Jump to content

மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

01.08.1997ம் ஆண்டு யெஜசிக்குறு சமர்களத்தில் மேஜர் சிட்டு அவர்கள் வீரகாவியமானார். தனது இனிய குரலால் இன்றும் எல்லோரின் நினைவுகளோடும் வாழும் சிட்டு அவர்களது14ம் ஆண்டு நினைவுநாள் இன்று. 70பாடல்கள் வரை பாடியுள்ளார்.

u1_siddu2225.jpg

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிட்டு உறங்கிய துயிலிடம் 2003 தாயகம் போனது போது எடுக்கப்பட்ட படம் இது.

chiddu.jpg

சிட்டுவின் நினைவாய் புதுவை அவர்கள் எழுதிய நினைவுப்பாடல் சாந்தன் அவர்களால் பாடப்பட்டது.

சிட்டு பாடிய *கண்ணீரில் காவியங்கள் என்ற பாடல்.இதுவே சிட்டுவின் முதலாவது பாடல்.

Edited by shanthy
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஈழவர்குரல் இணையத்தில் சிட்டபற்றி வெளியான நினைவுக்குறிப்பு:

01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.

ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டுபோராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே.

சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார்.

அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.

போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’.

இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.

ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.

“சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்”

சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.

கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடலாக நான் கருதும் (இது தவறென்றால் தெரியப்படுத்தவும்) ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல் வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசைக்குழுவின் நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.

‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?’என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.

[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவது குறைவு. ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]

சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.

01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது.

அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.

“சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.

Link to comment
Share on other sites

நினைவு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு கலைஞனாகவும் ஒரு போராளியாகவும் வாழ்ந்து காட்டிய மேஜர் சிட்டுவுக்கு, வீரவணக்கங்கள்!!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எமது ஊர் பெற்றெடுத்தது என்பதில் ஒரு பெருமை!

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்!

இந்த மாவீரரை பற்றிய தகவல்களுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Marienschwestern_2_brennende_Lichter_i.jpg

மாவீரன் மேஜர் சிட்டுவிற்கு, வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

வீரவணக்கம் மேஜர் சிட்டு,

ஆம் அது பெரிய மடுவில் ஓர் வலிந்த தாக்குதல்.. உள்ளுக்கு இறங்கும் சண்டை அணிக்கு அடுத்த அணியில் சிட்டு பங்குபற்றி இருந்தார். சண்டக்கு எல்லோரும் தயாரான நேரத்தில் அந்த கும் இருட்டில் .. மெதுவாக இந்த பாடலை அவர் பாடினார்.. சாவினைத்தோழ் மீது தாங்கிய என்ற அந்தப்பாடல்.. அந்த சண்டையில் தான் செத்துவிடுவேன் என்று அவர் முன்னதாகவே சொன்னார் அதனால் தான் என்னவோ இந்த பாடலைப்பாடினார். சண்டை ரீம் நகர்ந்தது. ஒரு மணித்தியாலம் அளவில் காயப்பட்ட போராளிகளைக்கொண்டு வந்தார்கள். அதில் சிட்டுவும் ஒருவர் தலையில் பலத்தகாயம். உயிர் இருந்தது ஆனால் உணர்வு இல்லை. கள முதலுதவி அளிக்கபப்பட்டு பிந்தளத்திற்கு அனுப்ப வாகனத்தை பார்த்திருந்த வேளை எதிரியின் மூன்று நான்கு செல்கள் அந்த பகுதியில் வந்து வெடித்தன. அதில் சிட்டு உட்பட மேலும் மூவர் வீரச்சாவடைந்தனர்.

சிட்டு 1988 ஆன் ஆண்டு இந்திய இராணுவ காலம் அது.. கணிசமானவர்கள் வெளி நாட்டிற்கும் கொழும்பிற்கும் சென்று கொண்டிருந்தனர். சிட்டுவைப்பொறுத்தவரை ஒரு பொறுப்பும் இல்லை. குடும்பத்தில் பலர் வெளி நாட்டில். அவனையும் வெளினாடு போக கொழும்பிற்கு அனுப்பினார்கள். ஆனால் அவர் அப்படியே இயக்கத்திற்கு போய்விட்டார்.

1990 இல் காட்டிற்குள் இருந்து வரும்போதே பொக்குளிப்பான் நோயினால் பாதிக்கப்பட்டுத்தான் வந்தார். யாழ் மாவட்ட படையணியில் இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தார்.

1991 இல் யாழ் மாவட்ட கலை பண்பாட்டு கழக பொறுப்பாளராக இருந்தார். 1993 இல் புலிகளின் குரல் பொறுப்பாக சில காலம் இருந்தார். தனது பணிக்கு இயக்கத்திடம் காசோ அல்லது வாகனமோ கேட்கமாட்டார். வீட்டில் போய் ஆக்கினை கொடுத்து எல்லாம் வாங்குவார். ஏன் அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் கூட வீட்டுக்காரரிடம் தான் வாங்கினார்.

.

1993 இல் கைதடியில் விபத்துக்குள்ளானார். அது ஒரு முஸ்பாத்தி...

இவரிம் மோட்டார் சைக்கிளுக்கு லைட் பிரச்சினை ஒரு குறிப்பில் ஓடிக்கொண்டு இருந்தார். உழவு இயந்திரம் ஒன்று ஒற்றை லைட்டுடப் வந்து கொண்டு இருந்தது, இவர் வேகமாக சென்று கொண்டிருந்தார், மோட்டார் சைக்கிளாக்கும் என்று சாதுவாக வெட்டி கொண்டு சென்று பெட்டியில் மோதினார்.

.

நல்ல பாடகன், கவிஞன், முஸ்பாத்திக்காரன் எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான்.

.

தன் மனதளவில் இரு சிறிய காதலும் இருந்தது. ஆனால் அதுபற்றி தெரியப்படுத்தவில்லை என்பதால் சிலரால் நச்சரிக்கப்பட்டார். அதனால் உண்மையில் அவர் பாதிக்கப்பட்டார். பின்னர் தானாகவே சண்டைக்கு போகப்போறேன் என்று கேட்டுச்சென்றார். விடாப்பிடியாக நின்றதனால் ஒரு ஆறுமாதம் போய்விட்டு வா என்று கூறி வட்டக்கச்சி பண்ணையில் வைத்து சண்டைக்கு நீற்பண்ணி அனுப்பப்பட்டார்.

