Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உதவி தேவை.............


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

....எனக்கு திண்ணையில் எழுத முடியவில்லை .என்ன செய்யலாம். ?

என்ன செய்யலாம்.........நிலாமதி ...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா view new content க்கு போனால் எழுத முடிகிறது. இடது பக்கத்தில் உள்ள திண்ணை என்ற சொல்லை அழுத்தினால் எனக்கும் எழுத முடியவில்லை. நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திண்ணை Statistics

Total Shouts 1448 Top Shouter komagan (258) Total Moderators (Groups) 0 Total Moderators (Members) 3

1 active user(s) (in the past 10 minutes)

1 members, 0 guests, 0 anonymous users

நிலாமதி

இதுதான்வருகிறது யாழினி............

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் உள்ள புதிய கருத்துக்களுக்குச் சென்றால், வலது பக்க மேல் மூலையில் சிறிய பெட்டி வருகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் எழுத முடிகிறது திண்ணையில் தான் தான் எழுதும் இடமே தெரியவில்லை

Link to post
Share on other sites

நிலாமதி உங்களுக்கு எவ்வாறு திண்ணை காண்பிக்கின்றது என ஒரு screenshot தந்தால் என்ன பிழை எனப் பார்க்க உதவியாக இருக்கும் ஏ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ரைகர் உங்கள் உதவிக்கு நன்றி ..எழுதுவதற்கான இடமே தோன்றவில்லை

ரைகர் உங்கள் உதவிக்கு நன்றி ..எழுதுவதற்கான இடமே தோன்றவில்லை

ரைகர் உங்கள் உதவிக்கு நன்றி ..எழுதுவதற்கான இடமே தோன்றவில்லை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பிசி மீண்டும் வருவேன்.reply button not working .

