Jump to content

நோர்வே தலைநகரில் பாரிய குண்டுவெடிப்புகள்


Recommended Posts

எனக்கு என்னனெண்டு தெரியேல்லை?????

இப்ப கொஞ்ச நாளாய் எங்களுக்களோடை கூட நிண்டு கழுத்தறுத்தவங்களுக்கும்.........சிங்களவங்களுக்கு மிண்டு குடுத்தவங்களுக்கும்...கரையான் அரிக்கிறமாதிரி பிரச்சனையளும் நைசாய் வந்துகொண்டிருக்குது....எல்லாம் அவன் செயல் என்னாடுடைய சிவனே போற்றி :(

நோர்வே அசம்பாவிதமாய் நீங்க இந்த கருத்தை சொல்லி இருந்தா...

மிக மிக கொடிய ஒரு கருத்து , குமாரசுவாமிங்கண்ணா!

எமக்கு வந்த வழியை நாம் சரியாக பயன் படுத்தவில்லை! இதுவே தோல்வியின் முழு முதற்காரணம்!

புலம்பெயர்ந்து இன்று அந்நாட்டு பிரஜைகளாக வாழும் ஒவ்வொரு தமிழனும்..தாம் வாழும் நாட்டு தேசிய கொடிக்க்கு வணக்கம் செய்ய கடமை பட்டவன் மட்டுமல்ல.............அந்நாட்டில் இடம்பெறும் நன்மை தீமைகளில் தனது உணர்வுகளை சமமாய் பகிர்ந்துகொள்ளவேண்டியவனுமாகிறான்!

அதனாலதான் எல்லாம் முடிஞ்சுபோச்சு என்று நாங்க விரக்தி ஆனாலும் , இன்னும் முழுசா முடியல்லைன்னு சிங்களவன் பயப்படுறான்,அதற்க்கு காரணம் புலம் பெயர் தமிழர்கள்!

அந்த பயத்தை அவனுக்கு கொடுக்க வைத்தது எமக்கு வாழ்வு தந்த நாடுகள்!

இரண்டாம் உலகமகா யுத்ததின் பின்னர் ,இப்போதான் ஐரோப்பாவில் குண்டு வெடிக்குது!

குண்டு சிதறல்களினாலாகும் வலி , எங்களை விட அவர்களுக்குத்தான் நன்னா தெரியும்.!....அதனாலாதான்.............எங்களுக்கு அகதி அந்தஸ்தை பாரிய அளவில் அள்ளி வீசிட்டு , அதே கால பகுதியில் வந்த சிங்களவனை திருப்பி அனுப்பினான் வெள்ளைக்காரன்!

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

இன்று நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். ஆனால், பொதுமக்கள் அவரின் வாக்குமூலத்தை கேட்க அனுமதிக்கப்படவில்லை.

- தான் செய்தது குற்றம் இல்லை என்றுள்ளார்

- இன்னும் இதுபோன்று இரண்டு பயங்கரவாத திட்டமிடல்கள் மறைந்துள்ளதாக கூறினார்

- தான் ஐரோப்பாவை காப்பற்ற விரும்பியதாக கூறினார்

Link to comment
Share on other sites

இறந்த பொதுமக்களின் நினைவுக்கு ஆகவும் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் நோர்வே பத்திரிக்கை ஒன்று ஒரு ' கை சங்கிலி' கோர்வையை (Chain of solidarity) உருவாக்கியுள்ளது.

இதுவரை 665129 பேர் இதில் இணைந்துள்ளனர் நீங்களும் இணையலாம்

http://www.vg.no/nyheter/innenriks/oslobomben/lenke.php

Link to comment
Share on other sites

இறந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக மாற்றப்பட்டுள்ளது

100,000 பேரளவில் ஒஸ்லோவில் கொல்லப்படவர்களுக்காக வீதிகளில் பூச்செண்டுகளுடன்

100,000 hit the streets in Oslo anti-violence rally

At least 100,000 people, many carrying white or red roses, rallied in Oslo on Monday to show support for victims of attacks that killed 76 people, police said.

