Jump to content

கணணியை முழுவதுமாக தமிழில் மாற்றுவதற்கு .


Recommended Posts

கணணியை முழுவதுமாக தமிழில் மாற்றுவதற்கு .

உங்கள் கணணியை முற்று முழுதாகவே தமிழில் மாற்ற நம்மில் பலருக்கு ஆசை இருக்கலாம். ஆனால் எவ்வாறு மாற்றுவது? அதற்கு எவ்வாறான மென்பொருட்கள் தேவை? இது இலவசமாக கிடைக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பு. உங்களிடம் BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால் LIP ஐ நிறுவுவதற்கு முன் அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panelஐ திறந்து System and Security என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும்.

Windows 7 LIPஇன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள் தனித்தனியே கிடைப்பதால் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன் Windows 7இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

Windows 7இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை பின்வருமாறு தீர்மானிக்கலாம்: Start பொத்தானைக் கிளிக் செய்த பின் கணணி என்பதில் வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணணி குறித்த அடிப்படைத் தகவலை இது காண்பிக்கும்.

அமைப்பு வகைக்கு, அமைப்பு என்ற பிரிவைப் பார்க்கவும். உங்கள் Windows 7 இயக்க முறைமை, 32 பிட் இயக்க முறைமையா அல்லது அது 64 பிட் இயக்க முறைமையா என்பதை இது காட்டும். 32 பிட் பதிப்பை நிறுவ நீங்கள் இவற்றை செய்யலாம்:

குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், பின்னர் LIP -ஐ நிறுவ Open என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், கோப்பை உங்கள் கணணிக்கு நகலெடுக்க Save என்பதைக் கிளிக் செய்யவும்.

LIP ஐ நிறுவ பதிவிறக்கிய கோப்பிற்கு சென்று அதை இரு முறை கிளிக் செய்யவும். 64 பிட் பதிப்பை நிறுவ மேலே உள்ள இரண்டாவது விருப்பத்தையே நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

http://www.thinakkural.com/news/all-news/it-a-technology/5371-computer.html#comment-502

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.