Link to post
Share on other sites
 • 3 months later...
 • கருத்துக்கள உறவுகள்

என்னால் அவதாரை மாற்ற முடியவில்லை தயவு செய்து உதவுங்கள்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • புளாட் வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக" - பகுதி 6) தோழர் சந்ததியாருடன் சந்திப்பு நான் அறிந்தவரை, புளாட் மதனின் படுகொலையுடன் தான் ஆரம்பமாகியது உட்படுகொலைகள். இது அவர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுத்தது. இவ்வளவு காலமும் சமூக விரோதிகள் என்ற பெயரில் படுகொலை செய்தவர்கள், இன்று ஒரே நோக்கத்துக்காக வந்தவர்களையும் கொன்று குவிக்க ஆரம்பித்தனர். இக்காலத்தில் இன்னுமொரு சம்பவமும் நடந்தது. மானிப்பாய் அல்லது அச்சுவேலியில் இருந்து பயிற்சிக்காக வந்தவர்கள் எனக்கு துல்லியமாக அவர்களின் சொந்த இடம் நினைவில் இல்லை ஆறு பேர் மாற்று இயக்கம் ஒன்றில் நாட்டில் இருக்கும் போது வேலை செய்தார்களோ அல்லது மற்றைய இயக்கத்தவர்களுடன் பின்னால் ஒரு அரசியலும் இல்லாமல் திரிந்தவர்களோ தெரியவில்லை. அவர்கள் எமது முகாமில் வந்து இறங்கி ஒரு சில நாட்களிலேயே வதைமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு காரணம் அவர்களுக்கு முதல், அதே ஊரிலிருந்து வந்த ஒரு தோழர் (அவரின் இயக்கப் பெயர் குறிப்பிட விரும்பவில்லை) அவருடன் ஒரு குடிசையில் தங்கியிருந்த சக தோழர் ஒருவருக்கு, டேய், இவங்கள் ஊரில புலிக்குப் பின்னால திரிஞ்சவங்களடா... என்று கூறியதாகும். இதை எவ்வாறோ முகாமினுள் இருந்த உளவாளிகள் அறிய, அவர்களை விசாரணை என்று வதைமுகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அப்படிச் சென்றவர்கள் திரும்பவில்லை. ஒரு சில நாட்களில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என அறிந்தோம். படுகொலைகள் பற்றி அறிய, பயம் அதிகமானது. என்னால் அங்கு பயிற்சி செய்யவோ அல்லது மற்றவர்களுடன் கதைக்கவோ முடியாமல் போனது. இருவர் தொடர்ந்து ஒரு இடத்தில் இருந்து கதைத்தால், உடனே என்ன கதைத்தோம் என விசாரிக்கவும் தொடங்கினார்கள். அதுவே மூவர் அல்லது அதற்கு மேல் என்றால் விசாரணை தான்! மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றாற் போல, எவர் கூடிக் கதைத்தாலும் இவர்கள் ஏதோ சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்ற எண்ணமே அங்கு காணப்பட்டது. குறிப்பாக நான், அழகன், முரளி ஆகிய மூவரும், ஒரே ஊரில் இருந்து ஒரே நாளில் பின்தளம் வந்தவர்கள். ஆனால் நாம் மூவரும் தனிமையில் இருந்து கதைக்க முடியாது. எமக்கு ஏற்படும் மனச்சஞ்சலங்களைக் கூட பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில், நான் முகாமில் தொடர்ச்சியாக இருக்க முடியாது என எண்ணினேன். அக்காலத்தில் அதிக வெய்யில் ஒவ்வாமை ஏற்பட்டு எனது கண்கள் சிவந்து வீங்கின. அதைக் காரணமாக வைத்து, என்னால் தொடர்ந்து பயிற்சிக்கு வரமுடியாதென அடிக்கடி பயிற்சியில் பங்கு கொள்வதைத் தவிர்த்தேன். இதையடுத்து அப்போது பயிற்சி வழங்கியவர்களில் ஒருவரான சாணாக்கியன் என்பவர் என்னை மீண்டும் ஓரத்தநாட்டுக்கு அனுப்பினார். அவர்கள் என்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே என்னைப் பார்வையிட்ட வைத்தியர், என்னை மீண்டும் ஒரு மாதத்தால் வரும்படி கூற, மீண்டும் என்னை பீ முகாமிற்கு திருப்பி அனுப்பினார்கள். நான் மறுபடியும் பீ முகாமிற்குச் சென்ற சிலநாட்களில் தோழர் சந்ததியார் அங்கு வந்திருந்தார். அவருடன் ஒவ்வொருவரும் தமது குறைகளை கூறினர். அவருடன் கதைப்பதற்கு எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னை நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு அவரை நான் கேட்டேன். அவரோ, "எனக்குந்தான் நாட்டிற்கு போகவேண்டும் என்று ஆசை. அதனால் தோழரே, நீர் தோழர் முகுந்தனிடம் எனக்கும் சேர்த்து விண்ணப்பியுங்கள்" என்றார். இதை கேட்ட எனக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை. அவருடன் நாட்டுக்கு போவது பற்றி தொடர்ந்தும் கதைப்பது