Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலமாக யாழ் கருத்துக்களத்தில் தனி மனித தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றன. ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்து இந்த கொரனா காலத்தில் மன அழுத்தத்தை போக்குகின்றார்கள் போல் உள்ளது.

நிர்வாகத்தில் உள்ளவர்களே கருத்துக்கள் பதியும்போது உணர்ச்சிவசப்படுகின்றார்கள். கருத்துக்கள விதிமுறைகள் சும்மா ஒரு சம்பிராயத்துக்கு மட்டுமே உள்ளனவோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

கருத்துக்களை அவை விதிமுறைகள் மீறாமல் எழுதப்பட்டு உள்ளனவா என்பதை கண்காணிக்க நேரப்பற்றாக்குறை என்றால் நிர்வாகத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். 

சிலரின் தொடர்ச்சியான பல பதிவுகளை பார்க்கும்போது இவர்கள் எதை எழுதினாலும் பரவாயில்லை என்று நிர்வாகமே கைவிட்டுவிட்டது போல் தோன்றுகின்றது.

பெரும்பாலான திரிகளில் தலைப்புடன் சம்மந்தமேயில்லாமல் கருத்தாளர் ஒருவரை இழிவுபடுத்தவேண்டும் என்பதை நோக்காகக்கொண்டு பதிவுகளை இடுகை செய்கின்றார்கள்.

கருத்துக்களத்தின் எல்லா பகுதிகளிலும் எல்லோரும் எழுதுவதற்கான அனுமதி அவர்கள் எப்படி பண்பாக சக கருத்தாளர்களுடன் கருத்துக்களை பகிர்கின்றார்கள் என்பதன் அடிப்படையில் கொடுப்பட்டால் உகந்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ராசவன்னியன்

எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

ராசவன்னியன்

ஒளிப்படங்களை யாழில் நேரடியாக தரவேற்றம் செய்ய இயலாது..   பல நிமிடங்கள் ஓடும் ஒளிப்படங்களென்றால் யூடுயூப் (Youtube) தான் சிறந்தது. அதற்கு யூடுயூப் அல்லது ஜி மெயிலில் (Gmail) சொந்தமாக க|ணக்கு வைத்திர

மோகன்

கடந்த 18 மணித்தியலாங்களாக யாழ் இணையத்தின் இணைய வழங்குநர்களின் datacenterல் ஏற்பட்ட தவறினால் யாழ் இணையம் முற்றாக இயங்கவில்லை. ஏற்பட்ட தவறு இன்னமும் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை என்பதல் அடுத்து வரும்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

அண்மைக்காலமாக யாழ் கருத்துக்களத்தில் தனி மனித தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றன. ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்து இந்த கொரனா காலத்தில் மன அழுத்தத்தை போக்குகின்றார்கள் போல் உள்ளது.

நிர்வாகத்தில் உள்ளவர்களே கருத்துக்கள் பதியும்போது உணர்ச்சிவசப்படுகின்றார்கள். கருத்துக்கள விதிமுறைகள் சும்மா ஒரு சம்பிராயத்துக்கு மட்டுமே உள்ளனவோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

கருத்துக்களை அவை விதிமுறைகள் மீறாமல் எழுதப்பட்டு உள்ளனவா என்பதை கண்காணிக்க நேரப்பற்றாக்குறை என்றால் நிர்வாகத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். 

சிலரின் தொடர்ச்சியான பல பதிவுகளை பார்க்கும்போது இவர்கள் எதை எழுதினாலும் பரவாயில்லை என்று நிர்வாகமே கைவிட்டுவிட்டது போல் தோன்றுகின்றது.

பெரும்பாலான திரிகளில் தலைப்புடன் சம்மந்தமேயில்லாமல் கருத்தாளர் ஒருவரை இழிவுபடுத்தவேண்டும் என்பதை நோக்காகக்கொண்டு பதிவுகளை இடுகை செய்கின்றார்கள்.

கருத்துக்களத்தின் எல்லா பகுதிகளிலும் எல்லோரும் எழுதுவதற்கான அனுமதி அவர்கள் எப்படி பண்பாக சக கருத்தாளர்களுடன் கருத்துக்களை பகிர்கின்றார்கள் என்பதன் அடிப்படையில் கொடுப்பட்டால் உகந்தது.

நன்றி அய்யா, உங்கள் கருத்துக்களுக்கு.

