• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

விசுகு

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது

Recommended Posts

என்னை குழப்புகின்றீர்கள் கிருபன் :(:(:( .நான் சாத்திரிக்குப்போட்ட பின்னூட்டத்தில் இடக்குப் பண்ணுகின்றீர்கள். எங்கள் கண்முன்னே நடந்தகொலைகளுக்கு விளக்கம் கேட்கும் பொழுது சாத்திரி சூழ்நிலைக்கைதியாகின்றார். நீங்கள் என்னை "ஏன்" களுக்கு இமயமலை போகச்சொல்கன்றீர்கள். இவைகள் உங்களைப் பாதித்ததோ எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு நிறையவே உண்டு.

குழப்பமுனையவில்லை. போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிந்தபோது எத்தனையாயிரம் கேள்விகள் வந்தன/வருகின்றன. இவற்றிற்கெல்லாம் சரியான பதில் கிடைக்காது என்பதால் கேள்விகள் கேட்டுப் பிரயோசனமில்லை என்றே நினைக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

சரி பெயரை மட்டும் சொல்கிறேன். அன்ரனி அரியாலை மிகுதியை தேடிக்கண்டு பிடியுங்கள். ^_^

நன்றி சாத்திரி உங்கள் பதிலுக்கு. பதில் நான் நன்கு அறிந்தவை தான்..அவரை பற்றி கவிதையும் கதையும் யாழிலே மட்டுமல்ல ஒரு வலைப்பூவில் படத்துடன் கூட பார்த்திருக்கிறேன்..

சில சமயங்களில் நான் மனசுக்குள்ளே சிரிப்பதுண்டு.

Share this post


Link to post
Share on other sites

இங்கு அமிர்தலிங்கம் அவர்களின் கொலை பற்றி எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். அது வேறு ஒரு திரியில் பேசப்படுவதால் அதை விடுத்து அவருடன் கொல்லப்பட்ட யோகேஸ்வரனது கொலை பற்றி எழுதலாம் என முயல்கின்றேன்.

அவரது அரசியல் பிரவேசம் முதற்கொண்டு அவர் இளைஞராக இருந்ததால் இளைஞர்களுக்கு அதாவது பெடியளுக்கு சார்பானவராகவே மக்களால் பார்க்கப்பட்டார். அத்துடன் இடைக்கிடை இருபக்கத்துக்குமான இழுபறிக்குள்ளும் சிக்கிக்கொண்டார். ஆரம்ப காலத்தில் இரு பகுதியிடையேயும் மிகவும் செல்வாக்கு பெற்று விளங்கிய இவர் பிற்காலத்தில் இவரது சில தனிப்பட்ட நடவடிக்கைகளால் விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தார். இவர் மீதான துப்பாக்கி சூடு தற்செயலானது எனத்தான் அந்த கால பகுதியில் பேசப்பட்டது. அத்துடன் இவர்மீதும் சில குற்றச்சாட்டுக்கள்இருந்ததும் பரவலாகப்பேசப்பட்டது. இது பற்றி இவருடன் பழகியவர்கள் அல்லது இவர் மேலான தாக்குதலுக்கு உண்மையான காரணம் தெரிந்தவர்கள் எழுதினால் எனக்கும் சில விளக்கங்கள் கிடைக்கும்.

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து போகட்டும்....

நீங்களெல்லாம் கதைக்கும் அந்தக்காலத்தில் இப்பொழுது அரசியல் கட்சிகளிலில் இருக்கும்புளொட் : த.சித்தார்த்தன்

சிவாஜிலிங்கம் (ரெலோ, இப்போது இல்லையாக்கும்)

டக்ளஸ் தேவானந்தா

சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் என்னென்ன நிலைகளில் இருந்தார்கள் என்று தெரியுமா ? தெரிந்தால் அறியத் தாருங்களன்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி தர்மராஜ்

நிச்சயம் தொடரும்

பல விடயங்கள் நாங்கள் பேசவேண்டியிருக்கு.

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து போகட்டும்....

நீங்களெல்லாம் கதைக்கும் அந்தக்காலத்தில் இப்பொழுது அரசியல் கட்சிகளிலில் இருக்கும்புளொட் : த.சித்தார்த்தன்

சிவாஜிலிங்கம் (ரெலோ, இப்போது இல்லையாக்கும்)

டக்ளஸ் தேவானந்தா

சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் என்னென்ன நிலைகளில் இருந்தார்கள் என்று தெரியுமா ? தெரிந்தால் அறியத் தாருங்களன்.

ஆமாம் விசுகு அண்ணை..நானும் இவர்களைப்பற்றிக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்..இவர்களுடன் சிறீகாந்தாவையும்சேர்த்து சொல்லுங்கள்...

