Jump to content

No Aryan Invasion---New and recent genetic proof.


Recommended Posts

¯ñ¨Á¢ø ÅÃÅ¢ø¨Ä, «×ðÖì þ¾Æ¢ø¾¡ý Åó¾Ð. ¸¡¨Ç Á¡ðκ¢ýÉò¨¾ ̾¢¨Ã¡¸ Á¡üÈÓ¨ÉóÐ «¾üÌ þíÌÔûÇ À¡÷À½ர்¸û ¬Á¡õ º¡Á¢ §À¡ð¼Ð À¨Æ ¸¨¾. ¬Ã¢Â÷ ±ýÈ¡ø «Å÷¸û(«¾¡ÅÐ ¯í¸û)¦Á¡Æ¢Â¢ø ¯Â÷󧾡÷ ±Éô¦À¡Õû.¾¢Ã¡Å¢¼÷ «øÄÐ ¾…Ô ±ýÈ¡ø ¾¡ú󧾡÷ ±ýÚ ¦À¡Õû. ¬Ã¢Âý ±ýÀÐ Äò¾£É¢ý orion ±ýÈ Å¡÷ò¨¾Ô¼ý Ô¼ý ¦À¡Úò¾¢À¡÷ì¸ÜÊÂÐ

Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply

சிந்து சமவெளி,ஹரப்பா முழுதும் இப்போது இந்தியாவில் உள்ளதா? எப்படி பாகிஸ்த்தானில் உள்ள இடத்தில் எல்லாம் இந்தியா ஆராய்ச்சி செய்ய முடியும்?

ÓøÄ÷ ¸¡Äò¾¢Öõ ºÃ¢ «¾üÌ À¢ý 30 ¬ñÎŨà À¡¸¢Šò¾¡ý ±Ûõ ¿¡§¼ ¯ÕÅ¡¸Å¢ø¨Ä

Link to comment
Share on other sites

பார்ப்பனரை வெறுப்பது ஏன்?

குத்தூசி குருசாமி

(‘சுயமரியாதை’ இதழ் 1961-ல் வெளியிட்ட பொங்கல் மலரில் குத்தூசி குருசாமி எழுதிய மிகச் சிறந்த கட்டுரை இது)

மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்ட்ரரைப் பார்த்துப் பின்வருமாறு சொல்கிறார்:-

“கல்வியறிவுள்ள பிராமணர்களை வணங்குவது தான் மன்னனுடைய முதற் கடமை. ஒருவன் தன் உயிரையும், தன் குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றுவது போலவே பிராமணர்களைக் காப்பாற்ற வேண்டும். தன் பெற்றோர்களை வணங்கி மரியாதை செய்வது போலவே பிராமணர்களை வணங்கி மரியாதை செய்ய வேண்டும். பிராமணர்கள் திருப்தியோடிருந்தால் நாடு முழுவதுமே செழிப்போடிருக்கும்; பிராமணர்கள் கோபங் கொண்டாலோ, அதிருப்திப்பட்டாலோ, நாட்டிலுள்ள யாவுமே அழிந்து போய்விடும். பிராமணர்கள் நினைத்தால் கடவுளை கடவுளற்றதாகச் செய்து விடலாம்; கடவுளற்றதைக் கடவுளாக ஆக்கி விடலாம். அவர்களால் புகழப்படுகிறவர்கள் சிறந்து வாழ்வார்கள்; இகழப்படுகிறவர்கள் துன்பத்துக்காளாவார்கள்.”

என்ன அருமையான உண்மை, பார்த்தீர்களா? மகாபாரதம் ஓர் முழுக் கற்பனை. இக்கதை நடைபெற்றதாகக் கூறப்படுவது ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முன்னர்! ஆதலால் தான் கற்பனை! இதை முதன்முதல் வடமொழியில் எழுதியவர் வியாசர். இந்நூல் எழுதப்பட்டே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். ஆனால், மேலே கண்ட வாக்கியங்கள் இன்றைக்கும் உண்மை. 100-க்கு 100 பங்கு உண்மை! உலகில் நிலைத்துவிட்ட அனுபவ உண்மைகளில் ‘பீஷ்மர்’ என்பவர் பெயரால் கூறப்படுகின்ற இந்தப் பொன்மொழியும் ஒன்றாகும். பார்ப்பனர் நினைத்தால், தங்களுக்குப் பயன்படும் மனிதனாகத் தோன்றினால் ஒரு சாதாரண நாலாந்தரப் போக்கிரியை ‘கிருஷ்ண பரமாத்மா’வாக ஆக்கியது போல், ஒரு சாதாரண மனிதனை ‘மகாத்மா’ ஆக்கி விடுவார்கள்; அதே ஆள் தங்களுக்கு இனிப் பயன்பட மாட்டான் என்று கருதினால் உடனே அதே ‘மகாத்மாவை’ சுட்டுக் கொன்று விடுவார்கள்! செத்த மகிழ்ச்சிக்காக மிட்டாய் வழங்கிக் குதூகலப்படுவார்கள்! திராவிட நரகாசூரனைக் கொலை செய்து அந்த நாளைக் கொண்டாட்ட (தீபாவளி) நாளாகச் செய்துவிட வில்லையா? அதுபோலத் தான். இப்போது இதைப் படியுங்கள்; இது காந்தியார் கொள்கை!

“நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் பலர் நல்ல எண்ணத்தின் பேரிலேயே, நான் பூணூல் போட்டுக் கொள்ளும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றியடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக் கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மட்டும் அதைப் போட்டுக் கொள்வதற்கு என்ன உரிமையிருந்தது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக் கொள்வது அநாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக (வைசியனான) எனக்குத் தோன்றவில்லை... இந்து மதமும் இந்தியாவும் இன்றுள்ள நிலைமையில் ஆன்மீகப் புனர் வாழ்வுக்குச் சின்னமான இந்தப் பூணூலை அணிந்து கொள்ளத் தங்களுக்கு உரிமையுண்டு என்று இந்தக்களால் காட்ட முடியுமா என்று சந்தேகப்படுகிறேன். இந்து மதத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு-தாழ்வு என்ற வேற்றுமைகளெல்லாம் நீங்கி, அதில் இப்போது மலிந்து கிடக்கின்ற பல்வேறு தீமைகளும் வேஷங்களும் ஒழிந்த பிறகு தான் இந்துக்களுக்குப் பூணூல் அணியும் உரிமை ஏற்பட முடியும். ஆதலால் பூணூல் அணிந்து கொள்வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது” (பக்கம் 397 - சத்திய சோதனை-காந்தியார் சுயசரிதை-மொழிபெயர்ப்பு ரா.வெங்கட்ராஜலு).

