் தொடர்ந்திருந்தால் தமிழீழப்போராட்டத்தின் செல்திசை வேறுமாதிரி அமைந்திருக்கும். ரெலோ அழிப்பு நடவடிக்கையில் மிஞ்சிய ஒருவர் ஒபராய் தேவனது தம்பியார் சுபாஸ்மட்டுமே காரணம் கிட்டருடன் பலவிடையங்களில் ஒத்துழைத்ததால எனக் கேள்விப்பட்டேன். சிறி அண்ணரது இறுதிக் கணங்கள்பற்றி பல தகவல்கள் கோண்டாவில் அன்னுங்கை ஒழுங்கைப் பிரதேசத்தில் மறைந்திருந்தாகவும் இறுதிவேளை கப்பிப் புகையிலைச் செடிகளுக்குள் மறைவிடம்தேடியதாகவும். கிட்டர் சம்பவ இடத்தில் நின்றாரெனவும் .இறதிக்கணங்களில் "கிட்டு உன்னோட ஒருக்காக் கதைக்கவேணுமென" அவ்வேளையில் வெடி விழுந்ததாகவும் கூறுபவர் உண்டு.

ரெலோவுடன் எதற்காக புலிகள் மோதினர் எப்படி அது ஆரம்பித்தது என்று யாராவது விளக்கமாக சொல்ல முடியுமா...?

Share this post

Link to post
Share on other sites

ரெலோவுடன் எதற்காக புலிகள் மோதினர் எப்படி அது ஆரம்பித்தது என்று யாராவது விளக்கமாக சொல்ல முடியுமா...?

மோதல் வடமராச்சிப் பகுதியிலேயே ஆரம்பித்தது என நினைக்கிறேன்..! தொடக்கத்தில் ரெலோ உறுப்பினர்கள் புலிகள் உறுப்பினரைத் தேடித் திரிந்தார்கள். எப்படி ஆரம்பமானது என்று தெரியவில்லை. புலிகள் மறைந்து செயற்பட்டார்கள்.

பின்னர் புலிகளின் உறுப்பினர் லிங்கம் என்பவர் ரெலோ முகாமுக்கு பேசுவதற்காக அழைக்கப்பட்டார். அங்கு சென்ற இடத்தில் அவர் சுட்டுக்கொல்லப் பட்டார். அதன்பின்னர் பதுங்கியிருந்த புலிகள் ரெலோவை வேட்டையாடியதாக ஞாபகம்..! :unsure:

Share this post

Link to post
Share on other sites

ரெலோவுடன் எதற்காக புலிகள் மோதினர் எப்படி அது ஆரம்பித்தது என்று யாராவது விளக்கமாக சொல்ல முடியுமா...?

மேலதிக விபரங்களிற்கு

http://sathirir.blogspot.com/2009/02/blog-post_8037.html

Edited by sathiri

Share this post

Link to post
Share on other sites

மேலதிக விபரங்களிற்கு

http://sathirir.blogspot.com/2009/02/blog-post_8037.html

நன்றி சாத்திரி அண்ணை...

Share this post

Link to post
Share on other sites

கதை கதையாம் பகுதியில் பதிவதால் வரலாறாக இல்லாமல் கதையாகவே எடுத்துக்கொள்வோம்.

நீங்கள் எழுதும் கதைகள் மிக இன்ரரஸ்டாக போகுது.அதுவும் சாத்திரியாரின் நடிகைகள் கதை சுப்பெர்.

லண்டனில் இருக்கும் குடிமி ரவி சொன்னதுதான் ஞாபகம் வருது.அதில இருக்கின்ற எல்லோருக்கும் அந்தளவுதான் இருக்கு அதுக்கு மேல எதிர்பார்க்ககூடாது என்று.

லண்டனில் இருக்கும் குடிமி ரவி சொன்னதுதான் ஞாபகம் வருது.

அதில இருக்கின்ற எல்லோருக்கும் அந்தளவுதான் இருக்கு அதுக்கு மேல எதிர்பார்க்ககூடாது என்று.

