-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
கண்ணை கவரும் வண்ண பட்டாம்பூச்சிகள் - இனி இவற்றை நம்மால் காண முடியாது ஜார்ஜினா ரன்னார்ட் பிபிசி நியூஸ் காலநிலை & அறிவியல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KEITH WARMINGTON சமீபத்தில், 58 பட்டாம்பூச்சி இனங்களில் 24 இனங்கள் விரைவில் அழிந்துவிடும் என்று பிரிட்டனின் பட்டாம்பூச்சி பாதுகாப்பு அமைப்பின் அறிக்கை எச்சரித்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அமைப்பு கடைசியாக ஒரு சிவப்புப் பட்டியலைத் தொகுத்தது. தற்போது அந்த பட்டியலில் மேலும் ஐந்து இனங்கள் சேர்ந்துள்ளன. வனவிலங்குகளின் வாழ்விடங்களை அழிப்பதன் மூலம் பட்டாம்பூச்சிகளின் அழிவுக்கு மனிதர்கள் காரணமாகிறார்கள் என பட்டாம்பூச்சி பாதுகாப்பு அமைப்பின் அறிவியல் பிரிவு தலைவர் டாக்டர் ரிச்சர்ட் ஃபாக்ஸ் கூறுகிறார். "அவை உண்மையில் அழிக்கப்பட்டு, விவசாயத்தின் போது உழப்பட்டு, உரங்களால் மூடப்பட்டிருக்கலாம்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. தீவிர பாதுகாப்புப் பணிகளால், பல பட்டாம்பூச்சி இனங்கள் விளிம்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் இத்தகைய பட்டாம்பூச்சிகளை இனி பார்க்க முடியாது. வூட் வொய்ட் (Wood White) இந்த சிறிய, மெதுவாக பறக்கும் பட்டாம்பூச்சி தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெரும்பாலான பகுதிகளில் வாழ்ந்து வந்தது. இப்போது அழியும் நிலையில் உள்ளது. இது பெரும்பாலும் மிட்லாண்ட்ஸ் பகுதியில் காணப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்வாலோடெயில்கள் (Swallowtails) கடந்த 2011 ஆம் ஆண்டு முதல், கண்ணை கவரும் இந்த அரிய வகை பட்டாம்பூச்சி அழிவின் விளிம்பில் உள்ளது. இது நார்ஃபோக் பிராட்ஸ் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது. அங்கு இது திஸ்டில்ஸ் என்ற ஒரு வகை முட்செடி உட்பட பூக்களை உண்ணும் உயிரினம். பட மூலாதாரம்,IAIN H LEACH அடோனிஸ் ப்ளூஸ் (Adonis Blues) இப்போது மீண்டும் அழிவின் விளிம்பின் உள்ள பட்டாம்பூச்சி இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த இனம், தெற்கு இங்கிலாந்தில் காணப்படுகிறது. பொதுவாக ஏப்ரல் மற்றும் ஜூலை பிற்பகுதியில் காணப்படுகிறது. பட மூலாதாரம்,IAIN H LEACH லார்ஜ் ஹீத் (Large Heath) காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட பட்டாம்பூச்சிகளில் இதுவும் ஒன்று என்று பட்டாம்பூச்சி பாதுகாப்பு அமைப்பு கூறுகிறது. இங்கிலாந்தின் இந்த இனத்தைச் சேர்ந்த நான்கு பட்டாம்பூச்சி இனங்களும், குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான காலநிலையுடன் வடக்குப் பகுதிகளில் வாழுக்கூடியவை. பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்காட்ச் ஆர்கஸ் (Scotch Argus) இந்த இனத்தின் அழிவுடன் காலநிலை மாற்றத்தின் விளைவுகளும் காணப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு, விஞ்ஞானிகள் இவை அழிவின் விளிம்பில் இருப்பதாக கருதவில்லை. இப்போது அது பாதிக்கப்படக்கூடிய வகையில் பட்டியலிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றப்பட்ட பட்டாம்பூச்சிகள் இது சற்றே நல்ல செய்தி. பட்டாம்பூச்சி உயிரினங்களை விளிம்பிலிருந்து மீட்டெடுக்க பாதுகாப்புப் பணிகள் உதவியுள்ளன. மாறிவரும் நில மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து பட்டாம்பூச்சிகளை பாதுகாப்பதில் இது கவனம் செலுத்துகிறது என்று டாக்டர் ஃபாக்ஸ் விளக்குகிறார். லார்ஜ் ப்ளூ (Large Blue) இந்த சாம்பல் நிறம் கலந்த நீல பட்டாம்பூச்சி 1979 ஆம் ஆண்டு பிரிட்டனில் அழிந்து விட்டது. ஆனால் இப்போது