-
Tell a friend
-
Topics
-
Posts
-
By balakumar2 · பதியப்பட்டது
1991ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ப்பட்ட ஆகாய கடல் வெளிச் சமருக்குப் பின் பல படையணிகள் மற்றும் துறைசார் அணிகள் உருவாக்கப்பட்டன .அதில் ஒன்று தான் கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக மாற்றம் பெற்றது.கடற்புலிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டின் (1991) பிற்பகுதியில் கிளாலிக் கடல்நீரேரியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நீருந்துவிசைப்படகு மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிடப்பட்டது . அக்காலப்பகுதியில்தான் கடற்புலிகள் வளர்ந்துகொண்டிருந்தநேரம்.அந்த நேரத்தில் கடற்புலிகளிடம் ஆயுதபலமோ ஆட்பலமோ படகுகளின் பலமோ போதியளவு இருக்கவில்லை. இருந்தாலும் பிருந்தன்மாஸ்ரின் ராடர்மூலமான வேவுத்தகவல்களின் அடிப்படையில் மேஐர் மூர்த்திமாஸ்ரரின் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கடற்கண்ணிவெடிகளைப் பயண்படுத்தி ஒருதாக்குதல் முயற்சி எடுக்கப்பட்டது.இம்முயற்சியில் கடற்புலிகளின் கடற்தாக்குதற் தளபதி லெப்.கேணல் சாள்ஸ் அவர்களும் தளபதி லெப் கேணல் கங்கைஅமரன் அவர்களும் மேஐர் வசந்தன் அவர்கள் உள்ளிட்டவர்கள் கண்ணிவெடிகளைக் படகுகள் மூலம் எடுத்துச் சென்று பிருந்தன்மாஸ்ரரின் ராடர்மூலக்கண்காணிப்பில் வைத்தனர்.1991ம் ஆண்டு கடைசிப்பகுதியில் அக்கடற்கண்ணிவெடிகளில் சிக்கி நீருந்துவிசைப்படகு வெடித்து சிதறிமூழ்கியது .ஆனால் மூழ்கிய அப்படகிலிருந்து ஆயுதங்கள் மற்றும் பொருட்களை எவ்வாறு எடுப்பது.தலைவர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையின் இந்தியாவில் ஆறாம் பயிற்சிமுகாமில் பயிற்சி எடுத்தவர்களில் ஒருதொகுதியினர் கடற்பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டனர். இன்னும் சிலபோராளிகள் நீரடிநீச்சல் பயிற்சிக்காக உள்வாங்கப்பட்டனர். அதில் ஒருவர்தான் தளபதி கங்கைஅமரன் அவர்கள்.இவரும் நீரடிநீச்சல் பயிற்சி எடுத்தபடியால் மூழ்கிய நீருந்துவிசைப்படகிலிருந்த ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களும் சகபோராளிகளின் துணையுடன் மீட்கப்பட்டு கடற்புலிகளின் அடுத்தகட்டவளர்ச்சிக்கு இட்டுச்சென்றது. இத் தாக்குதலில் தான் முதன்முதலாக சீனா தயாரிப்பான இலகுவாக பயண்படுத்த மற்றும் எடுத்துச் செல்லக்கூடிய பதினெட்டுக்கிலோக்கிராம் நிறையுடைய ஐம்பது கலிபர்( 50 cal ரக) துப்பாக்கிகள் உட்பட பெருமளவான புதிய கனரக மற்றும் இலகுரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகளி்ல் மூர்த்திமாஸ்ரருக்கு உதவியாக கப்டன் மைக்கல் அவர்களும் பிருந்தன்மாஸ்ராருக்கு உதவியாக