Jump to content

யாழ் கருத்துக்களத்தினை நான் அழிப்பேன்.


Recommended Posts

என்னை அருவா தூக்கிப்பயங்கரவாத செயல்களை செய்யும்படி தூண்டுவது நீர்தான்....முதலில் உம்மைத்தான் புடிச்சு உள்ளை போடவேணும்..உமது கருத்துக்களைப்பார்க்கும் போது நீர் இன்னமும் பாயிலதான் ஒண்ணுக்கடிக்கிறீர் போல...
:lol::lol::lol:
Link to comment
Share on other sites

  • Replies 96
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைக்கு ஒரு பச்சசை :)

நானும் தான் மாமாக்கு ஒண்டு குத்தின்னான். :)

Link to comment
Share on other sites

கீரி பாபா உங்களோட அரிய கண்டு பிடிப்புகள் இன்பத்தமிழ் ஒலியில எடுத்து விடலாமே? பிரபா அண்ணா கேட்க்க ஆவலா இருக்கிறாராம்...

Link to comment
Share on other sites

ராபஸ்டன்,

நீங்கள் பொறியியல்துறையில் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளர் என்று நினைக்கிறேன். ( கண்டு பிடிப்பாளர் என்ற பதத்தினை மாற்றி, பல புதிய பொருளகளை வடிவமைத்து விற்பனைக்கு விடவிருக்கிறேன். என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு சொந்த நிறுவனத்தினூடு பல நிறுவனங்களுக்கு பல வடிவமைப்புகளை செய்ய உதவி செய்கிறேன் என்றும் கொள்ளலாம். கண்டு பிடிப்பு என்பது இல்லாதது ஒன்றை இருப்பது என்று சொல்லுவது. ஆனால் நான் செய்வதோ, இருப்பதினை மேலும் சொப்கிஸ்டிகேட்டாக செய்து ஒரு வித்தியாசமான கன்செப்ப்டில் மீண்டும் அதை வெளியிடும் ஒரு செயலை. இது உண்மையானால்...

இந்த ஒரு காட்சியை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் உங்களின் ஒரு கண்டுபிடிப்பை பல்லின மக்கள், விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு அவையில் அறிமுகப்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது கேள்வி நேரத்தில், உங்கள் கண்டுபிடிப்பு ஒரு சுற்றுச் சூழலை மாசுபடுத்தக்கூடியதா என்று கேட்கிறார்கள். நீங்கள் இல்லவே இல்லை என்று அடித்துக் கூறுகிறீர்கள்..! இதைப்பற்றி மேலும் விவாதிக்கிறார்கள். நீங்கள் உங்கள் கூற்றில் உறுதியாக நிற்கிறீர்கள்.

இப்போது சில மாதங்கள் கழிந்துவிட்டன. உங்கள் தயாரிப்பை மீள் பரிசோதனைக்கு உட்படுத்திய நீங்கள் ஆகா, இதில உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கவனிக்கத் தவறிவிட்டோமே என்று கண்டறிகிறீர்கள். இதனால் கலந்துகொண்ட முக்கியமான அறிவியலாளர்களைத் தொடர்புகொண்டு, உங்கள் தயாரிப்பின் கோளாறுகளை எடுத்துச் சொல்கிறீர்கள்.

இப்போது உங்களைப் பற்றி எத்தகைய எண்ணம் அவர்களிடத்தில் இருக்கும்?

இதையே சிறிது மாற்றிச் சிந்தித்தீர்களாயின், புலிகளை நீங்கள் ஒரு காலத்தில் ஆதரித்திருக்கிறீர்கள். உங்கள் கூற்றுக்களிலிருந்தே அதை அறிய முடிகிறது. இன்று நீங்கள் வசைபாடுகிறீர்கள். ஆகவே படிக்கும் வாசகர்களுக்கு உங்களைப் பற்றி எத்தகைய எண்ணங்கள் தோன்றும்?

நீங்கள் புலிகளை முன்பு ஆதரித்ததால் பல இளைஞர்கள் யுவதிகளின் அகால மரணங்களுக்கு மறைமுகக் காரணியாகிவிட்டீர்கள் (விcஅரிஒஉச்ல்ய் ரெச்பொன்சிப்லெ) என்று உங்களைக் குற்றம்சாட்டலாமா?

ஆகவே எந்த விடயத்திலுமே ஒரு முடிவை இலகுவில் எடுத்துவிடக் கூடாது. அப்படி எடுத்துவிட்டால் அதன்வழி ஒழுகவேண்டும் காலம் முழுவதும். அவ்வாறு வாழ்வில் நடைபோடுபவர்கள் பெரியார்கள் எனப் போற்றப்படுவர். எடுத்த முடிவு பிழையெனக் கருதி எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி விடுபவர் சாதாரண மனிதர் (மெரெ மொர்டல்) எனப்படுவர்.

நிலைமாறித் தடுமாறி எதிர்முகாம் செல்பவர் மாற்றுக்கருத்து மாணிக்கம் என அழைக்கப்பட்டு சாதாரண மனிதனுக்கும் கீழான நிலையை அடையப் பெறுவர்..! நீங்கள் பெரியவர் ஆகவேண்டுமா இல்லை சாதாரண மனிதனுக்கும் கீழாக வாழ்ந்து மடிய வேண்டுமா என்பதை நீங்கள்தான் சிந்திக்க வேண்டும்.

