Jump to content

ஐம்பதிலும் அழகாய் இருக்க...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐம்பதிலும் அழகாய் இருக்க...

old-young.jpg

சில டிப்ஸ்..........................

வாரம் தோறும் வயதாகிறது.... இது அறந்தை நாராணன் எழுதிய நாவல்... உண்மையிலும் இது நிஜம்தானே? ஆனால் நமக்கு வயதானாலும் ஒன்றும் தப்பில்லை... மனசும் நம்முடைய தினசரி செயல்பாடுகளும் சரியாக இருந்தால் ஐம்பதென்ன... எண்பதானாலும் இளமையான தோற்றத்துடன் வாழமுடியும்.

இதோ அதற்கான சில டிப்ஸ்கள்

இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் டை உபயோகியுங்கள்... கறுப்பு நிற உங்கள் தலைமுடியையும் மீசையையும் நீங்கள் கண்ணாடியில் பார்க்கிற போது உங்களுக்கும் உற்சாகம் பிறக்கும். டை உபயோகப்படுத்த துவங்கியதும் தவறாமல் உபயோகப்படுத்துங்கள். அதிலும் கெமிக்கல் முறையில் தயாரிக்கும் டையை உபயோகப்படுத்தினால் தோல்வியாதி, அலர்ஜி, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் டை உபயோகிப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பூவரசங்காய் முக்கால் பங்கும், கரிசலாங்கண்ணி கால் பங்கும் எடுத்து பக்குவமாக அரைத்து தலையில் பூசிக்கொள்ளுங்கள் முடி நல்ல பொலிவோடு அழகாக இருக்கும்.

அடுத்து கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் டி.வி. பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள் முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே அந்த கருவலையத்தை தவிர்க்கும் விதமாக ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.

அடுத்து முதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நா வறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இதற்கு எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள். நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள்.

அடுத்து கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் இதமான சுடுநீரில் பாதத்தை நனைய விட்டு நன்கு கழுவுங்கள் பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் மஞ்சள் பற்றை போடுங்கள் அல்லது கற்றாழை கொண்டு வந்து அதனுடைய சாறை கால்வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். இதனால் பித்த வெடிப்பு கால் ஆணி ஆகியவை குணமாகிவிடும்.

அடுத்து முதுமையில் கன்னங்களில் குழி விழுவது இயற்கைதான் ஆனால் இதையும் நம்மால் தடுத்துவிடமுடியும். தினமும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைகுடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும். சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும்.

கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள்.

அடுத்து உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும்.

அந்த உடல் ஆரோக்கியம் வேண்டுமானால்.. விடியற்காலையில் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு குறைந்த பட்சம் நான்கு கிலோ மீட்டர் தூரமாவது நடைபயிற்சி செய்யுங்கள்.

நடைபயிற்சியால் உடலிலுள்ள உறுப்புகள் உற்சாகம் பெறும் நரம்பு மண்டலம் நீரடையும், வயிற்று பிரச்னைகள் தீரும். இரத்தக்கொதிப்பு, நீரழிவு கட்டுப்படும்.

அடுத்து உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு நாம் இளைஞன். நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்யமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்... கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக மாறிவிடுவீர்கள். அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள்.

காதல் உணர்வு உங்களை இளமையாக வைத்திருக்கும் என்பதால் மனைவியை காதலியுங்கள். உங்கள் மனைவியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் ரசியுங்கள், கொலுசு சத்தம், சிரிப்பு, உடையணியும் பாங்கு என எல்லாவற்றையும் ரசியுங்கள் கூடவே பாராட்டுங்கள்.

வாரத்திற்கு ஒரு முறையாவது கோயில்கள், சுற்றுலா தலங்கள் என குடும்பத்துடன் சென்று வாருங்கள். அந்த மனநிலை உங்களுக்குள் இருக்கும் இறுக்கத்தை துரத்தி மனதை உற்சாகப்படுத்தும்.