படித்தீர்களா? இப்போது சொல்லுங்கள். பூணூல் அணிவதை வெறுத்த காந்தியார் மராத்திப் பார்ப்பான் (கோட்சே) கையினால் சுட்டுக் கொல்லப்பட்டதில் தவறென்ன? வியப்பென்ன? அதிர்ச்சி என்ன? பீஷ்மரின் போதனையை மீண்டும் ஒரு தடவை படித்துப் பாருங்கள்! ஆம்! பார்ப்பனரை எதிரிகளாக்கிக் கொள்கிறவனுக்கு இராவணன் மரணம் தான்; இரணியன் முடிவுதான்; நரகாசுரன் சாவுதான்; காந்தியார் கதி தான்! சிவாஜியின் அரசாங்கம் அழிந்தது யாரால்? மராட்டியர் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் தெரியும்.

சிவாஜி பார்ப்பன சூழ்நிலையிலேயே வளர்ந்தார். அரசாங்கத்திலும் ராஜ்யத்திலும் பார்ப்பனரே பெருகிக் கிடந்தனர். அவர் மன்னர் பதவி ஏற்றபோது இராணுவத்தளபதியைத் தவிர்த்து அவரது மந்திரிகள் அனைவரும் போர் வீரனான சிவாஜியை ‘க்ஷத்திரியன்’ ஆக்கினால் தான் அரசனாக முடியும் என்று கூறி, கற்பனைப் பரம்பரைக் கதை ஒன்றைத் திரித்து, அவருக்குப் பூணூல் அணிவித்தார்கள். நாடு முழுவதிலிருந்தும் 50,000 பார்ப்பனர் மனைவி மக்களோடு தருவிக்கப்பட்டு பவுனாகவும் உணவாகவும் வழங்கப்பட்டனர். தலைமைப் புரோகிதனான கங்குபட்டனுக்கு மட்டும் ஒரு லட்ச ரூபா பரிசு! பட்டஞ்சூட்டு விழாவின் மொத்தச் செலவு ஏழு கோடி ரூபாவாம்! இவ்வளவு பச்சைப் பார்ப்பன சிவாஜியின் அரசாங்கம்கூட நிலைத்திருக்க முடியவில்லை. அது ஒரு ‘இராமாயணம்’.

மதத் துறையைத்தான் எடுத்துக் கொள்வோம். புத்தர் நெறி (பவுத்தம்) இந்து மதத்தை ஒழித்து விடும் என்பதைக் கண்ட பார்ப்பனர் பவுத்த சங்கத்திற்குள்ளேயே நுழைந்தனர். புத்தர் ஏமாந்தார். என்ன ஆயிற்று? அவர் வீட்டுக்குள் நுழைந்த நல்ல பாம்பு அவரது குழந்தையை (புத்த நெறியை)க் கடித்து நஞ்சை ஏற்றிக் கொன்றுவிட்டது. இன்று உலகத்திலுள்ள பவுத்தர் எண்ணிக்கை 15 கோடி! இதில் புத்தர் பிறந்த (இந்தியா) நாட்டிலுள்ளவர்கள் 2 (இரண்டே) லட்சம்! அதாவது 750-இல் ஒரு பங்குதான், இந்தியாவில்! போதுமா? இன்னும் வேண்டுமா?

நாகசாகித் தீவில் விழுந்த அணுகுண்டின் நச்சுக் காற்று இருபதாண்டுகளுக்குப் பிறகுகூட இன்றும் அங்குள்ள மக்களுள் ஆபத்தான நோய்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறதாம்! இந்தியாவில் 2,000 ஆண்டுகட்கு முன்பு விழுந்த ஆரிய அணுகுண்டின் நச்சுக் காற்றுத்தான் இன்றுள்ள சாதி! இன்றுள்ள நெற்றிக்கோடு! இன்றுள்ள சமஸ்கிருதம்! இன்றுள்ள கோவில்! இன்றுள்ள புராண-இதிகாசம்! இன்றுள்ள ‘பிராமண பக்தி!’ 'இந்து சமுதாயம்' என்பது அக்கிரகாரத்தின் கைப்பிடிக்குள் அடங்கியிருக்கின்ற மிளகாய்ப்பொடி! எதிர்த்தால் கண் போச்சு! எந்த அரசாங்கம் ஆரியக் கலாச்சாரத்தை - அதாவது ஆதிக்கத்தை - ஏற்றுக் கொள்கிறதோ, அந்த அரசாங்கத்தைத் தான் பார்ப்பன (நச்சுக்காற்று) சக்தி வாழவிடும்! இல்லையேல், அரசாங்க நிர்வாகத்துக்குள் புகுந்தே அழிந்துவிடும்! மூவேந்தர் ஆட்சி அழிந்ததும் இவ்வாறே.

மந்திரிகள், உயர்தர அதிகாரிகள் போன்ற ஆதிக்க நாற்காலிகளில் அக்கிரகார சக்திக்கு இடமில்லையானால் வெளிநாட்டானை அழைத்து வந்தாவது அந்த ஆட்சியை அழித்தே தீரும். 31 ஆண்டுகள் இந்நாட்டில் பாதிரியாக இருந்து, நாடு முழுதும் சுற்றிய ‘அபேடுபாய்’ என்ற பிரெஞ்சுப் பாதிரியார் 160 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய தம் நூலில், “பார்ப்பனர் வடிகட்டிய அயோக்கியர்கள்; இரட்டை நாக்குப் படைத்தவர்கள்; எந்த ஈனச் செயலுக்கும் துணிந்தவர்கள்” என்றெல்லாம் அக்கிரகாரத்தின் மீது ‘லட்சார்ச்சனை’ செய்தாரே! அவருக்கு அன்றிருந்த துணிச்சலில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இன்றைய ‘வீரத் தமிழனுக்கு’ இல்லையே!

இப்போது கூறுங்கள், பார்ப்பனரை வெறுப்பது சரியா? தப்பா?