அய்யன் வள்ளுவனின் கூற்றிலிருந்து..

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு

மேற்கூறியவற்றை மனதில் கொண்டு ஈழத்தமிழருக்கான தாயகம், தேசியம், தன்னாட்சி நோக்கங்களை மனதில் இருத்தி, முன்போல் செயற்பட்டு விடிவை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுக்கிறேன். அப்போது யாழ்கள வாசலும் உங்களுக்காகத் திறக்கும்.

இசைக்கலைஞன் ஆனைக்கும் அடிசறுக்க்கும் என்பது போல என்னை திடுக்கிடவைத்த சிந்திக்கவைத்த ஒரு ஆராட்சிகுறிய ஒரு கட்டுறை. இப்படியான தாக்குதல்களையே அந்தந்த காலங்களில் நாம் ஈழதமிழர்கள் கடப்பிடித்திருக்கவேண்டும். கடைப்பிடிக்கப்படவில்லை. இப்போது பாருங்கள், இந்த அரிவாளுதூக்கியவர் என்னை வெட்டிப்போட்டுவிட்டு,எனக்கு தமிழின துரோகி என்று சொலியிருந்தால். ஒரு தமிழ் உயிர் பறிக்கப்பட்டு, எம் தமிழ்ர்களின் பலம் மேலும் ஒன்றாக குறைக்கப்பட்டிருக்கும். அதை விடுத்து, நீங்கள் கொடுத்த சிந்திக்கவைத்த இந்த தாக்குதல், வீரியம் கூடியதும் வினைத்திறனைக்கொண்டது. இதனால் அழிக்கப்படவேண்டிய ஒரு மரம் நிழல் தரும் பரமாக மாற்றப்பட்டிருக்கிறது. உங்கள் நடுநிலைமையான சேவை, யாழின் மீது இருந்த என் கோபத்தினை இல்லாமல் செய்துவிட்டிருக்கிறது என்பதை நீங்கள் பெருமையாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு விவாதத்தில் வென்றிருக்கிறீர்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். சபாஸ் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

இசைகலைஞன், கண்டு பிடிப்புகள் என்பதன் கீழ், இப்போது நீங்கள் என்னை அப்ரோச் பண்னிய பாணியே, தமிழர்களை மனம் மாற்றும் ஒரு கருவி. அந்த ஆயுதம் அணுக்குண்டைவிட அதிக பாதிப்பினை எனக்கு தந்திருக்கிறது என் உள்ளே. ஆகவே அந்த அப்ரோச்சிலேயே தமிழர்களில் வித்தியாசமான சிந்தனைக்கருத்துககருத்துக்களில் வித்தியாசமான பாதைகளில், தமக்கு சரியெண்டு செல்லும் மனிதர்களை, ஒரே வழியில் கொண்டுவரமுடியும். என் பாதை பிழை என்று எனக்கு தெரிந்தாலும், என் ஈகோ அதை இல்லையெண்டு சொல்ல ஒருபோதும் விட்டதில்லை. ஆக ஒரு சின்ன தமிழ்சொற்களைக்கோர்த்த உங்கள் இந்த திரி, ஒரு பெரிய பாதிப்பினைத்தந்திருக்கிறது. இதகைய ஆயுதத்தினையே இன்றைய நிலையில் ஒவ்வொருதமிழர்களும் எதிர்த்திசையில் நிற்க்கும் தமிழர்களை நோக்கி பாவிக்கவெண்டும் என்பதை நாம் ஒரு திரியினூடு கண்டுபிடித்திருக்கிறீர்கள். அதை மிகவும் வெற்றிகரமாகவே பாவித்து வெற்றியும் பெற்றுள்ளீர்கள்.இதனால் ஒரு கோபப்பட சிங்கிளா வந்த சிங்கம் ஒன்று, கோபம் அடக்கப்பட்ட சிங்கமாக, சிங்கிளாகவே மீண்டும் வந்த வழியில் திரும்பிச்செல்லுகிறது. இங்கே பன்னிகள், பல்லிகள் என்று என்னால் சொல்லப்பட்ட யாழ் கள உறுப்பினர்களையும் சிந்திக்கவைத்திருக்கிறேன் என் நடவடிக்கையினால்!!.

நீங்கள் தமிழர்களுக்கு இன்று தேவையான ஒரு மருந்தை இங்கே உபயோகித்திருக்கிறீர்கள் ஆகவே நீங்களே இங்கே ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளர் என்று நினைக்கிறேன். அதை உருவாக்க நான் ஒரு கருவியாக மட்டுமே இருந்தேன் இங்கே. முள்ளை முள்ளாலேயே எடுக்கவேண்டும் என்பது போல ஒரு கருத்தை, இன்னுமொரு கருத்தால் வென்று வெற்றிபெற்ற உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

"The engineer's first problem in any design situation is to discover what the problem really is.” ...