மனைவியுடன் தனிமையில் மனம்விட்டு நிறைய விஷயங்கள் பேசுங்கள். ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள்ள தவறுகளை சுட்டிக் காட்டி தெளிவு நிலைபெறுங்கள். அது உங்களுக்குள் இருக்கும் காம்ப்ளக்ஸை விலக்கி புத்துணர்ச்சியை தரும்.

உடல் உறவு என்பது மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்திருக்கும் என்பதால் வாரத்திற்கு நான்கு முறையாவது மனைவியுடன் உடல்உறவு வைத்துக் கொள்ளுங்கள்.

யோகாசனம், மெடிடேஷன் போன்றவற்றை உங்கள் வாழ்நாளில் ஒரு அங்கமாக கடைபிடியுங்கள்.

இதெல்லாம் நீங்கள் மேற்கொண்டாலே ஐம்பதிலும் இருபது வயது இளைஞனாக தோற்ற-மளிப்பீர்கள்.

_குருஜி (குமுதம்)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சா... என்ன அஜீவன் இப்படி செய்துபோட்டீங்க,, எனி யாழ்களத்தில இருக்கிற ஆன்ரிமார் எல்லாம் களத்துக்கு வரமாட்டினம்,, அதைவிட நம்மட யாழ்கள வயோதிபர்மார் எல்லாம் தங்கட துணைகளை கூட்டிகொண்டு யாழ்களத்துக்கு வந்தாலும் பறவாயில்லை ஒன்றுகூடல், விழாக்களுக்கு எல்லாம் வரப்போகினமே.... :lol:

ஆனால் தகவல் சூப்பர்,, நம்மளுக்கும் சில சமயம் உபயோகப்படும்,,, :wink:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்புவுக்கும்,முகத்தாரு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அஐPவன் அண்ணா மிகவும் நன்றி உந்த உதவியை நானும் நம்மட நண்பர் குலாமும் மறக்கமாட்டம்

நியாயம் நம்பக்கம் இருக்கவேண்டுமென்று எல்லோரும் விரும்புகிறார்கள்.

ஆனால் நியாயத்தின் பக்கம் நாம் இருக்கவேண்டுமென்று எவரும் விரும்புவதில்லை

ஆணால் நான் அப்படிப்பட்டவன் இல்லை அஐீவன் அண்ணா எனவே உவர் டம்பி வசந்தனுக்கு சென்றல் நட்டு களண்டு போச்சுது அதுக்கும் ஒரு மருந்து சொன்னீங்கள் எண்டா நியாயத்தின்ர பக்கம் நானும் போயிடுவன்

:wink: :wink: :wink: :wink: :wink:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சின்னப்புவுக்கும்,முகத்தாரு
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அஐPவன் அண்ணா மிகவும் நன்றி உந்த உதவியை நானும் நம்மட நண்பர் குலாமும் மறக்கமாட்டம்

நியாயம் நம்பக்கம் இருக்கவேண்டுமென்று எல்லோரும் விரும்புகிறார்கள்.

ஆனால் நியாயத்தின் பக்கம் நாம் இருக்கவேண்டுமென்று எவரும் விரும்புவதில்லை

ஆணால் நான் அப்படிப்பட்டவன் இல்லை அஐீவன் அண்ணா எனவே உவர் டம்பி வசந்தனுக்கு சென்றல் நட்டு களண்டு போச்சுது அதுக்கும் ஒரு மருந்து சொன்னீங்கள் எண்டா நியாயத்தின்ர பக்கம் நானும் போயிடுவன்

:wink: :wink: :wink: :wink: :wink:

நியாயம் நம்பக்கம் இருக்கவேண்டுமென்று எல்லோரும் விரும்புகிறார்கள்.

ஆனால் நியாயத்தின் பக்கம் நாம் இருக்கவேண்டுமென்று எவரும் விரும்புவதில்லை

அர்த்தமான வார்த்தைகள்.

இளமை வரப்போறதால எரிச்சல்

வேற ஒன்றுமில்ல.