"Tonight the streets are filled with love," Crown Prince Haakon told the crowd, gathered to mark oppostion to a bombing and shooting on Friday.

Ola Krokan, operations chief at Oslo police, told Reuters there were at least 100,000 people at the demonstration. Rallies were being held in other cities around the nation.

http://www.thestar.com/news/world/article/1030198--100-000-hit-the-streets-in-oslo-anti-violence-rally?bn=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே தாக்குதலில் மயிரிழையில் தப்பிய ஈழத்தமிழ் பெண்!

Tuesday, July 26, 2011, 0:51

உலகம்

நோர்வேயில் இடம்பெற்ற கோடைகால முகாம் மீது துப்பாக்கிதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது ஈழத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட கம்சாயினி குணரட்ணம் [Khamshajiny Gunaratnam] என்ற இந்தப் பெண் 2004-2007 வரையான காலப்பகுதியில் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைப் பெற்றுக் கொண்டதுடன், இவர் 2007ல் இருந்து தொழிலாளர் கட்சி இளைஞர் அணியின் ஒஸ்லோ பொதுச் சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அவ்வகையில், வெள்ளியன்று இடம்பெற்ற தொழிற்கட்சியின் இளையோர் அணிக்கான கோடைகால மாநாட்டில் இவரும் கலந்துகொண்டிருந்தார். இவரும் பிறிதொரு அரசியல்வாதியும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் சம்பவம் இடம்பெற்ற தீவிலிருந்து படகொன்றின் மூலம் தாம் பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் கம்சாயினி குணரட்ணம் தனது Facebook தகவலில் குறிப்பிட்டுள்ளார்.

“நான் இப்பொழுதும் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை. என்னால் இத்தாக்குதல் சம்பவத்தை நம்ப முடியாமல் உள்ளது. உண்மையில் இந்தச் சம்பவத்தின் போது நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும்” என அவர் தனது செய்தில் குறிப்பிட்டுள்ளார்.

“ஒஸ்லோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கேள்வியுற்ற பெரும்பாலான இளையோர்கள் பெரிதும் கவலையடைந்தனர். நோர்வேத் தலைநகரான ஒஸ்லோவில் உள்ள தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்தனர்” எனவும் கம்சாயினி தெரிவித்துள்ளார்.

“இந்த அழிவிற்கு யார் காரணம் என நாம் நினைத்தோம். திடீரென அங்கிருந்த எல்லா இளையோரும் ஓடினார்கள். எம்மையும் ஒளிந்து கொள்ளுமாறு கூறினார்கள். பிரதான கட்டடத்தை நோக்கி ஓடினார்கள். நான் AUF [Labour parti Youth wing] கடைக்கு அருகிலிருந்த கழிப்பறைக்குள் ஒளிந்து கொண்டேன்.

துப்பாக்கிச் சூடு மிகக் கிட்ட நெருங்கிக் கொண்டிருந்தது. இது ஒரு ‘வேடிக்கை விளையாட்டு’ என்றே நான் நினைத்து இருந்தேன். ஆனால் ஒருவர் எந்த விடயத்தையும் நிச்சயித்துக் கொள்ள முடியாது என்பதே உண்மையானதாகும்.இதனை எமது நாளாந்த வாழ்க்கை உறுதிப்படுத்துகின்றது” என தனது அனுபவத்தை கம்சாயினி குறிப்பிட்டுள்ளார்.

“இறுதியாக எனது நண்பர்கள் சிலரின் குரல்கள் எனது காதுகளுக்குக் கேட்டது. நான் உடனே வெளியே வந்தேன். ஆனால் அப்போதும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. நாங்கள் பெரிய பாறைகள் மற்றும் புதர்களுக்குள் விழுந்தெழும்பினோம். எனது உடலிலும் சில காயங்கள் ஏற்பட்டன. நான் மிகவும் குழப்ப நிலை அடைந்தேன். நாங்கள் ஓடிக்கொண்டேயிருந்தோம். எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் காவற்துறையினரின் உடையில் இருந்துள்ளார் என்பது எம்மை மிகவும் அதிர்ச்சியில் உறைய வைத்தது” என கம்சாயினி எழுதியுள்ளார்.

