Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளை ,உறவு முறைகளை சந்தேகப்படுபவர்கள்/கொச்சப்படுத்துவர்களுக்கு நான் எழுதியது விளங்கி கொள்ள முடியாதது தான் ...தமிழ்சிறியும் அதில் சேர்ந்தது துரதிஷ்டம் ...நான் சும்மா கலாய்ப்பதற்காய் எழுதியது இப்படி பிழையாய் விளங்கி கொள்ளப்படும் என்று எதிர் பார்க்கவில்லை ...இதற்காய் நில்மினிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் புள்ளிகள் போடும் பொத்தான் போன்றவற்றைக் காணவில்லை.
தானியங்கியை ஒருக்கா தட்டி எழுப்பிவிடுங்கோ.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் புள்ளிகள் போடும் பொத்தான் போன்றவற்றைக் காணவில்லை.
தானியங்கியை ஒருக்கா தட்டி எழுப்பிவிடுங்கோ.

நீங்கள் கொஞ்சம் நீண்ட நாட்கள் வராது விட்டால் தானியங்கி தானே சில சேவைகளை நிறுத்திடுமாம்..ஆகவே இங்கும் வைத்தியர்கள் வர வேண்டும் அதுவரை பொறுத்திருங்கள்.😆பக்கம் 56 தட்டிப் பார்த்துட்டு இருங்கள்...

Edited by யாயினி
  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, யாயினி said:

நீங்கள் கொஞ்சம் நீண்ட நாட்கள் வராது விட்டால் தானியங்கி தானே சில சேவைகளை நிறுத்திடுமாம்..ஆகவே இங்கும் வைத்தியர்கள் வர வேண்டும் அதுவரை பொறுத்திருங்கள்.😆பக்கம் 56 தட்டிப் பார்த்துட்டு இருங்கள்...

நன்றி யாயினி
முறைப்பாடு செய்தபடியால் உடனடியாகவே சரி செய்துள்ளனர்.

நிர்வாகத்தினருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு வணக்கம், 

சமூக சாளரத்தில் நான் இணைத்த ஒரு Cappuccino காதல் என்ற அவுஸ்ரேலிய கலைஞர்களின் படைப்பைத்தான் சாந்தி அக்காவும் தென்னங்கீற்றில் இணைத்துள்ளார்.. இரண்டு இடங்களில் ஒரே பதிவு இருப்பதைவிட இரண்டையும் சரியான பகுதியில் இணைத்துவிட முடியுமா?

நன்றி. 

Link to comment
Share on other sites

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நிர்வாகத்தினருக்கு வணக்கம், 

சமூக சாளரத்தில் நான் இணைத்த ஒரு Cappuccino காதல் என்ற அவுஸ்ரேலிய கலைஞர்களின் படைப்பைத்தான் சாந்தி அக்காவும் தென்னங்கீற்றில் இணைத்துள்ளார்.. இரண்டு இடங்களில் ஒரே பதிவு இருப்பதைவிட இரண்டையும் சரியான பகுதியில் இணைத்துவிட முடியுமா?

நன்றி. 

நீங்கள் இணைத்ததை நான் கவனிக்கவில்லை பிரபா சிதம்பரம்பரநாதன். மன்னிச்சு கொள்ளுங்கோ ராசா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, shanthy said:

சாந்தி அக்கா, all good!!

என் கண்ணில்பட்டது அதனால்தான் ஒரே இடத்தில் இணைக்கமுடியமா என கேட்டேன்.. அவ்வளவுதான்

இதற்கெல்லாம் மன்னிப்பு என்ற வார்த்தையை உபயோகிக்க தேவையில்லை அக்கா!!

நன்றி..

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அன்பின் நிர்வாகிகளுக்கு,

என்னால் நான் எழுதிய கருத்துகளை திருத்தவோ, தனி மடல்கள் அனுப்பவோ, விருப்பு குறிகளை இடவோ முடியவில்லை.

