Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தினுள் உள்ளே நுழைவது கொரோனா காலத்தில் ஷொப்பிங் போவது மாதிரி அதிக நேரம் எடுக்கின்றது. சுத்திக்கொண்டே இருக்கின்றது இன்று.

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

யாழ் களத்தினுள் உள்ளே நுழைவது கொரோனா காலத்தில் ஷொப்பிங் போவது மாதிரி அதிக நேரம் எடுக்கின்றது. சுத்திக்கொண்டே இருக்கின்றது இன்று.

உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா ஆட்கள் கூடினால் இப்படித் தான் விரும்பினால் வாங்கோ இல்லாட்டில் போங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

யாழ் களத்தினுள் உள்ளே நுழைவது கொரோனா காலத்தில் ஷொப்பிங் போவது மாதிரி அதிக நேரம் எடுக்கின்றது. சுத்திக்கொண்டே இருக்கின்றது இன்று.

ஏற்கனவே யாழுக்குள்ளும் கோவிட் 19 நுழைஞ்சிட்டுதாம் அதான் பழைய கிருமிகளை வெளில நிற்பாட்டி வச்சிருக்கு என்று தகவல்🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா ஆட்கள் கூடினால் இப்படித் தான் விரும்பினால் வாங்கோ இல்லாட்டில் போங்கோ 

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யாழுக்கு வரவேண்டியதாகத்தான் இருக்குது. Addicted to Yarl!😜

ஆட்கள் கூடினால் திரிகள் பத்தோணுமே! அப்படித் தெரியவில்லையே!! 

Just now, வல்வை சகாறா said:

ஏற்கனவே யாழுக்குள்ளும் கோவிட் 19 நுழைஞ்சிட்டுதாம் அதான் பழைய கிருமிகளை வெளில நிற்பாட்டி வச்சிருக்கு என்று தகவல்🤣🤣

உள்ளுக்குள்ள இருக்கிறதெல்லாம் கெட்ட கிருமிகள்! 😂 அதுதான் தாக்குப்பிடிச்சுக்கொண்டு நிற்குதுகள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஆட்கள் கூடினால் திரிகள் பத்தோணுமே! அப்படித் தெரியவில்லையே!! 

பார்வையாளர்கள் கூட வந்து போகினம் 400க்கு குறையாமல் ஒரே நேரத்தில்  வந்து நிக்கினம் எல்லாம் கொரனோ  லொக் டவுன் செய்த வேலை தமிழில் இலகுவாய் எழுதுவது எப்படி என்ற திரியை முன்பக்கத்திலை  கட்டி தொங்க  விட்டால் புதுசா கொள்ளுப்பட வருவினம் என்று நினைக்கிறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

பார்வையாளர்கள் கூட வந்து போகினம் 400க்கு குறையாமல் ஒரே நேரத்தில்  வந்து நிக்கினம் எல்லாம் கொரனோ  லொக் டவுன் செய்த வேலை தமிழில் இலகுவாய் எழுதுவது எப்படி என்ற திரியை முன்பக்கத்திலை  கட்டி தொங்க  விட்டால் புதுசா கொள்ளுப்பட வருவினம் என்று நினைக்கிறன் .

 நான் இருக்கிற இடத்துக்கு பக்கத்திலை எனக்கு தெரிஞ்ச இரண்டு மூண்டு பேர் யாழுக்கு டெய்லி வந்து போறவையள் போல கிடக்கு...ஏனெண்டால் எங்கையாவது பங்சனுகள் நடக்கேக்கை இஞ்சை யாழ்களத்திலை நடக்கிற கூத்துகளையும் கதைப்பினம்.நான் கேட்டும் கேளாத மாதிரி இருந்திடுவன்.அவையள் எழுதாமல் விடுறதுக்கு காரணம் எழுததெரியாது எண்டது என்ரை கணிப்பு.
நான் ஏன் என்ரை பெயரை சொல்லி இன்னார் எண்டு அடையாளம் காட்டாததுக்கு முக்கிய காரணம்.....ஒருக்கால் ஒராள் என்ரை பெயரை சொல்லி செந்தமிழாலை பூசை பண்ணிச்சுது.லோக்கல் தமிழிலை எழுதுறனாம்.பொது இடத்திலை எப்பிடி எழுதோணும் எண்டு இங்கிதம் தெரியாதவனாம்.