திரு. arjun

இது கதையோ வரலாறோ எதுவகையில் தாங்கள் போட்டாலும்

இது அடுத்த தலைமுறை நடந்தவற்றை அறியவேண்டும் என்பதற்காகவே பதிகின்றேன். உங்களுக்கும் பல அனுபவங்கள் இருக்கும் முடிந்தால் அவற்றையும் இங்கு பதியுங்கள் அல்லது நான் எழுதுவதில் ஏதும் தப்பிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

அதைவிடுத்து தொடர்ந்து கவுட்டுக்கொட்டிக்கொண்டிருப்பதால் எதையும் சாதித்துவிடப்போவதில்லை. எதையும் ஆவணப்படுத்தவும் உதவப்போவதில்லை. :(:(:(

Share this post

Link to post
Share on other sites

கதை கதையாம் பகுதியில் பதிவதால் வரலாறாக இல்லாமல் கதையாகவே எடுத்துக்கொள்வோம்.

நீங்கள் எழுதும் கதைகள் மிக இன்ரரஸ்டாக போகுது.அதுவும் சாத்திரியாரின் நடிகைகள் கதை சுப்பெர்.

லண்டனில் இருக்கும் குடிமி ரவி சொன்னதுதான் ஞாபகம் வருது.அதில இருக்கின்ற எல்லோருக்கும் அந்தளவுதான் இருக்கு அதுக்கு மேல எதிர்பார்க்ககூடாது என்று.

அதிலை இருந்தவைக்கு அவ்வளவுதான் ஆனால் குடுமி ரவிக்கு ஒரு குடுமி மேலதிகமாய் உள்ளது அவ்வளவுதான். :lol: :lol:

Share this post

Link to post
Share on other sites

அர்ஜீன் அண்ணா நீங்களும் உங்கள் அணுபவங்கள தொடரா தரலாமே...?

Share this post

Link to post
Share on other sites

வரலாறு அடுத்த தலைமுறைக்கு போகவேண்டும் என்பது மிக உண்மை.

நீங்கள் உங்கள் சம்பந்தமான,நான் ஏன் புலியில் சேர்ந்தேன் என்று எழுதினால் மிக நன்றாக இருக்கும்,அதைவிட்டு போராட்டம் சம்பந்தமாக யாரோ சொன்னதைக்கேட்டு அதையே வரலாறு என எழுதக்கூடாது.

பிரான்ஸ்சில் உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் சந்தோசமாக வாசிக்கலாம்.

சாத்திரியாரின் நடிகை கதை.சாலிக்கிராமத்தில் இருந்த நளினியின் வீட்டில் டெலோ இருந்தது உண்மை.அதற்கு இப்படி ஒரு கதையை கட்டக்கூடாது.நான் நளினியயை சந்திக்கும் போது சிறி சபாரத்தினத்தை தெரியுமா என இந்த கிகிசுவை மனதில் வைத்துத்தான் கேட்டேன்.வீட்டு புரோக்கரால் இலங்கை தமிழர்களுக்கென வீடு கொடுக்கப்பட்டதாகவும் இப்போ வாடகை பெறவே புறோக்கர் கஸ்டப்படுவதாகவும் யார் சிறி என கேட்டார்.

இயக்கத்தில் ஒருவரை பற்றி பிழையாக கதை பரவுதென்றால் அவர் ஒன்றில் ஓடிவிட்டார் அல்லது போடப்போகின்றார்கள் என்று அர்த்தம்.இவை எல்லாம் விளங்கக்கூடிய நிலையில் பலர் இல்லை.தலைமை சொல்லே மந்திரம்.இது அனைத்து இயக்கத்திற்கும் பொருந்தும்.பல உதாரணங்கள் எழுதலாம்.

புளொட்டின் சரித்திரமே அக்கு வேறு ஆணிவேறாக வேறு தளங்களில் எழுதப்பட்டுவிட்டது.இப்போதும் நேசன் என்பவர் என்.எல்.எப்.டீ இணையத்தில் எழுதுகின்றார்வாசித்தால் போராட்டத்திற்கு என்ன நடந்தது என பலருக்கு விளங்கும்.படங்கள் ,சாட்சிகளுடன் எழுதுகின்றார்.சரி பிழை பற்றி எம்முடன் கதைப்பார்.

நான் எனக்கு தெரிந்த உண்மையான புலிகள் பற்றிய சிறுவிடயங்களை எழுதினால் கூட நிர்வாகம் தூக்கிவிடும்.வன்னியசிங்கம் வீட்டில் கொள்ளையடித்து கொலைகள் செய்தவர்கள் யார்?விசுகுவின் முதலாம் பதிவு போல் ஒரு சம்பவம் தான் இது.