Link to comment
Share on other sites

சுண்டல், நானும் இன்பத்தமிழ் ஒலியில் என் கருத்தினைச்சொல்ல எத்தனையோ தடவை முயன்றிருக்கிறேன். என் பாணியினை கண்டு எனக்கு அவர்கள் அனுமதியினையே தந்திருக்கமாட்டார்கள். ஆகவே யாழ்களம் மட்டுமெ எனக்கு என் வேலையினை செய்ய உதவி செய்து தந்தது. இசைக்கலைஞனின் இந்த அற்புத திறமையினை அவர் நிச்சயமாக தெரிந்துகொள்ளவேண்டும். ஆகவே நான் பதித்த இந்த கடை மடலை அவரையும் பார்க்கும் படி நீங்கள் சொல்லி ஒரு தமிழரின் கண்டுபிடிப்பினை அவரையும் பளோ பண்ண செய்யலாம்.சும்மா எப்போதும் தமிழின எதிரிகள், துரோகிகள் என்று எத்த்னைகாலம்தான் நம் சொல்லிக்கொண்டு இருக்கப்போகின்றோம். தமிழர்கள் ஒரே வழியில் வருவது எப்போது என்று ஒரு கணக்கு போட்டு வேலைசெய்யவேண்டாமா? ஆகவே அவர் நிச்சயமாக படிக்கவேண்டிய திரியிது.

இசைகலைஞன், கண்டு பிடிப்புகள் என்பதன் கீழ், இப்போது நீங்கள் என்னை அப்ரோச் பண்னிய பாணியே, தமிழர்களை மனம் மாற்றும் ஒரு கருவி. அந்த ஆயுதம் அணுக்குண்டைவிட அதிக பாதிப்பினை எனக்கு தந்திருக்கிறது என் உள்ளே. ஆகவே அந்த அப்ரோச்சிலேயே தமிழர்களில் வித்தியாசமான சிந்தனைக்கருத்துககருத்துக்களில் வித்தியாசமான பாதைகளில், தமக்கு சரியெண்டு செல்லும் மனிதர்களை, ஒரே வழியில் கொண்டுவரமுடியும். என் பாதை பிழை என்று எனக்கு தெரிந்தாலும், என் ஈகோ அதை இல்லையெண்டு சொல்ல ஒருபோதும் விட்டதில்லை. ஆக ஒரு சின்ன தமிழ்சொற்களைக்கோர்த்த உங்கள் இந்த திரி, ஒரு பெரிய பாதிப்பினைத்தந்திருக்கிறது. இதகைய ஆயுதத்தினையே இன்றைய நிலையில் ஒவ்வொருதமிழர்களும் எதிர்த்திசையில் நிற்க்கும் தமிழர்களை நோக்கி பாவிக்கவெண்டும் என்பதை நாம் ஒரு திரியினூடு கண்டுபிடித்திருக்கிறீர்கள். அதை மிகவும் வெற்றிகரமாகவே பாவித்து வெற்றியும் பெற்றுள்ளீர்கள்.இதனால் ஒரு கோபப்பட சிங்கிளா வந்த சிங்கம் ஒன்று, கோபம் அடக்கப்பட்ட சிங்கமாக, சிங்கிளாகவே மீண்டும் வந்த வழியில் திரும்பிச்செல்லுகிறது. இங்கே பன்னிகள், பல்லிகள் என்று என்னால் சொல்லப்பட்ட யாழ் கள உறுப்பினர்களையும் சிந்திக்கவைத்திருக்கிறேன் என் நடவடிக்கையினால்!!.

நீங்கள் தமிழர்களுக்கு இன்று தேவையான ஒரு மருந்தை இங்கே உபயோகித்திருக்கிறீர்கள் ஆகவே நீங்களே இங்கே ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளர் என்று நினைக்கிறேன். அதை உருவாக்க நான் ஒரு கருவியாக மட்டுமே இருந்தேன் இங்கே. முள்ளை முள்ளாலேயே எடுக்கவேண்டும் என்பது போல ஒரு கருத்தை, இன்னுமொரு கருத்தால் வென்று வெற்றிபெற்ற உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

"The engineer's first problem in any design situation is to discover what the problem really is.” ...

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன் ஆனைக்கும் அடிசறுக்க்கும் என்பது போல என்னை திடுக்கிடவைத்த சிந்திக்கவைத்த ஒரு ஆராட்சிகுறிய ஒரு கட்டுறை. இப்படியான தாக்குதல்களையே அந்தந்த காலங்களில் நாம் ஈழதமிழர்கள் கடப்பிடித்திருக்கவேண்டும். கடைப்பிடிக்கப்படவில்லை. இப்போது பாருங்கள், இந்த அரிவாளுதூக்கியவர் என்னை வெட்டிப்போட்டுவிட்டு,எனக்கு தமிழின துரோகி என்று சொலியிருந்தால். ஒரு தமிழ் உயிர் பறிக்கப்பட்டு, எம் தமிழ்ர்களின் பலம் மேலும் ஒன்றாக குறைக்கப்பட்டிருக்கும். அதை விடுத்து, நீங்கள் கொடுத்த சிந்திக்கவைத்த இந்த தாக்குதல், வீரியம் கூடியதும் வினைத்திறனைக்கொண்டது. இதனால் அழிக்கப்படவேண்டிய ஒரு மரம் நிழல் தரும் பரமாக மாற்றப்பட்டிருக்கிறது. உங்கள் நடுநிலைமையான சேவை, யாழின் மீது இருந்த என் கோபத்தினை இல்லாமல் செய்துவிட்டிருக்கிறது என்பதை நீங்கள் பெருமையாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு விவாதத்தில் வென்றிருக்கிறீர்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். சபாஸ் பாராட்டுக்கள்.

மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. :D

தனிப்பட்ட வெற்றிகள் என்பதை விடுத்து தமிழால் ஒன்றிணைந்தோம் என்று எடுத்துக் கொள்ளலாம்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் யாழ் கள நிருவாகியினை ஆனுகி அப்படி படங்கள் பதிக்க அனுமதிக இங்கே வாண்டிக்கொள்ளுகிறேன்.

நெடுக்கால் போனவ்ருக்கு ஒரு சவாலை நான் விடுகிறேன். நீங்க்ளும் நானும் ஈழதமிழர் போராட்டம் பற்றி ஒரு உலக விவாதத்தில் பன்குபற்ற முடியுமா என்று உங்களை சவாலுக்கு அழைக்கிறேன். யோவ் உன்னிடமெல்லாம் விவாதிக்கமுடியாது என்று பதில் வந்தால், நடிக்கதெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்று போய்விடும். எங்கே நான் ரெடி நீங்கள் ரெடியா?

அடிப்படையில் விடுதலைப் புலிகள் பற்றியதும் ஈழப் போராட்டம் பற்றியதுமான சரியான தெளிவை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள். அதன் பின் உலக அரசியல் பற்றி அறிந்து கொள்ளுங்கள். ஆதாரங்களை திரட்டிக் கொள்ளுங்கள்..! எல்லாம் ரெடியானா வாங்கோ காலனித்துவத்தில் இருந்து முள்ளிவாய்க்காலின் முன்.. பின் என்று சர்வதேச அரசியல் உட்பட தமிழக அரசியல் எல்லாம் ஈழப் போராட்டத்தை காட்டி பிச்சை எடுத்துப் பிழைத்த வரலாறுகளையும் உள்ளடக்கி விவாதம் என்ன ஒரு வரலாற்று மீள் பார்வையை செய்யலாம்.

அதற்கு முதலில் யாழ் களத்தின் விதிகளை மதிக்கக் கற்று.. யாழின் ஒரு நிரந்தர உறவாக உங்களை நிலை நிறுத்திக் கொள்வது முக்கியம். வாசலில் நின்று கூப்பாடு போடுற நிலையில்.. எப்படி விவாதத்தில் பங்கெடுக்க முடியும். அது விவாதமாக இருக்காது.. விவகாரமாகவே இருக்கும் நண்பரே. :D:)

Link to comment
Share on other sites

நான் ஒரு தடவை ஒரு முடிவினை எடுத்தேனாகில் அதை நான் என்றும் மீறுவதில்லை. அது என்னுள் பிறந்த ஒரு கொள்கை. இசைகலைஞன் என்னை செக்மேட் சொல்ல முதல், நீங்கள் என்னை நான் கேட்ட கோரிக்கைக்கு, இப்போது நேரம் தாழ்த்தி ஒரு மகா அரசியல்வாதி போல பதில் எழுதாது, முதலில் எழுதியிருந்தால் நான் செக்கி சிவந்திருந்த நேரம், தூள்ளி எழுந்து வந்திருப்பேன் உங்களுடன் ஒரு விவாதப்போரை நடாத்த. என்ன செய்வது நான் இசைக்கலைஞனின் ஒரு பதிலுக்குள் இருந்த அந்த ஒரு பொயிண்டின் அடிப்படையில் விவாதத்தில் கலந்துகொள்ளமுடியாது.

வேண்டுமானால் இன்றைய ஈழதமிழர்களின் நிலையில்,

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பது பற்றிய பேச்சினை பேசுவது, எதிர்காலத்தில் சகல வெளிநாட்டுத்தமிழர்க்ளுக்கும் அவர்கள் வாரிசுகளும் இலங்கையில் ஒரு ஆபத்தான ஒரு நிலையினை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு அழைத்துச்செல்லுமா செல்லாதா?

அப்படிச்செல்லுமானால் இலங்கையில் கால் பதிக்கமுடியாத நிலையில் இருந்துகொண்டு ஈழமக்களுக்கு நாடு கடந்த விடுதலை ஒன்றை பெற்றுக்கொடுக்க முயல்வது, நாளை நம் முழு தமிழர்களையும் இலங்கையினுள் கால் வைக்கமுடியாதபடி அல்லது வைத்தாலும் சொல்லணாதுன்பங்களை அனுபவிக்கும் படியான ஒரு சூழநிலையினை அமைத்துக்கொடுக்காதா?

வெளிநாடுகளில் சுகமாக இருந்துகொண்டு, இலங்கையில் சொல்லணாதுயரங்களை இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கும் ஈழதமிழர்கள் கூட இப்படிப்பட்ட தனிநாட்டுக்கோரிக்கைகளை, வெளிநாட்டுத ஈழதமிழர்கள் சும்மா ஒரு தமிழின உனர்ச்சியில் முன்வைப்பதை அனுமதிப்பார்களா இல்லையா?

இப்படியான ஒரு தலைப்பில் புலிகளையோ அல்லது பிற போராட்டக்குழுக்களையோ இங்கே இழுக்காது ஒரு சத்தான விவாதமொன்றை நான் மேற்கொள்ளமுடியும். அதுவே இன்றைய நேரத்தில்ன் காலத்தின் கட்டாய தேவையினை கருதி செய்வதாக அமையும் என்று நான் நினைக்கின்றேன்.