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நீங்களாவது பரவாயில்லை, என்னை நண்பர்கள் வட்டாரத்திலும், சில உறவுகள் வட்டாரத்திலும் நன்றாகத் தெரியும்.அதுதான் பெரும்பாலும் அடக்கி வாசிக்கிறது. கணனியில் இருந்தால் நாலு வயது குஞ்சு குருமன் எல்லாம் கேட்குது என்ன  தாத்தா யாழுக்க எழுதுறீங்களா என்று......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட, இதென்ன எல்லா திகதிகளும் தமிழ் மாதங்களுக்கு மாறிடிச்சி..? :shocked:

நல்லாவே இருக்கு..! :)

Link to comment
Share on other sites

15 hours ago, ராசவன்னியன் said:

அட, இதென்ன எல்லா திகதிகளும் தமிழ் மாதங்களுக்கு மாறிடிச்சி..? :shocked:

நல்லாவே இருக்கு..! :)

தமிழ் மாதங்களுக்கு மாறியது நல்லா  இருக்கு. ஆனால் தமிழ் மாதம் என்று கருதப்படும் முதலாம் திகதி சர்வதேச கலண்டரின் படி 14. அல்லது 15 திகதியே வரும். ஆகவே இத்திகதிகள் தமிழ் மாதத்தை கருதுகிறதா என்பதில் குழப்பம் உண்டு. மாவீரர் தினத்தை கார்ததிகை 27 என ஆரம்பத்தில் இருந்ததை நவம்பர் 27 என்று புலிகள் மாற்றியது இந்த குழப்பத்தை தவிர்பதற்காகவே. 

நிர்வாகம் இதனைத் தெளிவு படுத்த வேண்டும் 

Edited by tulpen
Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

தமிழ் மாதங்களுக்கு மாறியது நல்லா  இருக்கு. ஆனால் தமிழ் மாதம் என்று கருதப்படும் முதலாம் திகதி சர்வதேச கலண்டரின் படி 14. அல்லது 15 திகதியே வரும். ஆகவே இத்திகதிகள் தமிழ் மாதத்தை கருதுகிறதா என்பதில் குழப்பம் உண்டு. மாவீரர் தினத்தை கார்ததிகை 27 என ஆரம்பத்தில் இருந்ததை நவம்பர் 27 என்று புலிகள் மாற்றியது இந்த குழப்பத்தை தவிர்பதற்காகவே. 

நிர்வாகம் இதனைத் தெளிவு படுத்த வேண்டும் 

ஆங்கில மாதங்களையே அப்படியே தமிழுக்கு மாற்றியிருந்தேன். இது தவறாக அமையும் எனில் மீண்டும் ஆங்கிலத்திற்கே செல்ல வேண்டும்.

தமிழ் வல்லுனர்கள் தான் ஆலோசனை தர வேண்டும்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் இருப்பதே நல்லது என்பது தாழ்மையான விண்ணப்பம் .

ஊரில் இருப்பவர்களுக்கு யாழ் தெரியவில்லை என்கிறார்கள் .

Link to comment
Share on other sites

3 hours ago, மோகன் said:

ஆங்கில மாதங்களையே அப்படியே தமிழுக்கு மாற்றியிருந்தேன். இது தவறாக அமையும் எனில் மீண்டும் ஆங்கிலத்திற்கே செல்ல வேண்டும்.

தமிழ் வல்லுனர்கள் தான் ஆலோசனை தர வேண்டும்

 தை முதலாம் திகதி தைப்பொங்கல்   என்றால் அது நாம் நடைமுறையில்  பாவிக்கும் கலண்டர்ப்படி  ஜனவரி 14 ம் திகதி  வருகிறது.   ஆகவே திரி ஒன்றில் தை 1 என்று யாழில் காட்டுவது எதை என்ற குழப்பத்தையே குறிப்பிட்டேன். 