ஆனாலும், உங்கள் பதிவுகளின் தொகையே 233. 

இங்கே இருக்கும் பல கள உறுப்பினர்களின் தொகை 1000 த்துக்கு மேலே.

எனவே, உங்கள் கருத்துக்கள் அனுபவபூர்வமானதாக இருப்பதாக தெரியவில்லையே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உங்கள் பார்வை மிகவும் தவறானது.

எத்தனை கருத்துக்கள் எழுதப்படுகின்றன என்பதற்கும் தனி மனித தாக்குதல்கள் செய்யாமல் எல்லோருடனும் பண்பாக உரையாடல் செய்வதற்கும் என்ன சம்மந்தம்?

என்னால் நீங்கள் குறிப்பிடும் ஆயிரம் கருத்துக்களை பத்து நாட்களில் இடுகையிட முடியும். 

நான்கு ஐந்து மணித்தியாலங்களில் இரு நூற்று ஐம்பது கருத்துக்களை என்னால் இலகுவாக எட்ட முடியும். 

இதே மாதிரி ஓர் தளத்தை உருவாக்கி  இரண்டு நாட்களில் இயங்கு நிலைக்கு கொண்டு வரக்கூடிய அனுபவம், அறிவு எனக்கு உள்ளது. 

சமூக அக்கறை உள்ளதால் யாழ் கருத்துக்களத்துடன் தொடர்பில் உள்ளேன். 

Edited by நியாயத்தை கதைப்போம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

அண்மைக்காலமாக யாழ் கருத்துக்களத்தில் தனி மனித தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றன. ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்து இந்த கொரனா காலத்தில் மன அழுத்தத்தை போக்குகின்றார்கள் போல் உள்ளது.

இதுவும் யாழ் களம் வழங்கும் சேவைதானே.😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2021 at 14:24, கிருபன் said:

இதுவும் யாழ் களம் வழங்கும் சேவைதானே.😉

ஓமோம், அம்பலத்தார் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்திலுள்ள உறுப்பினர்கள் மீதான தனி மனித தாக்குதல்களை மட்டும்தான் தவிர்க்க வேண்டுமா அல்லது எல்லோர் மீதான தனிமனித தாக்குதல்களும் தவிர்க்கப்பட வேண்டுமா..?

எல்லோர் மீதான தனிமனித தாக்குதல்களும் தவிர்க்கப்பட வேண்டுமென்றால் / தவிர்க்கப்பட்டால் கருத்துப் பரிமாற்றங்கள் ஆரோக்கியமாக அமையும். 

உ+ம்

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை விமர்சிக்காது சீமானை விமர்சித்தல். 

விடுதலைப் போராட்டத்தில் விடப்பட்ட தவறுகளை ஆய்வுக்குட்படுத்தும் போது போராளிகளை(சகல) தியாகங்களை கொச்சைப்படுத்துதல்.

தனிப்பட்ட குரோதங்களை வெளிப்படுத்தும்போது எதிர்க்கருத்துக்கள் தவிர்க்க முடியாதவை.

இதற்கு நானும் விதிவிலக்கல்ல. 

👍

On 2/5/2021 at 09:24, கிருபன் said:

இதுவும் யாழ் களம் வழங்கும் சேவைதானே.😉

ஒருவிதத்தில் இதுவும் உண்மைதான்

😂

Link to comment
Share on other sites

யாழ்கள கருத்தாடல்கள் விதிமுறைகள்  தெளிவாகவே உள்ளன.  விதிமுறைகளை உள்வாங்கிக் கருத்துக்கள் வைப்பதும், களவிதிகளை மீறும் கருத்துக்களை உடனுக்குடன் முறைப்பாட்டு (Report) முறை மூலம் அறியத்தருவதும் கருத்துக்களத்தின் தரத்தைப் பேண உதவும்.

