மோகன்

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

சில விடயங்களுக்கு காணொலி மூலம் நாளை விளக்கம் தருகின்றேன்.

இந்த தமிழை வைச்சுகொண்டா...........

தமிழை வளர்க்க போறேன் பேர்வழி எங்கிறவங்க ஆரம்பிக்குற ..தலைப்புக்கு

பச்சை குத்துறீங்க?

வெளங்கிடும்!!

Share this post


Link to post
Share on other sites

ஆமாமா கண்டிப்பா அத செய்யணும் நீங்க !

அப்போதானே ,

ஒரு கருத்துகள பொறுப்பாளரா...பொறுப்போட .... நடு நிலமை வகிக்காம ,

யார் யாருக்கு எல்லாம்... “நீங்களும்” பச்சை குத்தினீங்கன்னு கண்டுபுடிக்கலாம்!! :rolleyes:

சுய ஆக்கங்களுக்கும், நல்ல விடயங்கள் எனக் கருதும் விடயங்களுக்கும் பச்சை குத்துவதுண்டு. மற்றும்படி யார் யார் என்று பார்ப்பது கிடையாது.

இந்த தமிழை வைச்சுகொண்டா...........

தமிழை வளர்க்க போறேன் பேர்வழி எங்கிறவங்க ஆரம்பிக்குற ..தலைப்புக்கு

பச்சை குத்துறீங்க?

வெளங்கிடும்!!

காணொலி என்பதுதான் video என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் என ஊரில் பேசிக் கொண்டார்கள் :unsure:

Share this post


Link to post
Share on other sites

சுய ஆக்கங்களுக்கும், நல்ல விடயங்கள் எனக் கருதும் விடயங்களுக்கும் பச்சை குத்துவதுண்டு. மற்றும்படி யார் யார் என்று பார்ப்பது கிடையாது.

காணொலி என்பதுதான் video என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் என ஊரில் பேசிக் கொண்டார்கள் :unsure:

அது காணொளி!

Share this post


Link to post
Share on other sites

அச்சச்சோ ......போச்சே போச்சே........

மோகன் அண்ணாகூட ஆர்கியூ பண்ணினதால ..........

இனிமே நம்மள ஒருவழி பண்ணவே ஒரு கூட்டம் அலையுமே ...இந்த களத்துல!

என்ன பண்ணுவேன் -- இனிமே? :(

Share this post


Link to post
Share on other sites

அது காணொளி!

video என்பதற்கு காணொளி என்பது சரியான தமிழ் இல்லையென்றும் காணொலியே சரியான தமிழ் என்றும் சொல்லப்படுகின்றது.

Share this post


Link to post
Share on other sites

video என்பதற்கு காணொளி என்பது சரியான தமிழ் இல்லையென்றும் காணொலியே சரியான தமிழ் என்றும் சொல்லப்படுகின்றது.

ஒலியை எப்படி காணமுடியும்? ஒளியைதான் காணமுடியும்!

எது சரி??

Share this post


Link to post
Share on other sites

ஒலியை எப்படி காணமுடியும்? ஒளியைதான் காணமுடியும்!

எது சரி??

இதுபற்றி முன்னர் நான் விளக்கம் கேட்டபோது காண்(காண் = ஒளிப்படம்) + ஒலி

இரண்டும் சேர்ந்து காணொலி என்றே வரும் எனத் தெரிவித்திருந்தார்கள் :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

மோகன் அண்ணா ,

நீங்க இந்த லூசு கூட பேசினதே பெரிய விசயம்... !!

ஆனாலும்... அந்த தகவல் சரி இல்லைன்னு நேக்கு படுது!

ஒண்ணுமட்டும் சொல்றேன்... ஒலியும் + ஒளியும் சேர்ந்தா...........

ஒலி ன்னு ...வார்த்தை அமையாது...!!

உங்ககூட பேசினது ரொம்ப சந்தோசம்! :)

Share this post


Link to post
Share on other sites

உடையார் இன்னும் கண்டு பிடிக்கேல்லைப் போல....கறுப்பி. :icon_idea:

இரண்டு பேருக்கு குத்திவிட்டேன்,

Share this post


Link to post
Share on other sites

யாழில் உள்ள எழுத்துக்களை வாசிக்க வேண்டுமெனில் நிறைய கீரையும் காரட்டும் சாப்பிடவேண்டும் போலுள்ளது.... எழுத்துருக்கள் மிகச் சிறியது... யாழுக்கோ அல்லது எமக்கோ வயசாகிப்போச்சுதோ? :icon_idea:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

யாழில் உள்ள எழுத்துக்களை வாசிக்க வேண்டுமெனில் நிறைய கீரையும் காரட்டும் சாப்பிடவேண்டும் போலுள்ளது.... எழுத்துருக்கள் மிகச் சிறியது... யாழுக்கோ அல்லது எமக்கோ வயசாகிப்போச்சுதோ? :icon_idea:

ஒன் ஸ்டெப் zoom பண்ணி வாசிசீங்கன்னா................ கேரட் அண்டு கீரை வாஙுகுற காச பக்காவா சேமிச்சுக்கலாம்!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அட நான் இதைக் கவனிக்கல்லையே..??! அதுக்குள்ள மாத்திட்டாய்ங்களே..! :lol:

அதானே. போட்டுடைத்த ரதிக்கு நல்ல வேப்பந்தடியால விளாசவேணும். :icon_mrgreen:

பச்சைப்புள்ளி ஒரு வாக்களிப்பின் மாதிரிவடிவம்.

யார்யார் எவருக்கு பச்சைபுள்ளிகுத்தினார்கள் என்பது யாவருக்கும் தெரிந்துவிட்டால் யாழ்களம் பெரிய குளறுபடிகளுக்கு உள்ளாகலாம்.ஒருசில முக்கிய விடயங்கள் நிர்வாகத்தினருடன் இருப்பதே நல்லது.இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

கு.சா. நிதானமாக எழுதிய கருத்துக்கு ஒரு பச்சை! :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

video என்பதற்கு காணொளி என்பது சரியான தமிழ் இல்லையென்றும் காணொலியே சரியான தமிழ் என்றும் சொல்லப்படுகின்றது.

எனக்கு காணொளி என்பது தான் சரியாக படுகிறது. ஒலியை காண முடியாது.. கேட்கத்தான் முடியும். காண்கின்ற ஒளி வடிவம்.. என்பதாகவும் கொள்ளலாம்.

வீடியோவில் ஒளியும் ஒலியும் இருப்பதால்.. காணொலி என்று சொல்லப் பிரியப்படுகிறார்கள் போல..! :)

Share this post


Link to post
Share on other sites

கு.சா. நிதானமாக எழுதிய கருத்துக்கு ஒரு பச்சை! :icon_mrgreen:

அப்ப முடிவே பண்ணீட்டியள் போலை கிடக்கு.....என்ன சோலியப்பா :D

Share this post


Link to post
Share on other sites

I Have downloaded one of the suggestions you made. Now what?? Still I cannot write in Tamil.

Share this post


Link to post
Share on other sites

I Have downloaded one of the suggestions you made. Now what?? Still I cannot write in Tamil.