முடிந்தால் என்னைநோக்கி அறைகூவல் விடவும் இந்த தலையங்களில்.

எனக்கு தெரிந்த வரை களங்களில் ஒரே ஒரு விதியே நான் மதிப்பவன். நாகரீகமாக பதில் எழுதுபவருக்கு நாகரீகமாகவும், அநாகரீகமாக பதில் எழுதுபவருக்கு நிர்வாகம் தலையிடாது கை கட்டி பார்த்துக்கொண்டு அந்த நிலையில் ஒரு தலை பட்ச்சமாக இருக்கும் போது, கத்திக்கு கத்தியென்று அநாகரீகமாகவும் பதில் எழுதுவதும் தவிர்க்கமுடியாத ஒரு நிலை.

அதாவது மேலும் விளக்க முனைந்தால், இருவர் குத்துச்சண்டையினை,நடுவர் முன்னிலையில் ஒரு மேடையில் செய்கிறார்கள். ஒருவன் மூர்க்கமாக சன்டையிடும் மற்றைய்வனின் காதினை கடித்து பவுள் கேம் விளையாடுகிறார். அப்போது விசில் அடித்து காதை கடிப்பவனை இழுத்து விட வேண்டிய நடுவர். காதினை இழப்பவனை கட்டிப்பிடித்து, முழுக்காதையும் மற்றவன் சப்பித்துப்ப உதவுவது போன்றது இந்த யாழ் கருத்துக்கள விதிகள்.

அதற்கு முதலில் யாழ் களத்தின் விதிகளை மதிக்கக் கற்று.. யாழின் ஒரு நிரந்தர உறவாக உங்களை நிலை நிறுத்திக் கொள்வது முக்கியம். வாசலில் நின்று கூப்பாடு போடுற நிலையில்.. எப்படி விவாதத்தில் பங்கெடுக்க முடியும். அது விவாதமாக இருக்காது.. விவகாரமாகவே இருக்கும் நண்பரே.
அதனால் தான் நான் விவகாரம் பண்ணும் ஒரு நிலையில் நிற்க்கிறேன் நிரந்தரமின்றி அலைகின்றேன் ஏன் கூப்பாடுவேறு போட்டு குளப்படி பண்ணும் நிலையில் நிற்கிறேன்.
Link to comment
Share on other sites

ராபட்ஸ்ஸன்! நீர் வரேக்கே என்ன சொல்லிக்கொண்டு வந்தனீர்..?உம்முடைய முந்தைய கருத்துக்களை தோண்டிப்பாரும்..அப்பாவி மக்கள் சாவும் உம் கண்களுக்கு தெரிய வில்லையே என்ற ஆத்திரத்தில் வந்த கோபமே எனது..என் கோபம் நியாயமானதே..எந்தத் தன்மானத்தமிழனுக்கும் ரத்தம் கொதிக்கத்தான் செய்யும்..பிழையை உம்மேல் வைத்துக்கொன்டு பழியை என் மேல் போடுகிறீர்..நானும் வன்முறையில் வாசம் செய்பவன் அல்ல..அன்பு வழியே என் வழி என்று செல்பவன்..என் வழியில் விசப்பாம்பைக் கண்டால் கொத்தும் வரை பொறுத்திருக்க முடியாது..ஏனெனில் அது என் உயிரைக் குடித்துவிடும்.. அதனால்தான் அடிமடியில் எப்போதும் அருவாவை வைத்துள்ளேன்.. என்றாலும் நீர் திருந்தியது சந்தோசமே.. நல்ல ஒரு தமிழனாக எம் தமிழ்க்குடிக்கு பலம் சேர்க்க உழைப்பீராக...

உமது இந்தக்கருத்தைப் பாரும்..

இலங்கையின் ஜனாதிபதி யார் தெரியுமா? தெரிந்தால் என்னுடன் இப்படியெலெலாம் கேள்வி கேட்க்கமாட்டீர்கள். கறுப்பி பதித்த பதிவொன்றைப்பார்தேன். அதற்கு இலங்கையின் ஜனாதிபதி சார்பாக நான் பதில் அளிக்கிறேன்.

இலங்கையில் நடைபெற்ற கடைசிச்சண்டையில் பலியானோர்களில் 25 ஆயிரம் தமிழ் மக்கள், முன்னால் புலிகள். காயப்பட்டு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பகுதி நேர இராணவ பயிற்சியாளர்களாக இருந்தவர்கள். சிங்கள் ஆமி சுற்றி வளைத்த கையோடு, தலைவரும் அவர் பாதுகாவலர்களும் தம்மை மாய்த்துக்கொள்ள முனைந்த சமையம் இவர்களாகவே, தம்மை தாம் வைத்திருந்த கைக்குண்டுகளை வெடிக்கவைத்து, சிங்கள் இராணுவத்திடம் பிடிபடாமல் மரனத்தினை தழுவிக்கொன்டார்கள். இது நானொன்றும் சும்மா சொல்லவில்லை. அப்போது களத்தில் இருந்தவர்கள், கருணா அம்மானின் தலைமை அலுவகத்தில் இன்று பணிபுரியும், முன்னால் புலிகளால் எனக்கு நேற்றிரவு தெரிவிக்கப்பட்டது. ஆக மொத்தத்தில் உயிரிளந்தவர்களில் பெரும் பாலானோர் புலிகளாலேயே கொல்லப்பட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.