சிட்டு வீட்டில் கடைக்குட்டி. சரியான செல்லம் ,

சிட்டுவின் அப்பா கோவில் பூசகர் ...அப்பாவிற்கும் மகனிற்கும் நடக்கும் பகிடியும் , சண்டைகளும் தாங்க முடியாது அப்படி ஒரு குளப்படி, குறும்புக்காரன்.

படிக்கின்ற காலத்தில் ஆசிரியர்கள் அதிபர்கள் அனைவருக்கும் குவாட்டஸ்ஸில் இருக்கும் போது செய்கின்ற அனியாயம் கொஞ்சமல்ல.

எல்லாமே இப்ப மாதிரி இருக்கு...

( சக போராளியிடம் இருந்து சிட்டு பற்றி கேட்ட கதை... நன்றி)

உமை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் சிட்டண்ணாவின் வீர வணக்க கூட்டத்தில் கலந்து கொண்டேன் ம்...ம்............ இழப்புதான் ஆனால் அவர் சண்டைக்கு போக வேண்டிய நிலமை நான் அறிந்தது அத சொல்லவிரும்பல ஆனால் அந்த காலத்தில் அரசியல் போராளிகளோ, கலைபண்பாட்டு போராளிகளோ சண்டைக்கு போக வேண்டிய கட்டாய சுழல் இல்லை.

வீர வணக்கம் உங்கள் வழித்தடங்களை சுமந்து நா(ம்)ன்.....................

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் சிட்டண்ணாவின் வீர வணக்க கூட்டத்தில் கலந்து கொண்டேன் ம்...ம்............ இழப்புதான் ஆனால் அவர் சண்டைக்கு போக வேண்டிய நிலமை நான் அறிந்தது அத சொல்லவிரும்பல ஆனால் அந்த காலத்தில் அரசியல் போராளிகளோ, கலைபண்பாட்டு போராளிகளோ சண்டைக்கு போக வேண்டிய கட்டாய சுழல் இல்லை.

வீர வணக்கம் உங்கள் வழித்தடங்களை சுமந்து நா(ம்)ன்.....................

புலிக்குரல் ஊகங்களை இங்கு சொல்லி சிட்டுவின் தியாகத்தைக் கூறுபோடாதிருங்கள். நீங்கள் அறிந்தவற்றில் பல பொய்யானவை(என்னவென்று புரிந்து கொள்வீர்கள்) சிட்டு விரும்பியிருந்தால் எங்கள் எல்லோரையும் விட மேலான வசதிகளுடன் வாழ்ந்திருக்கலாம். அவ்வளவு வசதியை அவனது குடும்பம் செய்யக்காத்திருந்தது. உறவுகள் அவனது பதிலுக்காக காத்திருந்தும் கடைசிவரை தனது கொள்கைக்காக எல்லாவற்றையும் துறந்த போராளி.

இயல்பிலே அமைந்த கலகலப்பான சுபாவம் உங்கள் காது கேட்ட விடயங்களுக்கான காரணமாக இருக்கலாம். மற்றும்படி அவன் ஓர் சிறந்த போராளியாக அதாவது உயிர்விடும்வரை வாழ்ந்துவிட்டுப் போனான் என்பது தான் உண்மை.

அவனது வழித்தடங்களை சுமந்துள்ள நீங்களா இப்படியொரு சந்தேகத்தை அவன் மீது விதைத்துவிட்டுள்ளீர்கள் ?

Edited by shanthy
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாட்டு தந்து...எம்மை விட்டு....பறந்த சிட்டு....!

நன்றி: பூராயம்,தமிழ்ப்புலிகள் போன்ற வலைப்பூக்கள்.

ஒரு அழகிய பகற்பொழுது. அது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபம். சமகாலக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரண்டு போராளிகள் எமக்கு நிலைமைகளை விளக்கிக் கொண்டிருந்தனர். இருவரையும் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பின்னர் ஒரு போராளி கேட்டார் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் எம்மிடம் கேளுங்கள். தயக்கம் இருந்தால் ஒரு சிறிய கடதாசியில் எழுதி முன்னாலே அனுப்புங்கள். நிறைய கேள்விகள் கேட்டனர். எல்லாவற்றிற்கும் பதில்கள் கிடைத்தன.ஒரு மாணவன் கேட்டிருந்தான் அண்ணா ஒரு பாடல் பாடிக்காட்டுங்கள்? நான் நினைத்தேன் ஏன் இவன் இப்படி கேட்கிறான் என்று. அப்ப அந்த போராளி அண்ணா சொன்னார் கருத்தரங்கு முடியும் போது பாடுகிறேன். நான் எதையும் நினைக்கவில்லை. பின்னர் முடியும் தறுவாயில் புன்முறுவல் பூத்த முகத்துடன் "சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்...." என்ற "உயிர்ப்பூ" படப்பாடலை பாடினார். அப்போதுதான் தெரிந்தது இவர்தான் போராளிப்பாடகர் சிட்டு என்று.

"ஜெயசிக்குறு" என்று புறப்பட்டு தமிழரின் தலை கொய்வேன் என்ற சிங்களத்துச்சேனை அடிவாங்கி அடிவாங்கி ஆமையாய் நகர்ந்து வன்னியின் கழுத்தை நெரிக்க முற்பட்டது. பிஞ்சும் பழமும் களமுனையில் வெஞ்சமராடிய காலம். எம் விடுதலை சேனையோ தடுத்து நிறுத்த முழுப்பலத்தையும் பிரயோகித்த நேரம். காலம் அவனையும் களமுனைக்கு தள்ளியது. குரலால் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த போராளி, இப்போது குண்டுகளால் எதிரியை திணறடிக்கிறான். மண்ணை காக்கும் பணியில் மாவீரனாகிறான். மாவீரன் சிட்டு வித்தாக விழுந்த தினம் இன்றுதான்(01.08.1997). பதினொரு வருடங்கள் பறந்துவிட்டன. மனதை விட்டு பறக்காமல் எம்முள் வாழ்கிறான் சிட்டு.

