Jump to content

ஈழப் போர் தந்த சாபங்கள்- உண்மைச் சம்பவம்!


Recommended Posts

இருபத்தியிரண்டு ஆண்டுகளாக உலக அரங்கில் விடுதலை கோரிய நாடு ஒன்று, இன்றைய கால கட்டத்தில் தென் சூடான் எனும் நாமத்தோடு சுதந்திரக் குழந்தையாகப் பிறந்திருக்கிறது. முப்பது வருடத்திற்கும் மேலான ஆயுதப் போராட்டத்தில்- உலகின் பல விடுதலை அமைப்புக்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டியவர்கள் எனச் சொல்ல்லப்படும் ஈழத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று அமைப்பு- வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏதுமின்றி வேரோடு வெட்டிச் சரிக்கப்பட்டிருக்கிறது.

தென் சூடானில் ஈழத்தினைப் போலப் பல்வேறு சிறு சிறு பிரிவினைவாதக் குழுக்கள்- துணைக் குழுக்கள் இல்லாமையும், சுய நலம் கலந்த மக்கள் இல்லாது பொது நலத்தோடு போர் செய்து விடுதலை எனும் நாமத்தைத் உயிரணுவில் ஏற்றி வாழ்ந்தோரும் வாழ்ந்ததால் தான் இவை சாத்தியப்பட்டது எனலாம். இத்தோடு உலக வல்லாதிக்கத்தின் அரவணைப்பும் அவர்களின் சுதந்திரப் பிறப்பிற்கு படிக்கற்களாக அமைந்திருக்கிறது.

ஈழப் போர் எம் இடத்தில் பல வெளித் தெரியாத- வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற முடியாத- கொடூரமான விடயங்களையும் மறைவாக விட்டுச் சென்றிருக்கிறது. ஈழத்தில் வாழ்வோரும் சரி, ஈழத்துக்காக வாழ்கிறோம் என்ற கோட்பாட்டுடன் ஈழத்திற்கு அப்பால் வாழ்வோரும் சரி அடிக்கடி போராட்டம் என்கின்ற விடயத்தில் ஆளாளுக்கு வேறுபடும் மனோ நிலைகளைக் கொண்டிருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இதன் ஒரு வடிவம் தான் நான் கீழே உங்களோடு பகிரவிருக்கும் ஒரு சம்பவம்.

வெளி நாட்டில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர் ஒருவருக்கு - ஈழத்தின் வடபகுதியில் வசிக்கும் படித்த அழகிய மணமகள் தேவை எனும் நிலை உருவாக, எங்கள் வீட்டிற்கு அண்மையில் உள்ள ஆறுமுகம் எனும் கல்யாணப் புரோக்கரைத் தொடர்பு கொண்டார்.

மாப்பிளைக்குப் பொருத்தமாக அவரது ஊரான வட்டக்கச்சியினைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படத்தைஅனுப்பியதும், அவரும் ஓக்கே சொல்ல- புரோக்கரும் ஜாதகத்தினைப் பார்த்து- டபுள் ஓக்கே- இனிமேல் சம்பந்தம் பேசி முடிக்க வேண்டும் எனும் நிலையில் மாப்பிளை- பெண் வீட்டார் பகுதியினை ஒன்றாகச் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யத் தொடங்கினார்.

எங்கிருந்தோ புற்றீசல் போல மாப்பிளையின் உளத்தில் ஞானோதயம் கிட்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். திடீரென வெளி நாட்டவர் ஆறுமுகம் புரோக்கருக்கு போனைப் போட்டார்.

வெளி நாட்டவர்: ஆறுமுகம் அண்ணை; பொம்பிளை இறுதி யுத்தம் வரைக்கும் வன்னியில் தானே இருந்திச்சு.

புரோக்கர்: ஓம் தம்பி.

வெளிநாட்டவர்: அப்படியென்றால் ஐயா. யுத்தத்திற்குப் பின்னர் அவள் அகதிகள் தடுப்பு முகாமில் தானே இருந்திருக்க வேண்டும்.

புரோக்கர்: ஓம் தம்பி. எல்லாச் சனமும் அகதிக் காம்பிலை இருந்ததுகள் தானே.

வெளிநாட்டவர்: அப்படியென்றால், அவள் ஆமிக்காரங்க கூடப் படுக்காமல் இன்றும் கற்போடு இருக்கிறாள் என்று நிரூபிக்க முடியுமோ?

புரோக்கர்: என்ன தம்பி நீங்க இப்படிச் சொல்லுறீங்கள்? அவள் நல்லாப் படிச்ச- ஒரு டீச்சர்.