ạ¾¢Ã¡º¡! ¯í¸Ùì̾¡ý ÀÊÐÀ¡Õí¸û

Link to comment
Share on other sites

ஐயா! இது வந்தது உண்மை இதழில் அது இந்த விழயத்தில் நேர்மையான பதிவாக அதை கருத முடியாது. உண்மை இதழ் திராவிடர் கழத்தின் இதழ். ஆரியர் என்பது பொருள் என்ன?.அவர்கள் ஈரான் இருந்து சைபர் கணவாய் வழியாக வந்த்வர் என்று சொன்னது யார்? முல்லர் தானே.

ராஜாதிராஜா இங்கே தான் தவறு இழைகிறீர்கள் ,

இந்துதுவாதிகள் புனையும் கதைகளை நம்பும் நீங்கள்.,திராவிடற் கழக இதழ் வேதங்களைச் சுட்டிக் காட்டி எழுதும் கருதுக்களை எது வித காரணமும் இன்றி அது திக இதழ் அதனால் அதனைக் கருத்தில் எடுக்க மாட்டேன் என்று கூறுகிறீர்கள்.இது உங்களுக்கு நியாயமானதாகப் படுகிறதா.

எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு.

திகவைப் பற்றியும் வீரமணி பற்றியும் விமர்சனம் எனக்கும் உண்டு.

ஒரு அரசியற் காரணுதிற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் வலுவிழந்து ஒரு நிறுவனமாக்கப் பட்டதில் எனக்கும் உடன் பாடு கிடயாது.

தமிழ் நாட்டில் அரசியற் கட்சிகள் எல்லாமே குடும்ப நிறுவனங்களாகவே உள்ளன.அது அதிமுக என்றால் என்ன திமுகா என்றால் என்ன திக என்றால் என்ன எல்லாம் ஒண்டு தான்.ஒரு அரசியல் இயக்கம் அரசியற் குறிக் கோளுடன் கொள்கைகளுடன் இயங்க வேண்டும் அது மக்கள் நலங்களை முன் நிறுத்த வேன்டும்,அப்போது தான் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

பெரியார் தொடக்கியதை தொடர்வதற்கு இன்றுள்ள முற்போக்கு அரசியற் சக்திகள் ஒன்று பட்டு வேலை செய்து ஒரு உண்மயான மக்கள் இயக்கதை கட்டி எழுபினாலேயே உங்களுக்கு விடிவு உன்று.அதில் நாம் தலை போடவில்லை அது உங்கள் பிரச்சினை.

உங்களை விட எனக்கு தமிழ் நாட்டில் அதிக அரசியற் தொடர்புகள் அனுபவங்கள் உள்ளதால் இதைச் சொல்கிறேன் ஒழிய உங்களை மட்டந்தடுவதற்காக அல்ல.உங்கள் மேல் எனக்கு உள்ள கரிசனைதான் அதற்கு காரணம் ,உங்களைத் தூற்றுவது எனது நோக்கமல்ல. நான் தமிழ் நாட்டு மக்களை நேசிக்கிறேன் காரணம் நான்

தமிழ் நாட்டில் பல தரப்பட்ட மக்களோடு பல மானிலத்தவரோடு பழகி இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

நன்றி நாரதரே. நான் தர்க்க ரீதியாக இந்த விழய்த்தில் வாதாடுவது சரியில்லை. அவர்கள் ஆரியரே திராவிடரோ எல்லோரும் ஒரே தட்டில் தான் இபோது இருக்கிறோம். பார்பானியத்தை மீண்டும் எடுக்காத வரை அவர்களை பிரிப்பது சரியா? எனக்கு தெரிந்து இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் பிராமிணர் ஆதிக்கம் என்பது எனக்கு தெரிந்து இல்லை. அவர்களும் ரிச்ர்வேஷன் போன்ற விழய்ங்களில் மாட்டி கொண்டு தான் இருக்கிறார்கள்.இன்னும் சில பேர் வந்தேறி என்ற முறையில் பேசி கொண்டு இருப்பது சமுகத்தையே பிரிவு படுத்தும் முறை போல் உள்ளது. உங்கள் கருத்து என்ன? என நண்பரிடம் இருந்து இந்த ஆராய்ச்சி பற்றி செய்தி வந்தது நான் அதை தெரிவு படுதுகிறேன்.

Link to comment
Share on other sites

ராஜாதிராஜா, ஆரியப்படையெடுப்பு பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது நவீன மரபணு ஆராச்சியால் என்று ஆப்பிழுத்தது நீங்கள். தொல்பியல் சான்றுகள் மொழிகள் கலாச்சாரங்கள் வரலாற்று ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளப்படுபவையால் நியாயப்படுத்தப்பட்டதை விஞ்ஞானச் சொற்களால் பூசி மொழுகி பெய் என்று தர்க்கிக்க வெளிக்கிட்டது நீங்கள். இப்போது சரிவரவில்லை என்றதும் உங்களில் ஒன்றாக பாருங்கோ ஒரே தட்டில் தானே இருக்கிறம் என்று குத்துக்கரணம் அடிக்குறீங்கள்.

பார்பனியத்தை வழத்து கடவுளின் பெயரால் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துற பருப்பு இனியும் வேகாது என்றவுடன் விஞ்ஞானத்தின் பெயரால் ஒரே தட்டில் ஒட்ட நிக்குறியள்.

மற்றவர்களை மடையராக்கும் இந்த இரட்டை வேடத்தை நிப்பாட்டினா கன பிரச்சனைகள் இருக்காது அய்யா.

Link to comment
Share on other sites

நன்றி குருவி!! அந்த முடிவிகளை நாம் இன்னும் அதிக்கமாக கலந்து பேச வேண்டும். தேவை இல்லாமல் விவாதம் ஹிந்துத்வா பக்கம் சென்று விட்டது

Link to comment
Share on other sites

நன்றி நாரதரே. நான் தர்க்க ரீதியாக இந்த விழய்த்தில் வாதாடுவது சரியில்லை. அவர்கள் ஆரியரே திராவிடரோ எல்லோரும் ஒரே தட்டில் தான் இபோது இருக்கிறோம். பார்பானியத்தை மீண்டும் எடுக்காத வரை அவர்களை பிரிப்பது சரியா? எனக்கு தெரிந்து இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் பிராமிணர் ஆதிக்கம் என்பது எனக்கு தெரிந்து இல்லை. அவர்களும் ரிச்ர்வேஷன் போன்ற விழய்ங்களில் மாட்டி கொண்டு தான் இருக்கிறார்கள்.இன்னும் சில பேர் வந்தேறி என்ற முறையில் பேசி கொண்டு இருப்பது சமுகத்தையே பிரிவு படுத்தும் முறை போல் உள்ளது. உங்கள் கருத்து என்ன? என நண்பரிடம் இருந்து இந்த ஆராய்ச்சி பற்றி செய்தி வந்தது நான் அதை தெரிவு படுதுகிறேன்.

