Sign in to follow this  
shanthy

நேசக்கரம் அமைப்பினது கடனுதவித் திட்டம்.

Recommended Posts

நேசக்கரம் அமைப்பினது கடனுதவித் திட்டம்.

logo.png
நேசக்கரம் அமைப்பானது இதுவரை காலங்களும் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவிகளைப் புலம்பெயர் தேசத்து மக்களிடம் இருந்து பெற்று அதனை நேரடியாகவும் நேசக்கரம் அமைப்பின் தாயகத்துப் பணியாளர்கள் மூலமாகவும் கொண்டு சென்று சேர்த்து வருகின்றது அனைவரும் அறிந்ததே.

நேசக்கரத்தில் பணியாற்றும் யாவரும் சேவை அடிப்படையில் ஊதியமற்று எம்முடன் இணைந்து நாம் வழங்கும் உதவிகளைக் கொண்டு போய் சேர்க்கிறார்கள்.

ஆரம்ப காலங்களில் அவசரத் தேவைகளிற்கான அடிப்படை உதவிகளையும் அவர்களது வாழ்வாதாரத் தேவைகளைக் கட்டியெழுப்பவும் வழங்கி வந்த உதவிகளில் இனிவரும் காலங்களில் சில மாற்றங்களைக் கொண்டுவர நேசக்கரம் நிருவாகம் முடிவெடுத்துள்ளது.

நீண்டகால நோக்குடன் தாயகத்தில் உள்ள மக்களின் பொருதாரத்தினை மேம்படுத்தவும் பின்னர் அதனை விரிவாக்கம் செய்யவும் கடனடிப்படைத் திட்டத்துடனான உதவி என்கிற ஒரு திட்டத்தினை முன்வைக்கவுள்ளோம். இம்முயற்சியின் முதல்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளோம். இந்தத் திட்டத்தினை இரண்டு முறைகளில் நடைமுறைப்படுத்தலாம்.

1) புலம்பெயர் உறவுகள் சிறியதொகைகளாக செய்யும் நிதியினைச் சேகரித்து நேசக்கரம் அமைப்பு ஒரு நிதித் தொகையை கையிருப்பாக்கிக் கொள்வது. அந்த நிதியினை சொந்தத் தொழில் செய்ய விரும்புவர்களிற்கு சட்ட ரீதியான உறுதி மொழிப்பத்திரத்தினைப் பெற்றுக் கொண்டு ஒரு வருடத்திற்கு வட்டியில்லாக்கடனாக வழங்குவது.
பயனாளர் அந்தக் கடனை மீண்டும் நேசக்கரம் நிதியத்திடம் திரும்ப ஒப்படைத்தல். அல்லது தொழில் செய்ய விரும்பும் இன்னொருவரிற்கு நேசக்கரத்தின் அனுமதியுடன் வழங்குதல்.

2) நேசக்கரம் அமைப்பால் தெரிவு செய்யப்பட்டு கடனுதவி பெற்று தொழில் செய்ய விரும்புபவரிற்கு புலம் பெயர் தேசத்தில் உதவ விரும்புபவர் நேரடியாகவே ஒரு தொகை பணத்தினை வழங்கலாம். கடன் உதவி பெறுவதற்கான ஆவணங்களை நேசக்கரம் அமைப்பு பயனாளரிடமிருந்து பெற்றுக் கொடுக்கும். ஒரு ஆண்டின் பின்னர் பயனாளர் உதவியவரிற்குத் திரும்பக் கொடுத்தல்.

மேலே குறிப்பிட்ட இரண்டு வழிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இப்படியான திட்டத்தின் மூலம் இதுவரை காலமும் சிறிது சிறிதாக தனிப்பட்டவர்களின் தேவைகளை மட்டுமே நிறைவேற்றி வந்த நேசக்கரம் அமைப்பானது அடுத்த கட்டமான பலரிற்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் காலப் போக்கில் நிரந்தர வருமானம் பெறக்கூடியதான தொழில் நிறுவனங்களை நிறுவி பலரிற்கு உதவும்படியாக வளர்ச்சிப்பாதையில் முன்றேலாம்.

