Jump to content

மதியண்ணாவின் "கண்ணம்மா"


Recommended Posts

மதியண்ணாவின் "கண்ணம்மா"

இனிய ஒரு காலை நேரம். என்னை பொருத்த வரைக்கும் நன்றாக தூங்கும் பொன்னான காலம். கவலைகள், யோசனைகள் அற்ற இனிமையான பத்து வயதிற்குள் நான் காலடி எடுத்து வைத்திருந்தேன்.

"கண்ணம்மா..கண்ணம்மா.."

இந்த அம்மாவுக்கு வேலையே இல்லையா? தூங்க விடாமா எழுப்புறாங்களே!!

"கண்ணம்மா..."

இது மதி அண்ணாவின் குரல் ஆயிற்றே. மதி அண்ணா என்றாலே எனக்கு ஒரு சந்தோசம் தான்.

எங்கள் வீட்டுக்கு முன்னால் தான் அண்ணாக்களின் முகாம் இருந்தது. நான் பிறந்ததில் இருந்து எனக்கு தெரிந்தது எல்லாம் அண்ணாக்களை தான்.

நாட்டு பிரச்சனையால் உறவுகள் எல்லம் இடம் பெயர்ந்து செல்ல தொடங்கிய கால கட்டம். உறவுகளை விட உயிராய் எமை காக்கும் அண்ணண்களை தான் நான் அதிகம் நேசித்தேன்..நேசிக்கிறேன்.

மதி அண்ணா எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இங்கு தான் இருக்கிறார். நல்ல உயரம், கூர்மையான கண்கள். துவிச்சக்கர வண்டியில் போகும் போதெல்லாம் பார்த்து இருக்கிறேன். கண்கள் நேரே வீதியை பார்த்தாலும் சுற்றிவர நடப்பதை கவனித்து இருப்பர். (நான் வெளியே செய்யும் குளப்படி எல்லம் இப்டி தான் அவருக்கு தெரிய வருவது).

நன்றாக பாடுவார், கவிதை சொல்லுவார். பாரதி கவிதைகள் என்றால் அப்படி ஒரு ஈடுபாடு.

"மதிண்ணாட அம்மா எங்க? அப்பா எங்கே?" என நான் சின்னனிலே கேட்டதுண்டு.

"எனக்கு எல்லாமெ நீ தானே கண்ணம்மா" என பதில் சொல்லுவார். அந்த வயதில் அதற்கு மேல் நானும் கேட்டதில்லை. பின்னர் அம்மா கூற கேட்டு இருக்கிறேன், அண்ணாவிற்கு யாருமே இல்லையாம் எங்களை தவிர.

"கண்ணம்மா இன்னும் நித்திரையால எழும்பலையா அக்கா?" மதிண்ணாதான், அம்மாவிடம் கதைக்கிறார்.

என்னுடைய மதிண்ணாவை விட தூக்கம் பெரிதா என நினைத்ததால், படுக்கையை விட்டு எழுந்து மதிண்ணாவை தேடி முற்றத்துக்கு சென்றேன்.

மதிண்ணாவிடனும் சரி,மற்ற அண்ணக்களும் சரி வீட்டுக்குள் வரமாட்டார்கள். நாங்கள் எவ்வளவே கெஞ்சியும் பயனில்லாமல் போகவே. முற்றத்திலேயெ இருக்கைகள், மேசை அதற்கு ஒரு நிழல் தர குடை என அமைத்து இருந்தார் எனது தந்தை.

வாசல் படியில் நின்று கொண்டு மதிண்ணாவை பார்த்து சிரித்தேன்.

"வணக்கம் கண்ணம்மா" என கூறி அழகாய் புன்னகைத்தார்.

"வணக்கம் மதிண்ணா" என கூறி ஓடி சென்று அவரின் முன் இருந்த மேசையில் ஏறி உர்டார்ந்து கொண்டேன்.

"மதிண்ணா மதிண்ணா மீன் தொட்டி எப்ப செய்து தருவிங்க?" என தூக்க கலக்கத்திலும் எனக்கு வேண்டிய விடயத்தை பற்றி கேட்டேன்.

"அதுக்கு தானே வந்து இருக்கிறேன்" என கூறி ஒரு சின்ன பெட்டியை தூக்கி நான் இருந்த மேசைக்கு மேல் வைத்தார்.