Link to comment
Share on other sites

8 hours ago, பெருமாள் said:

ஊரில் இருப்பவர்களுக்கு யாழ் தெரியவில்லை என்கிறார்கள் .

image.png

கடந்த ஒரு வாரத்தில் இலங்கையில்  இருந்து பார்த்துள்ளவர்கள் எண்ணிக்கை

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மோகன் said:

ஆங்கில மாதங்களையே அப்படியே தமிழுக்கு மாற்றியிருந்தேன். இது தவறாக அமையும் எனில் மீண்டும் ஆங்கிலத்திற்கே செல்ல வேண்டும்.

தமிழ்த்தாய் நாட்காட்டியில் 

ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, யூன், யூலை, ஆகஸ்ட், செப்டெம்பர், ஒக்ரோபர், நவம்பர், டிசெம்பர் என்றுதான் உள்ளது.

spacer.png

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் நானும் கொஞ்சம் அலம்புவம்.

சாதாரணமாக  தமிழில் நாள்  எழுதும் போது ஆங்கில வருடத்தை கணக்கில் வைத்துத்தான் எல்லோரும் எழுதுவார்கள். பாடசாலைகளிலும் வேறு எழுத்து விடயங்களிலும் கிழமை நாட்கள்/மாதங்கள் எழுதும் போது ஜனவரி,பெப்ரவரி என்றோ சண்டே மண்டே என்றோ எழுதுவதில்லை.மாறாக தை, மாசி என்றும் ஞாயிறு, திங்கள் என்றும் எழுதுவார்கள்.எல்லாம் ஆங்கில வருடத்தை கணக்கில்/மனதில் வைத்துத்தான் எழுதுவார்கள்.

தமிழ் வருட கணக்கை யாரும் எங்கும் அலுவலக/உத்தியோகபூர்வ நோக்கில் கையாளுவதில்லை. தமிழ் வருட ஆண்டு மாதம் தேதிகள்  எல்லாம் மதம்,சைவ தமிழ் கலாச்சாரங்களுடன் முடிவடைந்து விடும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக அனைத்துலக மட்டத்தில் பாவனையில் இருக்கும் ஆங்கிலவழி மாதங்களே பொருத்தமானது.   யனவரி 1என்றால் மார்கழி16 அல்லது 17ஆக இருக்கும். எனவே இது ஒரு  குழப்பமானதாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதேவேளை இளையவர்கள் எப்படி இதை எடுப்பார்கள் என்றும் பார்க்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, யூன், யூலை, ஆகஸ்ட், செப்டெம்பர், ஒக்ரோபர், நவம்பர், டிசெம்பர்

 என எழுதுவது தான்  நன்று . குழப்பத்தை தவிர் க்கலாம் என்பது என்  கருத்து

Link to comment
Share on other sites

18 hours ago, பெருமாள் said:

ஆங்கிலத்தில் இருப்பதே நல்லது என்பது தாழ்மையான விண்ணப்பம் .

7 hours ago, கிருபன் said:

தமிழ்த்தாய் நாட்காட்டியில் 

ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, யூன், யூலை, ஆகஸ்ட், செப்டெம்பர், ஒக்ரோபர், நவம்பர், டிசெம்பர் என்றுதான் உள்ளது.

7 minutes ago, நிலாமதி said:

ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, யூன், யூலை, ஆகஸ்ட், செப்டெம்பர், ஒக்ரோபர், நவம்பர், டிசெம்பர்

 என எழுதுவது தான்  நன்று . குழப்பத்தை தவிர் க்கலாம் என்பது என்  கருத்து

நேரடியாக ஆங்கில உச்சரிப்பினை எழுதுவதை விட ஆங்கிலத்தில் இருப்பதே மேலானது என்று நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

ஆங்கிலத்தில் இருப்பதே நல்லது என்பது தாழ்மையான விண்ணப்பம் .

ஊரில் இருப்பவர்களுக்கு யாழ் தெரியவில்லை என்கிறார்கள் .