சோமர்செட் பகுதியில் இந்த இனத்தை காணலாம். லார்ஜ் ப்ளூ வகை பட்டாம்பூச்சி, தைம் (Thyme) என்ற ஒரு வகை செடியையும், ஒரு குறிப்பிட்ட வகை எறும்பை மட்டுமே உண்ண கூடிய இனம் என்று டாக்டர் ஃபாக்ஸ் கூறுகிறார். சரியான சுற்றுச்சூழலுடன் புல்வெளிகளை உருவாக்குவதன் மூலம், பாதுகாவலர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் வெற்றிகரமாக இந்த வகை பாட்டாம்பூச்சிகளை உருவாக்கினார்கள் என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,KEITH WARMINGTON பர்ல் பார்டர்ட் ஃப்ரிட்டில்லரி (Pearl-bordered Fritillary) இது 2011 ஆம் ஆண்டிலிருந்து அழிவின் விளிம்பில் உள்ளது. அதன் கம்பளிப்பூச்சிகள் திறந்த, சற்று வெப்பமான வனப்பகுதியை வாழ்விடமாக கொண்டிருக்கும். அவை ஊதா நிற பூக்களை உண்ணும். பட மூலாதாரம்,IAIN H LEACH டிக் ஆஃப் பர்கண்டி (Duke of Burgundy) இப்போது பெரும்பாலும் தெற்கு இங்கிலாந்தில் இவை காணப்படுகின்றன. இவை வாழ, தாவரங்களின் சமநிலையை உருவாக்க சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் கடுமையான முயற்சி செய்கின்றனர். https://www.bbc.com/tamil/science-61620433 -
By சரவிபி ரோசிசந்திரா · பதியப்பட்டது
பெத்த மனம் தூங்கலையே பிள்ளை மனம் ஏங்கலையே பார்த்துப் பல நாளாச்சு பங்குனியும் பிறந்தாச்சு வந்து கூப்பிடுவானு வாசல் வந்து நின்னாச்சு விக்கல் வந்தாலும் நீ தான் நினைக்கிறனு வெசனத்த மறந்து பித்துக் கொள்ளும் தாய்மையடா தாய்ப்பால அதிகம் சுரக்குமுனு பத்தியம் பல இருந்தேன் கசக்கும் வைத்தியத்தை கற்கண்டாய்ச் சுவைச்சேன் பேச்சு வரலையினு மண்சோறு சாப்பிட்டேன் டா காத்துக் கருப்பு தீண்டும்னு அப்பா கருப்பசாமிக்கு நேந்துகிட்டார் பள்ளிக்கூடம் போக காலு வலிக்கும்னு அப்பா பத்துக்காதம் தொலவுத் தூக்கி வருவார் மண்ணுக்குள்ள போகும் முன்னே என் மகராசா வந்துடுடா சீக்கிரம் வந்தாக்கா உன்னத் தொட்டு உச்சி முகந்துடுவேன் பார்த்துப் பல நாளாச்சு பார்வையில் பூ விழுந்துடுச்சு தேகம் சுருங்கிடுச்சு தாகம் அடங்கிடுச்சு பேச்சுக் குறைஞ்சிடுச்சு நடையோ தளர்ந்துடுச்சு சீக்கிரம் வந்துடா? சீமையாளும் என் மவனே! சொத்து சுகம் தேவையில்ல என்று நாங்க நினைச்சோம் சொத்தாய் நீயிருக்க சொத்தெல்லாம் வித்துப்புட்டோம் காடு கழனி எல்லாம் கடனுக்குக் கொடுத்துப் புட்டேன் நீ படிச்சா போதுமுனு எல்லாத்தையும் இழந்தோம் சீமை வேலை போகனுமுனு நீ தான் ஆசைபட்ட படிச்சப் புள்ளையாச்சேனு பாவிமக தடுக்கலையே? காலங்கள் போன பின்னே கடுதாசி வந்தது கல்யாணம் பண்ணி ரெண்டு குழந்தை இருக்குனு திகைச்சு நின்னேன் செய்வது அறியாம அக்கம் பக்கம் எல்லாரும் ஆளுக்கு ஒன்னு சொன்னாங்க அப்பா ஆத்தா நாங்க அழுதும் தீர்த்தோம் டா அப்பாக்குச் சேவை செய்ய அம்மாக்குத் தெம்பு இல்ல அதனாலதான் போகிறோம் முதியோர் இல்லம் பெத்த புள்ள சொந்தம் இல்ல எங்க பேருல பணமும் இல்ல எதுவுமே எங்களுக்கில்ல அதனால இழந்தேன் அப்பாவ மெல்ல அப்பா இழவுக்கு வருவேனு காத்திருக்கல மகனா நான் செஞ்சேன் என் ஆசை மச்சானுக்கு காலதாமதாய் கணினியில் இரங்கல் செய்தி எங்களுக்கு படிக்கத் தெரியாதுனு பாவம் மறந்துட்ட சீக்கிரம் வந்துடுடா? சீமையாளும் என் மவனே! என் உசுறுப் போகும் முன்னே உன்னப் பார்த்துடனும் உசுறுப் போனாக்கா என் முந்தானை அவித்துப் பாரு ரூபா மூவாயிரம் இருக்கும் இழவுச் செலவுக்கு அண்ணாச்சியிடம் ஏழு நூறு கொடுத்து இருக்கேன் மறந்து விடாம பணத்தை வாங்கிக்கடா மறக்காம என் மவனே! மறு விசாயக் கிழமை வந்துடுடா... சரவிபி ரோசிசந்திரா -
By சரவிபி ரோசிசந்திரா · பதியப்பட்டது