அனாவசியமானது என முடிவெடுத்தேன். இருந்தும் எனக்கு பயிற்சி பெறுவதில் ஏற்படும் பிரச்சினைகளை ஒரு நோயாளியாக விளக்கினேன். அவர் அதை கவனமாகக் கேட்டார். "ஏன் நீர் பயிற்சி எடுக்க முடியாவிட்டால், அரசியல் வகுப்புகளில் பங்கு கொள்ளலாமே" என என்னிடம் கோட்டார். அதற்கு எந்த தயக்கமும் இன்றி சம்மதித்தேன். எனது நோக்கம் இந்த முகாமில் இருந்து வெளியேறுவது தான். அப்போது அவர் அமைப்பு அரசியல் பாசறைகள் நடாத்துவதற்குத் உதேசித்துள்ளது. அவ்வாறு அரசியல் பாசறை நடக்கும் பட்சத்தில், உங்களையும் அதற்கு பரிந்துரைக்கிறேன் என்றார். அத்துடன் எனது போராளிக்கான இலக்கத்தையும் பெயரையும் தனது பதிவேட்டில் குறித்துக்கொண்டார். ஒரு மாதத்தின் பின்னர் என்னை வைத்தியர் பார்வையிட வேண்டும் என்று ஏற்கனவே குறிப்பிட்டதால், அதற்கான திகதி வர நான் மீண்டும் ஓரத்தநாட்டிற்கு சென்றேன். அங்கே பல தோழர்கள் உடல் நலக்குறைவுடன், புதிதாக வந்திருப்பதைக் கண்டேன். எனக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் கண் வைத்தியப் பகுதியில் ஒரு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறப்பட்டதன் விளைவாக நான் அங்கு ஒரு சில தினங்கள் தங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அக்காலத்தில் தோழர் சந்ததியாரும் தோழர் தங்கராசாவும் அங்கே வந்தனர். அவர்கள் இருவரையும் இணைத்து ஒரே சந்தர்ப்பத்தில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனால் அவர்களிடம் எனது உடல்நிலை தொடர்பான பிரச்சினைகளை மீண்டும் கூறினேன். அத்துடன் எனக்கு அரசியலில் உள்ள ஆர்வத்தையும் தோழர் சந்ததியாரிடம் கூறினேன். அதை அவர் ஏற்றுக்கொண்டு, புதிதாக ஆரம்பிக்க விருக்கும் அரசியல் பாசறைக்கு செல்வதற்கு, அப்போது அனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்த பம்மாத்து வாசுவிடம் அதற்கான அனுமதியைப் பெற்றார். அதன் பின்பு நான் பீ காம்புக்குச் செல்லவில்லை. ஓரத்தநாட்டு முகாமில் நடைபெற்ற அரசியல் வகுப்பில் பயிற்சிபெற ஆரம்பித்தேன். தொடரும்     http://poovaraasu.blogspot.com/2020/09/6_24.html
  • திருத்தம் : கொழுப்பில் மட்டும் கரையக்கூடிய விட்டமின்களான A, D, E, K எமது ஈரலில், கொழுப்பு கலங்களில்   செயலற்ற நிலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் 9 சிலநாட்களில் இருந்து சில மாதங்கள் வரை). தேவையான நேரங்களில் ஈரல், சிறுநீரகங்களில் செயல்பாடு அடையும்.  B complex, C போன்ற நீரில் கரையும் விட்டமின்கள் சேமிக்கப்படமாட்டுது . 
  • பிரபஞ்சம் – பாகம் 2 கமலக்குமார் ஆகஸ்ட் 9, 2020    முதல் பாகத்தைப் பொறுமையோடு படித்த அனைவருக்கும் நன்றி. கார்ல் சேகனின் காஸ்மிக் காலண்டரை  நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். முதல் 13 நிமிடங்களில், நம் அண்டத்தில் அணுத்துகள்கள் இணைந்து ஓர் அணு எவ்வாறு கருவானது என்று முதல் பாகத்தில் தெரிந்து கொண்டோம். சரி, இந்த அணு எப்படி இருக்கும்? அது எவ்வாறு உருப்பெறுகிறது என்று தெரிந்துகொள்ள சற்று உள்நோக்கிப் பார்ப்போம். இந்த பிரபஞ்சம் முழுவதும் ஓர் ஐந்து வகையான அடிப்படை அணுத்துகள்களால் மட்டுமே ஆனது என்றால் நம்பமுடிகிறதா? நம் அறிவியல் இதைத்தான் முன்வைக்கிறது. எப்படி, ‘X’ மற்றும் ‘Y” என்ற இரண்டே இரண்டு குரோமோசோம்கள் இந்த மொத்த மனித சமூகத்துக்கும் பொதுவானதோ, அதேமாதிரிதான் ஐந்தே ஐந்து அடிப்படை அணுத்துகள்கள் இந்தப் பிரபஞ்சத்துக்குப் பொதுவானவை. நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான், ஃபோட்டான் மற்றும் நியூட்ரினோ என்ற இந்த ஐந்து அடிப்படை அணுத்துகள்களே , நம் முன்னோர்கள் வரையறுத்த காற்று, கடல், பூமி, வானம், நெருப்பு எனும் ஐம்பெரும் பூதங்களையும் உருவாக்கிய மூலாதாரம் என்கிறது நம் அறிவியல். அப்படியென்றால், தனித்தனி துகள்களை ஒன்று சேர்த்து உருவம்கொடுக்க வேறு காரணிகள் வேண்டுமல்லவா? நீரையும், மண்ணையும் பிடித்துப் பிசைந்து பாண்டமும், பொம்மையும் செய்வதுபோல இந்த