மட்டுறுத்துனர்கள் சகல கருத்துக்களையும் பார்த்து மட்டுறுத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமில்லை. அதனால் களவிதிகளை மீறும் சில கருத்துக்கள் கருத்துக்களத்தில் காணப்படலாம். இவற்றினை அகற்ற கள உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

மேலும், கள உறுப்பினர்களில் சிலர் கருத்துக்கள விதிமுறைகளை சட்டைசெய்யாதும், விதிமுறைகளை மீறும் வகையில் தந்திரமாக வளைத்தும் கருத்துக்கள் வைப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, கருத்துக்கள விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீது  மட்டுறுத்துதலும், பயனர்கள்/கள உறுப்பினர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகளும், எ.கா. நிரந்தர மட்டுறுத்துனர் பார்வையில் விடப்படுவது, எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

மேலே உள்ள கருத்துக்கள் தொடர்பான சில விதிகள்:

  • கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் சமூகப் பொறுப்புடனும் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • தனிநபர்களையும் அமைப்புக்களையும் தாக்கும், திட்டித் தூற்றும், புண்படுத்தும், குந்தகம் விளைவிக்கும் பாதகமான கருத்துக்கள்/பதிவுகள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • நாடுகளின் நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களையும் (உதாரணம்: சனாதிபதி, பிரதமர், மந்திரிகள்), சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்களையும், உயிரோடு இருக்கும்/மறைந்த சமூகத் தலைவர்களையும், கட்சித் தலைவர்களையும், கலைஞர்களையும் (சினிமாத்துறை உள்ளடங்கலாக) ஒருமையில் விளித்தலும், அவதூறான சொற்களால் இகழ்தலும், இழிவுபடுத்தும் காணொளிகளும், மீமி படங்களும், அசைபடங்களும், போலியாக உருவாக்கப்பட்ட படங்களும், சமூகவலை இணைப்புக்களும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

யாழ்கள விதிகள்:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமனித தாக்குதல் நடத்தப்படுவதாக இங்கே முறையீடு செய்யப்பட்டதை பார்க்கும்போது 

குற்றம் செய்யாதவர்கள் கல்லை எறிவதில்லை என்பது தெரியவருவது எனக்கு மட்டும் தானா!

Link to comment
Share on other sites

On 3/1/2021 at 03:53, மோகன் said:

நீண்ட காலத்திற்கு களத்தில் கருத்துக்கள் வைக்காத ஒருவர் பார்வையாளர் என்ற பிரிவுக்கு தானியங்கி நகர்த்திவிடுகின்றது. மீண்டும் அவர்கள் பதிவுகளை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு உறுப்பினர்கள் என்ற உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த இரண்டாவது பொறிமுறை சரியாக இயங்காமையினாலேயே உறுப்பினர்கள் திருத்தங்களை மேற்கொள்ளவோ புள்ளிகள் இடவே முடியாதுள்ளது.

மீண்டும் இக்குறை எனக்கு ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை நிவர்த்தி செய்வீர்களா மோகன் அண்ணா / நிர்வாகம்.

நன்றி 

Link to comment
Share on other sites

1 hour ago, மல்லிகை வாசம் said:

மீண்டும் இக்குறை எனக்கு ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை நிவர்த்தி செய்வீர்களா மோகன் அண்ணா / நிர்வாகம்.

நன்றி 

சரி செய்யப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வந்து இப்போ யாழில்  எழுதியதை பிழை திருத்த முடியாது இருக்கிறது..திருத்தி தாங்கள் என்று கேட்டு வர இல்லை.. மற்றும் நிறைய தவறுகள் வருகிறது.கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிமைலி போட்டு எண்ட பாட்டுக்கு இருந்த என்னை,அதை வெட்டிய மட்டுறுத்துனர் தான் பொறுப்பு..அது என்ன தவறான முக குறியா.

நான் நெடுகிலும் ஒன்றும் கேட்பதில்லை.அதிகம் வேறு தளங்களுக்கும் போவதில்லை..இருக்கிறவர்களை ஏதாவது செய்து துரத்தி விட்டு.வராதவர்களை தேடுங்கள்.. . எனக்கு ஒன்றுமே எழுத தோண வில்லை.நன்றி👋

Link to comment
Share on other sites

13 hours ago, யாயினி said:

யாயினி, அவசரப் படாதீர்கள். பல காலம் வராமல் இருந்தால் பார்வையாளர் என்ற நிலைக்கு நகர்த்தப் பட்டு, மீள வரும் போது தானே உறுப்பினராக்கும் என்கிறார்கள். அப்படித் தானியங்கியாக நடப்பதில்லைப் போல இருக்கு. இங்கே வந்து சொன்னால் தான் சரி செய்கிறார்கள். 

