Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

கருத்துக்களம் இன்று (11.08.2011) புதிய பதிப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னர் பல்வேறு வகையான பிரச்சனைகளை உறுப்பினர்கள் எதிர்கொள்வதால் இங்கு அவற்றினைக் குறிப்பிடுவதன் மூலம் அதற்கான தீர்வு நிர்வாகமோ அல்லது தீர்வினைத் தெரிந்த உறுப்பினரே தெரிவிப்பதன் மூலம் பலருக்கும் உதவியாக அமையும். பிரச்சனைகளைக் குறிப்பிடும் போது விளக்கமாகவும் முடிந்தால் screen shot ஒன்றினை இணைப்பதும் விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

யாழ்களத்தின் புதிய பதிப்பு நன்றாக உள்ளது. நன்றி மோகன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கருத்துக் களத்திலும்,திண்ணையிலும் ஸ்மையிலி போட‌ முடியாமல் உள்ளது அத்தோடு கானொளியும் இணைக்க முடியாமல் உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பதில் எழுத, ஒரு சாளரம் தான் வருகின்றது. இது தற்காலிகமாக ஏற்படும் குறைபாடா? அல்லது இனி நிரந்தரமாக இப்படியே... இருக்கப் போகின்றதா?

தற்போது கூகிள் மொழி பெயர்ப்பில் தட்டச்சு செய்து கொண்டு வந்து இணைப்பது சிரமமாக உள்ளது.

எனது அபிமான லக்கிலூக் அவதாரையும் காணவில்லை.

மற்றும் படி.... யாழின் மாற்றம் நன்றாக உள்ளது. மோகன் அண்ணாவிற்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கருத்துக் களத்திலும்,திண்ணையிலும் ஸ்மையிலி போட‌ முடியாமல் உள்ளது அத்தோடு கானொளியும் இணைக்க முடியாமல் உள்ளது

எனக்கும் தான்................

Link to comment
Share on other sites

எனக்கு கருத்துக் களத்திலும்,திண்ணையிலும் ஸ்மையிலி போட‌ முடியாமல் உள்ளது அத்தோடு கானொளியும் இணைக்க முடியாமல் உள்ளது

thinnai.jpg

முதலாவது படத்தில் உள்ளது போன்று Smilies என உங்களுக்கு காண்பிக்கின்றதா? அப்படிக் காண்பித்தாலும் அதில் அழுத்த முடியாதுள்ளதா?

editor.jpg

இது கருத்தெழுதும் பகுதி. இங்கு உள்ளது போன்று உங்களுக்கு காண்பிக்கின்றதா? அப்படிக் காண்பித்தால் இங்கு அடையாளமிட்டுக் காண்பிக்கப்பட்டிருக்கும் பகுதியில தெரிவினைச் செய்து Smilies இணைக்க முடியும்.

youtube காணொளி இணைக்க நேரடியாக அந்த இணைப்பினை இணைத்தால் போதுமானது. உதாரணமாக

youtube.jpg

எனக்குப் பதில் எழுத, ஒரு சாளரம் தான் வருகின்றது. இது தற்காலிகமாக ஏற்படும் குறைபாடா? அல்லது இனி நிரந்தரமாக இப்படியே... இருக்கப் போகின்றதா?

தற்போது கூகிள் மொழி பெயர்ப்பில் தட்டச்சு செய்து கொண்டு வந்து இணைப்பது சிரமமாக உள்ளது.

எனது அபிமான லக்கிலூக் அவதாரையும் காணவில்லை.

மற்றும் படி.... யாழின் மாற்றம் நன்றாக உள்ளது. மோகன் அண்ணாவிற்கு பாராட்டுக்கள்.

தற்போது ஒரு சாளரம் மட்டுமே உள்ளது. நேரடியாக எங்கும் தமிழில் எழுதக்கூடிய பல செயலிகள் உள்ளன. உதாரணமாக eKalappai, Google IME (http://www.google.co...ransliteration/)

எனது அவதாரையும் காணோம். எனினும் சில படங்கள் நாளைக்குள் மீள இணைக்கப்படும்.