தயவுகூர்ந்து இதனை கவனித்தில் எடுப்பீர்களா.

நன்றி,

பகலவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பகலவன் said:

அன்பின் நிர்வாகிகளுக்கு,

என்னால் நான் எழுதிய கருத்துகளை திருத்தவோ, தனி மடல்கள் அனுப்பவோ, விருப்பு குறிகளை இடவோ முடியவில்லை.

தயவுகூர்ந்து இதனை கவனித்தில் எடுப்பீர்களா.

நன்றி,

பகலவன்

நீங்கள் சில  காலங்களுக்கு கருத்துக்களப்பகுதியில் எழுதாது விடும்  பட்சத்தில்

இவ்வாறு  நிகழலாம்

கிழமைக்கு ஒரு  பதிவாகுதல் போடுங்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சாருங்கோ எனக்கு மீண்டும் பச்சை(like button) வேலை செய்யிதில்லை தயவு செய்து ஒழுங்கு படுத்தி விடுங்கோ   

Link to comment
Share on other sites

10 minutes ago, putthan said:

இஞ்சாருங்கோ எனக்கு மீண்டும் பச்சை(like button) வேலை செய்யிதில்லை தயவு செய்து ஒழுங்கு படுத்தி விடுங்கோ   

புத்தன் கள உறவு ஒருவர் இரண்டு வாரங்களுக்கு மேல் எந்தப் பதிவையும் இடாத போது தானியங்கியால் அவர் கருத்துக்கள உறவுகள் நிலையில் இருந்து கருத்துக்கள பார்வையாளர் நிலைக்கு நகர்த்தப்பட்டு விடுவார். இந்த உறுப்பினர் பிரிவில் உள்ளவர்களால் பச்சைப் புள்ளிகளை இட முடியாது. (நீங்கள் இறுதியாக சனவரி 9 இன் பின் இன்றுதான் கருத்து ஒன்றை வைத்துள்ளீர்கள்.)

இவ்வாறு பார்வையாளர் நிலைக்கு நகர்த்தப்பட்டுவிட்ட ஒரு உறுப்பினர் மீண்டும் ஒரு வாரத்திற்குள் குறிப்பிட்ட எண்ணைக்கையில் பதிவுகளை இட்ட பின் அவர் மீண்டும் கருத்துக்கள உறவுகள் நிலையிற்கு நகர்த்தப்படுவார்.

இந்த செயற்பாடு, கருத்துகள் எதுவும் வைக்காது வெறுமனே பச்சை குத்த விரும்புகின்றவர்களை கருத்தாடச் செய்வதற்காகவும், பச்சைப் புள்ளிகளை தவறாக பயன்படுத்த முனைகின்றவர்களை கட்டுப்படுத்தவும் கொண்டு வரப்பட்ட ஒரு செயற்பாடு.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, putthan said:

இஞ்சாருங்கோ எனக்கு மீண்டும் பச்சை(like button) வேலை செய்யிதில்லை தயவு செய்து ஒழுங்கு படுத்தி விடுங்கோ   

புத்தன்! நான் இப்ப வேலைவெட்டியை குறைச்சுப்போட்டு வீட்டிலை சும்மாதான் இருக்கிறன். உங்கடை  ஐடியை தாங்கோ. டெய்லி உங்கடை பெயரிலை வந்து கைநாட்டு வைச்சு விடுறன். அதுக்கு பிறகு உங்களை ஒருத்தரும் அசைக்கேலாது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

புத்தன்! நான் இப்ப வேலைவெட்டியை குறைச்சுப்போட்டு வீட்டிலை சும்மாதான் இருக்கிறன். உங்கடை  ஐடியை தாங்கோ. டெய்லி உங்கடை பெயரிலை வந்து கைநாட்டு வைச்சு விடுறன். அதுக்கு பிறகு உங்களை ஒருத்தரும் அசைக்கேலாது.😁

அவர் புத்தன் என்ற ஐடியை தான் பாவிப்பதில்லை ...மற்ற ஜடிகள் வேலை செய்யுது 😁

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காவதால் எதையாவது எழுதி போட்டு விடணும் .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 23:36, goshan_che said:

ரியலி? ரொம்ப சந்தோசம்.