இ-கலப்பையைத் (http://thamizha.com/project/ekalappai) தரவிறக்கம் செய்திருந்தால் மிகவும் இலகு (Windows XP மற்றும் Windows 7 இல் எனக்கு வேலை செய்கின்றது).

 • Launch EKalappai 3.0
 • Select Keyboard - Phonetic (English2Unicode) or Bamini (Bamini2Unicode)

Windows Tray இல் இ-கலப்பை நிற்கும். அதனை ஒற்றைச் சொடுக்கு மூலம் ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் மாற்றலாம்.

இப்பதிவை அவ்வாறுதான் பதிந்தேன்.

Share this post


Link to post
Share on other sites

பச்சைப்புள்ளி ஒரு வாக்களிப்பின் மாதிரிவடிவம். யார்யார் எவருக்கு பச்சைபுள்ளிகுத்தினார்கள் என்பது யாவருக்கும் தெரிந்துவிட்டால் யாழ்களம் பெரிய குளறுபடிகளுக்கு உள்ளாகலாம்.ஒருசில முக்கிய விடயங்கள் நிர்வாகத்தினருடன் இருப்பதே நல்லது.இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

இதுவரை இல்லாதவகையில் புதிதாக ஏதாவது குளறுபடி தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், தனிப்பட்ட தெரிவுகளை வெளிப்படுத்துவதாயின் ஆரம்பத்திலேயே அறிவித்தல் கொடுத்து இருக்கலாம். இதேவகையில் உதாரணத்திற்கு பதிவுகளிடுபவர்களின் தனிப்பட்ட ஐபி முகவரிகள் வெளிப்படுத்தப்படுமாயின் எத்தனைபேர் கருத்துக்கள் இடுவார்கள் என்பதும் கேள்விக்குறி.

Share this post


Link to post
Share on other sites

ந ... என்ற எழுத்து வரி ன அல்லது ண என்றல்லோ வருகுது ... னெல்லையனுக்கு!!! :o

Share this post


Link to post
Share on other sites

பச்சைப்புள்ளி ஒரு வாக்களிப்பின் மாதிரிவடிவம்.

யார்யார் எவருக்கு பச்சைபுள்ளிகுத்தினார்கள் என்பது யாவருக்கும் தெரிந்துவிட்டால் யாழ்களம் பெரிய குளறுபடிகளுக்கு உள்ளாகலாம்.ஒருசில முக்கிய விடயங்கள் நிர்வாகத்தினருடன் இருப்பதே நல்லது.இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

கு.சா அண்ணாவின் கருத்து தான் என் கருத்தும்...பச்சை குத்துவதை காண்பிக்க கூடாது அப்படி காண் பித்தால் முந்தி எழுதின கருத்துகளுக்கும் யார்,யார் பச்சை குத்தினது என காண்பிக்க வேண்டும் :D

அதானே. போட்டுடைத்த ரதிக்கு நல்ல வேப்பந்தடியால விளாசவேணும். :icon_mrgreen:

எல்லோரும் என்னை ர‌வுண்டு கட்டி வெளுக்கிறதிலேயே நில்லுங்கள் :lol:

Share this post


Link to post
Share on other sites

சில வேலைத் தளங்களில் சகல மென்பொருட்களையும் தரவிறக்க அனுமதியளிக்கப் படாது. நான் google இல்தான் தட்டச்சு செய்து ஓட்டுவேன்.

'eகலப்பை' ஐ தரவிறக்க ஏதும் தடைகள் உண்டா?

Share this post


Link to post
Share on other sites

ந ... என்ற எழுத்து வரி ன அல்லது ண என்றல்லோ வருகுது ... னெல்லையனுக்கு!!! :o

wellai -> நெல்லை

Share this post


Link to post
Share on other sites

இவ்வளவு பிரச்சனைகள் இருக்க நீங்கள் அவசரப்பட்டு மாற்றவேண்டியதன் அவசியம் என்ன?? இப்படிச் செய்யாப்போகிறோம் என்று யாருக்காவது சொன்னீர்களா?? ஒருகட்டத்தில் இனி யாழுக்கே வருவதில்லை என்றிருந்தேன். தான்தோன்றித்தனமாகச் செயல்ப்படுவது என்பது இதுதானோ என்னவோ?!

ஏன் யாழில் எழுதமுடியாமல் வேறிடத்தில் எழுதிக்கொண்டு வந்து ஒட்ட வேண்டியிருக்கிறது ? இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா??

மோகன், நீங்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு வேலை செய்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் இவ்வளவு கஷ்ட்டங்களும் நன்றாக இயங்கிவன்த தளத்தினை மேம்ப்டுத்தியிருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.

ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன், அவ்வளவுதான்.

Share this post


Link to post
Share on other sites

ஏன் ரகுநாதன் புதுசு,புதிசாய் மாற்றம் வாறது நல்லது தானே!...ஒரே பழசை பின்பற்றினால் போரடிக்காது :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

எனக்கு காணொளி என்பது தான் சரியாக படுகிறது. ஒலியை காண முடியாது.. கேட்கத்தான் முடியும். காண்கின்ற ஒளி வடிவம்.. என்பதாகவும் கொள்ளலாம்.

வீடியோவில் ஒளியும் ஒலியும் இருப்பதால்.. காணொலி என்று சொல்லப் பிரியப்படுகிறார்கள் போல..! :)

opto-, optic-, optical- = ஒளி- (காணொளி (visible light) என்பது பொருள் ஆனால் பொருள் நீட்சி பெற்று காணொளி மீறிய அலைநீளங்கள் கொண்ட மின்காந்த அலைகளுக்கும் பயன்படுகின்றது. எ.கா. optical fiber = ஒளிநார். ஆனால் ஒளிநாரின் அச்சுப்பகுதியில் செல்லும் மின்காந்த அலைகள் காணொளி மாலைக்கு அப்பாற்பட்டவை. அகச்ச்சிவப்புக் கதிர் அலைநீளங்கள் கொண்டவை. எனினும் காணொளியை ஒட்டிய அலைநீளங்கள் கொண்டவை என்னும் நீட்சிப் பொருளில் ஒளிநார் என்கிறோம். (இங்கு காணொளி என்பதை visibile light என்னும் பொருளில் ஆள்கிறேன். இணைய உலகில் சிலர் நிகழ்படம் (video) என்பதற்கு ஈடாக காணொளி என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள்)