சின்னப்பு

இருக்கும் போது அனுபவிக்காமல் ........? :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அஐPவன் அண்ணா மிகவும் நன்றி உந்த உதவியை நானும் நம்மட நண்பர் குலாமும் மறக்கமாட்டம்

நியாயம் நம்பக்கம் இருக்கவேண்டுமென்று எல்லோரும் விரும்புகிறார்கள்.

ஆனால் நியாயத்தின் பக்கம் நாம் இருக்கவேண்டுமென்று எவரும் விரும்புவதில்லை

ஆணால் நான் அப்படிப்பட்டவன் இல்லை அஐீவன் அண்ணா எனவே உவர் டம்பி வசந்தனுக்கு சென்றல் நட்டு களண்டு போச்சுது அதுக்கும் ஒரு மருந்து சொன்னீங்கள் எண்டா நியாயத்தின்ர பக்கம் நானும் போயிடுவன்

:wink: :wink: :wink: :wink: :wink:

என்கையெழுத்து எனக்கே கத்திவைக்குதே :x முதல்ல ஒண்ணு(தூங்கும்புலியைதட்டிஎழ

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா................சீ...இவ்வளவு நாளுக்குப் பிறகு போட்ட ஜீவனோடை நான்...கா.........பின்னை என்ன வேளைக்கு எனக்கு தெரிய தந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் ஆனாலும் கடைசிலை போட்ட சில விசயங்கள் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது பாப்பம்........................

Link to post
Share on other sites

நன்றி அஐPவன் அண்ணா மிகவும் நன்றி உந்த உதவியை நானும் நம்மட நண்பர் குலாமும் மறக்கமாட்டம்

நியாயம் நம்பக்கம் இருக்கவேண்டுமென்று எல்லோரும் விரும்புகிறார்கள்.

ஆனால் நியாயத்தின் பக்கம் நாம் இருக்கவேண்டுமென்று எவரும் விரும்புவதில்லை

ஆணால் நான் அப்படிப்பட்டவன் இல்லை அஐீவன் அண்ணா எனவே உவர் டம்பி வசந்தனுக்கு சென்றல் நட்டு களண்டு போச்சுது அதுக்கும் ஒரு மருந்து சொன்னீங்கள் எண்டா நியாயத்தின்ர பக்கம் நானும் போயிடுவன்

:wink: :wink: :wink: :wink: :wink:

கெதியாகச் சொல்லுங்கோ அஜீவன் அண்ணா!!

அப்ப தான் சின்னப்பு எங்கள் பக்கத்துக்கு வருவாராம். :wink:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வகவலுக்கு றொம்ப முக்கியம் ஐம்பதிலும் அழகுக்கு :evil:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதேல..20 ஐ விட 50 தான் அழகா இருக்கு.. :evil: :x

தகவலுக்கு..நன்றி அஜீவன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதேல..20 ஐ விட 50 தான் அழகா இருக்கு.. :evil: :x

பிள்ளை என்னையும் சின்னப்புவையும் தானே சொல்லுறீங்க.........ரொம்ப தாங்ஸ்.....

Link to post
Share on other sites

தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா. அதுதானே பார்த்தன் சின்னப்பு என்ண்டு தீடீரேன் இளமையாகிட்டார் என்று. இப்பதானே விசயம் விளங்குது. :P :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வகவலுக்கு றொம்ப முக்கியம் ஐம்பதிலும் அழகுக்கு :evil:

50 ஆகும் போது உங்களுக்கு புரியும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

50 ஆகும் போது உங்களுக்கு புரியும்

உங்களுக்கு இப்போ 50 வயது ஆகிவிட்டத? :wink:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

50 ஆகும் போது உங்களுக்கு புரியும்

50 வயது மட்டும் யாரு இருக்கிறது ? உயிருடன் இருந்தரால் தானே புரிந்து கொள்வதுக்கு எனக்கு எப்ப சாவுவரும் என்று பாத்துக்கொண்டு இருக்குறன் அதுக்கில்நீங்கள் வேற :twisted:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு இப்போ 50 வயது ஆகிவிட்டத? :wink:

சீ சீ நம்மட வினித் அண்ணாவுக்கு 50தாhhh நோ நோ அவருக்கு இப்ப 27 வயது இருக்கும் சின்னப்புக்கே 40 ஆகேல என் அண்ணாவுக்கு எப்படி 50 ஆகும் :evil:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

50 வயது மட்டும் யாரு இருக்கிறது ? உயிருடன் இருந்தரால் தானே புரிந்து கொள்வதுக்கு எனக்கு எப்ப சாவுவரும் என்று பாத்துக்கொண்டு இருக்குறன் அதுக்கில்நீங்கள் வேற :twisted:

:roll: என்ன கீதா? நீங்கள் வாழ்வே மாயம் பாட்டு கேட்கும்போதே நினைத்தேன்..நொந்து போனீங்கள் எண்டு..டென்சனை குறையுங்கோ.. (என்ன இதை நான் சொல்றேன் எண்டு தானே பார்க்கிறீங்கள்) :P நகைச்சுவை பக்கமா கொஞ்சம் போய் காலாறிட்டு வாங்கோ ஓகே ஆகும்.. :( :roll:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி நீங்கள் சொன்னால் சரி நான் நகைச்சுவைப்பக்கம் போய் பாக்கின்றேன்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஸ்கொட்லாந்து அரசின் ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழன் – டாக்டர் வரதராஜா  194 Views ஸ்கொட்லாந்தின் தேசியக் கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்படும் மனிதநேய விருதுக்கு ஈழத்து டாக்டர் வரதராஜா துரைராஜா உட்பட மூன்று பேர் 2021ஆம் ஆண்டிற்கான விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது மூன்றரை இலட்சம் மக்கள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்ட போது, எந்தவித உதவிகளும் இல்லாத போது டாக்டர் வரதராஜா பணியாற்றி பலரின் உயிரைக் காப்பாற்றினார். அந்தத் தாக்குதல் பற்றி இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும், கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கிக் கூறி, எத்தகைய அவலம் அங்கு நடைபெற்றது என்பதை உலகத்திற்கு அவர் எடுத்துரைத்தார். இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பலகாமம் என்ற சிறிய கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட புகழ்பெற்ற மருத்துவ கலாநிதி, வரதராஜா துரைராஜா அவர்களும் இந்த விருதிற்கு தெரிவாகி இருப்பது என்பது தமிழ் பேசும் ஒவ்வொருவருக்கும் மேலும் மனிதாபிமானத்தைப் போற்றும், அநீதிக்கு எதிராக போராடும் அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். யுத்த வலயத்தில் பொது மக்களுடன் இரவும், பகலும் தங்கியிருந்து உழைத்து, அவசரகால முதலுதவி மற்றும் உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்ட சில மருத்துவர்களில் இவரும் ஒருவர். மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் குறைந்த மருத்துவப் பொருட்கள் மூலம் மருத்துவ கலாநிதி வரதராஜா மற்றும் அவரது ஊழியர்கள் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினர். யுத்தம் தீவிரமடைந்த போது, ஆரம்பத்தில் தனி ஒரு வைத்தியராக வாகரையில் மிகுந்த உயிர் அச்சுறுத்தலிலும் இரவும், பகலும் கடமையாற்றிய அவர், வாகரைப் பகுதியை இலங்கை அரச படைகள் கைப்பற்றிய பின்பு வன்னிக்குச் சென்று மீண்டும் சேவை புரிந்தார். இடம்பெயர்ந்த மக்களோடு மக்களாக சென்ற அவர், தொடர்ந்து தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்தி தன்னுயிரையும் துச்சமென எண்ணி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு தன்னிகரற்ற சேவை புரிந்தார். யுத்தம் முடியும் வரை அவர் பொது மக்களுடன் இருந்தார். இறுதியில் அவரே காயமடைந்து அரசாங்கப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டார். உயிராபத்தை ஏற்படுத்திய காயங்களுடன் பல நாட்கள் சிகிச்சை அளிக்கப்படாது, விசாரணை என்ற பெயரில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார். சர்வதேச அழுத்தம் காரணமாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், இலங்கை அரசின் தொடர்ச்சியான உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தார். அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்காய் குரல் கொடுத்து வருகின்றார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கொரி ஜெனீவா, கனடா, ஜேர்மனி, லண்டன், தென்னாபிரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் சென்று குரல் கொடுத்து வருகின்றார். 