இதுக்கெல்லாம் கோபமேன்?  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி அண்மையில் பதிவுகள் இட்டும் பார்வையாளர் பகுதியில் உள்ளார் என்று இங்கு ஏதோ தவறு நடந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, யாயினி said:

எனக்கு வந்து இப்போ யாழில்  எழுதியதை பிழை திருத்த முடியாது இருக்கிறது..திருத்தி தாங்கள் என்று கேட்டு வர இல்லை.. மற்றும் நிறைய தவறுகள் வருகிறது.கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிமைலி போட்டு எண்ட பாட்டுக்கு இருந்த என்னை,அதை வெட்டிய மட்டுறுத்துனர் தான் பொறுப்பு..அது என்ன தவறான முக குறியா.

தனியா ஒன்றும் எழுதாமல் சிமைலி மாத்திரம் போடுவது விரும்பத்தக்கது அல்ல என்று போட்டு இருந்தவை போல் உள்ளது .

  • Thanks 1
Link to comment
Share on other sites

16 hours ago, யாயினி said:

எனக்கு வந்து இப்போ யாழில்  எழுதியதை பிழை திருத்த முடியாது இருக்கிறது..திருத்தி தாங்கள் என்று கேட்டு வர இல்லை.. மற்றும் நிறைய தவறுகள் வருகிறது.கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிமைலி போட்டு எண்ட பாட்டுக்கு இருந்த என்னை,அதை வெட்டிய மட்டுறுத்துனர் தான் பொறுப்பு..அது என்ன தவறான முக குறியா.

நான் நெடுகிலும் ஒன்றும் கேட்பதில்லை.அதிகம் வேறு தளங்களுக்கும் போவதில்லை..இருக்கிறவர்களை ஏதாவது செய்து துரத்தி விட்டு.வராதவர்களை தேடுங்கள்.. . எனக்கு ஒன்றுமே எழுத தோண வில்லை.நன்றி👋

கருத்துக்கள நிபந்தனையில்

Quote
  • தனியே முகக்குறிகளால் மட்டும் கருத்துக்கள் பதிவதைத் தவிர்த்தல் வேண்டும். எனினும் திண்ணையில் மாத்திரம் இவ்விதிமுறை தளர்த்தப்படுகின்றது.

என்பது உள்ளது. இந்த விதிமுறை நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ளது. இதற்குக் காரணமும் உள்ளது.

நீண்ட காலமாக கருத்துக்களத்திற்கு வராதவர்கள் பார்வையாளர் பகுதிக்கு தானியங்கி நகர்த்திவிடும். மீள வரும் உறுப்பினர் கருத்துக்களை வைக்கும் போது தானியங்கி மீளவும் அவரை கருத்துக்கள உறுப்பினருக்கு நகர்த்த வேண்டும். சில சந்தர்ப்பங்களில் அது சரியாக இயங்கியபோதும் பல சந்தர்ப்பங்களில் இது மாற்றவில்லை. அவ்வாறு மாற்றம் நடைபெறவிடில் உடன் எமக்கு அறியத் தாருங்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
Posted (edited)

எல்லோரும் நலமா? 

அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..!

ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?

சொல்லுங்கள்...!  Admin ..,  சொல்லுங்கள்..!! 

Edited by ராசவன்னியன்
  • Like 10
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2021 at 14:07, மோகன் said:

கருத்துக்கள நிபந்தனையில்

என்பது உள்ளது. இந்த விதிமுறை நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ளது. இதற்குக் காரணமும் உள்ளது.

நீண்ட காலமாக கருத்துக்களத்திற்கு வராதவர்கள் பார்வையாளர் பகுதிக்கு தானியங்கி நகர்த்திவிடும். மீள வரும் உறுப்பினர் கருத்துக்களை வைக்கும் போது தானியங்கி மீளவும் அவரை கருத்துக்கள உறுப்பினருக்கு நகர்த்த வேண்டும். சில சந்தர்ப்பங்களில் அது சரியாக இயங்கியபோதும் பல சந்தர்ப்பங்களில் இது மாற்றவில்லை. அவ்வாறு மாற்றம் நடைபெறவிடில் உடன் எமக்கு அறியத் தாருங்கள்

மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்சசி 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் காண்பது மிக்க மகிழ்ச்சி வன்னியன்......!   🌹

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?

சொல்லுங்கள்...!  Admin ..,  சொல்லுங்கள்..!! 

