Jump to content

பச்சைப் பன்றிகள்


Recommended Posts

_41208332_glow203.jpg

இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் வழி கணணிகளின் மின்னியல் இலத்திரனியல் உபகரணங்களின் ஆதிக்கம் ஒரு பக்கம் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் உயிரியல் தொழில்நுட்பத்தின் வழியும் உலகம் பலப்பல புதுமைகளை சாதித்து வருகிறது..!

கடலில் வாழும் ஜெலி (விழுது மீன்கள்) மீன்களில் இருந்து பெறப்பட்ட டி என் ஏ (DNA) அலகுகளை பன்றி முளையத்துள் (embryo) செலுத்தி பச்சை நிறப் புளொரொளிர்வுப் (fluorescent) பன்றிகளை தாய்வான் நாட்டு உயிரியல் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். பகலில் பச்சையாகவும் இரவில் நீலமாகவும் இந்தப் பன்றிகள் மின்சூல் அளவு ஒளியை வெளிவிட்டபடி உலா வருகின்றனவாம்.!

பன்றிகளின் உடற்தொழிற்பாட்டுக்கும் மனிதர்களின் உடற்தொழிற்பாட்டுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருப்பதால் இந்தப் புளொரொளிர்வுப் பன்றிகளை பயன்படுத்தி மனிதனில் உள்ள நோய்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்தப் பன்றிகளை சாதாரண பன்றிகளுடன் இனக்கலப்புச் செய்வதன் மூலம் இன்னும் பல புளொரொர்வுப் பன்றிகளை சுலபமாகப் பெறவும் முடியும்..!

தகவல் ஆதாரம் இங்கு ... http://kuruvikal.blogspot.com/ - படம் - பிபிசி.கொம்

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி குருவிகள். நீங்கள் பறந்து திரிந்தாலும் விஷயத்தோடுதான் பறந்து திரிகிறீர்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி குருவிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.