http://ta.wikipedia.org

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • புதிய தலைப்பு தொடங்க ஒருத்தருக்கும் நேரமில்லையாக்கும். என்னாலும் தொடங்க முடியாது - புதுமுகம்.
  • உரிமையா, அபிவிருத்தியா? தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்? Johnsan Bastiampillai   / 2020 ஜூன் 06 , அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும் அபிலாஷைகளும், ஓரினத்தைப்போல் மற்றைய இனத்துக்குக் கிடையாது. ஒவ்வொரு இனத்தினுடைய, தேர்தல் குறித்த அணுகுமுறைகள், வேறுவேறானவை. சிங்கள மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் நோக்கத்துக்கும், முஸ்லிம் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நோக்கத்துக்கும் தமிழ் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் அபிலாஷைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள், இடைவெளிகள் காணப்படுகின்றன. இலங்கையில், ஏனைய இனங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கு இல்லாத மேலதிக பொறுப்புகளும் கடமைகளும் அவற்றை நிறைவேற்றும் பக்குவமும் துடிப்பும் தூரநோக்குப் பார்வையும் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகளிடத்தில் பெருமளவு தேவைப்படுகின்றன. இத்தகையோரையே தெரிவு செய்ய வேண்டிய தேவை, தமிழினத்தின் முன்னால் குவிந்துபோய்க்கிடக்கின்றன.  தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதுடன், தமக்கு வாக்களித்த மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொள்வதற்கு அப்பால், தனது இனத்தையும் நிலத்தையும் மொழியையும் பாதுகாக்க வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையையும் கொண்டிருக்கிறார்கள்; தாங்கியிருக்கிறார்கள்.  கடந்த காலங்களில், தமிழ்மக்கள், தமது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குத் தகுதியானவர் இவர்தான் என்ற கனவுடன் தெரிவுசெய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனைபேர், தமது மனச்சாட்சிக்குத் துரோகமிழைக்காமல் செயற்பட்டிருந்தார்கள் என்பது, தமிழ்த் தேசியத்தின் மனச்சாட்சிக்கு நன்கு தெரியும். முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களுடைய தொழில், நிலம், இருப்பு ஆகியவை பாதுகாக்கப்படுவதே முக்கியமாகும். பேசும் மொழியால் அன்றி, மதத்தாலேயே அவர்களது இனத்துவ அடையாளம் வெளிப்படுத்தப்படுகின்றது; பாதுகாக்கப்படுகின்றது. அவர்கள், சிங்கள மொழி பேசுவோராக இருந்தாலும், இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவராக இருந்தால், அவர் முஸ்லிம் இனமாகவே அடையாளப்படுத்தப்படுவார். தமிழ் மொழி பேசுவதால்தான், ஒருவர் முஸ்லிமாக இனத்துவ அடையாளப்படுத்தப்படுகின்றார் என்ற வரையறையோ தாற்பரியமோ கிடையாது. முஸ்லிம்களை, மொழிவழி இனக்குழுமமாகப் பார்க்கும் வரலாற்றுப் பாரம்பரியம், இங்கு இல்லை என்பதுவே யதார்த்தமாகும். எனவே, முஸ்லிம் இனத்தைப் பொறுத்தவரையில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் தீர்வு காண்பதற்கு, ஆளும் பெரும்பான்மையினக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது, ஒத்துப்போவதே அனுகூலமானது எனச் சிந்திக்கின்றார்கள். ஒரு பிரச்சினை எழுகின்றபோது, வெளியில் இருந்து பேசுவதைவிட, அரசாங்கத்துக்குள் இருந்து பேசுவது, அனுகூலமானது என்பது அவர்களது நிலைப்பாடு; இதில் தவறில்லை.  சிங்கள மொழிவழியில் கல்வி கற்று, சிங்கள மொழியையே வீட்டிலும் வெளியிலும் உரையாடி, சிங்கள மொழியிலேயே பள்ளிவாசலில் தொழுகை செய்தாலும், அவர்கள் முஸ்லிம் இனஅடையாளத்தைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். எனவே, அவர்கள் அரசுடன் கலந்து பயணிப்பதன் மூலம், தமது இனத்துவ அடையாளங்களை இழந்து விடுவார்கள் என்று அச்சப்படத் தேவையில்லை. அவர்கள், சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்தாலும், முஸ்லிம் என்ற இன அடையாளத்துடன் வாழமுடியும். ஆனால், தமிழர்களின் நிலை அவ்வாறில்லை. தமிழர்களின் இன அடையாளம், மதம் சார்ந்ததில்லை; மொழி சார்ந்தது. தமிழ் மொழி பேசுவதன் ஊடாகவே, தமிழர், தமது இனத்துவ அடையாளத்தை முன்னிலைப்படுத்துகின்றார்கள். தமிழர் ஒருவர், சிங்கள மொழி வழியில் கல்விகற்று, சிங்கள மொழியையே வீட்டுமொழியாகப் பேசி வாழ்ந்தால், அவரின் அடுத்த தலைமுறை, எந்த மொழிபேசும் ஒருவராக இருப்பார்? அதன்போது, அவர் தமிழர் என்ற இன அடையாளத்தை இழந்து விடுகின்றார். தற்போது, எந்த இன அடையாளத்தோடு வாழ்கின்றாரோ, அதுவே அவரது இன அடையாளம் ஆகின்றது.  எனவே, இனத்துவ அடையாளம் பாதுகாக்கப்பட்டால்த்தான், அந்த இனம் நின்று நிலைக்கும். வடக்கு-கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியில் வாழ்ந்த தமிழர்கள், தமது இனத்தின் அடையாளத்தைக் காப்பாற்றத் தவறியதால் அல்லது, இனத்துவ அடையாளத்தை வெளிப்படுத்துவதைப் பல்வேறு வழிகளிலும் தடுக்கப்பட்டதால், தமிழர்கள் பல இலட்சம் பேரைத் தமது மொத்த சனத்தொகைக் கணிப்பிலிருந்து இழந்துவிட்டார்கள். வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களின் வரலாறு மறக்கடிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே. குறிப்பாக, குருநாகல், கண்டி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை உட்பட, மேற்குக் கடற்கரையோரப் பிரதேசங்களான புத்தளம், சிலாபம் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்களில், பல இலட்சம் பேர், சிங்களவர்களாக இனமாற்றம் செய்யப்பட்டார்கள் என்ற பதிவுகள், பல இடங்களில் காணப்படுகின்றன. இவர்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். புத்தளம்-சிலாபம் மறைமாவட்டத்தைத் மய்யமாகக் கொண்ட கத்தோலிக்க தேவாலயங்கள், பாடசாலைகள் ஊடாக, படிப்படியாக சிங்கள மயமாக்கல் இடம்பெற்றது. ஆனால், இந்தப் பிரதேசத்தில் உள்ள இந்துக் கிராமங்களான உடப்பு, முன்னேஸ்வரம் ஆகியவை, தமிழர்கள் என்ற மொழி அடையாளத்தை இன்றுவரை பல இடர்பாடுகள், இன்னல்களுக்கு மத்தியில் பேணி வருகின்றார்கள்.  