நல்ல தங்கமான பிள்ளை அவள். நான் கூட அவளை வவுனியா நலன்புரி முகாமில் பார்த்திருக்கிறேன். பொட்டை(பெண்) தாயாக்கள் கூடத் தான் இருந்திச்சு.

வெளிநாட்டவர்: எனக்கு அந்தக் கதையெல்லாம் தேவையில்லை. இங்கே வெளிநாட்டிலே வன்னியில் போர்க் காலத்தில் இருந்த பொம்பிளையளைக் கலியாணம் கட்டினால் மதிக்கமாட்டாங்கள் ஐயா.

அதாலை எனக்கு இந்தக் கலியாணம் வேண்டாம். அத்தோடு வன்னி இறுதி யுத்தத்தின் பின்னர் முகாமில் இருந்த பெண்களைப் பற்றி இங்கே ஒரு மாதிரியாகத் தான் பேசுறாங்க. எனக்கு இந்தக் கலியாணத்திலை விருப்பமில்லை.

புரோக்கர்: நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்கள் தம்பி...வையடா போனை....................................மவனே...........அவள் எனக்குத் நன்றாகத் தெரிந்த பிள்ளை. அவளைப் போய் நீ தப்பாகப் பேசுறியே ராஸ்கல்.... கட்...கட்.......கட்...

மேற்படி சம்பவம் யாழ்ப்பாணத்திற்கும்- வன்னிக்கும் என மாறி மாறி ஓடித் திருமணப் பொருத்தங்களை மேற்கொள்ளும் ஆறுமுகம் புரோக்கரால் அண்மையில் எனக்குச் சொல்லப்பட்ட விடயங்கள்.

இந்தச் சம்பவத்தில் வரும் வெளிநாட்டு நபர், மூச்சிலும் பேச்சிலும் ஈழ விடுதலையினை நேசிக்கும் ஒரு நபர். அத்தோடு ஈழம் பற்றிய செய்திகள் முதற் கொண்டு போராட்ட விடயங்கள் வரை பகிரும் முன்னணித் தமிழ் இணையத் தளம் ஒன்றின் சொந்தக்கார். இவர்களின் நடவடிக்கைகள் ஈழம் என்பது இவ்வளவு அவலங்களின் பின்னரும் ஒரு வியாபாரப் பொருளாகத் தான் இவர்கள் பார்வையில் இருக்கிறது என்பதனை உணர்த்தி நிற்கிறது எனலாம்.

ஈழப் போர் இப்படி எத்தனை வெளித் தெரியாத சாபங்களை எங்கள் சகோதரிகளிற்கு கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறது.

தீயில் எம் தேசம் கருகையில்

திரை மறைவில்

தீக்கதிர்கள் வாங்கி

பாயில் சுருட்டி மறைதனுப்பினீர்கள்

மூச்சில் முழு மனதாய்

நாமம் ஈழம் எனச் சொல்லி

மகிழ்ந்திருந்தீர்!

இன்றோ காட்சிகள் யாவும்

கலைந்த பின்னர்;

திரை விலகிக் கொள்ள

சண்டைப் படங்கள் பற்றிய

சத்தங்கள் ஓய்ந்து விட;

சல்லாபம் பற்றிப் பேசுகீறிர்- எம்

சோதரிகள் கற்பிற்கு

நிறுத்தற் படி கேட்கின்றீர்!

விடுதலையின் பெயரால்

விபச்சாரம் செய்தோரே

விடுதலைக்கு எம்மை வீழ

வைத்த பெருச்சாளி கூட்டமே

போதும்! போதும்! இனிமேல்

பேச எம்மிடம் ஏதும் இல்லை!

எஞ்சியுள்ளோராவது

ஏகாந்த பெரு வெளியில்

வாழ்ந்து தொலையட்டும்

விட்டு விடுங்கள்!!

http://www.thamilnattu.com/2011/07/blog-post_10.html

Link to comment
Share on other sites

படத்தை தாங்கோ நான் கட்டுகின்றேன்,இல்லை எனது மகனுக்கு கட்டிவைக்கின்றேன் என பச்சை புள்ளிக்கு இஞ்சை கொஞ்சப்பேர் அடிபடபோகினம்.

Link to comment
Share on other sites

இந்த கதை மூலம் தாயக மக்களை நேசிப்பவர்கள் அதை உண்மையாக செய்யவேண்டும் என்பதே பொருளாக தெரிகின்றது. இந்த சம்பவம் ( உண்மைக்கதை) ஒரு துயர் நிறைந்த சமூகத்தின் தொடரும் துன்பியலின் ஒரு அங்கம்.

