Jump to content

தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது


Recommended Posts

வலையோடி எனும் பெயரில் தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது

Written by Pandara Vanniyan Thursday, 12 January 2006

தமிழில் முதல் இணைய உலவி மென்பொருள் (internet browser) வெளியிடப்பட்டுள்ளது.வலையோடி எனும் பெயரில் கடந்த புதன்கிழமை சென்னையில் இந்த இணைய மென்பொருள் வெளியிடப்பட்டது.ஆங்கிலம் அல்லாத பேச்சு மொழியை உடைய பயனாளர்கள் எண்ணற்ற மொழிகளில் உள்ளனர் அவர்களிற்கு இந்த மென்பொருள் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று இவ்மென் பொருளை உருவாக்கிய Panacea Dream Weavers Software Private Limited அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மென்பொருள் ஆங்கில மொழியினைக் கூட தமிழுக்கு மாற்றவல்லது என்றும் இதன் மூலம் பயனாளர்களின் அதிகமான பயன்பாட்டிற்கு இது வழிசமைக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது முற்று முழுதான இலவசமான மென்பொருளாகவே வெளியிடப் பட்டுள்ளது.அது தவிரவும் தங்களது இந்த முயற்சியில் ஆர்வலர்கள் யாரும் பங்கெடுத்து இந்த மென்பொருளை செம்மைப்படுத்துவதனை தாம் வரவேற்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.இது ஆங்கிலத்தை தமிழுக்கு மாற்றினாலும் இதில் 70 வீதமான சாத்தியமே உள்ளது என்று இந்த மென்பொருள் தயாரிப்பில் புலவன்,பாலம்,தமிழ்ஒளி,முகவரி,

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நன்றி வானம்பாடி மற்றும் ராகவா.

வலையோடி உலாவியை யாரும் பயன்படுத்தி பார்த்தீர்களா? எப்படியிருக்கின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாதவன்சார் இதுதான் அந்த வலையோடி இப்போதைக்கு பத்தோடு பதினொன்று போலை கிடக்கு

untitled8mn.jpg

Link to comment
Share on other sites

நன்றி வியாசன்.

தமிழில் முதல் இணைய உலாவி என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

ஐயாம் வெரி சாரி சார். என்று தமிழில் மன்னிப்பு கேட்பது போல் அவர்களும் தங்களுடைய தமிழில் உலாவியை செய்திருக்கிறார்கள் :):) நோ டென்சன் பீ கூல் என நானும் கொன்சம் டமிலில் ஆறுதல் கூறினால் என்ன குற்றமா :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாதவன்சார் அதில் மொழிபெயர்ப்பு என்று போட்டிருக்கின்றார்கள்.அது இயங்கவில்லை. நான் அதை பெற்றுக்கொண்ட சீடியில் அழகான தமிழ் எழுத்துருக்களையும் இணைத்திருக்கின்றார்கள். ஆனால் அது அவர்களுடைய புறோக்கிராமில் இயங்குகின்றது. வேர்ட் போன்றவற்றில் இயங்கவில்லை. அவர்களுடைய புறோக்கிராமில் எழுதிவிட்டு அதை பதிவுபண்ணி ஒட்டினால் இயங்குகின்றது. எழுத்துவடிவங்களை இணைத்திருக்கின்றேன் பாருங்கள்

அழகான தமிழ் எழுத்து வடிவம் (சாம்பிள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளியீட்டாளரின் வலைத்தளத்தில் தமிழில் விரைவில் வெளிவரும் என்றுதான் போட்டிருக்கு.

web4kz.jpg

அதோடு இந்த உலாவி IE ஐ விட வேகமாக இயங்குகிறது. யாழில் கருத்துப்பதியும் போது IE ல் வரும் பிரச்சனை இதில் இல்லை. Operaவை போன்று ஒரு முகப்பிலேயே பல பக்கங்களை திறக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் இப்போதைக்கு வராவிட்டாலும் அவர்கிளன் முயற்சியை வரவேற்போம். நம்மவர் செய்யும் போது தூற்றக் கூடாது. தமிழில் சிறப்பாகத் தர வாழ்த்துவோம்

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

உந்த உலாவி சும்மா மொசில்லா வுக்கு பேரை மட்டும் மாத்திட்டுப் போட்ட மாதிரியெல்லோ கிடக்கு.... தமிழா எண்டு ஒரு உலாவி இருக்கு.... அதை ஒருக்காப் பாருங்கோ.... தமிழா.கொம் இலை பதிவிறக்கம் செய்யலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.