"அய்ய்ய் மதிண்ணா என்டா என்னுடைய மதிண்ணா தான், இருங்க கண்ணவை கூட்டி வாறேன்" என கூறி சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள பக்கத்துவீட்டுக்கார நண்பன் கண்ணண் வீட்டிற்கு செல்ல ஆயுத்தம் ஆனேன்.

மேசையில் இருந்து என்னை இறங்க விடாமல் "அது பிறகு போகலாம் நாங்கள் இப்ப கதைப்பம். இன்டைக்கு கண்ணம்மாவோட தான் மதிண்ணா சாப்பிட போறேன்"

"அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் உண்மையாவா மதிண்ணா??" எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மதிண்ணாவை என்னுடம் சாப்பிட அழைத்த போதெல்லாம் தட்டி கழித்தவர். இன்று தானே சாப்பிடலாம் என கேட்டால் ஆச்சர்யமாக இருக்காதா??

"அம்மா சமைக்கிற வரைக்கும் நாங்கள் கதைச்சு கொண்டு இருப்பம்"

"ஓம் மதிண்ணா இந்த முறை நாங்கள் பட்டத்துக்கு லைற் போடுவமோ? ரவி போட போறானாம், அதைவிட நாங்கள் நல்லா செய்யவேணும்..என்ன?"

"அதுக்கேன்ன செய்திட்டா போச்சு. இதென்ன தலை முடி எல்லம் இப்படி ஓடி போய் சீப்பு எடுத்து வாங்கோ" என மதி அண்ணா கூற, மறுகணமே ஓடி சென்று சீப்போடு நான் வர,

"இன்டைக்கு அண்ணா தலை இழுத்துவிடுறன், ஆனா கண்ணம்மா இனிமேல் நீங்களே பழக வேணும்" என கூறி எனக்கு தலை வாரிவிட்டார்.

நான் பல் துலக்கி முகம் கழுவி வரவும் அம்மா சமைத்துமுடிக்கவும் சரியாக இருந்தது.

"கண்ணம்மா அண்ணாவுக்கு கரைச்சல் குடுக்காம சாப்பிட வேணும்" இது என்னுடைய தாயார். எப்பவும் எதாவது சொன்னால் தானே அம்மாக்கு சரி!!

ஆனால் அம்மாவை குறை சொல்ல கூடாது. வீட்டுக்கு ஒரு பிள்ளை நான். பெரியம்மாக்களின் பிள்ளைகள் அனைவரும் ஆண்கள் தான். எனக்கு எல்லா இடமும் தனி மரியாதை தான். சின்னனில காய்ச்சல் வந்து கஸ்டபட்டனானாம். எல்லாம் சேர்ந்து எனக்கு சின்னனில இருந்து செல்லம் கூட தான். அதனாலேயே நான் கொஞ்சம்...கொஞ்சமென்ன ? நிறையவே குளப்படி தான். சொல்லு கேக்கிற பழக்கம் என்றாலே எனக்கு என்ன என்று தெரியாது.

"பரவாயில்லை அக்கா" என மதியண்ணா சொல்ல, "வவவவே இப்ப கேட்டிங்களோ அம்மா? மதிண்ணா எப்பவும் என்ட பக்கம் தான்"

"மதி, இவளுக்கு "கண்ணம்மா" என்று நீ பெயர் வைத்து இருக்க கூடாது. "வாயாடி" என்பது தான் நல்ல பொருத்தம். ஏதோ அண்ணணாச்சு தங்கை ஆச்சு" என கூறி அம்மா நகர, அண்ணாவும் நானும் சாப்பிட்டு முடித்தோம்.

ம்ம்ம் சொல்ல மற்ந்திட்டனே, எனது இயற்பெயர் "காவ்யா". மதியண்ணா வைத்த பெயர் தான் "கண்ணம்மா". பாரதியின் ரசிகன் ஆயிற்றேன். பின்னர் எனது இயற் பெயர் மற்ந்து போக நான் "கண்ணம்மா" ஆகிவிட்டேன் அனைவருக்கும்.

"மதிண்ணா பிறகு வாறன். இப்ப மீன் தொட்டி காட்ட கண்ணனை கூட்டி வர போறேன்" என நான் கூறவும் "சரி ஆனா போக முதல் ஒரு தடவை எங்கட குடும்ப பாட்டு சரியா?