அணுத்துகள்களை இறுக்கிப் பிடித்து, நம்மையும், விலங்குகளையும், உயிரினங்களையும்,  மரங்களையும், செடிகளையும், மகா மலைகளையும் மற்றும் நதிகளையும் ஒன்று சேர்த்து உருவம் கொடுக்கும் அந்தக் காரணிதான் இறைவனாக இருக்குமோ என்று எனக்குள்ளும் ஒரு கேள்வி இருந்துகொண்டிருக்கும் வேளையில், இந்த அறிவியல் (சாமியார்) ஒரு புது விளக்கத்தைத் தருகிறது (றார்). இந்த பிரபஞ்சம் ஐந்து அணுத்துகள்கள் மட்டுமின்றி, நான்கு அடிப்படைச் சக்திகளைக் கொண்டுள்ளது  எனவும்; அவை, “புவிஈர்ப்பு சக்தி” , “மின்காந்த சக்தி” , “வலுவான அணு சக்தி” மற்றும் “பலவீனமான அணு சக்தி” என்பன  என்றும் குறிசொல்கிறது. மேலும், இந்தச் சக்திகள் ஒவ்வொன்றும் சற்று மாறுபட்ட தன்மை கொண்டன என்றும் சொல்லப்படுகிறது. சரி, சக்தி என்றால் ஒரு விசை. அந்த விசைக்கு ஒரு சரகம் அல்லது எல்லை இருக்க வேண்டுமல்லவா? அது என்னவென்று விசாரிக்கப்போனால் கிடைத்த விளக்கம் சற்று மிரட்சியளிக்கிறது. புவிஈர்ப்பு சக்தி – இது எல்லை இல்லாதது, இது ஐந்து அணுத்துகள்களையும் கட்டுப்படுத்தும். மின்காந்த சக்தி – இதுவும் எல்லை இல்லாதது, ஆனால் இது நியூட்ரான் மற்றும்  நியூட்ரினோக்களைக் கட்டுப்படுத்தாது. வலுவான அணு சக்தியும், பலவீனமான அணு சக்தியும் மிகமிகச் சிறிய (0.01 பிக்கோ  மீட்டர்) எல்லை மட்டுமே கொண்டவை.   இது எப்படிச் சாத்தியம்? எல்லையே இல்லாத ஒரு விசை, எல்லைகள் கொண்ட கிரகங்களை உருவாக்க முடியும், நம்பமுடிகிற மாதிரி இல்லையே! என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. ஆனால் இப்போதைக்கு இதை நம்புங்கள். வேண்டுமென்றால், புவிஈர்ப்பு சக்தியை சிவன் என்று வைத்துக்கொள்வோம். இவன் எல்லைகளற்றவன், எல்லாவற்றிற்கும் முதல்வன்.  மின்காந்த சக்தியை சிவனின் துணைவி “சக்தி” என்று கொள்வோம். இந்த சக்தி சிவனுக்கு இணை என்றாலும், சற்று குறைவு. வலுவான அணு சக்தி விநாயகன் என்றும் கடைக்குட்டி முருகன்தான் பலவீனமான அணு சக்தி என்றும் வைத்துக்கொள்வோம். ஏனென்றால் முருகனின் எல்லை மிகவும் சிறிது, மேலும் அவரை வணங்குபவர்களும் குறைவு என்பதும் ஒரு காரணம். காலம் காலமாய், புலப்படாத ஒன்றை நம்பிக்கொண்டிருக்கும் நாம், நம்மால் நம்மை சுற்றி இருக்கும் புவிஈர்ப்பு சக்தியை நம்பலாமில்லையா? சரி, இந்த அணு எப்படி இருக்கும்? அது எவ்வாறு உருப்பெறுகிறது என்று இப்போது ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருப்பீர்கள். நாம் மேலே கண்ட ஐந்து அடிப்படை  அணுத்துகள்கள் ஒன்று சேர்ந்து உருவாவதுதான் அணு எனப்படுகிறது. இதை எளிதில் புரிந்துகொள்ள ஒரு முட்டையை அணு என்று வைத்துக்கொண்டால், உள்ளே இருக்கும் மஞ்சள் கருபோல ஒவ்வொரு அணுவும் ஒரு உட்கரு ஒன்றைக் கொண்டிருக்கும். நியூட்ரான், புரோட்டான் இவை இரண்டும் கலந்த இந்த உட்கருவைச் சுற்றி முட்டையின் வெள்ளைக் கருபோல  எலக்ட்ரான்கள் வட்டமிட்டுக்கொண்டிருக்கும். இவ்வாறு இந்த மூன்று அணுத்துகள்களையும் ஒரு முழு அணுவாகப் பிணைத்து வைத்திருக்கும் சக்திதான்  “வலுவான அணு சக்தி” என்று அழைக்கப்படுகிறது.  இந்தப் பிணைப்பை உடைக்கும்பொழுது வெளிப்படும் வெப்ப சக்தியைத்தான் நாம் அணு மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்துகிறோம். இந்தப் பிளவின்போது வெளிப்படும் மற்ற இரண்டு துகள்கள்தாம் ஃபோட்டான் மற்றும் நியூட்ரினோக்கள். ஃபோட்டான் என்பது வேறு ஒன்றுமில்லை, இதுதான் நாம் காணும் ஒளி. நியூட்ரினோக்கள் இந்தப் பிரபஞ்சத்தின் மாயாவிகள். இவற்றை நாம் கண்ணால் காணமுடியாது. இவை எந்தப் பொருட்களையும் ஊடுருவி செல்லக்கூடியவை. இவற்றைப் பிடித்து, பிணைத்து வைப்பது முடியாத ஒன்று. துகள்கள் என்றால் அவற்றுக்கு நிறை இருக்கவேண்டும் அல்லவா? அதையும் நாம் அறிவியல் கொண்டு அளந்துவிட்டோம் என்று பெருமை கொண்டே ஆகவேண்டும்.    