முன்னரே குறிப்பிட்டது போன்று படங்களை (screen shot) இணைத்தால் என்ன பிரச்சனையாக இருக்கும் என அறிய உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவுதான் என்னால் யாழை திறக்க முடியாமல் இருந்தது, நல்ல சுகமாக இருக்கு இப்ப, நன்றி மோகன் அண்ணா & நிர்வாக உறுப்பினர்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவுதான் என்னால் யாழை திறக்க முடியாமல் இருந்தது, நல்ல சுகமாக இருக்கு இப்ப,

என்னுடைய பழய animation avatar எப்படி இனைப்பது

நன்றி மோகன் அண்ணா & நிர்வாக உறுப்பினர்களுக்கு

Link to comment
Share on other sites

Font size ஐ குறைக்க முடியுமா மோகன். ஏனென்றால் முன்பு பலவற்றை Screen இல் பார்க்கக் கூடியதாக இருந்தது. இப்போது சிலவற்றை (content) மாத்திரம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. Font size பெரிதானதினால் எல்லா இடத்தையும் Text பிடித்து வைத்திருக்கின்றது.

நன்றி.

Link to comment
Share on other sites

எல்லாத்துக்கும் முதல் .மாற்றியமைக்கப்ப்ட்ட தளத்தில் ..

தமிழில எழுதமுடியல்லை&முன்பே யாரும் இதுபத்தி அறியதரல்லைன்னு

ரொம்பபேர் கொ(கவ)லை வெறியில இருக்க்காய்ங்க...

கவனிச்சுக்கோங்க மோகன் சாமி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீமான் வைத்திருந்தால் தமிழில் எழுத பிரச்சனை இல்லை. ஆனால் எல்லா கணணிகளும் அது இருக்காது. நாங்கள் நிறுவிக் கொண்டால் மட்டுமே விடிவு உண்டு.

yarl.jpg

மேலும்.. புதிய களத்தின் எழுத்துரு பெரிசாகவும்.. சில சந்தர்ப்பங்களில் பிரதான கருத்துக்கும் இதர கள விபரங்களுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டை உணர முடியாமல் குழப்பம் விளைவிக்கச் செய்கிறது. குறிப்பாக எடிட் செய்யப்பட்டது என்பது பெரிய எழுத்தில் தெரிகிறது. இதற்கு வேறு வகையான கொஞ்சம் மாறுபட்ட (நிறத்தால்) அளவில் சிறிய எழுத்துருக்களைப் பயன்படுத்தினால் என்ன..??! இது ஒரு தாழ்மையான கோரிக்கையே தவிர.. கட்டாயமில்லை. :)

இப்போ முகக்குறி பிரச்சனை தீர்ந்துள்ளது. நன்றி.

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என்னால் செய்திகளை வெட்டி ஒட்ட முடியவில்லை ?

ஏதாவது காரணங்களுக்காக எனக்கு தடை செய்யப்பட்டுள்ளேனா??

Link to comment
Share on other sites

ஏன் என்னால் செய்திகளை வெட்டி ஒட்ட முடியவில்லை ?

ஏதாவது காரணங்களுக்காக எனக்கு தடை செய்யப்பட்டுள்ளேனா??

என்ன பிரச்சனை காண்பிக்கின்றது என விளக்கமாக அறியத் தந்தாலே தீர்வு தர இலகுவாக இருக்கும். மற்றும்படி நீங்கள் தடை செய்யப்படவில்லை.

Link to comment
Share on other sites

கீமான் வைத்திருந்தால் தமிழில் எழுத பிரச்சனை இல்லை. ஆனால் எல்லா கணணிகளும் அது இருக்காது. நாங்கள் நிறுவிக் கொண்டால் மட்டுமே விடிவு உண்டு.

yarl.jpg

மேலும்.. புதிய களத்தின் எழுத்துரு பெரிசாகவும்.. சில சந்தர்ப்பங்களில் பிரதான கருத்துக்கும் இதர கள விபரங்களுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டை உணர முடியாமல் குழப்பம் விளைவிக்கச் செய்கிறது. குறிப்பாக எடிட் செய்யப்பட்டது என்பது பெரிய எழுத்தில் தெரிகிறது. இதற்கு வேறு வகையான கொஞ்சம் மாறுபட்ட (நிறத்தால்) அளவில் சிறிய எழுத்துருக்களைப் பயன்படுத்தினால் என்ன..??! இது ஒரு தாழ்மையான கோரிக்கையே தவிர.. கட்டாயமில்லை. :)

இப்போ முகக்குறி பிரச்சனை தீர்ந்துள்ளது. நன்றி.