செங்கதிரின் "கண்ணீர்ரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்...." என்ற பாடலுக்கான மெட்டுத்தான் எமக்கு சிட்டுவை ஒரு பாடகனாக தமிழீழ மண்ணிற்கு தந்தது. ஒரு போராளிப்பாடகன். இவன்தான் நிறைய போராளிகளுக்கு வழிகாட்டியாய் அமைந்தான். இப்போதெல்லாம் நிறைய போராளிக் கலைஞர்கள் உருவாகிவிட்டார்கள். இவற்றிற்கெல்லாம் அடிநாதம் எங்கள் சிட்டு.

கேணல்.கிட்டு வீரச்சாவு அடைந்த உடன் செய்தி மட்டுமல்ல உருவாகிய பாடலும் உள்ளத்தை பிசைந்தது. முதலில் வந்த "தளராத துணிவோடு களமாடினாய்......" என்ற பாடலை பாடியவர் மேஜர் சிட்டு. அற்புதமான பாட்டு. பின்னர் நெய்தல் ஒலிப்பேழையில் எஸ்.ஜி.சாந்தனுடன் இணைந்து "வெள்ளி நிலா விளக்கேற்றும் பாடல்...." கரும்புலிகள் ஒலிப்பேழையில் "ஊர் அறியாமலே உண்மைகள் உறங்கும்..." என்ற தொகையறாவுடன் தொடங்கும் "சாவினைத்தோள் மீது தாங்கிய ...." என்ற பாடல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

பூநகரி வெற்றிப்பாடல் "சங்கு முழங்கடா தமிழா இந்த சாதனை பாடடா கவிஞா.." என்ற பாடலை மீண்டும் சாந்தனுடன் பாடி புகழ் அடைந்தார். இவரது நிறைய பாடல்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.

இசைபாடும் திரிகோணம் ஒலிப்பேழையில் இடம்பெற்ற "கடலின் அலை வந்து தரையில் விளையாடும்..." என்ற பாடலும் அதே தொகுப்பில் 'ரணசுரு','சூர்யா',உட்பட 3கப்பல்களை தாக்கியளித்த கரும்புலிகள் நினைவாக வந்த "விழியில் சொரியும் அருவிகள்...." என்ற பாடலும் மிக உருக்கமானவை. இந்த கரும்புலித் தாக்குதலுடன்தான் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது.

பாட்டுகள் தந்த எங்கள் சிட்டுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு நினைவுப்பாடல்....

ஒருமுறை உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் என் எல்லோரும் வேண்டுகின்ற "தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தன்ப்பேழைகளே........." என்ற துயிலும் இல்ல பாடலுக்கும் சிட்டு குரல் கொடுத்துள்ளார். முன்னர் இப்பாடலின் சரணத்தில் "..நள்ளிராவேளையில் நெய்விளக்கேற்றியே நாம் உம்மை பணிகின்றோம்..." என்ற வரி பின்னர் காலச்சூழ்நிலைக்கேற்ப மாற்றப்பட்டு விட்டது.

நெஞ்சைப்பிழியும் நினைவு ஒன்று. சிட்டு களத்திற்கு போக தயாராகிறான். அவனது போராளி நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள் உனக்கு பிடித்த பாடல் ஒன்றை எமக்காக பாடு என்று. எல்லாம் நினைத்து நடப்பதில்லை. ஏன் அப்படி கேட்டார்களோ தெரியாது. ஆனால் சிட்டு இதே துயிலுமில்ல பாடலையே நண்பர்களுக்காக இறுதியாக பாடினானாம். எல்லோரும் அழுது விட்டார்களாம். இப்போது அந்நண்பர்கள் செங்களம் மீதிலே உன்னுடைய கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை ஒரு போராளி நண்பர் பகிர்ந்து கொண்டார். மனதைப்பிழியும் நினைவு ஒன்று. அந்தப்பாடல் துயிலும் இல்லத்துக்கு மட்டுமே உரியது என்பதால் இங்கே தரமுடியவில்லை.

காலம் முழுவதும் வாழ்வான் சிட்டு எங்கள் நெஞ்சைப்பிழியும் பாட்டுக்கள் மூலம்.

சிட்டுவின் எட்டாவது ஆண்டு நினைவில் பூராயம் வலைப்பூவில் வந்த பதிவு:

போர்க்குயிலின் மறைவு.

தமிழீழப் போராட்டத்தில் எழுச்சிப் பாடல்களின் பங்கும் தாக்கமும் மிகப்பெரியது. “புலிகள் பாடல்கள்” என்ற முதலாவது வெளியீட்டிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் இயற்றி இசையமைக்கப்பட்டு மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. எண்பதுகளில் பெரும்பாலும் தமிழகக் கலைஞர்களைக் கொண்டு உருவான பாடல்களே அதிகம். டி.எம்.சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், மனோ, பி.சுசீலா, சொர்ணலதா, வாணி ஜெயராம் என்று திரையிசையிற் பிரபலமான பல பின்னணிப் பாடகர்களின் குரல்களில் அப்போதைய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன.

இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின் தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்திலேயே பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதுடன் முழுக்க முழுக்க உள்நாட்டுக் கலைஞர்களைக் கொண்டே அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்நேரத்தில் சிறந்தவொரு பாடகன் எங்களுக்குக் கிடைத்தான். மேஜர் செங்கதிர் என்ற போராளிக் கவிஞனின் வரிகள் பாடலாக உருப்பெற்றபோது இப்போராளிப் பாடகன் அறிமுகமானான். “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற பாடலே இப்போர்ப்பாடகனின் முதலாவது அரங்கேற்றம். அதன்பின் களத்தில் சாகும்வரை சுமார் 75 பாடல்கள் வரை பாடியுள்ளான் சிட்டு எனும் இப்போராளிப் பாடகன்.

விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பொறுப்புக்களிலும் அரசியல்துறையின் பொறுப்புக்களிலும் தனது போராட்டப் பணியைச் செய்து வந்தான். கேணல் கிட்டு அவர்களுக்காக 'சிட்டு' பாடிய “கடலம்மா” பாடல் மிகுந்த பிரபலம். சிட்டுவின் குரல் யாரையும் கட்டிப்போட வல்லது. பின் ‘உயிர்ப்பூ’ திரைப்படத்தில் சிட்டு பாடிய

‘சின்னச் சின்னக் கண்ணில் - வந்து மின்னல் விளையாடிடும்’

என்ற பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியாது. வெளியிடப்படும் எந்த ஒலிநாடாக்களை எடுத்தாலும் அதில் சிட்டுவின் பாடல் இருக்கும்.