Link to comment
Share on other sites

பன்னிகள் தான் கூட்டமா வரும், சிங்கம்...அது சின்கிளாதான் எப்பவும் வரும்...மேலே நான் பதித்தது ஒரு செத்தபாம்பினை மீண்டும் அடிப்பதற்க்கு சம். ஆனால் அதை நான் இங்கே மீண்டும் பதித்ததில் ஒரு நோக்கமிருக்கிறது..போக போக தெரியும். நான் யாழ் கள நிர்வாகியாக இருந்தால்..என்னை நானே இதற்கப்புறமும் தடைசெய்திருப்பேன். எங்கே முடிந்தால் செய்துகாட்டுங்கள் பர்க்கலாம். என் படை வீரர்கள் சிலர் உங்கள் சூனியபிரதேசத்தினையும் கடந்து, பாதுகாப்புவேலிகளை வெட்டிவிட்டு எனக்காக அங்கே உள்ளே காத்துக்கொன்டு இருக்கிறார்கள்.என் உல்ளே என் விளையாட்டு ஆரம்பம்.பல்லிகளின் பாடு அந்தோ பரிதாபம்.

கடிக்கிற நாய் குரைக்காது என்று சொல்வார்கள். பாவம், நாய் நன்றியுள்ளது.

Link to comment
Share on other sites

துயா என் மகள் போன்ரவள். அவள் என்றுமே சுகமாய் இருப்பாள் காரணம். அவள் இதயம் தூய்மையானது. என்னை அண்ணா என்று சொல்லும் அந்த தூயாவினை என் இதயத்தில் என்றுமே நான் என் மகளாக செதுக்கிவைத்திருக்கிறேன். ஒரு தடவை நான் இந்திய தமிழக மக்களை இப்போது புலிகளை குறைசொல்லுவது போல தாக்க முனைந்த சமயம், என மகளும் அதற்க்குள் அகப்பட்டுக்கொண்டாள். ஆகவே சில சமயம் நான் அந்த தூய தமிழ் பெண் தெய்வத்துக்கும் பேசியிருக்கிறேன். அதனால்தான் என்னவோ என்னுடன் தூயா இப்போது கதைப்பதில்லை.

தூயா சரியாகப்புரிந்து கொண்டார் போல.

நான் ஒரு தடவை ஒரு முடிவினை எடுத்தேனாகில் அதை நான் என்றும் மீறுவதில்லை. அது என்னுள் பிறந்த ஒரு கொள்கை.

நல்லா சினிமா பார்ப்பியள் போல, நல்லா டயலாக் விடுகிறீர்கள்!

Link to comment
Share on other sites

தமிழர்களே, கோபத்தினை தணிக்க இன்றிலிருந்து திருக்குறள் படியுங்கள். இது நான் தோற்றுவிட்டேன் என்று நினைத்து என்னை நோக்கி கல்லெறிந்த "ஈஸ்" பல்லிக்காக தருவது.

"நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு".

Link to comment
Share on other sites

இது யருக்கு விளங்குதோ இல்லையோ,நெருப்பு நீலமேகம் நிச்சயமாக தெரிந்துகொள்ளவேண்டியது.

"ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்"

Link to comment
Share on other sites

நிலாமதி அக்கா பதித்த இந்திய கண்டு பிடிப்புகள் மிகவும் சுப்பரானது.http://www.youtube.c...d&v=m_ho7xhgWV8

நான் செய்ய நினைத்திருக்கும் கற்பனை உலகில் சில பொருட்கள். இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்னார். கற்பனையில் மிதவுங்கள் என்று. ஆகவே நான் அப்படியே மிதக்கின்றேன்.

1) கோழி இறைச்சியினை பிறீசறில் இருந்து எடுத்து டீபுறஸ்ட் பண்ணினாலும், எமது சமையளுக்கு ஏற்றமாதிரி, அந்த கோழீறைச்சியினை சிறுதுண்டுகளாக ஒரு சில வினாடிகளில் வெட்டிக்கொள்ள ஒரு உபகரணம் இதுவரையில்லை. பெரிய சமையல் அறையில் பெரிய உணவகங்களில், மிகப்பெரிய மோட்டாரில் இயங்கும் வீல் நைவ்வுடன் கூடிய உபகரணங்கள் உண்டு. ஆனாலும் அதிலேயும் கை விரல் வெட்டுப்படும் சாத்தியக்கூறுகளுமுண்டு.

ஆகவே ஒரு சிறிய உபகரணம் ஒன்று தேவை எம் வீட்டு இல்லதரிசிகளுக்கு.

2) பால் காச்சும் உபகரணம் அதனுடன் ஜோக்கட் செய்யும் ஒரு சாதனம்.

3) ஒரு ஆட்டோமெட்டிக்காக தலைமயிரினை அளவு பார்த்து வெட்டும் உபகரணம். வெட்டிய தலைமுடியினை வெட்டும் போது ஆட்டமெற்றிக்காக வக்கூம் செய்யக்கூடிய திறமை. பெண்களுக்கு இது மிகவும் உதவும் அவர்களின் கூந்தலினை தாமாகவே வெட்ட.