ஏனென்று தெரியவில்லை. ஒரு வேளை கனநாட்கள் வராவிட்டால் திண்ணை அனுமதியும் வாபஸ் ஆகுமோ?

நானும் இவ்வளவு நாளாய் திண்ணை முழுசா பூட்டியாச்சு என்று நினைத்தது கொண்டு இருக்கிறேன்  🙆‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Sabesh said:

இதுக்காவதால் எதையாவது எழுதி போட்டு விடணும் .

சபேஷ்... களத்தில், கருத்து எழுதா விட்டாலும், 
கிழமைக்கு ஒருக்கால், திண்ணையில்...  
 ஹீ  ... ஹாய்... கூய்....  என்று போட்டும், 
சிமைலி போட்டும்... வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

அப்படித்தான்... சிலர், இங்கு... வந்து போகின்றார்கள். :)

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

சபேஷ்... களத்தில், கருத்து எழுதா விட்டாலும், 
கிழமைக்கு ஒருக்கால், திண்ணையில்...  
 ஹீ  ... ஹாய்... கூய்....  என்று போட்டும், 
சிமைலி போட்டும்... வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

அப்படித்தான்... சிலர், இங்கு... வந்து போகின்றார்கள். :)

வணக்கம் சிறி அண்ணா ... திண்ணையை கண்டு மாதங்கள் ஆச்சு.  திண்ணை பூட்டியாச்சு என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Sabesh said:

வணக்கம் சிறி அண்ணா ... திண்ணையை கண்டு மாதங்கள் ஆச்சு.  திண்ணை பூட்டியாச்சு என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்

கிழமைக்கு ஒருக்காலாவது வந்து விசிலடிச்சிட்டு போங்கோப்பா 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Sabesh said:

வணக்கம் சிறி அண்ணா ... திண்ணையை கண்டு மாதங்கள் ஆச்சு.  திண்ணை பூட்டியாச்சு என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்

சபேஷ்... நீங்கள், கனடாவில் வசித்துக் கொண்டு...இப்பிடிச்  சொன்னால், 
நிழலி...  "தூக்கு காவடி"  எடுத்துக் கொண்டு,  
கைலாச நாட்டுக்கே... போய் விடுவார். :grin:

சபேஷ்... சின்ன ஒரு கேள்வி?
கைலாச நாட்டின், தலைவரின் பெயரை.. ஒருக்கால்...
சொல்லுங்கள் பார்ப்போம், காது  குளிர.. நாங்கள் கேட்க ஆசையாக உள்ளது. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

சபேஷ்... நீங்கள், கனடாவில் வசித்துக் கொண்டு...இப்பிடிச்  சொன்னால், 
நிழலி...  "தூக்கு காவடி"  எடுத்துக் கொண்டு,  
கைலாச நாட்டுக்கே... போய் விடுவார். :grin:

சபேஷ்... சின்ன ஒரு கேள்வி?
கைலாச நாட்டின், தலைவரின் பெயரை.. ஒருக்கால்...
சொல்லுங்கள் பார்ப்போம், காது  குளிர.. நாங்கள் கேட்க ஆசையாக உள்ளது. 🤣

இப்போது திண்ணை வேலை செய்கிறது.  நிர்வாகத்தினருக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

கிழமைக்கு ஒருக்காலாவது வந்து விசிலடிச்சிட்டு போங்கோப்பா 😁

ஒரு காலத்தில், ஒரு நாளுக்கு ஐந்து தடவைகளுக்கு மேல் யாழுக்கு வந்த காலமும் இருந்தது குசா அண்ணா. 