ஜெயசிக்குறு தொடங்கியபின் வன்னியில் கடும் சண்டை மூண்டது. வெற்றி தோல்வி எதுவும் தெரியாமல், எப்போது முடியுமென யாராலும் சொல்ல முடியாமல் நீண்டது சண்டை. அச்சமர் தொடங்கியதிலிருந்து சமர்க்களத்திற் பணியாற்றினான் சிட்டு. இறுதியில் ஆவணி முதலாம் திகதி ஓமந்தை இராணுவத்தளத்தின் மீது புலிகளின் திட்டமிட்ட அதிரடித் தாக்குதலின்போது களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான் எங்கள் பாடகன் மேஜர் சிட்டு.

-----------------------------------------------------------

சிட்டண்ணையைச் சந்தித்த சம்பவமொன்று:

“கூப்பிடு தூரம்” என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் ஜெயசிக்குறு தொடங்கிய பின் சண்டை நடக்கப்போகும் இடங்களைப் பார்க்கச் சென்றிருந்த நிகழ்வைப் பதிந்திருந்தேன். அன்று தான் நான் இறுதியாகச் சிட்டண்ணையைச் சந்தித்தேன்.

புளியங்குளச் சந்தியிலிருந்து கிழக்குப் பக்கமாக, புளிங்குளத்தின் அணைக்கட்டால் நானும் நண்பர்களும் நடந்து சென்று கொண்டிருக்கிறோம். அணைக்கட்டை மையமாக வைத்து பதுங்குகுழிகளும் காவலரண்களும் போராளிகளால் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சற்றுத் தொலைவில் புளியமரத்தின் கீழ் கும்பலாக முப்பது பேர் வரையில் இருந்தார்கள். மரத்தை நெருங்க, அவர்கள் பாட்டுப்பாடி கலகலப்பாக இருப்பது புரிந்தது. போராளிகள் வழமையாக ஆபத்தற்ற இடங்களில் கும்பலாக இருந்து பாடல்கள் பாடிப் பொழுதைக் கழிப்பது வழமை. அதுவும் போர்க்களம் சார்ந்த இடங்களில் ஆபத்தில்லாத பட்சத்தில் இது நிச்சயம் நடக்கும். நாமும் அதை ரசித்தவாறு கடந்துசெல்ல முற்பட்ட போதுதான் பாடிக்கொண்டிருந்த அந்தக் குரல் சாதாரணமானதில்லையென்பது புரிந்தது.

“சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்.

அண்ணன் என்ற நெஞ்சில் நூறு அர்த்தங்களை தூவிடும்”

இந்தப் பாட்டை யாரால் அவ்வளவு உருக்கமாகப் பாட முடியும்?அதே சிட்டண்ணை தான் பாடிக்கொண்டிருந்தார். கையில் ஒரு தண்ணீர்க் கான். தானே தாளம்போட்டுப் பாடிக்கொண்டிருந்தார். மரத்தடிக்குச் சென்றோம். அந்தப் பாட்டு முடியுமட்டும் நின்று கேட்டு ரசித்தோம். புதிய போராளிகளைக் கொண்ட அணியொன்றுக்குப் பொறுப்பாளனாய் கடமையாற்றிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் நலம் விசாரித்தார். சனம் என்ன கதைக்குது எண்டு வினாவினார். சனங்களின் இடப்பெயர்வுகள் பற்றியும் வெளியே பரப்புரைகள் பற்றியும் விசாரித்தார்.

நாங்கள் இடங்கள் பார்த்து மதியமளவில் மீண்டும் அவ்வழியால்தான் புளியங்குளச் சந்திக்கு வந்தோம். அப்போது காவலரண் அமைத்துக்கொண்டிருந்தது அவரது அணி. வேலை முடிந்து மதிய உணவுக்காக மீண்டும் மரத்தடிக்கு வந்துகொண்டிருந்தார்கள். எம்மைக்கண்ட சிட்டண்ணை,

“வாங்கடாப்பா வந்து எங்கட சாப்பாட்டையும் ஒருக்காச் சாப்பிடுங்கோ”

எண்டு கூப்பிட்டார். எவ்வளவு மறுத்தும், வெருட்டி, கூட்டிக்கொண்டு போய் இருத்தி, சாப்பாடு தந்து தான் விட்டவர். எல்லாம் முடிந்து சந்தி நோக்கி வரும்போது தான் முதற்பதிவில் குறிப்பிட்ட எறிகணை வீச்சும் மற்றதுகளும் நடந்தன.

அருமையான ஒரு பாடகன், போராளி. எழுச்சிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த அந்தப் போர்க்குயில் ஒருநாள் ஊமையாகிவிட்டது. அவரின் எட்டாம் ஆண்ட நினைவுதினம் இன்று.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிட்டுவின் பாடல்கள் சில :-

புலியொரு காலமும் பணியாது

தளராத துணிவோடு கேணல் கிட்டு

வெற்றி பெற்று தந்து விட்டு

சங்கு முழங்கட தமிழா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சாந்திக்கா நன்றி இனைப்பிற்கு. எமது விடுதலைக்காக மரணித்த வீரர்கள் கடவுளுக்கு சமன், அவர்களை பற்றி ஊகங்கள்ளோ என்னவென்றாலும் செல்ல தகுதி உடையவர் தலைவர் மட்டுமே, எங்களுக்கு அந்த அருகதை இல்ல, அவர்களின் தியாகங்களை இற/ருக்கும் வரை போற்றும் & கனவை நினைவக்க போரடுவேம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலைக்காக மரணித்த வீரர்கள் கடவுளுக்கு சமன், அவர்களின் தியாகங்களை இற/ருக்கும் வரை போற்றும் & கனவை நினைவக்க போரடுவேம்.

உண்மைதான் உடையார். எங்களுக்காக தங்களை இல்லாமல் ஆக்கியவர்களை ஆவணப்படுத்தலும் அவசியமானது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிட்டு அண்ணனுக்கு வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிட்டு பாடிய கடைசிப்பாடல்.