Share this post

Link to post
Share on other sites

முந்தியொருக்கால் ஜேர்மனியிலை நளினியின்ரை......அதுதான் அவவின்ரை புறோக்கிறாம் நடத்துறம்...நடத்தப்போறம் எண்டுசொல்லிகாசு சேர்த்தவை....ஆனால் இண்டு வரைக்கும் நளினியையும் காணேல்லை அவவின்ரை புறோக்கிராமையும்காணேல்லை. குடுத்த காசையும் காணேல்லை அந்த காசிலை பெட்டிக்கடை நடத்துற ஆக்களைத்தான் காணக்கிடைக்குது. :lol:

Share this post

Link to post
Share on other sites

சிறீ சபாரத்தினம் கொல்லப்பட்ட இடம் கோன்டாவில் வடக்கில் போய்பார்த்தேன்.அந்தவிட்டுக்காரர்கள் இப்போ லண்டனில் இருக்கின்றார்கள்.சிறீயத்தேடிவந்து அவர்கள் வீட்டில் இல்லை என்று திரும்பும் நிலையில் அடுத்ததாக இருந்த சிறிய குடிசையப்பார்த்திருக்கின்றார்கள்.அதற்குள் சுடச் சுட சாப்பாடு தயாராக இருந்திருக்கு.சந்தேகத்தில் தோட்டங்க்கள் எல்லாம் தேடும்போது வீட்டிற்கு பின்னாலுள்ள புகையிலை தோட்டத்திற்குள் சிறி இருந்து பிடிபட்டு சுடப்பட்டார்.தோட்டத்திற்குள் இருந்த அப்படியே நகர்ந்து உரும்பிராய்க்கு போய் புளொட்டால் இந்தியாவிற்கு கொண்டுசெல்லப்பட்டர் bobby.

ஏன் சிறி அந்தவீட்டிற்கு போனார்.அந்தவீட்டுக்கார மகனும் டெலோவில் இருந்தார் அவர் கல்வியங்காட்டில் சுடப்பட்டு கோயிலொன்றுக்குள் போய் 2 நாளாக நினைவுதிரும்பாத நிலையில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையின் பின் ராகீமின் உதவியால் புலிகளிடம் இருந்து தப்பி இப்போ கனடாவில் உள்ளார்.கை முழுக்க ஒரே சூட்டுக்காயங்கள்.புலியைபற்றிக்கேட்டால் அந்தமாதிரி வார்த்தைகள் வரும்.

Edited by arjun
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

சாத்திரி அண்ணையின் பதிவின் படி ரெலோதான் புலிகளை வம்புக்கிழுத்திருக்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது...அது மட்டுமன்றி சமாதானம் பேச வந்த புலி உறுப்பினரையும் சுட்டுகொன்று சகோதரர்களையே இந்தியா எட்டப்பர்களுடன் சேர்ந்து அளிக்கத்துணிந்திருக்குறார்கள்..இதற்கு மேல் பொறுமையாக புலிகள் இருந்திருக்க வேண்டும் என்று இந்த மாற்றுகருத்து சொல்பவர்கள் எதிர்பார்க்கிறார்களா..? நானும் என் வழியும் என்று இருக்கும் என் வழியில் குறுக்கிடுவது மட்டுமன்றி என்னைக்கொல்லவும் வரும்போது நான் எப்படிச் சும்மா இருக்க முடியும்....?