முதலில் எல்லோரும் ஒரே தட்டில் என்பது எவ்வாறு என்று கூறுவீர்களா?

அப்படி ஆயின் ஏன் தேவை இட ஒதுகீடு ஏன் வெவ்வேறு அரசியற் கட்ச்சிகள் இருகின்றன.ஏன் தமிழ் நாடு தனக்கு தேசிய உற்பத்த்யில் அதிக பங்கு வேணும் என்கிறது?ஏன் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருகின்றன.ஏன் நகரங்களில் இருப்பவர்களுக்கும் கிராமங்களில் இருப்பவர்களுக்கும் ஏற்றத் தாழ்வுகள் இருகின்றன?

ஏன் அசாம் பெற்றோலிய வருமானதில் தனக்கு பங்கு கேட்கிறது?ஏன் தமிழ் நாட்டு முதலமைச்சர் தமிழ் நாஅட்டு மீனவர்களைக் காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் இட வேண்டும்?உங்கள் வெளியுறவுக் கொள்கையை யார் தீர்மானிக்கின்றனர்?

ஏன் பாரதிய ஜனதா இந்துதுவக் கொள்கைக்கை முன் நிறுத்துகிறது?பாரதிய ஜனதாவின் தலைவர்கள் ஏன் பார்ப்பனராக இருகின்றனர்?

ஏன் இந்து ராம்,சோ பொன்ரோர் ஈழத் தமிழ்ர் மேல் இவ்வளவு விசமத்தைக் கக்குகின்றனர்?ஏன் தமிழ் பிராமணர் சங்கம் அமைகின்றனர்?ஏன் இவ்வளவு சாதியச் சங்கக்ங்கள் உள்ளன?

இவற்றிற்கெல்லாம் ஒரே விடை, சமூகம் என்பது ஒன்றல்ல பல்வேறு வர்க்க வேறுபாடுகள் ,பொருளாதார அரசியற் சக்திகள் பொருளாதார நலங்களுக்குக்காக் போட்டி போடுகின்றன என்பதுவே.

தமிழ் நாட்டில் ஏற்பட்ட திராவிட இயக்கத்தாலேயே நிலப்பிரபதுவ, சாதிய அடக்குமுறை கட்டுப் பாட்டுக்குள் வந்தது.உயர் சாதியினரின் அடக்குமுறைக்கு எதிராகத் இயக்கங்கள் எழுந்ததன.இன்றும் இந்த சுரண்டல் அசக்குமுறை கிராமமங்களில் உள்ளது, நகரங்களில் வெளிப்படயாகத் தெரிவதில்லை காரணம் நகர பொருளாதார அமைப்பு முறை நிலப்பிரபத்துவ முறமையில் இருந்து வேறு படுகிறது.

இங்கே வேறு பாடு பொருளாதாரச் சுரண்டலாலேயே வருகிறது. சம நிலை என்பது பொருளாதார்ச் ச்மனிலயாலேயே ஏற்படும்.அது மத்தியில் உங்களுக்கு அதாவது தமி நாட்டுக்கு சம உரிமை இருகிறதா,இந்தியக் கூட்டமைவில் உங்களுக்கு சம அரசியல் பலம் இருகிறதா ?உங்கள் சமூகத்தில் எல்லத் தரப்பினருக்கும் சம வாஇப்புக்கள் வசதிகள் இருகிறதா என்பதில் தான் தங்கி உள்ளது.

மட்டுறுதினர்களுக்கு ஒரு வேன்டுகோள் இங்கே நடக்கும் கருத்தாடலுக்கு சம்பந்தமில்லாமல் இடயில் புகுந்து சீண்டும் நோக்கிலான கருத்துக்களை எழுதி திசை திருப்புபவரை வெளி யேற்றவும்,அல்லது இவருக்கு தகுந்த பதில் அவரது பாணியிலேயே வைக்க வேண்டி வரும்.

Link to comment
Share on other sites

நன்றி குருவி!! அந்த முடிவிகளை நாம் இன்னும் அதிக்கமாக கலந்து பேச வேண்டும். தேவை இல்லாமல் விவாதம் ஹிந்துத்வா பக்கம் சென்று விட்டது

ராஜாதிராஜா தேவயில்லாமல் செல்லவில்லை நீங்கள் இணைத்த அந்த ஆராச்சி என்பது இந்துதுவ வாதிகளின் ஒரு ஏமாற்று வித்தை என்பதாலேயே ஏன் எதற்கு என்று ஆராய்ந்த போதே இந்துதுவா இங்கே வந்தது.இந்துதுவாக்கும் பிராமணியத்திற்குமான தொடர்பு ,என்ன என்பது இதை இங்கே எதுவித பதிற் கருத்த்க்களும் இன்றி வசைபாட வந்தவர்களின் நடத்தையால் இன்னும் மிகத் தெளிவாக அம்பலம் ஆனது.

Link to comment
Share on other sites

Brahmihs

The break up of the Caste system is bound to affect adversly the Brahmin Caste. Having regard to this, is it reasonable to expect that the Brahmins will ever consent to lead a movement the ultimate result of which is to destroy the power and prestige of the Brahmin Caste? Is it reasonable to expect the secular Brahmins to take part in a movement directed against the priestly Brahmins? In my judgement, it is useless to make a distinction between the secular Brahmins and priestly Brahmins. Both are kith and kin. They are two arms of the same body and one bound to fight for the existence of the other.