ஏமாற்றுபவர்கள் எல்லா இடமும் தான் உள்ளனர்.

ஆனால், தாயக மக்களின் விடுதலையை நேசித்த ஒருவர், அந்த துன்பத்தில் தானும் திருமணம் மூலம் பங்கெடுக்க நினைத்திருக்கின்றார். அது பாராட்டப்பட வேண்டிய விடயம். ஆனால், அவரோ ஏதோ ஒரு காரணத்திற்காக பின்னர் குழப்பம் அடைந்துள்ளார். அதனால் அவர் தவறு இழைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்கான ஒரு ஈழவிடுதலைவிரும்பி இக்காரியத்தை செய்திருக்கவே மாட்டான்.இது நிச்சயம்,நிஜமானது.

நாய்க்கு எங்கு அடிவிழுந்தாலும் காலைத்தூக்கி நொண்டிநொண்டி நடப்பது போல்.........அன்று தொடக்கம் இன்று வரைக்கும் புலியையே குற்றம் சாட்டி வயிற்ரைகழுவும் அரைகுறைகளுக்கு பிறந்த செல்வனாய்த்தானிருக்கும் :lol: .இதுவும் நிச்சயம்,நிஜமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டவர்: எனக்கு அந்தக் கதையெல்லாம் தேவையில்லை. இங்கே வெளிநாட்டிலே வன்னியில் போர்க் காலத்தில் இருந்த பொம்பிளையளைக் கலியாணம் கட்டினால் மதிக்கமாட்டாங்கள் ஐயா.

அதாலை எனக்கு இந்தக் கலியாணம் வேண்டாம். அத்தோடு வன்னி இறுதி யுத்தத்தின் பின்னர் முகாமில் இருந்த பெண்களைப் பற்றி இங்கே ஒரு மாதிரியாகத் தான் பேசுறாங்க. எனக்கு இந்தக் கலியாணத்திலை விருப்பமில்லை.

அந்த வெளிநாட்டவரின் வாழ்வை அலசிப்பார்த்தால்............... தான் தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருக்குலைந்த எமது தேசத்தில்,

கருக்கட்டும் சாபங்கள் இவர்கள்!

செருக்குற்றுத் திரியும், இவர்களை,

நெருப்பாக மாறி எரிக்கட்டும் பெண்மை!

செருப்பெடுத்து அடிக்கட்டும், இவர்களை!

ஆரம்பமே இப்படியெனில், எவ்வளவு,

கோரமாய் அமைந்திருக்கும், அவள் வாழ்வு?

சோரம் போகாமல் தப்பினாள்!

ஆறுமுகம் கொடுத்த நெத்தியடி,

சேறாகப் பதியட்டும், அவன் முகத்தில்!!!

இணைப்புக்கு நன்றிகள் வீணா!

Link to comment
Share on other sites

நன்றிகள்

Link to comment
Share on other sites

இந்த மாப்பிள்ளை பருவாய் இல்லை. அங்கை போய் திருமணம் என்று போலி நாடகம் ஆடிவிட்டு வர வில்லை. எத்தனியோ பேர் இந்தியாவில் உட்பட மணம் செய்துவிட்டு பிடிக்க வில்லை எண்டு விட்டுவிட்டு வந்து இருக்கிறார்கள். முதல் திருமணமான பெண்ணையே முழுதாக டிவோர்ஸ் செய்யாமல் புதிது புதிதாய் கல்யாணம் செய்து இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை நன்மையாகத்தான் பார்க்கின்றேன்

ஒரு அப்பாவிப்பெண் தப்பி விட்டாள் என்பதற்காய்................

Link to comment
Share on other sites

நான் இதை நன்மையாகத்தான் பார்க்கின்றேன்

ஒரு அப்பாவிப்பெண் தப்பி விட்டாள் என்பதற்காய்................

மெத்தச்சரி.

உண்மையாக தாயகத்தை நேசிக்கும் ஒருவன் இப்படி செய்ய மாட்டான்.

வெளிநாட்டில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்று கிளறினால் வண்டவாளம் வெளியில் வரலாம்.

ஆதிப்பன் சொன்னது போல் இப்போது ஊரில்/இந்தியாவில் போய் கல்யாணம் செய்த கையோடு, நகை, நட்டுகள், காசுடன் கம்பி நீட்டியாதாகவும் கதைகள் இருக்கின்றன. வெளிநாடு என்ற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு சிலதுகள் செய்யும் அட்டகாசம் தாங்கமுடிவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.