Jump to content

கரும்புலிகள் வீரவணக்க நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

animated-candles.gif

வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காய்

எல்லாவற்றையும் தந்த அந்த கரும்புலி மாவீரச்செல்வங்களுக்கு..................

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

''நாங்கள் வாழவேண்டும் என்பதற்காக

தங்களை(கரும் புலிகளாக்கியவர்கள்) கொடையாக்கியவர்கள்''.

அந்த தெய்வங்களுக்கு எம் நெஞ்சினில் தீ மூட்டி வணங்குவோம்.

http://youtu.be/D1c8TzAX90o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்லறை அற்ற காவியங்கள்.

வேர்கள் வெளியினிற் தெரிவதில்லை – சில

வேங்கைகள் முகவரி அறிவதில்லை

பேர்களைச் சொல்லவும் முடிவதில்லை –கரும்

புலிகளின் கல்லறை தெரிவதில்லை.

காலப் பெருவெளி நீளும் பொழுதிலும்

கண்ணில் தெரிவதும் இல்லை - இற்கு

வாழும் தலைமுறை சாகும் கரும் புலி

வாழ்வை அறிவதும் இல்லை

வாழ்வை அறிவதும் இல்லை - அவர்

வாசம் புரிவதும் இல்லை.

கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே

கைகள் அசைத்திட்டுப் போவார் - ஒரு

தொட்டில் வணர்ந்தவர் தோளில் சுமந்தவர்

சொல்லிப் புறப்பட்டுப் போவார் - எங்கள்

தோழர் நெருப்பென ஆவார்.

நொடியில் பெரு வெடியுடன் கரும்புலி

நெருப்புடன் சங்கமமாகும் -எங்கள்

விடிவினுக்காகவே இடியென எதிரியின்

முடிவுடன் அவருடல் சாயும்

முடிவுடன் அவருடல் சாயும் -அவர்

மூச்சம் பெரும் புயலாகும்.

நினைவளியா நாட்களிலிருந்து...........

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலித்தெய்வங்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள் நினைவுநாள் வீர வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animated_candle.gif

வீர வணக்கங்கள், தெய்வங்களே....

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

கறுப்பு வரியணிந்து,,

கந்தகத்தை வாரியணைத்து,,

கரிகாலனவன் பாதையில்....

கரும்புலியாகி சரித்திரம் படைத்த..

கரும் முத்துக்களுக்கு... வீர வணக்கங்கள்....தாயகத்திலிருந்து நீலவன்...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

''முதல் கரும்புலி என்ற குறியீட்டை சுமந்த கருவறை''

மில்லரின் அம்மாவுடனான நேர்காணல்

http://youtu.be/0r_-RWdU7t4

Link to comment
Share on other sites

யூலை இது கரும்புலிகள் மாதம். யாரிந்தக் கரும்புலிகள்?

காலக்கருக்கலில் வந்துதித்த நெருப்புச் சூரியர்கள்! கந்தகத்தை நெஞ்சில் சமந்து சாவுக்கு தேதி குறித்து சிரித்தபடி கையசைத்து விடைபெறும் சந்தன மேனியினர். அணுவாயுதங்களை அழித் தொழிக்கப் பிறந்திட்ட உயிராயுதங்கள்! 1987 ஆம் ஆண்டு முதல் தேசியத் தலைவனின் எண்ணக்கருவில் பிரவசமான நெருப்புக்குழந்தைகள்.

செயற்கரிய ஈகத்தை மிக எளிதில் செய்து விட்டு முகம் காட்டாமலே செல்கின்ற ஈசைக் செம் மல்கள். விலை மதிப்பற்ற மனித உயிர்களை எதிர் கால சந்ததியினரின் சுதந்திரத்திற்காகவும் சுபீட்சமான நிம்மதியான வாழ்வுக்காகவும் ஈகம் செய்து சரித்திரத் தில் நிலையான இடத்தினைப் பிடித்தவர்கள். “கொடைக்குக் கண்ணன்” என இயம்பிய இலக்கியங்கள் இன்று கொடையில் உயர்ந்த தற் கொடைக்கே இலக்கணமாகத் திகழும் கரும்புலிகளை மேற்கோள் காட்டி ” ஈகத்தின் இலக்கணங்களாக”ப் போற்றுகின்றன.