தமிழீழ மொட்டுக்கள் இசைத்தட்டிலிருந்து....இணைப்பில் அழுத்தி பாடலைக் கேளுங்கள்.

சிறகு முளைத்து உறவை நினைத்து பறக்கும் குருவிகள்.

Edited by shanthy
Link to comment
Share on other sites

சிட்டுவின் பாடல்களுக்கு நான் அடிமை..நல்ல ஒரு கலைஞ்ஞன்.. தன்பாடல்களில் என்றைக்கும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பான்..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிட்டுவும் சாந்தனும் இணைந்து பாடிய இப்பாடல் அதிகளவில் மக்களிடம் பேசப்பட்ட பாடல்களில் ஒன்று.

வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் கடல் விசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

View Posttigertel, on 03 August 2011 - 07:43 PM, said:

நான் சிட்டண்ணாவின் வீர வணக்க கூட்டத்தில் கலந்து கொண்டேன் ம்...ம்............ இழப்புதான் ஆனால் அவர் சண்டைக்கு போக வேண்டிய நிலமை நான் அறிந்தது அத சொல்லவிரும்பல ஆனால் அந்த காலத்தில் அரசியல் போராளிகளோ, கலைபண்பாட்டு போராளிகளோ சண்டைக்கு போக வேண்டிய கட்டாய சுழல் இல்லை.


வீர வணக்கம் உங்கள் வழித்தடங்களை சுமந்து நா(ம்)ன்.....................புலிக்குரல் ஊகங்களை இங்கு சொல்லி சிட்டுவின் தியாகத்தைக் கூறுபோடாதிருங்கள். நீங்கள் அறிந்தவற்றில் பல பொய்யானவை(என்னவென்று புரிந்து கொள்வீர்கள்) சிட்டு விரும்பியிருந்தால் எங்கள் எல்லோரையும் விட மேலான வசதிகளுடன் வாழ்ந்திருக்கலாம். அவ்வளவு வசதியை அவனது குடும்பம் செய்யக்காத்திருந்தது. உறவுகள் அவனது பதிலுக்காக காத்திருந்தும் கடைசிவரை தனது கொள்கைக்காக எல்லாவற்றையும் துறந்த போராளி.


இயல்பிலே அமைந்த கலகலப்பான சுபாவம் உங்கள் காது கேட்ட விடயங்களுக்கான காரணமாக இருக்கலாம். மற்றும்படி அவன் ஓர் சிறந்த போராளியாக அதாவது உயிர்விடும்வரை வாழ்ந்துவிட்டுப் போனான் என்பது தான் உண்மை.


அவனது வழித்தடங்களை சுமந்துள்ள நீங்களா இப்படியொரு சந்தேகத்தை அவன் மீது விதைத்துவிட்டுள்ளீர்கள் ?


This post has been edited by shanthy: 03 August 2011 - 09:35 PM 

சாந்தி அக்கா பேராளிகளின் தியாகங்களுக்கு முன் நான் எப்பவுமே வீரம் பேசியதில்லை..... இதற்க்கான காரணத்தையும் நான் எழுதல......!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புலிக்குரல்,

இத்திரி சிட்டுவிற்கான நினைவுமீட்டலாகத்தான் இடப்பட்டது. ஏன் களம் போனான் எப்படி மரணம் நிகழ்ந்தது என்ற ஆராட்சி நடக்கவில்லை.

ஆக நீங்கள் பூடகம் போட்டு எழுதிய கருத்து இங்கு பொருத்தமற்றது அதையே சுட்டினேன்.

நீங்கள் தெரிந்த காரணத்தை பகிரவில்லை. ஆனால் ஏதோவொரு பூதம் இருப்பது போன்ற தோற்றத்தை உங்கள் கருத்து உருவாக்கியிருக்கிறது.

சாவீட்டில் சாவில் இழந்த உயிருக்கான மதிப்பைப் பேசலாமே அதுதான் அந்த உயிருக்கான கெளரவம்.

உங்களை சிரமப்படுத்தியமைக்கு மன்னிக்கவும்.

Edited by shanthy
 • Like 1
Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் மேஜர் சிட்டுவின் நினைவுகள் தாங்கிய இணையம்