கொழும்பின் வடக்கே, சிலாபம் வரையுள்ள கடற்கரைப் பிரதேசங்களில் செறிவாக வாழ்ந்த மக்கள், போர்த்துக்கேயரால் கத்தோலிக்கர்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். போர்த்துக்கேய காணிப்பதிவுப் பத்திரங்களில் காணப்படும் விவரங்களின்படி, மதமாற்றத்துக்கு முன்னர், இவர்களுடைய பெயர்கள், இந்துமதத்தைத் சார்ந்தவையாகக் காணப்பட்டுள்ளன. 1915ஆம் ஆண்டு மே 28இல், சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இனக்கலவரம் இடம்பெற்றது. இதன்போது, முஸ்லிம்களின் பெறுமதியான பல சொத்துகள் அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்ட சொத்துகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், பிரித்தானிய அரசாங்கம் சிங்களவர் மீது, தண்டம் விதித்தது. இதன்போது, கொழும்பின் வடக்கே மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் புத்தளம் வரை வாழ்ந்த மக்கள், தாங்கள் சிங்களவர் இல்லை என்றும், தாங்கள் தமிழர்கள் என்றும் பிரித்தானிய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தார்கள். இந்த விண்ணப்பம், இன்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகத்தில் காணப்படுவதாக அறியமுடிகிறது.  இவர்கள் தமிழர்களாக இருந்ததால், எத்தகைய ஆபத்துகளை, அழிவுகளை எதிர்கொண்டார்கள் என்பது குறித்த பதிவுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை. எனவே, எத்தகைய ஆபத்துகள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதால், அவர்கள் தங்களது அரச பதிவுகளில், 'சிங்களவர்' என்று பதிவுசெய்து கொள்கின்றார்கள் என்பதை, இலக்கையின் இனநெருக்கடி வரலாற்றை அறிந்து கொண்டவர்களால் இலகுவில் புரிந்துகொள்ள முடியும். இலங்கை முழுவதையும் பௌத்த சிங்கள நாடாக மாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயற்படும் பேரினவாதக் குழுக்களையும் இவர்களின் விருப்பு வெறுப்புகள், அபிலாஷைகளுக்காகவே செயற்படுவதற்காக, அரசியல் அதிகாரத்துக்கு மாறிமாறிவரும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளையும் யார் தடுத்தாலும் குறித்த அச்சிலேயே சுழல்வார்கள்.  எனவே, தமிழர்கள் தமது இனம் அழிவதைத் தடுக்க, அவர்கள் போராடியே ஆகவேண்டும். அத்தகைய போராட்டம், எத்தகைய தன்மையானது, எந்தச் செல்நெறியினூடானது என்பதே தமிழர்கள் முன்னுள்ள மிகப்பெரிய வினா? எனவே, தமிழர்கள் முன்னுள்ள சவால்களை எதிர்கொண்டு, முன்கொண்டு செல்லக்கூடிய தமிழ்க்கட்சி எது, அரசியல்வாதி யார் என்பது குறித்துச் சிந்தித்துத் தீர்க்கமான முடிவுகளைத் தமிழ்மக்கள் எடுத்தல் வேண்டும். அது, ஒன்றுபட்டதும், ஒற்றுமைப்பட்டதுமாக இருக்கவேண்டும்.  தமிழ்த் தேசிய அரசியல், தொடர்ந்தும் அபிவிருத்தி அரசியலிலா, உரிமை அரசியலிலா பயணிக்க வேண்டும் என்ற குழப்பம் தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. போராடிப்போராடி நாம் பெற்றுக் கொண்டது என்ன என்று கேள்வி கேட்பவர்கள், இனஅழிப்பு, ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போராடாமல் விட்டிருந்தால், இன்று, இலங்கையில் ஒரு தமிழ் எழுத்தைக் கூடக் காணமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.  'தமிழர்களுக்கு இப்போது எந்தப் பிரச்சினைகளும் கிடையாது; அவர்கள் எம்முடன் இணைந்து, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கிறார்கள்' என்று வெளிநாடுகளுக்குத் தேனொழுகச் சொல்லிக் கொண்டே, இலங்கையை முழுமையாகச் சிங்கள-பௌத்த நாடாக மாற்றும் கைங்கரியம் நிறைவேற்றப்பட்டிருக்கும்.  எனவே, தமிழர்களின் எதிர்கால அரசியல், தொடர்ந்தும் உரிமைக்காகக் குரல் கொடுக்கும், இனஅடையாளங்களைப் பாதுகாப்பதற்கான வன்முறையற்ற போராட்ட அரசியலாகவே இருக்க வேண்டும் என்பது கடந்த கால வரலாறு கற்றுத்தரும் பாடமாகும்.  இராணுவ நெருக்கடிச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அஹிம்சாவாத வழிமுறைகள் ஊடாக, மக்கள் எவ்வாறு எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்கள் என்பதற்கு, போலந்து மக்களின் வெற்றிகரமான ஒருமைப்பாட்டு போராட்டம், இன்றைய நிலையில் தமிழர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணம் ஆகும்.     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உரிமையா-அபிவிருத்தியா-தமிழர்-நலன்காப்பது-எந்தவழி-அரசியல்/91-251463
  • கிறிஸ் மனிதர்கள்..தப்பி வாழும் வைரசுகள் தாயகத்தில் காலத்திற்குக் காலம் கிறிஸ் மனிதர்கள் , குள்ள மனிதர்கள் நடமாட்டம் பற்றிய செய்திகளைப் படித்திருப்போம். செய்திகள் உருவாக்கும் திகில் fபீலிங்கை விட கிறிஸ் மனிதர்கள் யார் என்ற கேள்வி அவ்வளவாக எழுவதில்லை. உண்மையில், வழு வழுப்பான கிறிசை உடலில் பூசிக் கொண்டு வீடு புகுந்து திருடுவோர் தான் கிறிஸ் மனிதர்கள். மிக நெருங்கிப் பிடித்தால் கூட நழுவி ஓடி விடக் கூடிய தன்மையை கிறிஸ் பூச்சு தருகிறது, அவர்களும் தப்பி ஓடி விடுகிறார்கள். இப்போது உருவாகியிருக்கும் நவீன கொரனாவைரசும் இதற்கு நிகரான  ஒரு நுட்பத்தைப் பாவித்து , உடலின் நோய் எதிர்ப்பில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது.   நம்மிடையே காலங்காலமாக உலவிக் கொண்டிருக்கும் ஏனைய கொரனாவைரசுகளும் எங்கள் உடலில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில்லை. குளிர் காய்ச்சல் தரும் இன்புழுவன்சா வைரசு போல வருடா வருடம் உருமாறா விட்டாலும், வேறு வழிகளில் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி தூண்டப் படாதவாறு  கொரனாவைரசுகளின் அமைப்பு இருக்கிறது. நேயெதிர்ப்புச் சக்தியை நவீன கொரனா வைரசு தூண்டுமா தூண்டினாலும் பல மாதங்களுக்கு அந்த சக்தி எங்கள் உடலில் தங்கியிருக்குமா என்ற இரு கேள்விகளில் தான் கொரனா வைரசுக்கு தடுப்பூசி தயாரிக்க முடியுமா என்ற பதில் தங்கியிருக்கிறது. நவீன முயற்சிகள்  இது வரை உலகில் தயாரிக்கப் பட்ட நுண்ணுயிர்களுக்கெதிரான தடுப்பூசிகளில் இருந்து கொரனாவைரசுக்கான தடுப்பூசி பல வழிகளில் வித்தியாசமான ஒன்றாக இருக்கப் போகிறது என்பது மட்டும் இப்போதைக்குத் தெளிவாக உள்ள விடயம். வைரசுகளை உடலுக்கு வெளியே வளர்ப்பது கடினம், அதிலும் கொரனா வைரசை உடலுக்கு வெளியே இழையங்களில் வளர்த்து, சேமித்து அதை தடுப்பூசி தயாரிக்கும் அளவுக்கு பெருமளவில் உற்பத்தி செய்வது மிகவும் கடினம். இதனால் புதிய தொழில் நுட்பமாக , கொரனாவைரசின் ஒரு முக்கிய ஜீன் துண்டுகளை தடுப்பூசி போல தயாரித்து, அதை எமதுடலில் செலுத்தும் திட்டமே இப்போது ஒரு குழுவினால் முன்னெடுக்கப் படுகிறது. அந்த வைரஸின் ஜீன்கள் எமது உடலினுள் வைரசுகளாக மாற்றப் படும் போது , வைரசின் முக்கியமான அந்த அமைப்பிற்கெதிரான நோயெதிர்ப்புச் சக்தி உடலினால் உருவாக்கப் படும் என்பது எதிர்பார்ப்பு. வெற்றி வாய்ப்புகள் என்ன?  