தமிழீழப் போராட்டத்தில் காலத்திற்குக் காலம் எதிர்வரும் தடைகளை நீக்கிட ” தடைநீக்கிகளாக” தேசியத் தலைவனின் எண்ண வீச்சிலிருந்து உரு வானவர்கள் கரும்புலிகள். எப்பேர்பட்ட படைகளையும் தூசெனவே எண்ணித் தகர்த்தெறியும் மாபெரும் சக்தியாக கரும்புலிகள் தம்வசம் உள்ளனராதலால் இன்று படைச் சமபலத்தோடு எதிரிகளுடன் களத்தில் போரிட்டு வெற்றிகளைக் குவிக்கின்றனர் தமிழீழ விடுதலைப்புலிகள். உலகே வியக்கின்றது, தற்கொடையாளரின் நெஞ்சுறுதி கண்ணுற்று. வாழ்தலின் ஆசை உயிரினத் தின் பொதுவிதி.

மரணத்துடன் போராடும் இறுதிக் கணத்திலும் வாழும் ஆசை எஞ்சி நிற்கும். ஆனால் இவர்களோ தமது சாவுக்குத் தேதி குறித்து போட்டி யிட்டு செல்கின்றனரே…. எப்படி இது சாத்திய மாகின்றது? வாழும் ஆசைகளின்றி பிறந்த அபூர்வப் பிறவிகளா இவர்கள்? இல்லை! இல்லவே இல்லை! நெடுநாள் வாழும் ஆசை அவர்களுக்குள்ளும் உண்டு. ஆனால் அதைவிட தாய்மண்ணின் சுதந்திரமே அவர் கள் இலட்சியமாக மேலோங்கியுள்ளது.

இன்றைய எம் மண்ணின் சிசுக்களேனும் நாளை சுதந்திர தாயகத்தில் ஆடிப்பாட வேண்டும் என்பதற்காக தமது இளமைக் கனவுகளையும் ஆர்ப்பரித்தெழும் யௌவன ஆசை களையும் மனதின் அடிவாரத்தில் ஆழக்குழி தோண்டி புதைத்தவர்கள். மானுட ஆய்வாளர்களால் ஆராய்ந்தறிய முடியாத ஆழ்சுரங்கம் அவர்கள் மனங்கள். அவர் களது மனத்தின் திண்மை உலக சமுதாயத்தில் எம் இனத்தை உயர்த்தி வைத்திருக்கின்றது இன்று. ஆயுத பலத்தாலும் ஆட்சி அதிகாரத்தாலும் மிருகத்தனமாக தமிழீழ மக்களை அவர்கள் தேசத்திலேயே அடக்கி ஒடுக்கி சித்திரவதைப் படு கொலைகள், பாலியல் வல்லுறவுகள் எனவெல்லாம் மிலேச்சத்தனமாக அழித்தொழித்து வரும் இனவாத சிங்களக் கூலிப்படைகளின் கொட்டமழித்து ஓட ஓட விரட்டிடவே தீரமிகும் மகாசக்தியாக உருமாறியவர் களே கரும்புலிகளாவர்.