2017ஆம் ஆண்டில் ஒட்டவாவில் மருத்துவ கலாநிதி திரு வரதராஜா துரைராஜா சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து மறைந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் கண்காணிப்பளருமான பால் தேவர் அவர்கள் டாக்டர் வரதனை “ஒரு செல்வாக்கு மிக்க மனித உரிமைப் பாதுகாவலராக, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழும் போது பல உயிர்களை காப்பாற்றியது மட்டுமல்லாமல், தனக்கு உயிராபத்து ஏற்பட்ட பொழுதும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மருத்துவத்தைக் கடைப்பிடித்தார்” என்று பாராட்டினார். ‘பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு குறிப்பு’ (‘Note From The No Fire Zone’) என்ற தலைப்பில் அவரது நினைவுக் குறிப்புகள் 2019 மே மாதம் வெளியிடப்பட்டது. அத்துடன் முள்ளிவாய்க்கால் அவலங்களை பிரதிபலிக்கும் வகையில் ‘பொய்யா விளக்கு’ என்ற ஆவணப்படமும் அவரது நடிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மீண்டும் தனது மருத்துவ பயிற்சியைத் தொடர முயற்சித்துக் கொண்டிருக்கும் அவர், மோதல் பகுதிகளில் பொது மக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உள்நாட்டுப் போரில் பாதிக்கப்ட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு வருவதற்கும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றார். இவ்விருது குறித்து மருத்துவ கலாநிதி திரு வரதராஜா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அற்புதமான விருதுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எனது மருத்துவ அனுபவங்களால் நான் ஒரு மனித உரிமை ஆர்வலர் ஆனேன். நான் ஒரு மருத்துவரான போது அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்த யுத்த வலயப் பகுதிகளில் பணியாற்ற விரும்பினேன். சமூகத்திற்கு நான் செய்த சேவைகளை அங்கீகரித்து எனக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் மது அடிமைகளை மீட்கும் நாடகக் குழுவை நடத்தி வரும் மார்க் வில்லியம்ஸன், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் புற்றுநோய் சிகிச்சை அளிப்பதோடு நிக்கரகுவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் உள்ள டாக்டர் அலெக்ஸான்டர் பற்றர்சன் ஆகியோரும் இந்த விருதிற்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் உள்ளனர். இம்மாதக் கடைசியில் விருது அறிவிக்கப்பட உள்ளது.   https://www.ilakku.org/?p=39679
    • உடல் பொருள் ஆவி யெல்லாம் /காணிக்கை பாடல் கதிரவன் எழும் காலை வேளை/ வருகை பாடல்  
    • காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.  வாழ்க வளமுடன்🙏  யா நபி  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • என்ன எழுத்தப்பட்டுள்ளது என்பதை வாசித்து கிரக்கிக்க கூட  முடியவில்லையா? விழிப்புணர்வு போராட்டங்கள் தவறு என்று நான் கூறினேனா? இயற்கைப் பாதுகாப்பு விழுப்புணர்வு ஏப்போதோ ஆரம்பிக்கப்பட்டு விட்டது.  புதிதாக  தமிழ்நாட்டில் யாருக் கண்டு பிடித்த விடயம் அல்ல.  அது இன்னமும் உலகளாகிவிய ரீதியில் மேலும்மு தீவிரமாக முன்னெனடுக்கப்பட வேண்டியது  எனபதற்காக தான்  உலக இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் விழிப்புணர்வுகளை செய்து வருகிறார்கள்.  ஆகவே உலக நாடுகளை பின்பற்றி எமது  நாடுகளிலும் அதை அமுல்படுத்துவது அவசியமே என்பதில் உங்களுடன் நானும் ஒத்துப் போகிறேன் 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.