இதைத் தான் நானும் நேற்று சொல்லலாம் என்று வந்தேன் ...பிறகு எதற்கு எல்லாத்துக்கும் முந்திரிக் கொட்டை மாதிரி முந்துவான் என்று பேசாமல் போயிட்டன் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தின் முகப்பில் பயனர்களை கவர இந்த "ஆப்சன்" ரொம்ப நல்லாவே இருக்கு..! vil-super.gif

Good indeed..

Untitled.jpg

Edited by ராசவன்னியன்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாமிகளே,

திண்ணைக்குள் எந்த வெளி இணைப்பு படங்களும்(URL to image) தெரியமாட்டேங்குது..

கொரானா விளைவா..? :shocked:

Link to comment
Share on other sites

8 minutes ago, ராசவன்னியன் said:

என்ன சாமிகளே,

திண்ணைக்குள் எந்த வெளி இணைப்பு படங்களும்(URL to image) தெரியமாட்டேங்குது..

கொரானா விளைவா..? :shocked:

பலவேளைகளில் இணைகக்கும் அசையும்படங்கள் தளத்தின் வேகத்தினைக் குறைப்பதால் நேரடியாக படங்கள் காண்பிக்கும் முறை நீக்கப்பட்டுள்ளது. எனினும் அது நிரந்தரமாக இருக்காது என நம்புகின்றேன். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், 

மேற்கண்ட தலைப்பில் நேற்று எமது நேரம் (கனடா) இரவு என்னால் ஒரு கருத்து பதியப்பட்டது. தற்போது அதை காணவில்லை.

ஏதும் தொழில்நுட்ப காரணங்களா அல்லது நிர்வாகத்தினால் அந்த கருத்து நீக்கப்பட்டு உள்ளதா? கருத்துக்களில் மாற்றங்கள் பகுதியில் ஏதும் தகவல் இல்லை. எனக்கு தனிப்படவும் இதுபற்றி ஏதும் தகவல் தரப்படவில்லை. 

எனது பதிவில் கருத்துக்களத்தின் எதுவித விதிமுறை மீறல்களும் இருக்கவில்லை (கருத்துக்களத்தின் விதிமுறை மீறல் இருப்பின் அதை சுட்டிக்காட்டினால் நல்லது). கருத்து காணாமல் போனதற்கு என்ன காரணம் என்று அறிய விரும்புகின்றேன்.

யதார்த்தமான நிலைமைகளை உள்வாங்கிய யதார்த்தமான கருத்து அது. எவரது கருத்தும் மேற்கோள் காட்டப்படவில்லை. எவரையும் தனிப்பட குறிப்பிடவில்லை. செய்தியின் பிரகாரம் பொதுவான கருத்தே என்னால் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட செய்தி சம்மந்தமாக தேவை என்றால் விரிவான ஒரு உரையாடலுக்கு தயார். 

நன்றி! 

Link to comment
Share on other sites

19 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

வணக்கம் நியாயத்தை கதைப்போம்,

தவறு என்னுடையது.

உங்கள் பதிலை வாசித்து இருந்தேன். அதில் எந்தவிதமான கள விதி மீறலும் இருக்கவில்லை.

விவசாயி விக்கின் கருத்து ஒன்றை இன்னொரு கருத்துக்கள உறுப்பினர் ஒருவர் மேற்கொள் காட்டி விவசாயி  விக்கின் தனிப்பட்ட விடயங்களையும் இணைத்து கருத்து ஒன்று எழுதியிருந்தார். நடு இரவு எழும்பி கைத்தொலைபேசியில் அதை வாசித்த பின் அந்த கருத்தை நீக்க போய், உங்கள் கருத்தையும் சேர்த்து தவறுதலாக நீக்கிவிட்டேன்.

இந்த தவறுக்கு உளமார வருந்துகின்றேன்.

நன்றி
நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இப்ப தான் ஒரு தவறை முதல் ,முதலாய் ஒத்துக் கொண்டு உள்ளீர்கள்😮

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.