புரோட்டான்களும், நியூட்ரான்களும் கிட்டத்தட்ட ஒரே நிறையைக் கொண்டுள்ளன. (940 MeV/C2 = 16 பிக்கோ வோல்ட்) எலக்ட்ரான்கள், புரோட்டான்களின் எடையில் ஏறத்தாழ 2000த்தில் ஒரு பங்கு எடையுள்ளது. நியூட்ரினோக்கள், எலக்ட்ரான்களின் எடையில் ஏறத்தாழ 5,00,000த்தில் ஒரு பங்கு எடையுள்ளது. ஃபோட்டான்கள் எடை பூஜ்யம் ஆகும். இவை எடையில்லாதவை. இந்த நிறை என்ன இவ்வளவு சிறியதாக இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? இனிமேல் அணுவளவு எடை என்று சொல்லும்போது கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள். பார்க்கவே முடியாத ஒன்றை எடை போடுவது சிரமம் இல்லையா? அப்படியென்றால், ஒரு கிராம் இரும்பில் எத்தனை அணுக்கள் இருக்கும் பார்ப்போமா? 10 கிராம் இரும்பில் 107,800,000,000,000,000,000,000 அணுக்கள் மட்டுமே உள்ளன. மலைக்க வைக்கிறதா? உண்மைதான், இந்த பிரபஞ்சத்தில் நாமும்கூட அணுத்துகள்கள்தான். சரி, அணுக்களை புரிந்துகொண்டது போதும். மீண்டும், கார்ல் சேகனின் காஸ்மிக் காலண்டருக்குச் செல்வோம். முதல் 13 நிமிடங்களில் இந்தப் பிரபஞ்சம் இருள் மூடிக்கிடந்தது. இந்த இருள் 200 மில்லியன் ஆண்டுகள் நீடித்தது. அண்ட  நாயகன் புவியீர்ப்பு விசை, இருள் மூடிக்கிடந்த வாயு அணுக் கொத்துகளை இழுத்துப் பிடித்து, சூடேற்றி, உருவம் கொடுத்து முதல் நட்சத்திரத்தைப் படைத்த நேரம் ஜனவரி 10வது நாள். இதுவே ஒளி பிறந்த நாள். நரகாசுரன் என்ற இருள், புவிஈர்ப்பு விசை என்ற சிவனால் வதைக்கப்பட்டு ஒளி உண்டாக்கிய நாள். வாண வேடிக்கைகள்போலத் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட நட்சத்திரங்கள், சிறிய விண்மீன் திரள்களாக ஒன்றிணைந்தன. இது நடந்தது ஜனவரி 13ஆம் தேதி அன்று.  இந்த விண்மீன் திரள்கள் மேலும் ஒன்றிணைந்து, இன்னும் பெரிய திரளாக உருவானது, சுமார் 11 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காஸ்மிக்  ஆண்டின் மார்ச் 15 அன்று நம்முடைய பால்வீதி மண்டலம்  உருவாக்கப்பட்டது. அதிவேகத்தில் சுற்றும் ஒரு சங்குச் சக்கர வெடி எப்படிக் காட்சியளிக்குமோ அப்படித்தான் இது இருந்தது. இந்தப்  பால்வீதியில் நூற்றுக்கணக்கான பில்லியன் சூரியன்கள் இருந்தன.  இவற்றில் எது நம்முடையது? பொறுத்திருங்கள், நம் சூரியன் இன்னும் பிறக்கவில்லை.   நட்சத்திரங்களின் தொடர் பிறப்புகள் நடக்கும் அதே வேளையில், நட்சத்திரங்களின் இறப்பும் நடந்து கொண்டிருந்தது.  பிறப்பு என்று ஒன்று இருந்தால் மரணம் ஒன்று என்பதும் இருக்குமல்லவா? இங்கு மரணிக்கும் நட்சத்திரங்களின் சாம்பலிலிருந்து வெளிப்படும் ஒளியானது ஆயிரம் சூரிய வெளிச்சதிற்கு இணையாக இருந்தது. நாம், அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்று சொல்கிறோம் அல்லவா? அது மாதிரி. இப்படிப் பிரகாசிக்கும் ஒவ்வொன்றும் ஒரு ராட்சத நட்சத்திரம் என்றும் அதன் பெயர் “சூப்பர்நோவா” என்றும் அழைக்கப்படுகிறது. இது  ஓர் எரியும் மரணம். இங்கே ஒரு விந்தை என்னவென்றால் இந்த நட்சத்திரங்கள் இறந்துவிட்ட இடங்களில் மீண்டும் ஒரு நட்சத்திரக் கூட்டமே பிறக்கின்றது. ஆம் ஒன்றல்ல! இரண்டல்ல!! பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள், கொத்துக் கொத்தாகப் பிறக்கின்றன. இது எப்படி இருக்கும்? எரிந்துபோன சூப்பர்நோவாவின் சாம்பல், ஓர் அணுகுண்டு வெடித்துக் கிளப்பும் நிகழ்வுபோல், வாயு மற்றும் தூசியின் மாபெரும் மேகங்களாக மாறிப் பின் அவை குளிர்ந்து, கருமேகங்கள் போன்று கனமடைந்து,  பின் அவை சுருங்கி, மழைத்துளிகள் போல மாற்றம் அடைந்து, பின் மேலும் மேலும் சுருங்கும்போது அவை மிகவும் சூடாகி, அதனால் அணுக்களின் கருத்துகள்கள் இவற்றில் ஆழமாக ஒன்றிணைய ஆரம்பிக்கின்றன. இந்த நட்சத்திர மூலப்பொருள் மறுசுழற்சி செய்யப்பட்டு வளப்படுத்தப்படுகிறது, மீண்டும் மீண்டும், அடுத்த தலைமுறை நட்சத்திரங்களின் தோன்றல்களும், மரணங்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆண்டுகள் நீண்டு மில்லியன், பில்லியன் என நகர்ந்துகொண்டே போய்க்கொண்டிருக்கின்றன. இன்னும்கூட நம் சூரியன் பிறக்கவில்லை. நமது சூரியன் பிறக்க இன்னும் எவ்வளவு காலம்தான் ஆகும்?  