“கம்சி நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் நேரே பாருங்கள் முன்னோக்கிச் செல்வது மட்டுமே உங்களது இலக்காக இருக்க வேண்டும்” என கம்சாயின் நண்பர் ஒருவர் இவர்கள் தீவில் இடம்பெற்ற தாக்குதலில் அகப்பட்டுக் கொண்டபோது கம்சாயினையைத் தைரியப்படுத்துவதற்காக அனுப்பிய தகவலாகும். இவர்களைக் காப்பற்றுவதற்காக படகுகள் வந்துகொண்டிருந்தன. அவர்களைச் சுற்றி துப்பாக்கிச்கூடு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் துன்பகரமான சம்பவத்திலிருந்து தப்பிப் பிழைத்து நகருக்குள் வந்த முதலாவது குழுவினருள் கம்சாயினியும் அவரது நண்பர்களும் இருந்தார்கள்.

இவர்கள் நகருக்குள் வந்ததன் பின்னர் மருத்துவப் பணியாளர்களால் பராமரிக்கப்பட்டனர். மாற்றுவதற்கான உடைகளும் சூடான குடிபானமும் தாக்குதலிலிருந்து தப்பி வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

“நான் இப்போதும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறேன். இவ்வாறான சம்பவங்கள் ஏன் மேற்கொள்ளப்பட்டது? ஒஸ்லோவிலிருந்த பிரதான கட்டடங்கள் மீது தாக்குதலை நடாத்தியதுடன், Utøya என்ற சிறு தீவில் இடம்பெற்ற கோடை கால மாநாட்டில் கலந்து கொண்டிருந்த எதிர்கால தொழிற்கட்சி அரசியல்வாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். நாங்கள் செய்த பிழைதான் என்ன? துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட அந்த மனிதன் எனது நண்பர்களை ஏன் கொலை செய்தான்? இத்தாக்குதல் சம்பவமானது மிகவும் கொடூரமானது. என்னால் இதனை விளங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது” என கம்சாயினி குணரட்னம் தெரிவித்துள்ளார்.

“முதலில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரிடமும் எனது நினைவுகள் சென்றன. தற்போது நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் துணையாய் இருக்க வேண்டும். நாங்கள் வெறும் இளம் பருவத்தினர் மட்டுமே. நாங்கள் அரசியிலில் பங்குகொண்டுள்ளோம். நாங்கள் இந்த உலகை நல்லதோர் இடத்திற்குக் கொண்டு செல்வோம். இன்று Utøya வில் இழந்த ஒவ்வொரு உறவுகளையும் நாம் நினைவு கூறுகின்றோம்” என கம்சாயினி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilthai.com/?p=22637

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே அசம்பாவிதமாய் நீங்க இந்த கருத்தை சொல்லி இருந்தா...

மிக மிக கொடிய ஒரு கருத்து , குமாரசுவாமிங்கண்ணா!

எமக்கு வந்த வழியை நாம் சரியாக பயன் படுத்தவில்லை! இதுவே தோல்வியின் முழு முதற்காரணம்!

புலம்பெயர்ந்து இன்று அந்நாட்டு பிரஜைகளாக வாழும் ஒவ்வொரு தமிழனும்..தாம் வாழும் நாட்டு தேசிய கொடிக்க்கு வணக்கம் செய்ய கடமை பட்டவன் மட்டுமல்ல.............அந்நாட்டில் இடம்பெறும் நன்மை தீமைகளில் தனது உணர்வுகளை சமமாய் பகிர்ந்துகொள்ளவேண்டியவனுமாகிறான்!

அதனாலதான் எல்லாம் முடிஞ்சுபோச்சு என்று நாங்க விரக்தி ஆனாலும் , இன்னும் முழுசா முடியல்லைன்னு சிங்களவன் பயப்படுறான்,அதற்க்கு காரணம் புலம் பெயர் தமிழர்கள்!