அதென்ன குடும்ப பாட்டு என்று கேக்கிறீங்களா? சின்னனில மதியண்ணா சொல்லி தந்த ஒரு பாட்டு தான். நாங்க எப்ப கண்டாலும் முதலில் அதை தான் பாடுவது வழக்கம்.

"சரி", என நான் கூற அண்ணாவின் கைகளை பிடித்து கொண்டு...

" I love you

You love me

We are a big family

With a great big hug

and

Kisses me to you

Wont u say you love me too?""

பாடி முடித்துவிட்டு மேசையில் இறங்கி ஓடி போன என்னை "கண்ணம்மா" என மதிண்ணா அழைக்கவும் திரும்பி பார்த்தேன். சிரித்தேன் "ஓம் மதிண்ணா"

"இது போதும் எனக்கு, நான் போய்ட்டு வாறேன் கண்ணம்மா"

"வேலையோ? மாமாவை பார்க்க போறிங்க்ளோ?" . சின்ன வயசில இருந்து அண்ணாக்களின்ட பொறுப்பளர்களை நான் "மாமா" என்று தான் அழைப்பது வழக்கம்.

"ஓம் அண்ணா போய்ட்டுவாறன்" என மதி அண்ணா சொன்னவுடன், அதற்கு மேல் பொறுமை இல்லாமல் கண்ணணை தேடி போய்விட்டேன்.

அன்று முழுவதும் மதிண்ணாவை காண கிடைக்கவில்லை. ஆனால் என்னிடம் சொல்லி தானே மாமாவை பார்க்க போனார். அதற்கு மேல் யோசிக்க எனக்கு அன்று

வயசிருக்கவில்லை.

மறு நாள் காலை நான் நித்திரை விட்டு எழும் நேரம், கண்ணணின் அம்மாவின் குரல் "ராஜி ஆமிட படகை அடிச்சிருக்கினம் போல. எங்கட காம்பில இருந்து தான் பெடியள் போனதாம். கூட பழகின பிள்ளையள். மனசு அடைக்குது"

இதே போல அம்மாவும், கண்ணனிண் அம்மாவும் பல தடவைகள் பேசி இருக்கினம். அப்பொழுது கூட எனக்கு அது பெரிதாக தெரியவில்லை.

போராட்டம் என வரும் போது கண்ணீருக்கு இடமில்லை, வீரத்திற்கு தான் இடம் என என் மதியண்ணா எப்பொழுதும் சொல்வதுண்டு. அதை கேட்டு வளர்ந்த எனக்கு அண்ணாக்கள் மாவீரர் ஆகும் போது அழுகை வருவதில்லை.

அன்றும் அப்படி தான், போனது என் மதியண்ணா தான் என தகவல் வந்த போது அனைவரும் அழுதார்கள். எனக்கு ஏனோ அழுகை வரவில்லை. அது எனோ எனக்கு இன்று வரை புரியவுமில்லை.

முதலில் என்ட மதியண்ணா மாவீரர் என நினைத்த போது பெருமை தான் மேலோங்கி நின்றது.

பின்னர் நான் வளர வளர தான் மதியண்ணாவின் பிரிவால் கஸ்டபட்டேன். பல இரவுகள் அழும் என்னை பார்த்து "அண்ணா பார்த்து கொண்டு தானே இருப்பான். கண்ணம்மா அழுவது மதிக்கு பிடிக்கது தானே?" அம்மாவின் அரவணைப்பில் சற்றே ஆறுதல் அடைவேன்.

அது தானே நான் எதற்காக அழ வேண்டும்? மாவீரர்கள் எப்பொழுதும் சாவதில்லை. மரணம் அவர்களை நெருங்குவதில்லை. மதியண்ணா கடவுளாகிவிடார். கண்ணுக்கு தெரிவதில்லை ஆனால் என்னுடம் தான் என்றும் இருப்பார். என்னில் ஒரு நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது.

போரின் தாண்டவத்தில் எத்தனையோ இடங்கள், எத்தனையோ நாடுகள் எங்கு போனாலும் நான் எடுத்து செல்வது மதியண்ணாவின் மீன் தொட்டிதான்.