1987 ஆம் ஆண்டு யூலை 5ஆம் திகதி நெல்லியடி மகாவித்தியாலயத்தில் முகாமிட்டு எம் மக்களுக்கு இடையூறு பல விளைவித்து வந்த சிங்கள இராணுவத்தினரின் முகாமினுள் புகுந்து சின்னாபின்னமாக்கிய முதல் கரும்புலி மாவீரன் கப்டன் மில்லரின் நினைவாக ஆண்டு தோறும் யூலை 5 ஆம் திகதி கரும்புலிநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. மிகக்குறைந்த உயிர் இழப்புகளுடன் மிகப் பெரிய சேதத்தை எதிரிகளுக்கு உருவாக்கும் பொருட்டு தமிழீழத் தேசியத் தலைவரால் உருவாக் கப்பட்ட உன்னதமான போர்வடிவமே கரும்புலித் தாக்குதலாகும். உலக அதிசயங்களுள் எட்டாவது அதிசயமாகப் பதியப்பட வேண்டிய ஒன்றே கரும் புலிகளின் ஈகைச் செயலாகும். எரிமலையைச் சுமந்தவண்ணம் எதிரிகளின் பாசறைகளை நோக்கிச் செல்கையிலே என்னென்ன எண்ணுவரோ? யாரை நினைப்பரோ? தமிழீழக் கனவு களோடு உடல் சிதறி மண்ணோடு மண்ணாக, காற்றோடு காற்றாக, கடலோடு கடலாக கலந்து நிலைத்து வாழும் கரும்புலிகளின் நினைவுகள் ஆழத் தடம் பதித்து எம் நெஞ்சங்களில் நிலைத்து நிற்பது உறுதி.

வரலாற்றினை வழிநடத்த வரலாறாகவே ஆனவர்களை நின்றொரு கணம் நினைத்தொரு பொழுது விழி உகுக்கும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து இரும்புப்பூக்களைத் தொழுதெழும்காலமிது. எமது இனம் எம் மண்ணில் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எம் மக்கள் தினந்தினமும் செத் துக் கொண்டிருக்கின்றனர். எமக்காக கரம் நீட்டி உதவவோ குரல் கொடுக்கவோ உலகில் எவருமே எமக்கு இல்லை. ஆனாலும் எமக்காக நிலத்திலும் புலத்திலும் உறுதியாக கை கோர்த்த வண்ணம் நாம் இருக்கின்றோம். நாமோ நமது பலம். நம்மைச் சுற்றி அசுர பலம் கொண்ட எதிரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு பக்கபலமாக இந்த உலகே கண்மூடி வாய்கட்டி காதுகளைப் பொத்தி அநீதியை நிலை நாட்டிட கங்கணம் கட்டி துணை நிற்கிறது.

நிர்க்கதியாக நிற்கும் எம்மக்களை எதிரி களிடமிருந்து பாதுகாக்கவும் தற்பாதுகாப்புக்காகவும் மக்களே இன்று ஆயுதமேந்தி பயிற்சிகளும் பெற்று வருகின்றனர். எம்மக்களை இன அழிவிலிருந்து மீட் டெடுக்கும் வலிமை மிக்க ஆயுதங்களாக கரும்புலிகள் புறமுதுகிட்டோடிடச் செய்யும் தீரம் கரும்புலிகளின் காலத்தின் பின்னர் நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். ஒவ்வொரு கரும்புலியின் மரணத்திலும் ஓராயிரம் கரும்புலிகள் உருவாகின்றனர். அச்சத்தின் ஆணிவேரை அகத்திலிருந்து அறுத்தெறிந்து விட்டு வீரத்தின் விதையை மனங்களுள் விதைத்த வண்ணம் கரும்புலிகள் கனவுகளை தமது தோள்களின் சுமந்த வண்ணம் இலட்சியப் பயண வீறுடன் முன்னெடுக் கின்றன. புதிது புதிதாக இணையும் கரும்புலிகள் வீறுடன் முன்னெடுக்கின்றனர். வீரர்களுக்கு நடுகற்கள் அமைத்து தெய்வங் களாக போற்றி வணங்குதல் பழந்தமிழர் பண்பாடு. இன்று எம் தேச எல்லைகள் மாவீரரின் நடுகற்களால் வரையப்பட்டு வருகின்றன. காவல் தெய்வங்களை உளமாரப் பூசித்து வீரத்தை வரமாகப் பெறுகின்ற காலமிது.

கரும்புலித் தாக்குதலுக்கு செல்கின்ற ஒவ்வொரு கரும்புலியும் தாயினும் மேலாக தாம் போற்றும் தேசத்தலைவனுடன் ஒரு நாளில் தமது பொழுதுகளை கழிப்பது வழமை. எவராலுமே அணுக முடியாத தலைவருடன் அருகமர்ந்து கதைபேசி அகமகிழச் சிரித்தாறி ஒன்றாக உணவருந்தி உணர்வுகளைப் பரிமாறி கடைசியில் விடைபெறும் வேளை வரும்போது கட்டியணைத்து வழியனுப்பி வைக்கையிலே கண்ணீரை மறைத்த வண்ணம் தலைவனின் குரல் கணீரென ஒலிக்கும்.

“நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால வருவன்” என. ஒவ்வொரு கரும்புலியுடனும் சிலபொழுது உளமாரப் பழகி விடைபெற்றுப் பின் அவரின் வீரமரணச் சேதி தன் வீடு வந்து சேருகையிலும் எம் தேசத்தலைவரின் ஆன்மா ஒரு கணம் நடுங்கும்.

விழி யோரம் நனையத் துடிக்கும். மறுகணமே உணர்வுகட்கு அப்பாற்பட்ட உரிமைச் சுதந்திரத்திற்காக தானைத் தலைவன் விழிகள் நிமிரும். விழிகள் அனல் கக்க வரலாற்றை வழிநடத்த எம் தலைவன் எழுச்சியுடன் எழுந்து நடக்கின்றான். எம்மக்களும் அவன் பின்னால் எழுச்சியோடு அணி திரள்கின்றனர். கரும்புலிகள் தமிழினத்தை எண்ணுகின்ற நெஞ்சமெல்லாம் உறுதி கொள்கின்றன. காலங்காலமாக தமிழ் இலக்கியங்கள் பொழிந்தது போல் ஆண்மைக்கு மட்டுமல்ல, பெண்மைக்குள்ளும் களவீரம் உண்டு எனப் புதிய இலக்கணம் படைத்தவர்கள் புலிகள்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் 45 அடி ஆழம் கொண்ட நீர்ப்பரப்பில் நிலை கொண்டிருந்த 6300 தொன் எடை கொண்ட அதிசக்தி வாய்ந்த ராடர்களை பொருத்தியிருந்த நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை தனி ஒரு பெண்ணாகத் தகர்த் தெறிந்த கடற்புலி அங்கயற்கண்ணியின் தீரத்தினை வரலாறு ஒருபோதுமே மறந்திட முடியாது. அவனைப் போல எத்தனையெத்தனை பேர்…. ஆணென்றும்….. பெண்ணென்றும்… ஒருவர் இருவரா எழுத்தில் ஒரு சில பக்கங்களுள் அடக்குவதற்கு? நீண்டு கிடக்கும் பட்டியலில் ஒவ்வொரு கரும்புலியுமே நிலையான சரித்திரமாக நிலைத்து நிற்க தொடர்கிறது. ஈழத்தமிழரின் சுதந்திரப் போராட்ட சரித்திரம் இன்னமுமே…. விறு கொண்டே…. களத்துக்கவி புதுவை இரத்தினதுரை “பகைவனே! படுக்கையைத் தட்டிப்பார் கட்டிலுக்கு கீழே கரும்புலி இருப்பான்” என தன் கவிதையொன் றில் கூறியது போன்று காற்றுக்கூட உட்புகாத இடங்களுக்குள் கரும்புலிகள் நுழைந்திருக்கின்றனர் என்பதற்கு அண்மைக்கால நிகழ்வுகளே தக்க சான்றுகள்.

“கரும்புலிகளுக்கு எட்டமுடியாத சிகரங்கள் எதுவும் இல்லை. தொட்டசைக்க முடியாத சுமைகள் இல்லை” எனக் கவிஞர் கூறியது போல் “இல்லை என்றொன்று இல்லை” என நிரூபித்துக் காட்டியவர்கள் கரும்புலிகள். தாமில்லாத போதும் என்றோ ஒருநாள் நிச்சயமாக தம் கனவுகள் நனவாகும் என்பதை உறுதியாக அவர்கள் நம்பியதனால் தான் தாயகத்தை கனவு கண்டவர்கள் தம் தாயகத்தினை மீட்டு சுதந்திர தேசத்தில் தாம் வாழுமுன்பே விழிமூடினர். அவர்கள் ஒவ்வொரு தமிழர்மீதும் தம் ஒப்பற்ற தலைவன் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டதனால் தான் ஈகத்தின் உச்ச வடிவினராக தம் உயிரையே எம் தேசத்திற்காக ஈய்ந்திடத் துணிந்தனர். அந்த உயிர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை எம்மாலான தேசத்தொண்டினை ஒவ்வொரு தமிழனும் செய்வதுவேயாகும்.