நான் உன்னைத் தொலைத்து நீ தேட நீ என்னைத் தொலைத்து நான் தேட இருவரும் தேடினோம் எங்கெங்கோ? இதுவரை கிடைக்கவில்லை நாமெங்கோ! உணர்வுக்குள் சென்று உயிருக்குள் நனைந்து உறவாடி மகிழ்ந்த நாமெங்கே? என்னை அழைத்து அளாவிப் பேசிய ஆருயிர் அன்பே நீயெங்கே! உன்னை அணைத்து உள்ளம் நனைத்த உன்னுயிர் அன்பே நானெங்கே? நம்மை இணைத்த நல்மனம் எங்கே? நன்றி சொல்வோம் தினம் இங்கே! அல்லும் பகலும் உன் நினைவு அழுது துடிக்குதே என் உணர்வு சரவிபி ரோசிசந்திரா -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
என் உயிரிலும்... மேலான, மக்கள் செல்வங்களை... எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை... விடை பெற்றுள்ளார்-ஜீவன் தொண்டமான். ” என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், எதிரணியில் இருந்தாலும் மக்களுக்கான எனது சேவைகள் தொடரும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மலையகத் தமிழர்களின் அரசியல் காவலனாக கருதப்படும் ,அமரர் ஆறுமுகன் தொண்டமானின், 58 ஆவது ஜனன தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் மலரஞ்சலி, செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .மேலும் அவர் தெரிவிக்கையில் ”அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வெற்றிடத்தை எவராலும் நிரப்பமுடியாது. மக்களை மட்டுமே எனக்கு தந்துவிட்டு சென்றுள்ளார். அது போதும். அதுவே மிகப்பெரிய செல்வம். எனவே, எனது மக்களுக்காக என்னால், எமது ஸ்தாபனத்தால் செய்யக்கூடிய அனைத்தையும் நிச்சயம் நான் செய்வேன். குடும்பம் என்றால் பிரச்சினைகள் இருக்கவே செய்யும். எமக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றை பேசி தீர்க்கலாம். அதைவிடுத்து பிரச்சினையை பெரிதுபடுத்தினால், அது எமக்கான அழிவு பாதையாகவே அமையும்.” என்றும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1284361 -
இலங்கையில் 9 வயது சிறுமி கொலை: நீதி கிடைக்க உறுதியளிக்கிறேன் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP இலங்கை அட்டாலுகம பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. களுத்துறை - பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் காணாமல் போன 9 வயது சிறுமி நேற்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அட்டுலுகம பகுதியிலுள்ள சதுப்பு நிலமொன்றில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒன்பது வயதான இந்த சிறுமி கொலை செய்யப்பட்டு, சடலம் குறிப்பிட்ட பகுதிக்குக் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர். வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு, கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக வெள்ளிக்கிழமை (மே 27) முற்பகல் 10 மணியளவில் சென்றுள்ளார். இவ்வாறு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த சிறுமி கோழி இறைச்சியை வாங்கிவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பும் காட்சிகள், அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், குறிப்பிட்ட சிறுமியைத் தேடுவதற்காக காவல்துறையின் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. பண்டாரகம காவல்துறையினருக்கு மேலதிகமாக, பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில், சிறுமியின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக சுமார் இருபதுக்கும் அதிகமானோரின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன் ட்விட்டர் பக்கத்தில், "ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன். இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்" என தெரிவித்துள்ளதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/sri-lanka-61622252
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.