http://chiddu1997.wordpress.com/

annalingam-1.jpg

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வரலாறு (கொழும்பின் கதை - 12) - என்.சரவணன் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் ஆட்சி செய்த போதே அந்தோனியார் வழிபாடும், அந்தோனியார் ஆலயங்களும் இலங்கையில் தோன்றிவிட்டன. 1597இல் கோட்டை இராச்சியத்தையும்,  1618இல் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றிய பின்னர் இந்தப் பகுதிகளில் தேவாலயங்களைக் கட்டத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக அந்தோனியார் தேவாலயங்கள். புனித அந்தோனியார் பாதுவாவில் தனது இறுதிக் காலத்தைக் கழித்திருந்தாலும் அவர் போர்த்துக்கலின் லிஸ்பன் நகரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். எனவே போர்த்துகேயர் கைப்பற்றிய நாடுகளில் புனித அந்தோனியார் வழிபாடு பிரசித்தம் பெற்றிருந்தது. கொழும்பு கோட்டைக்குள் இருந்த அந்தோனியார் தேவாலயமானது; அந்தோனியார் வழிபாட்டை இலங்கை முழுவதும் பரப்பி வந்த பிரான்சிஸ்கன் சபை மிஷனரிகளின் தலைமையகமாக இருந்தது. 1597 இல் கோட்டை அரசன் தொன் ஜூவான் தர்மபால இறந்தபோது அவரின் உடலையும் இந்த தேவாலயத்தில் தான் அடக்கம் செய்தார்கள். 1580 ஓகஸ்ட் 12 அன்று மன்னர் தொன் ஜூவான் தர்மபால போர்த்துக்கேயரின் நிர்பந்தத்தின் விளைவாக கோட்டை ராஜ்ஜியத்தை போர்த்துக்கேயருக்கு பரிசாக அளிப்பதாக உயில் (மரண சாசனம்) எழுதி கொடுத்த கதையை அறிவீர்கள். கத்தோலிக்க மதத்துக்கு மாறி கத்தோலிக்கப் பெயரை சூட்டிக்கொண்ட முதல் இலங்கை மன்னர் அவர். அது போல மன்னர் பரராஜசேகரனின் மனையையும், அவரின் மகன், இரு மகள்மாரையும், மன்னர் குடும்பத்தினர் பலரும் இந்த தேவாலயத்தில் தான் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்கள். கொழும்பு கோட்டைக்குள் இருந்த போர்த்துகேய அந்தோனியார் கோவில் தலைமையகம். 1656 ஆண்டு வரைபடம். (Changing Face of Colombo – R.L.Brohier) ஒல்லாந்தர்கள் கத்தோலிக்க மதத்தவர்களைக் கொன்றார்கள். அவர்களிடம் இருந்து தப்பிய கத்தோலிக்கர்கள் இரண்டாம் இராஜசிங்கன் (1635 - 1687)ஆட்சி செய்த கண்டி இராச்சியத்தில் தஞ்சம் புகுந்தார்கள். வஹாகோட்டே என்கிற இடத்தில் புனித அந்தோனியாருக்கு ஒரு சிறிய சிலையை வைத்து வணங்கினார்கள். இன்றும் வஹாகொட்டேயில் அந்த அந்தோனியார் தேவாலயம் இருக்கிறது. அதன் பின்னர் கண்டி மன்னன் இரண்டாம் விமலதர்மசூரியன்; பாதிரியார் ஜோசப் வாஸ்ஸுக்கு (Joseph Vaz) அந்தோனியார் வழிபாட்டுக்கு பூரண சுதந்திரம் வழங்கினார். கண்டியில் அந்தோனியாருக்காக பாதிரியார் ஜோசப் வாஸ் எந்த கெடுபிடியுமின்றி திருவிழா நடத்தினார். அதன் பின்னர் திறைசேரியில் களவு போயிருந்தவேளை மன்னர் ஸ்ரீ வீர நரேந்திர சிங்கனும் புனித அந்தோனியாரை வழிபட்டார் என பதிவுகள் உண்டு.  இலங்கையில் உள்ள புனிதர்களின் ஆலயங்களிலேயே அந்தோனியார் வழிபாடு தான் மிகப் புகழ்பெற்ற வழிபாடாக வளர்ந்திருக்கிறது என்கிறார்; இலங்கையில் அந்தோனியார் வழிபாடு குறித்து ஆராய்ந்த சாகர ஜயசிங்க.  இவாறு போர்த்துகேயரிடம் இருந்து இலங்கையை ஒல்லாந்தர் கைப்பற்றிய பின்னர் போர்த்துக்கேயரின் காலத்தில் கத்தோலிக்க மதத்தையும் கத்தோலிக்கப் பாதிரிமார்களையும் தடை செய்திருந்தார்கள். அவர்களின் பிரதான வழிபாடான அந்தோனியார் தேவாலயங்களையும் கூடவே தடை செய்திருந்தார்கள். ஒல்லாந்தர்கள் (டச்சு) புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். டச்சு ஆட்சி 1796 இல் முடிவு பெற்ற போதும் ஆங்கிலேயர்கள் 1806 ஆம் ஆண்டு தான் “கத்தோலிக்கத் தடை” யை நீக்கினார்கள். ஆளுநர் தோமஸ் மெயிற்லான்ட் மத வழிபாட்டுச் சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டச்சு ஆக்கிரமிப்பின் நிறைவுக் காலத்தில்,  கொழும்பில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்ததால், இலங்கை ஒராடோரியர்களின் தலைமைப்பதவியில் இருந்த ஜாகோம் கோன்சால்வேஸ், அங்கு நிரந்தரமாக வசிக்கும் ஒரு பாதிரியாரின் தேவையை உணர்ந்தார். கொச்சினியிலிருந்து அந்தோணி (Friar Antonio) என்ற கத்தோலிக்க ஒராடோரியன் முன்வந்து கொழும்பை வந்தடைந்தார். ஆனால் துன்புறுத்தல் காரணமாக அவரால் பாதிரியாராக செயல்பட முடியவில்லை. அதனால், வியாபாரி போல் மாறுவேடமிட்டு, பகலில் (இன்றைய மாலிபன் தெருவில் உள்ள) கடையில் மீன் விற்றார். இரவில் அவர் கத்தோலிக்கர்களை அடையாளம் கண்டு பூசைகளை செய்தார். ஒரு வருடம் கழிந்தது. இரகசிய கத்தோலிக்க பூசை நிகழ்வதை அறிந்த டச்சுக்காரர்கள் அந்தோணியைத தேடினர். மீனவ சமூகத்தினர் அதிகமாக வாழ்ந்த முஹுதுபொடவத்தை என்ற பகுதியை அவர் கடந்து சென்று கொண்டிருந்தார்.  இந்த நேரத்தில், கடல் அரிப்பு கடற்கரையை தாக்கி மீனவர்களின் இருப்பிடங்களை சுருக்கியது. வள்ளங்கள் அலையில் அடித்துச் சென்றன. அந்தோணி பாதிரியார் அதிசயம் நிகழ்த்திய நிகழ்வு அந்தோணியை வழியில் சந்தித்த மீனவர்கள் தமக்கு தீர்வு தேடி அந்தோணியை அணுகினார்கள். கடல் அரிப்பைத் தடுக்க பிரார்த்தனைகளை வழங்குமாறு அவர்கள் அவரிடம் கோரினார்கள்.  