அந்த பயத்தை அவனுக்கு கொடுக்க வைத்தது எமக்கு வாழ்வு தந்த நாடுகள்!

இரண்டாம் உலகமகா யுத்ததின் பின்னர் ,இப்போதான் ஐரோப்பாவில் குண்டு வெடிக்குது!

குண்டு சிதறல்களினாலாகும் வலி , எங்களை விட அவர்களுக்குத்தான் நன்னா தெரியும்.!....அதனாலாதான்.............எங்களுக்கு அகதி அந்தஸ்தை பாரிய அளவில் அள்ளி வீசிட்டு , அதே கால பகுதியில் வந்த சிங்களவனை திருப்பி அனுப்பினான் வெள்ளைக்காரன்!

உங்கள் கருத்து நூற்றுக்குநூறுவீதம் உண்மை.உளரீதியாக சொல்லப்போனால் உயிர் அழிவுகளை என்னாலும் சகிக்கமுடிவதில்லை.புலம்பெயர் ஈழத்தமிழர்கள் என்றுமே இவர்களுக்கு கடைமைப்பட்டவர்கள்.இவர்களின் உப்பை தின்று வளர்ந்தவர்கள்.

அதிலும் ஐரோப்பியமக்களுக்கு அழிவுகளைப்பற்றி நாங்கள் பாடம் எடுக்கத்தேவையில்லை.அவர்கள் அழிவுகளின் உச்சக்கட்டத்திற்கே சென்று மீண்டு வந்தவர்கள்.அவர்களுக்கு போரின் அழிவுகளும்,அனர்த்தங்களும்,அச்சங்களும்,விபரீதங்களும் நிறையவே தெரிந்திருக்கும்.ஏனெனில் அனுபவப்பட்டவர்கள்.போரின் கொடூரம் தெரிந்தவர்கள் ஏன் எதற்காக சிங்கள அரசு (செய்யும்) செய்த இன அழிப்பை வேடிக்கை பார்த்தார்கள்?சரி விடுதலைப்புலிகள் ஏதாவது வகையில் இடையூறாக இருந்திருந்தால் அவர்களை ஓரம்கட்டுவதற்கு சர்வதேசத்திடம் என்ன குறையிருக்கிறது?ஒரு இடத்தில் குண்டூசி விழுந்தால் கூட அதை நுண்ணியமாக அலசி ஆராய்ந்து விளக்கம் கொடுக்குமளவிற்கு தொழில்நுப்பம் கூடிய நாடுகள்........ உடன்பிறப்புகள் கதறக்கதற கருவறுக்கப்பட்டதை கண்டும் காணாமல் இருந்ததின் ஆதங்கம் தான் இது.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக பஞ்சத்தில் தவிக்கும் கண்டம் ஆபிரிக்கா.அவ்வப்போது வல்லமையுள்ள நாடுகளால் நிவாரண உதவிகள் இவர்களுக்கு கிடைத்தாலும்........இப்போது மீண்டும் ஆபிரிக்க பட்னியை மீண்டும் தூக்கிபிடிக்கிறார்கள்.ஏன்?இவர்களால் ஆபிரிக்க வறுமையை நீக்க முடியாது என நினைக்கின்றீர்களா? அரசியல்,அரசு என்றபோர்வையில் என்னென்னவோவெல்லாம் செய்கின்றார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமது உறவுகளை இழத்து வாடும் நோர்வேயியர்களுக்கு எனது ஆழ்த்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