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • முட்டிக் கொள்ளும் தமிழ்க் கட்சிகள் கே. சஞ்சயன் / 2019 மார்ச் 18 திங்கட்கிழமை, பி.ப. 09:40 Comments - 0 இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்க்கமான ஒரு வாரமாக இருக்கப் போகிறது.    ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, புதன்கிழமை (20) பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.    அத்துடன், இலங்கை தொடர்பான புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஏற்கெனவே இந்தத் தீர்மான வரைவு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.   இதற்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாகக் கூறியிருக்கிறது. அவ்வாறு இணங்கினால், அடுத்தவாரம் வாக்கெடுப்பு நடத்தப்படாது. இணங்காவிடின், வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.   ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையும் ஏற்கெனவே வெளியாகி விட்டது. புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் வரைவும் ஏற்கெனவே பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.   இப்போது, இந்த வரைவையும் அறிக்கையையும் வைத்து, தமிழ் அரசியல் பரப்பில் சூடான விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.   ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை ஒரு தரப்பு வரவேற்றால், இன்னொரு தரப்பு எதிர்க்கிறது. அதுபோலவே, ஜெனீவாவில் முன்வைக்கப்படுவதற்காக பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவை, ஒரு தரப்பு சாதகமாகப் பார்க்க, இன்னொரு தரப்பு, பாதகமானதாகக் காட்டுகிறது.   தமிழர் தரப்புக்குள்ளேயே, இந்த விடயங்களில் ஒற்றுமையில்லாத நிலை தோன்றியிருக்கிறது.   ஜெனீவாக் கூட்டத்தொடரில், இம்முறை இலங்கைக்கு அழுத்தங்கள் குறையும் என்று தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா சில நாள்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறியதற்குக் காரணம், ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம், இரண்டு நிலைப்பாடுகளை முன்வைக்கவுள்ளது என்பது தான்.   எந்த நிலைப்பாட்டை அதிகாரபூர்வமானதாக எடுத்துக் கொள்வது என்ற குழப்பம், பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு ஏற்படும். அவ்வாறான நிலையில், இலங்கைக்குக் குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில், அழுத்தங்களைக் கொடுக்காத தீர்மானமே முன்வைக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.    அதுபோலவே, ஜெனீவா தீர்மானம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஆகிய விடயங்களில் தமிழர் தரப்பு, இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகளுடன் இருப்பதை, சர்வதேச சமூகம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுமே தவிர, தமிழர்களுக்குச் சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுக்காது.   ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரின் அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. கலப்பு நீதிமன்றத்தை அரசாங்கம் உருவாக்க வேண்டும், உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்கத் தவறினால், உலகளாவிய நியாயாதிக்கத்தின் அடிப்படையில் உறுப்பு நாடுகள் விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் வாய்ப்பை பரிசீலிக்க வேண்டும், இலங்கையில் ஐ.நாவின் கண்காணிப்புச் செயலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பன போன்ற பல யோசனைகளை அவர் முன்வைத்திருக்கிறார்.   இந்தப் பரிந்துரைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருக்கிறது. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் வரவேற்றிருக்கிறது. இன்னும் பல தமிழ்க் கட்சிகள் வரவேற்றுள்ளன. ஆனாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதை வரவேற்கவில்லை.   “பொறுப்புக்கூறல் விடயத்தில் 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை, இலங்கை அரசாங்கம், அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. இந்தநிலையில், ஐ.நா பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரை செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை அமைய வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவரது அறிக்கை அவ்வாறான பரிந்துரைகளைச் செய்யாதது எமக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது” என்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்திருந்தார்.   ஐ.நா பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைப்பதால் மாத்திரம், இந்த விவகாரத்துக்குத் தீர்வு கிடைத்து விடப் போகிறதா? அங்கு அது வெட்டுத் தீர்மானங்களில் சிக்கி விடாதா என்பது பற்றிய எந்த யோசனையுமின்றியே, இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.   இந்த விடயத்தில் மாத்திரமன்றி, புதிய தீர்மானம் தொடர்பான விடயத்திலும் தமிழர் தரப்பு பிளவுபட்டு நிற்கிறது.   முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில், காலக்கெடு, காலஅவகாசம், காலஅட்டவணை போன்ற எந்தச் சொற்களும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த மூன்று சொற்களையும் வைத்துக் கொண்டு, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.   