Jump to content

மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபக வீதிகளில் இருப்பவை எல்லாம் எப்போதும் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் காலச் சக்கரத்தின் உறைந்த பக்கங்கள். உறைந்த பக்கங்கள் உருகி வழிந்தோடி இருக்கும் என்று புத்திக்கு பட்டாலும் மனசுக்கு படாமல் அவற்றைத் தேடி அலைந்து கொண்டிருப்பதுதான் வாழ்வுக்கு சிலநேரம் அர்த்தத்தைக் கொடுக்கின்றது.

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

10416586_10152219274159891_3949986741361

 

என் மொழியின் சுவடுகளே அற்ற தெருவொன்றில்

அந்நியப்பட்டு அழிகிறது இம்மாலை.....

பெயர்தெரியாத சில பறவைகளின் பாடல்களிலும்

துருவ‌க்காற்று சுமந்துவரும் காட்டுப்பூக்களின் வாசனைகளிலுமிருந்து

பெருகி வழிகிற‌து

புழுதிக்கூட்டிலிருந்து தவறி வீழ்ந்த ஆன்மா ஒன்றின் நீள்துயர்...

பனைமரக்காட்டிடையே கொதிக்கும்

நினைவுத்துயரின் வெம்மையில் மூழ்கித் தகிப்பிழந்து

சாள‌ரமரங்க‌ளின் பின்னே மறைகிறது இம்மாலைச்சூரியன்...

இந்த இரவின் தனிமை முழுவதற்குமாய்

தாய் மண்ணின் நினைவுகளைத் தூவ வரும் நிலவை

இனி எதைக்கொண்டு மறைப்பேன் நான்....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
10371568_10152231993074891_5223340255616
 
முற்றத்து மலரொன்றின் 
ஒற்றை இதழில் குவிந்து கிடக்கும் 
இளமைக்காலப் புன்னகையை ரசித்தபடி
உதிர்கின்றன பகலின் சருகுகள்
 
எங்கோ கசியும் இசைத்துளி ஒன்றில்
உயிர்த்து எழுகிறது 
என் தேசத்தின் புழுதி வாசமும்
வாழ்க்கையும்
 
காலத்தைக் கடந்து காற்றில் மிதந்து வந்து 
என் சாளரங்களை அடைகிறது
முற்றத்து மரநிழலில் நெடிதுறங்கும் 
அம்மாவின் பேரன்பு...
 
ஆட்காட்டிகளும் வயல்க்கரைகளும்
ஆலமர நிழல்களுமாய்
நிரம்பியிருந்த பால்யங்களின்
துளிகள் சிந்திக்கிடக்க
இனி ஒளித்து வைத்துக்கொள்ளவே முடியாத
எண்ணை வைத்துப் படியத் தலை சீவிய 
என் பால்யகால சிறுவனின்
கரம் பற்றிப் பயணிக்கிறது இந்த மாலை.....
Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

10849736_10152611046219891_8294739915511

சாளரங்களுக்கப்பால் தூரத்தே தெரியும் சதுரவயல்களின்மேல் பொன்னிறத்தில் படரத்தொடங்குகிறது நிலவு...

காற்று அலைக்களிக்கும் சருகொன்றில்

பூங்காவொன்றின் பழைய இருக்கையில் இளைப்பாறும் முதியவரின் யாரும் தீண்டா தனிமை கனக்கிறது...

புன்னகை சேகரிக்கும் அம்முதியவரை முத்தமிட்டு மறைகிறது இம்மாலை..

வசந்தத் துளிர்களை நனைத்த காற்றில் பகலைத்தொலைத்த

காட்டுப்பறவை ஒன்றின் ஏகாந்தம் கசிகிறது..

நீலம்படர்ந்த நெடுவான முடிவு வரை வெண்ணிற மேகங்கள் சுமந்து செல்கின்றன மண்ணிண் நினைவுகளை..

குளிர் நனைத்து ஈரமாகும் இத்துருவ இரவில்

சாளரங்களை மறைத்து

நெடுமூச்சின் ஆவி புகையாய்ப் படர்கிறது..

காலத்தொன்மைகளின் கீழ் குரலற்ற சந்ததியின் புராதனப் பாடல்கள்

கடலாய்ப் பரந்துகிடக்க

சிறகிலிருந்து தவறிவீழ்ந்த இறகொன்றின் துயரோடு

இலக்கற்று அகதிவாழ்வு..

Link to comment
Share on other sites

சுபேஸ்,
வாழ்த்துக்கள் என சொல்லிவிட்டு போகமுடியாத கவிதைகள். சோகங்களிலிருந்து விடுபட்டு வாருங்கள்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.