சரி விடுதலைப்புலிகள் ஏதாவது வகையில் இடையூறாக இருந்திருந்தால் அவர்களை ஓரம்கட்டுவதற்கு சர்வதேசத்திடம் என்ன குறையிருக்கிறது?ஒரு இடத்தில் குண்டூசி விழுந்தால் கூட அதை நுண்ணியமாக அலசி ஆராய்ந்து விளக்கம் கொடுக்குமளவிற்கு தொழில்நுப்பம் கூடிய நாடுகள்........ உடன்பிறப்புகள் கதறக்கதற கருவறுக்கப்பட்டதை கண்டும் காணாமல் இருந்ததின் ஆதங்கம் தான் இது.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக பஞ்சத்தில் தவிக்கும் கண்டம் ஆபிரிக்கா.அவ்வப்போது வல்லமையுள்ள நாடுகளால் நிவாரண உதவிகள் இவர்களுக்கு கிடைத்தாலும்........இப்போது மீண்டும் ஆபிரிக்க பட்னியை மீண்டும் தூக்கிபிடிக்கிறார்கள்.ஏன்?இவர்களால் ஆபிரிக்க வறுமையை நீக்க முடியாது என நினைக்கின்றீர்களா? அரசியல்,அரசு என்றபோர்வையில் என்னென்னவோவெல்லாம் செய்கின்றார்கள்!

உங்கள் ஆதங்கத்திற்கான மிக நீண்ட விளக்கம் கொடுக்கவேண்டிய சுமையை குறைக்க, உங்கள்கருத்தே எனக்கு உதவி செய்கிறது!

எல்லாத்திற்க்கும் காரணம் சர்வதேசரீதியில்செல்வாக்கு செலுத்துமளவிற்கு இராஜாங்க ,பொருளாதார வல்லமை எம்மிடம் இல்லாததே!

ஒண்ணு சொல்லவா?வன்னி பேரழிவில்..ஆயிரக்கணக்கில்மக்கள் இறந்த நேரத்தில்...ந்ம்ம் செய்தி சும்மா ஒரு கடமைக்கு சொன்னாங்க...!முதலில் இஸ்ரேலில் குண்டுவெடிப்பு, 4 பேர் காயம் என்பதே Breaking news சி.என்.என் ..ல!!

அதற்காக நம்மிடம் உள்ள சிறு பலத்தை தந்த புகலிட நாடுகளை நன்றி உணர்வோடு பார்ப்பதை தவிர்த்துபோவது...சிங்களவனுக்கு இன்னும் பலத்தையும் சந்தோசத்தையும் தரும் விடயம்!

மாறாய் தமிழர்கள் குழப்பவாதிகள் என்று பலரால் எடுகப்பட்டு வரும் பிரச்சார யுக்தி மீண்டும் மீண்டும் .பலம் பெறும்!

Link to comment
Share on other sites

எங்களுக்கும் கவலை வரும். நாங்கள் சிங்களவன் இப்படித்தான் கொல்ல போகிறான் என்று சொல்லி கத்தியபோதும் ஒருவரும் கேட்கவில்லை.

அனால் நடந்து முடிந்து விட்டது.

இப்போ அதன் கொடூரம் நோர்வே மக்கள் உணர்கிறார்கள். பிரதமர் முதல்,அரசன் வரை கண்கலங்குகிறார்கள்.

உலகமே அவர்களுக்காக கூடி நின்று அழுகிறது. எங்களுக்காக ஒருவர் கூட கண்ணீர் விடவில்லை

பணக்காரனுக்கு ஒரு நீதி ஏழைக்கு ஒரு நீதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஸ்லோ நகர வீதியில் மலர்களை ஏந்திய மக்கள் வெள்ளம்!

Published on July 26, 2011-3:54 pm ·

ஒஸ்லோவில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரட்டைத்தாக்குதல் சம்பவங்களில் பலியானவர்களை நினைவுகூரும் விதமாக றோசா மலர்களை ஏந்தியவாறு மாபெரும் ஊர்வலம் நோர்வேயின் நகரங்கள் மற்றும் பட்டினங்கள் எங்கும் நடத்தப்பட்டு வருகின்றன.’

இன்று இரவு வீதிகள் எல்லாம் மலர்களை ஏந்திய மக்கள் அன்பு மயமாகக் காட்சியளிக்கின்றனர்’ என்று ஒஸ்லோவில் திரண்டிருந்த ஒரு லட்சம் மக்களிடையே பேசும்போது அந்நாட்டு தலைமை அமைச்சர் தெரிவித்தார்.