குறிப்பிட்ட விடயங்களில் இரண்டு சரி செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிரச்சனை காண்பிக்கின்றது என விளக்கமாக அறியத் தந்தாலே தீர்வு தர இலகுவாக இருக்கும். மற்றும்படி நீங்கள் தடை செய்யப்படவில்லை.

பொதுவாக செய்திகளை தகவல்களையோ இணைக்கும் போது NEW TOPIC என்னும் பகுதியை கிளிக் செய்துதான் இணைப்பேன் ஆனால் இப்போது அந்தப்பகுதியில் தனியே REPLY TO THIS TOPIC என மட்டும்தான் வருகின்றது மோகன்.

Link to comment
Share on other sites

எல்லாத்துக்கும் முதல் .மாற்றியமைக்கப்ப்ட்ட தளத்தில் ..

தமிழில எழுதமுடியல்லை&முன்பே யாரும் இதுபத்தி அறியதரல்லைன்னு

ரொம்பபேர் கொ(கவ)லை வெறியில இருக்க்காய்ங்க...

கவனிச்சுக்கோங்க மோகன் சாமி!

உடனடித் தீர்வு keyman வகை ஒன்றினை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்வதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களம் மிகவும் நன்றாக இருக்கிறது, வாழ்த்துகள் மோகன் அண்ணா. :o

Link to comment
Share on other sites

பொதுவாக செய்திகளை தகவல்களையோ இணைக்கும் போது NEW TOPIC என்னும் பகுதியை கிளிக் செய்துதான் இணைப்பேன் ஆனால் இப்போது அந்தப்பகுதியில் தனியே REPLY TO THIS TOPIC என மட்டும்தான் வருகின்றது மோகன்.

நீங்கள் ஏதாவது ஒரு கருத்தினைத் திறந்திருந்தால் REPLY TO THIS TOPIC எனக் காண்பிக்கும். ஒரு பிரிவினைத் திறந்திருந்தால் Start NEW TOPIC என ஒரு தெரிவு இருக்கும். உதாரணமாக ஊர்ப்புதினம் பிரிவுக்குச் சென்றால் http://www.yarl.com/forum3/index.php?showforum=40 Start NEW TOPIC என்ற தெரிவு இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Iam not able to write in tamil. Can you please tell me how to fix it?

Link to comment
Share on other sites

Font size ஐ குறைக்க முடியுமா மோகன். ஏனென்றால் முன்பு பலவற்றை Screen இல் பார்க்கக் கூடியதாக இருந்தது. இப்போது சிலவற்றை (content) மாத்திரம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. Font size பெரிதானதினால் எல்லா இடத்தையும் Text பிடித்து வைத்திருக்கின்றது.

நன்றி.

WIN 7, XP களில் Firefox, IE, Chrome களில் பரீட்சித்துப் பார்த்தபோது எழுத்துக்களின் அளவு அவ்வளவு மோசமாக இருப்பதாகத் தெரியவில்லல் இன்னும் கொஞ்சம் சிறிய எழுத்து அளவிற்குப் போனால் வயசானவங்க எழுத்து தெரியவில்லை என்பார்கள். :lol: எனினும் மற்றையவர்களின் அபிப்பிராயங்களையும் பாரத்து தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்யலாம்.

Iam not able to write in tamil. Can you please tell me how to fix it?

உங்கள் கணினியில் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றினை install செய்வதன் மூலம் இலகுவாக நேரடியாக தமிழில் எழுதிக் கொள்ள முடியும். (ஏதாவது ஒன்றினை மட்டுமே நிறுவிக் கொள்ளுங்கள்)

http://thamizha.com/project/ekalappai

http://www.google.com/ime/transliteration/

http://software.nhm.in/products/writer

Link to comment
Share on other sites

Iam not able to write in tamil. Can you please tell me how to fix it?

புத்தன்.. இதுக்கு முதலில நீங்கள் தமிழ்ல எழுதப் பழக வேணும்..! :lol:

சும்மா பகிடிக்கு.. கோவியாதையுங்கோ..

:unsure:

  • Like 1
Link to comment
Share on other sites

நான் ஆரம்பித்த TOPIC க்கை நானே நீக்க முடியாதா?

முன்பிருந்தே அதற்கான தெரிவு உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.