அந்தோணி அதை செய்துவிட்டால் டச்சு வீரர்களிடமிருந்து அவருக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். பின்னர் அந்தோணி  மணலில் ஒரு சிலுவையை நட்டு, மண்டியிட்டு மூன்று நாட்களாக உண்ணா நோன்பிருந்து பிரார்த்தனை செய்தார். அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, கடல் பின்வாங்கத் தொடங்கி, அரிப்பைத் தடுக்கும் மணல் அணையை உருவாக்கியது. டச்சு வீரர்களும் இதைக் கண்டு பின்வாங்க வேண்டியிருந்தது. அதைக்கண்டு வியப்படைந்த மீனவர்கள் அந்தோனியைச் சுற்றித் திரண்டனர். அவர்கள் கத்தோலிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். அந்த இடம் தான் இன்றைய கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் அமைந்திருக்கும் இடம். "அந்தோனியின் அதிசயம்" பலராலும் அப்போது பேசப்பட்டது. டச்சு ஆளுநர் வில்லெம் மௌரிட்ஸ் ப்ரூய்னின்க் (Willem Maurits Bruyninck - 1739-1742) அந்தோணியின் பிரார்த்தனையின் சக்தியை அறிந்தார். கத்தோலிக்கர்கள் மீதும் அவர் தாராளவாத அணுகுமுறையைக் கொண்டிருந்தார். அந்த அதிசயம் நிகழ்ந்த நிலத்தை அந்தோணிக்கு வழங்கினார் அங்கே அவர் சிறு தொழிலையும் தெய்வீகப் பணியையும் மேற்கொள்வதற்கு ஆளுனரால் அனுமதி வழங்கப்பட்டது. 1656ஆம் ஆண்டிற்குப் பின்னர் கத்தோலிக்கர்கள் கொழும்பு நகரத்திற்குள் மத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான  சுதந்திரம் வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது நன்றியை வெளிக்காட்டுமுகமாகவும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணிக்கும் முகமாகவும் சிலுவையை நாட்டிய இடத்தில் சிறிய தேவாலயத்தை அமைத்தார் அந்தோணி. அந்த சிலுவை நட்டிய இடத்தில் தான் இன்றும் பலர் வரிசையாக சென்று வழிபடும் அந்தோனியாரின் நாவின் பகுதி வைக்கப்பட்டிருக்கிற “புதுமைச் சுருவம்” இருக்கிறது. அந்தோணி முதலில் அந்த நிலத்தில் ஒரு சிறு கடையை ஆரம்பித்தார். அது கடை “கடே” என்றே அழைக்கப்பட்டது. கொச்சினில் இருந்து வந்தவரின் கடை என்பதால் “கொச்சியாகே கடே” காலப்போக்கில் “கொச்சிக்கடை” என்று நிலை பெற்றது. டச்சு கிழக்கிந்திய கம்பனியால் அந்தோனியார் தேவாலயம் இருந்த நிலம் எழுதிக்கொடுக்கப்பட்ட ஆவணம் இந்த நிலமனை அதிகாரப்பூர்வமாக டச்சு கிழக்கிந்திய கம்பனியால் ஜனவரி  20, 1790 அன்று, பத்திரம் இல 31  இன் மூலம் தேவாலயத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. இதில் கிழக்கிந்திய கம்பனியின் உத்தியோகபூர்வ இலட்சினை பொறித்திருப்பதைக் காண்பீர்கள். பின்னர் அந்தோணி இறந்தபோது அவரின் உடலும் இந்த ஆலயத்தினுள் தான் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது தேவாலயத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ள புனித அந்தோனியின் புனிதச் சிலை 1822  ஆம் ஆண்டு கோவாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். 1806 ஆம் ஆண்டு அடித்தளம் இடப்பட்டு 1834ஆம் ஆண்டு புதிய தேவாலயம் கட்டும் பணி  தொடங்கப்பட்டது. அந்த ஆண்டைத்தான் ஆலயத்தின் தொடக்க நாளாக இன்றுவரை கணிக்கப்பட்டுவருகிறது. 1934இல் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது.   1938 ஆம் ஆண்டு பெரிய ஆலயமாக பெருப்பிக்கப்பட்டது. இன்று இலங்கையில் புனித அந்தோணியார் ஆலயம் மிகப்பெரிய புனித தேவாலயமாக மாறியுள்ளது.  பாதுவா நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித அந்தோனியாரின் நாக்கின் ஒரு சிறிய பகுதி இங்கே விசேடமாக வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் அதனை வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.   1912 ஆம் ஆண்டு கவர்னர் சேர் ஹென்றி மெக்கலம் கொழும்பு துறைமுகத்திற்காக இந்த நிலத்தை கையகப்படுத்த முயற்சித்தபோது ரோமன் கத்தோலிக்க மக்களின் தெய்வீக வழிபாட்டுத் தளமெனக் கூறி அவரின் ஆலோசகர்கள் பலர் அதனை எதிர்த்ததால் அம்முயற்சி கைவிடப்பட்டது.   லலித் அத்துலத் முதலி துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில் துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான துறைமுகக் காணியின் ஒரு பகுதியை அந்தோனியார் தேவாலய விஸ்தரிப்புக்கு வழங்கினார். அந்தோனியார் ஆலயம் துறைமுகத்தின் எல்லையோர காப்பரண் போலவே நிலைத்து நிற்பதை நீங்கள் அறிவீர்கள். 90 ஆம் ஆண்டு பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் அந்தோனியார் ஆலயத்தை கொழும்பு உயர் மறை மாவட்டப் பங்காக ஆக்கும்படி விடுத்த கோரிக்கை; ஆயரால் எற்றுகொள்ளப்படாத நிலையில் ஆலய நிர்வாகம் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியது. முதற் தடவையாக மூன்று மாதங்கள் ஆலயம் மூடிவைத்த கதை நாட்டின் முக்கிய பேசுபொருளாக அப்போது இருந்தது. இறுதியில் 15.08.1990 அன்றிலிருந்து சுதந்திர ஆலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதுவரை கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலய நிர்வாகத்தின் கீழ் தான் இது இயங்கிவந்தது. கொழும்பில் அதிகளவிலானோர் கலந்து கொள்ளும் கிறிஸ்தவ திருவிழா “அந்தோனியார் திருவிழா தான். பல தடவைகள் சன நெருக்கடியால் விபத்துக்கள் நேர்ந்திருக்கின்றன. அந்தளவுக்கு கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை ஜிந்துப்பிட்டி, விவேகானந்தா மேடு, செட்டியார் தெரு, என தேவாலயத்தின் சுற்றுவட்டாரப் பகுதியெங்கும் திருவிழாக்கோலம் பூண்டு, எங்கெங்கும் விளக்கொளியில் கொண்டாட்டமாகக் காட்சித் தரும். இந்து, பௌத்த, முஸ்லிம் மக்களும் கூட ஒன்றாக கூடிக் கொண்டாடும் நிகழ்வு அது. வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில்  பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் இந்து பக்தர்கள் பலர் கூட அங்கே சென்றுவிட்டு அப்படியே அந்தோனியார் கோவில் தமிழ்ப் பூசையில் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமன்றி இந்தப் பகுதியில் உள்ள புனித வியாகுல மாதா, புனித வேலாங்கன்னி, புனித அந்தோனியார், புனித லூசியாஸ் ஆகிய ஆலயங்கள் 1996 இலிருந்து ஒன்றாக இணைந்து விபூதிப் புதன் நாளில் “கொழும்பு பெரிய சிலுவைப் பாதை” என்கிற ஊர்வலத்தை செய்து வருகின்றனர். இதுவும் கொழும்பில் மிகப் பெரிய அளவினர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வாக ஆகியிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி மோசமான பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலுக்கு அந்தோனியார் ஆலயமும் இலக்கானது. 