4) வீதியில் ஒரு பெண் காரோடிக்கொண்டு செல்லிகிறார். காற்றுப்போய்விட்டது. வீலினை களற்றி ஸ்பியர் வீலினை மாற்றவேண்டும். நவீன ராபோ.செய்யவேண்டியதெல்லாம். ஒரு சென்ஸிங் டிவைசினால் இன்னேன்ன இடங்களில் ஜாக்கினை பொசிசன் பண்ணவேண்டும்.இன்னன்ன நட்டுக்களை களற்றவேண்டும். இந்த ரயரினை இப்படியான பக்கத்தில் தூக்கி வைத்துவிட்டு மீண்டும் பூட்டவேண்டும். ஆக நாம் செய்யவேண்டியதெல்லாம், காரினை பாதுகாப்பாக பின்வளம் உருளாஅமல் சில கட்டைகளை பின் டயரில் போட்டுவிட்டு, காரினை நியுற்றல் கியரில் விட்டுவிட்டு,காரினை ச்டார்ட் பண்ணவேண்டியதுதான். பெண்கள் கஸ்டப்படாமல் வீலினை மாற்ற இந்த ரபோ உதவும்.

5. புது மேல் வீடு கட்டியாகிவிட்டது. உயரத்தில் இருக்கும் ஜன்னல்களை களுவி துடைக்கவேண்டும். வெளியாரைக்கூப்பிட்டால் பணம் பல செலவாகும். வாங்குங்கள் ராபஸ்ட் தொழில்நுற்பத்தில் உருவாகிய ஆட்டோ வின்டோ லிளீனர். அது எல்லா வேலைகளையும் ஒரு குறிக்கப்பட்ட நாள்கள் இடைவேளையில் தானாகவே செய்யும். சோலர் சிஸ்டத்தில் இயங்குவது ஆகவே தானாகவே ரீச்சார்ஜர் செய்து கொள்ளும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம். ஜன்னலில் என்னுடைய உபகரணத்தினை வாங்கி பூட்டி விடவேண்டியதே. அது எறும்பு ஊஉவது போல வெளிப்பக்க ஜன்னல் கண்ணாடிகளை கழுவி விடும்..

இன்னும் தொடரும்..

Link to comment
Share on other sites

தமிழர்களே, கோபத்தினை தணிக்க இன்றிலிருந்து திருக்குறள் படியுங்கள். இது நான் தோற்றுவிட்டேன் என்று நினைத்து என்னை நோக்கி கல்லெறிந்த "ஈஸ்" பல்லிக்காக தருவது.

"நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு".

ஏன் பல்லி, பூச்சி, தேள் என்று தேடுகின்றீர்கள்? மரியாதையாக உரையாட தெரியாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே

தயவு செய்து

இவருடன் உரையாடி தங்கள் மரியாதையை குறைக்கவோ கெடுக்கவோ வேண்டாம்

நன்றி

Link to comment
Share on other sites

யாழை அழிப்பீரோ எரிப்பீரோ எனக்கு தெரியாது கொஞ்சம் விளக்கமான எழுத படிக்க தெரிஞ்ச ஆளாயிருக்கின்றீர் அது மாத்திரம் உண்மை.

Link to comment
Share on other sites

ஏன் பல்லி, பூச்சி, தேள் என்று தேடுகின்றீர்கள்? மரியாதையாக உரையாட தெரியாதோ?

கலைஞன்,யாழ் தமிழ் சிறி,இசைக்கலைஞன் போன்றவர்களுக்கு நான் எப்படியான ஒரு மரியாதையைக்கொடுக்கிறேனோ அதேபோலவே நான் பல்லிகளுக்கும் அவர்களின் கிச்சல்களுக்கும் கொடுக்கிறேன். இதில் மரியாதையின்மை என்ற ஒன்றைநான் காணவில்லை. நீங்கள் கத்தியினை வீசினால் நான் என்ன சும்மா பார்த்துக்கொண்டா இருப்பேன். ஆகவே நானும் இப்படி எழுதினேன். நீங்கள் மரியாதையாக முதலில் எழுதுங்கள் நான் என்னையும் திருத்தி உங்களுக்கு மரியாதையாக பதில் போடுகின்றேன். ஆளக்கும் அடிமட்டம் எதுவோ அதனால் தான் நான் மீண்டும் அளக்கமுடியும் என்பதை எனியாவது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

உறவுகளே

தயவு செய்து

இவருடன் உரையாடி தங்கள் மரியாதையை குறைக்கவோ கெடுக்கவோ வேண்டாம்

நன்றி

இவருக்கு நான் இந்தக்குறளைக்கொடுக்கிறேன் வாசித்து விளங்கிக்கொள்ளக்கடக.

"அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்,

மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்"

Link to comment
Share on other sites

யாழை அழிப்பீரோ எரிப்பீரோ எனக்கு தெரியாது கொஞ்சம் விளக்கமான எழுத படிக்க தெரிஞ்ச ஆளாயிருக்கின்றீர் அது மாத்திரம் உண்மை.

ஆகமொத்தம் அவர் உங்கள போல இல்லைன்னு சொல்ல வாறீங்க அப்பிடித்தானே?