சாதாரணமாக, ஒரு நுண்ணுயிர் தடுப்பூசி தயாரிக்கப் படும் போது அது தோல்வி அடைவதற்கான வாய்ப்பு 90%. இதன் அர்த்தம், ஒரு நுண்ணுயிருக்கெதிராக 10 வகையான தடுப்பூசிகளை தயாரித்து பரிசோதித்து முடிக்கும் போது, இறுதியில் 1 வகையான தடுப்பூசி மட்டும் வேலை செய்யும். இது வரலாற்று ரீதியான தரவுகளால் நிரூபணமான அவதானிப்பு. இந்தத் அவதானிப்பு, என்ன தான் மறைத்தன்மையானதாக இருந்தாலும், நவீன கொரனாவைரசுக்கான தடுப்பூசியைப் பொறுத்த வரையில் மிகவும் நம்பிக்கை தரும் ஒரு அவதானிப்பு. ஏப்ரல் நடுப்பகுதியளவில் வரை, 30 வரையான கொரனா வைரஸ் தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் இருந்திருக்கின்றன. இப்போது இந்த எண்ணிக்கை 30 இற்கு அதிகமாக இருக்கக்  கூடும். எனவே, அதிக பட்சம் 3 தடுப்பூசிகளாவது வெற்றியளிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.  பரிசோதனை முடிவுகள் வைரசின் ஜீன் துண்டங்களை தடுப்பூசியாகப் பயன்படுத்தும் மொடெர்னா நிறுவனத்தின் பரிசோதனைகள் குரங்குகளிலும் சிறு எண்ணிக்கையான மனிதர்களிலும் நவீன கொரனா வைரசுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாக அந்த நிறுவனம் செய்திக் குறிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், மனிதர்களில் , முதல் 6 வாரங்கள் மட்டுமே இந்த நோயெதிர்ப்புச் சக்தியை அவர்கள் உடலில் ஆராய்ந்திருப்பதால், நீண்ட காலத்திற்கு இந்தத் தடுப்பூசியினால் விளையும் நோயெதிர்ப்புச் சக்தி நீடிக்குமா என்பது இன்னும் உறுதியாகாத விடயம். இதே நேரம், ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தனது கொரனா வைரஸ் தடுப்பூசியை குரங்குகளில் பரீட்சித்துப் பார்த்த போது கிடைத்த முடிவுகள் நம்பிக்கை தருவனவாக இருந்தன. தடுப்பூசி ஏற்றப் பட்ட குரங்குகளின் நாசித் துவாரத்தில் பெருமளவு வைரசுகள் காணப் பட்டாலும், அந்தக் குரங்குகளில் சுவாச நோய் உருவாகவில்லை!.  வெற்றிகரமான தடுப்பூசி கிடைத்தால்..எப்போது சந்தைக்கு வரும்? வழமையாக 10 வருடங்கள் ஆற அமர ஆய்ந்து சந்தைக்கு வரும் தடுப்பூசிகள் போலல்லாமல் கொரனா வைரஸ் கேசில் ஒரு புதிய அணுகுமுறை உருவாகி இருக்கிறது. சில தடுப்பூசிகள் பரிசோதனையில் இருக்கும் போதே அந்த தடுப்பூசிகளை பெரிய அளவில் சில கம்பனிகள் உற்பத்தி செய்யும் அனுமதியை அரசுகள் வழங்கியிருக்கின்றன. தடுப்பூசிகளின் செயல் திறனும் பாதுகாப்பும் உறுதியாக ஒரு வருடம் எடுக்கலாம், ஆனால் அந்த ஒரு வருட முடிவில் சில நூறு மில்லியன் டோஸ்கள் தடுப்பூசிகள் ஏற்கனவே தயாராக இருக்கும் வகையில் தான் இந்த ஏற்பாடு. அந்தத் தடுப்பூசி செயல்திறனிலோ அல்லது பாதுகாப்பிலோ தோல்வியடைந்தால்,சில பில்லியன் டொலர்கள் நட்டத்துடன் அடுத்த தடுப்பூசியை நோக்கி ஆய்வுகள் நகரும்.  முடிவு, அனேகமாக ஒரு தடுப்பு மருந்தைக் கண்டு  பிடிப்பதாக அல்லது வைரசை உடலில் வைத்து அழிக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்தொன்றைக் கண்டு பிடிப்பதில் தான் இருக்கிறது. நவீன கொரனா வைரசுக்கு எதிராக வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளும் சமாந்தரப் பாதையில் பயணிக்கின்றன. எனவே, இப்போதைக்கு விஞ்ஞான மருத்துவத்தின் கைகளில் தான் நம் கொரனாவுக்கு முந்திய வாழ்வுக்குத் திரும்புவதற்கான சாவி இருக்கிறது!   -ஜஸ்ரின்  (பல்வேறு ஆய்வு மூலங்களில் இருந்து) -முற்றும்
  • படைமய சூழலுக்குப் பழக்கப்படுதல் கே. சஞ்சயன்   / 2020 ஜூன் 05 கொரோனா வைரஸ் தொற்றால், கடந்த மூன்று மாதங்களாக, உலகளாவிய ரீதியாகப் பொருளாதார உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், புதிய அச்சுறுத்தல் ஒன்று, வெட்டுக்கிளிகளின் வடிவத்தில் வந்திருக்கிறது. சோமாலியா, எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளில், வெட்டுக்கிளிகள் பயிர்களுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்துவது வழக்கம். உள்நாட்டுப் போர், வறுமை, பொருளாதார வளமின்மை போன்ற காரணிகளால், இந்த நாடுகள் பலமான உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதில்லை. இதனால், இங்கு வெட்டுக்கிளிகள் கட்டுக்கடங்காமல் பரவுகின்றன. இந்த வெட்டுக்கிளிகள், அவ்வப்போது உலகத்துக்கே அச்சுறுத்தலாகவும் மாறுகின்றன. ஒரு நாளைக்கு 150 கி.மீ வேகத்தில், பெருங்கூட்டமாக இவை பயணிக்கின்றன. இந்த வெட்டுக்கிளிகளின் கூட்டம், சிலவேளைகளில் பல கி.மீ பரப்பளவைக் கொண்டதாகவும் இருப்பதுண்டு. இவ்வாறான வெட்டுக்கிளிகள் தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்குப் படையெடுத்துள்ளன. இலங்கையிலும் ஆங்காங்கே, வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாகச் செய்திகள் வரத் தொடங்கி இருக்கின்றன. குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களில், வெட்டுக்கிளிகளால் பயிர்கள் நாசம் செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்ற போதும், அவை ஆபிரிக்க வெட்டுக்கிளிகள் அல்ல என்றும் உள்ளூர் இனங்களே என்றும் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் கூறியிருக்கிறார். எவ்வாறாயினும், இலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருவதாக, அவர் தகவல் வெளியிட்டிருக்கிறார். வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அதற்குத் தேவையான இரசாயனங்களை இனங்காணவும் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவால், கட்டுப்படுத்த முடியாது