Share this post


Link to post
Share on other sites

டக்ளஸ் தேவானந்தா - நினைக்கிறான் யாழ் மாவட்ட பொறுப்பாளர் ஆக இருத்தவன் (1985-87). இவனும் Thileepan அண்ணாவும் ஒரு பிரச்சனைய தீர்க்க Chulipuran (PLOT ன் கோட்டை :lol::lol::lol: ) வந்தபோது கிட்ட நின்று பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது, அப்ப போட்டு தள்ளி இருக்கணும் இவனை .

LTTE ஆறு பேரை கொலை செய்து கை தெரிய தாட்ட (in Thiruvadinilai Beach, Chulipuram) PLOT பற்றி யாரும் எழுத முடியுமா, அப்ப நான் சின்னபிள்ளை

Share this post


Link to post
Share on other sites

இவர்களில் அநேகமானவர்கள் திடீர் தலைவர்கள் ஆனவர்கள். அத்துடன் அதற்காக பல தில்லுமுல்லுகளையும் செய்தவர்கள்.

அவற்றைப்பார்க்க முன் சித்தார்த்தனின் அப்பா பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் கொலை பற்றி பார்க்கவேண்டும். அத்துடன் பாராளுமன்ற ஒறுப்பினர் ஆலாலசுந்தரம். இவர்கள் இருவரது இழப்புக்கள் இயக்கங்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தன. அந்தநேரம் நான் வெளிநாட்டிலிருந்தேன். நான் அறிந்தவற்றை எழுதுவதற்கு முன் அது பற்றிய தகவல்களை யாராவது தெரிந்தவர்கள் நேரில் இதை சந்தித்தவர்கள் தந்தால் பெரும் உதவியாக இருக்கும்.தொடரும்....

Share this post


Link to post
Share on other sites

ம்.... தொடருங்கள் விசுகு அண்ணா.

Share this post


Link to post
Share on other sites

நன்றி 

கரன்

 

தொடரலாம்

தோல்வி  என்பதை  வைத்துக்கொண்டு

இனி  வரும் லாபங்களை  கருத்தில் இருத்தி எழுதப்படும்  கதைகளைப்படித்தபோது

இதைத்தொடரணும்  என  நினைத்தேன்

 

நான் சந்தித்தவற்றை

கண்டவற்றை

நம்பிக்கையான  இடங்களிலிருந்து கேள்விப்பட்டவற்றை மட்டுமே  எழுதுகின்றேன்

 

புலிகள் மட்டுமன்று  எந்த  இயக்கமாக  இருந்தாலும்

எந்த தலைவராக   இருந்தாலும்

வீண்பழி  போடமாட்டேன்

அதேநேரம்

மற்றவர்களும் எழுதலாம்

அது எந்த இயக்கம்

எந்த தலைமை  என்றில்லை

 

புலிகள் உரிமை  கோராதவிடயங்கள்

மற்றும் 

இறுதிக்கட்ட  நிகழ்வுகள் பற்றியோ

அல்லது

பிரான்சிலிருப்பதால்

புலிகளுடன் இருந்ததால்

அவர்களுடைய  எல்லாவிடயமும் எல்லோருக்கும் தெரியும் என்பதாகவோ  என்னால் எழுதமுடியாது

அப்படி எவருக்கும் தெரியாது

தெரியவும் கூடாது....

 

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் ..நான் தமிழ் நாட்டில் இருந்து இப்பொழுது தான் இதனை படிக்க ஆரம்பித்தேன் ...இங்கு நாங்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளை பற்றி செய்தி தாள்களில் வந்தவைகள்,இணையத்தில் படிதவைகளையும் பற்றி நண்பர்களிடம் பேசிகொண்டிருப்போம் ...இங்கு உள்ள  சில அரசியல்வாதிகள்  தடை செய்ய பட்ட அமைப்புகளை பற்றி மக்களிடம் தவறாகா கொண்டு செல்கிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது ...அந்த அமைப்புகளில் இருந்து உதவி கோரப்படும் பொழுது இங்குள்ள மக்கள் பலருக்கும் அதனை பற்றி ஒன்றுமே தெரியாது என்பதே நிஜம .இப்பொழுது உள்ள தலைமுறைகளுக்கும் ஒன்றும் தெரியவில்லை ,புரியவில்லை ...இதனை பற்றி கொஞ்சம் தெளிவாக சொன்னால் எங்களுக்கும் புரியும் ...அமைப்புகளை பற்றி,அதனின் சட்ட திட்டம் ,லட்சியம் ,நிர்வாகம் பற்றி ....

Share this post


Link to post
Share on other sites