Archived

This topic is now archived and is closed to further replies.

akootha

'பேரழிவை ஏற்படுத்தும் கல்லீரல் அழற்சி'

Recommended Posts

'பேரழிவை ஏற்படுத்தும் கல்லீரல் அழற்சி'

ஆசியக் கண்டத்தின் தென்பகுதி மற்றும் தென்கிழக்குப் பகுதி நாடுகளில் அடுத்த 10 ஆண்டுகளில் 50 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ‘ஹெப்பட்டாடிஸ்’ கல்லீரல் அழற்சி நோயினால் கொல்லப்படுவார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த கல்லீரல் அழற்சி நோய்க்கு எதிரான போராட்டத்தை பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக முன்னெடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த பிராந்தியத்தில் கடந்த 10 ஆண்டுகளில், மலேரியா, டெங்கு அல்லது எயிட்ஸ் நோயினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட ஹெப்பட்டாட்டிஸ் நோயினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று தெரியவந்துள்ளது.

ஹெப்பட்டாட்டிஸ் நோய்க்கு எதிரான தடுப்பு ஊசி ஏற்றும் திட்டம் முன்னேற்றம் கண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த நோய் பற்றி அறிவுப் பற்றாக்குறை இருக்கின்றது என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வைரஸ் தொற்று காரணமாக பரவும் இந்த ஹெப்பட்டாடிஸ் இ நோயினால் ஆண்டு தோறும் பெருமளவானோர் கொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110723_hepatatis.shtml

Share this post


Link to post
Share on other sites