கரும் புலிகளைக் கண்களால் எம்மால் பார்க்க முடியாது. ஆனால் தவழ்ந்து வரும் தென்றல் போல் அவர்களின் ஈகையினது பெருமையை எம்மால், எம் சுவாசத்தால் உணரலாம். உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு தமிழனையும் கரும்புலிகளின் ஈகைச் சாவு ஒருகணமேனும் அதிரச் செய்யும். சாதாரண மனிதர்கள் போன்றதல்ல விழி மூடிய இந்த மனிதத் துறவிகளின் உன்னத உயிர்கள். விலைமதிப்பற்ற கிடைத்தற்கரிய ஆன்மாக்களை கையசைத்து விடைகொடுத்து விட்டு, காலாட்டிச் சோற்றுப்பிழைப்புக்காக வாலாடடி; வாழ இனியும் முனைவாயோ தமிழா? இது தமிழன் தலை நிமிரும் கரும்புலிகள் சகாப்தம். எம்மண்ணவரின் உயிர்களின் விலைகொடுப்புகளிற்கெல்லாம் “பொருள்” ஈட்டிட வேண்டும். இன்னுமொரு கரும்புலி தன் இன்னுயிரை ஈவதைத் தடுத்திட வேண்டுமெனில் நிலத்திலும் புலத்திலும் உள்ள உலகத் தமிழரெல்லாம் சுதந்திரத் தமிழீழத்தை தம் உயிர்மூச்செனக் கொண்டு உழைத் திடல் வேண்டுமிங்கு.

காற்றில் கரைந்தவர்களுக்கு நடுகல் நட்டு தொழுதெழும் வேளை அவர்கள் கனவுகளை நனவாக்கிட உறுதியெடுத்துக் கொள்வோம்.

காலமாய் ஆனவர்களின் கல்லறைகள் முன்னால் காலமினி சொல்லட்டும் ஓர் இனிய சேதி தமிழரின் தாயகம் மீட்கப்பட்டதென….

அதுவரையில் நானும்….நீயும்…..அவர்களும்……இவர்களும்…. ஒன்று படுவோம்!; தாய் மண்ணின் விலங்கொடிப்போம்!

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

நன்றி நெருடல் இணையம்.

Link to comment
Share on other sites

தியாக தீபங்களுக்கு வீரவணக்கங்கள். மில்லரின் தாயாரின் செவ்வி - எவ்வளவு தூரம் ஒரு தாய் தன் மகனுக்கு துணை நின்றுள்ளார். மகனை இழந்த போதும் அவரது தைரியம் மற்றும் மன உறுதிக்கு தலை வணங்குகிறேன்.

Link to comment
Share on other sites

தாயக விடுதலையில் ஆயுதப்போராட்டத்தின் தடைநீக்கிகளான, தமிழினத்தின் காவலர்களான கரும்புலி மறவர்களுக்கு, வீர வணக்கங்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவராலும் முறியடிக்க முடியாத விடுதலைப் பாதையின் தடை நீக்கிகளாகி விதையாகி விழுந்த கரும்புலி மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் நெஞ்சக் கூட்டினிலே

நெருப்பாய் ஏறி நின்றோர்

வஞ்சப் படைகளையே

வளைத்து சாய்த்து நின்றோர்

என்றும் மறையாது

எம்முள்ளே வாழுமவர்

எண்ணம் கரையேற

எல்லோரும் உறுதி கொள்வோம்!

ஈழத் திசையெங்கும்

இவர்களையே பாடுமன்றோ

உறுதிக்கு மறுபெயராய்

உலகில் நின்றவரே

உருகி வணங்குகிறோம்

உங்கள் திருவடிகளிலே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.