வீடு வாசலில் எத்தனை திட்டு நையாண்டி எல்லாம் தாண்டி வந்திருக்கிறேன். 

இடையில் எதோ ஒரு சலிப்பு. பல விம்பங்கள் உடைந்தது ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.  அ‌த்துட‌ன் இரண்டு extreme (தீவிரமான) கொல்லுப்பாடுகள். 

இ‌ங்கு வ‌ந்து செய்தி படிப்பதில் ஆர்வம் இல்லை ஆனால் அச் செய்திக்கு பதியும் கருத்துகளில் ஆர்வம் இருந்தது. அதுவும் இப்போ மருகிவிட்டது. 

அடுத்தது கள உறவுகளின் சுய ஆக்கங்களை தேடி படிப்பேன் ஆனால் அதுவும் குறைந்து விட்டது. 

ஆனால், எதுவாயினும் யாழுடன் எப்பொழுதும் இணைந்தே இருப்பேன். 😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sabesh said:

எல்லாம் எல்லா நேரமும் நமக்கு ஏற்றவாறு அமைந்து விடுவதில்லை.ஒவ்வொரு காலநிலைக்கேற்ப எம்மை மாற்றிக்கொள்வது போல் 
சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நாமும் மாறினால் சகலதும் சுபமே
இணைந்திருங்கள். :)

Link to comment
Share on other sites

7 hours ago, Sabesh said:

இடையில் எதோ ஒரு சலிப்பு. பல விம்பங்கள் உடைந்தது ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.  அ‌த்துட‌ன் இரண்டு extreme (தீவிரமான) கொல்லுப்பாடுகள். 

இ‌ங்கு வ‌ந்து செய்தி படிப்பதில் ஆர்வம் இல்லை ஆனால் அச் செய்திக்கு பதியும் கருத்துகளில் ஆர்வம் இருந்தது. அதுவும் இப்போ மருகிவிட்டது. 

ஆனால், எதுவாயினும் யாழுடன் எப்பொழுதும் இணைந்தே இருப்பேன்.

2009 இற்குப் பிறகு நான் உட்படப் பலருக்கும் இதே மனநிலை வந்திருக்கும் சபேஷ். போதாக்குறைக்கு முகநூலின் தாக்கம் வேறு.

யாழில் செய்திகள் அதிகமாகப் பகிரப்பட்டாலும் நானும் மேலோட்டமாக வாசித்துவிட்டுப் போய்விடுவேன். அவை தவிர்ந்த அம்சங்களுக்கும் யாழில் இடமிருப்பது என் போன்றோருக்கு மகிழ்ச்சியே. 

2008 அல்லது 2009இல் உங்களை இங்கு கண்டது நினைவிருக்கிறது. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. இணைந்திருங்கள். (இப்படிச் சொல்லுற நானும் இடையிடையே காணாமல் போய்விடுவதுண்டு! 😀)

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு வணக்கம்,

யாழ் திரைகடலோடியில் Boyer Lectures 2021: 1, 2 & 3 என 3 தனித்தனி பதிவுகள் உள்ளது, அவை மூன்றையும் ஒரு தலையங்கத்தின்( Boyer Lectures 2021) கீழ் கொண்டுவந்து இணைக்கமுடியுமா?

நன்றி.

Link to comment
Share on other sites

32 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நிர்வாகத்தினருக்கு வணக்கம்,

யாழ் திரைகடலோடியில் Boyer Lectures 2021: 1, 2 & 3 என 3 தனித்தனி பதிவுகள் உள்ளது, அவை மூன்றையும் ஒரு தலையங்கத்தின்( Boyer Lectures 2021) கீழ் கொண்டுவந்து இணைக்கமுடியுமா?

நன்றி.

ஒன்றாக இணைத்துள்ளேன். சரி பாருங்கள்

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.