எனக்கும் உந்த வயதுபற்றி ஐயம் உண்டு. இப்போதெல்லாம் ஒரு புதிய பதிவைப் பதிந்து அனுப்பினால் அது இரண்டுதரம் பதிவாகி வெளிவருகிறது.🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

எல்லோரும் நலமா? 

சார்! வந்துட்டீங்களா? துபாய் கரண்ட் கனெக்சன் எல்லாம் ஓகேயா? 😁

கண்டதில் பெரிய சந்தோசம். 🙏🏽

  • Thanks 1
Link to comment
Share on other sites

2 minutes ago, குமாரசாமி said:

சார்! வந்துட்டீங்களா? துபாய் கரண்ட் கனெக்சன் எல்லாம் ஓகேயா? 😁

கண்டதில் பெரிய சந்தோசம். 🙏🏽

மிக்க நன்றி..கு.சா.!

அந்த திட்டத்தில் எனது வேலைகள் முடிந்துவிட்டன..
ஆனால் பாருங்கள், அடுத்து இரண்டு பெரிய திட்டங்கள் வந்துவிட்டன.

2 hours ago, நிலாமதி said:

மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்சசி 

மிக்க நன்றி, அக்கா(?)..🤔

2 hours ago, suvy said:

மீண்டும் காண்பது மிக்க மகிழ்ச்சி வன்னியன்......!   🌹

மிக்க நன்றி, சுவி.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ராசவன்னியன் said:

எல்லோரும் நலமா? 

அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..!

ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?

சொல்லுங்கள்...!  Admin ..,  சொல்லுங்கள்..!! 

தோழரை கண்டதில் மகிழ்ச்சி.☺️

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழரை கண்டதில் மகிழ்ச்சி.☺️

தோழர், கரண்டுக்கு கடுக்காய் கொடுத்து வந்திருக்கிறார். 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ராசவன்னியன் said:

எல்லோரும் நலமா? 

அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..!

ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?

சொல்லுங்கள்...!  Admin ..,  சொல்லுங்கள்..!! 