அத்தோடு தாயக்கத்தில் உதவி பெறுபவர்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்ற பணம்தானே என்று நினைத்து பொறுப்பற்ற முறையில் செலவுகள் செய்வது நிறுத்தப்படுவதோடு பொறுப்பானவர்களாக அவர்களை மாற்றமடைய வைக்கும். அதே நேரம் உதவியவர்களிற்கும் உதவி செய்தோம் என்கிற மனத்திருப்தியுடன் அவர்களது மூலதனம் தொடர்ந்தும் பல திட்டங்களிற்கு தொடர்ச்சியாக சுழற்சி முறையில் சென்றடையும்.

கிடைக்கப்பெறும் உதவிகள் வளமையான நமது மாதாந்த கணக்கறியுடன் கடனுதவித் திட்டத்தில் சேரும் நிதிவிபரத்தையும் வெளியிடுவோம். கடன் உதவியைப் பெற்றுக் கொள்வோர் பயனாளர்களின் விபரங்களையும் எமது இணையத்தில் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிப்போம்.

உறவுகளே எமது இந்தத் திட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களோடு உங்கள் ஆதரவினையும் வேண்டி நிற்கிறோம்.

contact

Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany

Telephone: +49 (0)6781 70723
Fax: +49 (0)6781 70723

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

- நேசக்கரம் நிருவாகம் -

Edited by shanthy
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

தாயகத்திலுள்ள எமது உறவுகளுக்காக நேசக்கரம் நிறுவனத்தால் நீங்கள் தொடங்கும்

கடனுதவி அடிப்படையிலான சிறு தொழில்வாய்ப்பு மிகவும் வரவேற்கப்படவேண்டிய விடயம்.

போரினால் அல்லது இயற்கையின் சீற்றத்தினால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உடனுதவிகள் ஒரு காலவரையறையுடன் நிறுத்தப்பட்டு அவர்கள்

தொடர்ந்து சொந்தக்காலில் நிற்கும்படியான வாழ்வாதார கட்டுமானங்களை நிறுவிக்கொடுப்பதும் உதவி இஸ்தாபனங்களின் பணிகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.

தொடர்ச்சியாக வழங்கப்படும் இலவச உதவிகள் மக்களை சூனியத்துக்குள் தள்ளி போதைக்கு அடிமையானவர்கள்போல் ஆக்கும் என்பது ஆராய்ச்சிமூலம்

கண்டறிப்பட்ட உணமை. தமிழினம் ஒரு சிறந்த உழைக்கும் இனம். கடின உழைப்புக்கு பெயர்போன இனம்.

ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் வழங்கப்படும் இலவச உதவிகள் மக்களின் கைகளை கட்டிப்போட்டு அவர்களை ஒரு வட்டத்திற்குள்ளேயே சுழல வைக்கும்.

தமிழரைப் பொறுத்தவரையில் அதுதான் சிங்கள அரசின் எதிர்பார்ப்பும்.

எனவே சிறுதொழில் வாய்ப்புகள் கிடைக்க எமது உறவுகளுக்கு உதவுவோம்.

எமது மக்கள் சுயமாய் வாழ வழி சமைப்போம்.

கடன் உதவித்திட்டத்தில் எனது அனுபவங்களை வைத்து கூறவேண்டுமானால் எம் மக்கள் கடனை திருப்பிக்கொடுக்கும் வீதம் மிக குறைவு கடந்த 30 வருட ஆய்வு.

.

இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மட்டுமே ( இலங்கை மற்றும் வடக்கு கிழக்கில்) கடன் மீழ் அறவீடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தது.

.

அதே வேளை தற்போதைய சூழலில் எல்லோம் பெருமளவு தொகையினை உதவியாக நீண்ட நாளைக்கு கொடுக்கவும் மாட்டார்கள்.

அடுத்தது சுய முயற்சிக்கு கடன் கொடுத்தால்தான் பொறுப்புணர்வு வரும் இல்லாவிட்டால் செலவழித்து விடுவார்கள்.

.

கடனை மீழ் அறவீடு செய்வதற்கு சரியான பொறிமுறை இருக்க வேண்டும். உணர்வு ரீதியான நம்பிக்கை அறவீட்டிற்கு உதவாது.

.

சுழற்சி முறை, கூட்டு நம்பிக்கை பொறுப்பு பொறிமுறை எமது பிரதேசங்களுக்கு பொருத்தமானவையாக இருக்கும்.

.