Link to comment
Share on other sites

ஜெயலலிதா ஜெயிக்க வடிவேலுதான் காரணம். பாக்யராஜ்

இவ்வளவு மோசமான தோல்விக்கு ஈழப் பிரச்னையும் ஒரு காரணமா?

‘‘நான் அப்படி நினைக்கவில்லை. கடந்த எம்.பி. தேர்தலின்போது ஈழத்தில் மிகவும் உக்கிரமான போர் நடந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி தானே ஜெயித்தது.’’

இந்தியாவின் நிலைப்பாடும் தமிழக மக்களின் நிலைப்பாடும், ஈழதமிழர்களின் பிரச்சனையினை, ஒரு கறிவேப்பிலையாகவே நினைத்து அன்று தொட்டு இன்று வரை உபயோகித்துவந்திருக்கிறார்கள்.

இல்லாவிட்டால், இன்றைய ரீதியில் ஈழதமிழர்களின் அவலமான ஒரு வாழ்க்கைநிலையினை மனதில்கொண்டு, அவர்களுக்கு இருக்கும் நியாயமான வாழ்க்கைப்பிரச்சனைகளை, உரிமை மறுப்புகளை, முன்னின்று போராடி பெற்றுக்கொடுக்கவேண்டிய ஒரு மிக பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள். புலிகள் இருந்தபோது, வேட்டியினை மடிச்சுக்கட்டிக்கொண்டு, பல முத்துக்குமார்களை முன்னிலைப்படுத்திய பல ஈழ அபிமானிகளாக வேடமிட்ட பல தமிழக அரசியல்வாதிகளும், தமிழ் இனவாளர்களும் எம்முடைய இடம்பெயர்ந்த தமிழர்களும்.

இந்த திரியில் என்னுடன் நெடுக்காலபோவான் ஒரு விவாதத்தில் ஈடுபடமுடியுமா? என்று அவரிடம் கேட்டுக்கொள்ளுகிறேன்.

என் குற்றச்சாட்டு, இந்தியாவில் இருக்கும் தமிழர்கள், புலிகள் உள்ளவரையே புலிகளுக்காக ஈழதமிழர்கள்பால் அனுதாபம் கொண்டார்கள். இன்று ஈழதமிழர்கள் சாப்பிடுகிறார்களா? இல்லையா? துன்பத்தினை அனுபவிக்கிறார்களா? இல்லையா? என்று நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள். காரணம் கரண்ஸி கொடுக்க ஆட்க்களில்லை இன்றுஇல்லை. அதே போலவே வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களும் ஈழத்தமிழர்களின் நிலையினை இட்டு ஒரு ஆக்கபூர்வமான வேலைத்திட்டம் எதனைய்7உம் கொன்டிருக்கவில்லை. ஆக கடல் கடந்த அல்லது நாடு கடந்த தமிழ ஈழம் என்ற ஒன்றை ஒரு பேச்சுக்காக ,அதாவது தம்மை தாமே ஒரு ஈழ அபிமானிகளாக காட்டிக்கொள்ளுவதற்காகவே பாவித்துக்கொண்டு வருகிறார்கள்.இல்லாவிட்டால் அண்மையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலைதா சட்ட சபையில், ஈழதமிழர்களௌக்கு உலக அரங்கில் ஒரு விசாரனைக்கமிசன் அமைத்து அங்கே நடந்த படுகொலைகளை இட்டு விசாரணை நடத்தவேண்டும் ஐ.நா என்று சொன்ன வேகத்தில், அவருடன் சேர்ந்து, வெளிநாடுகளில் ஒரு பெரும் ஆதரவு ஊர்வலங்களை நடாத்தி, ஒரு பெரும் சப்ப்போர்ட்டினைக்கொடுக்கவில்லை. தமிழகத்திலும் கட்சிபேதம் இன்றி, தி.மு.கவும் அதை ஆதரித்தபோது, எந்தவிதமான இதர ஈழ அபிமானிகளும் முன்னர் போல, ஈழதமிழர்களுக்கக குரல்கொடுக்க தவறிவிட்டனர்.இதிலே ஐயா நெடுமாறனும் அடங்குவர்.

ஆகவே மொத்தக்தில் எல்லாமுமே வெறும் பம்மாத்து மட்டுமே ஒழிய, என்னைப்போல ஒரு ஈழ மக்களின் மேல் கரிஅனைகொண்டு, இங்கு வந்து ஒரு தடுப்பு முகாம் போன்ற சிறையில், இவ்வாளவு பொறுமையாக, ஒரு சில நல்லா தமிழர்களுகாக, பலரின் நகைப்புக்கிடையில் நின்று போராடவேண்டியிருக்கிறது.

ஆகவே தான் எனக்கு ஒரு பொது விவாதமேடையொன்றை இங்கே அமைத்துதரவேண்டும். நான் பல கேள்விகளை ஈழமக்களின் சார்ப்பாக கேட்க்கபோகின்றேன் இந்த வெளிநாட்டு ஊடங்களை நோக்கியும், வெளிநாட்டு தமிழர்களை நோக்கியும் முடியுமா? நீங்கள் ஒரு உண்மையாகவே ஈழதமிழர்களின் அனுதாபிகள் என்றால். எங்கே திறந்துகாட்டுங்கள் உங்கள் இதயங்களை. அதை இந்த உலகமே பார்க்கட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.