In no country does the mass of the people live the life of intelligent thought and action. It is largely imitative and follows the intellectual class. There is no exaggeration in saying that the entire destiny of a country depends upon its intellectual class. An intellectual class may be a band of high-souled persons, ready to help, ready to emancipate erring humanity or it may easily be a gang of crooks or a body of advocates of a narrow clique from which it draws its support. You may think it a pity that the intellectual class in India is simply another name for the Brahmin caste. You may regret that the two are one; that the existence of the intellectual class should share the interest and the aspirations of that Brahmin caste, which has regarded itself the custodian of the interest of that caste, rather than of the interests of the country. All this may be very regrettable. But the fact remains, that the Brahmins form the intellectual class of the Hindus. It is not only an intellectual class but it is a class which is held in greate reverence by the rest of the Hindus. The Hindus are taught that the Brahmins are Bhudevas (Gods on earth).

When such an intellectual class, which holds the rest of the community in its grip, is opposed to the reform of Caste, the chances of success in a movement for the break-up of the Caste system appear to me very, very remote.

þÐ «õ§Àò¸¡Ã¢ý Å¡¾õ

Link to comment
Share on other sites

பிராமணர்கள் ஆரியரா என்பதை பற்றி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.....

நான் இனத்தால் திராவிடன்.... அந்த இனத்தை பற்றி யாராவது பழித்தால் நான் சும்மா இருக்க மாட்டேன்... இது போல பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு என் இனத்தின் பெருமைகள் உலகுக்கு பறை சாற்றப்பட்டிருக்கிறது.....

Link to comment
Share on other sites

பிராமணர்கள் ஆரியரா என்பதை பற்றி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.....

நான் இனத்தால் திராவிடன்.... அந்த இனத்தை பற்றி யாராவது பழித்தால் நான் சும்மா இருக்க மாட்டேன்... இது போல பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு என் இனத்தின் பெருமைகள் உலகுக்கு பறை சாற்றப்பட்டிருக்கிறது.....

«ôÀÊ¡ ±í¸û ¾¢Ã¡Å¢¼º¢Í§Å! ¯ÁìÌ ¾¢Ã¡Å¢¼ þÂì¸õ ±ýÈ¡ø ±ýÉ¡? «Ð ±¾üÌ §¾¡ýÈ¢ÂÐ ±ýÚ ¦¾Ã¢ÔÁ¡? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

குருவியாரே, ராஜாதிராஜா ஆரியப்படையெடுப்பு பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று வேறு பகுதிகளில் எழுதியதற்கு ஆதாரம் மேலதிக தகவல் தராமல் மொட்டையாக சொல்ல வேண்டாம் என்று கூறியதால் தான் இந்த விவாத தலைப்பு அவரால் போடப்பட்டது. அவர் இங்கு வைத்த தகவல்கள் தான் ஆரியப்படையெடுப்பு நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றதற்கு ஆதாரமாக வைக்கப்பட்டது.

8 பக்கங்கள் எழுதின பிறகு நீர் ஏன் குத்துக்கரணம் அடிக்குறீர் அவர் சார்பில் அது தான் நிலையானது என்று அவரோ இல்ல எவருமோ சாதிக்கவில்லை. நாளை இன்னொரு ஆய்வு அதை மறுதலிக்கலாம். ஆனால் இந்த இடத்திலும்... என்று?

குறுக்காலபோனவரே.. உங்களுக்கு நிச்சயமா இதுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் நீங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. ஒரு ஆய்வின் அடிப்படையில் அது தரும் முடிவு.. அதன் பயன்பாடு.. அதன் மீள் உறுதிப்படுத்தல் . அதை நிறுவத்தக்க வேறு ஆய்வுகள் கொண்டு எடுக்கப்படும் இறுதிவரைபு என்று ஆய்வு முடிவுகள் தொடர்பில் பல நிலைகள் இருக்கிறது. அவை உங்களுக்கு தெரியும். இங்கு தரப்பட்ட ஆய்வு முடிவின் பிரகாரமே கருத்து வைக்கப்படுகிறது.அதில் நீங்கள் குறை கண்டுபிடிக்க இது வெறும் ஆவண ஆய்வல்ல. இது பரிசோதனை ரீதியான ஆய்வு முடிவு..! அங்கு பல நிலை செயன்முறைகள் தரவுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு முடிவை வெறும் ஆவண ரீதியான ஆய்வுச் சான்றுகளை வைத்து முறியடிக்க முடியாது. அதேவேளை இவ்வாய்வு முடிவே இறுதியானது என்றும் சொல்லப்படவில்லை. இருப்பினும் இவ்வாய்வு முடிவின் பிரகாரம் ராஜாதிராஜா இட்ட தலைப்பில் தவறில்லை. இதையேதான் சாரமாக 1 முதல் தற்போது வரை சொல்லிட்டு இருக்கிறம். அது புரியல்ல என்பது எமது குற்றமல்ல..! :wink: :idea:

Link to comment
Share on other sites

குறுக்காலபோனவரே.. உங்களுக்கு நிச்சயமா இதுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் நீங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. ஒரு ஆய்வின் அடிப்படை அது தரும் முடிவு.. அதன் பயன்பாடு.. அது மீள் உறுதிப்படுத்தல் ஆய்வு.. அதை நிறுவத்தக்க வேறு ஆய்வுகள் கொண்டு எடுக்கப்படும் இறுதிவரைபு என்று ஆய்வு முடிவுகள் தொடர்பில் பல நிலைகள் இருக்கிறது உங்களுக்கு தெரியும். இங்கு தரப்பட்ட ஆய்வு முடிவின் பிரகாரமே கருத்து வைக்கப்படுகிறது.அதில் நீங்கள் குறை கண்டுபிடிக்க இது வெறும் ஆவண ஆய்வல்ல. இது பரிசோதனை ரீதியான ஆய்வு முடிவு..! அங்கு பல நிலை செயன்முறைகள் தரவுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு முடிவை வெறும் ஆவண ரீதியான ஆய்வுச் சான்றுகளை வைத்து முறியடிக்க முடியாது. அதேவேளை இவ்வாய்வு முடிவே இறுதியானது என்றும் சொல்லப்படவில்லை. இருப்பினும் இவ்வாய்வு முடிவின் பிரகாரம் ராஜாதிராஜா இட்ட தலைப்பில் தவறில்லை. இதையேதான் சாரமாக 1 முதல் தற்போது வரை சொல்லிட்டு இருக்கிறம். அது புரியல்ல என்பது எமது குற்றமல்ல..! :wink: :idea:

குருவியாரே ராஜாதிராஜ இட்டது ஆய்வல்ல விஞ்ஞான சொற்களால் எழுதப்பட்ட ஒரு புனை கதை(psedo science) ,என்பதைத் தான் சொல்லிக் கொண்டு இருகிறோம்,முதலில் இது ஒரு ஆய்வு என்பதை நிருபிக்கவும்.ராஜாதிராஜவே கேட்டுச் சொல்கிறேன் என்ற பின்னர் நீர் இதில் விதண்டவாதம் செய்வது எதனால்?ஓர் ஆய்வென்பது மற்றய துறை சார் அரிஞ்ஞர்களால் (peer review)ஆராயப்பட்டு விமர்சிக்கப்பட்டே ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்பது விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படை.