இதனைத்தான் இறுதியாக சர்வதேச ஸ்தாபனங்கள், பொருண்மியம், புனர்வாழ்வு ஆகியன செய்து வந்தன. இதில் 60-70 விழுக்காடு மீழ் அறவீடு பதிவாகியது.

Share this post

Link to post
Share on other sites

வரவேற்கத்தக்க விடயம். Microcredit மூலம் உதவி செய்வது அரசாஅங்கத்தின் அனுசரனையுடன் இயங்கும் NGO மூலமாக மட்டுமே முடியும். அதிக செலவும் ஆகும்.

இன்னொரு வழியும் உண்டு. பேபி லோன் போன்று ஆனால் நேசக்கரத்தின் மேற்பார்வையுடன் நேரடியாக உதவுவது.

http://www.babyloan.org/en/projects/list

Share this post

Link to post
Share on other sites

உமை சொல்வதிலும் உண்மையுண்டு. சிந்திக்க வேண்டிய விடயந்தான். எனினும் இதுபோன்ற சிறிய கடனுதவியின் நோக்கம்

அனைத்தையும் இழந்து தவிக்கும் சனங்களுக்கு மீளவும் உழைப்பதற்கு ஒரு வழியைக்காட்டி தட்டிக் கொடுப்பதேயன்றி அதில் ஆதாயம்

ஈட்டுவதாக இருக்கமுடியாது. கடனாகக் கொடுக்கும் உதவித்தொகையை மாற்றி அதை இலவச உதவியாக கொடுத்தாலும் கூட அது திரும்பி வராத ஒன்றுதான்.

ஆகவே நேசக்கரம் இப்புதிய முயற்சியில் இறங்குவது நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து.

தமிழினம் மீண்டெழுவதற்கு எமது கல்வியும் தொழில்துறையும் விரைந்து பழைய நிலைமையை எட்டுதல் அவசியம்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

நல்லதொரு திட்டம் அத்துடன் பாரிய திட்டங்களுக்கான முதல் அடி.

ஆனால் இது சாதாரண விடயமல்ல. இதை கொண்டு நடாத்துவது மற்றும் தொடர்புகளைப்பேணுவது என்பவற்றுடன் உங்கள் மீதான நம்பிக்கையும் மிகமிக முக்கியமானவை. இவற்றுக்காக உங்களை நீங்கள் தயார்படுத்தணும்.

Share this post

Link to post
Share on other sites

பாவம் எமது மக்கள். நாமம்தான்

Share this post

Link to post
Share on other sites

கருத்திட்ட வணங்காமுடி , உமை , இணையவன், விசுகு ஆகியோருக்கு நன்றிகள்.

Share this post

Link to post
Share on other sites

கடன் உதவித்திட்டத்தில் எனது அனுபவங்களை வைத்து கூறவேண்டுமானால் எம் மக்கள் கடனை திருப்பிக்கொடுக்கும் வீதம் மிக குறைவு கடந்த 30 வருட ஆய்வு.

.

இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மட்டுமே ( இலங்கை மற்றும் வடக்கு கிழக்கில்) கடன் மீழ் அறவீடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தது.

.

அதே வேளை தற்போதைய சூழலில் எல்லோம் பெருமளவு தொகையினை உதவியாக நீண்ட நாளைக்கு கொடுக்கவும் மாட்டார்கள்.

அடுத்தது சுய முயற்சிக்கு கடன் கொடுத்தால்தான் பொறுப்புணர்வு வரும் இல்லாவிட்டால் செலவழித்து விடுவார்கள்.

.

கடனை மீழ் அறவீடு செய்வதற்கு சரியான பொறிமுறை இருக்க வேண்டும். உணர்வு ரீதியான நம்பிக்கை அறவீட்டிற்கு உதவாது.

.

சுழற்சி முறை, கூட்டு நம்பிக்கை பொறுப்பு பொறிமுறை எமது பிரதேசங்களுக்கு பொருத்தமானவையாக இருக்கும்.

.

இதனைத்தான் இறுதியாக சர்வதேச ஸ்தாபனங்கள், பொருண்மியம், புனர்வாழ்வு ஆகியன செய்து வந்தன. இதில் 60-70 விழுக்காடு மீழ் அறவீடு பதிவாகியது.