நீண்ட நெடுநேரம். அப்படியென்றால்? கிட்டத்தட்ட 6 பில்லியன் ஆண்டுகள். ஆமாம்! நம் சூரியனின் பிறந்த நாள், காஸ்மிக் காலண்டரின் ஆகஸ்ட் 31 அன்று. நம் சூரியனின் இன்றைய வயது நான்கரை பில்லியன் ஆண்டுகள். பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள். சற்றே நம்மை உற்றுப் பார்த்தால், நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன், நமது தசைகளில் உள்ள கார்பன், நம் எலும்புகளில் உள்ள கால்சியம், நம்முடைய இரத்ததில் இருக்கும் இரும்பு, இவை அனைத்தும் நீண்ட காலமாக மறைந்துபோன நட்சத்திரங்கள்  உமிழந்துபோன எச்சங்களே என்கின்றது அறிவியல். இதை வேறு வடிவில் பார்த்தால், நாம் அனைவரும் நட்சத்திர அணுப் பொருள்களால் ஆனவர்கள் என்பதே உண்மை என்று சொல்லமுடியும். இதற்கான ஆதாரங்களையும் இந்த அறிவியல் திரட்டி வைத்திருக்கிறது. சூரியன் பிறந்துவிட்டது. அடுத்து என்ன நடக்கப்போகிறது? புதிதாகப் பிறந்த சூரியனைச்  சுற்றி எஞ்சியிருந்த தூசியும், வாயுக்களும் சேர்ந்து ஒரு வட்டப் பாதையில் சுற்றி வர ஆரம்பித்தன. ஏன் இந்த வட்டப்பாதை? ஒரு சூறாவளி சுற்றும்போது அதன் அருகிலுள்ள அனைத்தையும் சேர்த்துச் சுற்றும்போது அது ஒரு வட்டப் பாதையை ஏற்படுத்துகிறது அல்லவா? அது போலத்தான். சூரியனைச் சுற்றி வரும் இந்தத் தூசி, மீண்டும் மீண்டும் மோதிக்கொண்டு  வளர்ந்து ஒரு குப்பைக் கோளமாக மாறியது. இந்த குப்பைக் கோளங்கள் இறுகி, குளிர்ந்து பனிப் பாறைகளாக உருமாறிப்பின் துணைக் கோள்களாக வட்டப் பாதையில் வலம் வரத்தொடங்கின.  இதில் ஒன்றுதான் நம் பூமியும். நமது சூரிய மண்டலத்தின் மற்ற கிரகங்களைப் போலவே, பூமியும் தூசியும் வாயுவும் கலந்த ஒரு குப்பைக் கோளம்தான். இவ்வாறு பிறந்த நம் பூமியின் பிறந்த நாள், காஸ்மிக் காலண்டரின்  செப்டெம்பர் 6ம் தேதி அன்று. இது நடந்தது சூரியன் பிறந்த தினத்திலிருந்து கிட்டத்தட்ட 200 மில்லியன் ஆண்டுகள் கழித்து. பூமி கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர்ந்துகொண்டே, தன்னையும் சுற்றிக்கொண்டு,  சூரியனையும் சுற்றி வந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ ஒரு பில்லியன் ஆண்டுகள் கழிந்தபோது, பூமி ஒரு பேரிடியை எதிர்கொண்டது. ஆம், சூரியனின் சுற்றுப்பாதையில் வேகமாக நகர்ந்துகொண்டிருந்த ஒரு பிரமாண்ட விண்கல் பூமியை சற்றே எட்டி உதைத்தது.  இந்த வன்முறையால் நிலைகுலைந்து, சற்றுச் சிதைந்துபோன பூமி, சுதாரித்துக்கொண்டு தான் உடைந்துபோன பாகங்களை (குப்பைத் துகள்களை) மீட்கும் முயற்சியில் இறங்கியது. உடைந்தவை அனைத்தையும்  ஒன்றிணைத்து ஒரு வட்டப் பாதையில் தான் சூரியனைச் சுற்றுவதுபோல் சுற்றி வரச்செய்தது. நாளடைவில் இந்தக் குப்பைக் கோளம் குளிர்ந்து ஒரு பனிப் பாறையாக  உருமாறிப் பின் ஒரு துணைக்கோளாக மாறியது. இதுதான் சந்திரன். இவன் வன்முறையில் பிறந்தவன். சந்திரன் மிகவும் சிறிய கோள். இதனால்தானோ என்னவோ, நாம் இவனை மிகவும் மென்மையானவனாகச் சித்திரிக்கிறோம். சூரியக் குடும்பத்தின் அளவில் ஓர் அங்குலம் தொலைவில் புவியின் ஈர்ப்பு விசையால் மிகவும் நெருக்கமாகச் சுற்றிக்கொண்டிருந்த சந்திரன், இன்றைய பிரகாசத்தைவிட 100 மடங்கு வெளிச்சம் கொண்டிருந்தது, மேலும் இன்றிருக்கும் தொலைவில் பத்தில் ஒரு மடங்கு தொலைவில்தான் இருந்தது, இவ்வளவு நெருக்கமான ஈர்ப்பு அரவணைப்பில் சுற்றிவந்த சந்திரன் ஏன் விலகிப் போனது? ஏன் தன் ஒளியை இழந்தது? ஏன் இந்த மாற்றம்? ஆவலோடு காத்திருங்கள், அத்தனைக்கும் விளக்கம் இருக்கிறது.  இன்னும் பல காலம் செல்லவேண்டியிருப்பதால் இந்த இரண்டாவது பாகத்தை இத்துடன் நிறைவு செய்துகொள்வோம். ***   https://solvanam.com/2020/08/09/பிரபஞ்சம்-பாகம்-2/