இரட்டைத்தாக்குலில் உயிரிழந்தோரின் சரியான எண்ணிக்கை 76 ஆகும் 93 அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

இரங்கலில் பங்குபற்றுவதன் மூலம் நீங்கள் எல்லாரும் ஜனநாயகத்திற்கு ‘ஆம்’ என்று வலியுறுத்திக்கூறுகின்றீர்கள் என்று பிரதமர் ஜென்ஸ் ஸரோரென்பேர்க் மக்கள் மத்தியில் தெரிவித்தார்

ஜனநாயகம், சகிப்புத்தன்மை, ஐக்கியம் ஆகியவற்றிற்கான பேரணி இது என்றும் தீமை ஒருவரைக் கொல்லலாம். ஆனால் மக்களை வெற்றி கொள்ள முடியாது என்றும் பிரதமர் சொன்னார். மத்திய ஒஸ்லோவின் பல வீதிகள் அனைத்தும் மக்களுக்கும் இடம்கொடுப்பதற்காக மூடப்பட்டடிருந்தன.

http://www.thinakkathir.com/?p=15130

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே இரட்டைத் தாக்குதல் பொறுப்பாளி பீரீவிக் ஒரு மனநோயாளி: வழக்கறிஞர் தெரிவிப்பு _

வீரகேசரி இணையம் 7/27/2011 12:49:48 PM Share

நோர்வேயில் அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நிகழ்த்திய அண்டேர்ஸ் பிரீவிக் ஒரு மன நோயாளி என அவரது வழக்கறிஞர் கீர் லிபிஸ்டட் தெரிவித்துள்ளார்.

தான் எத்தனை பேரைக் சுட்டுக் கொலை செய்தேன் என பிரீவிக் தன்னிடம் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவரது மனநிலையை நிரூபிக்க மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இந்நிலைமையில் அவரைத் தண்டிக்க முடியாதெனவும் கீர் லிபிஸ்டட் ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற குண்டு வெடிப்பு மற்றும் ஆளும் கட்சியின் முகாமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலும் மொத்தம் 76 பேர் கொல்லப்பட்டனர்.

இவ்விரண்டு சம்பவங்களையும் தானே மேற்கொண்டதாக அண்டேர்ஸ் பிரீவிக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பீரிவிக்கின் பண்ணையிலிருந்து வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஒஸ்லோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சுமார் 150,000 பேர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32927

Link to comment
Share on other sites

Norwegian Tamils remember Oslo-Utøya, Black July victims

[TamilNet, Wednesday, 27 July 2011, 08:32 GMT]

City of Oslo, the capital of Norway, was full of roses Monday and Tuesday. More than 200,000 people gathered Monday evening to express their sorrow and solidarity with the victims of the attacks by far-right Islamophobic killer, Anders Behring Breivik, who has claimed the lives of at least 76 people, most of them young, in a combined bomb attack on the government square in the heart of the city and a shooting rampage at the summer camp of the youth wing of the ruling Labour Party at Utøya Island, located northwest of Norway's capital.

Two of five Norwegian Eezham Tamil youths, who survived the attack at the Utøya Island, took part in a memorial event Monday, jointly organised by three Tamil organisations. The memorial event also remembered the victims of Black July, the Sri Lankan state-sponsored pogrom against Tamils in the island of Sri Lanka in 1983.

“I managed to run away and was hiding at a locality with few others. We phoned our family and the Police, calling for immediate rescue,” said 17-year-old Sugandan Panchalingam

The other youth, 17-year-old Jathursan Kandiah said: “We attended the summer camp because it was an interesting get-together event organised by the AUF. The first two days were full of interesting lectures and activities. One of the interesting lectures was the one delivered by Foreign Minister Jonas Gahr Støre. Many global issues such as that of West Sahara were on the agenda. But, the third day ended in a nightmare.”

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34228

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஒரு நல்ல ஆய்வு

குவியம் - The Focus - August 07, 2011

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8879

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.