Link to comment
Share on other sites

குருவியாரே ராஜாதிராஜ இட்டது ஆய்வல்ல விஞ்ஞான சொற்களால் எழுதப்பட்ட ஒரு புனை கதை(psedo science) ,என்பதைத் தான் சொல்லிக் கொண்டு இருகிறோம்,முதலில் இது ஒரு ஆய்வு என்பதை நிருபிக்கவும்.ராஜாதிராஜவே கேட்டுச் சொல்கிறேன் என்ற பின்னர் நீர் இதில் விதண்டவாதம் செய்வது எதனால்?ஓர் ஆய்வென்பது மற்றய துறை சார் அரிஞ்ஞர்களால் (peer review)ஆராயப்பட்டு விமர்சிக்கப்பட்டே ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்பது விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படை.

அது ஆய்வு முடிவாகத்தான் இருக்கும்.. அங்கு சில அடிப்படை உயிரியல் தொழில்நுட்ப புரட்டோகோல்கள் பாவிக்கப்பட்டு பெறப்பட்ட தரவுகளுக்கு ஒத்த தரவுகள் உண்டு. அதுமட்டுமன்றி ஆய்வு வெளியிடப்பட்ட விபரங்கள் உண்டு. அவற்றை அடிப்படையாக வைத்து உங்கள் ஆட்சேபனைகளை மேலதிக விளக்கங்களை அங்கேயே சமர்பிக்கலாம் அல்லது கோரலாமே..! அவர்கள் அதற்கான விளக்கத்தை தருவார்கள். அதை சாதாரணமாக இக்களத்தில் கதைப்பது போல செய்ய முடியாது. வலுவான காரணங்களோடு உங்கள் சந்தேகம் இருக்குமாயின் மட்டுமே அது சாத்தியம். குறிப்பாக இவ்வாய்வில் எங்கெங்கு பிழைகள் உண்டு என்பது கட்டாயம் சுட்டிக்காட்டப்பட வேண்டும். நடைமுறை ஆதாரங்களோடு...அல்லது இது போன்ற வேறு ஆய்வுமுடிவுகளோடு ஒப்பிட்டு. அதற்கு முதல் குறித்த ஆய்வறிக்கை முழுமையாக தரப்படவில்லை..! அதை ராஜாதிராஜா முழுமையாகத் தந்தால் சிறப்பாக இருக்கும். அவர் சில முடிவுகளை மட்டுமே தந்திருக்கிறார்..! பாவிக்கப்பட புரட்டக்கோல்கள் அடங்கிய செயன்முறை விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை..! ஆனால் அதை மட்டும் வைத்து அதை ஆய்வுமுடிவல்ல என்றும் அறுதிட்டு தீர்மானிக்கவும் முடியாது..! :wink: :idea:

Link to comment
Share on other sites

அது ஆய்வு முடிவாகத்தான் இருக்கும்.. அங்கு சில அடிப்படை உயிரியல் தொழில்நுட்ப புரட்டோகோல்கள் பாவிக்கப்பட்டு பெறப்பட்ட தரவுகளுக்கு ஒத்த தரவுகள் உண்டு. அதுமட்டுமன்றி ஆய்வு வெளியிடப்பட்ட விபரங்கள் உண்டு. அவற்றை அடிப்படையாக வைத்து உங்கள் ஆட்சேபனைகளை மேலதிக விளக்கங்களை அங்கேயே சமர்பிக்கலாம் அல்லது கோரலாமே..! அவர்கள் அதற்கான விளக்கத்தை தருவார்கள். அதை சாதாரணமாக இக்களத்தில் கதைப்பது போல செய்ய முடியாது. வலுவான காரணங்களோடு உங்கள் சந்தேகம் இருக்குமாயின் மட்டுமே அது சாத்தியம். குறிப்பாக இவ்வாய்வில் எங்கெங்கு பிழைகள் உண்டு என்பது கட்டாயம் சுட்டிக்காட்டப்பட வேண்டும். நடைமுறை ஆதாரங்களோடு...அல்லது இது போன்ற வேறு ஆய்வுமுடிவுகளோடு ஒப்பிட்டு. அதற்கு முதல் குறித்த ஆய்வறிக்கை முழுமையாக தரப்படவில்லை..! அதை ராஜாதிராஜா முழுமையாகத் தந்தால் சிறப்பாக இருக்கும். அவர் சில முடிவுகளை மட்டுமே தந்திருக்கிறார்..! பாவிக்கப்பட புரட்டக்கோல்கள் அடங்கிய செயன்முறை விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை..! ஆனால் அதை மட்டும் வைத்து அதை ஆய்வுமுடிவல்ல என்றும் அறுதிட்டு தீர்மானிக்கவும் முடியாது..! :wink: :idea:

அதென்ன ஆய்வு முடிவாகத் தான் இருக்கும்,?இருக்குதா? இல்லயா?

சரியாகத் தெரியாமல் எப்படி அதை ஆய் வென்று இப்படி ஒற்றைக் காலில் நிற்கிறீர்?எதற்காக?