போனால், படையினரின் உதவியும் பெறப்படும் என, விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வீரகோன் கூறியிருக்கிறார். வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு நிகழ்ந்தால், அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், படையினரை ஈடுபடுத்துவதற்கான எத்தனங்களில், அரசாங்கம் இறங்கியிருக்கிறது என்பதையே, அவரது இந்தக் கருத்து வெளிக்காட்டுகிறது. விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், படையினரை இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடிய அதிகாரம் படைத்தவரோ, அதுபற்றித் தீர்மானிக்கக் கூடியவரோ அல்ல. இந்த நிலையில், அவரிடம் இருந்து வெளிப்பட்டிருக்கின்ற இந்தக் கருத்தை, இரண்டு வகையாக நோக்கலாம். ஒன்று, அரசாங்க மேலிடத்தில் இருந்து, இவ்வாறான நிலை ஏற்பட்டால், படையினரின் உதவியைப் பெறலாம்; அல்லது, பெறவேண்டும் என்ற அறிவுறுத்தல் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். அதன்படி, நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், பாதுகாப்புப் படையினரின் உதவி பெறப்படும் என்று, விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் கூறியிருக்கலாம். இரண்டாவது, எந்தத் துறையை எடுத்தாலும், படையினரை ஈடுபடுத்துவது ஒரு நோயாக மாறி விட்ட நிலையில், அரச அதிகாரிகள் மட்டத்துக்கு, இது பழக்கப்பட்டு விட்ட ஒன்றாக மாறியிருக்கலாம். அதன் அடிப்படையில் கூட அவர், இவ்வாறு கூறியிருக்க வாய்ப்புகள் உள்ளன. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்காகக் கட்டியெழுப்பப்பட்ட இராணுவக் கட்டமைப்பை, இப்போது எதற்கெல்லாம் பயன்படுத்துவது என்ற வரையறையே இல்லாமல் போய் விட்டது. போர் முடிவடைந்த பின்னர், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், இராணுவத்தினர் கொழும்பில், கால்வாய் சுத்திகரிப்புப் பணிகளில் தொடங்கி, ரதுபஸ்வெலவில் குடிநீருக்காகப் போராட்டம் நடத்தியவர்களை அடங்குவது வரையான பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர். இதனால், இராணுவத்தினருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டதுடன், அவர்களின் மதிப்பும் குறைக்கப்பட்டதாக, தற்போதைய எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர். இவ்வாறான நிலையில், தற்போதைய அரசாங்கம், மீண்டும் இராணுவத்தினரை டெங்கு ஒழிப்பு, கொரோனா வைரஸ் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு என்று களமிறக்கி, கடைசியாக அரிசி பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கிப் பார்த்து விட்டது. நுகர்வோர் அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சாந்த திஸநாயக்க, அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கையாண்ட தவறான அணுகுமுறைகளால், அரிசி விலையை அரசாங்கமே உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது, வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் இராணுவத்தை இறக்குவதற்கும் அரசாங்கம் தயாராகிறது; அதற்கேற்ற மனநிலைக்கு, அதிகாரிகளைக் கொண்டு வந்திருக்கிறது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில், ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்தும் போது, கொஞ்சம் திறமையாகச் செயற்பட்டால், அத்தனை வேலைகளிலும் அவரையே ஈடுபடுத்தும் ஒரு வழக்கம் இருக்கிறது. துறைசார் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உரிய ஊதியம், வசதிகளைச் செய்து கொடுப்பதை விட, குறைந்த செலவில் அந்த வேலையை முடிக்கலாம் என்றே அவர்கள் பார்ப்பார்கள். போரில் திறமையாகச் செயற்பட்டனர் என்பதற்காக, இராணுவத்தினரையே எல்லாப் பணிகளிலும் ஈடுபடுத்தி, வெற்றி காணலாம் என்ற மனோநிலையும் அது போன்றது தான். எல்லா மட்டங்களிலும், இராணுவத் தலையீடுகளை மேற்கொள்ள அனுமதிப்பதன் மூலம், அரச அதிகார மட்டங்களும் நாட்டு மக்களும், அதற்குப் பழக்கப்பட்டுப் போன ஒன்றாக மாற்றப்பட்டு விட்டனர். கடந்த வாரம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில், ஓர் ஊடக மாநாடு நடத்தப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாக அண்மையில் நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, அந்தச் செய்தியாளர் சந்திப்பில், இராணுவச் சீருடையிலேயே பங்கேற்றிருந்தார். ஆனால், அவர் சேவையில் உள்ள இராணுவ அதிகாரி அல்ல; ஓய்வுபெற்று விட்ட அவர், இராணுவச் சீருடையில் அந்த ஓடக சந்திப்பில் பங்கேற்றிருந்தார். சேவையில் உள்ள ஓர் இராணுவ அதிகாரி, சீருடையுடன் பங்கேற்பதற்கும், ஓய்வுபெற்ற ஒருவர் சீருடையுடன், சிவில் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. இது, தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும், ஒருவித உளவியல் நிகழ்ச்சி நிரலாகவும் கூட இருக்கக் கூடும். ஆரம்பத்தில், கொரோனா வைரஸை ஒழிப்போம் என்று சூளுரைத்தவர்கள் எல்லோருமே, ஒரு கட்டத்துக்கு மேல், அது சாத்தியமற்றது என்று உணர்ந்தவுடன், ''கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்'' என்று, ஆலோசனை கூறத் தொடங்கினார்கள். அதுபோலத் தான், சிவில் அதிகாரிகளைச் சீருடையினருடன் இணைந்து பணியாற்றப் பழகிக் கொள்ளுங்கள் என்று கூறும் வகையில் தான், சிவில் பணிகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இராணுவ ஆட்சி பற்றிய குற்றச்சாட்டுகள், வலுவாகக் கூறப்பட்டு வருகின்ற போதும், அரசாங்கம் எல்லாத் துறைகளிலும் இராணுவத்தை ஈடுபடுத்துவதில், உறுதியாக இருக்கிறது. அதற்கேற்ற வகையிலேயே, முக்கியமான துறைகளை இலக்கு வைத்து, சீருடை மயப்படுத்தும் போக்குத் தீவிரம் பெற்று வருகிறது. அண்மையில், விவசாய மற்றும் மகாவலி அமைச்சின் செயலாளராக, மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டுள்ள சூழலில், அவருக்குக் கீழ் உள்ள விவசாயத் திணைக்களப் பணிப்பாளரிடம் இருந்து, வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் படையினரின் உதவியைப் பெறப்படும் என்ற கருத்து வெளியாகியிருப்பது ஆச்சரியமில்லை. ஆனால், இது ஓர் ஆபத்தான போக்கு என்பதில் சந்தேகமில்லை. சீனா, வடகொரியா போன்ற நாடுகளில் தான், நாட்டில் எல்லாத் துறைகளிலும், இராணுவ ஆதிக்கம் இருக்கும். அரசியல் தொடக்கம், அடி மட்டம் வரை அங்கு இராணுவ செல்வாக்குப் பரவியிருக்கும். அதுபோன்ற நிலைக்கு, இலங்கையும் மிகவேகமாக மாறி வருகிறது. அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில், முன்னாள் இராணுவ அதிகாரியான லெப்.