உமை உங்கள் கருத்துகள் சரியானதே. கடனைத் திருப்பிப்பெறுதல் என்பது இப்போதைய நிலமையில் மிகவும் சிரமமான ஒன்றதான். ஆனால் தொடர்ந்து மக்களை எம்மில் தங்கி நிற்க வைத்தல் எதிர்கால முன்னேற்றத்துக்கு உகந்ததாக இருக்காது.

முதற்கட்டம் நம்பிக்கை அடிப்படையில் சிலருக்கு கடனடிப்படையில் வழங்கியிருக்கிறோம். இதனை உதவியோர் தமக்குத் திருப்பித் தர வேண்டாம் ஆனால் திரும்ப கிடைத்தால் இன்னொருவருக்கு பயன்படுத்துமாறு வழங்கியுள்ளனர்.

உணர்வு ரீதியான நம்பிக்கை நீங்கள் கூறுவது போல சரிவராத ஒன்று. ஆனால் நீங்கள் கூறுகிற பொறிமுறைகள் பற்றி (மாற்று வழிகள்) பலருடன் பேசி வருகிறோம். சாத்தியமான சில சமிஞ்ஞைகள் வந்துள்ளது.

முதற்கட்ட வேலைகளின் பின்னர் அதுபற்றி விரிவாக மக்கள் மத்தியில் கொண்டு வரலாம்.

பொருளாதா கல்வி முன்னேற்ற கட்டுமானத்தை மீளமைக்காமல் போரால் பாதிக்கப்பட்டவர்களை தலைநிமிர வைக்க முடியாது. பத்தோ இல்லது பதினைந்தோ வருடங்கள் இதற்காக நாங்கள் உழைக்க வேண்டிய திட்டமிது.

வித்தை விதையிடுவோம் பார்ப்போம் வெற்றியின் விளைச்சல் எப்படியென்பதை.

இன்னொரு வழியும் உண்டு. பேபி லோன் போன்று ஆனால் நேசக்கரத்தின் மேற்பார்வையுடன் நேரடியாக உதவுவது.

http://www.babyloan.org/en/projects/list

இப்போது எமது மேற்பார்வையின் கீழ் சிலருக்கு கடன் அடிப்படையில் உதவிகளை வழங்கியுள்ளோம்.

உமை சொல்வதிலும் உண்மையுண்டு. சிந்திக்க வேண்டிய விடயந்தான். எனினும் இதுபோன்ற சிறிய கடனுதவியின் நோக்கம்

அனைத்தையும் இழந்து தவிக்கும் சனங்களுக்கு மீளவும் உழைப்பதற்கு ஒரு வழியைக்காட்டி தட்டிக் கொடுப்பதேயன்றி அதில் ஆதாயம்

ஈட்டுவதாக இருக்கமுடியாது.

இத்திட்டத்தில் இணைந்துள்ள சிலர் இத்தகைய முடிவோடு தான் உதவியுள்ளார்கள். இதில் மீள அவர்களை எழ வைப்பதற்கான முயற்சியைத் தான் செய்ய நினைக்கிறோம்.

இவ்வருட ஆரம்பத்தில் ஒரு சிறு பெட்டிக்கடைக்கான உதவியை ஒருவர் இங்கிருந்து ஒருவர் மூலம் பெற்றுக் கொண்டார். இம்மாதம் தன்னைப்போன்ற பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு சிறுகடைக்கான அரைவாசி முதலீட்டை தனது இலாபத்தில் இருந்து வழங்கியுள்ளார். அடுத்தமாதம் முதல் தனது வருவாயிலிருந்து ஒரு மாணவருக்கான கல்விக்கு உதவுவதாக ஒரு மாணவரின் விபரத்தையும் பெற்றுள்ளார் அந்தப்பயனாளி.

Share this post

Link to post
Share on other sites

வரவேற்க வேண்டிய முயற்ச்சி...பாராட்டுகள்

Share this post

Link to post
Share on other sites

நேசக்கரம் கடனடிப்படையிலான உதவியில் பெயர் குறிப்பிட விரும்பாத உறவு ஒருவர் தனது பங்களிப்பாக - 1389,21€ தந்துதவியிருக்கிறார். இவரது உதவியிலிருந்து கடன் அடிப்படையில் ப.கந்தசாமி (வவுனிக்குளம்) அவர்களுக்கு கோழிப்பண்ணை போடுவதற்காக இலங்கை ரூபா ஒருலட்சம் பெற்றுக் கொண்டுள்ளார்.

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this