  • பிரணாப் குமார் முகர்ஜி   மறைந்த வசந்த் குமார் மறைவிற்குப் பின்பு சமூக வலைதளத்தில் ஏதாவது ஓர் இடத்தில் அவரைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டவர்கள் யாராவது எழுதுவார்களா? என்று கூர்மையாகக் கவனித்துக் கொண்டே வந்தேன். ஆனால் என் பார்வையில் அப்படியொரு தகவல் கண்ணில்படவே இல்லை.  99 சதவிகிதம் அவரைப் பற்றி உண்மையான நேர்மையான அருமையான அஞ்சலி செய்திகள் தான் கண்ணில்பட்டது. அவர் அரசியல்வாதி, தொழில் அதிபர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வகித்தவர். 400 கோடிக்கும் மேல் என் சொத்து உள்ளது என்று கம்பீரமாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தவர். இதற்கு மேலாக அம்பானி அதானி என்று பேசிக்கொண்டிருக்கும் தமிழர்களின் மத்தியில் தன் முனைப்பை ஏற்படுத்திக் காட்டியவர்களின் முக்கியமானவராகவே தெரிகின்றார்.   அதே போல பிரணாப் குமார் முகர்ஜி மறைவு செய்திக்கு வந்து விழுந்த அஞ்சலிகளைக் கோர்த்துப் பார்த்தேன். ஏனிந்த மாறுபாடு? அது தான் சமூக வலைதளங்களுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் உண்டான வித்தியாசம். பேரிழப்பு. தியாக சீலர், பாரதம் இழந்த தவப்புதல்வர் இத்யாதி இத்யாதி என்று வரிசையாகத் தோரணம் கட்டி வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டேயிருந்தாலும் உண்மைக்கும் பொய்க்கும் உண்டான வித்தியாசங்கள் ஒவ்வொருவரும் பார்த்த கேட்ட நடந்த சம்பவங்களை வைத்து எளிதாக கிழித்து தோரணமாக கட்டிவிடுவது தான் தற்போதைய தொழில் நுட்பம் கொடுத்த வரப்பிரசாதம். குக்கிராமத்திலிருந்து தத்தமது பயணத்தைத் தொடங்கி இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தவர்கள் என்று இரண்டு பேர்களை இந்திய அரசியல் சரித்திரம் பதிவு செய்துள்ளது. ஒன்று மறைந்த அப்துல் கலாம். மற்றொருவரும் பிரணாப். இருவரையும் ஒரே தட்டில் வைக்க முடியுமா? என்றால் முடியாது. தட்டே நகராது. இறங்கித் தொலைங்கப்பா என்று ஒருவரைக் கீழே தள்ளிவிடும். மக்களின் முதல் குடிமகன், மாணவர்களின் கனவு முதல் குடிமகன், அஞ்சு பைசா கூட அடுத்தவர் பணம் தேவையில்லை என்று கடைசி வரைக்கும் வாழ்ந்த அப்துல் கலாமோடு வேறு எவரையாவது ஜனாதிபதி மாளிகையில் வாழ்ந்த, வசித்த,கொண்ட்டாங்களுடன் அனுபவித்துச் சென்றவர்களை ஒப்பிட முடியுமா? 1969ல் தொடங்கிய பிரணாப் ன் அரசியல் பயணம் ஐந்து முறை (மாநிலங்களவை உறுப்பினர்) புற வாசல் பயணமாகவே இருந்தது. நிதியமைச்சர், பாதுகாப்பு, வெளியுறவு என்ற இந்திய அதிகாரத்தின் மூன்று முக்கிய துறைகளையும் அனுபவித்தவர் கடைசி வரைக்கும் பிரதமர் பதவியென்பது அவருக்கு எட்டாத கனியாக இருக்க அதில் உருவான பூசல் ராஜீவ் காந்தியால் மூன்றாண்டு வனவாசம் அனுபவிக்க நேர்ந்தது. அதாவது அரசாங்கப் பணத்தில் வாழாத மூன்றாண்டுகள். இத்தாலி அம்மையாரின் தீர்க்க தரிசன யோசனையின் காரணமாக ஜனாதிபதி மாளிகை வாசல் கதவு திறக்க காரணமாகவும் இருந்தது. கணவான் அரசியல் என்பதனை கடைசி வரைக்கும் கடைப்பிடித்த காரணத்தால் பாரத் ரத்னா விருது வரைக்கும் அவரால் கம்பீரமாக நடைபயில முடிந்தது. நிதியமைச்சராக இருந்த காலத்தில் அவரின் உழைப்பு எல்லாமே திருபாய் அம்பானி மறைவுக்குப் பின்னால் அந்தக் குடும்பம் பாகப் பிரிவினைக்குப் பஞ்சாயத்து செய்பவராக வாழ்ந்த இவர்கள் என் மகன்கள் என்று அறிவிக்கும் அளவிற்கு இந்தியச் சமுத்திரத் திரளுக்கு தன்னால் ஆன மக்கள் பணியைச் செய்தார். என்னவெல்லாம் செய்தார் என்பது அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியும் சொல்லாது. அவர் மனதளவில் கடைசி காலத்தில் ஞானம் வந்து விரும்பிய பாஜகவும் பிரகடனம் செய்ய முடியாத அளவிற்குக் கம்பி மேல் பயணம் செய்த காரியக்காரராகவே வாழ்ந்து முடித்துள்ளார். இறந்த அவர் மனைவிக்கு ஒரு வேளை தெரிந்திருக்கக்கூடும். மகள் சொன்னது போல "பிரதமர் பதவியை எட்ட முடியவில்லை என்ற வருத்தம் அவருக்குள் இருந்தது. ஜனாதிபதி ஆன பின்பு அதைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை" என்று அவருக்கு அவரே சமாதானம் செய்து கொண்டிருந்ததை அவர் எழுதியுள்ள இரண்டு ஆங்கிலப் புத்தகங்களில் சொல்லியுள்ளாரா? என்பதனை வாசித்து நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும். இந்திரா காந்தி அமைச்சரவையில் 47 வயதில் இந்தியாவின் இளம் நிதியமைச்சர் என்று பெயர் பெற்றவர் 