கேணல் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையானது, கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர், தனக்கு நெருக்கமான, தமக்கு நம்பிக்கையானவர்களின் மூலம், நாட்டை நிர்வகிக்க விரும்புகிறார். தனக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என்று நம்புகிறவர்களை மாத்திரம், அதிகாரத்தில் அமர்த்துகிறார். இதன் மூலம், இராணுவ அதிகாரத்தின் மூலம் ஆட்சி நடத்தும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற பெயரை, அவர் பெறப்போவது, தவிர்க்க முடியாததாகி வருகிறது. பாகிஸ்தானின் முன்னாள் ஜெனரல்களான ஷியா உல் ஹக், பர்வேஸ் முஷரப் போன்றவர்களும் கூட, மக்களால் தெரிவு செய்யப்பட்டு, இராணுவ ஆட்சியை நடத்தியிருந்தனர். ஒரே வேறுபாடு, அவர்கள் இராணுவப் புரட்சியால் ஆட்சியைப் பிடித்து, பின்னர் தேர்தலின் மூலம் தம்மை அதிகாரத்தில் தக்க வைத்துக் கொண்டனர். ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாநாயக ரீதியாக ஆட்சியைப் பிடித்து, இராணுவ ஆட்சி மூலம் நாட்டை நிர்வகிக்க முனைகிறார். இந்த இரண்டுக்கும் இடையில், பெரிதாக எந்த வேறுபாட்டையும் உணரமுடியாது.   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/படைமய-சூழலுக்குப்-பழக்கப்படுதல்/91-251449
  • சமகால அரசியல் சமதளம் இலட்சுமணன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அரசியல் சிக்கல் நிலைமைகள் தொடர்பாக பொருளாதார ரீதியில் நாடு எதிர்பாராத சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அரசாங்கம் இந்த சிக்கல் நிலைமைகளில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய தேவை  உள்ளதை உணர்ந்துள்ளது. இதற்குக் காரணம் தனது அரசியல் அதிகார பலத்தின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட வேண்டியது அதற்கு உள்ளது. அந்த வகையில் தற்போதைய சூழலில் கொரோனா தொற்றை எதிர்கொண்ட விதம் தொடர்பான மக்களின் வரவேற்பும் கொரோனா நிவாரணம் தொடர்பான மக்களின் அதிருப்தியையும் தற்போதைய அரசு சம்பாதித்திருக்கிறது. இதை விட பொருளாதார ரீதியில் நொந்துபோயுள்ள பாமர மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பு என்பது அரசு மீதான மறுதலை விமர்சனப் பார்வையைத் தோற்றுவித்துள்ளது.  தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு தேர்தல் தொடர்பாக அடிப்படை உரிமை மனுக்களை நிராகரித்து அரசுக்குச் சார்பாக முடிந்துள்ளது. அரசு தேர்தலுக்குத் தற்போதைய சூழலில் தயாராக உள்ளபோதும் எதிர்க்கட்சிகள் தயாராயில்லை. இதற்கு காரணம் பிரதான எதிர்க்கட்சியான ஐதேக வின் பிளவும், தேர்தலை எதிர்கொள்ள  ஆயத்தமற்ற நிலையும் தம்மை பலப்படுத்திக்  கொள்வதற்கான சூழ்நிலையும் கொண்டிருக்கவில்லை.   ஜனாதிபதித் தேர்தலின் பின் ஏனைய கட்சிகளால் முன்னெடுக்க முடியாத கட்சிகளுக்கிடையிலான குழப்பங்களும், உள்முரண்பாடுகளும், குத்துவெட்டுக்களும் அரங்கேறியுள்ளன. இத்தகைய  சூழ்நிலையை அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்த முனைந்துள்ளது. அதன் வெளிப்பாடே உடனடி தேர்தலுக்கான அழைப்பின் பிரதான அரசியல் நோக்கமாக இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு தயாரில்லாத சூழலில் கொரோனாவைக் காரணம் காட்டித் தேர்தலில் போடுவதுடன் இடைநடுவில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டுவதன் மூலம் தாங்கள் இழந்த ஆட்சி அதிகாரத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் தக்கவைக்கவும் மேலும் தொடரவும் விரும்பியது. இவற்றை விட 62க்கும்   மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தமது ஓய்வூதியத்தை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்பதும் பிரதான காரணங்களாக இருந்தன. எது எப்படியோ நேற்று வெளிடப்பட்ட  உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய பொறுப்புக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தீர்ப்பு வழங்கப்பட்ட பின் மிகக் குறைந்தது 35 நாள்கள் பிரசாரத்திற்கான நாள்களாக வழங்கப்படவண்டும். தேர்தல் ஏற்பாட்டுக்கும் நடைமுறைப்படுத்தலுக்குமாக மேலதிகமாக மூன்று வாரங்களாவது தேர்தல் திணைக்களத்திற்கு தேவை. இந்த வகையில் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 2 ஆம் வாரத்தில் அல்லது மூன்றாம் வாரத்தில்தான் நடத்த  கூடிய சூழல் உள்ளது. எனவே தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் இம்முறை கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் வாக்களிப்பு நிலையங்களை ஏற்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு விசேட தபால் வாக்குகளாகவோ  அல்லது விசேட கணினி முறைப்படுத்தப்பட்ட வாக்களிப்பு நடைமுறைகளைளோ அமுல்படுத்தப்படவேண்டியுள்ளது. ஏனெனில் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களில் இருப்பதால் இதற்கான நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை தேர்தல் ஆணையகம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு  ஆலோசனைகளை பல்வேறு மட்டங்களில் முன்னெடு;த்த வருகிறது. இத்தகையதொரு சூழலில் எதிர்பாராத வகையில் இலங்கைத் தோட்ட தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இழப்பு என்பது மலையகத்திற்கும், அரசின் ஆதரவு பலம் என்ற வகையில் அரசிற்கும் தேர்தல் காலத்தில் பேரிழப்பாகும். எனவே அந்த இழப்பின் வெற்றிடத்தை நிரப்புவதற்கும், சரியப்போகும் வாக்கு வங்கியை நிமிர்த்தவும் அவரது இழப்பின் அனுதாப அலையைத் தக்கவைத்துக் கொள்ளவும் அரசு மறைந்த அமைச்சர் ஆறுமுகனின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பதாக உறுதியளத்துள்ளது. அதேவேளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் ஆறுமுகனின் வெற்றிடத்திற்கு உடனடியாக அவரது மகன் ஜீவன் தொண்டமானை தேர்தலுக்கு