ராஜவன்னியனை.... மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோவிந்தராசு தமிழர் தமிழர்: Govind Raj: Asa Sundar. கேள்வியும் பதிலும்: =================== கேள்வி: கேரளத்தில் வடுகர்கள் உள்ளார்களா??? பதில்: ஆம்... கேள்வி: யார் அவர்கள்??? பதில்: நாயர்கள். கேள்வி: என்னது நாயர்கள் வடுகர்களா??? நான் மலையாளி என்றல்லவா நினைத்தேன்??? பதில்: இப்படித்தான் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்... கேள்வி: தமிழகத்தில் உள்ள அனைத்து இனக்குழுக்களும் கேரளத்தில் உள்ளனவா??? பதில்: ஒரு சிலவற்றைத் தவிர இங்குள்ள அனைத்தும் அங்கே உள்ளன... கேள்வி: அப்படி அங்குள்ள சில தமிழ் இனக்குழுக்களைக் கூறுங்களேன்... ஒரு புரிதலுக்கு... பதில்: புலையர், பறையர், சாம்பவர், ஈழவர், நாடார், செங்குந்தர், கைக்கோளர், கள்ளர், மறவர், வெள்ளாளர், பாணர், முக்குவர், வலைஞர், பரதவர், முகையர், நுழையர், அரையர், திரையர், கரையர், கம்மாளர், நாவிதர், வண்ணார், மூப்பன், மன்னாடி, பள்ளர் போன்றோர்... கேள்வி: வடுகர்களில் நாயர்கள் பேசும் மொழி என்ன??? பதில்: மலையாளம் கேள்வி: பின் அவர்களை ஏன் வடுகர் என்று கூறுகிறீர்கள்? பதில்: ஏனுங்க.. ஒரு மொழியை பேசிவிட்டால் அந்த இனத்தார் ஆகி விடுவார்களா??? நெல்லூரில் வன்னியர் தெலுங்கு பேசுகிறார்கள் அதற்காக அவர்கள் தெலுங்கர்களா??? கேள்வி: நாயர் வடுகர் எனில் எந்தப் பகுதியை சேர்ந்தோர்?? பதில்: அவர்களின் பிறப்பிடம் நேபாளத்தின் தென்மேற்கு பகுதி... அங்கிருந்து அவர்கள் நந்தர் படையில் இடம் பெற்று பின்னர் அவர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் சாதவாகனர் படைகளில் இருந்து க்ஷத்திரிய தகுதி பெற்று பின் தொண்டை நாட்டில் பல்லவர்களின் படையில் இருந்தனர். பின், பல்லவர்களால் ஐயத்தோடு நோக்கப்பட்டு துரத்தியடிக்கப் பட்டனர். இவர்கள் துளு நாட்டின் எல்லையில் சிறு சிறு குழுக்களாக இருந்து பின்னர் வலிமை பெற்று 15 ஆம் நூற்றாண்டில் பெரும் குழப்பத்தில் இருந்த அன்றைய சேரநாட்டை வீழ்த்தி நாயர் அரசை தோற்று வித்தனர்.... கேள்வி: அவர்களின் மொழி??? பதில்: பாகதம், தெலிங்கம், பின்னர் தமிழை சிதைத்து மலையாளம் கேள்வி: இவர்கள் எவ்வளவு காலமாக கேரளத்தில் உள்ளனர்...?? பதில்: தமிழகத்தில் வடுகர்கள் எவ்வளவு காலமாக உள்ளார்களோ அவ்வளவு காலம் அவர்களும் கேரளத்தில் உள்ளனர். என்ன, தமிழக வடுகர்கள் தமிழை ஏற்காது தொடர்ந்து தெலுங்கை பேசுகிறார்கள், அவர்களும் தமிழை சிதைத்து சமஸ்கிருதத்தைக் கலந்து மலையாளமாக்கி பேசி வருகிறார்கள்....நாயர்களின் கட்டடக்கலையும், நய்யார்களின் (நேபாள க்ஷத்திரியர்கள்) கட்டடக்கலையும் ஒன்று.... கேள்வி: இவர்களில் சொல்லத்தக்கவர் யார் யார்??? பதில்: சிவசங்கர மேனன், ஜேஎன்.தீட்சித் என்ற பரமுபிள்ளை, நிருபமா ராவ், விஜய் நம்பியார், பட்டம் தாணுப்பிள்ளை, தகழி சிவசங்கரன் பிள்ளை, டி.கே. நாராயணப் பிள்ளை, சசி தரூர், நடிகர் நம்பியார், எம்.கே.நாராயணன், உன்னி மேனன், முன்னாள் முதல்வர்கள் கருணாகரன், ஈ.கே. நாயனார் எழுத்தாளர் ஜெயமோகன் போன்றோர்.... கேள்வி: இவர்கள் எப்படி கேரளத்தில் ஆதிக்கம் பெற்றார்கள்??? பதில்: எல்லாம் சேரர்களின் அறியாமை தான்... என்னுடைய பதிவுகளை ஒழுங்காக படித்தால் இப்படிக் கேட்க மாட்டீர்கள்... உண்மையான வரலாறு படியுங்கள்... இந்தியர் மேற்கோளுடன் உள்ள வரலாறு ஒரு புரட்டு.... நன்றி..!!! கேரளத்தின் பெரும்பான்மை மக்களான ஈழவர், தீயர், புலையர், நசுரானியர், நாடார், குயவர், வெள்ளாளர், பறையர், மாப்பிள்ளைகள், பள்ளர், வில்லவர், கைக்கோளர், பாணர், கூத்தர், சாம்பவர், கம்மாளர், வள்ளுவர், வேட்டுவர், திரையர், கரையர், நுழையர், வலைஞர், குறும்பர், முக்குவர், முகையர், முகவீரன், கோட்டையர், சேனைத் தலைவர், நகரத்தார், பரதவர், செறுமார், குறவர், மறவர், கள்ளர், வாணியர், ஆயர், இடையர், மூப்பர், நாவிதர், வண்ணார் ஆகிய சமூகங்களை அடக்கி ஆள்வது வடுகமே.... வடுகர்களான நாயர்களே....!!!! நாயர்களின் ஆஸ்தான குருக்கள் நம்பூதிரி பிராமணர்களே.....!!!   https://www.facebook.com/groups/186225785430860/permalink/845200186200080
    • வல்லிபுரக்கோயில் கடல் தீர்த்த திருவிழாவிலை காணாமல் போனவர் மாதிரி இருக்கிறார்... 🤣
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபர் 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.