Link to comment
Share on other sites

குறித்த ஆய்வுக்கட்டுரை தொடர்பில் ஆட்சேபனை இருப்பவர்கள் இங்கு உங்கள் ஆட்சேபனைகளை முன்வைக்கலாம்..!

http://www.kaumudiusa.com/kusa/page/html/science_1.stm

http://dienekes.blogspot.com/2005/11/new-p...chromosome.html

ஆர்கியோலொஜி சார்ந்த ஆய்வுகளில் இழைமணி டி என் ஏ..வை குரோமோசோங்கள் பயனத்தப்படுவதற்கான சான்று..

http://en.wikipedia.org/wiki/Genetics_and_...s_of_South_Asia

http://www.genome.org/cgi/content/full/13/7/1600

குறித்த கட்டுரையும் இதன் பிரகாரம் நோக்கப்பட்டே ஆய்வுக்கட்டுரையாக கணிக்கப்பட முடிகிறது. இருப்பினும் அது முழுமையாக தரப்படவில்லை.. ராஜாதிராஜாவால்..! தரப்பட்ட விபரங்களின் படியே கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன..! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

குறித்த ஆய்வுக்கட்டுரை தொடர்பில் ஆட்சேபனை இருப்பவர்கள் இங்கு உங்கள் ஆட்சேபனைகளை முன்வைக்கலாம்..!

http://www.kaumudiusa.com/kusa/page/html/science_1.stm

http://dienekes.blogspot.com/2005/11/new-p...chromosome.html

ஆர்கியோலொஜி சார்ந்த ஆய்வுகளில் இழைமணி டி என் ஏ..வை குரோமோசோங்கள் பயனத்தப்படுவதற்கான சான்று..

http://en.wikipedia.org/wiki/Genetics_and_...s_of_South_Asia

http://www.genome.org/cgi/content/full/13/7/1600

குறித்த கட்டுரையும் இதன் பிரகாரம் நோக்கப்பட்டே ஆய்வுக்கட்டுரையாக கணிக்கப்பட முடிகிறது. இருப்பினும் அது முழுமையாக தரப்படவில்லை.. ராஜாதிராஜாவால்..! தரப்பட்ட விபரங்களின் படியே கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன..!

நல்ல காமடி,

முதல் தரப்பட்ட தளம் யாழக் களம் போல் அமெரிக்க இந்தியர்கள் சிலரால் நடத்தப்படுவது,

அதில் போய்க் கருத்து எழுதுவது ஏன் என்று விளங்க வில்லை?.

மற்ற இணைப்புக்களுக்கும் ராஜாதிராஜாவின் கட்டுரைக்கும் கேட்ட்கப்பட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?

Link to comment
Share on other sites

அதில போய் Mail to Editor யைக் கிளிக் பண்ணி..உங்கள் ஆட்சேபனைகளை அனுப்புங்கள்..! அவர்கள் அதற்கு பதில் தருவார்கள்..என்றே எண்ணுகின்றோம்.!

தரப்பட்ட இணைப்புகளை வாசிங்கோ...எல்லாருக்கும் பயன்படத்தக்க தகவல்கள் இருக்கு..! இப்ப இங்க கதைக்கிறது தரப்பட்ட கட்டுரை பற்றி மட்டும்..! :wink: :idea:

Link to comment
Share on other sites

குருவி மற்றும் ராஜாதிராஜாவால் ஆராச்சிக் கட்டுரை என்று கூறப்பட்டதை எழுதிய சந்திரகாந் பான்சே என்பவர் தன்னை ,இந்திய அமெரிக்கன் சமாதான இயக்கதிற்காக அதைப் பிரசுரிப்பதாக அடிக் குறிப்பிட்டு எழுதி இருந்தார்.அந்தத் தளதிற்கு சென்று பாருங்கள் இவரின் பின் புலம் புரியும் அதில் கிந்துக்களின் சொத்தை பல மானில அரசாங்கங்கள் கொள்ளை அடிப்பதாக முழுக் கிந்து வெறியில் எழுதப் பட்ட வாசகம் இருக்கும்.இதன் தளமோ இப்போது தான் வடிவமைக்கப் பட்டுக் கொண்டு இருப்பதாக் கூறப்படுகிறது.இப்படியான ஒன்றை எழுதியவர் தான் ஆராச்சியாளர் அதை வெளியிட்ட நிறுவனம் அதாவது ஒரு இணயத் தளத்தை இன்னும் ஒழுங்காக வடிவமைக்கக் கூட முடியாத ஒரு இயக்கம் தான் இவர்களின் ஆராச்சி நிறுவனம்.

Chandrakant Pansé, Professor of Biotechnology

Newton, Massachusetts, DrCP@rcn.com, Indian-Americans for Justice & Peace, www.iajp.org

http://www.kaumudiusa.com/kusa/page/html/science_1.stm

This site is under construction -please visit again

Indian-Americans for Justice & Peace, Inc., is an all-volunteer non-profit organization established to strive for human rights of people of Indian origin -particularly PEOPLE WHOM EVERYONE ELSE FORGOT

Pakistan-sponsored terrorism has accomplished ethnic cleansing of Hindus from parts of the Indian State of Jammu and Kashmir; Kashmir valley is now 99% Muslim

Hindus population in Bangladesh has been reduced from over 30% at the time of break-up of enslaved India in 1947 to 7% today while 13 million Bangladeshi Muslims are in India

Hindu population in Pakistan has similarly been reduced from 20% in 1947 to 2% today

State governments in India control and loot Hindu temples; even Communists get to exert this control with blessings from the Supreme Court of India

http://www.iajp.org/

Link to comment
Share on other sites

குருவி மற்றும் ராஜாதிராஜாவால் ஆராச்சிக் கட்டுரை என்று கூறப்பட்டதை எழுதிய சந்திரகாந் பான்சே என்பவர் தன்னை ,இந்திய அமெரிக்கன் சமாதான இயக்கதிற்காக அதைப் பிரசுரிப்பதாக அடிக் குறிப்பிட்டு எழுதி இருந்தார்.அந்தத் தளதிற்கு சென்று பாருங்கள் இவரின் பின் புலம் புரியும் அதில் கிந்துக்களின் சொத்தை பல மானில அரசாங்கங்கள் கொள்ளை அடிப்பதாக முழுக் கிந்து வெறியில் எழுதப் பட்ட வாசகம் இருக்கும்.இதன் தளமோ இப்போது தான் வடிவமைக்கப் பட்டுக் கொண்டு இருப்பதாக் கூறப்படுகிறது.இப்படியான ஒன்றை எழுதியவர் தான் ஆராச்சியாளர் அதை வெளியிட்ட நிறுவனம் அதாவது ஒரு இணயத் தளத்தை இன்னும் ஒழுங்காக வடிவமைக்கக் கூட முடியாத ஒரு இயக்கம் தான் இவர்களின் ஆராச்சி நிறுவனம்.