நுவரெலியா தொகுதி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இந்த வகையில் ஆறுமுகன் அணியில் ஜீவன் தொண்டமான் வெல்வது உறுதி. அதற்கு அவரது தந்தையின் இழப்பின் அனுதாப அலை பெரும் பலமாக அமையும். இத்தகைய சூழலில் வடக்கு கிழக்குப் பகுதியில் கொரோனா இருந்ததோ இல்லையோ தேர்தலில் குதித்துள்ள வேட்பாளர்கள் முகநூல் மூலமான பலத்த பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இன்னும் சிலர் கொரோனா நிவாரண பொதி என்ற போர்வையில் ரூபாய் 1000, 2000 பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்கி தமது அரசியல் வங்குரோத்து தனத்தையும், கொரோனா அபிமானத்தையும் காட்டிவருகின்றனர். இவற்றைவிட இப்பொழுதெல்லாம் கொரோனாத் தடை இருக்கிறதோ இல்லையோ மரண வீட்டுக்கு நான் முந்தி நீ முந்தி என்று வேட்பாளர்கள் ஆஜராகின்றனர். மரண வீட்டுக்கு செல்வதிலும் போட்டி நிலவுகிறது. ஒருவர் ஒருவருக்குத் தெரியாமல் பயணிப்பதும் கண்டவுடன் முகஸ்துதி செல்வதும் மரணச்சடங்கு வீட்டில் நிகழும் விரும்பவொண்ணா நாடகங்களாகும். மேலும் இறந்த வீட்டுக்காரர் யார், எவர் என்பதுகூட இந்த வேட்பாளர்களுக்குத் தெரியாது. முகமறியா புது நபர்களாகவே மேற்படி மரண வீட்டுக்காரர் இவர்களைப் பார்க்கின்றனர். ஆனால் இந்த அரசியல் வேட்பாளர்களோ தங்கள் நீண்ட நாள் பழகியவர்கள் போல நாடகம் ஆடுகின்றனர். உண்மையில் தமக்கு வாக்களித்த பெருமகனுக்கு வேட்பாளர் என்ற போர்வையில் அவரது இறப்பின் இறுதிக் கிரியையில் கலந்து நன்றியோடு அஞ்சலி செலுத்த வேண்டிய இவர்கள், இவ் மரண வீடுகளை நாடி வருவதோ  அவர்கள் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக அல்ல. மாறாக தமது வரவைப் பதிவு செய்வதன் மூலம் அம் மரண வீட்டில் தேர்தல் பிரச்சார வாக்கு வேட்டையில் ஈடுபடுவதற்கே என்பது தெளிவான விடையமாக இப்போது திருவாளர் பொதுசனங்களால் முன் வைக்கப்படும் விமர்சனமாகும். இது இவ்வாறு இருக்க இம்முறை கிழக்கு நாடாளுமன்ற தேர்தல் களம் என்றுமில்லாதளவு சூடுபிடித்துள்ளது. குறிப்பாக திருமலை, அம்பாறை மாவட்டங்களைவிட மட்டக்களப்பு மாவட்டம் இதில் முன்னணி வகிக்கிறது. இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, தமிழ் தேசியக் கட்சிதமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, தமிழ் தேசிய முன்னணி, பொது ஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, முஸ்லிம் கட்சிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, சுயேச்சைக் குழுக்கள் எனக் கட்சிகளில் பல பிரபலங்கள் மட்டக்களப்பு தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். மட்டக்களப்பில் தமிழ் வாக்குகளைப் பிரிக்காமல் கிழக்கு தமிழர்கள் ஓரணியில் திரளவேண்டுமென ஊடகப்பிரசாரங்களை மேற்கொண்ட கிழக்குத் தமிழர் ஒன்றியங்களின் முக்கியஸ்தர்கள் காணாமல் போய்விட்டனர். மட்டக்களப்பின் தமிழர் ஒற்றுமையை பல்வேறு கோணங்களில் பல்வேறு கட்சிகாகவும்  இருந்து கொண்டு  கட்சிகளின் முரண்பாடுகளும் தனிநபர் கோபதாபங்கள்  காரணமாகவும் அரசியல் தெரியாத நாடாளுமன்றக் கனவுதாரிகளால்  சின்னாபின்னப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான இத்தனை கட்சிகளின் தோற்றம் என்பதும், போட்டியிடும் வேட்பாளர் என்பதும் தமது நாடாளுமன்ற இலட்சியம் ஒன்றை மாத்திரமே கனவாகக் கொண்டது. இந்த வேட்கை காரணமாக இவர்கள் ஒன்றுபடாமல் சிதறுண்டுள்ளதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்பது இலகுவாகியுள்ளது.  ஏனெனில் இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாத்திரமே பொது எதிரியாக கொண்டுள்ளனரர். எனவே பொது எதிரிக்கு எதிராக இவர்கள் ஒன்றிணையாமல் மோதுவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகள், அதிருப்தியாளர் வாக்குகள்  ஒன்றிணையாமல் சிதறுண்டு போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான காட்சிகள் எவ்வளவுதான் பிரச்சாரத்தை முன்னெடுத்தாலும் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஆசனத்தையே பெற முடியும். இதற்கு 35 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வாக்குகளை இக்காட்சிகளில் ஒன்று பெறுநும் பட்சத்திலேயே இது சாத்தியமாகும். கூட்டமைப்புக்கு எதிரான சக்திகள் இந்த 50 ஆயிரம் வாக்குகளையே தமக்குள் பங்கு போட்டுச் சிதறடிக்க போகின்றனர். இதேவேளை முஸ்லிம் கட்சிகள் குறைந்தது ஒரு ஆசனத்தை பெறுவது என்பது உறுதியான விடயம். ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, ரிதிதென்னை பிரதேசங்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். அவர்களில் 74,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். தமிழர்களைப் பொறுத்தவரையில் கல்குடாவில் 94 ஆயிரம், மட்டக்களப்பில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் வாக்காளர்கள, பட்டிருப்பில்; 99ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.  இந்த வகையில் அளிக்கப்படும் வாக்குகள் சரித்திரத்தில் கூட்டமைப்பு 1லட்சத்து 12ஆயிரம் தொடக்கம் ஒரு லட்சத்து 25ஆயிரம், 1லட்டத்து 40 ஆயிரம் வாக்குகளை நாடாளுமன்;ற வரலாற்றில் பெற்றுள்ளது. அந்த வகையில் கிழக்கில் இவர்களுக்கு எதிர்ப்பு உருவாகி உள்ளது என்ற கோட்பாட்டில் அவர்கள் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகளை இருந்தாலும் அக்காட்சி தமிழ் மக்களின் உணர்வு நிலை சார் காட்சி என்பதால் குறைந்தது 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறக் கூடிய சூழல் உள்ள்து. இந்த வகையில் அக்கட்சி அதிகூடிய வாக்குகள் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் குறைந்த இரண்டு ஆசனங்களையும் ஒரு போனஸ் ஆசனத்தையும் பெறும் . இதுவே யதார்த்த நிலை இது தவறினால் முஸ்லிம்கள் இரண்டு ஆசனங்களைப் பெறுவது உறுதியாகும். இந்த வகையில் இன்றைய இலங்கைத் தேர்தல் களம் அதன் அரசியல் சமகாலத்தில் அரசியல், பொருளாதார, கட்சி நிலவரங்களின் சம தளத்தினைப்  படம்பிடித்துக் காட்டுகிறது.   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சமகால-அரசியல்-சமதளம்/91-251446