Jump to content

மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997


Recommended Posts

சிட்டுபாடிய " அலைபாயும் இசையோசை கேட்கலையா கரையில் இளம் வீரர்" என்ற பாடல் யாரிடமாவது இருக்கிறதா ? இருந்தால் தந்துதவுங்கள்.

Edited by shanthy
Link to comment
Share on other sites

வீரவணக்கம் மேஜர் சிட்டு.

Link to comment
Share on other sites

  • 5 months later...

மூசுமலை பேசவில்லையோ துறைமுகத்தில் அனலெழுந்து வீசவில்லையோ.....!!!!!!!!!!!!

Edited by shanthy
Link to comment
Share on other sites

  • 1 month later...

அலைபாடும் இசையோசை கேட்கலியா....

பாடலைப் பாடியவர் மேஜர் சிட்டு. 01.08.1997அன்று ஜெயசிக்குறுய் சமரில் வீரச்சாவடைந்த சிட்டு 70ற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

***நீமறைந்து போனாலும் உனது ஞாபகங்களை என்றும் சுமக்கும்உ னது தோழமைகள் உனது குரலுக்கு வசமான உலக இசைவிரும்பிகளும் உனது குரலையும் உனது நினைவுகளையும் காலமுள்ள வரையும் காத்துச் செல்வோம்***

Link to comment
Share on other sites

மறக்கமுடியாத மனிதர்கள்.

அழிக்கமுடியாத நினைவுச் சுமைகள்.

ஆறுமா இந்த வடுக்கள்????? நெருப்பாய் எரிக்கிறது உடலையும் உள்ளத்தையும்.

Link to comment
Share on other sites

விழிகள் கரைய உருகியுருகி தினமும் அழுகின்றோம்.

பாடலைப் பாடியவர் மேஜர் சிட்டு. 01.08.1997அன்று ஜெயசிக்குறுய் சமரில் வீரச்சாவடைந்த சிட்டு 70ற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அமுதமழையில் நனையும் பொழுதில்....

பாடலைப் பாடியவர் மேஜர் சிட்டு. 01.08.1997அன்று ஜெயசிக்குறுய் சமரில் வீரச்சாவடைந்த சிட்டு 70ற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

Edited by shanthy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா இந்தப் பாடலை கொஞ்சம் முன்னம்தான் கேட்டுக் கொண்டிருந்தேன்...ஏதேதோ நினைவுகள்,உலகங்கள்,புலிவாசம் வீசிய அந்தக் காலங்களுக்குள் நுழைந்து சிறுவனாக போராளிகள் காவல் காத்த என்னூரின் வீதிகளில் மனம் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது....தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் விரும்பத்தக்க இணைப்பு.நன்றிகள்

சிட்டுவின் நினைவில் நனைந்து

அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்

போய்வா நண்பனே

லியோ

Link to comment
Share on other sites

  • 2 months later...

சிட்டு 15ம் வருட நினைவுகளோடு

‘சிட்டு’

சிரிப்பு நிறைந்த மகிழ்ச்சியின் உறைவிடம் நீ.

நீயழைந்த காற்றும் நீ நடந்த நிலமும்

நினது நினைவுகள் நிறைந்து

மௌனித்துக் கிடக்கிறது.

கனவுகளோடும் கலையாத நினைவுகளோடும்

நீ நிறைந்த இசையும் பாடல்களும்

உயிர்ப்பின் இருப்பாய் ஈரமாய்……

இசை நிறையும் திசையெல்லாம்

உன்னை ஏந்தியிருக்கிறது ஒலிக்கதிர்கள்…..

தீயின் சுவடுகள் மீதேறிய உனது கால்களும் மூச்சும்

01.08.1997அன்று ஓய்வெடுத்து உறங்கிய நாள் கடந்து

இன்றுன் நினைவுகள் 15ம் ஆண்டைத் தொட்டு நிற்கிறது.

ஆற்ற முடியாச் சோகத்தை இந்த நூற்றாண்டு தந்துவிட்டுச்

சலனமின்றி நகர்கிற இந்நாட்கள் பற்றிச் சொல்வதானால்…….????

நீயுறங்கிய நிலம் மீது பேயுலவித் திரிகிறது…..

அமைதியைக் கொன்று போட்டவர்கள்

உனதும் உனது தோழர்களும் தாங்கிய கனவுகள் மீதும்

காலூன்றி உங்கள் கனவுகள் சிதைகிற பொழுதுகளிவை…..

ஊழித்தீமூட்டி உனதும் உன்போன்றோரின் கனவுகளும்

நிலமிழந்து நின்மதியிழந்து அலைகிறது.

நீங்கள் தா(தூ)ங்கிய இடங்களும் தோற்றுப் போய்

நீங்கள் எதிர்த்துக் களமாடியவர்கள் கைகளிலே….

எனினும் நம்பிக்கைகள் த(து)ளிர்க்கிறது.

நாங்கள் நேசித்த உங்கள் கனவுகள் மெய்த்திடக்

காலமெங்கள் கண்ணீரைத் துடைக்குமென்று நம்புகிறோம்…..

அதுவரை காத்திருங்கள் உங்கள் அனைவருக்கும்

அன்று தீயெடுத்துத் தீப்பந்தமேந்தித் துயர் கரைப்போம்.

(01.08.2012.மேஜர் சிட்டு இவ்வுலகைவிட்டுப் பறந்து 15 ஆண்டுகள் நிறைகிறது. ஒரு போராளியாக பாடகானாக நடிகனாக தமிழர் தேசத்தின் விடுதலைக்காக ஓயாது உழைத்த ஒரு போராளி. 75இற்கு மேற்பட்ட தேசப்பாடல்களைப் பாடியவர். கலைஞனாய் இயங்கியவன் 01.08.1997அன்று களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்)

Edited by shanthy
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.