Chandrakant Pansé, Professor of Biotechnology

Newton, Massachusetts, DrCP@rcn.com, Indian-Americans for Justice & Peace, www.iajp.org

http://www.kaumudiusa.com/kusa/page/html/science_1.stm

This site is under construction -please visit again

Indian-Americans for Justice & Peace, Inc., is an all-volunteer non-profit organization established to strive for human rights of people of Indian origin -particularly PEOPLE WHOM EVERYONE ELSE FORGOT

Pakistan-sponsored terrorism has accomplished ethnic cleansing of Hindus from parts of the Indian State of Jammu and Kashmir; Kashmir valley is now 99% Muslim

Hindus population in Bangladesh has been reduced from over 30% at the time of break-up of enslaved India in 1947 to 7% today while 13 million Bangladeshi Muslims are in India

Hindu population in Pakistan has similarly been reduced from 20% in 1947 to 2% today

State governments in India control and loot Hindu temples; even Communists get to exert this control with blessings from the Supreme Court of India

http://www.iajp.org/

நாரதரே..உங்களிடம் உண்மையான திறமை இருந்தால் குறித்த கட்டுரை ஆய்வுக்கட்டுரையல்ல... பொய் என்று..பிரசுரித்தவர்களுக்கு அறிவித்து அதன் மூலம் அதை உண்மைக்குப் புறம்பான கட்டுரை என்று நிரூபியுங்கள்...!

கருத்தால் கருத்தை வெல்லுங்கள். இந்த தலைப்பை ஆரம்பித்தது ராஜிதிராஜா.. அவர் கொண்டு வந்த கட்டுரையில் ஆய்வுக்கட்டுரைக்குரிய சாரங்கள் இருக்கிறது. அதைக் கொண்டே வாதம் செய்யப்படுகிறது. குறித்த கட்டுரை ரகசியமாக வெளியிடப்பட்ட ஒன்றன்று. தேவையான தகவல்கள் தரப்பட்டுள்ளது. எனவே அவற்றை பாவித்து கட்டுரையை டிஸ்புறூவ் பண்ணுங்கோ..போலி என்று..அதைவிடுத்து கட்டுரை எழுதியவர் அப்படிப்பட்டவர் இப்படிப்பட்டவர் என்று குற்றம் சுமத்தி கருத்தாளர்களை ஏமாற்றாதீர்கள். :wink: :P :lol:

Link to comment
Share on other sites

அந்தக் கட்டுரையை வெளியிட்டவர் இந்துத்தவ வெறியர் என்றால்..ஆரியர் - திராவிட வேறுபாட்டுக்குள் குளிர்காய நினைக்கும் உங்கள் போன்றோர்.. இனவெறியர்கள் என்பதாகத்தான் காட்டப்படும்.

கட்டுரை சார்ந்து அதன் முடிவுரை சார்ந்து உங்களால் தவறைச் நிரூபிக்க முடிந்தால் ஆதாரத்தோடு நிரூபித்து கட்டுரையை பொய்யென்று காட்டுங்கள். அதைவிடுத்து குறித்த கட்டுரை தொடர்பில் உள்ள உண்மைகளச் சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது.

உங்களிடம் நல்ல நோக்கம் இருந்தால் கட்டுரையில் தரபட்ட சான்றுகளில் இருந்து தவறுகாட்டி அதை டிஸ்புறூவ் பண்ணுங்கள். அது எங்கு பிரசுரமானது எப்படிப்பட்டவரால் எழுதப்ப்பட்டது என்பதுக்கு மேலாக அங்கு சொல்லப்பட்ட ஆதாரங்கள் சார்ந்து அது பார்க்கப்பட வேண்டி இருக்கிறது. உங்களால் உங்களுக்கு சார்ப்பில்லாதவை எவற்றையும் வார்த்தைகளால் போலிக் காரணங்களை வைத்து நிராகரிக்க முடிவது போல மற்றவர்களாலும் உங்களுக்கு சார்ப்பானதை நிராகரிக்க முடியும். எனவே இப்படிச் செய்து உங்களை நீங்களே பலவீனர்களாக்கிக் கொள்ளாதீர்கள்..!

உங்களால் குறித்த கட்டுரையில் தரப்பட்ட தரவுகள் விபரங்கள் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருந்தால் அவற்றை முன் வைத்து அதை டிஸ்புறூவ் பண்ணுங்கள். :P :lol: :idea:

Link to comment
Share on other sites

நீர் கேக்கும் அதே கேள்வி தானே ராஜாதிராஜாவும் லகிலுக்கும் கேட்கின்றனர் ஏன் நீங்கள் தமிழ் வெறியோடு நிற்கிறீர்கள் ஏன் சிங்களவனோடு சண்டை பிடிக்கிறீர்கள் என்று ,உமக்கும் அவர்களுக்கு சொன்ன பதிலே சொல்கிறேன்.

சிங்களவர் எமை அடக்கி ஆள முற்பட்டதாலெயே நாம் அவர்களுக்கு எதிராக் கிளர்ந்தோம்.அதே தான் ஆரியரும் செய்தனர்.அவர்கள் வந்தேறு குடிகளாகி வந்து திராவிடரை தமிழரை அடக்கி ஆண்டனர்.அந்த அடக்கு முறையின் எச்ச சொச்சம் தான் இன்றைய சாதி அமைப்பு முறை. என்று அது ஒழியுமோ ,என்று உம் போன்றவர் நாங்கள் அப்படி நீங்கள் அப்படி என்று கதைப்பது ஒழியுமோ அன்று தான் ஆரிய அடக்குமுறையின் மிச்ச சொச்சங்களும் ஒழியும்.இந்த வரலாற்று அடக்குமுறயை மறைக்க முயலும் உம் போன்றவருக்கும், தமிழருக்கு இங்கு என்ன பிரச்சினை எல்லாரும் சிறிலன்கன் தானே மனிதர் தானே ஏன் பிரிவினை கேட்கிறீர்கள் என்னும் சிங்களவனுக்கும் என்ன வித்தியாசம்?

அடக்குபுவன் ஆள்பவன் இங்கே பாகுபாடு கிடயாது எல்லாரும் ஒருவரே என்று தான் சொல்வான் ,அடக்கப்பட்டவன் ,அடக்கப்படுபவனுக்குத் தான் தெரியும் வேறுபாடு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.