அன்றிலிருந்து இன்று வரை எங்கட வீட்டு சாமிபடங்களுடம் மதிண்ணாவின் படமும் வந்தாகிவிட்டது. எங்களை காப்பவன் தானே சாமி !!

கதை இங்கு முற்று பெற, மாவீர புகழ் தொடர்கிறது.

நினைவுகளில் மூழ்கியபடி

தூயா

Link to comment
Share on other sites

காம்புக்கு பக்கத்து வீடுகளில இருக்கிற எல்லாற்ற வீட்லயும் நடக்கறதை சொல்லியிருக்கிறீங்கள் தூயா.உப்பிடித்தான் எங்கட வீட்டு முத்தத்தில முதல்நாள் இரவு இருந்து கதை கதையென்று கதைச்சுப்போட்டு அடுத்த நாள் காலமை களத்துக்குப் போன நாலு பேர் திரும்ப வரேல்ல.ஒராள் பாம்பு கடிச்ச காயத்தோட வந்தவர்.

கண்ணம்மா குடுத்து வச்சவா தான்.

Link to comment
Share on other sites

ஆகா தூயா நம்ம மதி அண்ணாவை நினைவுக்கு கொண்டு வந்திட்டீங்கள். உங்கள் மதி அண்ணா வார்ணி(Barney) பாட்டு எல்லாம் சொல்லித்தந்து இருக்கார். நம்ம மதி அண்ணா நான் பாட எடுத்தாலே காதை பொத்திக் கொண்டு ஒடுவார்(லொள்ளுக்கு) ஆனால் மாலை கட்ட பழக்கியவர். அது தான் அவர் மாவீரார் ஆன போது மாலைகளால் பெட்டியை நிரப்பி தான் அனுப்பி வைத்தோம்.

கதையை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

தூயா புலி மாமா புலி மாமா நான் வரட்டா போராட பாட்டு உங்களுக்கு விருப்பமா?பருத்தித்துறையில ஒரு கப்பலடிச்ச நேரம் அந்தக்கப்பலையோ அல்லது அத மாதிரி ஒரு கப்பலோ செய்து கடற்கரையில காட்சிக்கு வச்சிருந்தவை.நான் நினைக்கிறன் வாமன் அண்ணா அதிலதான் வீரச்சாவடைந்தவர் என்று.அந்த நேரம்தான் புலி மாமா பாட்டு அறிமுகப்படுத்தினவை.

Link to comment
Share on other sites

ஓம் இந்த பாடல் தானே சின்ன வயசில நாங்கள் எப்பவும் பாடுவது. எங்கட மாமக்கள் வீட்டுக்கு வந்த இந்த பாட்டு தான் பாடிகாட்டுவது. எனக்கு மிகவும் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா,

"கண்ணம்மா" மூலம்

பாரம் சுமந்து தூரம் போன

பலரை

நினைவுக்குக் கொண்டு வந்து

நிழலாட வைத்திட்டீர்கள்...

நிஜங்கள் வாசிக்க யோசிக்க

இனிமையான சுமைகள்தான் என்பது

மீளமீள வருடிப்போகிறது...

இனிய உறவுகளே,

"கூட" வாழ்ந்தவர்கள்,

"அயலில்" உறவாடியவர்கள்,

விரும்பியோ/விரும்பாமலோ "அலைக்கழித்தவர்கள்,

கூடப் "படித்த"வர்கள்,

கவிதை/பேச்சுப்போட்டி/விளையாட்டுப்போட்டிகள்/

கலை நிகழ்ச்சிகள் மூலம் "கவர்ந்த"வர்கள்....

என எண்ணற்ற நிலைகளினூடு

எம்மை ஆகர்சித்த "உறவுகளை"..

தாயகத்தில் படைக்கட்டுப்பாடுப் பகுதிகளிலும்,

பின் கொழும்பிலும் கண்டும்

"உறவாட"(ஒரு வார்த்தைதானும் பேச )

முடியாமல் போன துன்பியல் காலங்கள்...

செய்திகள் மூலம் கேள்விப்பட்டுக் கூட

"வாய் விட்டுப் பெயர் சொல்லி அழ முடியாது" ,

கூட இருந்த உறவுகளைக் கூடத் தேற்ற முடியாமல் போன கணங்களை மீட்டுத்தரும்

உறவுகள் அனைவருக்கும்....