மேஐர் தீபன் அவர்கள் உள்ளிட்ட போராளிகளின் பங்கும் மிகவும் அளப்பரியது. இந்த நேரத்தில் தான் தலைவர் அவர்களால் நீரடிநீச்சல் பிரிவின் முக்கியத்துவம் பற்றி துணைத் தளபதி பிருந்தன்மாஸ்ரர் தளபதி கங்கைஅமரன் அவர்களுடனும் சிறப்புத்தளபதி சூசை அவர்களுக்கும் எடுத்துரைத்த தலைவர் அவர்கள் தளபதி கங்கைஅமரன் அவர்களை மேலதிகமாக நீரடிநீச்சல் பிரிவை உருவாக்கும்படி கூறினார்.அதற்கமைவாக தளபதி கங்கைஅமரன் அவர்களுடன் இந்தியாவில் நீரடிநீச்சல் பயிற்சி பெற்று 30.10.1986 அன்று காரைநகர் கடற்படைத்தளத்தில் தரித்து நின்ற கடற்படைகலங்கள்மீதான நீரடித் தாக்குதல் முயற்சியின்போது வீரச்சாவடைந்த சுலோஐன் அவர்கள் நினைவாக சுலோஐன் நீரடிநீச்சல் பிரிவு உருவாக்கப்பட்டது. சுலோஐன் நீரடிநீச்சல் பிரிவானது இரண்டாம் கட்டஈழப்போரில் பெரும் பங்காற்றியது மட்டுமல்லாமல் சுலோஐன் நீரடிநீச்சல்பிரிவில் செயற்பட்ட மகளீரனி 16.08.1994 அன்று காங்கேசன்துறை துறைமுக கடற்பரப்பில் கடற்படைக்கலங்களை மூழ்கடித்து வீரச்சாவடைந்த கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணியின் நினைவாக மகளீரனி அங்கையற்கண்ணி நீரடிச்நீச்சல்பிரிவாக மாற்றம்பெற்றது. மூன்றாம் கட்ட ஈழப்போரின் முதலாவது தாக்குதலைச் செய்ததும் இப்படையணியே. இந்தவகையில் இவர்களைப் போல அளவிலும் ஆற்றலிலும் , இராணுவ வளங்கள் குறைவாகவே உள்ள நிலையிலும் கூட , கடற்புலிகளின் சிறப்பு பிரிவான ” சிலோஜன் நீரடி நீச்சல் படையணியும் ” – ” அங்க்கையற்க்கண்ணி நீரடி நீச்சல் படையணியும் ” தமது எதிரிக் கடற்படையான சிறீலங்காக் கடற்படைக்கு முகம் கொடுத்து , இன்று வெற்றிவாகை சூடியுள்ளன. சிறீலங்காக் கடற்படையிலும் சூழியோடிகள் பிரிவொன்று நிறுவப்பட்டு , இந்தியாவில் உள்ள கொச்சின் , வெந்துருகி ஆகிய இடங்களில் பயிற்சி பெற்ற , 75 பேருக்குக் குறையாத ஆள்தொகையைக் கொண்டுள்ளபோதும் , கடற்புலிகளின் விசேட பிரிவுகளிடமிருந்து தப்புதல் என்பது அதிர்ஷ்டத்துக்குரிய ஒன்றாகும். தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றின் சுவடுகளோடு "ராஜ் ஈழம்" "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" --> Source: FB -
பாவம் பிரபாகரனும் அவன் பிள்ளைகளும். இந்த நன்றியில்லாத தமிழனைவிட சிங்களவன் எவ்வளவோ மேல். 😡
-
என்னாது ?தொடருமா?இன்னும். தொடங்கவில்லை...முருக்கு சுட்டாரோ யார் கண்டார்..சும்மா திரியைக் கொழுத்தி போட்டுள்ளார் நாங்கள் செலவு செய்து எண்ணை உத்துகிறோம். அது தன் பட்டில் எரிகிறது. படங்களும் இணைக்கவில்லை. முத்திச்சுட்ட முருக்குப்படத்தை என்றாலுமிணைத்திருக்கலாம்..😍😍😍
-
வணக்கம், வரணியான்..! தங்கள் வரவு நல் வரவாகட்டும்..!.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.