93 பேர் இங்கே கொல்லப்பட்டார்கள். பல நூற்றுகணக்கானோர் படுகாயமுற்றார்கள். பலத்த சேதத்துக்கு உள்ளான தேவாலயம் யூன் 12 ஆம் திகதி தான் மீண்டும் திறக்கப்பட்டது. அந்தோனியார் தேவாலயத்தின் வளவில் மிஷனரிமார்களால் கொச்சிக்கடை புனித அந்தோனியார் பாடசாலை (இப்போது கல்லூரி) 1945 இல் 40 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 1958 இல் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டு இன்று ஆயிரம் மாணவர்களுக்கும் மேல் கற்கும் கல்லூரியாக இயங்கி வருகிறது. அந்தோனியார் தேவாலயத்தின் வரலாற்றைக் கூறும் சிறு நூதனசாலையொன்று 2013 ஜனவரி 13 அன்றிலிருந்து இயங்கி வருகிறது. அங்கே இந்த வரலாற்று விபரங்களை மேலும் அறியலாம்.   நன்றி - தினகரன் - 23.01.2022 https://www.namathumalayagam.com/2022/01/kochchikadeStanthonys.html?fbclid=IwAR3ZeHeMxda5u3dpb-9LnVB3_AfjxFBofV97HEqc7v4f2GAeOZsW42jNyGg
  • .A. George   / 2022 ஜனவரி 25 , பி.ப. 04:51 - 0      - 49 FacebookTwitterWhatsApp இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ரயில்வே திணைக்களத்துக்கு நாளாந்தம் தேவையான எரிபொருளை வழங்காவிடின் ரயில் சேவையில் சிக்கல்கள் ஏற்படலாம் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ரயில் திணைக்களத்திடம் சுமார் 5 இலட்சம் முதல் 6 இலட்சம் லீற்றர் வரையான எரிபொருள் இருப்பு உள்ள போதிலும், அது தற்போது மூன்றரை இலட்சம் லீற்றர் ஆக குறைந்துள்ளதாக  ரயில்வே தொழிற்சங்க கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் பி.விதானகே தெரிவித்துள்ளார்.  ரயில்கள் முறையான இயங்கினால் நாளொன்றுக்கு 100,000 லிட்டர் எரிபொருளை செலவழிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மருதானை ரயில்  ஊழியர் சங்க காரியாலயத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Tamilmirror Online || 'எரிபொருள் இல்லை என்றால் ரயில் சேவையிலும் சிக்கல்'
  • பிரபாகரன் சண்முகநாதன்   News தேசியக்கொடி பிரிண்ட் செய்யப்பட்ட டீ-சர்ட்கள் ( amazon ) சமீபத்தில் ட்விட்டரில், இந்திய தேசிய கொடியை Amazon அமவமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்திய தேசிய கொடி அச்சிடப்பட்ட டீ-சர்ட், கப், கீ செயின், சாக்லேட் போன்ற பொருள்கள் அமேசான் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என சிலர் பதிவிட்டு வருகின்றனர். அந்த பதிவுகளில், இது விற்பனையை அதிகரிக்க செய்யப்படும் கீழ்மையான செயல் என்றும் இதன் மூலம் தேசபக்தி ஒருபோதும் அதிகரிக்க போவதில்லை எனவும் கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர். மேலும் சிலர், இது Flag Code of India 2002 சட்டத்திற்கு எதிரானது எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பது, "எந்தவித உடைகள் மற்றும் சீருடைகளில் கொடி பயன்படுத்தக்கூடாது. எந்தவித கைகுட்டைகள், நாப்கின் மற்றும் பெட்டிகள் மீது தைக்கப்படவோ பொறிக்கவோ கூடாது"   amazon, twitter விதிகளை மீறியுள்ள பொருட்களைப் பட்டியலிட்டிருக்கும் விற்பனையாளர்கள் மீது இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக அமேசான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற குற்றச்சாட்டு அமேஸான் மீது எழுவது முதல் முறை அல்ல. 2017 -ம் ஆண்டு அமேசானின் கனடா விற்பனை தளத்தில், இந்திய தேசிய கொடி பதிக்கப்பட்ட வாசல் விரிப்பு (Doormat) விற்பனைக்கு இருந்தது. பலத்த எதிர்ப்புக்கு பிறகு அதனை அமேஸான் நீக்கியது. குடியரசு தினக் கொண்டாட்டம் ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்தச் செய்தி ட்விட்டரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. Amazon இந்திய தேசியக்கொடியை அவமதிக்கிறதா -#Amazon_Insults_National_Flag ஹேஷ்டேக் பின்னணி என்ன? |Amazon Faces Backlash For Selling Products Showing Indian Flag (vikatan.com)
  • கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுகுளம் ஆற்றுப் பகுதியில்  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவது தொடர்பாக விசுவமடு தொட்டியடி 6 ஆம் படைப்பிரிவின் இலங்கை சிங்க பிரிவின் இராணுவ முகாமுக்கு கிடைத்த தகவலையடுத்து  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களின் உழவு இயந்திரத்துடன்  12 பேரை கைது செய்து தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்திற்கு எந்தவித அனுமதி பாத்திரங்களும் இல்லாத நிலையிலும் மணல் அகழ்வுக்கு அனுமதிகள் வழங்கப்படாத இடத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை இவ்வாறு  உழவு இயந்திரத்துடன்,  12 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் குறித்த சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் உழவு  இயந்திரத்துடன் கைது | Virakesari.lk
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.