பணிவு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா கதை மனதை உருக்கிவிட்டது. நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்க்கள்.

Link to comment
Share on other sites

உண்மை சம்பவங்களை கலந்து எழுதியிருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். மனதை உருக்கி விட்டது. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¾¨ÄôÒ "Á¾¢Âñ½¡Å¢ý ¸ñ½õÁ¡" ±ýÀ¨¾ Å¢¼ "¸ñ½õÁ¡Å¢ý Á¾¢Âñ½¡" ±ýÚ Á¡È¢ Åó¾¢Õó¾¡ø «¾¢¸õ ¦À¡Õò¾Á¡¸ þÕó¾¢ÕìÌõ. ¬í¸¢Ä Barney À¡¼ø ºüÚõ ¦À¡Õò¾Á¢øÄ¡¾Ð. ²ý ´Õ À¡Ã¾¢Â¡÷ À¡¼¨Ä ±ÎòРŢðÊÕì¸ §ÅñÊÂо¡§É? ±ýɾ¡ý þÕó¾¡Öõ ¸¨¾Â¢ø ´Õ ¯Â¢§Ã¡ð¼õ þÕ츢ÈÐ, Å¡úòÐì¸û!

Link to comment
Share on other sites

நன்றி சகோதரங்களே. அடுத்த கதையில் நீங்கள் சுட்டிக்காட்டிய குறைகளை நிச்சயமாக திருத்திகொள்வேன்.

அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தன்ட மனிசனை பொங்கல் நாள் அதுவுமா அழ வச்சு போட்டன் என்று பொன்ஸ் கோவிக்காட்டி சரி தான் ;)

மிக்க நன்றி முகம்ஸ்

Link to comment
Share on other sites

தூயா உங்கள் கதை உண்மையில் கண்களை பனிக்க வைத்து விட்டன.

இவ்வாறு போன அண்ணாக்கள், அக்காக்கள் எத்தனை பேர் அவர்களை மறக்கவும் முடியாது, நினைக்கவும் முடியாது தவிப்பவர்கள் எத்தனை பேர் :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

நிஜம் தான் சந்தியா..மனதில் என்றும் பச்சை குத்தியது போல்....

Link to comment
Share on other sites

உன்மை சம்பவங்களை வைத்து நீங்கள் எழுதும் கதைகள் நன்றாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள் தூயா.

முகாம்களுக்கு அருகில் வசித்த போது இவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மிக இனிமையாக அன்புடன் பழகுவார்கள், அவர்கள் இப்போது உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் தூயா உங்கள் கதை உண்மையில் கண்களை ஈரமாக்கி விட்டது. :lol:

Link to comment
Share on other sites

உன்மை சம்பவங்களை வைத்து நீங்கள் எழுதும் கதைகள் நன்றாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள் தூயா.

முகாம்களுக்கு அருகில் வசித்த போது இவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மிக இனிமையாக அன்புடன் பழகுவார்கள், அவர்கள் இப்போது உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியாது.

நன்றி மதண்ணா.

இப்ப கொஞ்சம் எழுத்து பிழை குறைவுதானே??

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தூயா உங்கள் கதை உண்மையில் கண்களை ஈரமாக்கி விட்டது. :lol:

நன்றி விஸ்ணு. உண்மை தான் நெஞ்சை விட்டு அகலாத நினைவுகள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் தூயா.

இக்கதை என் நண்பனை மனக்கண்ணில் கொண்டுவந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இப்ப கொஞ்சம் எழுத்து பிழை குறைவுதானே??

இப்போது எழுத்துபிழை குறைவு தேறிவிட்டீர்கள் அடுத்த கதை எப்போ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா கதை ரொம்ப நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்......

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மிக விரைவில் மதண்ணா :( நன்றி

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைச்சம்பவங்களை வைத்து நீங்கள் எழுதும் கதை நன்றாக இருக்கிறது.

இப்படித்தான் இந்திய இராணுவ காலத்தில் எங்கள் ஊரில் தங்கி இருந்தவர்கள் யாபகத்துக்கு வருகிறார்கள். ....

Link to comment
Share on other sites

இத்தனை நாட்களுக்கு பின்னரும்...நீங்கள் கதையை வாசித்து பதில் சொன்னது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு..கந்தப்பு, மிக்க நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.