தீர்மான வரைவின் படி, 30/ 1, 34/ 1 தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.   இதற்கமைய, இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா, அதன் முன்னேற்றங்கள் என்ன என்பது பற்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில், (2020 மார்ச்) ஓர் அறிக்கையையும் 46ஆவது கூட்டத்தொடரில், (2021 மார்ச்) விரிவான ஓர் அறிக்கையையும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்க வேண்டும்.   இதனைத் தான் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் என்று கூறப்படுகிறது.  நேரடியாக இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படுவது பற்றியோ, குறிப்பிட்ட எந்த காலக்கெடுவுக்குள் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றியோ தீர்மான வரைவில் எதுவும் கூறப்படவில்லை.   இந்தநிலையில் தான், காலவரம்பு ஒன்றைக் குறிப்பிட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் கோருகின்றன. கிட்டத்தட்ட எல்லாத் தமிழ் கட்சிகளுமே இந்த விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன.   அதாவது, ஜெனீவாவில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தவதற்கு காலக்கெடுவை விதிக்க வேண்டும். அது இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுப்பதாக இருக்கும்.   ஆனால், அந்தளவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய நிலையில், சர்வதேச சமூகம் குறிப்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.   அதேவேளை, இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என்று ஐந்து தமிழ்க் கட்சிகள், ஐ.நாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி மாத்திரம், இலங்கைக்கு மேலதிக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறது,   முன்னதாக, காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என்று மாவை சேனாதிராசா யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார். பின்னர், சுமந்திரன் அந்த நிலைப்பாட்டை அடியோடு மாற்றியிருக்கிறார்.   அவரது பார்வையில், 2021 ஆம் ஆண்டு வரை அளிக்கப்பட்டுள்ளது, இலங்கைக்கான காலஅவகாசம் அல்ல; ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற வேலையே அது என்று வாதிட்டிருக்கிறார்.   அதுமாத்திரமன்றி, 2021 மார்ச் வரை இலங்கை மீதான ஐ.நாவின் கண்காணிப்பு நீடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வாதத்தை முன்வைத்திருக்கிறார்.   ஐ.நாவின் கண்காணிப்பில் இலங்கை இருக்கப் போகிறது என்பதைத் தான் இந்த விடயத்தில் சாதகமான ஒன்றாகச் சுட்டிக்காட்ட முனைகிறார் சுமந்திரன்.   ஐ.நாவின் கண்காணிப்பில் இருந்தால் மாத்திரம் போதுமா, இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விடுமா? என்பது தான் தமிழர்களின் கேள்வி. ஏனென்றால், 2015ஆம் ஆண்டில் இருந்து இலங்கை அரசாங்கத்துக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் ஐ.நாவின் கண்காணிப்பில் தான் இருந்தது, அந்தக் காலத்தில் கூட, வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.    அப்படிப்பட்ட நிலையில், காலவரம்பு எதையும் நிர்ணயிக்காமல், வெறுமனே கண்காணிப்பு என்ற பெயரில் காலஅவகாசத்தைக் கொடுப்பதால் என்ன பயன் என்பது தான், சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்களின் கேள்வியாக இருக்கிறது.   ஐ.நாவும் சரி, சர்வதேச சமூகமும் சரி சில தெளிவான நிலைப்பாடுகளின் இருக்கின்றன. இலங்கைக்கு அதிக அழுத்தங்களைக் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளன. ஆனால், தமிழர் தரப்புத் தான், தமது எதிர்பார்ப்பு என்ன, நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பமடைந்து போயிருக்கிறது.  சாதாரண தமிழ் மக்களிடம், ஜெனீவா நகர்வுகள் குறித்து ஏமாற்றங்கள் உள்ளன. ஐ.நா தொடர்பாக, சர்வதேச சமூகம் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் தொடர்பாக அவர்களுக்கு நிறையவே அதிருப்திகளும் இருக்கின்றன.   தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் மீதோ, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைகளின் மீதோ நம்பிக்கையற்ற நிலை தான் உள்ளது.   இத்தகைய நிலையில், ஜெனீவா விவகாரத்தில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், இரண்டு பிரிவுகளாக முட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கின்றன.   ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அடுத்த வாரம், நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம், தமிழர் தரப்பின் விருப்பங்களைக் கருத்தில் கொண்டதாக இருக்குமா என்ற வலுவான கேள்விகள் உள்ள நிலையில் தான், இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்று தெரியாமல் முட்டிக் கொள்ளுகின்றன தமிழ்க் கட்சிகள்.    http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முட்டிக்-கொள்ளும்-தமிழ்க்-கட்சிகள்/91-230905
  • வெளிநாட்டிலேயே நம்மவருக்கு இன்னும் கூச்சம்.இதென்னடா உள்ளூரிலே இழுத்து பிடித்து இதழுடன் இதழ். பொலிசுக்கும் கஞ்சா கோஸ்டிக்கும் எப்பவுமே சரிவராதென்று நினைத்தேன். கொண்டு போய் சேர்த்த விதம் அருமை.
  • இப்போது அவன் பாவமென்கிறீர்கள். நாளைய தொடரில் யார் பாவமென்பது தெரியும்.
  • மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி.வாழ்த்துக்கள்.