Jump to content

கிட்டண்ணா!


Recommended Posts

வரிப்புலி ஊர்வலம்!

-----------------

ஆடிவரும் கடலையே - சொல்லு

எங்கள் தேச ஆளூமை கொண்டவனை -எங்கே

ஒளித்து வைத்தாய்?

காற்றே வா மெல்ல எம் கதவு திற-

பனியிலும் மழையிலும் - சுட்டெரிக்கும் வெய்யிலிலும்

சுதந்திரமே பெரிசென்று சுழன்று திரிந்த சுந்தரனை-

எங்காவது பார்த்தீயா? சொல்லி போ!

சிங்களத்தின் மடியில் ஒரு இடியாய் வெடித்தவன் -

சிறுத்தை இனத்தின் தலையில் மணிமுடியாய் உயிர்த்தவன்

படை நடத்தும் வீரர்கெல்லாம் ஒரு பாடமாய் இருந்தவன்

அவனை வெல்வதற்கு யார்க்கும் ஒரு வழியுமில்லை-

விடை சொல்லாமல் போனானே அதுதான் -

ஏனென்று இன்னும் தெரியவில்லை!

எம்மை அடித்தவனை அடியோடு எரித்த பெரு நெருப்பு-

எங்கள் அண்ணன் அணைத்து வளர்த்த அக்கினி குஞ்சு-

கிட்டண்ணா - தமிழன் இழந்துவிட்ட இன்னொரு சகாப்தம்!

கொஞ்ச துப்பாக்கிகளுடன் நாமிருந்த நாளில் பகையை-

குலை நடுங்க வைத்தவனே-

வந்து பார் இப்போ - வரிசை வரிசையாய் வரி புலி ஊர்வலம்!

வாயேன் ..வந்து படை நடத்து...

வாசலெல்லாம் நிறைகுடம் வைத்து உன் பாதம் கழுவுவோம்!

Link to comment
Share on other sites

உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது வர்ணன். வாழ்த்துக்கள் மேலும் தொடர்ந்து எழுதுக

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருக்கிறது :lol:

காற்றே வா மெல்ல எம் கதவு திற-

பனியிலும் மழையிலும் - சுட்டெரிக்கும் வெய்யிலிலும்

சுதந்திரமே பெரிசென்று சுழன்று திரிந்த சுந்தரனை-

எங்காவது பார்த்தீயா? சொல்லி போ!

:roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

கொஞ்ச துப்பாக்கிகளுடன் நாமிருந்த நாளில் பகையை-

குலை நடுங்க வைத்தவனே-

வந்து பார் இப்போ - வரிசை வரிசையாய் வரி புலி ஊர்வலம்!

வாயேன் ..வந்து படை நடத்து...

வாசலெல்லாம் நிறைகுடம் வைத்து உன் பாதம் கழுவுவோம்!

_________________

கிட்டாண்ணாக்காக நீங்கள் வடித்த கவிதை நல்லாயிருக்கு வர்ணன். தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

கொஞ்ச துப்பாக்கிகளுடன் நாமிருந்த நாளில் பகையை-

குலை நடுங்க வைத்தவனே-

வந்து பார் இப்போ - வரிசை வரிசையாய் வரி புலி ஊர்வலம்!

வாயேன் ..வந்து படை நடத்து...

வாசலெல்லாம் நிறைகுடம் வைத்து உன் பாதம் கழுவுவோம்!

_________________

கிட்டாண்ணாக்கா நீங்கள் வடித்த கவிதை நல்லாயிருக்கு வர்ணன். தொடர்ந்து எழுதுங்கள்

எனக்கு ஒன்றும் புரியவில்லை என்ன இது :oops: :lol:

Link to comment
Share on other sites

எனக்கு ஒன்றும் புரியவில்லை என்ன இது :oops: :lol:

இப்போ புரியும் என்று நினைக்கின்றேன். :lol::lol:

Link to comment
Share on other sites

எனக்கு ஒன்றும் புரியவில்லை என்ன இது :oops: :lol:

கிட்டண்ணா தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவர். தமிழீழ விடுதலைப்புலிகளில் வீரமரணமடைந்த முதற் கேணல். தலைவருக்குத் துணையாக இருந்தவர். 90 இற்கு முற்பட்ட காலத்தில் புலிகள் இயக்கத்தின் மிகக் குறைந்த ஆட்பலத்துடனும் ஆயுதப்பலத்துடனும் சிங்கள இராணுவத்தை முகாம்களில் முடக்கி யாழ்மாவட்டத்தில் புலிகளின் ஆதிக்கத்தை நிலை நாட்டியவர். மக்களை இராணுவத்தின் பிடியில் இருந்து மீட்டமாவீரன். தேசியத்தலைவரின் கரங்களில் ஒன்றுபோல் இருந்தவர். வெளிநாடொன்றிலிருந்து சமாதானப் பேச்சு வார்த்தைக்கான ஏற்பாட்டுடன் தமிழீழம் திரும்பிய போது சர்வதேசக்கடலில் வைத்து இந்தியப்படைகளால் மறிக்கப்பட்டு கொன்றழிக்கப்பட்டார். அவரின் நினைவாக அக்கவி படைக்கப்பட்டிருந்தது.

அவர் பற்றிய மேலதிக ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் தயங்காமல் கேளுங்கள் தெரிந்தவர்கள் உங்களிற்கு உதவுவார்கள்.

Link to comment
Share on other sites

கிட்டண்ணா தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவர்,

அவரின் நினைவாக அக்கவி படைக்கப்பட்டிருந்தது......

இப்போது.. கொஞ்ஜம் புரிந்தது என்று நினைக்கின்றேன்.. நன்றி அருவி அவர்களே :(

ராமா [RaMa]-------- புரிந்தது :lol::(

Link to comment
Share on other sites

கிட்டு மாமவை பற்றி "காலத்தின் பதிவுகள்" என்ற புத்தகத்தை படித்தீர்களா??

கவிதை நன்றாக இருக்கிறது வர்ணன். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தூயா.

"கேணல் கிட்டு:ஒரு காலத்தின் பதிவு";அது அருமையான வரலாற்று ஆவணப்பதிவு.

கிட்டண்ணை தொடர்பான

பன்முக ஆற்றல்களை,

பன்முகப் பார்வைகள் மூலம் தரிசிக்கலாம்....

பல்கலைக்கழக சுற்றுலாவின்போது வன்னி "அறிவமுது" பொத்தகசாலையில் வாங்கியது;பின்னர் நண்பர் ஒருவர் மூலம் "காணாமல் போனது"....

வசதியுள்ளவர்கள் இணையம் மூலம் வாங்கலாம் என எண்ணுகிறேன்;நமக்கு இப்ப அது இயாலாது...காலம் கிட்டும் என எண்ணுகிறேன்...

Link to comment
Share on other sites

என்னிடம் அந்த புத்தகம் இருக்கு. ஆனால் இணையத்தில் அதை இணைக்க (பிரசுரிக்க) அனுபதி உண்டா இல்லையா என தெரியவில்லை.

Link to comment
Share on other sites

கிட்டு அண்ணாவே

உங்கள் வீரம்

சிட்டு அண்ணா பாடி

கேட்டதுண்டு.

தமிழன் நெஞ்சங்கள்

விட்டு உங்கள் நினைவுகள்

என்றும்

அகல்வதில்லை.

தமிழனை கொன்று

தின்ற கழுகுகளை

சுட்டு

காவியத் தலைவனின்

கரத்தினை

பலமூட்டி.

எதிரிக்கு

திகிலூட்டினாய்.

புலம் சென்ற பொழுதும்

புரட்சிப் பூபாளம்

பாடும் உன் குரலில்

உறுமலே கேட்டது.

ஈழக்காவியம்

படைத்த நீங்கள்

மாந்தரின்

அவலத்தை

ஓவியமாய்

உரமூட்டி தந்தீர்கள்.

பாவியர்கள்

பயணத்தின் போது

காத்திருந்து கழுத்தறுத்தார்

என கேட்டு

இளையோர் நாம்

இடிந்து விட்டோம்.

உங்கள்

ஈழ ஓவியம்

ஓர்நாள்

பெரும் காவியமாகும்.

அதுவரை உங்கள்

இலட்சியப்பாதையில்

இளையோர் நாம்.

Link to comment
Share on other sites

இருவிழி கிட்டண்ணாவுக்காக வடித்த கவிதை அருமையாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது தூயா.

உங்கட சந்தேகம் சரியானதுதான்....

முழுதாகப் போடாமல்,

சில பக்கங்களை/சிலரின் கருதுக்களை

நினைவுக்குறிப்பாகப் பகிர்வதில் தப்பில்லையே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.