2017 வரைக்கும் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் இந்தியர்களின் வரிப்பணத்தில் அவர் சகலவிதமான சந்தோஷங்களையும் அனுபவித்து மறைந்துள்ளார். அதனை ஊடகங்கள் சொல்வது போல நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்தார் என்று நாம் நாகரிகமாகச் சொல்ல வேண்டும். அதற்கு மேலும் அவர் வேறெந்த பதவியையும் விரும்பாத காரணம் அவர் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்பது மட்டுமே. காரணம் உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் சீர் கெட்டு கடைசியில் எந்த மூளையில் இப்படி அதிசயமான நாட்டு நலன் குறித்து சிந்தனைகள் வந்ததோ அந்த இடத்தில் கட்டி வந்து அதுவே கோமா நிலைக்குக் கொண்டு சென்றது. உயர்ந்த இந்திய இராணுவ மருத்துவமனை வசதிகள் அவருக்கு கடைசியில் கோமா நிலையைத் தான் தந்தது. தான் யார் என்று தெரியாமல், தன் உடம்பு எங்கேயுள்ளது என்பதனை அறியாமல், தான் செய்து வந்த காரியங்கள் அனைத்தும் நல்லதா? கெட்டதா? என்பதனை அறியும் அறிவு மறைந்து, உணர்வு நீங்கி, உள்ளுற அலையும் ஆத்மாவோடு அவர் உரையாடியிருக்கக்கூடும். எங்கேயோ லட்சக்கணக்கான மக்கள் இறந்த இரத்தச் சுவடுகளில் நம் கையும் நனைந்திருந்தது என்பதனை அவர் அந்தராத்மா அவருடன் உணர்த்தியிருக்குமா? என்று யோசித்துப் பார்த்தேன். அதாவது வாழும் போது நரகம். வாழ்க்கை முடியும் போது எப்போது இறந்தோம் என்று அறியாத பயணமாக அவர் உயிர்க்குருவி அவரை விட்டுப் பறந்துள்ளது. அவரின் கடைசி 17 நாட்கள் எவ்வித சுயசிந்தனைகளைப் புடம் போட்டு அவருக்குள் உரையாடலை வளர்த்திருக்குமோ? என்று யோசித்துப் பார்த்தேன். காரணம் இந்து மத தத்துவங்களின் படி இறப்பவர்களுக்கு இறக்கும் நேரம் துல்லியமாகத் தெரியும். அவர்களின் முன்னோர்கள் அவர்களை வரவேற்கத் தயாராக இருப்பார்கள் என்று சொல்வதுண்டு. இவரை நிச்சயம் திருபாய் அம்பானி வரவேற்று இருப்பார். கூடவே அவர் இந்தியாவிற்குச் செய்ய மறந்த கடமைகளை நினைவூட்டப் பல லட்சம் பேர்களும் அந்த வரிசையில் இருந்திருக்கக்கூடும். அவருக்கு இந்திய அரசியல்வாதிகள் அஞ்சலிப் பூக்களை தூவிக் கொண்டிருந்த போது அவருக்கு உண்மையிலேயே அஞ்சலி செலுத்த வேண்டிய சகோதரர்கள் செய்துள்ளார்களா என்பதனை ட்விட்டரில் கவனித்துக் கொண்டிருந்தேன். கச்சிதமாக நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சிங்களர்கள் எப்போதும் நன்றி மறவாதவர்கள் என்பதனை நினைத்து பெருமையாக இருந்தது. Gotabaya Rajapaksa @GotabayaR I am deeply saddened to learn the demise of former Indian president #PranabMukherjee. He will be remembered for his service to the people of #India. My heartfelt condolences to his family and friends. Mahinda Rajapaksa @PresRajapaksa I am saddened to hear of the passing of the Fmr. #Indian President, #Bharatratna Shri #PranabMukherjee. He was a statesmen par excellence, a writer & a man loved by all. The passion with which he served his nation is unparalleled. My deepest condolences to his family & friends. இதனை படித்த பின்பு வருத்தப்படும் நண்பர்களுக்காகவே வைரமுத்து எழுதி எங்கள் ஊர் மின் மயானத்தில் ஒவ்வொரு பிணமும் எரிக்கப்படும் போது ஒலிக்கும் பாடலை அவருக்கு அர்ப்பணிக்கின்றேன். மரணத்தினால் சில கோபங்கள் தீரும்..... மரணத்தினால் சில சாபங்கள் தீரும்...... வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்.... விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்.... இந்தியச் சட்டங்களை தங்களுக்கு சாதகமாக வைத்துக் கொண்டு தங்கள் நல்வாழ்க்கைக்காக கடைசி வரை வாழ்ந்த அரசியல்வாதிகளின் பாவங்களை எந்த மரணமும் மாற்றது. மறைக்காது. அதன் அழுக்கை கழுவாது. அதன் தாக்கம் தலைமுறைகள் அனுபவிக்கும். http://deviyar-illam.blogspot.com/2020/09/Pranab-Kumar-Mugarjee.html  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.